தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்...

View previous topic View next topic Go down

கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்... Empty கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்...

Post by mohaideen Tue Jul 30, 2013 4:11 pm

உடல் வளர்ச்சிக்குத் தேவையான பொருட்களாக கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, தாதுச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகிய ஐந்தும் மிகவும் இன்றிமையாதது. குழந்தைப் பருவத்திலிருந்து, இந்த ஐந்து சத்துக்களையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் மருத்துவர்கள், நடுத்தர வயதுக்குப் பிறகு கார்போஹைட்ரேட்டையும், கொழுப்புச்சத்தினையும் குறைத்துக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்துகின்றனர். ஏன்?. கார்போஹைட்ரேட்டும், கொழுப்புச்சத்தும் ஆபத்தானதா? அப்படியில்லை. நடுத்தர வயதிற்குப் பிறகு, உடல் செல்கள் வளர்வதும் புதிதாக உருவாவதும் குறைய ஆரம்பித்துவிடுகின்றன. எனவே உடல் கட்டுமானத்திற்குத் தேவையான கார்போஹைட்ரேட்டையும், கொழுப்புச்சத்தினையும் குறைத்துக் கொண்டால் போதும். அத்துடன், இவை இரண்டும் உடலில் கூடுவதால், சிலரது உடலில், சர்க்கரை நோய், அதிக கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன.
மேலே குறிப்பிட்டவற்றில் கொழுப்புச்சத்தானது கொலஸ்ட்ரால் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது தவறு. கொழுப்புச்சத்து என்பது வேறு. கொலஸ்டிரால் என்பது வேறு. கொழுப்புச்சத்தில் உள்ள பல்வேறு மூலக்கூறுகளில் கொலஸ்ட்ராலும் ஒன்று. இது இரத்தப் பரிசோதனை வாயிலாக கண்டறியப்படும். இரத்தத்தில் எந்த அளவுக்குக் கொலஸ்ட்ரால் காணப்பட்டால், அது இயல்பானது என்பதற்கு வரையறைகள் உண்டு.
கொலஸ்ட்ரால் என்பது குறித்து பல்வேறு குழப்பமான செய்திகள் உலவுகின்றன. அதிக அளவு கொலஸ்ட்ரால் இருந்தால், இதயத்திற்கு ஆபத்து என்றும், மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று மட்டும் தெரிந்து கொண்டிருக்கிற வேளையில் கொலஸ்ட்ராலைப் பற்றி நிறைய கட்டுக்கதைகள் உலா வருகின்றன. இப்போது கொலஸ்ட்ராலைப் பற்றி மக்கள் மத்தியில் உலவுகின்ற தவறான கருத்துகளைப் பற்றியும், அவை குறித்த உண்மைத் தகவல்களையும் தெரிந்து கொள்வோம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்... Empty Re: கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்...

Post by mohaideen Tue Jul 30, 2013 4:12 pm

தவறான கருத்து: 1
அதிக கொலஸ்டிரால் என்பது ஆண்களுக்கு மட்டும் ஆபத்தானது. பெண்களுக்கு அல்ல.
கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்... 30-1375164061-1-beautyd-600
உண்மை நிலை:
பெண்களது உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன், கொலஸ்டிரால் அளவைக் கட்டுப்பாடான அளவில் பேண உதவுகிறது. ஆனால் அவர்களுக்கு மாதவிலக்கு நின்றவுடன், அதாவது மெனோபாஸ் நிலை வந்தவுடன் இந்த பாதுகாப்பு நின்றுவிடுகிறது. ஆகவே 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களும், கொலஸ்ட்ராலின் தாக்கத்திற்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்... Empty Re: கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்...

Post by mohaideen Tue Jul 30, 2013 4:13 pm

தவறான கருத்து: 2
அதிக கொலஸ்ட்ரால் என்பது பரம்பரை தொடர்பானது. நம்மால் அதைக் கட்டுப்படுத்த முடியாது.
உண்மை நிலை:
கொலஸ்ட்ராலைப் பொறுத்தவரை பரம்பரைத் தன்மை என்பது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில், கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துதலில், வாழ்க்கைமுறையும், உணவுப்பழக்கமும் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆகவே குடும்பப் பாரம்பரியத்தில், முன்னோர்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் இருப்பதாக அறிந்தால், உணவுப் பழக்கத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்றும், கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம் என்றும் பொருள்.

தவறான கருத்து: 3
மருந்துகளால் மட்டுமே கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்த முடியும்.
உண்மை நிலை:
அதிக கொலஸ்டிராலால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தால், முதலில் அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். அந்தக் காரணத்தை சரிசெய்து கொண்டேயிருந்தால், கொலஸ்ட்ரால் அளவு சரியான அளவுக்கு திரும்பிவிடும். ஆனால் சரியாக சாப்பிடாமை, உடல் உழைப்பின்மை, தொற்றுக்கள், மன அழுத்தம், உடல் வருத்தம் (அறுவை சிகிச்சை போன்றவை) ஆகிய காரணங்களினால், கொலஸ்டிராலின் அளவு அதிகரிக்கக்கூடும்.

தவறான கருத்து: 4
கொலஸ்ட்ராலுக்கான மருந்துகளை உட்கொண்டு வந்தால், உணவுப்பழக்கத்திலோ, உடல் உழைப்பிலோ எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை என்பது.
உண்மை நிலை:
மருந்துகளால், கொலஸ்ட்ரால் அளவு மட்டுமே குறைக்கப்படும். ஆனால் இதயத்திற்கு இதமான உணவுகளை எடுத்துக் கொண்டு, தகுந்த வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதின் மூலம், அந்த மருந்துகளின் செயல்பாட்டினை இன்னும் அதிகரிக்க முடியும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்... Empty Re: கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்...

Post by mohaideen Tue Jul 30, 2013 4:15 pm


தவறான கருத்து: 5

உணவில் '0 மில்லிகிராம் கொலஸ்ட்ரால்' கொண்டதாக இருந்தால் தான் இதயத்திற்கு இதமானது.
உண்மை நிலை:
உணவுப்பொருட்களின் மீது ஒட்டப்பட்டிருக்கும் லேபிள்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவானது, உணவுக் கொலஸ்ட்ராலை மட்டுமே குறிப்பிடுவது. ஆனால் அது உடலில் உள்ள கொலஸ்டிரால் அளவை மிக அதிகமான அளவுக்குக் கொண்டு சென்றுவிடும். மாமிச உணவுகளிலும், பால் பொருட்களிலும், காணப்படும், பூரிதக் கொழுப்புக்களும், பேக் செய்யப்பட்ட உணவு வகைகளில் காணப்படும், டிரான்ஸ் கொழுப்புகளும், அதிரோஸ்கிளிரோஸிஸ் எனப்படும் நிலையை உருவாக்கக் காரணமான கெட்ட கொலஸ்ட்ரால் என்றும், LDL என்றும் அழைக்கப்படும் குறை அடர்த்தி லிப்போ புரோட்டீன்( low-density lipoprotein) மீது அதிக விளைவுகளை ஏற்படுத்துகின்றன.


தவறான கருத்து: 6


குழந்தைகளுக்கு அதிகக் கொலஸ்ட்ரால் ஏற்படாது.
உண்மை நிலை:
இரத்தக்குழாய்கள் குறுகி மாரடைப்பு ஏற்படுத்தக்கூடிய அதிரோஸ்கிளிரோஸிஸ் (atherosclerosis) என்னும் நிலையானது எட்டு வயதிலேயே ஏற்படக்கூடும் என்று ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க குழந்தைகள் நல அமைப்பு (The American Academy of Paediatrics)வெளியிட்டுள்ள குழந்தைகள் மற்றும் கொலஸ்ட்ரால் தொடர்பான வழிகாட்டியில், அதிக எடை கொண்ட குழந்தைகளும், மாரடைப்பு ஏற்படக்கூடிய குடும்பப் பின்னணியைக் கொண்ட குழந்தைகளும், இரண்டு வயதிலேயே கொலஸ்ட்ரால் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. மேலும் அந்த அமைப்பு அதிகக் கொலஸ்ட்ரால் உள்ள குழந்தைகள் பூரிதக் கொழுப்புகள் மற்றும் உணவுக் கொழுப்புகள் கொண்ட உணவைக் குறைத்துக் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, நல்ல உடற்பயிற்சிகளையும் செய்து வர வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்... Empty Re: கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்...

Post by mohaideen Tue Jul 30, 2013 4:16 pm


தவறான கருத்து: 7

கொலஸ்டிரால் என்பது எப்போதுமே தீமையானது.
உண்மை நிலை:
பெரும்பாலான மக்கள் கொலஸ்ட்ரால் என்றாலே அது தீமையானது தான் என்று முடிவு செய்து கொள்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. அதிக கொலஸ்ட்ரால் மட்டுமே ஆபத்தானது. ஆனால் கொலஸ்ட்ரால் என்பது உடலுக்கு தேவையான ஒன்று. மூளையிலுள்ள நரம்பு செல்களைப் பாதுகாப்பது முதல், செல்களைச் சுற்றி சவ்வு போர்த்துவது வரை, அனைத்து பணிகளுக்கும் கொலஸ்ட்ராலானது தேவை. இதய நோய் குறித்து கொலஸ்ட்ராலைப் பற்றி ஒரு தவறான கருத்து நிலவுகிறது. குறை அடர்த்தி லிப்போபுரோட்டின் மற்றும் அதிக அடர்த்தி லிப்போபுரோட்டின் ஆகியவற்றால், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் கடத்தப்படுகிறது. குறை அடர்த்தி லிப்போபுரோட்டின் தான் கெட்ட கொலஸ்டிரால் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அது கடத்தி செல்லும் கொலஸ்ட்ரால் அதிரோஸ்கிளிரோஸிஸ் ஏற்படக் காரணம் அல்ல.


தவறான கருத்து: 8


குறைவான கொலஸ்டிரால் கொண்டிருத்தல் ஆரோக்கியமானது.
உண்மை நிலை:
LDL எனப்படும் குறை அடர்த்தி கொலஸ்ட்ரால் உடலுக்கு ஆரோக்கியமானது என்று நம்மப்படுகிறது. ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்றில் புற்றுநோய் கொண்டவர்களை ஆராயும் போது, புற்றுநோயால் பாதிக்கப்படாதவர்களை விட, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு LDL எனப்படும் குறை அடர்த்தி கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. இரத்தத்தில் குறைவான அளவு கொலஸ்ட்ரால் கொண்டவர்களுக்கு எளிதில் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாம். மேலும் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டவர்கள், அதன் காரணமாக இறந்து போகவும் வாய்ப்புகள் உள்ளதாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்... Empty Re: கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்...

Post by mohaideen Tue Jul 30, 2013 4:17 pm


தவறான கருத்து: 9


அதிக கொலஸ்ட்ரால் குறித்த அறிகுறிகள் நன்றாகத் தெரியும்:
உண்மை நிலை:
அதிகக் கொலஸ்ட்ராலால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, கண்ணிமைகள், மூட்டுக்கள், கைகள் மற்றும் உடலின் இதர பாகங்களில், சாந்தோமாஸ் எனப்படும் மஞ்சள் நிற வீக்கம் ஏற்படும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பரம்பரையான ஹைபர்கொலஸ்ட்ரலோமியாவால் (familial hypercholesterolemia) பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாந்தோமாஸ் வரகூடும். எனவே கொலஸ்ட்ரால் இருக்கிறதா இல்லையா என்பதை, 20 ஆவது வயதிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதித்து அறிந்து கொள்வது நல்லது.
 


தவறான கருத்து: 10


கொலஸ்ட்ராலின் அளவு குறைந்தவுடன், மருந்துகளை உட்கொள்வதை நிறுத்திவிடலாம்.
உண்மை நிலை:
மருந்து சாப்பிடுவதை நிறுத்திவிட்டால், கொலஸ்டிரால் அளவு மீண்டும் பழைய நிலைக்கு உயர்ந்துவிடும். அதன் காரணமாக மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். ஏனெனில் அதிக கொலஸ்ட்ராலானது முற்றிலும் தீர்க்கப்பட முடியாதது. ஆயினும் கட்டுக்குள் பேணலாம். ஆகவே வாழ்க்கை முழுவதும் மருந்துகளை உட்கொண்டு தான் ஆக வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்... Empty Re: கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்...

Post by mohaideen Tue Jul 30, 2013 4:18 pm


தவறான கருத்து: 11


ஒல்லியான உடலமைப்பு கொண்டவர்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் என்பது பிரச்சனையல்ல.
உண்மை நிலை:
ஒல்லியானவர்களோ, குண்டானவர்களோ அல்லது சராசரியான உடலமைப்பு கொண்டவர்களோ யாராக இருந்தாலும், தவறாமல் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குண்டாக இருப்பவர்களுக்கு, கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. ஆனால், குறைந்த எடை கொண்டவர்கள், எவ்வளவு பூரிதக்கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்கிறார்கள் என்பதில் கவனமக இருக்க வேண்டும்.


தவறான கருத்து: 12

வெண்ணெய் சாப்பிடுவதைத் தவிர்த்து, மார்கரைன் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் குறையும்.
உண்மை நிலை:
வெண்ணெயைப் போலவே மார்கரைனும் கொழுப்பு நிறைந்தது தான். அதிக கொலஸ்டிரால் இருந்தால், அனைத்து கொழுப்பு உணவுகளும் அளவாகவே உண்ணப்பட வேண்டும். பெரும்பாலான மார்கரைன்கள் பூரிதக்கொழுப்பினைக் கொண்டுள்ளன. இதுதான் கொலஸ்ட்ரால் உண்டாகக் காரணமானது. டிரான்ஸ் கொழுப்பு இல்லாத டால்டா போன்ற தாவர எண்ணெய்களே (hydrogenated vegetable oil)பாதுகாப்பான கொழுப்பு எண்ணெய்களாகும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்... Empty Re: கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்...

Post by mohaideen Tue Jul 30, 2013 4:19 pm


தவறான கருத்து: 13


நடுத்தர வயதினராக இருந்தால், கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமில்லை.
உண்மை நிலை:
அதிக இதயநோய் வரக்கூடிய குடும்பப் பின்னணியைக் கொண்ட குழந்தைகள் கூட, கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். எனவே ஆரம்பத்திலேயே கொலஸ்ட்ரால் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவது சிறப்பான நடவடிக்கையாகும்.


தவறான கருத்து: 14


உணவினால் மட்டும் தான் கொலஸ்ட்ரால் வருகிறது.
உண்மை நிலை:
பெரும்பாலான கொலஸ்ட்ரால்கள் உணவிலிருந்து மட்டும் வருவதில்லை. நமது உடலின் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளினாலும் கொலஸ்ட்ரால் உண்டாகிறது.

http://tamil.boldsky.com/health/wellness/2013/15-cholesterol-myths-busted-003670.html#slide263778
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்... Empty Re: கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்...

Post by செந்தில் Tue Jul 30, 2013 4:33 pm

கைதட்டல் அனைவரும் அறிந்து ,புரிந்து வாழ வேண்டிய அறிய பகிர்வு.நன்றி மூகையதீன்கைதட்டல் 
சூப்பர் சூப்பர் சூப்பர் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்... Empty Re: கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்...

Post by Muthumohamed Wed Jul 31, 2013 12:20 am

செந்தில் wrote:கைதட்டல் அனைவரும் அறிந்து ,புரிந்து வாழ வேண்டிய அறிய பகிர்வு.நன்றி மூகையதீன்கைதட்டல் 
சூப்பர் சூப்பர் சூப்பர் 

நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா 
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்... Empty Re: கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum