தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மன அழுத்தத்தின் போது ஏற்படும் ஆபத்தான உடலியல் மாற்றங்கள் பற்றி அறிந்துள்ளீர்களா?

View previous topic View next topic Go down

மன அழுத்தத்தின் போது ஏற்படும் ஆபத்தான உடலியல் மாற்றங்கள் பற்றி அறிந்துள்ளீர்களா?  Empty மன அழுத்தத்தின் போது ஏற்படும் ஆபத்தான உடலியல் மாற்றங்கள் பற்றி அறிந்துள்ளீர்களா?

Post by சிவா Mon Jan 28, 2013 11:30 pm

நவீன வாழ்க்கை தரும் பெரிய சாபம் மன அழுத்தம். குழந்தைகள்கூட இதற்கு விதிவிலக்கு இல்லை. தலை முடியில் தொடங்கி கால்கள் வரைக்கும் உடலின் பெரும்பாலான பாகங்களைப் பாதிக்கக் கூடியது மன அழுத்தம். ஆனால், அது தொடர்பான நம்முடைய புரிதல்கள் மிகக் குறைவு. மன அழுத்தம் ஏற்படும் போது உடலில் என்னவெல்லாம் நடக்கும்?

இனப்பெருக்க மண்டலம்

அதிகப்படியான தொடர் மன அழுத்தத்தின்போது அட்ரினலில் இருந்து சுரக்கப்படும் கார்டிசால் என்ற ஹார்மோன் அளவு அதிகரிக்கும். இது இனப்பெருக்க மண்டலத்தின் வழக்கமான பணியைப் பாதிக்கும்.


நீண்ட நாள் மன அழுத்தம் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் மற்றும் விந்தணு உற்பத்தியைப் பாதித்து, ஆண்மைக் குறைபாட்டுக்கு வழிவகுக்கலாம். பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தால் ஒழுங்கற்ற மாதவிலக்கு அல்லது முன்கூட்டியே கடுமையான வலி கொண்ட மாதவிலக்கு ஏற்படலாம். மேலும், உடல் உறவு மீதான ஈடுபாட்டையும் இது குறைக்கும்.

நரம்பு மண்டலம்

மன அழுத்தத்தின்போது நம்முடைய உடல் மிக விரைவாக அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள தன்னைத் தயார்ப்படுத்தும். மூளையில் இருந்து அட்ரினலுக்கு சமிக்ஞைகள் அனுப்பப்பட்டு, கார்டிசாலைச் சுரக்கச் செய்யும். இது இதயத் துடிப்பை அதிகரித்து ரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தும். உணவுச் செரிமான மண்டலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி, ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தலாம். பதற்றச் சூழல் மறையும் வரை நம்முடைய உடல் இயல்பு நிலைக்குத் திரும்பாது. தொடர் மன அழுத்தம் தூக்கத்துக்கும் உலை வைக்கும்.

தசைகள்

மன அழுத்தத்தின்போது உடல் தசைகள் கடினமாகும். இது நீடிக்கும்போது தலைவலி, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் உருவாகும்.

சுவாச மண்டலம்

மன அழுத்தம் மூச்சை அதிகமாக உள் இழுத்து வெளியே விடச் செய்யும். இது சிலருக்குப் படபடப்பு மற்றும் மாரடைப்பைக்கூட ஏற்படுத்தலாம்.

நாளமிள்ளாச் சுரப்பிகள் அமைப்பு

மன அழுத்தம் ஏற்படும்போது மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் சுரப்பியில் இருந்து அட்ரினல் சுரப்பிக்கு சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றன. அது கார்டிசால் உள்ளிட்ட சில ரசாயனங்களைச் சுரக்கும். இந்த ரசாயனங்களை மன அழுத்த ஹார்மோன்கள் என்று கூறுவார்கள். இவை சுரக்க ஆரம்பித்ததும், கல்லீரல் அதிக அளவில் குளுகோஸை உற்பத்தி செய்யும்.

இதயச் செயல்பாடு

திடீரென ஏற்படும் மன அழுத்தமானது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வதைப் போன்றது. மன அழுத்தத்தால் இதயத் துடிப்பு அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதனால் இதயத் தசைகளும் ரத்த நாளங்களும் வேகமாகவும் அதிகமாகவும் செயல்படும். தொடர்ந்து இப்படி நிகழும்போது ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படும்; மாரடைப்புக்கும் வழிவகுக்கும்.

செரிமான மண்டலம்

மன அழுத்தம் இருக்கும்போது வழக்கமாக உண்பதைக் காட்டிலும் அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடத் தூண்டும். நீங்கள் அதிகமாக சாப்பிடும்போதோ அல்லது புகையிலை மற்றும் மது போன்ற பொருட்களை உட்கொள்ளும்போதோ அது நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். இதனால் வயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பதுபோன்ற உணர்வு, வாந்தி, வயிற்று வலி போன்றவை ஏற்படும். இறைப்பையின் செரிமானத் திறன் பாதிக்கப்படும். இதன் விளைவாக, ஊட்டச்சத்துக்கள் கிரகிக்கும் திறன் பாதிக்கப்படும். மேலும் வயிற்றில் உணவின் பயணத்தையும் பாதிக்கும். இதனால், வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் ஏற்படும்.


நன்றி:http://www.seithy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

மன அழுத்தத்தின் போது ஏற்படும் ஆபத்தான உடலியல் மாற்றங்கள் பற்றி அறிந்துள்ளீர்களா?  Empty Re: மன அழுத்தத்தின் போது ஏற்படும் ஆபத்தான உடலியல் மாற்றங்கள் பற்றி அறிந்துள்ளீர்களா?

Post by தமிழ்நிலா Tue Jan 29, 2013 6:26 am

நல்ல பதிவு சிவா நன்றி
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

மன அழுத்தத்தின் போது ஏற்படும் ஆபத்தான உடலியல் மாற்றங்கள் பற்றி அறிந்துள்ளீர்களா?  Empty Re: மன அழுத்தத்தின் போது ஏற்படும் ஆபத்தான உடலியல் மாற்றங்கள் பற்றி அறிந்துள்ளீர்களா?

Post by mohaideen Tue Jan 29, 2013 5:09 pm

தகவல்களுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மன அழுத்தத்தின் போது ஏற்படும் ஆபத்தான உடலியல் மாற்றங்கள் பற்றி அறிந்துள்ளீர்களா?  Empty Re: மன அழுத்தத்தின் போது ஏற்படும் ஆபத்தான உடலியல் மாற்றங்கள் பற்றி அறிந்துள்ளீர்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum