தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! - தினகரன் ஸ்பெஷல்

View previous topic View next topic Go down

நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! -  தினகரன் ஸ்பெஷல் Empty நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! - தினகரன் ஸ்பெஷல்

Post by நாஞ்சில் குமார் Sat Sep 27, 2014 10:21 pm

நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! -  தினகரன் ஸ்பெஷல் 254wz0h

1.வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்

என்னென்ன தேவை?

முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை-ஒரு கப்,
காய்ந்த மிளகாய்-3, கடுகு,
உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள்-தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை-சிறிதளவு,
தேங்காய் துருவல்-4 டிஸ்பூன்,
எண்ணெய்-2 டீஸ்பூன்,
உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

முளைகட்டிய கொண்டைக்கடலையை குக்கரில் 4-5 விசில் வரும் வரை வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு,  கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். அதில் வெந்த கடலை, தேவையான உப்பு போட்டு கிளறவும்.  இறக்குவதற்கு முன் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறவும். சத்தான சுண்டல் ரெடி!

குறிப்பு: கடலையை வேக வைத்த தண்ணரை கீழே கொட்டாமல்,புளி ஊற வைக்க, குழம்பில் ஊற்ற, சப்பாத்தி மாவு பிசைய பயன்படுத்தலாம்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! -  தினகரன் ஸ்பெஷல் Empty Re: நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! - தினகரன் ஸ்பெஷல்

Post by நாஞ்சில் குமார் Sat Sep 27, 2014 10:22 pm

2. காராமணி இனிப்பு சுண்டல்

என்னென்ன தேவை?

வெள்ளை காராமணி-ஒரு கப்,
வெல்லம்-அரை கப்,
நெய்-2 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள்- கால் டீஸ்பூன்,
தேங்காய்
துருவல்-3 டேபிள்ஸ்பூன்.

எப்படி செய்வது?

வெள்ளை காராமணியை 6 மணி நேரம் ஊறவிட்டு, வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி கெட்டிப்பாகு காய்ச்சவும். வாணலியில்  நெய்யை சூடாக்கி, காராமணியை சேர்க்கவும். கூடவே, காய்ச்சிய வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன் தேங்காய்  துருவல் தூவி இறக்கவும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சுண்டல் இது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! -  தினகரன் ஸ்பெஷல் Empty Re: நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! - தினகரன் ஸ்பெஷல்

Post by நாஞ்சில் குமார் Sat Sep 27, 2014 10:23 pm

3. கொள்ளு சுண்டல்

என்னென்ன தேவை?

துளைகட்டிய கொள்ளு-ஒரு கப்,
காய்ந்த மிளகாய்-2,
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்-தலா அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள்-அரை டீஸ்பூன்,
கறிவேப்பில்லை- சிறிதளவு,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு- தேவையான அளவு.

எப்படி செய்வது?

முளைகட்டிய கொள்ளுவை குக்கரில் வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பில்லை, காய்ந்த  மிளகாய், இஞ்சித் துருவல்,பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வெந்த கொள்ளு, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவல் தூவி  இறக்கவும்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! -  தினகரன் ஸ்பெஷல் Empty Re: நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! - தினகரன் ஸ்பெஷல்

Post by நாஞ்சில் குமார் Sat Sep 27, 2014 10:24 pm

4.பாசிப்பருப்பு  சுண்டல்

என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு-ஒரு கப்,
பச்சை மிளகாய்-2,
இஞ்சித் துருவல்-ஒரு டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை-சிறிதளவு,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின் அதை மலர வேகவிடவும். வாணலியில்  எண்ணெய் சூடாக்கி.. கடுகு, உளுத்தம்பருப்பு,கீறிய பச்ச மிளகாய், கறிவேப்பில்லை,இஞ்சித்துருவல், பெருங்காயத்தூள் தாளித்து, வேக வைத்த பருப்பு,  உப்பு சேர்த்துப் கிளறவும். தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு சுண்டல் ரெடி.

Post by நாஞ்சில் குமார் Sat Sep 27, 2014 10:25 pm

5. பூம் பருப்பு சுண்டல்

என்னென்ன தேவை?

கடலைப்பருப்பு- ஒரு கப்,
கீறிய பச்சை மிளகாய்-ஒன்று,
காய்ந்த மிளகாய்-2,
இஞ்சித் துருவல்-அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன்,
கொத்தமல்லி-சிறிதளவு,
தேங்காய் துருவல்-3 டேபிள்ஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்-கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் தாளித்து, வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவல், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கினால், பூம்பருப்பு சுண்டல் தயார்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! -  தினகரன் ஸ்பெஷல் Empty Re: நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! - தினகரன் ஸ்பெஷல்

Post by நாஞ்சில் குமார் Sat Sep 27, 2014 10:25 pm

6. பட்டாணி மசாலா சுண்டல்

என்னென்ன தேவை?

காய்ந்த பட்டாணி-ஒரு கப்,
இஞ்சி-பூண்டு விழுது-ஒரு டீஸ்பூன்,
புதினா, கொத்தமல்லி-சிறிதளவு,
சீரகம்- கால் டீஸ்பூன், எண்ணெய்,உப்பு-தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க:

காய்ந்த மிளகாய்-3,
பட்டை-சிறிய துண்டு,
ஏலக்காய், கிராம்பு- தலா ஒன்று,
சோம்பு- கால் டீஸ்பூன்.

எப்படி செய்வது?

காய்ந்த படடாணியை 8 மணி நேரம் ஊறவிடவும். பிறகு,குக்கரில் போட்டு வேக வைக்கவும். பொடிக்க வேண்டியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலயில்எண்ணெயை சூடாக்கி, சீரகம், தாளித்து ..... புதினா, கொத்தமல்லி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் வெந்த பட்டாணி, உப்பு, வறுத்துப் பொடித்த பொடி சேர்த்து நன்கு கிளறவும். கொஞ்சம் நீர் தெளித்துக் கிளறி( விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் தூவி) இறக்கவும்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! -  தினகரன் ஸ்பெஷல் Empty Re: நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! - தினகரன் ஸ்பெஷல்

Post by நாஞ்சில் குமார் Sat Sep 27, 2014 10:26 pm

7.நவதானிய சுண்டல்

என்னென்ன தேவை?

வெள்ளை கொண்டக்கடலை, கறுப்பு கொண்டக்கடலை,
காராமணி, பாசிப்பயிறு, கொள்ளு, மொச்சை,
சிவப்பு சோயா, ராஜ்மா, காய்ந்த பட்டாணி-தலா 4 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பில்லை- சிறிதளவு,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

அரைக்க:

தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய்-4,
சோம்பு-கால் டீஸ்பூன்,
பட்டை-சிறிய துண்டு,
இஞ்சி-சிறிய துண்டு.

எப்படி செய்வது?

முளைகட்டிய தானியங்களை ஒன்றாக வேகவிட்டு எடுக்கவும். அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பில்லை தாளிக்கவும். வெந்த தானியம், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, அரைத்த விழுது சேர்த்துக் கிளறவும். பச்சை வாசனை போனதும், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! -  தினகரன் ஸ்பெஷல் Empty Re: நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! - தினகரன் ஸ்பெஷல்

Post by நாஞ்சில் குமார் Sat Sep 27, 2014 10:26 pm

8. முளை கட்டிய வெந்தய சுண்டல்

என்னென்ன தேவை?

முளைகட்டிய வெந்தயம் -ஒரு கப்,
காய்ந்த மிளகாய்-2, கடுகு,
உளுத்தம்பருப்பு-தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை- சிறிதளவு,
பொடித்த வெல்லம்-2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

முளைகட்டிய வெந்தயத்தை 15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை தாளிக்கவும். இதனுடன் வேக வைத்த வெந்தயம், உப்பு சேர்த்தக் கிளறவும். தேங்காய் துருவல், பொடித்த வெல்லம் தூவி இறக்கவும். சுகர் பிராப்ளம் உள்ளவர்களுக்கு ஏற்ற சுண்டல் இது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! -  தினகரன் ஸ்பெஷல் Empty Re: நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! - தினகரன் ஸ்பெஷல்

Post by நாஞ்சில் குமார் Sat Sep 27, 2014 10:27 pm

9. ராஜ்மா கட்டா மிட்டா

என்னென்ன தேவை?

கறுப்பு ராஜ்மா-ஒரு கப்,
பச்சை மிளகாய்-2,
வெல்லம்-சிறிய துண்டு,
எலுமிச்சைச் சாறு-2 டேபிள்ஸபூன்,
தேங்காய் துருவல்-3 டேபிள்ஸ்பூன்,
கடுகு,சீரகம்-தலா கால்டீஸ்பூன்,
கறிவேப்பில்லை, நறுக்கிய கொத்தமல்லி-சிறிதளவு,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

ராஜ்மாவை 10-12 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, சீரகம், கறிவேப்பில்லை, கீறிய பச்சைமிளகாய் சேர்த்து தாளிக்கவும். வெந்த ராஜ்மா, உப்பு சேர்க்கவும். வெல்லத்தை சிறிது நீரில் கரைத்து, வடிகட்டி சேர்க்கவும். எல்லாம் நன்கு கலந்தவுடன் கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கினால்.... புளிப்பும், இனிப்பும் கலந்த மிட்டா சுண்டல் ரெடி!..
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! -  தினகரன் ஸ்பெஷல் Empty Re: நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! - தினகரன் ஸ்பெஷல்

Post by நாஞ்சில் குமார் Sat Sep 27, 2014 10:27 pm

10. மிக்ஸ்டு வெஜ் சுண்டல்

என்னென்ன தேவை?

முளைகட்டிய ஏதேனும் ஒரு பயறு- ஒரு கப்,
கேரட்-ஒன்று(துருவிக் கொள்ளவும்),
வெள்ளரித் துண்டுகள்-கால் கப் ,
வேக வைத்த உருளைகிழங்கு துண்டுகள்-கால் கப்
தக்காளி-ஒன்று(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்) பச்சை மிளகாய் விழுது-2 டீஸ்பூன்,
சீரகத்தூள்-ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பில்லை-சிறிதளவு,
எண்ணெய், உப்பு- தேவையான அளவு.

எப்படி செய்வது?

முளைகட்டிய பயறை ஆவியில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கறிவேப்பில்லை தாளித்து, காய்கறிகளை சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வேக வைத்த பயறு, உப்பு, பச்சை மிளகாய் விழுது, சீரகத்தூள் நேர்த்து நன்கு கலக்கவும். சத்துகள் மிகுந்த வெஜ் சுண்டல் ரெடி!
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! -  தினகரன் ஸ்பெஷல் Empty Re: நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! - தினகரன் ஸ்பெஷல்

Post by நாஞ்சில் குமார் Sat Sep 27, 2014 10:27 pm

11. சாபுதான சுண்டல்

என்னென்ன தேவை?

ஜவ்வரிசி-ஒரு கப்,
முளை கட்டிய பச்சைப்பயறு-முக்கால் கப்,
கீறிய பச்சை மிளகாய்-2,
இஞ்சித் துருவல்-ஒரு டீஸ்பூன்,
கேரட்-ஒன்று(துருவிக் கொளவும்),
நெய்-ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி-சிறிதளவு,
உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் அல்லது மிருவாதுவாகும் வரை ஊற வைக்கவும். முளைகட்டிய பயறை ஆவியில் வேக வைக்கவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், ஊற வைத்த ஜவ்வரிசி, வெந்த பயறு, உப்பு சேர்த்துக் கிளறவும். துருவிய கேரட் சேர்க்கவும். கொத்தமல்லி தூவி,(விருப்பப்பட்டால்) தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! -  தினகரன் ஸ்பெஷல் Empty Re: நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! - தினகரன் ஸ்பெஷல்

Post by நாஞ்சில் குமார் Sat Sep 27, 2014 10:28 pm

12. சிவப்பு காராமணி சுண்டல்

என்னென்ன தேவை?

முளைகட்டிய சிவப்பு காராமணி-ஒரு கப்,
மிளகாய்த்தூள்-ஒரு டீஸ்பூன், கடுகு,
உளுத்தம்பருப்பு-தலா கால்
டீஸ்பூன், கறிவேப்பில்லை-சிறிதளவு,
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய்,உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

முளைகட்டிய சிவப்பு காராமணியை குக்கரில் வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பில்லை தாளித்து, வேக வைத்த காராமணியை சேர்க்கவும். மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். சிறிய தண்ணீர் தெளித்து(ஒரு ஸ்பூன் அளவு) நன்கு கலக்கவும். தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! -  தினகரன் ஸ்பெஷல் Empty Re: நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! - தினகரன் ஸ்பெஷல்

Post by நாஞ்சில் குமார் Sat Sep 27, 2014 10:28 pm

13. சிவப்பு ராஜ்மா சுண்டல்

என்னென்ன தேவை?

சிவப்பு ராஜ்மா-ஒரு கப்,
கடுகு, சீரகம்-தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை- சிறிதளவு,
தேங்காய் துருவல்- 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய்,உப்பு-தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க:

காய்ந்த மிளகாய்-3,
தனியா- கால் டீஸ்பூன், சோம்பு-கால் டீஸ்பூன்,
பட்டை-சிறிய துண்டு.

எப்படி செய்வது?

ராஜ்மாவை 10-12 மணி நேரம் ஊறவிடவும். பிறகு குக்கரில் வேகவிடவும். வறுத்துப் பொடிக்க வேண்டியதை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, சீரகம், கறிவேப்பில்லை தாளித்து வெந்த ராஜ்மா, உப்பு சேர்த்துக் கிளறவும். இதனுடன் செய்து வைத்துள்ள பொடி, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! -  தினகரன் ஸ்பெஷல் Empty Re: நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! - தினகரன் ஸ்பெஷல்

Post by நாஞ்சில் குமார் Sat Sep 27, 2014 10:29 pm

4

என்னென்ன தேவை?

காய்ந்த பட்டாணி-ஒரு கப்,
பொடியாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள்-2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் விழுது- ஒரு டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்-தலா கால் டீஸ்பூன்.
இஞ்சித் துருவல்-கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள்-கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை-சிறிதளவு,
தேங்காய் துருவல்-3 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு.

எப்படி செய்வது?

பட்டாணியை ஊற வைத்து, வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பில்லை, பெங்காயத்தூள், பச்சை மிளகாய் விழுது, இஞ்சித் துருவல், மாங்காய்த் துண்டுகள் சேர்த்து தாளிக்கவும். வெந்த பட்டாணி, உப்பு சேர்த்து நன்கு கலக்கி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கினால்...சுவையான 'பீச் சுண்டல்' தயார்!
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! -  தினகரன் ஸ்பெஷல் Empty Re: நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! - தினகரன் ஸ்பெஷல்

Post by நாஞ்சில் குமார் Sat Sep 27, 2014 10:31 pm

14. பீச் சுண்டல்

15. மொச்சை சுண்டல்

மொச்சை-ஒரு கப்,
காய்ந்த மிளகாய்-3,
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள்-தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பில்லை-சிறிதளவு,
தேங்காய் துருவல்-3 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

எப்படி செய்வது?

மொச்சையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் இரவே ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் போட்டு வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பில்லை, பெருங்காயத்தூள் தாளித்து வேக வைத்த மொச்சை, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! -  தினகரன் ஸ்பெஷல் Empty Re: நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! - தினகரன் ஸ்பெஷல்

Post by முரளிராஜா Sun Sep 28, 2014 3:02 pm

நவராத்திரி ஸ்பெஷல் அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! -  தினகரன் ஸ்பெஷல் Empty Re: நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! - தினகரன் ஸ்பெஷல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum