தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் - 5

View previous topic View next topic Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் - 5 Empty தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் - 5

Post by ஜேக் Fri Jul 26, 2013 10:52 pm

காத தூரம்

என் பாட்டி எனது சிறு வயதில் தூங்கும் முன் தினமும் ஒரு கதை சொல்வார்கள். அக்கதைகளில் காத தூரம் பிரயாணம் செய்து, அந்த ராஜா நீலமலைக்கு வந்து சேர்ந்தானாம் என கூறுவார். எனது கேள்வி இதுதான்.

- காத தூரம் என்பதின் பொருள் என்ன?

- இன்றைய அளவில் அதாவது மைல் கணக்கிலும்: கி.மீ. கணக்கிலும் ஒப்பிட்டால் எவ்வளவு?

- இந்த வார்த்தை எக்காலங்களில் இருந்து வழக்கத்திலிருந்து வருகிறது?

- இலக்கியங்கள், குறள்கள், செய்யுள்களில் இவ்வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளதா?

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் - 5 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் - 5

Post by முரளிராஜா Sat Jul 27, 2013 7:03 am

இப்பவே கண்ணை கட்டுதே முழித்தல் முழித்தல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் - 5 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் - 5

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jul 27, 2013 8:51 am

முரளிராஜா wrote:இப்பவே கண்ணை கட்டுதே முழித்தல் முழித்தல் 

கட்டும்...கட்டும்... ராத்திரியில ஒழுங்க தூங்கனா தானே!

சிலப்பதிகாரத்திலும் காப்பியங்கள் அனைத்திலும் இந்த காத தூரம் என்பது வருகிறது என்று நினைக்கிறேன்...

விரிவாக தகவலை தேடுவோம்...

விடை கிடைக்காமலா போய்விடும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் - 5 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் - 5

Post by ஸ்ரீராம் Sat Jul 27, 2013 10:59 am

குறுந்தொலை வாய்ப்பாடு (வடபுலத்திற்கும் தென்புலத்திற்கும் பொதுவானது):
1 விரற்கிடை = 11/16 அங்குலம்
1 பெருவிரல் = 1 3/8 அங்குலம்
12 விரற்கிடை = 6 பெருவிரல் = 8 1/4 அங்குலம்
2 சாண் = 1 முழம் = 1.3/8 அடி
2 முழம் = 1 சிறுகோல் = 2 3/4 அடி
2 சிறுகோல் = 1 கோல் = 5 1/2 அடி
2 கோல் = 1 பெருங்கோல் (தண்டம்) = 11 அடி
8 பெருங்கோல் (தண்டம்) = 1 கயிறு
நெடுந்தொலை வாய்ப்பாடு (தென்புலம்):
500 பெருங்கோல் (தண்டம்) = 62 1/2 கயிறு = 1 கூப்பீடு = 5500 அடி = 1.04167 மைல்.= 1.6763595 கி.மீ
4 கூப்பீடு = 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 88000 அடி = 16.233333 மைல் = 26.820175 கி.மீ

4 கூப்பீடு = 1 காதம்

கூப்பீடு தூரம் என்றால் கூப்பிட்டால் கேக்கும் தூரம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் - 5 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் - 5

Post by ஜேக் Sat Jul 27, 2013 1:32 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
முரளிராஜா wrote:இப்பவே கண்ணை கட்டுதே முழித்தல் முழித்தல் 

கட்டும்...கட்டும்... ராத்திரியில ஒழுங்க தூங்கனா தானே!

அதானே... நல்லா சொல்லுங்க ரமேஷ்.

ராத்திரியெல்லாம் மிட்நைட் மசாலா பாத்துட்டு... பகல்ல வந்து... கண்ணக்கட்டுது... ஒரே புலம்பல் வேற....பயந்து ஓடு பயந்து ஓடு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் - 5 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் - 5

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jul 27, 2013 3:02 pm

இணையத்திலிருந்து....

குறுந்தொலை வாய்ப்பாடு (வடபுலத்திற்கும் தென்புலத்திற்கும் பொதுவானது):
1 விரற்கிடை = 11/16 அங்குலம்
1 பெருவிரல் = 1 3/8 அங்குலம்
12 விரற்கிடை = 6 பெருவிரல் = 8 1/4 அங்குலம்
2 சாண் = 1 முழம் = 1.3/8 அடி
2 முழம் = 1 சிறுகோல் = 2 3/4 அடி
2 சிறுகோல் = 1 கோல் = 5 1/2 அடி
2 கோல் = 1 பெருங்கோல் (தண்டம்) = 11 அடி
8 பெருங்கோல் (தண்டம்) = 1 கயிறு
நெடுந்தொலை வாய்ப்பாடு (தென்புலம்):
500 பெருங்கோல் (தண்டம்) = 62 1/2 கயிறு = 1 கூப்பீடு = 5500 அடி = 1.04167 மைல்.= 1.6763595 கி.மீ
4 கூப்பீடு = 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 88000 அடி = 16.233333 மைல் = 26.820175 கி.மீ
நெடுந்தொலை வாய்ப்பாடு (வடபுலம்):
500 கோல் = 31 1/4 கயிறு = 1 கூப்பீடு = 2750 அடி = 0.520835 மைல் = 0.8381798 கி.மீ
4 கூப்பீடு = 1 காதம் = 11000 அடி = 2.088888 மைல் = 3.3525219 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 44000 அடி = 8.33333 மைல் = 13.4100875 கி.மீ
மேலே உள்ள வாய்ப்பாட்டில் கூப்பீட்டிற்கான தென்புல, வடபுல வேறுபாட்டை இந்தக் கட்டுரையில் வரும் கட்டுகளைக் கணக்கிட்ட பிறகே (குறிப்பாக குமரி – வாரணாசித் தொலைவு, மணிபல்லவப் பயணக் கணக்கில் ஏற்பட்ட சிக்கல்), நானும் புரிந்து கொண்டேன். [இன்னும் புரிந்து கொள்ள முடியாத ஒரு சிக்கல் சிலம்பு வஞ்சிக்காண்டம் காட்சிக் காதையில் வரும் “ஒருநூற்று நாற்பதி யோசனை விரிந்த பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று” என்ற 15-16 ஆம் வரிகள். இது தென்வடலாய் மேற்குத் மலைத் தொடர்ச்சியின் நீளத்தைக் குறிக்கிறதோ என்ற ஐயமும் உண்டு. ஆய்ந்து பார்க்க வேண்டும்.]
அதே பொழுது, அடியார்க்கு நல்லார் உரையிற் சொல்லும் குமரி – பஃறுளி தொலைவைக் கணக்கிடுவதில், வடபுலக் காதமும் இயற்தொலைவைக் காட்டவில்லை. அந்தக் கட்டில், இயற்தொலைவு அமைய வேண்டுமானால், 1 கூப்பீடு = 500 சிறுகோல் என்று கூடக் கொள்ள வேண்டியிருக்கிறது. இது கூட இன்றைய நிலையில் ஓர் ஊகம் தான். இப்படிக் கூடுகை (context) பார்த்துப் பொருள்கொள்ளும் கருதுகோளைச் சென்ற பகுதியில் சொல்லியிருந்தேன். அதாவது,
முதற்சங்க காலம்:
1 கூப்பீடு = 500 சிறு கோல்.
இடைச்சங்க காலமும் அதற்குப் பின்னும் [கி.மு.1000-300. வடபுலத்துச் சனபதங்கள், மோரியர் ஆட்சிக் காலம்]
1 கூப்பீடு = 500 கோல் (இதுவே வட புலத்தில் நிலைத்திருக்கலாம், பின்னால் பல்லவர், சோழப் பேரரசில் வடமரபு ஆதிக்கம் கூடிப் பின் தெற்கிலும் நிலைபெற்றிருக்கலாம்)
கடைச்சங்க காலம் [கி.மு.500-கி.பி.200]
1 கூப்பீடு = 500 பெருங்கோல் (சிலம்பு வரையிலும் பயன்பாட்டில் இருந்து, பின் பல்லவர் ஆட்சியில் மாறியிருக்கலாம்).
இந்தக் கருதுகோளை இன்னும் பல சான்றுகள் கொண்டு உறுதி செய்யவேண்டும். இப்படிச் சொல்ல இன்னொரு கரணியமும் உண்டு. மேலைக்கணக்கில், கூப்பீட்டிற்கு இணையான mile – ஐ அடுத்து, அதனினும் பெரிய நீட்டளவைகளைச் சொல்வதில்லை. ஆங்கிலக் கணக்கில்
1 Digit = 3/4 inch
2 Digits = 1 Thumb
12 Digits = 6 Thumb = 1 Span = 9 inches
2 Spans = 1 Cubit = 1 1/2 foot
2 Cubit = 1 Yard = 3 foot
220 Yards = 1 Furlong
1760 Yards = 8 Furlongs = 1 Mile = 5280 அடி
என்றே அமையும். இந்த அளவைகள் அப்படியே வியக்கத் தக்க அளவில் நம் பழந்தமிழ் நீட்டளவைகளுக்கு இணைகோடாய்க் [நினைவிருக்கட்டும், இணைக்கோடு; அவை மதிப்பளவில் ஒன்றானவை அல்ல.] காட்சியளிக்கின்றன.
அவர்களுடைய digit-உம் நம் விரற்கிடையும் அடிப்படையில் ஒரே பொருளும், தொலைவில் மட்டும் சற்று வேறுபட்டும் காட்சியளிக்கின்றன. நம் விரற்கிடை 11/16 அங்குலம், அவர்களுடைய digit 12/16 அங்குலம். இந்த வேறுபாடு மற்ற அளவைகளையும் அந்தந்தப்படி மாற்றுகிறது. [பின்னால் Digit, Thumb போன்ற அளவைகள் ஆங்கில வாய்ப்பாட்டிற் புழங்காமல், inch என்பதே பெரிதும் புழங்கியது. digit, thumb போன்றவை மறைந்து போயின.]
நம்முடைய சாண், அவர்களுடைய span க்கு இணை, [இங்கும் சாண் மாறி அடி - foot என்னும் சொல் நிலைத்து 12 inch - க்குச் சமமாய் ஆனது.]
நம்முடைய முழம், அவர்களுடைய cubit, [இந்த அளவை இன்று புழக்கத்தில் மறைந்து, அடிக்கு அப்புறம் yard - என்பதே புழக்கத்தில் நிலைத்தது.]
நம்முடைய சிறுகோல், அவர்களுடைய yard -யைப் போல் இருக்கிறது, [yard "measure of length," O.E. gerd (Mercian), gierd (W.Saxon) "rod, stick, measure of length," from W.Gmc. *gazdijo, from P.Gmc. *gazdaz "stick, rod" (cf. O.S. gerda, O.Fris. ierde, Du. gard "rod;" O.H.G. garta, Ger. gerte "switch, twig," O.N. gaddr "spike, sting, nail"), from PIE *gherdh- "staff, pole" (cf. L. hasta "shaft, staff"). In O.E. it was originally a land measure of roughly 5 meters (a length later called rod, pole or perch). Modern measure of "three feet" is attested from 1377 (earlier rough equivalent was the ell of 45 inches, and the verge). In M.E., the word also was a euphemism for "penis" (cf. "Love's Labour's Lost," V.ii.676).
Slang meaning "one hundred dollars" first attested 1926, Amer.Eng. Yardstick is 1816. The nautical yard-arm (1553) retains the original sense of "stick." In 19c. British naval custom, it was permissible to begin drinking when the sun was over the yard-arm.] கோல் என்னும் சொல்லோடு தொடர்புடைய கோடு என்ற சொல்லும் தமிழில் கிளை, கொம்பு, கம்புகளைக் குறிக்கும். இங்கே உள்ள மேலைச் சொற்களுக்கும் நம்முடைய கோட்டிற்கும் உள்ள பொருள் இணை வியக்க வைக்கிறது.
நம்முடைய கூப்பீடு, தென்புல வாய்ப்பாட்டைப் பார்த்தால், அவர்களுடைய mile -க்கு ஒப்பானது. வடபுல வாய்ப்பாட்டின் படி கிட்டத்தட்ட 1/2 மைலுக்கு ஒப்பானது. [mile என்னும் ஆங்கிலச்சொல்லின் சொற்பிறப்பை இங்கு ஓர்ந்து பார்க்கலாம். O.E. mil, from W.Gmc. *milja, from L. mila "thousands," pl. of mille "a thousand" (neuter plural was mistaken in Gmc. as fem. sing.). Ancient Roman mile was 1,000 double paces (one step with each foot), for about 4,860 feet, but there were many local variants and a modern statute mile is about 400 feet longer. In Germany, Holland, and Scandinavia in the Middle Ages, the L. word was applied arbitrarily to the ancient Gmc. rasta, a measure of from 3.25 to 6 English miles. Mile-a-minute (adj.) is attested from 1957; milestone is from 1746.]
மேலே உள்ள விரற்கிடை, சாண், முழம், சிறுகோல், கூப்பீடு என்ற ஐந்தும் digit, span, cubit, yard, mile என்ற ஐந்தோடு, ஒன்றிற்கொன்று கருத்தளவில் இணையானவை. அதே பொழுது விரற்கிடை, digit என்பவை 1/16 அளவு வேறுபட்டதால், மற்றவையும் அதற்கிணங்க மதிப்பளவில் மாறிப் போயின.
நம்மிடம் இல்லாது மேலையரிடம் இருந்த ஓரளவை furlong என்பதாகும். இதற்கு இணையாய்ச் சால் என்று சொல்ல இயலும். அப்படிக் கொண்டால் 250 சிறுகோல் = 1 சால், 8 சால் = 1 கூப்பீடு என்றாகும். [சால் = வயலில் உழும் போது கலப்பை பறிக்கும் நேர்கோடு. சாலையின் வேர்ச்சொல்லும் சால் தான். ஆங்கிலத்தில் furlong என்பதற்கும் இதே பொருள்தான்: O.E. furlang "measure of distance" (roughly 220 yards), originally the length of a furrow in the common field of 10 acres, from furh "furrow + lang "long." But the "acre" of the common field being variously measured, the furlong was fixed 9c. on the stadium, one-eighth of a Roman mile.]
2000 சிறுகோல் = 1000 கோல் = 500 பெருங்கோல் = 8 சால் = 1 கூப்பீடு என்னும் தென்புல ஒப்புமையில், 1000 கோல் = 1 கூப்பீடு என்பதும் கூட mile என்ற இணைச்சொல்லிற்குள் இருக்கும் ஆயிரங் கோல் என்ற பழம்பொருளை உணர்த்தும். [2000 முழம் = 1000 சிறுகோல் = 500 கோல் = 1 கூப்பீடு என்ற வடபுல ஒப்புமையில் 1000 சிறுகோல் = 1 கூப்பீடு என்பது கிட்டத்தட்ட 1/2 மைலைக் குறிக்கும்.]
ஆங்கில அளவைகள் கிரேக்க, உரோம அளவைகளைப் பின் தொடர்ந்து ஏற்பட்டவை. கிரேக்க, உரோமர்கள் எகிப்தியரையோ, அல்லது சுமேரிய, பாபிலோனியர்களையோ பின்பற்றியிருக்கலாம். இது ஆய்வு செய்ய வேண்டிய புலனம். ஆனால், இத்தகைய இணைகள் இருப்பதைப் பார்த்தால், கூப்பீடு, காதம், யோசனை போன்றவற்றில் ஏற்பட்ட தொலைவு வேறுபாடு மிகவும் பின்னால் எழுந்ததோ என்று எண்ண வேண்டியிருக்கிறது,
நம்முடைய அளவைகளுக்கும் ஆங்கில அளவைகளுக்கும் உள்ள சில ஒக்குமைகளைத் தென்புல வாய்ப்பாட்டின் படி கீழே கொடுத்துள்ளேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் - 5 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் - 5

Post by ஜேக் Sat Jul 27, 2013 4:51 pm

விரிவான விளக்கமளித்த நண்பர் ரமேஷிற்கு வாழ்த்துக்கள்சூப்பர் சூப்பர் சூப்பர் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் - 5 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் - 5

Post by முரளிராஜா Sat Jul 27, 2013 6:30 pm

விளக்கமளித்த ஸ்ரீ ராமுக்கும் கவியருவி அவர்களுக்கும் நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் - 5 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் - 5

Post by ஜேக் Sat Jul 27, 2013 11:41 pm

முரளிராஜா wrote:விளக்கமளித்த ஸ்ரீ ராமுக்கும் கவியருவி அவர்களுக்கும் நன்றி

நானும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்கொண்டாட்டம் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் - 5 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் - 5

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum