தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தினம் ஒரு ஹதீஸ்

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

View previous topic View next topic Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 5:16 am

தினம் ஒரு ஹதீஸ்
நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5409


நன்றி தினம் ஒரு ஹதீஸ்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 5:17 am

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் செவிமடுத்ததாக கஃபு பின் இயாள் (ரழி) கூறுகிறார்கள்: “நிச்சயமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு. என் சமுதாயத்தினருக்குச் சோதனை செல்வம் ஆகும்.

(திர்மிதி)
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 5:17 am

எவன் ஒரு கூட்டத்தினரைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய்யான செய்தியைக் கூறுகிறானோ அவனுக்குக் கேடு தான். அவனுக்கு கேடு தான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆவியா (ரலி)

நூல்: திர்மிதி 235

"அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களிடத்தில் தமாஷ் செய்கிறீர்களே?" என்று மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், " நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே!" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதி 1990
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 5:17 am

அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையில் முதல் இருப்பில் அமராமல் எழுந்துவிட்டார்கள். தொழுகையை நிறைவு செய்தபோது சலாம் கொடுப்பதற்கு முன்னால் முதல் இருப்பில் அமர மறந்ததற்குப் பரிகாரமாக ஒவ்வொரு சஜ்தாவிலும் தக்பீர் கூறி இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள். உடனே மக்களும் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்த அந்த இரண்டு சஜ்தாக்களையும் செய்தனர்.

ஸஹீஹுல் புகாரி 1230
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 5:18 am

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, 'ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?' என்று கேட்டார்கள். அதனைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள், 'எங்களில் யாருக்கு இந்தச் சக்தி உண்டு, இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் ஒருவனே; அல்லாஹ் தேவையற்றவன்' (என்று தொடங்கும் 112 வது ) குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும்' என்று கூறினார்கள்.
இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) வழியாக வரும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் (முர்சல்) - முறிவுள்ளதாகும்.
ளஹ்ஹாக் அல்மஷ்ரிம்(ரஹ்) வழித்தொடர் (முஸ்னத்) முழுமைபெற்றதாகும் என அபூ அப்துல்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்.

-புஹாரி- 5015.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by mohaideen Fri Jun 07, 2013 12:49 pm

நல்ல தகவ்லகள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Jun 09, 2013 10:29 am

ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள் , “இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி 1418
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Jun 09, 2013 10:29 am

ஒரே நாளில் 1000 நன்மைகள் பெற / 1000 பாவங்கள் மன்னிக்கப்பட

நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள், “உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா?” என்று கேட்டார்கள். அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் , “எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,”அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை “சுப்ஹானல்லாஹ்” (அல்லாஹ் தூயவன்) என்று கூறித் துதிக்க , அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் பாவங்கள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் 5230
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Jun 09, 2013 10:30 am

பாவமற்ற விஷயங்களிலும், உறவினரைப் பகைக்காத விஷயத்திலும் யாரேனும் அல்லாஹ்விடம் கேட்டால் மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் அதை இறைவன் அங்கீகரிக்கிறான். அவன் கேட்டதையே கொடுப்பான் அல்லது அதை மறுமையின் சேமிப்பாக மாற்றுவான் அல்லது அவனுக்கு ஏற்படும் தீங்கை நீக்குவான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் 'அப்படியானால் நாங்கள் அதிகமாகக் கேட்போமே!' என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ் அதை விட அதிகம் கொடுப்பவன்" என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: அஹ்மத் 10709
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Jun 09, 2013 10:30 am

நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (நான் நபியவர்களைச் சந்திக்க அனுமதி கேட்ட எந்தச் சமயத்திலும்) நபி (ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை; புன்முறுவலுடன் (சிரித்தவர்களாகவே) அல்லாமல் வேறுவிதமாக அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் அல்பஜலீ (ரலி)

நூல் : புகாரி 6089
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Jun 09, 2013 10:30 am

”யார் கஹ்ஃப் அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை ஓதுவாரோஅவருக்கு மறுமை நாளில் அவரின் பாவத்திருந்து வானத்தின் மேகம்வரை ஒளியை ஏற்படும்.

மேலும் இரண்டு வெள்ளிக்கிழமைக்குஇடையில் ஏற்படும் பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரலி)
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Jun 09, 2013 10:31 am

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் மறுமை நாளில் மூன்று மனிதர்களுடன் பேசவோ அவர்களை தூய்மைப் படுத்தவோ அவர்களை -அருளுடன்- பார்க்கவோ மாட்டான். அவர்களுக்கு நோவினைதரும் கடும் வேதனை உள்ளது. அவர்கள்:

1.விபச்சாரம் செய்யும் முதியவர்
2.பொய்யுரைக்கும் அரசன்
3.பெருமையடிக்கும் ஏழை.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 156)
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Jun 09, 2013 10:31 am

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்களே! நீங்கள் அனைவரும் உங்களின் பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப்பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.” (ஸஹீஹுல் புகாரி)
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Jun 09, 2013 10:31 am

இறைவனால் பரிசுத்தமாக்கப்படாத இழிவான இருதயங்கள்!
தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் 'நம்பிக்கை கொண்டோம்' என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர். உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர். மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி 'இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவை உங்களுக்கு கொடுக்கப்படாவிட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்கள். மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர். இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு. (அல்குர்ஆன்:5:41)
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Jun 09, 2013 10:32 am

நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே, "ரப்பிக்ஃபிர்லீ, ரப்பிக்ஃபிர்லீ" (இறைவா! என்னை மன்னித்து விடு ; இறைவா! என்னை மன்னித்து விடு) ' என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)

நூல்: நஸாயீ 1059
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 12:44 am

“(துக்கம் ஏற்பட்டால்) கன்னங்களில் அறைந்து கொள்பவனும், சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவனும், அறியாமைக் கால வழக்கப்படி புலம்புகிறவனும் நம்மைச் சார்ந்தவன் (முஸ்லிம்) இல்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் 148
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 12:44 am

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதல்) தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சிறிது நேரம் மௌனமாக இருப்பார்கள். நான் (நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும் கிராஅத்துக்குமிடையே நீங்கள் மௌனமாக இருக்கும் போது என்ன கூறுவீர்கள்? என்று கேட்டேன் அதற்கு அவர்கள் நான், “அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல் மஃக்ரிப், அல்லாஹும்ம நக்கினீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ், அல்லாஹும்ம ஹ்ஸில் கத்தாயாய பில் மாஇ வஸ்ஸல்ஜி வல்பர்த்” (இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போன்று என் தவறுகளைவிட்டும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக!) என்று கூறுகிறேன் என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 744
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 12:44 am

"ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்' (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்றும், "அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வஅக்லிஃப் லீ கைரம் மின்ஹா' (இறைவா! எனக்கேற்பட்ட இத்துன்பத்தை நான் பொறுமையுடன் ஏற்றதற்கு மாற்றாக எனக்கு நன்மையை வழங்குவாயாக!) என்றும் கூறினால், அதற்கு ஈடாக அவர் இழந்ததை விடச் சிறந்ததை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: முஸ்லிம் 1674
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 12:45 am

அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?" என்று மக்கள் (நபி(ஸல்) அவர்களிடம் ) கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பெளர்ணமி இரவில் முழு நிலாவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா?" என்று கேட்டார்கள். மக்கள் 'இல்லை; அல்லாஹ்வின் தூதர் அவர்களே!' என்றார்கள் . நபி(ஸல்) அவர்கள், "மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா?" என்று கேட்டார்கள். மக்கள், 'இல்லை; அல்லாஹ்வின் தூதர் அவர்களே!' என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: "இவ்வாறு தான் உங்களுடைய இறைவனை நீங்கள் (மறுமை நாளில்) காண்பீர்கள்."

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 7437
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 12:45 am

திருமணம்' எனது வழிமுறை (சுன்னத்) ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல. அறிவிப்பு : அனஸ் பின் மாலிக் (ரலி) (நூல் : புகாரி)
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 12:46 am

திருமணம்' எனது வழிமுறை (சுன்னத்) ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல. அறிவிப்பு : அனஸ் பின் மாலிக் (ரலி) (நூல் : புகாரி)
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 12:46 am

அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் 1777
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 12:46 am

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தனது (அர்ஷின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பிரிவினருக்கு நிழல் அளிப்பான். அந்த ஏழு கூட்டத்தார்:

1. நீதி மிக்க தலைவர்.

2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.

3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.

4. அல்லாஹ்வுக்காகவே நட்புக் கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகிலிருந்து) பிரிந்து சென்ற இருவர்.

5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும் நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்று கூறியவர்.

6. தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.

7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 660
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 12:46 am

நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போதுஅவர்கள், " உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா ?'' என்று கேட்டார்கள். அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் , " எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும் ? '' என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,"அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை "சுப்ஹானல்லாஹ் ' என்று கூறித்துதிக்க , அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன '' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 5230
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 12:47 am

'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும்.

1.நம்பினால் துரோகம் செய்வான்.

2.பேசினால் பொய்யே பேசுவான்.

3.ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்.

4.விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்'

அறிவிப்பாளர் :அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)
நூல். புகாரி :34.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum