தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாழ்க்கை முழுக்க இசையும் என்கூடவே இருக்கணும்!

View previous topic View next topic Go down

வாழ்க்கை முழுக்க இசையும் என்கூடவே இருக்கணும்! Empty வாழ்க்கை முழுக்க இசையும் என்கூடவே இருக்கணும்!

Post by நாஞ்சில் குமார் Wed Jul 16, 2014 8:25 pm

[You must be registered and logged in to see this image.]

கர்நாடக சங்கீதம், திரை இசை என இரண்டு துறைகளிலும் தனித்தனி முத்திரைகளைப் பதித்தவர் சாருலதா மணி. சபா கச்சேரிகளில் சாருலதாவின் தனி ஆவர்த்தனத்தை ரசிக்க ஒரு கூட்டம் உண்டு என்றால், அவரது திரைப்பாடல்களை விரும்பவும் இன்னொரு கூட்டம் உண்டு. ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது...’, ‘சில்லாக்ஸ்...’, ‘தீயே... தீயே...’ என இவர் குரலில் ஒலித்த அத்தனை சினிமா பாடல்களும் சூப்பர் ஹிட்.

கச்சேரி, ரெக்கார்டிங் என பிசியாக இருந்த போதும், ‘குங்குமம் தோழி’ வாசகிகளான ஸ்ருதி, ப்ரியதர்ஷினி, சுனிதா, ஸ்வாதி, சரண்யா ஆகியோரை சந்திக்க நேரம் ஒதுக்கினார் சாருலதா மணி. திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில், அரங்கேறியது இசையுடன் சேர்ந்த அரட்டைக் கச்சேரி!

ஸ்ருதி: உங்களுக்கு இசையில ஆர்வம் வந்தது எப்படி?

‘‘அம்மா ஹேமலதா வீணைக் கலைஞர். வீட்ல எப்போதும் சங்கீதம் ஒலிச்சுக்கிட்டே இருக்கும். என்னோட 7வது வயசுல எனக்கும் சங்கீத ஆர்வம் வந்தது. அண்ணா யுனிவர்சிட்டியில மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சிட்டிருந்தப்ப, இசையைப் பத்தின ஒரு சீரியஸ்னஸ் வந்தது. எதுக்காகவும் இசையை விட்டுடக் கூடாதுனு ஒரு வேகம் வந்தது. மியூசிக்ல எம்.ஏ. முடிச்சேன். இசைதான் எதிர்காலம்னு ஒரு தெளிவு வந்தது. அப்படி வளர்ந்த ஆர்வம்தான், இன்னிக்கு இந்த இடத்துல கொண்டு வந்து நிறுத்தியிருக்கு...’’

ப்ரியதர்ஷினி: கர்நாடிக் மியூசிக்ல பிரபலமா இருந்த நீங்க சினிமாவுக்கு வந்தது திட்டமிட்டு நடந்ததா?

‘‘இல்லை. என் தங்கை மதுமிதாவும் பாடகி தான். எனக்கு முன்னாடியே சினிமாவுக்கு வந்தவங்க அவங்க. கர்நாடிக் மியூசிக்ல எனக்குனு ஒரு தனி இடம் கிடைச்சது. ராகங்களைப் பத்திப் பேசற ஒரு டி.வி. ஷோ ரொம்பப் பிரபலம். சினிமா இண்டஸ்ட்ரியிலயும் என்னை நிறைய பேருக்கு அறிமுகம் பண்ணின நிகழ்ச்சி அது. அதைப் பார்த்துட்டுத்தான் விஜய் ஆன்டனி சார், ‘நான் அவனில்லை’ படத்துல என்னை அறிமுகப்படுத்தினார். அதுவரை எனக்கும் சினிமாவுல பாடறதைப் பத்தின எந்த ஐடியாவும் இல்லை. விஜய் ஆன்டனி சார் மூலமா வந்த வாய்ப்பு, நல்ல தொடக்கமா தெரிஞ்சது. ‘காக்க... காக்க...’னு அந்தப் படத்துல நான் பாடின பாட்டு நல்ல ஹிட். தொடர்ந்து நிறைய வாய்ப்புகள்... பாடிட்டே இருக்கேன்...’’

சுனிதா:  ஒரு காலத்துல கர்நாடக இசைக்கலைஞர்கள் யாரும் சினிமாவுல பாட மாட்டாங்க. இன்னிக்கு எல்லா முன்னணி கர்நாடக இசைக் கலைஞர்களும் சினிமாவுல பாடறாங்க... இந்த ட்ரெண்ட் பத்தி என்ன நினைக்கிறீங்க?

‘‘கர்நாடிக் சிங்கர்ஸ் சினிமாவுல பாடறது இன்னிக்கு, நேத்திக்கு நடந்ததில்லை. சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், என்.கே.டி., பி.யூ சின்னப்பானு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் நிறைய பேர் சினிமாவுலயும் பாடியிருக்காங்க. கர்நாடக சங்கீத ராகங்கள்ல உள்ள திரைப்பாடல்கள் பலதும் அவங்க பாடினதால பிரபலமானதையும் மறுக்க முடியாது. நல்ல இசை எந்த வடிவத்துல இருந்தாலும் வரவேற்கணும். ரசிக்கணும். அவ்வளவுதான்...’’

ஸ்வாதி: ஒரு பாடலைப் பாடும் போது, உங்க மனசுக்குள்ள ஒரு காட்சியை கற்பனை பண்ணியிருப்பீங்க... அது படமான பிறகு நீங்க எதிர்பார்த்த மாதிரியே வந்ததா உணர்ந்திருக்கீங்களா?

‘‘உண்மையைச் சொல்லணும்னா பல பாடல்களைப் பாடற போது, எங்களுக்கு அது எந்த படம்னுகூட தெரியாமத்தான் பாடுவோம். அதைக் கேட்கறது நாகரிகமானதில்லை. ‘என் உச்சி மண்டையில...’ பாட்டு ரெக்கார்ட் பண்ணின போதும், அது எந்தப் படம்னு தெரியாது. மூணு முறை ரெக்கார்டிங் நடந்தது. அப்புறம்தான் அது விஜய் நடிக்கிற ‘வேட்டைக்காரன்’ படத்துக்கான பாட்டுனு தெரிய வந்தது. விஜய் படத்துல பாடிட்டேன்கிற அந்த நினைப்பே பயங்கர உற்சாகமா இருந்தது.

அதே போலத்தான் ‘சில்லாக்ஸ்...’ பாட்டும். பாடிட்டு வந்து பல நாள் கழிச்சுதான், அது ‘வேலாயுதம்’ படம்னு தெரிஞ்சது. மறுபடி இன்னொரு விஜய் படத்துல பாடின குஷி எனக்கு. அதனால பாடும் போது எந்த ஐடியாவும் இருக்காது எங்களுக்கு. ‘மாற்றான்’ படத்துல ‘தீயே... தீயே...’ பாடப் போன போது, அது சூர்யா படம்னு சொன்னாங்க. ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக், கே.வி.ஆனந்த் டைரக்ஷன், சூர்யா ஹீரோன்னதும் கேட்கணுமா? அந்த காம்பினேஷன் நம்ம கற்பனைக்கெல்லாம் எட்டாதது...’’

சரண்யா: என்னதான் ஹிட் ஆனாலும், இன்னிக்கு ஒரு பாடலோட ஆயுள் ரொம்பக் கம்மி. கஷ்டப்பட்டு பாடின அந்தப் பாட்டு சீக்கிரமே காணாமப் போறதுல உங்களுக்கு வருத்தமிருக்குமா?

‘‘கஷ்டமாதான் இருக்கும். சிரமப்பட்டு பாடின சில பாடல்கள் வெளியிலயே வராமப் போகலாம். ஆனா, பாடகர்கள் ஒரு பாட்டைப் பாடி முடிச்சதும், அதுலேருந்து உடனே வெளியில வந்துடணும். எமோஷனலான அட்டாச்மென்ட் வச்சுக்கக் கூடாது...’’

சுனிதா: கர்நாடிக்... சினிமா... எதுக்கு முதலிடம் கொடுப்பீங்க?

‘‘கர்நாடக சங்கீதம் பாடறதுங்கிறது எனக்கு மன அமைதியைக் கொடுக்கிற விஷயம். சினிமாவுல பாடறது என்னை நானே ரீசார்ஜ் பண்ணிக்க, ஒரு ஃபன்னுக்காக பண்ற விஷயம். ரெண்டுமே முக்கியம்தான்...’’

ப்ரியதர்ஷினி: சினிமாவுல பாடணும்னு ஆசை...அதுக்கான வழிகள் தெரியலை. செல்வாக்கு இருந்தா மட்டும்தான் அது சாத்தியமா?

‘‘செல்வாக்கு, பின்னணியெல்லாம் இன்னிக்குத் தேவையில்லை. உண்மையான  திறமைதான் உங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும்னு நிறைய பேர் நிரூபிச்சிட்டாங்க. முதல்ல உங்க மேலயும், உங்க திறமை மேலயும் உங்களுக்கு நம்பிக்கை வேணும். டெமோ சிடி தயார் பண்ணி, மியூசிக் டைரக்டர்ஸ்கிட்ட கொண்டு போய் சேர்க்கணும். இன்னிக்கு எந்த ஒரு பிரபலத்தையும் சுலபமா ரீச் பண்ண இன்டர்நெட்ல எத்தனையோ வழிகள் இருக்கு.

அதிர்ஷ்டமும் கொஞ்சம் அவசியம்தான். அமைதியும் அடக்கமும் ரொம்பவே முக்கியம். வாயால கெட்டவங்க நிறைய பேர். அடுத்தவங்களைக் குத்தம் சொல்றது, நோகடிக்கிறதெல்லாம் தேவையில்லை. வெற்றியை நோக்கின உங்க முயற்சியில நிறைய சோர்வுகளை சந்திப்பீங்க. தகுதியே இல்லாதவங்களுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்குதுங்கிற வெறுப்பு தலைதூக்கும். ஆனா போராடி, ஜெயிச்சு, முன்னேறின பலரும் அப்படியொரு நிலைமையை சந்திச்சவங்களாதான் இருப்பாங்க. திறமை எவ்வளவு முக்கியமோ, அதை விட அதிகமாக பொறுமையும் அவசியம்...’’

ஸ்ருதி: இன்ஜினியரிங்கை விட்டுட்டு இசைக்கு வந்துட்டோமேனு என்னிக்காவது வருத்தப்பட்டதுண்டா?

‘‘எத்தனையோ திறமையான இன்ஜினியர்ஸ் இருக்காங்க. அதனால அதுல வருத்தப்பட ஒண்ணுமில்லை. ஒருவேளை நான் சினிமாவுலபாட வரலைன்னாலும், முழு நேர கர்நாடிக் சிங்கராதான் இருந்திருப்பேன்...’’

சரண்யா: நடிகர், நடிகைகள் எல்லாம் இன்னிக்கு பாட ஆரம்பிச்சிட்டாங்க... அது ஆரோக்கியமானதுனு நினைக்கிறீங்களா? முறையான இசை ஞானம் தேவையில்லையா?

‘‘அதுல ஒண்ணும் தப்பில்லையே... ‘ஃபை... ஃபை... ஃபை... கலாய்ச்சி ஃபை’னு பாடும் போது, அந்தப் பாட்டு ஏதோ ஒரு ஃபீலிங்கை கொடுத்தா போதுமே... ‘பாடறியேன்... படிப்பறியேன்...’ மாதிரியான ஒரு பாட்டைப் பாடத்தான் சித்ராம்மா மாதிரியான ஆட்கள் வேணும். மற்ற பாடல்களை யார் வேணாலும் பாடலாம். விஜய், தனுஷ், சிம்புனு இன்னிக்கு எல்லாரும் நல்லாவே பாடறாங்க...’’

ஸ்வாதி: தினம் தினம் புதுசு புதுசா பாடகர்கள் அறிமுகமாகிட்டிருக்காங்க... யாருக்கும் தனித் தன்மைனு எதுவும் இல்லை... இதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?

‘‘நிறைய பாடகர்கள் வர்றது ஆரோக்கியமான விஷயம்தான். தனித்தன்மையே இல்லாததும், ஒரே பாட்டோட காணாமப் போகறதும் அவங்கவங்க கைகள்லதான் இருக்கு. சினிமாவை வச்சு பேர், புகழைத் தேட நினைக்கிறது தப்பு. உங்களோட இசைத்திறமை பலமா இருந்தா, சினிமா வாய்ப்பு உங்களைத் தேடி வரும். சினிமாவை வச்சுதான் பிரபலமாகணும்னு நினைச்சா, ஒரு கட்டத்துல சினிமா வாய்ப்பு இல்லாமப் போகும் போது, அவங்களும் காணாமப் போயிடறாங்க. தனித்தன்மையை வளர்த்துக்கணும். மீடியாவோட நட்போட இருக்கக் கத்துக்கணும். இதெல்லாமும் முக்கியம்...’’

ஸ்ருதி: நீங்க ரொம்பவும் கஷ்டப்பட்டு பாடின பாட்டு எது? ‘நாம பாடியிருக்கலாமே... மிஸ் பண்ணிட்டோமே’னு நினைக்கிற பாட்டு எது? பாடினதை நினைச்சுப் பூரிக்க வைக்கிற பாட்டு எது?

‘‘கஷ்டப்பட்டு பாடினதுன்னு சொன்னா, ‘மாற்றான்’ படத்துல ‘தீயே... தீயே...’ பாட்டைச் சொல்லலாம். பாடாம மிஸ் பண்ணிட்டோமேனு நினைக்கிற பாட்டு, ‘மூன்று பேர் மூன்று காதல்’ படத்துல யுவன்ஷங்கர் இசையில ‘ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே...’ பூரிக்க வைக்கிற பாட்டுன்னா, சமீபத்துல ‘திருமணம் என்கிற நிக்கா’ படத்துல ஜிப்ரான் மியூசிக்ல நான் பாடியிருக்கிற ‘கண்ணுக்குள் பொத்தி வைத்த...’  ஒரு பிராமணக் குடும்பத்துல கொலுவுல பாடற மாதிரியான அந்தப் பாட்டு என் மனசுக்கு ரொம்ப நெருக்கமானது. குத்துப்பாடல்கள் பாடி என் மேல விழுந்திருந்த இமேஜை, மாத்தின பிரமாதமான மெலடி இது...’’

சரண்யா:  விருதுகள் பத்தி உங்க அபிப்ராயம் என்ன?

‘‘என்னிக்குமே விருதுகளுக்கு ஆசைப்பட்டு நான் பாடினதில்லை. மக்களுக்குப் பிடிக்கிற பாடகர்களை, விமர்சகர்களுக்குப் பிடிக்காமப் போகலாம். விமர்சகர்களுக்குப் பிடிக்கிற பாடகர்களை மக்களுக்குப் பிடிக்காமலும் இருக்கலாம். நான் மக்களுக்குப் பிடிச்ச பாடகி. அப்படி இருக்கிறதுல எனக்குப் பெருமையும் கூட. கர்நாடிக் இசைத் துறையில நிறைய விருதுகள் வாங்கியிருக்கேன். எல்லாமே தானா வந்தவை...’’

ப்ரியதர்ஷினி:  இசையமைப்பாளர்கள் ஒவ்வொருத்தரும் தொடர்ந்து ஒருசில பாடகர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கிறது பத்தி என்ன நினைக்கிறீங்க?

‘‘சில இசையமைப்பாளர்கள் அப்படி செய்யறாங்க. ஒரே ஆட்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கிறதைத் தவிர்த்து, எல்லாருக்கும் கொடுத்தா, வெரைட்டி கிடைக்கும். அந்த விஷயத்துல இசையமைப்பாளர்கள் இன்னும் கொஞ்சம் பரந்த மனசுக்குப் பழகணும்...’’

ஸ்வாதி: ஒரு நல்ல பாட்டு பாடிட்டு வந்ததும், உங்களுக்கு வீட்லருந்து எந்த மாதிரியான ஊக்கம் கிடைக்கும்?

‘‘எங்கம்மாவும் கணவரும் எனக்குப் பெரிய சப்போர்ட். ஆனாலும், எங்க வீட்ல யாருமே யாரையும் தலையில வச்சுக் கொண்டாடவெல்லாம் மாட்டாங்க. ‘இந்த உலகமே உனக்குத்தான்... உன்னைவிட்டா வேற யாரிருக்கா’ங்கிற ரேஞ்சுல எல்லாம் பில்டப் பண்ண மாட்டாங்க. நல்லா பாடினா சரி. நல்லா பாடலையா... ‘தொழில்ல மரியாதை வச்சு இன்னும் அதிக சிரத்தையோட பாடு’னு அட்வைஸ் பண்ணுவாங்க. கடுமையும் உறுதியும் கலந்த அந்த வார்த்தைகள்தான் எனக்கான ஊக்கம்...’’

சுனிதா: மியூசிக் கத்துக் கொடுக்கிறீங்களா?

‘‘முழுநேர வகுப்புகள் எடுக்கற அளவுக்கு நேரமில்லை. ஸ்கைப்ல சில பேருக்கு கத்துக் கொடுக்கறேன். ‘லேர்ன் யுவர் ராகா’னு ஆங்கிலத்துல ஒரு சிடி ரிலீஸ் பண்ணியிருக்கேன். வெளிநாட்டுல வசிக்கிற தமிழ் தெரியாத இசை ஆர்வலர்களுக்கானது அது. பிற்காலத்துல முழு நேர வகுப்புகள் எடுக்கிற ஐடியா இருக்கு. நேரம் அனுமதிக்கணும்...’’

ஸ்ருதி: எதிர்காலத் திட்டம் ஏதும் இருக்கா?

‘‘ஒவ்வொரு நிமிஷமும் இசையை ரசிக்கிறேன். என் வாழ்க்கை முழுக்க இசையும் என்கூடவே இருக்கணும்னு ஆசைப்படறேன். ஒருநாள் என்னோட 8 வயசு பையன் கிருஷ்ணா ‘நீ ஏம்மா பாடகியாகணும்னு ஆசைப்பட்டே’ன்னு கேட்டான். பேருக்காக, புகழுக்காக, பணத்துக்காக, மக்களோட பாராட்டுக்காக, உலகம் முழுக்க டிராவல் பண்ண... இப்படி அடுக்கடுக்கா எனக்குள்ள ஆயிரம் காரணங்கள் வந்தது. அது எல்லாத்தையும் தாண்டி, எனக்கு பாடறதுல உள்ள ஆர்வமும் லயிப்பும்தான் முக்கிய காரணம்னு மனசுக்குள்ள இருந்து ஒரு பதில் வந்தது. அதை என் பையன்கிட்ட சொன்னப்ப, ‘அப்போ நீ எப்போதும் அதை மட்டும் ஞாபகத்துல வச்சுக்கிட்டுப் பாடும்மா’னு சொன்னான்.

பெரிய ஞானி மாதிரி அவன் சொன்ன அந்த வார்த்தைகள் என் கண்களைத் திறந்த மாதிரி உணர்ந்தேன். ‘ஏன் பாடறே’ங்கிறதுக்கான மத்த காரணங்களோட பின்னணியில ஏதோ ஒரு கால்குலேஷன் இருக்கிறதையும், பிடிச்சதால பாடறேங்கிற காரணத்துல இசையின் மீதான என்னோட காதல் மட்டுமே இருக்கிறதையும் உணர்ந்தேன். ஒவ்வொரு முறை பாடும் போதும், அதை மனசுல வச்சுக்கிட்டுப் பாடறேன். கடைசி வரைக்கும் இது தொடர்ந்தாலே போதும்...’’


நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

வாழ்க்கை முழுக்க இசையும் என்கூடவே இருக்கணும்! Empty Re: வாழ்க்கை முழுக்க இசையும் என்கூடவே இருக்கணும்!

Post by ஸ்ரீராம் Fri Jul 25, 2014 7:09 pm

வாழ்க வளமுடன்
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum