தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரசித்த சில கவிதைகள்...

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ரசித்த சில கவிதைகள்... Empty ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 7:08 pm

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே !
சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
(பாரதியார் கவிதைகள்)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்... Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 7:08 pm

பாரதியார் கவிதைகளில் காணும் அறுசீர் விருத்தம் ஒன்று :
இதம்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும்
பதம்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுத்து இழிவுற் றாலும்
விதம்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்தர தேவி நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே

(இதம் = மகிழ்ச்சி; பதம் = பதவி; திரு = செல்வம்; விதம் = வகை)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்... Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 7:09 pm

- மீரா

பாதை முள்
படுக்கை முள்
இருக்கை முள்
வாழ்க்கை முள்
ஆன மனிதர்களைப் பார்த்துச்
சிலிர்த்துக் கொண்டது
முள்ளம்பன்றி. . .
ஓ இவர்களுக்குத் தெரியாதா
முள்ளும் ஓர்
ஆயுதம் என்று !
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்... Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 7:10 pm

ஏழைப்பெண் - தலையில்
எப்போதும் பூப்பாரம்
இவளோ தகப்பனுக்கு
எப்போதும் மனப்பாரம்

- சிற்பி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்... Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 7:11 pm

எழுத்துச் சுமைக்காரர்
எங்க ஊரு தபால்காரர்
எழுத்து மங்கும் சாயங்காலம்
எமனோடு போனதென்ன?

-நா.காமராசன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்... Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 7:12 pm

அன்று
நஞ்சை உண்டு
சாகுபடி ஆனது !
இன்று
நஞ்சை உண்டு
சாகும்படி ஆனது !

-நெல்லை ஜெயந்தா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்... Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 7:13 pm

தீப்பெட்டியைத்
திறந்து பார்த்தால்
பிஞ்சு விரல்கள் - (ஸ்ரீகுமாரன்)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்... Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 7:13 pm

ஆராய்ச்சி மணி அடித்த மாடுகள்
அரண்மனைத் தட்டில்
பிரியாணி - (லிங்கு)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்... Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 7:14 pm

அணிலே ! நகங்களை வெட்டு
பூவின் முகங்களில்
காயங்கள் - - (மித்ரா)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்... Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 7:14 pm

வேலப்பனுக்குப்
பெண் பிறந்ததாகத்
தகவல் வந்தது
ஊர்க்கவுண்டர் கேட்டார்
இழவு இன்றைக்கா?
நாளைக்கா? - (கவிஞர் பால்ராஜ்)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்... Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 7:15 pm

கல்வியில் விடி
அரசியல் தெளி
சட்டங்கள் செய்
ஊர்வலம் போ
முழக்கமிடு
பெண்ணைப் பேசப்
பெண்ணே எழு - (அறிவுமதி)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்... Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 7:16 pm

செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்
தன்னிகர் தானியம் முதிரை - கட்டித்
தயிரொடு மிளகின் சாறும்
நன்மது ரம்செய் கிழங்கு - காணில்
நாவில் இனித்திடும் அப்பம்
உன்னை வளர்ப்பன தமிழா - உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே !

- பாரதிதாசன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்... Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 7:17 pm

மன்னும் இமயமலை எங்கள் மலையே !
மாநிலம் மீதுஅது போற்பிறி திலையே !
இன்நறும் நீர்க்கங்கை யாறெங்கள் யாறே !
இங்கிதன் மாண்பிற்கு எதிர்எது வேறே !
பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே !
பார்மிசை ஏதொரு நூலிது போலே !
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே !
போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே !

-பாரதியார்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்... Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 7:20 pm

கஞ்சி குடிப்பதற்கு
வசதியில்லை
காரணங்கள் என்னவென்று
தெரியவில்லை. . .
உழைப்புதான் இவர்களின்
உயிர்மூச்சு
உற்பத்திப்பயன் முதலாளியின்
உடைமை ஆச்சு . . . . - (கவிஞர் தமிழ்ப்பித்தன்)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்... Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 7:21 pm

இறைவா !
நீ
எங்கே இருக்கிறாய்?
இந்துவின் கோயிலிலா?
முஸ்லீமின் மசூதியிலா?
என்றேன்.
இறைவன் சொன்னான்
இந்த இருவரும்
ஒருவரை ஒருவர் பார்த்துப்
புன்னகைத்துக் கொள்ளும்
புன்னகையில் நான் இருக்கிறேன்
என்று !

- பா.விஜய்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்... Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 7:21 pm

ஆயுதம் அழிந்து
மானுடம் மிஞ்சுமா?
இல்லை
மானுடம் அழிந்து
ஆயுதம் மிஞ்சுமா?

-வைரமுத்து
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்... Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 7:23 pm

மழைக்கால நரகம்
மாலைநேரச் சொர்க்கம்
ஏழைகள் உறங்கிட இயற்கையால்
ஏற்படுத்தப்பட்ட புழுதிக் கட்டில்

-காமராசன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்... Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 7:24 pm

விதைக்குள் தவமிருக்கும் - உயிர்
விளக்கே . . . தரையுள்ளே
புதைத்துன்னை மூடிவிட்டார் - இனிப்
புதுவாழ்வைச் சாதிப்பாய் !

- ஈரோடு தமிழன்பன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்... Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by sawmya Sat Sep 14, 2013 7:29 pm

ஆகா அருமை! அருமை...இன்னும் நிரம்ப கவி அமுதம் தருக....நன்றி!புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்... Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by sawmya Sat Sep 14, 2013 7:37 pm

மனிதா!
உன் விஞ்சானம் விண்வெளிக்குப் போகப்போக
உனது மனிதாபிமானம் மண்குழிக்குப் போகிறதே!
அது ஏனென்பேன்.

விலங்கிலிருந்து மனிதன் பிறந்தது பரிணாமமென்றால்
இன்று மனிதனிலிருந்து விலங்கு பிறக்கிறதே!
இதற்கு என்ன பெயெரென்பேன்.
உனக்குத் தொட்டில் கட்டிய இயற்கைக்கு
நீ ஏன் கல்லறை கட்ட ஆசை படுகிறாய் என்பேன்.

தங்கள் பொத்தான்களைக் கூடத்
தாங்களே போட்டுக் கொள்ளாத வர்க்கமும்
தங்களின் சவ ஊர்வல செலவுக்குக்கூடத்
தாங்களே சம்பாதித்துக்குக் கொண்டிருக்கும் ஒரு வர்க்கமும்
இனிமேலும் இந்த மண்ணில் இருக்க வேண்டுமா என்பேன்

வாழ்க்கை என்பது உறக்கத்திற்கும் மரணத்திற்கும்
மத்தியில் கண்டு வரும் கனவல்ல;
வாழச் சொல்லித்தருகிறேன் வா மனிதா என்பேன்

*கவிஞர் வைரமுத்து*
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்... Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 7:55 pm

தட்டுங்கள் திறக்கப்படும்
~~~~~~~~~~~~~~~

தட்டுங்கள் திறக்கப்படும்
என்றுதான் சொல்லப்பட்டது,
திறந்தேயாகும் என்றல்ல.

உன்செய்கை எனக்குச்
சிரிப்பையே தந்தது.

காதலென்று அதற்குப்
பெயர் சொன்னது
கவலையே தந்தது!

என்னுள்ளத்தை உணர்த்த
உனக்கோ வலிவந்தது,
வார்த்தையில்
வன்மம் வந்தது,

இரக்கமற்றவள்
இருமாப்பு, ஏமற்றுக்காரி
இப்படி ஏதேதோ.

எனினும்
இதயம் நுழைந்து
என்னுள் வர
உனக்கனுமதி இல்லை
என்பதே உண்மை.

தட்டுங்கள் திறக்கப்படும்
என்றது என்
இதயத்திற்கு மட்டுமல்ல!

~~~~~~~~~~~~~~~~- murugavelswaminathan
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்... Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 7:56 pm

அவள் என்னை நேசித்திருக்கவில்லை
இன்னும் நிச்சயமாய்
அவள் என்னை நேசித்திருக்கவில்லை
என்றாலும்
ஞாபகப்படுத்தக்கூடிய நினைவுகளை
கருக்கொள்ளச்செய்தவள் அவள்தானே

கருக்கொள்ளச்செய்ததன் பாவக்கறைகளை
களைந்திடும் முகமாக
தேர்ச்சிபெற்ற மருத்துவிச்சியாய்
கருக்கலைப்புச்செய்ய முயல்கிறாள்
அய்யோ பாவம்!
அவள் முயற்சிகள் தோற்றுப்போய்
தினமும் திடகாத்திரமான
காதல் சிசுக்களை
பிரசவிக்கச்செய்கிறேன் நான்

பிரசவ வேளைகளில்
பெரும்பிரளயமான
என் காதல் சிசுக்களில்
அழுகுரல்,
முறையற்ற விதத்தில்
கருவுற்ற எம்மை
காலம் ஏற்றிடுமா?
என்ற ஏக்கத்தின்
பீறிட்ட புலம்பல்
இவையாவற்றையும் இரும்புமனம் கொண்டு
ஏற்க மறுக்கும் இயல்பற்ற ஓர் பெண்யியம்
காரணம் கற்பிக்கின்றது
"அவள் என்னை நேசிக்கவில்லை" என்பதை

-மீராறதீப்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்... Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 7:57 pm

தனது புதிய காதலனை
அறிமுகப்படுத்துகிறாள்
என்காதலி

அவர்களது ஆரம்ப சம்பாசனையில்
அதிகமாக பேசப்பட்டது
என் பெயர்தானாம்
என்னாலான காயங்களுக்கு
மருத்துவக்குறிப்புத்தந்த
அவனது இனிமையான அரவணைப்பு
பிடித்துப்போக
என் இன்னாள் காதலியின்
முன்நாள் காதலன்
ஆகிவிட்டேன் நான்.

தோற்றத்தில் என்னை விட
அழகானவன்தான்
தொழிலிலும் சற்று உயர் பதவிதான்
ஆற்றமைகொண்டு நான் ஏங்கவில்லை
நான் ஆடிய களத்திற்கு அவனை
வரவேற்கிறேன்

ஏதே அரிய ஒன்றை இழந்திட்டதாக
என்னைப்பார்த்து
ஓர் ஏளனச்சிரிப்பு அவனிடமிருந்து
என் மேல் பிரியம் வைக்க
ஏராளம் பேர் என்று பெருமைகொண்ட
புருவ உயர்த்தல் அவளிடமிருந்து

நான் விட்டதை தொட்டவன் தான்
நீயென்றும்
நான் தொடாததால் விட்டவள் தான்
நீயென்றும்
மனதுக்குள் நினைத்துக் கொண்டு
அங்க அசைவின்றி
அங்கிருந்து நகர்ந்து சென்றேன்
-மீராறதீப்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்... Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by சரண் Sun Sep 15, 2013 9:08 am

கைதட்டல் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்... Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 17, 2013 7:33 pm

இங்கு தான் விழுந்து கிடக்கிறேன்.
================================================ருத்ரா

அது ஒரு
மாநகராட்சி குப்பைத்தொட்டி.
அதனுள்
மடங்கி சுருண்டு கிடந்தேன்
மரவட்டையாய்.
புசு புசு வென்று நசுக்குட்டான் பூச்சியாய்.
அதன் ரோமக்காடுகளில்
வர்ணப்பிரளயம் கருவுற்ற‌
புழுக்கூடு போல் உஞ்சல் ஆடும்
கனவுகளும் கிடந்தன.
அப்புறம் வானம் முழுதும்
முகம் வருடும்
ஏழு வர்ணச்சாமரம் கொண்டு வீசும்
படாம்பூச்சிப் பரிமாணத்துக்கு
காத்து இருக்கும்
தருணங்களும் அங்கு ஆவியுருவில்
அவிந்து கிடந்தன.

என் மீது
அவள் வீசிய ஒரு புன்முறுவல்
ஒரு நாள்
என்னை எங்கோ கொண்டுபோய்விட்டது.
அதன் பிறகு
எங்களுக்கு எதுவுமே
ஒரு பொருட்டு இல்லை.

சினிமாவின் இருட்டுகளின் இடுக்குகளில்
அவள் பொட்டுகள் எல்லாம்
எனக்கு பௌர்ணமிகள்.
புதிய ஃபேஷன் வடிவில்
மூக்குத்திப்பூக்கள் எல்லாம்
இடுப்பின் காஷ்மீர் பள்ளத்தாக்குகளிலும்
இமைவிரிப்பின் மின்னல் பிளவுகளிலும்
செவி மடல்களில்
சரகொன்றை பூவரிசைகளாவும்
பூக்கத்தொடங்கிய‌
அவள் அழகில்
நான் என்றோ எங்கோ
தொலைந்து போய்விட்டேன்.

இப்போது திடீரென்று
இங்கே விழுந்து கிடக்கிறேன்.
இது எப்படி?

என் மேல் விழுந்தன‌
வண்டி வண்டியாய் குப்பைகள்.
அரை குறையாய் ஒயின் பாட்டில்கள்.
சுருக்காங்கண்ணி அவிழ்க்காத குறையாய்
உள்ளாடைகள்.
ப்ளாப்பிகள்.
பேட்டரி கட்டைகள்.
மீன் எலும்புகள்.
சூப்புக்கு உறிஞ்சியது போக‌
கோழிக்கால்கள்.
கும்பாபிஷேகம் நடத்தியபின்
சமஸ்கிருத ஓம் துண்டு துண்டாக்கப்பட்ட‌
ஹோம குண்ட மண்கட்டி மிச்சங்கள்.
சருகான மாவிலை தோரணங்கள்.
பிள்ளைகள் எடுத்து விளையாட‌
பலூன் ஊத மறந்த
இன்னும் அசிங்கமாகிப்போகாத‌ நிரோத்துகள்.
பழைய பாத்திரக்கடைக்காரன்
எட்டணா கூட தர அடம் பிடித்து மறுத்த‌
அழுக்கு கந்தல்
வக்கீல் கோட்டுகள்
செத்துப்போன காலத்தின்
காகித பிணங்களான‌
பழைய வருட‌
வர்ண வர்ண காலண்டர்கள்.
ஒரு சின்ன சிப் கிடைக்கவில்லை
என்பதற்காக‌
இங்கு வந்து வீழ்ந்துகிடக்கின்றன‌
டேப் ரிக்கார்டர்கள்....

அப்புறம்
அந்த கல்யாணவீட்டுக்குப்பைகள்.
நாலு பேர் வந்து தூக்கிப்போக‌
காத்திருக்கும் நீண்ட உடல் போல்
குலையோடும் கிழிந்த இலையோடும்
வாழைமரம்.
காகிதகந்தல்கள்.
மிச்சமான கல்யாண அழைப்பிதழ்கள்.

அதோடு...
ஆ..ஆ..ஆ
இது என்ன?
அறுந்து விட்டனவா
என் ரத்த நாளங்கள்...?
என் மேல் வந்து விழுந்தது
ஒரு மணப்பெண் மெஹந்தி போட்டு
முடித்த "கூம்பு"க்குழல்கள்..

கடைசியாக விழுந்தது
குப்பை அல்ல.
பூகம்பம்.பிரளயம்.சுநாமி
மரவட்டையாய் அடியில்கிடந்த நான்
துள்ளி எழுந்து விட்டேன்.
நரசிம்மம் பிளந்த இரணியன் போல்
அந்த குப்பைகள் எல்லாம்
குடல்கள் போல் அந்த தெருவெல்லாம்
இறைந்து படர்ந்து கிடந்தன.

வெறியோடு
அந்த மெஹந்திக்குழலை
கையில் பிடித்துக்கொண்டு
ஆனந்த கூத்து ஆடினேன்.

அது நான் அவளுக்கு கொடுத்தது.
அது பிதுங்கியபோது
என் இதய அறைகளின்
ஆரிக்கிள் வெண்ட்ரிகிள் எல்லாம்
பிதுங்கி விழுந்து
எங்கள் சொப்பன "ஜெல்லி"மீன்களின்
மயிர்கள் உமிழும் பச்சை நிற ரோஜா நிற‌
ஒளித்தீற்றுகளாய்
கோலம் காட்டியிருக்கும் அல்லவா!

வர்ண வர்ணமாய்
நான் எரிந்து கொண்டிருந்தேன்.
எனக்குள் தோற்றங்கள்
என்னையே பிசைந்து
தின்றுகொண்டிருக்கும் பூதங்கள்.
வெடித்து வீழ்ந்த என் அந்தரங்கத்து வானம்
கலர் கலராய் வாந்தியெடுக்க‌
முண்டிக்கொண்டிருந்தன.

லுங்கியை அவிழ்த்து
தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு
உற்சாகமாய் ஆடும்
சினிமா கதாநாயகன் போல்
நானும் ஆடினேன்.
அந்த மெஹந்தி குழல் என்னை
இப்போது ஒரு குரங்காட்டி போல்
ஆட்டி வைத்தது..

அதில் உள்ள‌
என் வண்ணக்கனவுகள் எல்லாம்
வானவில் குழம்பு லாவாவாய்
என் சோகத்தீயை அல்லவா
அவள் கைகளில்
பூங்கொடியாய்
மலர் ஓவியங்களாய்
இழைத்திருக்கும்!

கசங்கிய அழைப்பிதழில்
மணமக்கள் பெயர்களில்
என் பெயர் இல்லை.
யாரோடோ ஒட்டிக்கொண்டு
அவள் பெயர்.
இது எப்படி நடக்கும்?

நடக்கிறது எல்லாம் நல்லதுக்காகவே நடக்கிறது.
நடந்தது எல்லாம் நல்லதுக்காகவே நடந்தது.
நடப்பது எல்லாம் நல்லதுக்காகவே நடக்கும்.

யாரோ ஒலிபெருக்கியில்
சொற்பொழிவு என்ற பெயரில்
என் காதலுக்குள் இருந்த‌
என் உயிரெழுத்தையும் மெய்யெழுத்தையும்
கசாப்பு செய்து கொண்டிருந்தார்கள்.

எனக்காக அவள் விட்ட‌
கடைசிக்கண்ணீர் சொட்டு
அழைப்பிதழ் கசங்கலில்
அவள் பெயரில் விழுந்து
லென்ஸ் போல‌
அவளையே பிரம்மாண்ட உருவமாய்
காட்டிக்கொண்டிருந்தது.

நான் இங்கு தான் விழுந்து கிடக்கிறேன்.
அந்த உருவத்தைப்பார்த்துக்கொண்டே
அரூபமாய்
இங்கு தான் விழுந்து கிடக்கிறேன்.

======================================================ருத்ரா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ரசித்த சில கவிதைகள்... Empty Re: ரசித்த சில கவிதைகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum