தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சில வகையான கூந்தல் பிரச்சனைகளும் அவற்றிற்க்கான நிரந்தர தீர்வுகளும்!

View previous topic View next topic Go down

சில வகையான கூந்தல் பிரச்சனைகளும் அவற்றிற்க்கான நிரந்தர தீர்வுகளும்! Empty சில வகையான கூந்தல் பிரச்சனைகளும் அவற்றிற்க்கான நிரந்தர தீர்வுகளும்!

Post by ஸ்ரீராம் Sat Jan 18, 2014 12:35 pm

[You must be registered and logged in to see this image.]

1. முடி வளர :
முடி உதிர்ந்த இடத்தில் எலு மிச்சம்பழ விதை, மிளகுசேர்த் து அரைத்து தேய்த்து வர முடி வளரும்.

2. சொட்டைத் தலையில் முடி வளர :

பூசனி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவிவர முடிவளரும்.

3. வழுக்கைத் தலையில் முடி வளர :

கீழாநெல்லி வேரை சுத்தம் செய் து சிறிய துண்டாக நறுக்கி தேங் காய் எண்ணெயில் போட்டு காய் ச்சி தலைக்கு தடவி வந்தால் வழு க்கை மறையும், முடியும் வளரும்.

4. முடி இல்லாமல் சொட்டையாக இருக்கும் இடத்தில் முடி வளர நேர்வளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து பசுநீர் விட்டு மைய அரைத்து தட வலாம்.

5.முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க பிஞ்சு ஊமத்தங்காய் காயை அரைத்து பூசினால் புது முடி முளைக்கும்.

முடி உதிர்வதை தடுக்க வேப்பிலையை நன்கு வேகவைத்து மறுநாள் குளிக்கும்போது அந்த நீரைக் கொண்டு அலசினால் முடி கொட்டுவது நின்று விடும்.

தலையில் உள்ள சொட்டை மற்றும் வழுக் கை மறைய இரவில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி செம்பருத்திப் பூவுடன் கலந்து அரைத்து அந்தச்சாறை மேற்குறிப்பிட்ட இடங்களில் தடவினால் தலைமுடி வளரவாய்ப்பு உண்டு.

தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெ ய் மூன்றையும் சம அளவு எடுத்து நல்லா கலக்கி தலையில் தேய்த்து மஜாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி செய்தாலு ம் முடி நல்லா செழித்து வள ரும். முடி கொட்டுவதும் நிற் கும்

கூந்தல் உதிர்வு

தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத் துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இ ப்படியாக முடி உதிர்வது நி ற்கிற வரை செய்ய வேண் டும்
அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன் றாக அரை த்து தலையில் தேய்த்து வந்தாலும் கு ணம் தெரியும்.

இளநரை நீங்க

(a)நாட்டு மருந்துக் கடைகளில் வேம்பாளம் பட்டை என்று கிடைக்கும். அதை வாங்கிப் பொடி செய்து தேங்காய் எண் ணெயில் கலந்து தடவி வரலாம்.

(b)நெல்லி முள்ளியுடன், கரிசலாங்க ண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச்சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளி த்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையு ம், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் க லந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.

(C)சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகி யவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும்.

பேன் தொல்லை நீங்க

வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரி ல் தலையை நன்றாக அலசிவிடவும்.

செம்பட்டை மறைய

முட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தடவி சிறிது நேர ம் கழித்துக் கழுவி விடவேண்டும். இவ் வாறு வாரம் இருமுறைசெய்து வந்தால் செம்பட்டை மறையும்.

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சில வகையான கூந்தல் பிரச்சனைகளும் அவற்றிற்க்கான நிரந்தர தீர்வுகளும்! Empty Re: சில வகையான கூந்தல் பிரச்சனைகளும் அவற்றிற்க்கான நிரந்தர தீர்வுகளும்!

Post by kanmani singh Sat Jan 18, 2014 12:36 pm

நன்றி..
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

சில வகையான கூந்தல் பிரச்சனைகளும் அவற்றிற்க்கான நிரந்தர தீர்வுகளும்! Empty Re: சில வகையான கூந்தல் பிரச்சனைகளும் அவற்றிற்க்கான நிரந்தர தீர்வுகளும்!

Post by ஸ்ரீராம் Sat Jan 18, 2014 12:37 pm

பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?

1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந் தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை சுத் தம் செய்யலாம். இது பொ டுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பய ன்படுத்தக்கூடாது.

2. சாலிசிலிக் அமிலம் சல்ப ர் கலந்த சாம்புகளை பயன் படுத் தலாம். “பிடிரோஸ் போரம் ஓவல்” என்ற நுண்னுயிர் கிருமி யால் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு டாக்டரை பார்கவும்.

3. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொ ஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழி த்து குளிக்கனும்

4. பாலுடன் மிளகு பவுட ரை சேர்த்து தலையில் தே ய்க்கவும். 15 நிமிஷம் கழி த்து குளிக்கவும்.

5. தலையில் தயிர் தேய்த்து குளிக்க லாம்

6. வாரம் ஒரு முறையாவது நல்லண் ணை தேய்த்து குளிக்க னும்.

7. பசலை கீரையை அரைத்து தலையி ல் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெ ம்ப நல்லது

8. வெந்தய பவுடரை தலையில் தேய் த்து குளித்தால் பொடு கு தொல்லை யும் தீரும் உஷ்ணமும் குறையும்.

9. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த் து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையு ம்

10. வேப்பிலைசாறும் துளசி சாறும் கல ந்து தலையில் தேய் கலாம்

11. வசம்பு பவுடரை தேங்காய் எண் யெயில் ஊறவைத்து தேய் க்கலாம்

12.தலைக்கு குளித்தபின்பு தலையைதுவ ட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரி ல் கலந்து தலைக்கு குளித்து அதன் பின்பு துவட்டி கொள்ள லாம்.

13. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச் சை சாறு கொஞ்சம் சேர் கனும். இந்த கல வையை தலையில் தேய்க்கனும்.

14. வேப்பிலை கொஞ்சமு ம் அதனுடன் கொஞ்சம் மிளகையு ம் சேர்த்து நல் லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேர ம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.

15. மண்டை கரப்பான் நோய் குணமாக பப்பாளி பாலையும் படிகாரத்தையும் சேர்த்து தடவலாம்.

ஒருவரின் முகத்தை அழகாகக் காட்டும் மிகப்பெரிய பொறுப்பு தலையில் இருக்கும் முடிக்கு உள்ளது.

முடியின் ஆரோக்கியத்துக்குத் தேவையான உணவு, பராமரிப்பு ஆகியவற்றில் கோட்டை விட்டு விடுவதால் முடி கொட்டும் பிரச்னை ஏற்படுகிறது.

எண்ணெய் வகைகளை மட்டுமே மாற்றிக் கொண்டிருப் பதால் முடிப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாது என்கிறார் ஹோமியோ மருத்துவர் சசிக் குமார்.

தினமும் 50 முதல் 100 முடிகள் கொட்டுவது இயல்பான விஷய மே.

முடி கொட்டும் பிரச்னைக் கு பல காரணங்கள் உள்ளன. ச த்துக்குறைபாடான உணவு, அ திகப்படியாக கெமிக்கல் உள்ள ஷாம்புவை அடிக்கடி பயன்படுத்துதல் மற்றும் தலைக்கு பய ன்படுத்தும் ஷாம்பு எண்ணெய் வகைகளை அடிக்கடி மாற்று வதால் முடி கொட்டுவது அதிகரிக் கலாம்.

தலையில் பொடுகு ஏற்பட் டாலும் முடி கொட்டும். தலையின் தோல் பகுதியில் காணப்படும் வற ட்சியின் காரணமாக முடி கொட்ட லாம்.

தலையின் தோல் படலத்தில் எண் ணெய் அதிகமாக சுரப்ப தால் ஏற்ப டும் பிசுக்கினாலும் முடி கொட்டும்.

வியர்வை அதிகமாக சுரத்தல், தை ராய்டு ஹார்மோன் குறைபாடு, பர ம்பரைக் காரணங்களாலும் முடி கொட்டலாம்.

ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்வ து, மாதவிலக்கில் ஏற்படும் முறையற்ற சுழற்சி, ஹார்மோ ன் மாத்திரைகள் எடுத்துக் கொ ள்வது ஆகியவை கூட முடி கொ ட்டக் காரணமாக இருக்கலாம்.

ரத்த சோகை உள்ளவர் களுக்கும் முடி கொட்டும் பிரச்சனை இருக் கும்.

தலைப்பகு தியில் சொரியா சிஸ் பிரச்சனை இருந்தாலும் மு டி கொட்டும். ஷாம்பு மற்றும் எண்ணெய்யை மாற்றுவதால் மட்டும் முடிகொட்டும் பிரச்ச னையை தீர்க்க முடியாது.

முடிகொட்டுவதற்கு முன் சில அறிகுறிகள் ஏற்படும். முடி வலுவிழந் து மெல்லியதாக மாறும்.

முடியில் மெலனின் குறைபாட்டினால் முடியின் கருப்பு வண்ணம் குறைந்து சிவப்பு வ ண்ணம் அதிகரிக்கும். எப்போதும் வறட் சியாக காணப்படும். நுனிப்பகுதி வெடி க்கும்.

இதன் அடுத்த கட்டமாக முடி கொட்ட ஆரம்பிக்கும்.

ஆரம்ப கட்ட அறிகுறிகள் தெரிந்ததும் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள் வது மற்றும் உணவில் கவனம் செலுத்து வதன் மூலம் முடி கொட்டும் பிரச்னையைத் தவிர்க்க லாம்.

பாதுகாப்பு முறை:

ஊட்டச்சத்து மற்றும் இரும்புச் சத்து உள்ள உணவுகள் தினமும் இருக்கு ம்படி பார்த்து கொள்ளவும்.

அதே போல் முடியை அடிக்கடி அலசி அதில் அழுக்கு சேருவதை தடுக்கவு ம். முடிக்கு எண்ணெய் வைக்காமல் வறண்ட நிலையில் வைத்திருந்தா ல் முடியின் நுனிப்பகுதி வெடித்து முடி வலுவிழந்து உதிர்ந்து விட வா ய்ப்புள்ளது.

எனவே முடிக்கு தகுந்த ஷாம்புவை டாக்டரின் ஆலோசனை ப்படி பின்பற்றலாம்.

பெண்களைப் பொறுத்த வரை மாத விலக்கு தொடங் கிய பின் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் முடி கொட்டும் பிரச்னை சிலருக்கு ஏற்படுகிற து.

எனவே மாதவிலக்கு குறை பாடு இருப்பின் அதை சரிசெய் ய வேண்டும்.

வாரத்துக்கு மூன் று முறையாவது தலைக்கு குளி க்க வேண்டும். ஷாம்புவை அடி க்கடி மாற்றக்கூடாது.

மேலும் அரப்பு மற்றும் பூந்திக்காயை பொடி செய்தும் தலைக்கு குளி க்க பயன்படுத்தலாம்.

முடியை மென்மையாக கையாள வேண் டும்.

இயற் கையான காற்றில் முடி யை உலர்த்துவது நல்லது.

முடிஉதிர்தல், உடைதல் இரண் டு பிரச்னைக்குமே தோல் மருத் துவரிடம் சிகிச்சை எடுப்பது நல்லது.

பொடுகுப் பிரச்சனை உள்ளவர்கள் அதற்கான ஷாம்பு மற்றும் சிகிச்சை முறைக ளை கடைபிடிப்பதன் மூல ம் விடுபடலாம். மேலும் சொரியாசிஸ் உள்ளவர்க ளும் அதற்கான சிகிச்சை எடுப்பது அவசியம்.

பாலி சிஸ்டிக் ஓவரிஸ் பிரச் னை இருப்பின் அதை யும் சரி செய்யவும்.

முக்கிய மாக டென்ஷனைக் குறை க்க வேண்டும்.

தலைக்கு ஆயில் மசாஜ் போன்ற கூடுதல் கவனிப்பும் வேண்டும்.

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சில வகையான கூந்தல் பிரச்சனைகளும் அவற்றிற்க்கான நிரந்தர தீர்வுகளும்! Empty Re: சில வகையான கூந்தல் பிரச்சனைகளும் அவற்றிற்க்கான நிரந்தர தீர்வுகளும்!

Post by ஸ்ரீராம் Sat Jan 18, 2014 12:38 pm

படுக்கும் முன் கூந்தலை எப்படி பராமரிக்க வேண்டும்?

1. தினமும் படுக்கும் முன் 5-10 நிமி டம் கூந்தலை சீவ வேண் டும். அது வும் சீவும்போது, கூந்தலை பின்புற மாகவும், முன் புறமாகவும் போட்டு, மெதுவாக மேலிருந்து கீழாக சீவ வேண்டும்.

அவ்வாறு செய்வதால் கூந்தலில் இருக்கும் தூசி , அழுக்கு மற்றும் வலுவில்லாத இறந்த முடிக ள் வந்து விடும்.

2. படுக்கும் முன் கூந்தலுக்கு எண் ணெய் தேய்த்து மசாஜ் போல் செய் ய வேண்டும். இவ்வாறு மூன்று வார ம் தொடர்ந் து செய்தால் கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.

மேலும் கூந்த லும் ஆரோக்கியமாக இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெயை சூடு செய் து தடவி, எண்ணெய் குளி யல் எடுக்கலாம்.

இரவில் எண்ணெய் தேய் த்து மறுநாள் எண்ணெய் தலையு டன் வெளியே செல்ல முடியாது.

ஆகவே அப்போது இரவில் எண் ணெய் தேய்த்துவிட்டு மறு நாள் ஷாம்பு போட்டு குளி த்துவிடலாம்.

அதனால் கூந்தலானது ஆரோக்கியமா க இருப்பதோடு, நன்கு வளரும். ஏனெ னில் கூந்தலில் எப்போதும் ஈரப்பசை யானது இருக்க வேண்டும். அப்படி இரு ந்தால்தான், கூந்தலை வளர்ச்சியடை யும்.

3. கூந்தலானது நன்கு வளர வேண்டு மென்றால், படுக்கும் முன் கூந்தலை ந ன்கு சீவி கட்டிக் கொண்டு படுக்க வே ண்டும். அதனால் கூந்தலானது அதிகம் உடையாது மற்றும் உதிரவும் செய்யா து.

4. நீண்ட கூந்தலை உடையவர்கள் கூந்தலின் முனையை மறக்காமல் துணியால் சுற்றிக்கொண்டு படுக்க லாம். அவ்வாறு செய்வதால் கூந்தலி ன் முனைகள் சிக்கு அடையாமல், மு டிச்சுகள் எதுவும் வராமல் இருக்கும்.

மேலும் கூந்தலின் முனைகள் வெடி க்காமலும் இருக்கும். ஏற்கனவே வெ டிப்புகள் இருந்தால், இனிமேல் வெடி ப்புகள் வராமல் தடுக்கும்.

இவ்வாறெல்லாம் கூந்தலை இர வில் பராமரித்து பாருங்கள், கூந்தல் ஆரோக்கியமாக வளர்வ தோடு, உடலும் ஆரோக்கியம் அ டையும்.

மேலும் டென்சன், தலை வலி, மன அழுத்தம் போன்றவையு ம் இல்லாமல் உடலானது நன்றாக இருக்கும்.

முடி நன்கு வளர மற்றும் முடி உதி ர்வுக்கான
மருத்துவக் குறி ப்புக்கள்

அதிக அளவு வைட்டமின் பி மற்று ம் புரதச் சத்தை உணவில் சேர்த்து க் கொண்டால் உடலைப் போலவே கூந்தலும் நலமாக இருக்கும்.

தலைமுடி, கெரட்டீன் என்ற புரதத் தால் ஆனது . அதன் வளர்ச்சிக்கு பு ரதம், சுண்ணாம்பு, இரும்பு போன்ற தாதுக்கள் தேவை. இல்லாவிட்டால் முடி உதிரும்.

புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகை கள், கேரட், பீடருட், கறி வேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல் லம், கேழ் வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சா ப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரபி களை சரிசெய்ய முடியும்.

நெல்லிக் கனி தலைமுடி உதிர்வதை தடுத்து அதன் வளர் ச்சிக்கு காரணமாக இருக்கும் செல்களைத் தூ ண்டுகிறது. எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது.

கற்றாழை கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பி டவும் கேச த்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச் னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.

தோல் இறுக்கத்தி ற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது.
கற்றாழை சோறை தேங்காய் எண் ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தே ய்த்து வர தலைமுடி நன்கு செழித் து வளரும். எண் ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.

வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகி வர முடி வளரும். அது தலைமுடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.

தலைமுடி நன்கு வளர,

கொத்து மல்லி, கீரைகள், கறிவேப் பிலை, பால் பொருட்கள், முருங் கைக்காய் முதலியவற்றை அதிகமாக உணவில் சேர்த்து வந் தால் தலைமுடி செழித்து வளரும்.

கறி வேப்பிலையும், தேங்காய் எண் ணெயும் கலந்து நன்கு காய்ச்சி அந்த எண்ணெயை தலைமுடிக்குப் பயன் படுத்தி வந்தால் முடி கருத்து,செழித்து வளரும்.

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் தலைமுடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலை யில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர தலை முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொ டிசெய்து தேங்காய்எண்ணெ யில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய் த்து வந்தால் தலைமுடி உதிர்வது நிற்கு ம் .

தேங்காய்ப் பாலை தலையில் தேய் த்துவந்தால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.

தலையில் திட்டுத்திட்டாக தலை முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந் தால் சிறு வெங்காயத்தை இரு துண் டாக நறுக்கி தேய்த்துவர தலை முடி வளரும்.

சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிராது.

டயட்

நாம் சாப்பிடும் உணவில் உள்ள வைட்ட மின் குறைபாடு, பர ம்பரைக் காரணங்கள், மரபணு மாற்றம், தலைக்கு பயன்படு த்தும் ஷாம்புவில் உள்ள ரசாயனம், கேன்சர்,
சர்க்கரை நோ ய்க்கு எடுத்துக் கொள்ளும் சிகிச்சை முறைகள், ஊட்டச்சத் து இல்லாத உணவு, மன அழுத்தம்,
சுற்றுச் சூழல் மாசு, வ யது முதிர்வு உள் ளிட்ட பல காரணங்களால் முடி கொட்டும் பிரச்னை உள்ளது.

முடிப்பிரச்னை அலோப்சியா என அழை க்கப்படுகி றது.

ஒருவருக்கு 100 முடிகள் வரை உதிர்வது சா தாரண விஷயம்.

தைராய்டு ஹார் மோன் குறைபாட்டினா லும் முடி உதிரும்.

காப்பர், ஜிங்க், அயோடின், வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளிட்ட குறை பாடுகள் இருந்தால் முடி உதி ரும் பிரச்னை அதிகரிக் கும்.

சிவப்பு, மஞ்சள் வண்ணக் காய்கள் மற்றும் பழங்கள்
அ திகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் ஒரு கீரை கட்டாயம் சேர்க்கவும்.

கேரட், எலுமிச் சை, தக்காளி, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் சே ர்க்கவும். அன்னாசி, பப்பா ளி, ஆரஞ்சு சேர்க்கலாம்.

ஆட்டு ஈரல், மீன் மற்றும் மீன் எண்ணெய், பால், முட்டை கட்டாயம் சேர்க்க வும். சோயா மற்றும் சோ யா பொருட்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொள் ளலாம்.

பாலாடைக்கட்டி, இளநீர், மோர், பனீர், நிறைய சேர்த்துக் கொள்ளலாம். கா ளான் சாப்பிடுவதன் மூலம் சத்துக் குறைபாட்டை தவிர்க்க லாம்.

பீன்ஸ், பாலாக்கீரை மற்றும் மொச்சை வகைக ளையும் சேர்க்கலாம்.

தினமும் 12 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.

மசாஜ், ஆயில் பாத், யோகா மூலம் சத்தான உணவு உட் கொண்டு முடி கொட்டும் பிரச்னையை தடுக்கலாம்.

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சில வகையான கூந்தல் பிரச்சனைகளும் அவற்றிற்க்கான நிரந்தர தீர்வுகளும்! Empty Re: சில வகையான கூந்தல் பிரச்சனைகளும் அவற்றிற்க்கான நிரந்தர தீர்வுகளும்!

Post by ஸ்ரீராம் Sat Jan 18, 2014 12:40 pm

பாட்டி வைத்தியம்

* முருங்கை கீரையை அரைத்து தலையில் தேய்த்து
குளி த்தால் பொடுகு வரா மல் தடுக்கலாம்.

* முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்க ளுக்கு சாப்பிட்டால் ரத்த சோகை குணமாகும்.

* மிளகுத்தூள், வெங்கா யம், உப்பு மூன்றையும் கலந்து அரைத்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் பூசினால் அந்த இடத்தில் முடி முளைக்கும்.

* மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தே ங்காய் எண்ணெயில் கா ய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வந் தால் முடி கருப்பாக மாறும்.

* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து சிறு சிறு உரு ண்டைகளாக வெயிலில் காய வைத்து தினமும் ஒரு உருண்டையை தேங்காய் எண் ணெயில் கரைத்து தலையில் தட வி வந்தால் முடிவள ரும்.

* பொடுதலைக் கீரைச்சாற்றில் வசம்பு, வெள்ளை மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து ஊற வைத்து உலர்த் திப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் பொடி யை நல்லெண்ணெயில்
கு ழைத்து த லைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித் தால் பொடுகு தொல்லை தீரும்.

இன்று பெண்களைப்போல ஆண்களும் தங்கள் தலைமுடி யைக் காப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆண்களுக் கும், பெண்களும் உதவும், முடிகாக்கும் குறிப்புகள் இவை…

* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத் து நீரில் வேக வைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரைக் கொ ண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும்.

* கடுக்காய், தான்றிக்காய், நெல் லிக்காய் பொடிகளை கல ந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து, காலையில் எலு மிச்சை பழச்சாறு கலந்து கலக்கி, தலையில் தேய்த்துக் குளி த்துவர முடி உதிர்வது நிற்கும்.

* வெந்தயம், குன்றிமணி பொடி செ ய்து தேங்காய் எண்ணெ யில் ஊற வைத்து ஒரு வாரத்துக்குப் பின் தின மும் தேய்த்து வந்தால் முடி உதிர்வ து நிற்கும்.

* முடி உதிர்ந்த பகுதிகளில் முடி வளர கீழா நெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்கா ய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் பலனிருக் கும்.

* இளநரை கருப்பாக, நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம்.

* முடி கருப்பாக, ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத் திப் பூ இடித்துத் தூள் செய்து, தேங்கா ய் எண்ணையில் காய் ச்சி ஊற வைத்து தலைக்கு தேய்த்து வர வேண்டும்.

* காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி, தேங்காய் எண்ணை யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவந்தால் முடி கருமையாகும்.

* தலைமுடி கருமை, மினுமினுப்புப் பெற அதிமதுரம் 20 கி ராம் அளவை, 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து, 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண் டும்.

* செம்பட்டை முடி நிறம் மாற, மரி க்கொழுந்து இலையை யும் நிலா வரை இலையையும் சம அளவு எடு த்து அரைத்துத் தலைக்குத் தடவினா ல் செம்பட்டை முடி நிறம் மாறும்.

* நரை போக்க தாமரைப் பூ கஷாயம் வைத்து காலை, மா லை தொடர்ந்து குடித் து வந்தால் நரை மாறி விடும்.

* முடி வளர்வதற்கு கறி வேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணை யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

* கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணை யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

* முடிகொட்டிய இடத்தில் முடி வள ர நேர்வாளங்கொட்டை யை உடை த்து பருப்பை எடுத்து நீர் விட்டு நன் றாக அரைத்துத் தடவிவரவேண்டு ம்.

* புழுவெட்டு மறைய, நவச்சாரத் தை தேனில் கலந்து தடவி னால் திட்டாக முடிகொட்டுதலும், புழு வெட்டும் மறையும்.

பெரும்பாலும் கூந்தல் உதிர மற்றும் வளராமல் இருக்க இரவில் படுக் கும்போது சரியான பராமரிப்பு இல்லாததே காரணமாகும்.


நன்றி, ஆனந்தநாராயணன் முகநூல் பக்கம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சில வகையான கூந்தல் பிரச்சனைகளும் அவற்றிற்க்கான நிரந்தர தீர்வுகளும்! Empty Re: சில வகையான கூந்தல் பிரச்சனைகளும் அவற்றிற்க்கான நிரந்தர தீர்வுகளும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum