தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வில்வம் - இயற்கை வைத்தியம்

View previous topic View next topic Go down

வில்வம் - இயற்கை வைத்தியம்  Empty வில்வம் - இயற்கை வைத்தியம்

Post by ஸ்ரீராம் Thu Apr 11, 2013 9:39 pm

சிவனுக்கு மிக உகந்தது வில்வம். வில்வமரத்தை சிவ ஸ்வரூபமாகவே பார்ப்பர் வில்வ மரத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகம், நடுப்பகுதி விஷ்ணுபாகம், மேல்பகுதி சிவரூபம். சிவபெருமானை வில்வத்தால் அர்ச்சித்தால் மும்மூர்த்திகளையும் வழிபாடு செய்த புண்ணியம் கிடைக்கும்.

வில்வம், பாதிரி, வன்னி, மந்தாரை, மா ஆகிய ஐந்து மரங்களையும் தேவலோகத்திலிருந்து வந்த "பஞ்சதருக்கள்' என்று புராணங்கள் கூறுகின்றன.

பில்வாஷ்டகம் என்கிற சுலோகங்கள், சிவபெருமானுக்கு அர்ச்சிக்கின்ற வில்வதளங்கள் எப்பேர்பட்ட நற்பலன்களைக் கொடுக்குமென்பதை அழகாக வர்ணிக்கிறது.

இது ஒரு புனித மரம் .இதன் அனைத்து பாகங்களும் இலை வேர் , கிளை பழம் ,விதை அனைத்தும் மருத்துவ குணம் உடையது. மனிதனின் கொடிய வியாதியையும் ,வினையும் ஒரு சேர தீர்க்கவல்லது

தமிழ் கூவிளம் ,வில்வம் கூவிளை, சிவத்துருமம், நின்மலி,மாலூரம்

திருவிளையாடல் புராணத்தில் வில்வத்தை பற்றிய ஒரு பாடல இதோ

புரகர னிச்சா ஞானக் கிரியையாய்ப் போந்த வில்வ
மரமுத லடைந்து மூன்று வைகலூ ணுறக்க மின்றி
அரகர முழக்கஞ் செய்வோ ரைம்பெரும் பாத கங்கள்
விரகில்வெய் கொலைக டீரு மாதலால் விசேடம் வில்வம்.

அதற்க்கு நாவலர், பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் தந்த உரை:

புரகரன் இச்சாஞானக்கிரியையாய்ப் போந்த
வில்வமர முதல் அடைந்து - திரிபுரம் எரித்த இறைவனின் இச்சா
ஞானக் கிரியைவடிவாயுள்ள வில்வமரத்தினடியைச் சார்ந்து, மூன்று
வைகல் ஊண்உறக்கம் இன்றி - மூன்று நாட்கள்வரை உணவுந்
துயிலும் இல்லாமல், அரகர முழக்கம் செய்வோர் - அரகரவென்று
முழங்குவோர் செய்த, ஐம்பெரும் பாதகங்கள் - ஐந்து பெரிய
பாவங்களும், விரகு இல் செய் கொலைகள் - அறிவின்றிச் செய்த
கொலைப்பாவங்களும் தீரும் - நீங்கும், ஆதலால் - ஆகலின்,
வில்வம் விசேடம் - வில்வம் சிறந்தது.

புரகரன் - புரத்தை யழித்தவன். வில்வ இலையின் மூன்று கவர்களும் இறைவனுடைய மூன்று சத்திகளின் வடிவம் என்க. விரகின்மையாவது அதனாற் றமக்கு ஊதியஞ் சிறிது மின்றி ஏதமே மிகுமென்னும் அறிவு இல்லாமை.

அமைப்பு
வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப் படுகிறது. இலையுதிர் மரவகையைச் சார்ந்தது. கனி தொடர்வன, முட்கள் காணப்படும் இலை கூட்டிலை மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டது இதை மகாவில்வம் என்பார்கள். கூட்டிலையின் சிறிய இலைகள் நீள் வட்டமானது, ஈட்டி வடிவமானது, இலைப்பரப்பு வழவழப்பாக ஒளிரும் தன்மை உடையது. இலையடி ஆப்ப வடிவமானது அல்லது உருண்டையாக இருக்கும். இலை விளிம்பு இடைவெளிகளில் வெட்டப் பட்டிருக்கும் இலை நுனி விரிந்திருக்கும் அல்லது பிளவுற்று இருக்கும். சில சமயம் நீண்டு அரச இலையைப் போல் வளர்ந்திருக்கும்.

வில்வ மரத்திலும் வில்வ தளத்திலும் மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். வில்வப் பழத்திற்கு ஸ்ரீபலம் என்ற பெயருண்டு.

மஹாலக்ஷ்மி வாசம் என்றால் ஆரோகிய லக்ஷிமியும் ,வில்வம் இருக்கும் இடத்தில் இருக்கும் என பொருள் .

நுரையீரல்தொடர்பாக ஏற்படும் நோய்களை வில்வம் குணப்படுத்துகிறது. சளி, இருமல், கபம் கட்டிக் கொள்ளுதல், மூச்சுவிட இயலாத தன்மை (ஆஸ்துமா) போன்றவற்றிற்கு வில்வம் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. தினமும் வெறும் வயிற்றில் நான்கு அல்லது ஐந்து இலைகளை மென்று உட்கொள்ள வேண்டும்.

இதயத்தைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்துகிறது. மனித உடலிலுள்ள ரத்தத்தைத் தூய்மை செய்கிறது. சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. வயிற்றிலே தோன்றும் அஜீரணக் கோளாறுகளை அகற்றுகிறது. வாயுத் தொல்லையை விரைவில் அகற்றும் தன்மையை உடையது. வில்வ இலைகளை மசிய அரைத்து, வெண்ணெய் நீக்கிய மோருடன் கலந்து பருக வேண்டும்.

தலையிலே ஏற்படும் வழுக்கையை அகற்றி, மீண்டும் கூந்தலை வளரச்செய்யும் ஆற்றல் வில்வப் பழத்தின் தோலிற்கு உள்ளது. குறைந்த தீயில் வில்வப் பழத்தின் தோலைச் சுட்டு, அதை வழுக்கை உள்ள இடத்தில் தேய்த்து வந்தால், பலன் தெரியும். நூறு ஆண்டுகள் ஆன வில்வ மரத்தின் இலைகள் குஷ்டத்தைக் குணப்படுத்துகின்றன. தினமும் வெறும் வயிற்றில் கைப்பிடியளவு வில்வ இலைகளை 1 மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து உட்கொண்டால் குஷ்டம் குணமாகும் என மருத்துவ நூலகள் கூறுகின்றன. சாப்பிட்ட உடன் 108 முறை கோயிலை வலம் வரவும் கூறுகின்றன . இல்லையில் இலை ஜீரணம் ஆகாது என்பதுதான் அதன் உட்ப்பொருள் .

வில்வ வேரை 10 - 15 மி.கி. எடுத்து நன்றாக இடித்து 100 மி.லி.தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து பசும் பாலில் சேர்த்து தினமும் காலை வேளையில் குடித்து வர, தேவையில்லாத விந்து வெளியேற்றத்தைத் தடுத்து, விந்துவைப் பெருக்கும். ஆண்மையை அதிகரிக்கும்
ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத் திருந்து எட்டு மணி நேரம் சென்று, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரைமட்டும் அருந்தி னால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் பெறும், வாத தோஷம் போகும் .

The fruit pulp contains 60.7 per cent moisture. The pulp contains 0.46 per cent acidity, 8.36 per cent total sugars, 6.21 per cent reducing sugars, 2.04 per cent non-reducing sugars and 0.21 per cent tannins. The pectin content is 2.52 per cent, which is quite high.

அதிக அளவு புரதம் அதன் கனியில் உள்ளது .அதிகஅளவு சீத பேதி மட்டும் மல கழிவுக்கு வில்வகனி சிறந்த நிவாரிணி .

பாதி கனிந்த பழத்தை சதையை நல்லெண்ணையில் ஒரு வாரம் ஊறவைத்து குளிக்கும் போது உடலில் தடவிக்கொண்டு குளித்தால் சரும நோய்,மற்றும் உடம்பு எரிதல் குணமாகும் .

சோகை நோய்க்கு அதன் காயை சதைபத்தை எடுத்து காயவைத்து அதை போடி செய்து , 10 கிராம் பொடிக்கு 50 கிராம் பசும் நே சேர்த்து நாள் ஒன்றிக்கு இருமறை ஒரு மண்டலம் உபயோகிக்க குணமாகும் .

ரத்த அழ்த்ததிர்க்கு இலையை சாறுபிழுந்து உபயோகிக்க குறையும் . விலவ இல்லை காற்றை சுத்தமாக்கும் . வில்வ பழத்தை தொடர்ந்து உபயோகிக்க சக்கரை வியாதி குணமாகும் .
அதில் உள்ள Tanin, துணை புரியும். contains 20% and the pulp has only 9% of Tanin. This substance helps to cure diabetes

மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்- சுமார் 100 வில்வ இலைகளின் சாரை பத்து மிளகின் தூளுடன் கலக்கவும் .இதை காலை மாலை இருவேளையும் குடித்துவர தீவிர மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் .இதை அருந்தும் போது கூடவே ஐந்து கோப்பை கரும்பின் சாரையும் குடிக்கவும் .இது ஒரு ரகசிய அனுபவ முறை .

டைபாயிண்டு எனப்ப்படும் தொடர்ந்து தாக்கும் அதிக சுரத்தை குணப்படுத்த சுமார் 200 இலைகளை சாறு இடுத்து அதை சுண்டக் காய்ச்சி ( 1/3) அது வற்றியபின் அதனுடன் சிறிது தேன் சேர்த்து தினமும் இருவேளை சாப்பிட குணமாகும் .
வெண்ணையுடன் சேர்த்து வில்வப்பழத்தின் குழம்பு சிறிது சக்கரையுடன்
தொடர்ந்து சாப்பிட புத்தி கூர்மையும் ,தேஜசும் கிடைக்கும்.

மலச்சிக்கலைக் குணப்படுத்துகிறது.

உடலிலுள்ள நரம்புகளை வலுப்படுத்துகிறது.

தோலிற்கு மினுமினுப்பை அளிக்கிறது.

மனநோய் உள்ளவர்கள் தினமும் சிறிதளவு வில்வ இலைகளை மென்று உண்பது நல்லது. இனி வில்வ பழத்தை கோவிலில் கண்டால் விடவே விடாதீர்கள் .அதன் இலைகளை பறிக்கக் கூடநாட்கள் என சில உள்ளது .எனவே அதையும் தெரிந்து செய்யுங்கள் .!
வில்வம் பக்திக்கும் மட்டுமல்ல ,உடல் சக்திக்கும் அதுவே துணை .

நன்றி ஆ.சுகுமாரன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வில்வம் - இயற்கை வைத்தியம்  Empty Re: வில்வம் - இயற்கை வைத்தியம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 12, 2013 6:51 am

மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்- சுமார் 100 வில்வ இலைகளின் சாரை பத்து மிளகின் தூளுடன் கலக்கவும் .இதை காலை மாலை இருவேளையும் குடித்துவர தீவிர மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் .இதை அருந்தும் போது கூடவே ஐந்து கோப்பை கரும்பின் சாரையும் குடிக்கவும் .இது ஒரு ரகசிய அனுபவ முறை .

புதுசா தெரிஞ்சுக்கிட்டேன்... புன்முறுவல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum