தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாராக்கடன் என்னும் தடைக்கல்

View previous topic View next topic Go down

வாராக்கடன் என்னும் தடைக்கல் Empty வாராக்கடன் என்னும் தடைக்கல்

Post by நாஞ்சில் குமார் Thu Aug 21, 2014 10:46 pm

ஓரு அரசு வங்கியால் வழங்கப்பட்ட கடன், வங்கிக்குத் திரும்ப செலுத்தப்படவில்லையானால், அதற்கு வாராக்கடன் என்று பெயர். வாராக்கடன்கள், கரையான் போல் வங்கிகளின் அசலையும் அவைகளின் மூலதன சொத்து மதிப்பையும் அரித்து விடுகின்றன.

அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், வாராக்கடன்களால் இழந்த மூலதனத்தின் பெரும்பகுதியை ஈடுசெய்ய, பெரும்பான்மை மூலதன பங்குதாரரான அரசாங்கத்தை நாடுகின்றன.

ஒரு வங்கியின் செயல் திறனை மதிப்பிடுவதற்கு, லாபத்தைவிட, வாராக்கடன்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வாராக்கடன்கள், ஈட்டப்படும் லாபத்தை கபளீகரம் செய்து விடும் வில்லன் என்பதுதான் காரணாமாகும்.

தொடர் மூலதன திரட்டு நடவடிக்கையின் போது (ஊர்ப்ப்ர்ஜ் ர்ய் ல்ன்க்ஷப்ண்ஸ்ரீ ர்ச்ச்ங்ழ்) வளரும் வாராக்கடன்களை சுமக்கும் வங்கி பங்குகளின் மதிப்பீடு குறைவதால், திரட்ட முற்படும் மூலதன தொகையில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இழந்த மூலதன தேவைகளின் ஒரு பகுதியை, அந்தந்த வங்கிகளின் தர மதிப்பீட்டிற்கு தகுந்தவாறு, நடுத்தர மற்றும் நெடுங்கால கடனாக (பண்ங்ழ் ஸ்ரீஹல்ண்ற்ஹப்), பத்திர வெளியீடுகள் மூலம் (ஆர்ய்க்ள்) முதலீட்டார்களிடமிருந்து பெறலாம்.

இம்மாதிரி திரட்டப்படும் தொகைக்கு உச்ச வரம்பு உண்டு. சம்பந்தப்பட்ட வங்கியால் லாபம் ஈட்ட முடியவில்லையென்றாலும், கடன் பத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வட்டியை முதலீட்டார்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கால இடைவெளிகளில் வழங்கியாக வேண்டும். லாபம் ஈட்டும் காலங்களில் வட்டித்தொகை அந்த வங்கிக்கு ஒரு கூடுதல் செலவாகும். இதனால், நிகர லாபம் குறையும்.

மூலதன மேம்பாட்டுக்காக வங்கிகளால் வாங்கப்படும் கடன் தொகை அதன் வட்டிச் சுமையை அதிகரித்து, லாபத்தை குறைக்கும். அதனால், அரசாங்கத்திற்கு வழங்கப்படும் ஈவுத்தொகை (ஈண்ஸ்ண்க்ங்ய்க்) குறைந்து, அரசாங்க வரவு குறையும். வரவு குறைந்தால், அரசாங்க வரவு செலவு கணக்கில் (ஊண்ள்ஸ்ரீஹப் க்ங்ச்ண்ஸ்ரீண்ற்) விரிசல் அதிகமாகும்.

சமீபத்திய நிலவரப்படி, வங்கி வாராக்கடன்களின் அளவு 2 லட்சம் கோடியை தாண்டி நிற்கிறது. மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட்ட கடன்கள், அதைவிட இருமடங்காகும். இதில் பெரும்பகுதி, அரசு வங்கிகளை சார்ந்ததாகும். பல வங்கிகளின் வாராக்கடன்களில் 20 சதவீதம் வரை, மின் வாரியங்களுக்கு வழங்கப்பட்டு, வசூலாகாத கடன்களாகும்.

மத்திய அரசால் மின்கட்டமைப்பு சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டு, மின்வாரியங்களின் நிதிநிலைமை சீர் அடைந்தால்தான் வங்கிகள் இந்த வாராக்கடன்களை வசூல் செய்ய முடியும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவை உடனடியாக நிறைவேற்றப்பட்டால்தான், வாராக்கடன்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

வங்கிகளில், கடன் பராமரிப்பு முறை சம்பந்தமாக, ரிசர்வ் வங்கி பல வழிமுறைகளை (Prudential norms for classification of assets) வகுத்துள்ளது. புதிய கடன் வழங்குவதன் மூலம், வாராக்கடன், வசூலிக்கப்பட்ட கடனாக மாற்றப்படக்கூடாது என்பது அதில் முக்கியமான ஒன்றாகும்.

வாராக்கடன் எல்லையை நோக்கி சாய்ந்து நிற்கும் கடன்களை, வரையறுக்கப்பட்ட காரணங்களின்றி மறுசீரமைப்பு செய்து, வாராக்கடன்களை மறைக்கக்கூடாது (Ever greening of loans) என்பது மற்றொன்றாகும்.

சமீபத்தில் ஒரு வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் லஞ்சப் புகாரில் சிக்கிய விவகாரம், பொருளாதார வட்டாரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புதிய கடனை அங்கீகரித்து, வாராக்கடனை வசூலாகியக் கடனாக காட்டி, கடனாளிக்கு உதவியதுதான் அவர் மீது பதிவான குற்றச்சாட்டாகும். இந்த நிகழ்வு, விளிம்பை மட்டும்தான் கோடிட்டு காட்டியிருக்கிறது.

இம்மாதிரி முறைகேடுகளை, வாராக்கடன்களின் வளர்ச்சிக்கு ஒரு காரணியாக மட்டும் கருதலாமே தவிர, முழுமையானக் காரணியாக கருதமுடியாது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், வாராக்கடன்களுக்கான காரணிகளின் அணிவகுப்பில், எளிதில் கண்டுபிடிக்கமுடியாத அதிகாரவர்க்க முறைகேடுகளும் சேர்ந்துவிட்டதுதான் கவலைக்குறிய விஷயமாகும்.

ரிசர்வ் வங்கி, இதை ஒரு தனிப்பட்ட நிகழ்வாகக் கருதாமல், மற்ற வங்கிகளில் வாராக்கடன்கள் சார்ந்த இம்மாதிரி முறைகேடுகள் நடைபெறவில்லை என்பதை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு, பிரத்தியேக தணிக்கை மூலம் உறுதிப்படுத்தவேண்டும்.

அரசு வங்கிகளின் நிர்வாகக் குழு அங்கத்தினர் கூட்டங்கள் (Board meetings) ஜனநாயக முறைப்படி நடத்தப்படவேண்டும். குழுவின் தலைவரான வங்கி சேர்மனின் பேச்சுக்கு யாவரும் கட்டுப்படவேண்டும் என்ற நியதி கூடாது.

கடன் அங்கீகார விஷயத்தில், குழு உறுப்பினர்களின் மாற்றுக்கருத்துகளை பதிவு செய்யும் உரிமை வேண்டும். வங்கி சேர்மன் நியமனம் மற்றும் நிர்வாக குழுவின் செயல்பாடுகளில் அரசாங்க தலையீடுகள் அறவே தவிர்க்கப்படவேண்டும். சேர்மன் நியமனம், தகுதி அடிப்படையில் மத்திய பணி தேர்வாணையம் (UPSC) போன்ற அமைப்புகளின் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்படவேண்டும்.

கடன் அங்கீகார முறைகளில் வெளிப்படையான செயல்பாடுகள் அமல்படுத்தப்பட வேண்டும். தற்போதைய குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாக வங்கிகளின் நிர்வாக குழுக்கள் மாற்றி அமைக்கும் சீர்திருத்தங்களை நிதி அமைச்சகம் ஆராய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி சமீபத்தில் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாக வெளியான செய்திகள், நேர்மையான வங்கி நிர்வாகத்தில், ரிசர்வ் வங்கிக்கு இருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது.

பொதுமக்களின் கோடிக்கணக்கான டெபாஸிட் பணத்தை கையாளும் வங்கிகளின் உயர் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக நடத்தை விதிகள் வரையறுக்கப்படவேண்டும். கடனுக்கான அங்கீகாரம் வழங்கும் குழு அங்கத்தினர்கள் அனைவரும், (Credit Committee members) முறைகேடுகளுக்கு பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும் என்று வங்கிகளின் தொழிற் சங்க தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர்.

சமீபத்திய கடன் கொள்கை (Monetary Policy review meeting) கூட்டத்தில் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் முக்கியமாக கருதப்படுவது, வங்கிகளின் வாராக்கடன்களின் நிர்வாகம் பற்றிய கவலை தோய்ந்த கருத்துகளும், அதற்கான நடவடிக்கைகளுமாகும்.

தற்போது, வங்கிகள் அவற்றின் வாராக்கடன்களை தனியார் கட்டுப்பாட்டில் இயங்கும் சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்களுக்கு (ARC's) குறிப்பிட்ட தள்ளுபடி தொகைக்கு விற்று, தங்கள் கணக்கிலிருந்து வாராக்கடன்களை அகற்றி விடுகின்றன.

இந்தத் தள்ளுபடி தொகை, வங்கியின் செலவு கணக்கில் எழுதப்படுவதால், அது நிகர லாபத்தை குறைக்கும். கடந்த காலாண்டில் மட்டும், 30,000 கோடி ரூபாய் மதிப்புள்ள வாராக்கடன்கள் வங்கிகளால் விற்கப்பட்டிருக்கின்றன.

தற்போதைய நடைமுறைப்படி, இந்த நிறுவனங்கள் தங்களுக்கு விற்கப்படும் வாராக்கடன்களின் மதிப்பீட்டு விலையில், ஐந்து சதவீதத்தை ரொக்கமாகவும், மீதியை பத்திரங்களாகவும் (Security receipts) வழங்குகின்றன. பத்திரங்களின் மதிப்பில் அவைகளின் நிர்வாக கமிஷன் தொகை கணக்கிடப்படுகிறது.

சொத்துகளை விற்று தொகையை வங்கிக்கு செலுத்துவதற்கு 12 மாத அவகாசம் உண்டு. விற்கப்படாத சொத்துக்கள், மீண்டும் வங்கிக்கே வந்து சேரும். இந்த வழிமுறைகளில் உள்ள ஓட்டைகளை அடைக்க, சில மாற்றங்கள் ரிசர்வ் வங்கியால் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இதன்படி, மறுசீரமைப்பு நிறுவனங்கள், முன்தொகையாக வங்கிகளுக்கு, விற்கப்படும் சொத்து மதிப்பில் 15 சதவீதம் வழங்கவேண்டும். சொத்துகளை செயற்கையாக உயர் மதிப்பீடு (Artificial valuation) செய்து, அதிக நிர்வாக கமிஷன் பெறுவதை தடுக்க, தர மதிப்பீட்டு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்ட மதிப்பீடுகள்தான் (NAVs) இனி ஏற்றுக்கொள்ளப்படும்.

சொத்துகளின் நிலைமையை நிர்ணயிக்கும் கால அளவு 6 மாதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால், வாராக்கடன்கள் சம்பந்தப்பட்ட சொத்துகளை விற்று பணமாக்குவதில் நிலவும் மந்த நிலை அகலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்டகாலத் திட்டமாக, பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன்களை வசூலிக்கவும், நலிவுற்ற நிறுவனங்களுக்கு புத்துயிரூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தேசிய சொத்து நிர்வாக நிறுவனம் (Asset Reconstruction Company) என்ற அமைப்பு நிறுவப்பட இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதில் பொதுத் துறை வங்கிகளும் பங்குதாரர்களாக செயல்படும்.

கடன் வழங்குவது சுலபம். ஆனால், அதை வாராக்கடனாக மாறவிடாமல் பாதுகாப்பதும், வாராக்கடனை வசூலிப்பதும் கடினமான காரியங்களாகும்.

வங்கிகள், கடனாளிகளை வெளிப்படையான முறையில் தேர்ந்தெடுத்தல், கடன் பராமரிப்பு, வசூல் ஆகியவைகளில் அதிக கவனம் செலுத்துதல் போன்றவற்றின் மூலம்தான் வாராக்கடன்களை பெருமளவில் தவிர்க்கமுடியும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முன்முகங்களாக செயல்படும் வங்கிகளின் வளர்ச்சியில் வாராக்கடன்கள் என்ற தடைக்கற்களை வளரவிடாமல், அவற்றின் செயல்பாடுகள் அமைந்தால்தான், வளர்ச்சி வேகம் சீராகும்.

By எஸ். ராமன்

நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

வாராக்கடன் என்னும் தடைக்கல் Empty Re: வாராக்கடன் என்னும் தடைக்கல்

Post by ஸ்ரீராம் Mon Aug 25, 2014 10:00 am

பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வாராக்கடன் என்னும் தடைக்கல் Empty Re: வாராக்கடன் என்னும் தடைக்கல்

Post by செந்தில் Mon Aug 25, 2014 10:36 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வாராக்கடன் என்னும் தடைக்கல் Empty Re: வாராக்கடன் என்னும் தடைக்கல்

Post by ஜேக் Mon Aug 25, 2014 7:07 pm

சூப்பர் சூப்பர் சூப்பர்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

வாராக்கடன் என்னும் தடைக்கல் Empty Re: வாராக்கடன் என்னும் தடைக்கல்

Post by முரளிராஜா Tue Aug 26, 2014 12:00 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வாராக்கடன் என்னும் தடைக்கல் Empty Re: வாராக்கடன் என்னும் தடைக்கல்

Post by kanmani singh Thu Aug 28, 2014 4:53 pm

விரிவான பகிர்வு!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

வாராக்கடன் என்னும் தடைக்கல் Empty Re: வாராக்கடன் என்னும் தடைக்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum