தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கறுப்புக் கல்யாணம்

View previous topic View next topic Go down

கறுப்புக் கல்யாணம் Empty கறுப்புக் கல்யாணம்

Post by கே.எஸ்.கலை Fri May 31, 2013 5:03 pm

கனவுகள்…
உணர்வுகள்…
வரப்போகும் வாழ்க்கை -
---மொத்த விலைக்கு
---குடும்பச் சந்தையில் பேரம் !

விவாகரத்தா...
முதிர்க் கன்னியா...
கண்ணீர் அடிமையா -
---இறுதி உறுதி தரப்போகும்
---ஆணாதிக்கத்தின் துருப்புச் சீட்டு !

துப்பட்டாவா...
தூக்க மாத்திரையா...
வாழும் பிண வாழ்க்கையா -
---தீர்ப்பினை எழுதிட
---சுத்தியலோடு நீதிபதியாய் !

சொத்துக்கு சொந்தக்காரி
சோறு போடும் வேலைக்காரி
பெத்துப் போட இயந்திரமாய்
கூட்டிவந்தப் பங்காளி !

சொத்துக்கு ஒத்துப் போனா
மஞ்சக் கயிறு
அத்தனையும் தீர்ந்துப் போனா
தூக்குக் கயிறு !

உணர்வுகள் செத்த
உடல்களின் உணர்சிகள் -
உரசல்களுக்கும், உறிஞ்சல்களுக்கும்
உடல் உறவிற்கும்
ஒட்டு மொத்த குத்தகைக்கு
விட்டு விட்ட பின்னர்
சில்லறைக் கனவுகள் கூட
சிதறிப்போய் சீரழியும் வாழ்க்கை !

கணவன்களின்
முறுக்கேறும் நரம்புகளின்
பசிகளுக்கு விருந்து போட
இரவிலும் -
விடுமுறைப் பகலிலும்
நிரந்தரமாய்...தரமாய்...தாரமாய்
ஒரு தொழில் !

சீதனத்தின் செழிப்பில்
வறண்டு போன வாழ்க்கைகள்
ஒரு கண்ணீர் தேசத்தையே
கட்டியெழுப்பும் !

வாழ்வைவும்
வசந்தத்தையும் கரியாக்கி,
நோவையும் சாவையும் தந்து
பணத்திற்கும் பிணத்திற்கும்
நடக்கும் இதுவெல்லாம் -
கறுப்புக் கல்யாணங்களே !

சொத்தோடு வசதியாய்
வாழ்க்கைக்கு துணை தேடும்
அத்தனைப் பேரும்
ஆண்மையற்ற பெண்ணன்கள் !
சீதனச் சந்தையில்
விலையாகும் விபச்சாரிகள் !

இன்னும் இருக்கிறார்கள்
முதுகெலும்பை
சீதனத்தில் ஒடித்துக் கொண்டு
மீசை முறுக்கி - ஆண் என்று
ஆடித் திரியும் பேடிக் கூட்டங்கள் !

உடற்குறையிலா
ஊனங்களுடன்-
மனைவி எனும் தொழிலைச் செய்ய
குடும்ப நிறுவனத்தில்
தேவையில்லை வேலைவாய்ப்பு !

இந்திரியம் புதைத்து
சந்ததியை உருவாக்கும்
இயந்திரமாய் பெண்டிர்கள்
இனியும் வாழோம் !

சீதனச் சந்தையில்
விற்றுப் போகா
வெற்றுச் சடலங்களாய் -
ஊதாரி ஆண்களை
புறக்கணிக்கப் புறப்படுவோம் !
avatar
கே.எஸ்.கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

https://www.facebook.com/pages/KS-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

Back to top Go down

கறுப்புக் கல்யாணம் Empty Re: கறுப்புக் கல்யாணம்

Post by மகா பிரபு Fri May 31, 2013 6:15 pm

சோகம் சோகம் வேதனை.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கறுப்புக் கல்யாணம் Empty Re: கறுப்புக் கல்யாணம்

Post by முரளிராஜா Fri May 31, 2013 9:49 pm

ஆணாதிக்க அடக்கு முறைகளை அக்கறையுடன் சாடிய கவிதை கைதட்டல் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கறுப்புக் கல்யாணம் Empty Re: கறுப்புக் கல்யாணம்

Post by ஸ்ரீராம் Fri May 31, 2013 9:55 pm

நிதர்சன உண்மையை கவிதையாய் தந்து இருக்கிறீர்கள்.
விரும்பினேன் உங்கள் கவிதையை சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கறுப்புக் கல்யாணம் Empty Re: கறுப்புக் கல்யாணம்

Post by விக்கி Sat Jun 01, 2013 9:15 am

சூப்பர்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

கறுப்புக் கல்யாணம் Empty Re: கறுப்புக் கல்யாணம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jun 01, 2013 9:50 am

கே.எஸ்.கலை wrote:

சொத்துக்கு சொந்தக்காரி
சோறு போடும் வேலைக்காரி
பெத்துப் போட இயந்திரமாய்
கூட்டிவந்தப் பங்காளி !

தாய்மையால்தான் பெண்மை போற்றப் படுகிறது. உலகின் மறுஉற்பத்திக்கு இது தேவையாக இருக்கிறது.

கணவன்களின்
முறுக்கேறும் நரம்புகளின்
பசிகளுக்கு விருந்து போட
இரவிலும் -
விடுமுறைப் பகலிலும்
நிரந்தரமாய்...தரமாய்...தாரமாய்
ஒரு தொழில் !

விபசாரிக்கும் மனைவிக்கும் பணம்தான் வித்தியாசம் என்கிறார் மார்க்சும் ஏங்கெல்சும்

சொத்தோடு வசதியாய்
வாழ்க்கைக்கு துணை தேடும்
அத்தனைப் பேரும்
ஆண்மையற்ற பெண்ணன்கள் !
சீதனச் சந்தையில்
விலையாகும் விபச்சாரிகள் !
வரதட்சணைக்கும் சீதனத்துக்கும் ஆண்களே - மாப்பிள்ளையே காரணமல்ல... என் பெண் நல்லா வாழனும் என்ற பெண் வீட்டாரின் சுயநலமும் முக்கியக் காரணமாகிறது... பெண் தான் சம்மதிக்கிறீர்கள்... பெண்கள் ஏன் ஒன்றும் இல்லாதவனையோ படிக்காதவனையோ திருமணம் செய்து கொள்ள முன்வருவதில்லை?

இந்திரியம் புதைத்து
சந்ததியை உருவாக்கும்
இயந்திரமாய் பெண்டிர்கள்
இனியும் வாழோம் !
இப்படி வாழ வேண்டும் என்று ஆணையும் பெண்ணையும் படைக்கவில்லை... இந்தத் தேவை இருந்திருப்பின் ஆண்களாகவோ பெண்களாகவோ மட்டும் இருபாலினம் இன்றி ஒருபாலினமாகவே இறைவன்
படைத்திருப்பான்...


சீதனச் சந்தையில்
விற்றுப் போகா
வெற்றுச் சடலங்களாய் -
ஊதாரி ஆண்களை
புறக்கணிக்கப் புறப்படுவோம் !

ஊதாரி ஆண்களை புறக்கணிக்காமல் வாழ்வு கொடுங்கள் எல்லா பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும் என்பதுதான் என் கருத்து...

என் கருத்துக்கள் கவிதைக்கானது மட்டுமே
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கறுப்புக் கல்யாணம் Empty Re: கறுப்புக் கல்யாணம்

Post by Muthumohamed Sat Jun 01, 2013 10:29 am

சமூகத்தின் அவல நிலைகள் கவிதை சூப்பர்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

கறுப்புக் கல்யாணம் Empty Re: கறுப்புக் கல்யாணம்

Post by mohaideen Sat Jun 01, 2013 2:36 pm

சொத்தோடு வசதியாய்
வாழ்க்கைக்கு துணை தேடும்
அத்தனைப் பேரும்
ஆண்மையற்ற பெண்ணன்கள் !
சீதனச் சந்தையில்
விலையாகும் விபச்சாரிகள் !

கறுப்புக் கல்யாணம் 534526
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கறுப்புக் கல்யாணம் Empty Re: கறுப்புக் கல்யாணம்

Post by ragu Sat Jun 01, 2013 4:37 pm

நிஜங்களின் கவிதை..
வரதட்சனை தவிர்ப்போம்
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

கறுப்புக் கல்யாணம் Empty Re: கறுப்புக் கல்யாணம்

Post by ரானுஜா Sat Jun 01, 2013 5:22 pm

கவிதை அருமை
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கறுப்புக் கல்யாணம் Empty Re: கறுப்புக் கல்யாணம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jun 01, 2013 7:46 pm

by ragu Today at 4:37 pm

நிஜங்களின் கவிதை..
வரதட்சனை தவிர்ப்போம்

வரதட்சணையை தவிர்க்க நினைக்கும் பெண்கள் தன்னைவிட குறைந்த மதிப்புடையவரை திருமணம் செய்தால்தான் முடியும்...

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கறுப்புக் கல்யாணம் Empty Re: கறுப்புக் கல்யாணம்

Post by கே.எஸ்.கலை Sun Jun 02, 2013 3:43 pm

மகா பிரபு wrote: சோகம் சோகம் வேதனை.

மிக்க நன்றி தோழரே கருத்திற்கு புன்முறுவல்
avatar
கே.எஸ்.கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

https://www.facebook.com/pages/KS-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

Back to top Go down

கறுப்புக் கல்யாணம் Empty Re: கறுப்புக் கல்யாணம்

Post by கே.எஸ்.கலை Sun Jun 02, 2013 3:44 pm

முரளிராஜா wrote:ஆணாதிக்க அடக்கு முறைகளை அக்கறையுடன் சாடிய கவிதை கைதட்டல் கைதட்டல்

மிக்க நன்றி தோழரே
avatar
கே.எஸ்.கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

https://www.facebook.com/pages/KS-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

Back to top Go down

கறுப்புக் கல்யாணம் Empty Re: கறுப்புக் கல்யாணம்

Post by கே.எஸ்.கலை Sun Jun 02, 2013 3:46 pm

[quote="கவியருவி ம. ரமேஷ்"][quote]by ragu Today at 4:37 pm

வரதட்சணையை தவிர்க்க நினைக்கும் பெண்கள் தன்னைவிட குறைந்த மதிப்புடையவரை திருமணம் செய்தால்தான் முடியும்...

===========
இது தப்பான கோணம் தோழரே..
காரணம் தன்னை விட குறைந்தவர் உயரந்தவர் என்ற பேதம் எப்போதும் இருக்க கூடாது...சேதனம் ஒழிய வேண்டும்..ஏன் தன்னை விட மதிப்பில் உள்ள ஒருவன் ஒரு பெண்ணை பெண்ணாக ஒரு மனித உயிராக மதித்து வாழ அழைப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது ?
avatar
கே.எஸ்.கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

https://www.facebook.com/pages/KS-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

Back to top Go down

கறுப்புக் கல்யாணம் Empty Re: கறுப்புக் கல்யாணம்

Post by கே.எஸ்.கலை Sun Jun 02, 2013 3:48 pm

ரானுஜா wrote:கவிதை அருமை

மிக்க நன்றி தோழி
avatar
கே.எஸ்.கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

https://www.facebook.com/pages/KS-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

Back to top Go down

கறுப்புக் கல்யாணம் Empty Re: கறுப்புக் கல்யாணம்

Post by கே.எஸ்.கலை Sun Jun 02, 2013 3:49 pm

ragu wrote:நிஜங்களின் கவிதை..
வரதட்சனை தவிர்ப்போம்
ragu wrote:நிஜங்களின் கவிதை..
வரதட்சனை தவிர்ப்போம்
ragu wrote:நிஜங்களின் கவிதை..
வரதட்சனை தவிர்ப்போம்

நிச்சயமாக நாம் முன்வருவோம் தோழரே
avatar
கே.எஸ்.கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

https://www.facebook.com/pages/KS-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

Back to top Go down

கறுப்புக் கல்யாணம் Empty Re: கறுப்புக் கல்யாணம்

Post by கே.எஸ்.கலை Sun Jun 02, 2013 3:54 pm

[quote="mohaideen"]
சொத்தோடு வசதியாய்
வாழ்க்கைக்கு துணை தேடும்
அத்தனைப் பேரும்
ஆண்மையற்ற பெண்ணன்கள் !
சீதனச் சந்தையில்
விலையாகும் விபச்சாரிகள் !

மிக்க நன்றி தோழரே
avatar
கே.எஸ்.கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

https://www.facebook.com/pages/KS-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

Back to top Go down

கறுப்புக் கல்யாணம் Empty Re: கறுப்புக் கல்யாணம்

Post by கே.எஸ்.கலை Sun Jun 02, 2013 4:06 pm

[quote="கவியருவி ம. ரமேஷ்"][quote="கே.எஸ்.கலை"]


மிக்க நன்றி தோழரே தங்களின் விரிவான கருத்திற்கு...
இருப்பினும் சீதனத்தால் பாதிக்கப் பட்டு செத்தும், குற்றுயிராயும் இருக்கும் பெண்களைப் பார்த்து இப்படி சொல்ல முடியாது தானே எங்களுக்கு ?

பெண்கள் அழகு அந்தஸ்து காரம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும் என்று நிற்பதில்லை என்பதல்ல என் கருத்து....அவர்களை வேறொரு படைப்பில் கவனிப்போம்,,

மேலும் ஊதாரி ஆண்களுக்கு வாழ்க்கை கொடுக்க சொல்கிறீர்கள் ஏன் என்று தெரியவில்லையே ?
avatar
கே.எஸ்.கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

https://www.facebook.com/pages/KS-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

Back to top Go down

கறுப்புக் கல்யாணம் Empty Re: கறுப்புக் கல்யாணம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jun 02, 2013 8:12 pm

ஊதாரி ஆண்களுக்கு வாழ்க்கை கொடுக்க சொல்கிறீர்கள் ஏன் என்று தெரியவில்லையே ?

ஊதாரி - பொறுப்பற்றவன் - படிக்காதவன் - சம்பாதிக்காதவன் என்று பொருளை விரித்துக்கொண்டால் நன்றாக இருக்கும்...

வரதட்சணை அதிகம் கேட்பவனை தவிர்த்து மேற்கண்டவர்களைத் திருமணம் செய்ய முன் வந்தால் அவர்கள் வாழ்க்கையை முன்னேற்ற முடியும்... என்பதால் சொன்னேன்.

டாக்டருக்குப் படித்தவள் டாக்டரை திருமணம் செய்து கொள்ளதானே முன்வருவாள் - அப்படியானால் வரதட்சணை வாங்கதானே செய்வான் (செய்வார்கள்).

மற்றபடி தங்கள் கவிதைக்கான கருவை நான் குற்றம் சொல்ல வில்லை... நீங்கள் பெண்ணிய பார்வையில் கவிதை படைத்திருக்கிறீர்கள்... நான் வாசகனாக பதில் தந்திருக்கிறேன்...

விமர்சகனாகவோ - ஆய்வாளனாகவோ மேற்கண்ட பதிலை தரவில்லை... அவ்வாறு தந்திருந்தால் தங்கள் கவிதைக்கான பொருள் சிறப்புற்று இருக்கும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கறுப்புக் கல்யாணம் Empty Re: கறுப்புக் கல்யாணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum