தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


டென்ஷனில் அவதிப்படுபவரா நீங்கள்?

View previous topic View next topic Go down

டென்ஷனில் அவதிப்படுபவரா நீங்கள்? Empty டென்ஷனில் அவதிப்படுபவரா நீங்கள்?

Post by mohaideen Tue Aug 26, 2014 12:24 pm

டென்ஷனில் அவதிப்படுபவரா நீங்கள்? Ht2778
ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் இன்று பிரச்னைகள் இல்லாமல் இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதேனும் ஒரு விதத்தில்   டென்ஷனோடு அலைகின்றனர். வசதி படைத்தவர், ஏழை என்ற வித்தியாசமின்றி டென்ஷன் ஒவ்வொருவரையும் ஆட்டிப்படைக்கிறது. மனதுக்குள் ஏற்படுகின்ற அழுத்தம், மனரீதியான தாக்குதல்கள் டென்ஷன் என்கின்றனர். ஏதேனும் ஒரு பிரச்னையை பற்றி மனது தொடர்ச்சியாக அழுத்தப்பட்டுக் கொண்டிருந்தால், அது நாளாக நாளாக மனதையும் கடுமையாக பாதித்து அவர் டென்ஷன் ஆக வழிவகுக்கும். வாழ்க்கை சக்கரம் வேகமாக சுழன்று வரும் நிலையில் எதற்கெடுத்தாலும் போட்டி என்றாகிவிட்ட சூழலில் மனிதன் டென்ஷனுக்கு அடிமையாகி விட்டான் என்கின்றனர் நிபுணர்கள்.

ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வாழ்க்கையை கவனிக்க தொடங்கும்போது எங்கே நாம் மற்றவர்களை காட்டிலும் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுவோமோ என்ற பயம் பெரும்பாலானவர்களுக்கு வர தொடங்கியுள்ளது. மற்றவர்களுடன் தம்மை ஒப்பிட்டு நம்மால் அவ்வாறு செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் ஒருவித டென்ஷன் உருவாக காரணமாக அமைந்து விடுகிறது. 

தனது நிலையை விட கூடுதலாக செயல்பட வேண்டிய கட்டாயம் எழும்போது, தனக்கு கிடைப்பதைவிட கூடுதலாக கிடைக்க வேண்டும் என்ற ஆசை எழத்தொடங்கும்போது கூடவே டென்ஷன் அவரை வழிநடத்தி செல்ல தொடங்கும். எத்தனை வறுமையில் இருந்தாலும் ஒருவருக்கு பாதுகாப்பு   கிடைப்பது, உறவினர்கள் அல்லது சமூகம் அவருக்கு ஓடோடிச்சென்று உதவுவது அந்தகாலம் என்ற நிலை ஆகிவிட்டது. இன்று நிலைமை   தலைகீழாக மாறிவிட்டது. மற்றவர்களின் பிரச்னைகளுக்கு பரிகாரம் செய்ய கூடிய நிலையில் இல்லாமல் ஒவ்வொருவரும் தனக்குதானே சொந்த பிரச்னைகளில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர். 

குடும்பத்திலும், வேலை பார்க்கும் இடங்களிலும், பொது இடங்களிலும் பிரச்னைகள் வளர்ந்து வருகின்றன. ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதும்,   உதவி செய்வதும் என்ற நிலைமாறி மற்றவர்களை குற்றப்படுத்தி வருவது அதிகரித்துள்ளது. மிகப்பெரிய அளவில் பலரின் தாம்பத்ய வாழ்க்கையும்   பிரச்னைகளிலேயே மூழ்கியுள்ளது. எனவேதான் மனதில் எழுகின்ற முழுமையான அழுத்தங்களில் இருந்தும் விலகுவது என்பது இன்றைய சூழலில் இயலாத ஒன்றாகி போகிறது.

தினம் தினம் பிரச்னைகளை எதிர்கொள்ளவும், அதனையும் தாண்டி வாழ்க்கையை பிரகாசமாக்கிக் கொள்ளவும் ஒவ்வொருவரும் தயாராகிக் கொள்ள வேண்டும். டென்ஷனை எதிர்கொள்வதற்கான சிறந்த வழி அதற்கான காரணத்தை கண்டறிவதுதான். காரணத்தை கண்டறிவதிலேயே அதன் பரிகார வழிகளும் கூடவே இருக்கும். இது டென்ஷன் குறைய காரணமாகவும் அமையும். ஏதேனும் ஒரு வழியில் அந்த பிரச்னைக்கு தீர்வு காண முயன்றால் டென்ஷன் அதோடு முடிவுக்கு வரும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

டென்ஷனில் அவதிப்படுபவரா நீங்கள்? Empty Re: டென்ஷனில் அவதிப்படுபவரா நீங்கள்?

Post by mohaideen Tue Aug 26, 2014 12:25 pm


  • தீர்க்க முடியாத பிரச்னைகளை நெருங்கிய நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ பகிர்ந்து கொள்வதும் டென்ஷனை குறைக்கும். வாழ்க்கையில் நாம் தனிமைப்படுத்தப்பட வில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் போது நம்பிக்கை பிறக்கும். மனதின் அழுத்தத்தை குறைக்க எளிய வழி பக்தி மார்க்கம். தன்னுடைய பிரச்னைகளை கடவுளிடம் கொண்டு சென்று முறையிடுவது மன அழுத்தத்தை குறைக்கும், மன நிம்மதியும் பிறக்கும்.



  • மனது டென்ஷனில் உழன்று கொண்டிருக்கும்போது சந்தோஷமான பழைய நாட்களை எண்ணிக்கொள்ளலாம். வாழ்க்கையில் அடைந்த லட்சியங்களையும், வெற்றிகளையும் எண்ணிப்பார்ப்பது டென்ஷனை குறைக்கும் வழிகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



  • விரும்பிய இசையை கேட்பதும், நண்பர்களுடன் சுற்றுலா செல்வதும் டென்ஷனில் இருந்து விடுபட வழியை தரும். யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவையும் டென்ஷனை விடுவிக்கும் வழியாகும்.



  • வீட்டு தோட்டம் அமைத்தல், விரும்பிய வளர்ப்பு பிராணிகளுடன் பொழுதை கழித்தல் உள்ளிட்ட அவரவர் விரும்பிய செயல்களில் கூடுதல் நேரம் செலவிடுவது மனதிற்கு இதமானதாக அமையும்.



  • வாழ்க்கையில் நேர்மையையும், நியாயத்தையும் கடைபிடிப்பவர்கள், ரகசியங்களை மனதுக்குள் அடக்கி வைத்திருக்காதவர்கள் டென்ஷனை கண்டு பயப்படுவது இல்லை.



  • அதிகமாகவும், தொடர்ச்சியாகவும் வருகின்ற டென்ஷன் மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவர்கள் நல்ல மனோதத்துவ நிபுணரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

டென்ஷனில் அவதிப்படுபவரா நீங்கள்? Empty Re: டென்ஷனில் அவதிப்படுபவரா நீங்கள்?

Post by முரளிராஜா Wed Aug 27, 2014 10:52 am

சே ஒரே டென்சனப்பா 
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

டென்ஷனில் அவதிப்படுபவரா நீங்கள்? Empty Re: டென்ஷனில் அவதிப்படுபவரா நீங்கள்?

Post by நாஞ்சில் குமார் Wed Aug 27, 2014 12:20 pm

பயனுள்ள பதிவு.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

டென்ஷனில் அவதிப்படுபவரா நீங்கள்? Empty Re: டென்ஷனில் அவதிப்படுபவரா நீங்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum