தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதல் கதைகள்

View previous topic View next topic Go down

காதல் கதைகள் Empty காதல் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 08, 2014 11:01 am

கதையாசிரியர்: பி.அமல்ராஜ்
கதைத்தொகுப்பு: காதல்

நிலா ஒரு அழகிய இராட்சசி



நிலா எனக்கு மிகவும் நெருக்கமான தோழி. காதலைத் தவிர அனைத்திலும் பரந்துபட்ட அறிவுடையவள். காதலனைத்தவிர வேறு யாரிடமும் அவள் மண்டியிட்டதில்லை. அத்தனை தற்துணிவுடைய பெண் அவள். உருண்டைக் கண்களுக்குள் எப்பொழுதும் ஒரு குறும்புத்தனம் சுழன்றுகொண்டிருக்கும்.

சிரிக்கும் போதெல்லாம் கண்ணிமைகள் பரதநாட்டியம் ஆடும். பெண்ணழகின் ரேழகி அவள். எமது நட்பின் வயது ஏறக்குறைய பத்து வருடங்கள். அவளை சந்திக்காமல் இருந்திருந்தால் எனக்கு அழகிகளின் அற்புத அகம்பாவம் பற்றி தெரியாமலே போயிருக்கும். அவள் அழகில் அப்படியொரு கெறு ஒட்டிக்கொண்டிருக்கும்.

கடதாசிப்பூக்களுக்கும், கள்ளிப்பூக்களுக்கும் மத்தியில் இறுமாப்பாய் நிற்கும் மல்லிகை போல. அவள் கட்டும் சேலைகளின் அத்தனை இழைகளும் அவ்வளவு அம்சமாய் நிமிர்ந்து நிற்கும். அவள் தேவலோகத்தின் சிங்காரி.
சிருஷ்டிக்கப்பட்ட அந்த சிற்றூரின் சீமாட்டி. இத்தனை வசீகரமான பெண்ணை தோழியாக வைத்திருப்பதில் எனக்கோ அத்தனை உடன்பாடு இருந்ததில்லை. மனம் அடிக்கடி நிலைகுலையும். நான் புத்தனாக இருந்தால் கூட நான் அந்தப்புரம் போய்விட்டால் என் நிலை? இருந்தும் நான் தோழன் என்பதை அடிக்கடி அவள் கேட்காமலேயே சத்தியப்பிரமாணம் செய்துகொள்வேன். அது என்மேல் நான் கொண்டிராத என் நம்பிக்கையின் சாட்சியம். இருந்தும் இப்படியொரு தோழி காதலியானால்?

நிலா என்னை நீங்கும்போதெல்லாம் எப்படியோ இருள் சூழ்ந்துகொள்ளும். அன்றும்அப்படித்தான். வெறும் இருட்டில் வெறுமையாய் உறங்கிக்கொண்டிருந்தேன். எனதுதொலைபேசிக்கும் ராசி இருந்ததில்லை என்னைப்போல. எப்பொழுதும் அமைதியாகவே இருக்கும் அல்லது ஆண் நண்பர்களின் அழைப்பு மட்டும் அவ்வப்போது வந்துபோகும். இருட்டில் சிணுங்க ஆரம்பித்த தொலைபேசியை எடுத்து பேசும் அளவிற்கு தூக்க போதை வழிவிடவில்லை. முதல்முறை அடித்து ஓய மீண்டும் மறுபக்கம் திரும்பிப் படுத்தேன்.

திடீரென ‘உன்கூட கொஞ்சம் பேசணும்..நைட்டுக்கு ப்ரியா இருப்பியா..?’ என நிலா காலையில் சொன்னது ஞாபகம் வரவே, சடாரென எழுந்து தொலைபேசியை எடுத்து தட்டியதில் தெரிந்தது அவள் தான் சற்று முன்னர் அழைத்திருந்தது. உடனே ரீடயல் செய்தேன். அவள் ‘ஹலோ..’ என்றாள்.
எனது இருட்டு அறை திடீரென நத்தார் பண்டிகை கொண்டாடும் தேவாலயம் போலபளிச்சென ஆனது. நடுச்சாமத்தில், யாருமில்லா தனிமையில் காதுகளுக்குள்பாயும் இளையராஜா பாடல்போல பேச ஆரம்பித்தாள். அந்த நாட்களிலெல்லாம்
இளையராஜா என்னை ஆட்கொண்டிருந்தாலும் நிலா என்னை ஆட்சிசெய்துகொண்டிருந்தாள். ‘சொல்லு நிலா.. என்ன இந்த நேரம்..?’

வார்த்தைகள் தடுமாறினாலும் சாதாரண தோழன் அளவிற்கு நடித்துக்கொண்டேன்.இல்ல.. நீ என்ன பண்ணுறா?’. இரவு ஒன்பது மணியும், நடுச்சாமம் ஒன்றரைமணியும் எனக்கு ஏதோ ஒரேமாதிரித்தான். ‘இப்ப ஒம்பது மணி.. கொர்…’
என்றேன். ‘அப்ப சரி நீ தூங்கு.. நான் வைக்கிறேன்..’ என்றவளை நான்உடனடியாகத் தடுத்தேன். ‘ச்சே.. ச்சே.. சொல்லு..!’. வேண்டாமல் வந்த வரத்தைவேண்டாம் என்பதா?

அது இது என அரைமணிநேரம் கடந்தது அவளுக்கும் எனக்குமான உரையாடல்.இறுதியில் ‘என்ன லவ் பண்றியா?’ என கேட்ட ஒரு கேள்வியில் மனதில்பட்டாம்பூச்சி பறந்தாலும் எதற்காக திடீரென அப்படிக்கேட்கிறாள் என்பதை
என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எதற்கும் பொதுவாக பதில்சொல்லலாம் என ‘ஏன் திடீரென அப்பிடி கேட்டாய்.. உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்தானே!’

என சமாளித்தேன். நான் சமாளிப்பதும் மறுபுறத்தில் நான் அலைவதும் தெரிந்ததோஎன்னவோ சொல்ல வந்ததை சட்டென போட்டு உடைத்தாள். ‘இல்ல… நான் உன்ன லவ் பண்றேன்.. ஐ லவ் யு!’. அவ்வளவுதான் பிறகென்ன, என் கூரை திறந்தது. வானம் தெரிந்தது. விண்மீன்கள் என் அறைவரை வந்து சுவர்களில் அமர்ந்துகொண்டது.
ஒரு புத்தன் றோமியோவாகிக்கொண்டிருந்தான். ஒரு கண்ணதாசனும் ஒருஷேக்ஸ்பியரும் பேனையோடும் பேப்பரோடும் என் அறையில் வந்துகுந்திக்கொண்டார்கள். என்னை திடீரென அழகாய்க் காட்டியது கண்ணாடி. ‘நானும்நிலாவும் வாழக்கையும்’ என்கின்ற சுயநாவலின் முதல்பக்கம் நிரம்பஆரம்பித்தது.

இரண்டு வருடங்கள் எப்படிப்போனது என அடிக்கடி நானும் நிலாவும்பேசிக்கொள்வோம். ஆயிரம் சண்டைகள், ஆயிரம் கோவங்கள், கணக்கில்லா புன்னகை, அளவில்லா ஆசைகள், அடிக்கடி தொலைபேசி அழைப்புக்கள், ஆரவாரமில்ல கட்டியணைப்பு, திருட்டு முத்தங்கள், தினம்தோறும் ‘ஐ லவ் யு’, குழந்தை பற்றிய இங்கித கற்பனை, குடும்பம் பற்றிய கனவு, அவள் மடியில் போடும் குட்டித்தூக்கம், அவளைப்பற்றி நண்பர்களிடத்தில் அடிக்கும் அளப்பரைகள்..அப்பப்பா.. அந்த இரண்டு வருடங்கள் எங்கள் வாழக்கையை அப்படியே இரசித்து வாழவைத்த காலம்.

டேய்.. எங்க இருக்க..?’ அன்று தொலைபேசியில் வந்த என் நிலாவின் குரலில்ஒரு படபடப்பு ஒட்டியிருந்தது. அவள் ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தம்சொல்லும் என்னால் இதை கண்டுபிடிக்க முடியாதா என்ன. ‘என்ன பிரச்சன லவ்லி?’நேரடியாகவே விடயத்திற்கு வந்தேன். ‘செல்லம்.. நீ என்ன சாதி?’ நிலாகேட்டாள். அவளது பேச்சில் ஒரு தேடலும் ஒரு ஏமாற்றமும் ஒரு பருதவிப்பும்படர்ந்திருந்தது. ‘தெரியல லவ்லி, எதுக்கு திடீரெண்டு.. அம்மாட்ட கேட்டு
சொல்லவா..?’, ‘ஓகே ஓகே..!’ தொலைபேசி கட்டானது.

‘எதற்கு அதெல்லாம் இப்பொழுது?’ எனக்கு மூளை சுற்றி சுழன்று களைத்து திரளஆரம்பித்தது. குளப்பத்திற்கு மௌனம் மருந்தல்ல. உடனடியாகவே நிலாவைஅழைத்தேன் தொலைபேசியில். ‘நீங்கள் அழைத்த இலக்கம் இப்பொழுது பாவனையில் இல்லை’ என பதில் வந்தது. நேரடியாக வீட்டிற்கு போய் அம்மாவிடம் கேட்டேன்.
‘அம்மா நாம என்ன சாதி..!’. அம்மா சுருக்கமான ஆனால் தெளிவான ஒருவிளக்கத்தைத் தந்தார். அதாவது நிலாவின் சாதியை விட நாங்கள் மூன்று சாதிகுறைந்தவர்களாம். எனது காரை எடுத்துக்கொண்டு நிலாவின் வீடு நோக்கி
பறந்தேன்.

‘நிலா.. நிலா..’ வீட்டின் உட்புறத்திலிருந்து இரண்டு நாய்கள் கேட்டைநோக்கி ஓடி வந்தன. அதற்கு பின்னால் மூன்றாவது நாயை எதிர்பார்த்தேன் ஆனால்வந்தது நிலாவின் அப்பா.
‘என்ன வேணும்?’ கோவமாகக் கேட்டார் எனது மாமா.

‘நிலாவ பாக்கணும்..’
‘அவ இல்ல.. கண்டவன் நிண்டவன் எல்லாம் அவள பாக்க முடியாது!’
‘ப்ளீஸ் அங்கிள்.. ஒருக்கா கூப்பிடுங்க..’
‘உனக்கு ஒருக்கா சொன்னா கேக்காதா?’
‘சரி.. இட்ஸ் ஓகே..’ என திரும்பி கார் கதவைத்திறந்தேன். அப்பொழுதுவாசலில் நின்றுகொண்டிருந்த நிலாவின் அப்பாவின் குரல் கேட்டது.
‘சாதி குறைஞ்ச நாய்களுக்கெல்லாம் என்ட பிள்ள கேக்குதா?’

………………………
மூன்று வருடங்கள் கடந்தன. நிலாவிற்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாகஅறிந்தேன். அவளுக்கு பெண் குழந்தைதான் பிடிக்கும். பாவம் அதிஷ்டம்கைகொடுக்கவில்லை. நிலா இன்றுவரை என்கூடவே நடக்கும் நிழல். அவளை
இப்பொழுதுகூட என்னால் பிரித்துப்பார்க்க முடியாது. என் இதயத்தில்இப்பொழுதும் அவளின் நினைவுகள்தான். அழிக்கமுடியாத சித்திரம் அவள். ஆபிஸ்முடிந்து ஒருநாள் வீடு வந்தேன். தொலைபேசியில் ஒரு எம்எம்எஸ் வந்து
எனக்காய் தொங்கிக்கொண்டிருந்தது. அது எனது நண்பனிடமிருந்து வந்திருந்தஒரு போட்டோ. கொஞ்சம் உற்றுப்பார்த்தேன். நிலாவின் அப்பா கட்டிலில் படுக்கவைக்கப்பட்டிருக்கிறார்.

மறுபக்கம் ஒரு கம்பியில் தொங்கவிடப்பட்டிருந்தகுருதி கொங்சம் கொஞ்சமாய் அவர் கரங்களுக்குள் சென்றுகொண்டிருந்தது. அந்தகுருதிப்பொட்டலத்தை கொஞ்சம் உற்றுப்பார்த்தேன். அதில் ‘அரவிந்’ என எனதுபெயர் எழுதப்பட்டிருந்தது.

உடனடியாக நண்பனிடம் தொலைபேசினேன். ‘என்னடா இது.. பிளட்ல என்ட பேர்இருக்கு..?’ என வினவினேன். ‘மறந்துட்டியா, போன மாசம் நீ குடுத்த ப்ளட்..பாவம் யாரோ புளச்சுப்போகட்டும் உன்ட புண்ணியத்தால.. சரி ஆபறேசன்
தியட்டர்ல நிக்கிறன்.. அப்புறம் கூப்பிடுறன்..’ தொலைபேசி கட்டானது.
மீண்டும் அந்த குருதிப்பொட்டலத்தை உற்று நோக்கினேன். எனது பெயருக்கு கீழேஏதோ எழுதப்பட்டிருந்தது. அதில் எனது சாதியை குறிப்பிட்டிருப்பார்களோ??ஆவலோடு உற்று நோக்கினேன். அதில் ‘AB+’ என மட்டும் எழுதப்பட்டிருந்தது.
இரண்டு நாட்கள் கழிந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

எதிரில் என் அதேநிலா. ‘அரவிந், நான் நிலா..’ என அவள் அறிமுகம் செய்யும் முன்னமே நான்ஹாய் நிலா, எப்பிடி இருக்கீங்க?’ என கேட்டேன். நிகத்தின் அறிமுகம்
விரலிற்கு தேவையில்லையே. ‘தாங்ஸ்..’ என்றாள். இரண்டு வருடங்களுக்குபின்னர் அவள் குரல் கேட்டதோ என்னவோ மறுமொழிக்கு நாவும் உதடும் அசைகிறது ஆனால் வார்த்தைகள் வருவதாய் இல்லை. எதுவும் தெரியாதவனாய் ‘எதுக்கு திடிரெண்டு தங்ஸ் எல்லாம்…???’ என வினவினேன். ‘இன்னைக்கு அப்பா உயிரோட இருக்கிறதுக்கு நீங்கதான் காரணம்.. அதான்..!’. எனக்கு பேச்சு வரவில்லை. பற்களை இறுக உரசிக்கொண்டேன்.

‘இட்ஸ் ஓகே..!’ என குரலை பணித்துக்கொண்டேன். ‘அதோட அப்பா நீங்க செய்தஇவ்வளவு பெரிய உதவிக்கு உங்களுக்கு ஏதாச்சும் பரிகாரம் செய்யணும்னுஆசப்படுறார்.. என்ன வேணும் அரவிந்??’.
அந்த மனுசனை இப்பொழுதே ஓடிச்சென்று குரல்வளையை நசித்து சாகடிக்கவேண்டும் போல் இருந்தது. எனது நிலாவிடம் எக்கச்சக்கமாய் கோவம் வந்தது என்றால் அது இப்பொழுதுதான். இவர்களுடன் எல்லாம் தொடர்ந்து பேச்சு வைத்திருப்பதே பாவம் எனத் தோணியது.

பயங்கரக் கோவத்துடன் ‘நல்லது நிலா, எனக்கு உன்னைத் தவிர எல்லாமேபோதுமானதாய் இருக்கிறது. சரி, உங்க அப்பாவுக்கு திரும்பவும் ரத்தம்தேவைப்பட்டா கால் பண்ணு. ஓகே???!’ என அழைப்பை அவசரமாய் அன்று துண்டித்த ஞாபகம். இல்லை………… திரும்பிப்பார்த்ததில் என் மேசையிலிருந்தநிலாவின் புகைப்படத்தை நோக்கி எறியப்பட்ட என் தொலைபேசி சுக்கு நூறாய்உடைந்து கிடந்தது. ஆனாலும், அவசரமாக நெருங்கிப்போய் பார்த்தேன், நல்ல

வேளை என் நிலாவின் புகைப்படத்துக்கு மட்டும் எதுவும் ஆகியிருக்கவில்லை.
- ஜீவநதி ஆவணி இதழில் பிரசுாிக்கப்பட்டது.
படித்த கதையில் பிடித்தகதைகள்
நன்றி ;சிறுகதை தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் கதைகள் Empty Re: காதல் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 08, 2014 11:09 am

கதையாசிரியர்: நர்சிம்
கதைத்தொகுப்பு: காதல்

ஸோ வாட்?
------------------

ஸோ வாட்? தத்துவம் தெரியுமா உங்களுக்கு? நம்மைப் பாதிக்கப்போகும் நிகழ்வை எதிர்கொள்ளும் முன், ‘அதனால் என்ன?’ என்று கேட்டுக்கொள்ள வேண்டும். இரண்டு பதில்கள் கிடைக்கும். அதில் இரண்டாவது பதிலுக்கு மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு வந்துவிடும்.


இதைச் சொல்லும்பொழுது எனக்கு ஏன் இவ்வளவு மூச்சு வாங்குகிறது என்று நினைக்கிறீர்களா? ரயிலைப் பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறேன். நேரமாகிவிட்டது. ரயிலைப் பிடிக்க முடியாவிட்டால் என்னவாகும் என்ற என் கேள்விக்கு நானே கேட்டுக்கொண்ட So what – க்கான பதில்கள், 1. இன்று வரவில்லை என வீட்டில் சொல்லிவிடலாம். இன்னொரு நாள் போய்க்கொள்ளலாம். 2. ஐய்யய்யோ நாளை பெண்ணைப் பார்த்தே ஆக வேண்டும். இல்லையெனில் கல்யாணம் நடக்க இன்னும் தாமதமாகலாம்.


அதுதான், அந்த இரண்டாவது பதிலின் பதற்றம் தான் என்னை ஓடவைத்து.. இதோ..இரை முடித்த மலைப்பாம்பு மெல்ல அசைவது போல் நகரும் ரயிலைப் பி… நல்லவேளை விழ இருந்தேன். இருங்கள் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, என் இருக்கையில் அமர்ந்து கொள்கிறேன்.


ஒவ்வொரு முறையும் வெகு முன்னதாகவே வந்துவிடுவேன். ரயில் நிலையங்களில் தென்படும் அனைத்துரக மனிதர்களின் முகபாவங்களைப் பார்ப்பது எனக்குப் பிடித்தவைகளுள் ஒன்று. அப்புறம் சார்ட் தயாராகி ஒட்டியவுடன் பசை காவதற்கு முன்னர், என் பெயரையும் இருக்கையையும் விரலால் ஒத்தி உறுதிபடுத்திக் கொண்டு, அப்படியே மெல்ல அக்கம் பக்க இருக்கைகளில் எத்தனை “F” எனப் பார்த்துவிடுவதும் வாடிக்கை. பெரும்பாலும் M50கள். அருதிப் பெரும்பாலும் F70 என்றே சார்ட்கள் செப்பும். ஏண்டாப்பா, பாட்டியோட மிடில் பர்த்துல படுத்துக்கோயேன்”களும், குறட்டைகளின் விதவிதமான ரீங்கார ஓங்காரங்களும்தான் என் வழித்துணை.


எவ்வளவு திடமாகத் தெரிந்தாலும் சில விஷயங்களை மீண்டும் மீண்டும் உறுதி செய்துகொள்ள வேண்டி இருக்கும். ஜிப் போட்டிருக்கிறதா, தலை கலையாமல் இருக்கிறதா என்பது போலவே அது 5 என்று தெரிந்திருந்தாலும், கடக்கும் டி.டி.ஆரிடம் அது 5 தான் என்பதை உறுதி செய்துகொண்டு, என் எண்ணுக்கு…


வார்த்தைகளைக் காணவில்லை என்று பார்க்கிறீர்களா? வரவில்லை சார். அப்படி ஓர் அழகு. அதுவும் என் இருக்கையில் அமர்ந்திருக்கிறாள். இதுவரையில் நான் செய்த ரயில் பயணங்களின் மொத்த டிக்கெட்டுகளின் விலைக்கும் இன்று நியாயம் செய்துவிட்டது IRCTC – ஆரம்பத்தில் இதைப் பாம்பு கீம்பு என்று ஏதோ சொன்னேன் இல்லையா, மறந்துவிடுங்கள். தாயின் சேலையில் கட்டிய தொட்டில் போன்றல்லவா நம்மை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு ஏந்திச் செல்கிறது இந்த ரயிலம்மை.


என்னை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் ‘என்ன’ என்றன. நம்பரைப் பார்த்தேன். புரிந்துகொண்டவளாய் நகர்ந்து அமர்ந்தாள்.


நானும் அவளும் மட்டும். சற்றுத் தள்ளி சைட் அப்பரில் ஒரு ‘வயிறுதள்ளி’ அங்கிள் அமர்ந்து எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மசாலா வாசனை பசியைக் கிளப்பியது.


பதற்றப்படாதது போலவே அமர்ந்து பயணக்காற்றை முழுதாக முகத்தில் வாங்கிக் கொண்டேன். யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தவள், பேச்சு முடிந்துவிட்டது என்பதை உணர்த்தும் விதமாய், போனை காதிலிருந்து விடுவிக்கும்பொழுது முடியைச் சிலுப்பிக் கொண்டாள். கண்டீஷ்னர் வாசம் மசாலாவை மங்கச் செய்தது.


ஹாய். எப்பிடியும் இன்னும் கொஞ்ச நேரத்துல ஏதாவது கேட்டு பேச ஆரம்பிப்பீங்க, எனிவேஸ் ஐ’ம் விபா.”

அவ்வளவுதான். படீர் எனக் கேட்டுவிட்டாள். பெண்களுக்கு எல்லாமே வெகு எளிது, அவர்கள் மனது வைத்துவிட்டால். இதே வார்த்தைகளை நான் சொல்ல நினைத்திருந்தால் திருச்சி, திண்டுக்கல், மதுரை போர்ட்டர் எல்லாம் வந்தபின்னும் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்திருப்பேன்.

ஹ..ஹாய்.” இப்படியே மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். இவ்வளவு நேரமாக எல்லாவற்றுக்கும் எவ்வளவு வியாக்கியானமாக விளக்கிக் கொண்டிருந்தேன். இப்பொழுது ஒரு வார்த்தைக் கூட வரவில்லை. ம், எப்படி இருக்கிறது பாருங்கள்.

அவள் தோளைக் குலுக்கிக்கொண்டு ஜன்னலைப் பார்த்தாள்.

சென்னையா நீங்க? ட்ராவலிங் டு மதுரை?”

கேட்டது நான்தான். என் தலைமுடி சரியாக இருக்கிறதா என்ற கவலை வேறு ஆட்கொண்டுவிட்டது என்னை. நான் கேட்டதும் என்னைத் திரும்பி அமைதியாகப் பார்த்தாள்.

யெப். சென்னைல வொர்க் பண்றேன். ஆனா மதுரைலதான் வீடு. உடனே வீடு எங்கன்னு கேட்காதீங்க. டாக் அபொட் சம்திங்.. சம் மூவி, சாங்க்.. சம் ஜென்ரல் ஸ்டஃப்ஸ்.. ரைட்ட்ட்…”


அவள்soன்னது சற்றே கோபம் வரவழைத்தது. அதற்காக,விட்டுவிடமுடியுமா? அழகாக இருக்கிறாள் என்பதையும் தாண்டி, இப்பொழுது அவள் மீது ஈர்ப்பு அதிகமாக, அவளுடைய தெளிவான அணுகுமுறை காரணமாயிற்று.

நான், கேஜரிவாலையும் ‘முதல்வன்’ அர்ஜுனையும் முடிச்சுப்போட்டு பேச ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக அஜித்தின் ‘சால்ட் பெப்பர்’, ‘மங்காத்தா’ வில் பிடித்தது எனவும் ‘வீரத்’தில் பிடிக்கவில்லையெனவும் கருத்துகள் பரிமாறினேன். ஆமோதித்து முடியசைத்துச் சிரித்தாள். அப்பர் அங்கிள் தூங்க ஆரம்பித்திருக்கிறார் என்பதை லேசான சப்தம் உணர்த்தத் தொடங்கியது.

உங்க லவ்வருக்கு உங்க ஹியூமர் சென்ஸ் ரொம்பப் பிடிக்குமா?” என்றாள். விஷம் இருந்தால் குடித்துவிடலாம் போல் இருந்தது. லவ்வரே இல்லை என்பது ஒரு பக்கமும், காமெடியனாக்கி விட்டாளே என்பது நடுப்புறமும் வருத்தியது.

பொண்ணு பார்க்கத்தான் இந்த ட்ராவல். வீட்ல பேசிட்டு லாஸ்ட் மினிட்ல சொன்னாங்க. அதான்.”

ஓஹ்” என்று தலையசைத்தவள் கொஞ்ச நேரம் ஜன்னலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இரவில் ஜன்னல், ரயில் பயணம், நிலவு என்று நிறைய பேர் கவிதை எழுதி அக்கப்போர் பண்ணி இருக்கிறார்கள் என்பதை அறிவேன். ஆனாலும் அந்தச் சூழல் எனக்கு ரம்மியமாத்தான் இருந்தது. அவளின் ‘ஓஹ்’வுக்குப் பின்னால் ஏதோ இருப்பது போல் இருந்ததால் அவள் முகத்தைப் பார்த்தேன்.

லவ் மேரேஜ்ல்லாம் ஐடியா இல்லையா உங்களுக்கு?”

மீண்டும் விஷம். மெதுவாகச் சொன்னேன் : அது எப்பிடி இல்லாம இருக்கும். பட். ஒரு அனலைஸ் பண்ணிப் பார்த்தீங்கன்னா, படிக்கும்போதே லவ் பண்ணி, அத சக்ஸஸ்ஃபுல்லா கன்ட்டினியூவ் பண்ணாத்தான் லவ் மேரேஜ்க்கு சான்ஸஸ் அதிகம். அப்போ யாரையும் லவ் பண்ணாம அதுக்கப்புறம் வேல, அதுல ப்ரஷர், செட்டில் ஆகணும்னு ஓடிட்டு இருக்கும்போது.. நின்னு நிதானமா லவ் பண்ண முடியறது இல்ல..”

புருவம் நெளித்துப் பார்த்தாள். தொடர்ந்தேன் :

வொர்க் பண்ற இடத்துல லவ் பண்றது மட்டும்தான் அடுத்த சான்ஸ். பட். ரொம்ப ரேர்தான். ஒண்ணு அல்ரெடி மேரீட், இல்லேன்னா எங்கேஜ்டா இருக்காங்க.”

சிரித்துவிட்டாள். சிரிப்பினூடே, ட்ரூ ட்ரூ” என்றாள்.

ஜில்லென்று காற்று உள் நுழைந்து கொண்டிருந்தது.

டோன்ட் யூ திங்க்.. முன்ன பின்ன தெரியாத ரெண்டு பேர் கல்யாணம் பண்ணிக்கிட்டு…” எனத் தோளைக் குலுக்கி, விட்டால் வாந்தியே எடுத்துவிடுவது போல் பாவனை செய்தாள்.

திக் என்றது. ஆம் என்றும் தோன்றியது. இருபது இருபத்தைந்து வருடங்களாக வெவ்வேறு இடத்தில் வளர்ந்து, யாரென்றே தெரியாத ஆணும் பெண்ணும் பூர்ணமாய் அடுத்தவரது பெயரின் ஸ்பெல்லிங்கைக்கூட தெரிந்து வைத்திருக்காத நிலையில் இணைவது என்பது முட்டாள் தனமாகத்தான் பட்டது.

தொடர்ந்தாள் : காதல்ங்குறது புனிதம், இட்ஸ் டிவைன் அப்பிடி இப்பிடில்லாம் சொல்ல வர்ல.. ஆனா இப்போதைக்கு இந்த ஜாதி எக்ஸட்ரால இருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளில வர்றதுக்கு லவ் மேரேஜ்ஜஸ் மட்டும்தான் ஒரே டூல்னு நினைக்கிறேன்.”

உடனே மறுப்பதுதானே ஹீரோத்தனம். இல்ல. பையன் என்ன ஜாதியோ அதத்தான் ஃபாலோ பண்றாங்க.”

தோளைக் குலுக்கினாள். இருக்கலாம். ஆனா ஓவர் எ ப்ரீயட், அது சரியாகிடும். எங்க தாத்தாவும் பாட்டியும் வேற வேற கேஸ்ட், அப்பாவும் அம்மாவும் வேற.. இப்போ கொஞ்சம் தெளிவா இருக்கோம். எங்க வீட்டோட அடுத்த ஜெனரேஷன் இன்னும் தெளிவா இருக்கும்னு நினைக்கிறேன்.”

அதுக்காக, லவ் பண்ணாதவங்கள்ளாம் அப்பிடியே இருக்குறதாங்க? எவ்வளவோ காரணங்களால லவ்வே பண்ண முடியாம, லவ் பண்ணப்படாத ஆட்கள்லாம் என்ன பண்றது?”

என் கவலையையும் என் நிலையையும் என் கோபத்தையும் ஒருங்கே சேர்த்து அந்தக் கேள்வியைக் கேட்டேன் என்பது அவள் பார்வையில் தெரிந்தது.

இப்படி பலமுறை நடந்திருக்கிறது எனக்கு. யாரிடமாவது எதைக் குறித்தாவது மிகத் தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது சட்டென்று ஒரு மௌனம் ஆட்கொண்டுவிடும் அந்த இடத்தை. அதுவரை பேசிய வார்த்தைகள் எதுவும் அங்கு நிலைகொள்ளாமல் நிச்சலனமாக இருப்பது போல் ஒரு தோற்றம் ஏற்படும். அப்படித்தான் இருந்தது.

இருவரும் ஜன்னலின் வழியே தெரியும் திடீர் வெளிச்சக் கீற்றுகளையும் இருளையும் பார்த்துக்கொண்டே இருந்தோம். வெளிச்சம்-இருள் இரண்டுக்குமிடையே சோடிய வெளிச்சங்கள் வசீகரமாய்க் கடந்து கொண்டிருந்தன அவ்வப்பொழுது. அதுபோலத்தான் வாழ்க்கையும். இந்தப் பயணமும் அப்படியான ஒரு சோடிய மஞ்சள் கீற்றாகத்தான் தெரிந்தது.

மௌனப் பனிக்கட்டியை உடைத்தாள்.

அப்போ படிக்கும்போதே லவ் பண்ணலேன்னா, லவ் மேரேஜ் நடக்குறதுக்கு சான்ஸே இல்லைன்னு சொல்றீங்க?”

இல்லைன்னு சொல்லல, கம்மின்னு சொல்றேன்.”

மீண்டும் மௌனம்.

பை த வே.. உங்க லவ்வர் லக்கி. இவ்ளோ தெளிவா பேசுற பொண்ணு, இவ்ளோ அழகாவும் இருக்குறது ரேர் காம்பினேஷன்.. அதான்.”

சிரித்தாள். அந்தச் சிரிப்பில் முதல்முறையாக வெட்கம் புகுந்துகொண்டது போல் இருந்தது. இப்படி நேருக்கு நேர் சோல்வேன் என்று எதிர்பார்த்திருக்கமாட்டாள் போல.

நானும் படிக்கும்போது யாரையும் லவ் பண்ணது இல்ல. இப்போ ஒர்க் ப்ளேஸ்ல ஏகப்பட்ட பசங்க. ஒண்ணு ஒரேயடியா அல்ட்ரா மாடர்னா இருக்காங்க.. இல்ல ரொம்ப கண்ட்ரி சைடா இருக்காங்க.”

கடவுள் பாதி மிருகம் பாதியா வேணுமா?” கேட்டதும் சிரிப்பாள் என்று நினைத்தேன்.

எக்ஸ்கியூஸ்மி” என்று சொல்லி எழுந்து பாத்ரூம் நோக்கிப் போனாள்.

வந்து, படுக்கையைச் சரிசெய்து ஓக் கேஸ்ஸ். செமயா டைம் போச்சு.. ஸ்லீப்பி.”

இவ்வளவு நேரம் கேட்காத அப்பர் பெர்த் அங்கிளின் குறட்டைச் சத்தம் கேட்கத் தொடங்கியது.

பெண் பார்த்து, ஓ.கே. செய்து, கல்யாணத் தில் ஏக கலாட்டா, தடபுடல், அப்பாவுக்குக் காய்ச்சல் என ஏதேதோ கனவுக்காட்சிகள் மங்கலாகத் தெரியத் தெரியத் தூங்கிப் போனேன், ரயிலின் இரும்பு வாடையோடு.

முகத்துக்கு நேரே சொடுக்குப் போடும் சத்தம் கேட்டதும் எழுந்தேன். மசமசவென விடிந்து கொண்டிருக்க, மதுரையில் நங்கூரமிட்டு நின்றது ரயில்.

சார், செம தூக்கமா,” கேட்டவளைப் பார்த்துச் சிரித்துவிட்டு, அவசர அவசரமாக முகம் கழுவிக்கொண்டு வந்து அவள் சொல்லாமலே அவள் பேக்கேஜையும் எடுத்துக்கொண்டு இறங்கி, படிகளில் ஏறி வெளியே வந்து ஆட்டோக்கள் அருகில் பெட்டியைக் கீழே வைத்து விட்டுத் திரும்பிப் பார்த்தால், போனில் பேசிக்கொண்டே தூரத்தில் வந்துகொண்டிருந்தாள்.

ஆட்டோக்காரர்களிடம் ‘வேண்டாம்’ எனத் தலையாட்டிக் கொண்டிருக்கும் பொழுது அருகில் வந்தவள்.

ஓக்கேஸ்.. தேங்க்யூ..” என்றாள். எப்போது பெர்ஃப்யூம் போட்டாள்?

ஒரு கண் சிமிட்டலில் விடைபெற முயன்றேன்.

இன்னிக்கு ஈவ்னிங் விஷால் மால் வரீங்களா, கேன் வீ மீட்?”

சரியென்று தலையாட்ட நினைத்து, சட்டென்று சுதாரித்தேன். ஹலோ, விளையாடுறீங்களா, ஈவ்னிங் பொண்ணு பார்க்கப் போறேங்க. போகலேன்னா அவ்ளோதான்.”

என்னாகும், ஸோ வாட்?” என்று கேட்டுச் சிரித்தாள்.

இரண்டு கேள்விகள் கேட்டுக் கொண்டேன். 1. போனால் பெண் பார்க்கலாம். 2. போகாமல் விஷால்மால் போனால், காதல் திருமணம்.

எனக்குள் என்ன பதிலைச் சொல்லிக்கொண்டேன் என்றா கேட்கிறீர்கள்?

ஆட்டோ எஃப்.எம்.மில் எஸ்.பி.பி.யின் குரல் ரம்மியாய்க் கேட்கிறது பாருங்கள்.

வாழ்க.. காதல்.. காதலின் தீபமொன்று…”


படித்த கதையில் பிடித்தகதைகள்
நன்றி ;சிறுகதை தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் கதைகள் Empty Re: காதல் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 08, 2014 11:19 am

காதலாகி கசிந்துருகி…
-----------------------------------
கதையாசிரியர்: விசாலம் முரளிதரன்

---------------------------
இன்னும் படபடப்பு அடங்கவில்லை எனக்கு.

கையில் இருக்கும் செல்போனை உற்றுப் பார்த்துக்கொண்டு எத்தனை நேரம் இருந்தேன்??

தெரியவில்லை.

கொஞ்சம் கிள்ளிப் பார்த்து கொண்டேன். இது நிஜமா ??

போனில் ரிசீவ்டு கால்ஸ் ஸ்க்ரால் பண்ணி பார்த்தேன் ..

அந்த நம்பர் இருந்தது..

‘அசோக்’

‘இன்னிக்கி ஈவினிங் வெங்கட்நாராயண ரோட்ல இருக்கிற திருப்பதி தேவஸ்தானம் கோவில் கிட்ட ஒரு 6 மணிக்கு வெயிட் பண்ண முடியுமா?? உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்…’

கொஞ்ச நேரம் பிரமை பிடித்த மாதிரி இருந்தது.

அசோகிடம் இருந்து இந்த அழைப்பு வந்த பிறகு ஒன்றும் ஓடவில்லை. ஒரு 7 வருடம் ஆகியிருக்குமா .. அவனை கடைசியாகப் பார்த்து??

வீட்டுக்கு போன் செய்தேன். வர நேரம் ஆகும் ஆபீசில் கொஞ்சம் வேலை இருக்கு என்று சொல்லி விட்டு பட்டென்று வைத்து விட்டேன்..வேறு கேள்விகள் கேட்க யாருக்கும் நேரம் கொடுக்கவில்லை..

முதல் பொய்.

வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிக் கூட்டம் கும்மாளம் இட்டுக் கொண்டிருந்தது.
கடிகார முள் நகருவேனா என்று சண்டித்தனம் பண்ணிக் கொண்டிருந்தது.
5 மணிக்கு மேல் எனக்கு ப் பொறுமை இல்லை.

மனேஜெரிடம் போய் தலைவலி என்று சொல்லி பெர்மிசன் வாங்கி கொண்டு கிளம்பினேன்.

ரெண்டாம் பொய்.

போனை எடுத்து ஒரே ஒரு கால் மட்டும் செய்தேன்.கொஞ்சம் நிம்மதி.
என்ன பேச வேண்டி இருக்கும் என்னிடம் அவனுக்கு.

அவன் கல்லூரியில் என்னுடன் படித்தவன்.

கல்லூரியில் அடியெடுத்து வைத்த முதல் நாள். டிபார்ட்மெண்ட் ஆபீஸ் எங்கே இருக்கு என்று தேடி கொண்டிருந்த என்னை. ‘மேடம் உங்க கர்சீப் கீழ கிடக்கு’ குரல் கேட்டு நிமிர்ந்தேன்.

அடர்த்தியான முடி ..கொஞ்சம் அழகான ட்ரிம் செய்யப்பட்ட தாடியுடன் கூடிய மீசை ஆண்கள் லிப்ஸ்டிக் போடுவார்களோ என்று சந்தேகப்பட வைக்கும் உதடு…

‘ஹலோ!!!” அவன் குரல் திரும்பி கேட்டதும் முகம் சிவந்தேன்.. ‘சே என்ன நினைப்பான் என்னை பற்றி இப்படியா ஒருத்தரை வெறித்து பார்ப்பது?? முட்டாள் முட்டாள் ..மனதிற்குள் திட்டியபடி..’ தான்க் யூ ‘ என்றுச் சொல்லி அவன் கையில் இருந்த என் உடமையைப் பிடுங்கிக் கொண்டு ஓடினேன்.

அதில் இருந்து அவனை ப் பார்த்தால் எனக்கு வெக்கம் பிடுங்கித் தின்னும். என்னோடு ஒரே வகுப்பில் அவன் இருந்தது எனக்கு ரொம்ப தர்மசங்கடமாகி ப் போனது.எல்லோரிடமும் நான் அவனை வெறித்துப் பார்த்ததைச் சொல்லி இருப்பானோ என்று எனக்கு ஒரு சந்தேகம்.

ஒரு நாள் என் ப்ரெண்ட் மாலதி ‘ ஹே அந்த அசோக் பையனுக்கு உன் மேல ஒரு இதுன்னு நினைக்கிறேன்..” என்றவுடன் தூக்கி வாரி போட்டது எனக்கு. ‘உளறாத ..நீயே எதையாவது கற்பனை பண்ணிக்காத .’ என்றேன்.

‘இல்லடி நானும் கொஞ்ச நாளா பார்த்துக்கிட்டுத் தான் இருக்கேன்.. அவன் உன்னையத் தான் பாக்கிறான்.’ அடித்துச் சொன்னாள் அவள்.

எனக்கு அவன் எங்கே பாக்கிறான் என்பது தெரிய வாய்ப்பே இல்லை. அவன் தொலைவில் வருவதை பார்த்தால் நான் தலை நிமிரவே மாட்டேன்.

ஒரே நட்பு வட்டம். ஒரே வகுப்பு .இதெல்லாம் எங்களை கொஞ்சம் கொஞ்சம் இணைத்தது . ஆனாலும் ஒருவரை ஒருவர் முகத்திற்கு நேராக பார்த்து பேசி கொள்வதில் ஒரு தயக்கம் இருந்தது.

இவ்வளவு என்?? அவன் என் சம வயது தான் .ஆனால் என்னை ஒருமையில் கூட அவன் அழைத்ததில்லை.

கல்லூரி வாழ்க்கை முடிய ஒரு மாதக்காலம் இருந்த போது தான் எனக்கு அவனை இனிமேல் தினமும் பார்க்க முடியாது என்ற உணர்வு உறுத்தத் தொடங்கியது.

‘ மாலதி. திங்க் ஐ லைக் ஹிம்’. என்ற என்னை விநோதமாக பார்த்தாள் மாலதி.

‘ஐ திங்க் யு போத் ஆர் இடியட்ஸ்.’ உங்க ரெண்டு பேர் தவிர சுத்தி இருக்கிற எல்லோருக்கும் உங்க பீலிங்க்ஸ் தெரியும். எதுக்கோ மறைச்சு வச்சுக்கிட்டு சுத்தறீங்க..இன்னும் ஒரு மாசம் அதுக்குள்ள சொல்லி வழி தேடுங்க.’ ஈசியாக சொல்லி விட்டாள் அவள்.

கடைசி வரை அவனிடம் நான் எதையும் சொல்லவில்லை. அவனும் தான்.
இப்போது திடீர் போன்கால்.

பெருமாள் தரிசனம் முடித்து விட்டு வாசலில் வந்து நின்றேன். மணி 6.30.

மடத்தனம் பண்ணி விட்டேனோ… வந்திருக்கக் கூடாதோ. என்னோடு யாராவது விளையாடுகிறார்களா.?? போன் செய்தது அவன் தான் என்று எனக்கு எப்படி நிச்சயமாக தெரியும்??

கிளம்ப வேண்டியது தான். செருப்பைத் தேடி போடும் போது. ‘ஹலோ .. ஹவ் ஆர் யு ?’

பரிச்சயமான குரல். 7 வருடங்களாக மறைந்து இருந்து என்னை வருத்திய குரல்.
‘அப்பா . என்ன கூட்டம்பா இந்த ஊரு. வந்து சேரதுக்குள்ள நொந்துட்டேன். இங்க பக்கத்துல சரவண பவன் இருக்கு .. இப் யு டோன்ட் மைண்ட் .அங்க போய் உக்காந்து பேசுவோமா??’

கல்லூரியில் என் கூட இருக்கும் போது நாலு வருடத்தில் எண்ணி எண்ணி என்னோடு மொத்தம் 50 வார்த்தைகள் பேசியவன் இன்று மட மடவென்று பேசுவதை பார்த்து எனக்கு வியப்பு.

‘போகலாம்’ ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு அவனோடு நடக்கத் தொடங்கினேன்.

கண்கள் தானாக கூட்டத்தில் மேய்ந்தது. யாரவது தெரிஞ்சவங்க பார்கிறார்களா ??

என் நோட்டத்தை கவனித்தாலும் கவனிக்காதவன் போல உள்ளே சென்று ஒரு ஓரத்தில் ரெண்டு பேர் இருக்க கூடிய இடமாகத் தேடி உட்கார்ந்தான்.

எதிர் எதிரே உட்கார்ந்து இருந்தாலும் மெனு கார்டை எடுத்து முகத்தை மறைத்து கொண்டேன். என்ன சொல்ல போகிறான்? என்னை கவலைத் தின்றது.

‘ யூ ஆர் வெரி ப்ரெட்டி ‘ திக்கென்றது எனக்கு .என் கழுத்து பகுதியில் தொடங்கிய உஷ்ணம் காது மடல்களை தழுவி முகத்தில் படருவதை என்னால் உணர முடிந்தது.

‘ஒ மை காட் !! யூ ஆர் ப்ளஷிங் !!’ இது வரைக்கும் யாருமே இப்படி உன்கிட்ட சொன்னது இல்லையா??’

எனக்கு ரொம்பக் கூச்சமாக இருந்தது . ‘ ஹ்ம் அப்படியெல்லாம் இல்லை சொல்லிருக்காங்க பட் ஐ டிண்ட் எக்ஸ் பேக்ட் திஸ் நொவ்.என்ன விசயம் பேசணும்னு வர சொன்னீங்க??’

‘நீ வருவேன்னு நான் நினைக்கல. 7 வருஷம் ஆச்சு உன்னை பார்த்து. 11 வருஷம் முன்னாடி உன்னை முதல் முதல சந்திச்ச நாள் இன்னிக்கி.இந்த 11 வருஷத்ல உன்னை நினைக்காம நான் ஒரு நாள் கூட இருந்தது கிடையாது. நீ என்கிட்டே அன்னிக்கி பிடிங்கிகிட்டு போனது உன்னோட கெர்சீப் மட்டும் இல்ல என் மனசும் தான்.’

திகைத்து போய் இருந்தேன் . என்ன பேசுவது என்று தெரியவில்லை. இவ்வளவு வருஷம் இல்லாமல் இப்போது என்ன வந்தது இதை என்னிடம் சொல்ல.

மனசுக்குள் ஒரு நிம்மதி. நான் மட்டும் ஆசைப்படவில்லை அவனும் என்னை தான் நினைதிருக்கிறான்.

‘இதென்ன இப்போ திடீர்னு ?’ என் கேள்வி முடிக்க விடவில்லை அவன்.

‘எஸ்.நீ இது கேப்பேன்னு எனக்கு தெரியும். எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிருக்கு. எனக்கு உன் மேல ரொம்ப காதல் இருந்தது . அதோட ஒரு மரியாதையும். உன்கிட்ட எப்படியாவது சொல்லணும்னு நினைப்பேன். அனால் ஏதோ ஒரு தயக்கம். இன்ப்பாக்ட் என் பிரெண்ட்ஸ் யார் கிட்டேயும் உன்னை பத்தி நான் டிஸ்கஸ் கூட பண்ணினது கிடையாது.உன்னை யாரும் தப்பா பேசிடக் கூடாதுன்னு ஒரு நினைப்பும் எனக்கு இருந்தது.

என் மனசுல இருந்த காதல் உன் மனசுலேயும் கொஞ்சமாவது இருந்துதான்னு எனக்கு எப்போவும் ஒரு கேள்வி. இந்த சந்தேகத்தோட என்னால இன்னொரு வாழ்க்கை வாழ முடியாதுன்னு மட்டும் புரிஞ்சுது.’

‘ இதை நான் ஏன் உன்கிட்ட அப்போவே கேக்கலைன்னு உனக்கு தோணும். எனக்கு உன்னை பற்றியும் உன் குடும்பத்தை பற்றியும் நல்லா தெரியும்.உங்கப்பா ரொம்ப ஆச்சாரமானவர் . எப்படியும் உங்க ஜாதி இல்லாம வேற ஜாதில கல்யாணம் பண்ணி குடுக்க மாட்டார்.நீ ஓடி வந்து கல்யாணம் பண்ணிக்கிற ஆள் கிடையாது. சும்மா பொழுபோக்கா காதல் பண்ணி உன் பேரயும் கெடுத்து வாழ்க்கையும் கெடுக்க எனக்கு விருப்பம் இல்லை.இவ்ளோ நாள் என் மனசில் உள்ளதை யார் கிட்டேயும் சொன்னது இல்லை.இனிமே நான் கொஞ்சமாவது நிம்மதியா இருக்கணும்னா உன்கிட்ட மட்டுமாவது இதை நான் சொல்லியே ஆகணும். யாராவது ஒருத்தருக்காவது என் காதல் தெரியணும்ல .’

என் கண்களில் இருந்து சுரந்த கண்ணீர் அவனுக்கு என் பதிலை உணர்த்தி இருக்க வேண்டும்.

‘அசோக் .யூ ஆர் எ ஜென்டில்மேன் ‘. வேறு வார்த்தை வரவில்லை எனக்கு.

ஹோட்டல் வாசலை நோக்கி என் பார்வை போனது.

ஹோட்டல் வாசல் வழியே கணேஷ் வந்து கொண்டிருந்தான்.

‘என்னம்மா பேசியாச்சா?’ பக்கத்தில் வந்த கணேஷ் குரல் கொடுத்தான்.

‘பேசிகிட்டே இருக்கோம் நீங்க வந்துடீங்க. அசோக்.!மீட் கணேஷ். மை ஹஸ்பண்ட். ‘

” வெரி க்ளாட் டு மீட் யு அசோக்.’ என்று கை குடுத்த கணேஷை ஆச்சர்யமாக பார்த்தான் அசோக்.

‘இங்க வரதுக்கு முன்னாலேயே கணேஷுக்கு போன் பண்ணி இங்கேர்ந்து என்னை பிக் பண்ண சொல்லி ட்டேன். அவருக்கு என்னை பத்தி எல்லா விஷயமும் தெரியும் . நான் காலேஜ்ல படிக்கும் போது உன் மேல ஆசைபட்டேனு தெரியும்.. நீயும் என் மேல பிரியபட்டேன்னு எனக்கே இன்னிக்கி தான் தெரியும் . சோ திஸ் இஸ் நியூஸ் டு ஹிம்.’

‘ஹவ் எ நைஸ் டே அசோக். சுவாதி நான் வெளில பார்கிங் லாட்ல வெயிட் பண்றேன் நீ வந்திடு.’ சொல்லி விட்டு செல்லும் கணேஷை பார்த்து ‘யூ ஆர் வெரி லக்கி ..ஐ மீன் போத் ஆப் யூ ‘என்றான் அசோக்.

‘யூ ஹவ் தி அன்செர் டு தி கொஸ்டியன் யு வாண்டட் டு ஆஸ்க் . இனிமே உனக்கு ஒரு நல்ல லைப் அமைய என்னோட விஷஸ். உன்னை கல்யணம் பண்ணிக்க போறவ ரொம்ப குடுத்து வச்சவ. கண்டிப்பா உன் கல்யாணத்துக்கு என்னை இன்வைட் பண்ணு. மே பி அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா நாம திரும்பி மீட் பண்ணுவோம். அப்போவது வாயை திறந்து எதாவது சொல்லு .என் வாழ்க்கையை நீ முடிவு பண்ணாதே.’

அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை.

‘சாரி ..சுவாதி.உன்னை இன்னிக்கு ரொம்ப நேரம் வெயிட் பண்ண வெச்சுட்டேன்.
I am a habitual latecomer…always…’

படித்த கதையில் பிடித்தகதைகள்
நன்றி ;சிறுகதை தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் கதைகள் Empty Re: காதல் கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum