தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மருத்துவம் ஒரு முக்கோணம்

View previous topic View next topic Go down

மருத்துவம் ஒரு முக்கோணம் Empty மருத்துவம் ஒரு முக்கோணம்

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 1:31 pm

மருத்துவத்துக்கு ஒரு கற்பனை வடிவுண்டு. அஃதொரு முக்கோண வடிவே. முக்கோணத்துக்கு மூன்று முனைகளுண்டு. ஒரு முனை மேல் நோக்கியும், இருமுனைகள் பக்கவாட்டிலும் அமைந்திருக்கும். மருத்துவத்திற்கும் மூன்று முனைகளுண்டு. துயர் நீக்கம், நலங் காத்தல், செயலாக்கம் என மூன்று முனைகளுண்டு. துயர் நீக்கம் என்பது மேல்முனை. இதனை அனைவரும் எளிதாக உணர்வர். மாற்று மருத்துவர்களும் மக்களும் இதனையே முழுமையென்று நம்புகின்றனர். ஆழ்ந்து சிந்தித்தால் இன்னும் இரு பண்புகள் இருப்பதை உணர முடியும். அவை நலங் காத்தல், செயலாக்கம் என்பவை. இவ்விரு பண்புகளும் மருத்துவத்துக்கு இன்றியமையாத் தேவைகள். இவை இல்லையேல், மருத்துவம் முழுமை பெறாது; முடமாகும். ஹோமியோபதி இம்மூன்றி னையும் பெற்று முழுமை பெற்றுள்ளது. மாற்று மருத்துவத்தில் பின்னிரண்டு குறிக்கோளாகக் கூட இடம் பெறவில்லை. அதனால், செயல்வடிவம் பெற வில்லை. துயர் நீக்கலே முழுவடிவம் எனக் கருது வதால் நலங்காத்தல், செயலாக்கம் பற்றிச் சிந்திக்க வில்லை. சிந்தனையில் இடம் பெறாமல் போன தற்கு ஒரு காரணம் இருக்க வேண்டுமல்லவா! ஆய்வு முறையே இவற்றிற்கு அடிப்படை.

நலத்தைத் தக்கவைத்தல், எதிர்ப்பாற்றல் பெறுதல், பொறுப்புணர்வு, சாதனை படைத்தல், பேராற்றல், ஆள்வினை, முன் வைத்த காலைப் பின் வைக்காமை, இயற்கையின் நுட்பங்களை உணர்ந்து, அவற்றை வெளிக் கொணர்தல், சமுதாய ஒற்றுமை நாடுதல் போன்றவை சமுதாய நலங் கொண்டவை.

சோம்பல், பொறாமை, பகை, களவு, தன்னையே அழித்துக் கொள்ளல் - காலமறிந்து இடமறிந்து செயல்படாமல் தள்ளிப்போடுதல் - பழி வாங்குதல் போன்ற வேண்டாத பண்புகளைச் சமுதாயத்துக்குப் பயனுள்ள பண்புகளாக மாற்றுதல் - போன்றவையும் மருத்துவத்தின் குறிக்கோளே. இவையெல்லாம் மனித உடலிலுள்ள மரபணுக்களின் இயக்கத்தால் நிகழ்வன. ஹோமியோபதி மருந்துகள், மரபணுக்களை ஒழுங்குபடுத்தும் நடைமுறை மருத்துவமாகும். இம்மருத்துவம் தனி மனிதனோடு நில்லாமல் சமுதாயத்திலும் ஊடுருவிக் கலந்து நிற்பது. எதிர் நிலைகளின் இயக்கமும் போராட்டமும் ஒற்றுமையும் ஒவ்வொரு பொருளிலும் புதைந்துள்ளன. எனவே, எதிர் நிலைகளின் இயக்கத்தால் ஒன்று மற்றொன்றாக மாறிக் கொள்கின்றன.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மருத்துவம் ஒரு முக்கோணம் Empty Re: மருத்துவம் ஒரு முக்கோணம்

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 1:31 pm

மனித உடலுள் ஆக்கக் கூறுகளும் அழிவுக் கூறுகளும் இருக்கின்றன. அவை இடைவிடாது போராடிக் கொண்டும் ஒற்றுமையாகவும் இருக் கின்றன. இப்போராட்டத்தில் ஒன்று மற்றொன்றாக மாறுவதுண்டு. அழிவுக் கூறுகளை ஆக்கக் கூறு களாக மாற்றுவதும் ஹோமியோபதி மருந்துகளின் தனிச்சிறப்பு.

ஒரு பொருளை அல்லது ஆற்றலை இன்னொரு வடிவத்துக்கு மாற்றலாம் என்கிறது அறிவியல். ஒரு தூண்டுதலை வேறொரு தூண்டு தலாக மாற்றுவது மருத்துவத்தின் பண்புகளில் ஒன்று. இதனை ஹோமியோபதி மருந்துகள் செய்கின்றன. மாற்று மருத்துவமும் (அலோபதி மருத்துவத்தை மாற்றுமருத்துவம் என்று கட்டுரை யாளர் குறிப்பிடுகிறார்.) ஹோமியோபதியும் மாறுமிடங்களில் இதுவும் ஒன்று. மனிதனைச் செயலாக்கம் மிக்கவனாக மாற்றுவது ஹோமியோபதியின் தனிப் பண்பு. மனிதனை மனிதனாக மாற்றுவது என்பதுள் இஃது அடங்கும். ஹோமியோபதி போல் பிற மருத்துவங்கள் ஏன் செயலாக்கத்திற்கு அடிகோலவில்லை?

ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படை, ஆய்வு முறை, அணுகுமுறை, செயல்படுத்தும் நடைமுறை அனைத்தும் பிற மருத்துவ முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபடுபவை. மருத்துவ ஆய்வு முறைகள் இருவகைப்படும்.

1. சோதனை செய்தல்
2. மெய்ப்பித்தல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மருத்துவம் ஒரு முக்கோணம் Empty Re: மருத்துவம் ஒரு முக்கோணம்

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 1:31 pm

சோதனை செய்தல் :

மாற்று மருத்துவத்தில், (அலோபதியில்) எளிய உயிரினங்களான எலி, முயல் போன்றவற்றை ஆய்வுக்காக எடுத்துக்கொள்வர். அவற்றின் உடலுள் மருந்தினை - பருப் பொருளைச் செலுத்துவர். அதனால், அவை வெளியிடுங்குறிகளை உற்றுணர்ந்தும், அறுத்துப்பார்த்தும் உணர்வர். அவற்றைத் தொகுப்பர். மேலும், அவற்றைப் பின்தங்கிய நாட்டு மக்கட்குக் கொடுத்துப் பார்ப்பர். அவற்றில் தேவைப்படும் மாற்றம் செய்து மக்கட் சமுதாயத்திற்குப் பயன்படுத்துவர். இவ்வாய்வு முறையில் உடலியற் குறிகளே வெளிப்படும். மாற்று மருத்துவர்களுக்கு மருந்தைத் தேர்வு செய்வதற்கு உடலியற் குறிகளே போதுமானவை. அந்த எளிய உயிரினங்கள் இவற்றைத் தாம் வெளிப்படுத்தும். மேலும், இம்மருந்துகளையும் அவர்கள் பயன்படுத்தும் ஆய்வுக் கருவிகளையும் உருவாக்குபவர் யார்? மருந்துகளை நடைமுறைப்படுத்தாத, அவற்றை மக்கட்குக் கொடுப்பதில் ஈடுபடாத அறிவியலாளர் தாம் அவர்கள். மக்களோடு தொடர்புடைய மாற்று மருத்துவர் கட்கு இதில் பங்கென்ன?
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மருத்துவம் ஒரு முக்கோணம் Empty Re: மருத்துவம் ஒரு முக்கோணம்

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 1:32 pm

மெய்ப்பித்தல்:

நடைமுறை வாழ்விலுள்ள நலமான மக்கட்கு மருந்துப் பொருளை - பருப் பொருளை - அப்படியே கொடுக்காமல் அதனை நுண்மைப் படுத்திக் கொடுப்பர். அப்பொழுது, அவர்கள் கொடுக்கும் உடலில், மனத்தில் ஏற்படும் - வெளிப்பாடுகளை குறிகளைத் தொகுப்பர். இதில் உடலியற் குறிகளும் அவற்றோடு அவர்கள் தாங்கள் உணர்ந்த உணருங் குறிகளையும் தருவர். உணருங் குறிகளை மனிதன் மட்டுமே வெளிப் படுத்த முடியும். அதனால்தான் ஹோமியோபதி மருத்துவர்கள் உணருங்குறிகளை மருந்துத் தேர்வுக்கு முதன்மைப்படுத்தி எடுத்துக் கொள்கின்றனர். நலமான மனிதனிடம் மெய்ப்பிக்கும் பொழுது, அவரவர் உடலில் ஏற்கெனவே உள்ள குறிகளையும் வெளிப்படுத்திக் கூறுவர். இவற்றை, மருந்து வெளிப்படுத்திய குறிகளிரிருந்து ஒதுக்க, ஹோமியோபதி மருத்துவர் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். மாற்றுமருத்துவத்தில் நோய், பிணி என்று வரையறுத்து அதனுக்கு மருந்து தருவர். ஹோமியோபதி மருத்துவர், மனிதர் ஒவ்வொருவரையும் தனித்தனியே ஆய்வு செய்வர், மனிதர் ஒவ்வொருவலிடம் அக முரண் பாடு வேறுபட்டே இருக்கும். அதற்கொப்ப உணருங் குறிகளும் மாறுபட்டிருக்கும். அக முரண்பாட்டின் விளைவே உடலின் உட் தோற்றமும் வெளித் தோற்றமுமாயிருக்கும். ஒருவலின் கைரேகையைப் போல உலகில் மற்றொருவருக்கு இருப்பதில்லையே! ஒருவலின் அக முரண்பாடு போல வேறொருவருக்கும் இருப்பதில்லை.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மருத்துவம் ஒரு முக்கோணம் Empty Re: மருத்துவம் ஒரு முக்கோணம்

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 1:32 pm

நுண்மைப்படுத்துதல் :

இதனை ‘வீரியப்படுத்துதல்’ என்றும் கூறுவர். பருப்பொருளில் ஒரு பங்கு எடுத்து, அதனோடு 99 பங்கு மறுவினையாற்றாத நீர், சர்க்கரை, ஆல்கஹால் போன்றவற்றைச் சேர்த்து அரைப்பர். அஃது, ஒரு வீரிய மருந்தாகும். இதில், நூற்றில் ஒரு பங்குதான் மருந்துப் பொருள் - மீதமுள்ள 99 பங்கு சர்க்கரையே. இந்த ஒரு வீரிய மருந்தில் ஒரு பங்கெடுத்து அதனோடு 99 பங்கு சர்க்கரையைச் சேர்த்து அரைப்பர். அஃது, இரண்டு வீரிய மருந்தாகும். இப்படியே நுண்மைப்படுத்திச் செல்லும்பொழுது, 12 - ஆம் வீரியத்திற்குமேல், பருப்பொருளின் மூலக்கூறு அதில் இருப்பதில்லை. ஒரு பொருளை ஒளியாக வும் ஆற்றலாகவும் மாற்றலாம். மின் விளக்கிலுள்ள ஒளி, பருப் பொருளிலிருந்து கிடைத்ததே. - அவ்வொளியில் மூலக்கூறு இல்லாதிருப்பதை உணரலாம். அதுபோல், ஒரு பொருளை ஆற்றலாகவும் மாற்றலாம். 12 வீரியத் துக்கு மேல் பருப்பொருளின் ஆற்றலே வீரியப்படுத்தப்படுகிறது. இவ்வாறு இலட்சம் வீரியம்வரை தற்போது மருந்து தயாரிக்கப் படுகிறது. இவ்வாறு, நுண்மைப்படுத்தப்பட்டு ஹோமியோபதி மருந் துகள் கிடைக்கின்றன. இதனால், இம் மருந்து கட்குப் பக்க விளைவுகள் ஏதுமில்லை. ஹோமி யோபதி மருந்துகளை 200 வீரியத்துக்கு மேல் கொடுக்கும்பொழுது மருந்து மெய்ப்பிக்கப்பட்ட துயரரிடம் இல்லாத, அம்மருந்துக்கேயுரிய வேறு ஒருசில குறிகளுக்கும் தோன்றும். அவை பக்க விளைவுகளாகா, அவை. குறிகள் இறங்கு வரிசையில் வரும்பொழுது தோன்றி மறையும்.

பிற மருத்துவ முறைகளில் ஆய்வு செய்து நோய், பிணி என்று வரையறுப்பர். நோய், பிணி நீக்கலே இங்குக் குறிக்கோள்.

ஹோமியோபதியில் துயரரை - மனிதனை - ஆய்வு செய்து மருந்து வரையறுக்கப்படுகிறது. வரையறுக்கப்பட்ட மருந்தை அத்துயரர் ஏற்கும் தன்மைக்கு ஏற்ற வீரியமே வரையறுப்பர். இங்குப் புற்றுப் பிணிக்கு மருந்தில்லை - புற்றுப் பிணியுடைய மனிதனுக்கு மருந்திருக்கிறது. மனிதன் நலமாகும்பொழுது அவனிடமிருந்த புற்றுப் பிணியும் நலமாகும். இங்கு, இன்ன துயருக்கு இன்ன மருந்தென்பதில்லை. இன்ன மனிதனுக்கு இன்ன மருந்து என்பதே நடைமுறை.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மருத்துவம் ஒரு முக்கோணம் Empty Re: மருத்துவம் ஒரு முக்கோணம்

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 1:32 pm

மனிதனைச் சமுதாயத்தை விட்டுப்பிரித்துப் பார்ப்பது நிலையியற் கோட்பாடு. மனிதனைச் சமுதாயத்தோடு இணைத்துப்பார்ப்பது இயங்கியற்கோட்பாடு. மனிதனின்றிச் சமுதாய மில்லை. சமுதாயத்திரிருந்து மனிதனைப் பிரித்தெடுக்க முடியாது. மனிதனின் நலம், நலங் காத்தல், செயலாக்கம் இவை சமுதாய நலத்தோடு பின்னிப் பிணைந்திருப்பவை. சமுதாய நலத்துக்கு மாறான எண்ணங்களும் செயல்களும் அகற்றப் படல் வேண்டும். இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்திருக்க முடியாது. இதற்கு மருத்துவம் துணைபோகுமா? என்ற கேள்வி எழுகிறது. இன்றேல், கேள்வியை எழுப்புவோம். சமுதாய ஒழுங்கு, சமுதாய நலன், சமுதாய வளர்ச்சி - இவற்றிற்கும் ஹோமியோபதிக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு.

என்னிடம் வருபவர்களில் பலருக்குத் தன்னம் பிக்கை இல்லாதிருப்பதை உணர்கிறேன். சமுதாய மாற்றத்தில் ஈடுபட விரும்பாக் கோழைத்தனம் உடையோரையும் காண முடிகிறது. கோபம், அதனால், பிறர்க்குக் கேடு செய்யத் தயங்காத மனோநிலையும் செயல்பாடும் உடையோரைக் காணமுடிகிறது - இதனைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை - கோபம் - அடங்காக் கோபம் இவை பரிணாம வளர்ச்சியில் தோன்றிய தீய பண்புகள். இப்பண்புடையோரையும் சமுதாயத்தையும் பிரித்துப் பார்த்தல் தவறு - இவற்றைச் சமுதாயத்தோடு இணைத்துப் பார்க்கவேண்டும். - இத்தீய பண்புகளை நீக்குவதில் மருத்துவத்துக்கும் பங்குண்டு - இம்மனக் கோளாறு துயரர் குறியே. துயரர் குறியென்றால், இதற்கு ஹோமியோபதியில் மருந்துண்டு. அங்குஸ்ட்ரா என்பது இதற்குரிய மருந்து. தனித்தனி மனிதரின் ஏற்புத்திறனுக்கு ஏற்ப வீரியம் தேர்ந் தெடுத்துக் கொடுக்க, இம்மனநிலை மாறுவதை என் பட்டறிவில் கண்டுள்ளேன்.

குழந்தைகளைத் தக்க சூழரில் தக்க முறையில் வளர்க்காததால் பல கேடுகள் சூழ்தல் உண்டு - குழந்தைகள் பலருக்கு வீட்டிலும் பள்ளிகளிலும் கவர்ச்சியிருப்பதில்லை. சிலருக்கு எங்காவது ஓடிவிடல் வேண்டுமென்ற உணர்வு மேலோங்கும் - என்றாவது ஒருநாள் ஓடிப்போகவும் செய்வர். இதற்குத் தவறான சிந்தனையும் தவறான வழிகாட்டலும் காரணங்கள். இவ்விருப்பத்தையும் செயலையும் போக்க அலுமினா என்ற மருந்து கைகொடுக்கும்.

சிலருக்கு, எவ்வயதிலும் எப்பொறுப்பிரிருந் தாலும் திருடும் எண்ணம் இருக்கும். இஃதொரு வெறுக்கத்தக்க பண்பு. இவ்வெண்ணத்தை, உணர்வை மெக்னீசியா பாஸ்பாரிகம், ஆர்டிமிசியா வல்கேரியஸ் போன்ற மருந்துகள் வேரறுக்கும்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மருத்துவம் ஒரு முக்கோணம் Empty Re: மருத்துவம் ஒரு முக்கோணம்

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 1:33 pm

புகழ்ச்சி ஒரு போதை. இஃது அனை வர்உள்ளத்திலும் ஓரளவாவது ஓட்டிக் கொண்டிருக்கும். புகழ்ச்சிக்கு அடிமைப்பட்டோர். பலர் சொத்து சுகங்களை இழந்திருக்கின்றனர். புகழ்ந்து பேசுபவன் புத்திசாலி; அதனை அப்படியே நம்புபவன் முட்டாள் என்பார் ஆதித்தனார். புகழ்ச்சி விருப்பத்தை மாற்ற பேயோனியா என்ற மருந்து பெரிதும் பயன்படும்.

சிலர், தன் பொறுப்பை உணராது வாழ்வர். பிறந்த ஒவ்வொருவர்க்கும் ஒரு கடமை, பொறுப் புண்டு. இதனை உணர்ந்து செயல்படாதார் மக்களே போல்வர். வடிவில் மக்களை ஒத்திருந் தாலும் வாழ்வில் அவர் மக்களல்லர். தன் கடமையை, பொறுப்பை உணர்ந்து செயல்படல் வேண்டும். தன்னை உணராதிருப்பவர்க்கு ஃப்ளுவாரிக் ஆசிட் உரிய மருந்தாகும். சிலர், வெளியில் செல்வதை வெறுப்பர்; வீட்டிலேயே முடங்கிக் கிடப்பார். பயனேதுமின்றி உட்கார்ந்தி ருப்பவர் அவ்வேளையில் பல நூல்களைப் படிக்கலாம். படிப்பதிலும் ஈடுபடார்; அத்தோடு படிப்பதையும் வெறுப்பர். அவர்களை ஒழுங்கு படுத்துவது சைக்ளமென் என்ற மருந்தாகும்.

அச்சம் (பயம்) எதிலெதிலோ இருக்கும். இருட்டைக் கண்டால் பயம். அதிலும் தனியாக இருட்டிரிருக்க, படுக்க அஞ்சுவர். அவர்கட்கு காஸ்டிகம் என்ற மருந்து கை கொடுக்கும். தற்கொலை எண்ணத்தைத் தகர்க்கும் மருந்து. ஆரம்மெட்டாரிகம்.

காலப்போக்கிலும் தேவையற்ற தசை - தொங்கு தசையால் அழகிழக்கின்றனர். உடற்பயிற்சியின் மையும் சத்தான உணவுண்ணாமையாலும் இக் கோளாறு கள் பலருக்கு ஏற்படுகின்றன. மகளிருக்கு மகப்பேற்றில் கர்ப்பப்பை சரியாகச் சுருங் காததாலும் இக்குறைபாடு நிகழலாம். சட்டி போன்ற கெட்டியான வயிறானால், தூஜா அதனைச் சரிசெய்யும். வயிறு பெருத்துக்கல்போல் சிலருக்குக் கடினமாக இருக்கும். அதனை, பிளம்பம் மெட்டா ரிகம் நலம் செய்யும். மனிதனின் அழகின்மையை நீக்குவதில் ஹோமியோ பதிக்குப் பெரும் பங்குண்டு. கருப்பு நிறத்தை மாற்றித் தளிர் நிறத்துக்குக் கொண்டுவரும் வல்லமை ஹோமி யோப திக்கு உண்டு. ஹோமியோபதி செயலாக்கம் மிக்கது என்பதற்கு எண்ணற்ற மருந்துகள் இங்குண்டு. ஹோமியோபதி மருந்துகளின் பயனை உலகம் இன்னும் எவ்வளவோ தெரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மருத்துவம் ஒரு முக்கோணம் Empty Re: மருத்துவம் ஒரு முக்கோணம்

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 1:33 pm

வீட்டுச் சன்னல்கள் காற்று வருவதற்காக அமைக்கப்பட்டவை. அதனைக் ‘கால் அதர்’ என்று அழைத்துவந்தனர் நம் முன்னோர். (கால் - காற்று; அதர் - வழி - காற்றுப் போய் வரும் வழி) அச்சன்னல்களே. சில குடும்பங்களில் பூகம்பத் தைத் தோற்றிவிடும் - இளைஞர்கள் - (ஆண், பெண் இருபாலார்) பலர் மணிக்கணக்காக - அடிக்கடி - நாள்தோறும் அதன் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருப்பர். அறிவுரைகளும் கண்டிப்பும் பயன்படாமல் போவதுண்டு. அவ்விருப்பத்தை மாற்ற ‘மெசரியம்’ என்ற மருந்து கைகொடுக்கும். மாற்று மருத்துவம் எதிலும் இதற்கொரு மருந்துண்டு என்றே கருதுவதில்லை. மனக்கோளாறு எதனையும் ஹோமியோ மருந்துகளால் தீர்வு காணலாம்.

இளமைப் பருவம் துடிப்புள்ளது. அத்துடிப்பு எதற்குப் பயன்படல் வேண்டும்? அறிவுதேடலுக்கும் பிற்காலச் சாதனைகளுக்கு அடித்தளமிடவும் பயன்படல் வேண்டும். இதற்கு மனவொருமை மிகவும் வேண்டற்பாலது. வள்ளலாரும் ‘ஒருமை யுடன் நினது திருமலரடி நினைத்தல்’ என்றார். மனத்தை ஒரு நிலைப்படுத்துதல் - அதனை ஒன்றில் குவித்தல் - நிறுத்துதல் இன்றியமையாமை. இதற்கு இளமையிலேயே பயிற்சி கொடுத்தல் நல்லது. இதற்குப் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் ஒத்துழைப்புப் பெரிதுந் தேவை.

மக்கள்தம் உடலின் சீர்கேட்டையும் ஹோமியோபதி மருந்துகள் சீர்செய்யும். குழந்தைகள் பெரும் பான்மையினர் கட்டுக்கோப்போடு பிறப்பினும், சமுதாயப் புரட்சியில் மேல்மட்ட அமைப்பு ஒவ்வொன்றுக்கும் ஒரு பங்குண்டு (அரசு, நீதி மன்றம், சிறை, காவல், படை, கலை, இலக்கியம், பண்பாடு போன்றவற்றிற்குள்ள பங்கைப்போல) மருத்துவத்துக்கும் ஒரு பங்குண்டு. இதன் வாயிலா கவே, ஹோமியோபதியும் புரட்சியில் பங்கேற்கிறது.

பொறுப்புணர்ச்சி என்பது மிகமிக வேண்டப்படும் ஒரு பண்பு. சிலர் எதைப் பற்றியும் தல், சோம்பித் திரிதல் போன்றவை இளைஞர்களின் மனத்தில் படியும் அழுக்குகள். இவ்வழுக்குகளை நீக்க அறிவுரைகள் மட்டும் பயன்படா. மனித சமுதாயத்தின் முன்னேற்றத் துக்கு ‘ஒருமை நிலை’ இன்றியமையாதது. இதனை ‘லெசிதின்’ என்ற மருந்து நலஞ் செய்வதில் முழுப் பங்காற்றும்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மருத்துவம் ஒரு முக்கோணம் Empty Re: மருத்துவம் ஒரு முக்கோணம்

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 1:33 pm

காதல் என்பது ஒரு மனநிலை. மனித வளர்ச்சிக்கு, சமுதாய வளர்ச்சிக்கு இஃது இன்றியமையாதது. இது மலரினும் மெல்ரியது. இதனை முரட்டுத்தனமாக்குதல் கூடாது - முறையாக வளர்க்கச் சமுதாயம் முயலல் வேண்டும் - சாதி, மதம், இனம் எனும் வேரிகளால் தடுத்தல் தீங்கு. இதனை அளவறிந்து காத்தல் நல்லது. இக்காதலைப் பொருந்துங் காதல், பொருந்தாக் காதல் என இருவகையாகப் பகுப்பர்.

பொருந்துங் காதல் என்பது அறிவின் அடிப்படையில் எழுவது.
‘காற்றி லேறி அவ்விண்ணையும் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே’

என்று பாரதி குறித்ததும்.

‘கண்ணின் கடைப்பார்வை காதரியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்’

என்று பாரதிதாசன் குறிப்பிடுவதும் இதனைத் தான் ‘கமம் நிறைவு’ என்கிறது தொல்காப்பியம். கமம் காமமாயிற்று - குறைவு என்பது ஆணிடமு முண்டு - பெண்ணிடமுண்டு. குறைவை நிறைவு செய்தல் எது? இக்காதலே. இது கனிய, காம மாகும். மனிதர்களிடம் பேரெழுச்சியாக - கடலலையாக இது வெளிக் கிளம்பும் - இதனைச் சமுதாய வளர்ச்சி நோக்கியே வளர்த்தல் நலம். காதலால் பெறுவது இன்பம். உடற் கவர்ச்சி, அறிவுக் கவர்ச்சி, அன்புக் கவர்ச்சி என்பவை தழுவி நிற்பவை.

பொருந்தாக் காதல் என்பது ஒத்த கல்வி, ஒத்த பண்பு இல்லாதது - இது கண்மூடித்தனமாகச் செல்வது - காட்டாற்று வெள்ளம்போல்வது. இதனால் எழுவது உணர்ச்சிக் கழிவே - இதில் ஈடுபட்டு மீளமுடியாது தவிப்பவர் பலர். தானே தேடிக் கொள்வோரும் உண்டு - தலையில் கட்டப்படுவது முண்டு. தானே தேடிக் கொள்ளும் சீரழிவைத் தடுப்பது ‘நேட்ரம் மூர்’ என்ற மருந்தே. துயரர் ஒருவர்க்கு நுரையீரலில் குழி விழுந்ததால் அடிக்கடி இரத்த வாந்தியெடுத்தார். இப்பாதிப்பால் நுரையீரலின் வடிவம் மாறியும் சிதைந்தும் போனது. சிறப்பு மருத்துவர் அதனை அறுவையால் அகற்றுதலே சரியானது என்று கருதினார். அறுவைக்குப் பயந்த அவர் நம்மிடம் வந்த போது, தேர்வு செய்து ‘நேட்ரம் சாரி சைரிக்’ கொடுக்கப்பட்டது. அதனால், இரத்த வாந்தி நின்ற தோடு, சிதைந்து உருமாறிய நுரையீரல் ஒழுங்குபட்டு இயல்பான நிலைக்கு வந்தது.சிதைந்த உள்ளுறுப்புகளையும் இயல்பான நிலைக்கு ஹோமியோபதியால் கொண்டுவர முடியும்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மருத்துவம் ஒரு முக்கோணம் Empty Re: மருத்துவம் ஒரு முக்கோணம்

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 1:33 pm

ஹோமியோபதியில் குறி என்று குறிப்பிடுவதும், பிற மருத்துவத்தில் குறியென்று குறிப்பிடுவதும் ஒன்றல்ல. ஹோமியோபதியில் ஒரு குறிக்கு மூன்று பாகங்களுண்டு. உணர்வு, இடம், மாறுமை என்பவை அவை. இம்மூன்றுமிருப்பின் மருந்துத் தேர்வு செய்து துயரர் ஏற்பாற்றலுக்கு ஏற்ப வீரியம் தேர்ந்து கொடுத்தல் வேண்டும்.

இக்கட்டுரையிலுள்ள மருந்துகளை மருத்து வலின் ஆலோசனையின்றி பயன்படுத்துதல் கூடாது. ஒன்றும் அறியாததைவிட அரைகுறை அறிவு ஆபத்தானது. தேர்ந்த மருத்துவரே மருந்தைக் கையாள முடியும். கையாளுதல் வேறு - பயன்படுத்துதல் வேறு. நெருக்கடியான கட்டங்களில்தான் பகுதிக்குறியை வைத்து மருந்தைத் தேர்வு செய்து துயரர்களுக்குக் கொடுக்கலாம். அதுவும் இது மிக அரிதாக நிகழ வேண்டியவை. அதன் வெளிப்பாடுகளைக் கூர்ந்து கவனித்தும் சரிசெய்தல் வேண்டும். மருத்துவர் மருந்து கொடுத்து மருந்து செயல்படும்போது குறிகளின் இறங்குவரிசை, பின்னடைவு இவற்றை அறியத் தெரிதல் வேண்டும். இவை தெரியாமல் துயரரோ, அரைகுறை அறிவுள்ளவர்களோ ஏதாவது ஹோமியோ மருந்தினைக் கொடுப்பாராயின், முதலில் மருந்து கொடுத்த மருத்துவர் அத்துயரை ஒதுக்கிவிடுதல் அல்லது ஒதுங்கி விடுதல் ஹோமியோபதிக்குச் செய்யும் பெருந் தொண்டாகும்.



(நன்றி : மாற்று மருத்துவம் ஏப்ரல்2009)
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மருத்துவம் ஒரு முக்கோணம் Empty Re: மருத்துவம் ஒரு முக்கோணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum