தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நீங்கள் பிரேக் இல்லாத வாகனமா?

View previous topic View next topic Go down

நீங்கள் பிரேக் இல்லாத வாகனமா? Empty நீங்கள் பிரேக் இல்லாத வாகனமா?

Post by முழுமுதலோன் Tue Apr 14, 2015 2:23 pm

பிரேக் இல்லாத வாகனமா நீங்கள்?

நிறையப் பேருக்கு தெரியாத ஒரு உண்மையை சொல்லட்டுமா? கப்பலுக்கு, ‘பிரேக்’ கிடையாது. ஓர் இடத்தில், கப்பலைச் சரியாக நிறுத்த, ஒரு கப்பலோட்டி எவ்வளவு சிரமப்படுவார் தெரியுமா… கப்பல் ஓட்டுவது அவ்வளவு எளிதல்ல; கப்பல் மோதி, திமிங்கலங்கள் இறப்பதும்; சிறு படகுகள் சிதறுவதும் இதனால்தான். ஆனால், பிரேக் இல்லாத மனிதக் கப்பல்களோ, தங்களைத் தான் முதலில் சேதப்படுத்திக் கொள்கின்றன. ‘அவன் யார் பேச்சும் கேட்க மாட்டான்; அவனுக்கு என்ன தோணுதோ, அதைத் தான் செய்வான். நாங்க எவ்வளவோ சொல்லி பாத்துட்டோம் திருந்துறதாத் தெரியல…’ என்று, தங்கள் குடும்ப உறுப்பினர் பற்றி, மற்றவர்கள் புலம்பும் வார்த்தைகள் உங்கள் காதுகளைக் கடந்து போயிருக்கும்.

இத்தகைய நபர்களுக்கு, தப்பித் தவறி, ஏதோ ஒரு சூழ்நிலையில், ஒரு துறைத் தலைமையோ, ஒரு நிறுவன உரிமையோ கிடைத்துவிடுமாயின், இவர்களுக்குக் கீழே பணி புரிபவர்கள் பாடு ரொம்பச் சிரமம். சொன்னதைக் கேளாதவர்களின் தன்மையைப் பார்க்க பார்க்க, மற்றவர்கள் மெல்ல இவர்களிடமிருந்து ஒதுங்க ஆரம்பிப்பர். சொல்லி என்ன பயன் என்பது மட்டுமல்ல; நம் மரியாதையைக் காப்பாற்றி கொண்டால், அதுவே போதுமானது என்பதும், ஒரு காரணம். ‘நான் இப்படிப்பட்ட ஆள் அல்ல…’ என்று, சிலர் மறுக்கலாம்; ஆனால், நமக்குள் இருக்கும், ‘பிரேக்’ இல்லா கப்பல், அவ்வப்போது நம்மை அறியாமல் பயணப்பட ஆரம்பித்து விடுகிறது. இதனால், நாம் இப்போது பார்த்தவர்களைப் போல், சில நேரங்களில், சில விஷயங்களில், சில சந்தர்ப்பங்களில், நாம், ‘பிரேக்’ இல்லாக் கப்பல்களாகி போகிறோம். யார் என்ன சொன்னாலும், அந்த நேரத்தில் மட்டும் காதில் ஏறுவதில்லை.

இவர்களுக்கு, சில கேள்விகள்… நீங்கள் எடுத்தது சுயமுடிவுதானா, நீங்கள் எடுக்கும் முடிவுகள் பிறர் தலையீடு செய்யாத சுயமுடிவு என்றால், உங்கள் முடிவு எத்தனை முறை சரிவர அரங்கேறியிருக்கிறது… உங்கள் முடிவின், வெற்றி சதவீதம் என்ன? ‘சரியோ, தவறோ நான் எடுப்பதே முடிவு; விளைவுகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை…’ என்று வாதிடுபவரா நீங்கள்? அடடே…. நானும் உங்களிடமிருந்து ஒதுங்கிக் கொள்கிறேன்; சிதறும் படகாய் ஆக எனக்கு விருப்பமில்லை. பெரும்பகுதி சரியாகவே நடக்கும் என்கிறவரா நீங்கள்… சில நேரங்களில் மட்டும் தவறு நடக்கிறது என்கிறீர்களா… அப்படியானால் உங்களிடம் கொஞ்சம் பேசலாம். சில பிழைகளுக்கு விலை இல்லைதான்; ஆனால், சில பிழைகளுக்குக் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டி வருகிறதே!

பிழையற்ற சரியான செயலா; அதெப்படி முடியும்? பிறர் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்கும் போது, அதில் அவர்கள் கூறும் சாதக, பாதகங்களை அலசும் போது, ஒரே கோணத்தில் பார்க்கக் கற்றுக் கொண்டவர்கள் தாம் அதிகம் தவறு செய்கின்றனர் என்பது தெரிய வருகிறது. ‘ஆளாளுக்கு அபிப்ராயம் கேட்டுக் கொண்டிருந்தால், அது கட்டுபடியாகிற விஷயமா… எல்லாருமா சேர்ந்து குழப்பி விடுவர்; அதெல்லாம் சரிப்பட்டு வராது…’ என்கிறீர்களா?

பல்வேறு கோணங்களிலிருந்து பார்க்கும் போதுதான், ஒரு பொருளின் முழுப் பரிமாணமும் தெரியவருவது போல், ஒரு முடிவும் பல கோணங்களிலிருந்து பார்க்கப்படும்போது, பெரும்பாலும் பிழையற்ற முடிவு எடுப்பது சாத்தியமாகிறது. காரணம், அனைத்து ஓட்டைகளும் அடைக்கப்பட்டு விட்டனவே! ஒரே கோணத்தில் பார்த்து தன்னிச்சையாகவே எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு, இனி முடிவு கட்டிவிட்டு, ஒவ்வொன்றையும் அலசி எடுத்துப் புரட்டிப் புடம் போட்ட பின், முடிவுகளை எடுத்தால், அதுவே தங்கமான முடிவாக இருக்கும்!

Sakthivel Balasubramanian
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நீங்கள் பிரேக் இல்லாத வாகனமா? Empty Re: நீங்கள் பிரேக் இல்லாத வாகனமா?

Post by ஸ்ரீராம் Tue Apr 14, 2015 6:26 pm

நல்லதொரு கட்டுரை பகிர்வுக்கு நன்றி அண்ணா.

நீங்கள் பிரேக் இல்லாத வாகனமா? GLgOZfBxRo2deJBU29Bo+seeal

#spm5
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நீங்கள் பிரேக் இல்லாத வாகனமா? Empty Re: நீங்கள் பிரேக் இல்லாத வாகனமா?

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 14, 2015 7:12 pm

அவதான பதிவு
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

நீங்கள் பிரேக் இல்லாத வாகனமா? Empty Re: நீங்கள் பிரேக் இல்லாத வாகனமா?

Post by mohaideen Wed Apr 15, 2015 1:17 pm

நல்ல தகவல்கள்  சூப்பர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நீங்கள் பிரேக் இல்லாத வாகனமா? Empty Re: நீங்கள் பிரேக் இல்லாத வாகனமா?

Post by செந்தில் Wed Apr 15, 2015 1:52 pm

கைதட்டல் சூப்பர் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நீங்கள் பிரேக் இல்லாத வாகனமா? Empty Re: நீங்கள் பிரேக் இல்லாத வாகனமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum