தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஓவர் டைம் டூட்டி பார்க்க செய்வதால் உயிரிழக்கும் டிரைவர்கள்

View previous topic View next topic Go down

ஓவர் டைம் டூட்டி பார்க்க செய்வதால் உயிரிழக்கும் டிரைவர்கள்  Empty ஓவர் டைம் டூட்டி பார்க்க செய்வதால் உயிரிழக்கும் டிரைவர்கள்

Post by நாஞ்சில் குமார் Sun Nov 02, 2014 9:45 pm

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில், காலியிடங்களை நிரப்பாமல், பணியில் உள்ள டிரைவர், கண்டக்டர்களை, ஓவர் டைம் டூட்டி பார்க்க செய்வதால், அவர்கள் விபத்தில் சிக்கி, உயிரிழக்கும் சம்பவம் நடந்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த, போக்குவரத்துத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

21 மண்டலம் :

அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில், எட்டு கோட்டம், 21 மண்டலம் உள்ளது. இவற்றில், 330 டிப்போவுக்கு உட்பட்டு, 22 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. டிரைவர், கண்டக்டர், டெக்னீசியன், அலுவலர்கள் என, 1.45 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். பொதுத்துறை நிறுவனமான அரசு போக்குவரத்து கழகம், கடந்த சில ஆண்டுகளாக, கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. புதிய பஸ்கள் விடுவதற்கு ஏற்ப, பாடாவதி பஸ்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டேஇருக்கிறது.

போக்குவரத்து ஊழியருக்கான, சம்பள ஒப்பந்தம் இதுவரை அறிவிக்கப்படாமல் இருப்பதும், டி.ஏ., அரியர்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படாமல் தாமதிக்கப்படுவதும், ஊழியர்களை கவலைக்குள்ளாக்கி வருகிறது.இந்த நிலையில், விழாக்காலங்களில், கூடுதல் பஸ்களை விட்டு, சிறப்பு பஸ்கள் என, வருவாயை பெருக்க, போக்குவரத்து நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது. இதனால் பலிகடா ஆவதும், பாதிக்கப்படுவதும், டிரைவர், கண்டக்டர்கள் மட்டும் தான்.தீபாவளி பண்டிகையையொட்டி, 9,400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போதைய நிலையில்,
20 சதவீதம் அளவில், டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. அதை சமாளிக்க, தற்காலிக அடிப்படையில் உள்ளவர்களை பணிக்கு அமர்த்துவதும், எட்டு மணி நேரம், 12 மணி நேரம் டூட்டி பார்க்கும் டிரைவர், கண்டக்டர்களை, தொடர்ச்சியாக, மேலும், 12 மணி நேரம் கட்டாயப்படுத்தி பார்க்க வைத்ததாக புகார் எழுந்தது.

தொடர் பணியால், பாதிக்கப்படுவது, அவர்கள் மட்டுமின்றி, பஸ்சில் பயணிக்கும் அப்பாவி மக்களும் தான் என்பதை அதிகாரிகள் மறந்து விடுகின்றனர்.சமீபத்தில், மதுரையில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ், நாமக்கல் புதுச்சத்திரம் அருகே, நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆறு பேர் பரிதாபமாக இறந்தனர். அதேபோல், பெரம்பலுார் அருகே, லாரி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நடந்தது.தர்மபுரி நல்லம்பள்ளி அருகில், ஒரே நேரத்தில், மூன்று வாகனங்கள் தொடர்ச்சி யாக மோதியதில், பஸ் டிரைவர் மட்டுமின்றி, பயணியும் பலியானார். மற்ற சில விபத்துகளில், டிரைவர் தப்பியபோதும், பயணிகள் உயிரிழந்தனர். விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான முயற்சி எடுக்காமல், வருவாயை பெருக்கும் நோக்குடன் அதிகாரிகள் நடந்து கொள்வதால், உயிரிழப்பு சம்பவம் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.

மனஉளைச்சல்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, பணியாளர் சம்மேளன மாநில பொதுச்செயலர் பத்மநாபன் கூறியதாவது:தமிழகம் முழுவதும், 330 டிப்போக்களில், 7,000 டிரைவர், கண்டக்டர் காலிப்பணியிடம் இருக்கிறது. தற்போது இருப்போரை கொண்டு, ரெகுலர் பஸ்களையும், விழாக்கால சிறப்பு பஸ்களையும் இயக்க செய்கின்றனர். அவர்களுக்கு, ஓவர் டைம் கொடுப்பதற்கு ஏற்ப, அதற்கான சம்பளம் கொடுப்பது இல்லை.அரை சம்பளமாக கொடுக்கும்போது மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஒரு லிட்டர் டீசலுக்கு, 6 கிலோ மீட்டர் இயக்க வேண்டும் என, அதிகாரிகள் கெடுபிடி செய்கின்றனர். சமீபத்தில், பாலகிருஷ்ணன் என்ற டிரைவர், தர்மபுரி அருகே விபத்தில் சிக்கி இறந்தார். மதியம், 1.15 மணிக்கு பஸ்சை டிப்போவுக்கு கொண்டு வந்த நிலையில், மீண்டும், 2:௦௦ மணிக்கு, ஓவர் டைம் போட்டு அவரை அனுப்பினர். 45 நிமிடத்தில், எந்தவித ஓய்வும் எடுக்காமல் சென்றதால், விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதிகாரிகளின் மிரட்டலால், நெருக்கடியுடனே டிரைவர்கள் பஸ்களை இயக்குகின்றனர். வாரத்தில், 48 மணி நேரம் மட்டுமே வேலை கொடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஓவர் டைம் கொடுத்தாலும், 50, 100 கி.மீ., தொலைவுக்கு கொடுத்தால் டிரைவரால் சமாளிக்க முடியும்.

உடல் சோர்வு:

அதுமட்டுமின்றி, பஸ்களை மாற்றி இயக்க செய்யும்போது, அவர்களால் சமாளிக்க முடிவதில்லை. தமிழகத்தில் தான் அரசு பஸ்கள் அதிக விபத்துக்கு உள்ளாகின்றன என்று, மனித உரிமை ஆணையமும், மத்திய போக்குவரத்து அமைச்சகமும், தமிழக போக்குவரத்துத்துறையை எச்சரித்துள்ளது.ஆனால், அவற்றை மீறி கூடுதல் நேரத்தில் பஸ்சை இயக்க செய்து, டிரைவர், பயணிகளைபாதிப்புக்குஉள்ளாக்கின்றனர். தொடர்ச்சியாக பஸ்சை இயக்கும்போது, உடல் சோர்ந்து விபத்தில் சிக்குகின்றனர்.அதிகாரிகள், தங்களுக்கு இன்சென்டிவ் கிடைக்க வேண்டும் என்பதால், டிரைவர்களை கசக்கி பிழியும் போக்கு உள்ளது. தற்காலிகமான டிரைவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது குறைவாக தான் உள்ளது. பஸ்கள் தரமற்ற நிலையில் உள்ளதால், டிரைவர்கள் சிரமப்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

நிர்வாக இயக்குனர் சமாளிப்பு:

சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் சவுந்தரராஜன் கூறியதாவது:விபத்து தொடர்பான அறிக்கையை, அரசுக்கு அனுப்பி வருகிறோம். தர்மபுரியில் நிகழ்ந்த விபத்தில், டிரைவர் ஓவர் டைம் பார்த்ததால் தான், இறந்து விட்டார் என்று கூறுவது தவறு. ஒரு நாள் ஓய்வுக்கு பின் தான் பணிக்கு வந்து உள்ளார். சிலர், ஓய்வு நாளில், சொந்த வேலைகளை பார்த்து விட்டு, பஸ்சை இயக்க வருவதால், தேவையில்லாத சம்பவங்கள் உருவாகின்றன. தொழிலாளியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்களுக்கான பயிற்சியை அவ்வப்போது வழங்கி வருகிறோம். சங்கத்தின் பெயரில் சிலர் தவறான தகவல்களை கூறுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

- தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

ஓவர் டைம் டூட்டி பார்க்க செய்வதால் உயிரிழக்கும் டிரைவர்கள்  Empty Re: ஓவர் டைம் டூட்டி பார்க்க செய்வதால் உயிரிழக்கும் டிரைவர்கள்

Post by செந்தில் Mon Nov 03, 2014 4:55 pm

என்ன கொடுமை இது.
சோகம் சோகம் சோகம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஓவர் டைம் டூட்டி பார்க்க செய்வதால் உயிரிழக்கும் டிரைவர்கள்  Empty Re: ஓவர் டைம் டூட்டி பார்க்க செய்வதால் உயிரிழக்கும் டிரைவர்கள்

Post by mohaideen Tue Nov 04, 2014 11:56 am

எல்லா இடத்திலும் மேலதிகாரிகளின் அதிகாரம்  தாங்கமுடிவதில்லை. அவர்களை வேலை செய்ய சொல்லவெண்டும். சும்மா உட்கார்ந்து சம்பளம் வாங்குகிறவர்கள்தானே வலி அவர்களுக்கு தெரியவா போகிறது?
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஓவர் டைம் டூட்டி பார்க்க செய்வதால் உயிரிழக்கும் டிரைவர்கள்  Empty Re: ஓவர் டைம் டூட்டி பார்க்க செய்வதால் உயிரிழக்கும் டிரைவர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ‘டைம்’ இதழின் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியல்;
» எச்சரிக்கை: 'கிரிப்டோ லாக்கர் டைம் பாம்' எனும் புதிய வைரஸ்.
» விருத்தசேதனம் செய்வதால் ஏற்படும் மருத்துவ பயன்கள்
» இன்ஷூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்வதால் நமக்கு ஏற்படும் இழப்புகள்
» ஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் தீமைகள் என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum