தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by ஜேக் Mon Jul 29, 2013 9:54 pm

கவிதை எழுதுவது எப்படி?

கவிதைகள் எத்தனை வகை உண்டு?

கவிதை எழுத தகுதி வேண்டுமா?

ஹைக்கூ - என்பதின் விளக்கம் என்ன?
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by ஸ்ரீராம் Tue Jul 30, 2013 11:33 am

எனக்கும் இந்த ஆசை உண்டு ஜேக்.

கவியருவி ரமேஷ் அவர்கள் எனக்கு சொல்லிக்கொடுத்தார். என் மரமண்டைக்கு ஏறவில்லை. 

எல்லாராலும் எல்லாவற்றையும் கற்று கொள்ள முடியாது. வேற என்ன சொல்ல.?

கவிஞர் நண்பர்கள் இவருக்கு உதவுங்கள்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam





[You must be registered and logged in to see this link.]


ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by முரளிராஜா Tue Jul 30, 2013 1:26 pm

ஒரு அழகான பெண்ணை பார்த்தால் கவிதை அதுவா வரும் ஜேக்
நான் என் கல்லூரி காலத்தில் என் அழகில் புன்முறுவல் பேச்சில் மயங்கி என்னையே கவினித்து(நீங்க நம்பித்தான் ஆகணும் வேற வழியில்லை ) கொண்டிருந்த அந்த அழகிய பெண்ணை பார்த்து வந்த கவிதை

அன்பே 
உன் கண்கள் என்ன 
ஆங்கில பாட புத்தகமா?
உன் பார்வையின் 
அர்த்தத்தை  என்னால் 
புரிந்து கொள்ளவே முடியவில்லையே?


(யாராது கூகிள்ள தேடிட்டு இது உன் கவிதை இல்லைனு சொல்லாதீங்கப்பா )

எப்படி காதலையும் சொன்னேன்
ஆங்கிலத்தில் எனக்குள்ள புலமையையும் சொன்னேன் பார்த்தீங்களா?
சரி சரி 
வரிசையா வந்து என்னை பாராட்டலாம் பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 1:59 pm

அன்பே 
உன் கண்கள் என்ன 
ஆங்கில பாட புத்தகமா?
உன் பார்வையின் 
அர்த்தத்தை  என்னால் 
புரிந்து கொள்ளவே முடியவில்லையே?

நீங்க எல்லாம் அப்பவே கவிஞராகிவிட்டு இருக்கிறீர்கள்...

நான் இப்பத்தான் வளர்ந்து வறேன்...

பாராட்டுகள்... கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by முரளிராஜா Tue Jul 30, 2013 2:00 pm

கவி என்னை வைத்து காமெடி கீமடி எதுவும் பண்ணலையே புன்முறுவல் புன்முறுவல் 

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 2:06 pm

இல்லை நண்பா... அப்பவே என்னமா கவிதை எழுதி இருக்கீங்க...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by முரளிராஜா Tue Jul 30, 2013 2:09 pm

என்னை நக்கல் செய்வதை விட்டுட்டு
நம்ம ஜெக்குக்கு ஒரு நல்ல பதிலா சொல்லுங்க லொள்ளு 

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 2:14 pm

[You must be registered and logged in to see this link.] wrote:கவிதை எழுதுவது எப்படி?

கவிதைகள் எத்தனை வகை உண்டு?

கவிதை எழுத தகுதி வேண்டுமா?

ஹைக்கூ - என்பதின் விளக்கம் என்ன?

ஒவ்வொன்றாய் விளக்கம் சொல்கிறேன் நண்பரே...

இது மற்றவர்களுக்கும் உதவும் என்பதால் விரிவாகவே சொல்கிறேன். புதியதாக எழுதுபவர்களுக்கும் உதவும் என்பதால்...

கவிதை எழுதுவது எப்படி?
கவிதை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்.

எந்த வகையிலும் எழுதலாம்.

எழுதும் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் ஆய்வாளர்கள் அடக்கிவிடுவார்கள்.

ஏனெனில் ”எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே”கவிதை எழுத உணர்ச்சி வேண்டும். கற்பனை வேண்டும். இந்த இரண்டும் இருந்தால் போதுமானது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by ரானுஜா Tue Jul 30, 2013 2:23 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஒரு அழகான பெண்ணை பார்த்தால் கவிதை அதுவா வரும் ஜேக்
நான் என் கல்லூரி காலத்தில் என் அழகில் புன்முறுவல் பேச்சில் மயங்கி என்னையே கவினித்து(நீங்க நம்பித்தான் ஆகணும் வேற வழியில்லை ) கொண்டிருந்த அந்த அழகிய பெண்ணை பார்த்து வந்த கவிதை

அன்பே 
உன் கண்கள் என்ன 
ஆங்கில பாட புத்தகமா?
உன் பார்வையின் 
அர்த்தத்தை  என்னால் 
புரிந்து கொள்ளவே முடியவில்லையே?


(யாராது கூகிள்ள தேடிட்டு இது உன் கவிதை இல்லைனு சொல்லாதீங்கப்பா )

எப்படி காதலையும் சொன்னேன்
ஆங்கிலத்தில் எனக்குள்ள புலமையையும் சொன்னேன் பார்த்தீங்களா?
சரி சரி 
வரிசையா வந்து என்னை பாராட்டலாம் பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 2:26 pm

கவிதைகள் எத்தனை வகை உண்டு?
மரபுக் கவிதை
வசனக் கவிதை
புதுக்கவிதை

என்று இருந்தது... இப்போது,
கதைக் கவிதை
கவிதை நாடகம்
கவிதைப் புதினம்
உருவகக் கவிதை

என்று விரிந்து கொண்டே செல்கிறது.

ஹைக்கூ
சென்ரியூ
லிமரைக்கூ
லிமரிக்
லிபுன்
ஹைபுன்
கஸல்
குறட்கூ
சீர்க்கூ
என்ற வடிவங்களும் பிரபலமாகி வருகின்றன...

மேற்கண்ட வடிவங்கள் குறித்து விரிவாகத் தருகிறேன்... தங்களுக்கு எந்த வகை - வடிவம் வருகிறதோ அதை பயன்படுத்தி கவிதை எழுதுங்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 2:36 pm

மரபுக் கவிதை

மரபை பா வடிவங்கள் என்பார்கள்

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா எனப் பா வடிவங்கள் ஐந்து வகைப்படும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 2:37 pm

வெண்பா

வெண்பாவிற்கான இலக்கணங்களும், வெண்பா வகைகளும் குறித்துக் காண்போம்.

• வெண்பா இலக்கணம்
• மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர் ஆகியனவே இடம்பெறும்; கனிச்சீர் வரக்கூடாது.

• இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் வரும்; பிற தளைகள் வரலாகாது.

• ஈற்றடி முச்சீருடையதாகவும், ஏனைய அடிகள் நான்கு சீர் உடையனவாகவும் அமையும்.

• ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு கொண்டு முடியும்.

• செப்பலோசை பெறும்.

• அடிவரையறை; குறைந்த அளவு இரண்டடி; பேரெல்லைக்கு வரையறை இல்லை.

• வெண்பா வகைகள்
வெண்பா ஆறு வகைப்படும். அவை பின்வருமாறு:
1. குறள் வெண்பா

இரண்டடிகளில் அமைவது.

(எ.கா)
வெள்ளத் தனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு

2. சிந்தியல் வெண்பா
மூன்றடிகளில் அமைவது. இரண்டாம் அடியில் தனிச்சொல் பெறுவது நேரிசைச் சிந்தியல் வெண்பா எனப்படும். தனிச்சொல் இவ்வாறு பெறாதது, இன்னிசைச் சிந்தியல் வெண்பா எனப்படும்.
1) நேரிசைச் சிந்தியல் வெண்பா
(எ.கா)
கங்கைக்குக் கண்மலர் சாத்தக் கருங்குவளை
செங்குவளை பூத்தாள் செயலென்னே- எங்கோமான்
பங்குற்றும் தீராப் பசப்பு
2) இன்னிசைச் சிந்தியல் வெண்பா
(எ.கா)
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல்
மேல்நின்று தான்சுரத்த லான்
3) நேரிசை வெண்பா
நான்கடிகளையுடையது. இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெறும். அத்தனிச்சொல் முன்னிரண்டடிகளின் எதுகையை உடையதாய் இருக்கும். முன்னிரண்டடிகளில் ஓரெதுகையும், பின்னிரண்டடிகளில் ஓரெதுகையும் வருதல் பெரும்பான்மையாகும். இரண்டிற்கு மேற்பட்ட எதுகைகளும் வரலாம். எதுகையை ‘விகற்பம்’ எனச் சுட்டுவது உண்டு.
(எ.கா)
நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்!
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம்
4) இன்னிசை வெண்பா
நான்கடிகளில் அமையும். ஓரெதுகையோ, இரண்டெதுகையோ, பல எதுகையோ பெற்று வரும்.
(எ.கா)
கல்லா ஒருவர்க்குத் தம்வாயின் சொல்கூற்றம்;
மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்;
அல்லவை செய்வார்க் கறம்கூற்றம்; கூற்றமே
இல்லத்துத் தீங்கொழுகு வாள்
5) பஃறொடை வெண்பா
5 முதல் 12 அடிவரையில் அமையும். ஓரெதுகையோ, பல எதுகையோ பெற்று வரும்.
(எ.கா)
நன்றி யறிதல், பொறையுடைமை, இன்சொல்லோ(டு)
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை, கல்வியோ(டு)
ஒப்புர வாற்ற அறிதல், அறிவுடைமை,
நல்லினத் தாரோடு நட்டல், இவையெட்டும்
சொல்லிய ஆசார வித்து
6) கலிவெண்பா
13 அடி முதல் பல அடிகளில் வரும். தனிச்சொல் பெறாமல் வருவது இன்னிசைக் கலிவெண்பாவாகும். இரண்டிரண்டு அடிகள் ஒவ்வோரெதுகையும் தனிச்சொல்லும் பெற்றுக் ‘கண்ணி’ என்னும் பெயரில் பலவாக வருவது நேரிசைக் கலிவெண்பா ஆகும்.
இன்னிசைக் கலிவெண்பாவிற்குச் சிவபுராணமும், நேரிசைக் கலிவெண்பாவிற்குத் தமிழ்விடுதூதும் சான்றுகளாகும்.
இவை வெண்பா பற்றியனவாகும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 2:38 pm


ஆசிரியப்பா

ஆசிரியப்பாவின் இலக்கணத்தையும், வகைகளையும் இனிக் காண்போம்.


• ஆசிரியப்பா இலக்கணம்

• மாச்சீரும் விளச்சீரும் பயின்று வரும்; காய்ச்சீர் சிறுபான்மை வரும்; கனிச்சீரில் தேமாங்கனியும் புளிமாங்கனியும் மட்டும் மிகச் சிறுபான்மை இடம் பெறலாம்.

• நேரொன்றாசிரியத் தளையும், நிரையொன்றாசிரியத் தளையும் பயின்று வரும். பிற தளைகளும் வரலாம்.

• அளவடி பயின்று வரும்; குறளடியும், சிந்தடியும் இடம் பெறுதலும் உண்டு; நெடிலடியும், கழிநெடிலடியும் வருதல் கூடாது.

• அகவலோசை பெற்று வரும்.

• ஆசிரியப்பாவின் சிற்றெல்லை மூன்றடி; பேரெல்லைக்கு எல்லை இல்லை.

• ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிதல் சிறப்புடையது.
• ஆசிரியப்பா வகைகள்
ஆசிரியப்பா நான்கு வகைப்படும். அவை பின்வருமாறு:
• நேரிசை ஆசிரியப்பா
எல்லா அடிகளும் நான்கு சீர்களை உடையனவாகவும், ஈற்றயலடி மூன்று சீர்களை உடையதாகவும் அமைவது.

(எ.கா)
தானே முத்தி தருகுவன் சிவனவன்
அடியன் வாத வூரனைக்
கடிவில் மனத்தால் கட்டவல் லார்க்கே

• நிலைமண்டில ஆசிரியப்பா
எல்லா அடிகளும் நாற்சீர் உடையனவாக அமைவது.

(எ.கா)
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி;
யாரஃ தறிந்திசி னோரே? சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே

• இணைக்குறள் ஆசிரியப்பா
முதலடியும் ஈற்றடியும் அளவடியாக அமைய இடையில் அளவடி, சிந்தடி, குறளடி ஆகியன விரவி வருமாறு அமைவது.

(எ.கா)
நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சாரல் நாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாதே
• அடிமறி மண்டில ஆசிரியப்பா
நிலைமண்டில ஆசிரியப்பாவில் எந்த அடியை எங்கு மாற்றி அமைப்பினும் பொருளும் ஓசையும் மாறாதிருப்பது.

(எ.கா)
மாறாக் காதலர் மலைமறந் தனரே
யாறாக் கட்பனி வரலா னாவே
ஏறா மென்தோள் வளைநெகி ழும்மே
கூறாய் தோழியான் வாழு மாறே
இதன் அடிகளை இடம் பெயர்த்து மேலும் 15 வகைகளில் அமைக்கவியலும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 2:39 pm

கலிப்பா

கலிப்பாவின் இலக்கணத்தையும் கலிப்பா வகைகளையும் காண்போம்.

• கலிப்பா இலக்கணம்
• காய்ச்சீர் பயின்று வரும்; மாச்சீர், விளச்சீர், கூவிளங்கனி, கருவிளங்கனி ஆகியன வருதல் கூடாது.

• கலித்தளை பயின்று வரும்; பிற தளைகளும் வரலாம்.

• அளவடியுடையதாக அமையும்.

• துள்ளலோசை உடையது.

• தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறு உறுப்புகளுள் ஏற்பனவற்றைக் கொண்டு நடக்கும்.
• கலிப்பா உறுப்புகள்
• தரவு: கலிப்பாவின் முதல் உறுப்பு; எருத்து எனவும் கூறப்பெறும்.

• தாழிசை: கலிப்பாவின் இரண்டாம் உறுப்பு; தரவைவிடக் குறைந்த இசையும் ஓசையும் உடையது. தரவைக்காட்டிலும் அடியளவில் குறைந்தது; இடைநிலைப்பாட்டு எனவும் பெறும். மூன்றடுக்கி வருதல் மிகுதி (அதாவது, ஒரே கருத்தை மூன்று முறை, வெவ்வேறு உவமைகளுடன் கூறுதல்).

• அராகம்: இசைத்தன்மையுடையது.

• அம்போதரங்கம்: கடலலைபோல் சுருங்கி வருவது;

• தனிச்சொல் : பொருள் தொடர்புடையதாய், ஓர் அசை (அ) சீர் தனித்து வருவது.

• சுரிதகம்: பாட்டினை முடிக்கும் உறுப்பு. வெண்பாச் சுரிதகம், ஆசிரியச் சுரிதகம் என இது இருவகைப்படும்.
• கலிப்பா வகைகள்
கலிப்பா நால்வகைப்படும். அவை:
தரவு, மூன்றடுக்கிய தாழிசை, தனிச்சொல், சுரிதகம் ஆகியன கொண்டது நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும்.
தாழிசையை அடுத்து அம்போதரங்கம் அமைவது அம்போதரங்கக் கலிப்பாவாகும்.
தாழிசையை அடுத்தும் அம்போதரங்கத்திற்கு முன்புமாக அராகம் அமைவது வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா எனப்பெறும்.

• ஒத்தாழிசைக் கலிப்பா
(எ.கா) (தரவு)
வாணெடுங்கண் பனிகூர வண்ணம்வே றாய்த்திரிந்து
தோணெடுந்தன் தகைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாய்ப்
பூணொடுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ?
(தாழிசை)
சூருடைய நெடுங்கடங்கள் சொலற்கரிய என்பவால்
பீருடைய நலந்தொலையப் பிரிவாரோ பெரியவரே? (1)

சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய என்பவால்
நாணுடைய நலந்தொலைய நடப்பாரோ நலமிலரே? (2)

சிலம்படைந்த வெங்கானம் செலற்கரிய என்பவால்
புலம்படைந்த நலந்தொலையப் போவாரோ பொருளிலரே? (3)
(தனிச்சொல்)
எனவாங்கு
(சுரிதகம்)
அருளெனும் இலராய்ப் பொருள்வயிற் பிரிவோர்
பன்னெடுங் காலம் வாழியர்
பொன்னெடுந் தேரொடு தானையிற் பொலிந்தே!
- இப்பாடல் ஆசிரியச் சுரிதகத்தால் இயன்ற நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவாகும். பிறவகைக் கலிப்பாக்களை இலக்கியங்களைப் பயின்று சுவைக்கலாம்.

• வெண்கலிப்பா
தரவு மட்டுமே பெறும்; அளவடிகளால் அமையும்; சிற்றெல்லை நான்கடிகள்; பேரெல்லைக்கு எல்லையில்லை; ஈற்றடி சிந்தடியாக வரும். கலித்தளை பயின்று வரும். வெண்சீர் வெண்டளையும் இடையிடையே வரும்.

(எ.கா)
முழங்குகுரல் முரசியம்ப முத்திலங்கு நெடுங்குடைக்கீழ்
பொழிந்தமதக் கருஞ்சுவட்டுப் பொறிமுகத்த களிறூர்ந்து
பெருநிலம் பொதுநீக்கிப் பெயராத பெருமையாற்
பொருகழற்கால் வயவேந்தர் போற்றிசைப்ப வீற்றிருப்பார்
மருள்சேர்ந்த நெறிநீக்கி வாய்மைசால் குணம்தாங்கி
அருள்சேர்ந்த அறம்புரிந்தார் அமர்ந்து

• கொச்சகக்கலிப்பா
கலிப்பா உறுப்புகள் முறைமாறியும், கூடியும் குறைந்தும் வருவது. உறுப்புகளுக்கேற்பத் தரவு, தரவிணை, சிஃறாழிசை, பஃறாழிசை, மயங்கிசை எனப் பெயர்பெறும் பல வகைகளையுடையது.
தரவு கொச்சகக் கலிப்பா குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் நான்கடியாலும், சிறுபான்மை ஐந்தடி (அ) எட்டடியாலும் இது அமையும்.

(எ.கா)
கற்பகத்தின் பூங்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேனென் றதிசயித்தார்

• கட்டளைக் கலிப்பா
மா விளம் விளம் விளம் என்னும் வாய்பாட்டில் ஒவ்வோர் அரையடியும் அமையும்; நான்கடிகளையுடையது; நேரசையில் தொடங்குவது பதினோரெழுத்தும், நிரையசையில் தொடங்குவது பன்னீரெழுத்தும் பெறும்; அரையடிகள் கொண்டு விளங்கும்; ஏகாரத்தின் முடியும்.

(எ.கா)
அன்னை எத்தனை எத்தனை அன்னையோ!
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ!
பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ!
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ!
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ!
மூட னாயடி யேனும றிந்திலன்!
இன்னும் எத்தனை எத்தனை சன்மமோ!
என்செய் வேன்கச்சி ஏகம்ப நாதனே!
- இதில் விளச்சீருக்குப் பதில் மாங்காய்ச்சீர் வந்தமைந்தது; எழுத்து எண்ணிக்கை மாறவில்லை.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 2:39 pm

வஞ்சிப்பா

வஞ்சிப்பாவின் இலக்கணத்தையும் வகைகளையும் காண்போம்.
• வஞ்சிப்பா இலக்கணம்
• கனிச்சீர் பயின்று வரும்; பிற சீர்களும் வரும்; சிறுபான்மை நாலசைச் சீர்களும் வருவதுண்டு.

• வஞ்சித்தளை பயின்று வரும்; பிற தளைகளும் வரலாம்.

• குறளடியாலோ, சிந்தடியாலோ அமையும்; அளவடியும் வருவதுண்டு.

• தூங்கலோசை உடையது.

• தனிச்சொல் பெற்று வரும்.

• ஆசிரியச் சுரிதகம் கொண்டு முடிவதாக அமையும்.

• சிற்றெல்லை மூன்றடி; பேரெல்லைக்கு வரையறையில்லை.
• வஞ்சிப்பா வகைகள்
வஞ்சிப்பா இருவகைப்படும். அவையாவன:

• குறளடி வஞ்சிப்பா
குறளடிகளால் ஆனது.

(எ.கா)
வளவயலிடைக் களவயின்மகிழ்
வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்
மனைச்சிலம்பிய மணமுரசொலி
வயற்கம்பலைக் கயலார்ப்பவும்
நாளும்
மகிழும் மகிழ்தூங் கூரன்
புகழ்த லானாப் பெருவண் மையனே

• சிந்தடி வஞ்சிப்பா
சிந்தடிகளால் அமைவது.

(எ.கா)
துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி
எயில்நடுவண் இனிதிருந் தெல்லார்க்கும்
பயில்படுவினை பத்தியலாற் செப்பியோன்
புணையெனத்
திருவுறு திருந்தடி திசைதொழ
வெருவுறு நாற்கதி வீடுநனி எளிதே
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 2:40 pm

3.2.5 மருட்பா

மருள் - மயக்கம்; கலத்தல். வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து அமைவது இது. வெண்பாவும் ஆசிரியப்பாவும் சமமாக அமையின் சமநிலை மருட்பா எனப்படும். வெண்பாவைவிட ஆசிரியப்பாவின் அடிகள் மிகுந்திருப்பின் ‘வியனிலை மருட்பா’ எனப்படும்.
• மருட்பாப் பொருண்மைகள்
• புறநிலை வாழ்த்து
‘வழிபடு தெய்வம் நின்னைக் காப்பதாக; நீ நீடு வாழ்க’ என்பது.

(எ.கா)
அரசியல் கோடா தரனடியார்ப் பேணும்
முரசியல் தானைவேல் மன்னர் - பரசோன்
கழலிணை பொதுவில் காப்பாக
வழிவழி சிறந்து வாழியர் பெரிதே
(பரசு - மழுப்படை; சிவனுக்குரியது)

• கைக்கிளை
ஒருமருங்கு பற்றிய காமம்.

(எ.கா)
பருந்தளிக்கு முத்தலைவேல் பண்ணவற்கே அன்றி
விருந்தளிக்கும் விண்ணோர் பிறர்க்கும் - திருந்த
வலனுயர் சிறப்பின் மன்ற வாணனக்
குலமுனி புதல்வனுக் கீந்த
அலைகட லாகுமிவ் வாயிழை நோக்கே
(இது வியனிலை மருட்பாவாகும்).
• வாயுறை வாழ்த்து
‘இன்று வெறுப்பளிப்பினும் பின்னர் நன்மைதரும்’ என்று உண்மைப் பொருளை வற்புறுத்தி வாழ்த்துவது.

(எ.கா)
வம்மின் நமரங்காள் மன்னுடையான் வார்கழல்கண்
டுய்ம்மின் உறுதி பிறிதில்லை - மெய்ம்மொழிமற்
றென்மொழி பிழையா தாகும்
பின்வழி நுமக்குப் பெரும்பயன் தருமே

• செவியறிவுறூஉ
பெரியோர் அறிவுறுத்துவது

(எ.கா)
வாழ்த்துமின் தில்லை நினைமின் மணிமன்றம்
தாழ்த்துமின் சென்னி தலைவற்கு - வீழ்த்த
புறநெறி யாற்றா தறநெறி போற்றி
நெறிநின் றொழுகுதிர் மன்ற
துறையறி மாந்தர்க்குச் சூழ்கடன் இதுவே

(இதுவும் வியனிலை மருட்பாவாகும்).
இவ்வாறு பா வகைகள் அமைகின்றன.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:06 pm

மரபுக் கவிதையும் புதுக்கவிதையும் நன்றி இணையம்

கவிதை வடிவம்

ஒரு கவிதையைப் பார்த்த அளவில் மரபுக்கவிதையா, புதுக்கவிதையா எனக் கண்டுணரும் அளவிற்கு வடிவப் பாகுபாடுகள் இவற்றிற்கிடையே உள்ளன. படிக்கும் வகையிலும் இவற்றை வேறுபடுத்தி உணரலாம். வரிவடிவம், ஒலிவடிவம் என்னும் இருவகைகளிலும் இவ்வாறு இவை வேறுபடுவதனை அடி, அடி எண்ணிக்கை, யாப்பு, தொடைநயம், சொற்கள், தனித்தன்மை, நெடுங்கதை என்னும் உள்தலைப்புகள் கொண்டு இங்குக் காண்போம்.
5.2.1 அடி
கவிதைக்கு வடிவம் தர யாப்புப் பயன்படுகிறது. யாப்பு அடிகளைக் கொண்டு அமைகிறது. அடிகள் அமைந்துள்ள நிலையைக் காண்போம்.
• மரபுக்கவிதை
குறில், நெடில், ஒற்று என்பவற்றின் அடிப்படையில் நேரசை, நிரையசைகளும், அவ்வசைகளின் அடிப்படையில் ஓரசைச் சீர், ஈரசைச் சீர், மூவசைச் சீர், நாலசைச் சீர் என்பனவும் இவற்றின் அடிப்படையில் அடிகளும் அமைகின்றன.
இரண்டு சீர்களையுடையது குறளடி; 3 சீர்கள் கொண்டது சிந்தடி; 4 சீர்கள் உடையது நேரடி அல்லது அளவடி; 5 சீர்கள் அமைந்தது நெடிலடி; 6 சீர் முதலானவற்றை உடையது கழிநெடிலடி எனப்படுகின்றது. 6 முதல் 8 சீர் உடையன சிறப்புடையன; 9 மற்றும் 10 சீர் உடையன நடுத்தரச் சிறப்புடையன; 10க்கு மேற்பட்ட சீர் உடையன அவ்வளவாகச் சிறப்பற்றன.
ஓர் அசையோ, ஒரு சீரோ ஓரடியில் தனித்து இடம் பெறுவதில்லை. கூன் என்னும் தனிச்சொல் கலிப்பா, வஞ்சிப்பாக்களில் உறுப்பாக இடம்பெறுவதாகும். இது சிறுபான்மையினது.
(1) குறளடி - ‘அறம்செய விரும்பு’
(2) சிந்தடி - ‘நிற்க அதற்குத் தக’
(3) அளவடி - ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’
(4) நெடிலடி - ‘நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை’
5) கழிநெடிலடி - ‘நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ
இதற்கு நாயகமே!’
விருத்தம் போன்றவற்றில் ஒரு பாடலில் இடம்பெறும் அடிகள், எதுகையைக் கொண்டு அடையாளம் காணப்படுவது வழக்கம். இவ்வெதுகை அடியெதுகையாகும்.

• புதுக்கவிதை
அடி என்பது புதுக்கவிதையில் வரி எனப்படும். சீர்கள், சொற்கள்என்றே குறிக்கப்பெறும். ஒரு வரியில் பெரும்பாலும் நான்குக்கு மேற்பட்ட சொற்கள் இடம்பெறுவதில்லை. மற்றபடி, எதுகை, அசை, சீர், தளை ஆகியன தொடர்பான வரையறைகள் ஏதுமில்லை.
உன்
விழிகளின் வாசிப்பில்
என்
பேனா எழுத
அவதிப்படுகின்றது (ஈரநிழல்)
என்னும் கவிதையில் பல்வேறு நிலைகளையும் காண்கிறோம்.
புதுக்கவிதையைப் பொறுத்தவரை, வரிகளில் அமையும் சொல்லமைப்பைப் பொருள்தான் தீர்மானிக்கின்றது.
அவள்
மாமியார் வீட்டுக்குப்
போனாள்
அவள் மாமியார்
வீட்டுக்குப் போனாள்
இவை இரண்டிலும் ஒரே விதமான சொற்கள் இடம் பெற்றிருப்பினும், அவை அடுத்தடுத்த வரிகளில் அமையும் நிலை கொண்டு வெவ்வேறு பொருள் தரக் காணலாம்.


கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:08 pm

ஒலிநயம்

யாப்பு அமைப்பு ஒழுங்காக அமைவதிலேயே ஒரு வகையான ஓசை அமைப்பு உருவாகிச் செவிக்கு இன்பமூட்டுவதை உணரலாம். அது எவ்வாறு அமைகிறது என்பதைக் காண்போம்.
• மரபுக் கவிதை
மரபுக்கவிதை இலக்கணத்திற்குக் கட்டுப்பட்டது. சொற்களை ஓசை ஒழுங்கில் வைத்துக் கட்டுவதையே யாப்பு என்கிறோம். எனவே யாப்பில் தாளம், ஒலி நயம், ஓசை நயம் என்று குறிப்பிடப்படும் இசைத் தன்மை மிக எளிதில் கிட்டி விடுகின்றது. சொற்களின் வல்லோசை, மெல்லோசைகளைக் கவிஞன் அடுக்குவதன் மூலம் சந்தமும் ஒலிநயமும் கைவருகின்றன.
‘இலக்கணக் கட்டுக்கோப்பு சொற்களின் அர்த்தத்தை ஆழப்படுத்துகிறது; சொற்களின் ஒலிநயத்தைச் சிறப்பாக வெளிக்கொணர்கிறது’ என்கிறார் தொ.மு.சி.ரகுநாதன். அதே வேளையில் ‘ஒலிநயத்துக்கு மிகையான அழுத்தம் கொடுத்துத் தம் படைப்பின் தரத்தைக் குறைத்துக் கொள்ளவும் கூடாது’ என்கிறார் கைலாசபதி.
ஒவ்வொரு பாவகைக்கும் குறிப்பிட்ட ஓசை நயம் இருக்கிறது.
(1) வெண்பா - செப்பலோசை
(2) ஆசிரியப்பா - அகவலோசை
(3) கலிப்பா - துள்ளலோசை
(4) வஞ்சிப்பா - தூங்கலோசை
இவ்வொவ்வொன்றும் ஏந்திசை, தூங்கிசை, ஒழுகிசை என மும்மூன்று வகைகள் உடையன. தளைகளைக் கொண்டு நால்வகை ஓசைகளும், தளைகளின் வருகைமுறை கொண்டு ஏந்திசை முதலிய உட்பிரிவுகளும் உணர்த்தப்படுகின்றன.
தாழிசை, துறை, விருத்தம் என்னும் பா வகைகளில் சீர்களின் வருகை முறையால் வாய்பாடுகள் அமைக்கப்பட்டு, அவற்றின் பல்வேறு வகைப்பாடுகளால் பற்பல ஒலிநயங்களில் பாடல்கள் அமைகின்றன.
கவிஞன் தன் பொருளுக்கு ஒத்திசைகின்ற பா மற்றும் பா வகைகளைப் பயன்படுத்துவதன் மூலம் விரும்புகின்ற ஒலிநயத்தைப் பெறமுடியும். பயிற்சியின் மூலம் ஓரளவு எளிதிலேயே இது கைவந்து விடுகின்றது.
ஆசில்பர தாரமவை அஞ்சிறைய டைப்பேம்
மாசில்புகழ்க் காதலுறு வேம்வளமை கூறப்
பேசுவது மானமிடை பேணுவது காமம்
கூசுவது மானுடரை நன்றுநம கொற்றம் (கம்ப ராமாயணம்)
என்பதில் கும்பகருணன், இராவணனிடம் அறவுரை கூறுமுகமாக அமையும் கருத்துகளை, ஒலிநயம் மெருகூட்டக் காணலாம்.
ஒலிநயமே, பாடலுள் இடம்பெறும் நகை முதலான எண்வகை மெய்ப்பாடுகளை வெளிப்படுத்துவதில் பேரிடம் பெறுகின்றது.

• புதுக்கவிதை
‘மென்மையான ஒலிநயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது புதுக்கவிதை முயற்சி’ என்கிறார் சி.சு.செல்லப்பா. இந்த மென்மையைச் ‘சவுக்கைத் தோப்பின்வழியே காற்று பாய்ந்து சென்ற பிறகு தோன்றும் ஓயும்ஒலி’ என்கிறார் ந.பிச்சமூர்த்தி. ‘கடல் அலையிலும் கால்நடையிலும் ஒருவகை ஒலிநயம் உள்ளதே, அதேபோல் புதுக்கவிதையிலும் ஒருவகை ஒலிநயம் இசைந்து வரும்’ என்பார் மீரா.
செய்யுளில் கிடைப்பதுபோல் எதிர்பார்க்கும் நிறுத்தங்களில் தோன்றாமல், இயல்பாகவே தோன்றி நிறுத்தங்களை நிர்ணயிக்கும் உள்ளடங்கிய ஒலிநயம், புதுக்கவிதையில் இடம்பெறுகின்றது.
எந்தெந்த இடங்களில் தாளலயம் வருகிறது என்பது வாசகனுக்கு முன்கூட்டியே மரபுக்கவிதையில் தெரிந்து விடுகின்றது. அதனால் செய்யுளின் ஓசை எந்திர கதி போன்ற செயற்கைத் தன்மையை அடைந்து விடுகிறது. இது கடிகார ஓசை போன்றது. புதுக்கவிதையில், காற்றைப் போல், தென்றலைப்போல் இயல்பானதாக இருக்க வேண்டும். கவிதையின் அர்த்தத்திற்கு இசைவானதாக இருக்க வேண்டும் எனப் புதுக்கவிதைத் திறனாய்வாளர்கள் சுட்டுகின்றனர்.
அணில் கடித்த பழமா?
ஆங், எனக்கும்
கொஞ்சம்
தாலியறுத்த விதவையா?
அய்யோ. . .
எச்சில் !
என்னும் கவிதையில் அமையும் ஒலிநயம், பாடுபொருளுக்கு மேலும் வலுச்சேர்க்கக் காண்கிறோம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:08 pm

தொடைநயம்

அடிகளை எவ்வாறு இணைப்பது (தொடுப்பது) என்பதையே தொடை என்கிறோம். அத்தொடை காலத்துக்கேற்றவாறு மாறி வருகிறது.
• மரபுக்கவிதை
தொடுக்கப்படுவது தொடை, மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்பனவும், அந்தாதி, இரட்டை, செந்தொடை என்பனவும் மரபுக்கவிதையில் தொடைநயங்களாகச் சிறப்பிடம் பெறுகின்றன.
அடுத்தடுத்த அடிகளில் எதுகையும், ஓரடியின் முதல் மற்றும் மூன்றாம் சீர்களில் மோனையும், சொல் அல்லது பொருளில் முரணும், அடிகளின் இறுதிச் சீர்களில் இயைபும் தேவைப்படுமிடத்து அளபெடையும் மரபுக்கவிதைகளில் இடம்பெறக் காண்கிறோம். மனனத்திற்கேற்றவாறு முதல் பாடலின் இறுதி அடுத்த பாடலின் தொடக்கமாக அமைவது அந்தாதியாகும் (மனனம் = மனப்பாடம் செய்தல்). செந்தொடை என்பது, எதுகை போன்ற எத்தொடைகளும் அமையாமல், பொருளால் கவிதை சிறந்து நிற்பதென்பர்.
கல்வியில் லாத பெண்கள்
களர்நிலம் ; அந்நி லத்தில்
புல்விளைந் திடலாம் ; நல்ல
புதல்வர்கள் விளைத லில்லை ;
கல்வியை உடைய பெண்கள்
திருந்திய கழனி ; அங்கே
நல்லறி வுடைய மக்கள்
விளைவது நவில வோநான்? (பாரதிதாசன்)
என வரும் பாடலில் எதுகை, மோனை, முரண் என்னும் தொடைநயங்கள் சிறக்கக் காண்கிறோம்.

• புதுக்கவிதை
எதுகையும் மோனையும் அமைந்தேயாக வேண்டும் என்னும் அவசியம் புதுக்கவிதையில் இல்லை. பொருளுக்கு இசைந்த ஒலிநயத்தையும் சொற்களையும் கவிஞர்கள், தாம் விரும்பிய வண்ணம் அமைக்கும் சுதந்திரம் வசனத்தில் அமைந்து கிடக்கிறது. கட்டுப்பாடு இல்லாமல் கட்டுக்கோப்பை உருவாக்கும் வாய்ப்பு வசனத்தில் எழுதும்போது கிடைக்கிறது. எனவே பொருளம்சத்தை ஓசைக்காகத் தியாகம் செய்ய வேண்டிய அவசியமில்லை. எனவே, சொற்களின் கட்டமைப்பைப் புதுக்கவிதையில் எழுதும்போது கவிஞன் விரும்பிய வகையில் அமைத்துக்கொள்ள முடிகின்றது.
எதுகை, மோனைகளெல்லாம் புதுக்கவிதையில் வரவே கூடாது என்றெல்லாம் விதி ஏதும் இல்லை. அவை வற்புறுத்தித் திணிக்கப்பட்டனவாக இல்லாமல், இயல்பாக இருத்தல் வேண்டும்.
புலமையற்ற தருமிக்குப்
பொற்கிழி
தலைநிமிர்ந்த நக்கீரருக்குத்
தண்டனை
கடவுள்கள் கூட
நியாயத்திற்குப்
புறம்பாகவே
என்னும் கவிதையில் எதுகை, மோனை, முரண் தொடைகள் அமைந்திருக்கக் காண்கிறோம்.
எனக்கு
முகம் இல்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை
அவர்களின் பார்வையில் (அ.சங்கர்)
என்னும் கவிதையில் இயைபுத் தொடை அமையக் காணலாம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:09 pm

சொற்கள்

கவிதையில் இடம்பெறும் சொற்களை நான்கு வகைகளாகத் தொல்காப்பியர் பிரித்தார். இன்றுவரை அந்த வகையிலேயே சொற்கள் கவிதையில் அமைகின்றன.

• மரபுக்கவிதை
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகிய நான்கும் செய்யுளில் இடம்பெறலாம் என்கிறது தொல்காப்பியம். இவை செய்யுள் ஈட்டச் சொற்கள் என்று குறிக்கப்பெறுகின்றன.
(1) இயற்சொல் - பாமரர்க்கும் புரிவது
(2) திரிசொல் - படித்தவர்க்கே புரிவது
(3) திசைச்சொல் - வட்டார வழக்குச் சொல், பிறமொழிச் சொற்கள்
(4) வடசொல் - சமஸ்கிருதச் சொற்கள்
இவற்றின் விகிதம் வேண்டுமானால் வேறுபடலாம்.
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள் ளேசில மூடர்-நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார். (பாரதியார்)
என்பதில் பல வகைச் சொற்களும் இடம்பெறக் காணலாம். (பெண்ணுக்கு - இயற்சொல், பேணி - திரிசொல், ஞானம் - வடசொல்)

• புதுக்கவிதை
புதுக்கவிதையில் இயற்சொல், வடசொல், திசைச்சொல், ஆங்கிலச்சொல், பேச்சு வழக்குச் சொல் (அவற்றுள் கொச்சைச் சொல்லும்கூட) ஆகியன இடம்பெறுகின்றன.
விழிகள்
நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்கள் என்னவோ
ஜன்னல் கம்பிகளோடு தான்
என்பதில் திசைச்சொல்லும் (ஜன்னல்)
எம்ப்ளாய்மெண்ட்
எக்சேஞ்சுக்குப்
புறப்பட்டுப் போன
மகனிடம் கேட்டுக் கொண்டார்
தந்தை
என்னுடையதையும்
ரெனிவல் செய்துகொண்டு
வந்துவிடப்பா (அறிவுமதி)
என்பதில் ஆங்கிலச் சொற்களும்,
அழுவதும்கூட
ஆரோக்கியமான
விஷயம்தான்...
சில நேரங்களில் (அறிவுமதி)
என்பதில் வடசொல்லும்,
வில்லை ஒடித்து மணக்க
இராமன் வராவிட்டாலும்
பரவாயில்லை
தூக்கிச் செல்ல
இராவணனாவது வரமாட்டானா (பி.எல்.ராஜேந்திரன்)
என்னும் கவிதையில் வழக்குச் சொற்களும் இடம்பெறக் காண்கிறோம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:10 pm

நாட்டுப்புறப் பாங்கு

கவிஞனின் கருத்தும் அதனை வெளிப்படுத்தும் அழகும் இணைந்து கவிதையாகின்றன. எளிய மக்களும் இயல்பான போக்கிலேயே கருத்தையும் கற்பனையையும் அழகாக வெளிப்படுத்துகிறார்கள். அந்த மொழியையும் ஒலியையும் கவிஞர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதுவே கவிதையின்
அடிநாதமாக அமைகிறது.
• மரபுக்கவிதை
மரபுக்கவிதையின் தொடக்கமே, நாட்டுப்புறப் பாடல்கள்தாம் என்றும் கூறலாம். ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருதல் முதலான தாழிசைக் கூறுகள். நாட்டுப்புறச் சாயலுடையனவேயாகும். சிலப்பதிகாரம், திருவாசகம், குறவஞ்சி, பள்ளு போன்றவை நாட்டுப்புறத் தாக்கங்களைக் கொண்டிருக்கின்றன.
தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ !
பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்
விண்பால் யோகெய்தி வீடுவர்காண் சாழலோ !

எனவரும் திருவாசகம் - (திருச்சாழல் பாடல்) நாட்டுப்புறப்பாங்கினது ஆகும்.

• புதுக்கவிதை
நாட்டுப்புறப் பாடல்களே ஏட்டிலக்கியங்களின் தாய் ஆதலின், புதுக்கவிதையிலும் அவற்றின் போக்குச் சிறப்புற இடம்பெறக் காணலாம்.
காடெல்லாம் சுற்றிக்
காராம்பசு கொண்டுவந்தோம்
நாடெல்லாம் சுற்றி
நல்லபசு கொண்டு வந்தோம்
சீமைபல சுற்றிச்
சிவப்புப்பசு கொண்டு வந்தோம்
சிவப்புப்பசு உதைக்குமின்னு
சிலபேர்கள் சொன்னதனால்
பால்கறக்க எங்கவீட்டில்
பக்கத்தில் போகவில்லை
பக்கத்தில் போகாது
பாலெல்லாம் வீணாச்சு
என்னும் கவிதையில் பொதுவுடைமைத் தத்துவம் பயன்கொள்ளப் பெறாமை நாட்டுப்புறப் பாங்கில் சுட்டப் பெறுகின்றது.
ஆராரோ ஆராரோ
அப்பாநீ கண்ணுறங்கு
தார்ரோட்டில் காரோட்டும்
தமிழ்மணியே கண்ணுறங்கு !
நாடே பரிசளிப்பு - உனக்கு
நன்கொடையே மூலதனம்
பாடுபடத் தேவையில்லை - என்
பாண்டியனே கண்ணுறங்கு !
என்னும் பாடல் அரசியல்வாதிக்கான தாலாட்டாகப் பாடப்பட்டிருப்பதை அறிகிறோம்.
விடுகதை, பழமொழி போன்ற நாட்டுப்புறக் கூறுகள் அடிப்படையில் அமையும் கவிதைகளையும் காணமுடிகின்றது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:10 pm

உள்ளடக்கம்

‘கலை கலைக்காகவே’ என இன்புறுத்தல் மட்டுமே அதன் பயன் என்பவர்களும் உண்டு. ஆனால், இன்பம் என்பது கவிதையின் ஒரு பயனாக இருக்கலாமேயன்றி அதுவே இலக்கியமாகாது; "கலை வாழ்க்கைக்காகவே" என்னும் கருத்தே பெரும்பாலோர் முடிவாகும்.
சமுதாய வாழ்வைச் சித்திரிப்பதும், சமுதாய மேன்மைக்கு வழிகோலுவதும், வழிகாட்டுவதும் இலக்கியத்தின் இயல்புகள் ஆகும்.
இருவகைக் கவிதைகளும் பல்வேறு பாடுபொருள்களை உடையனவாய் உள்ளன. அவற்றுள் மனிதநேயம், மொழிப்பற்று, நாட்டுப்பற்று, பெண்ணியம், பொதுவுடைமை, அரசியல், வறுமை, காதல், தன்னம்பிக்கை, இயற்கை ஆகிய பாடுபொருள்கள் குறித்து இங்குத் தனித்தனியே காண்போம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:11 pm


மனிதநேயம்


மரபுக்கவிதை

மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவுதலும், துயர்கண்டு வருந்தித் தீர்க்க முற்படுதலும் இடையூறு செய்யாதிருத்தலும் மனிதநேயம் ஆகும்.
வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் ; பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா(து) அயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் ;
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேருறக் கண்டுளம் துடித்தேன் ;
ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்(சு)
இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்
எனவரும் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா, மனிதநேயத்தையும் ஆன்மநேயத்தையும் தெள்ளிதின் உணர்த்துவதாக உள்ளது.

புதுக்கவிதை

அண்டை மாநிலம், அண்டை நாடுகள் என அடுத்தடுத்து இருப்பனகூட எல்லைக்கோடு, மண்ணுரிமை முதலான பல்வேறு காரணங்களாலும், தீவிரவாதங்களாலும், நாளும் நவீன ஆயுதம் கொண்டு போரிடும் இக்காலத்திற்கு மனிதநேயம் மிகமிகத் தேவையாகும்.
போர்களை நிறுத்து
புன்னகையை உடுத்து
பூமியை நேசி
பூக்களை ரசி
மனிதரை மதி
மண்ணைத் துதி
இன்றாவது
என வரும் வைரமுத்துவின் கவிதை மனிதநேயத்தை எடுத்துரைக்கின்றது. ‘சிக்கலும் சிடுக்கும் புதுக்கவிதையின் ஜீவாதாரம்’ என்னும் க.நா.சுப்பிரமணியத்தின் கருத்திற்கேற்றது இது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:12 pm

மொழிபற்று

மரபுக்கவிதை

பல்வேறு வாழ்வியல் தேவைகளுக்காகப் பிறமொழிகளைக் கற்க வேண்டிய தேவை இருப்பது உண்மை. அதே நேரத்தில் தாய்மொழியை நேசித்தலும், அதில் பயிற்சி பெறுதலும் மிகவும் வேண்டிய பண்புகளாகும். தாய்மொழியை அலட்சியப்படுத்துதல், தாய்மொழியில் பேசுதல் குறைவென்று தாழ்வு மனப்பான்மை கொள்ளுதல் போன்றன இருத்தல் கூடாது.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம் ;
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ சொல்வீர் !
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்
(பான்மை = இயல்பு; நாமம் = பெயர்; தேமதுரம் = தேன்போல் இனிமை)
எனப் பாரதியார் பாடுவது உளங்கொளத்தக்கது.

புதுக்கவிதை

அயல்மொழி மோகத்தில் இன்று நிலைதடுமாறும் தமிழர்நிலை அதிகரித்துள்ளது. கவிஞர் காசி ஆனந்தனின்,
தமிழே ! உயிரே ! வணக்கம் !
தாய்பிள்ளை உறவம்மா
உனக்கும் எனக்கும் !
அமிழ்தே ! நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில்
கசக்கும் ! புளிக்கும் !
எனவரும் கவிதை, மொழிப்பற்றுக்குத் தக்கதொரு சான்றாகும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:12 pm

நாட்டுப்பற்று

மரபுக்கவிதை

தாய்நாடு, தாய்க்குச் சமமானது.
பெற்ற தாயும் பிறந்தபொன் னாடும்
நற்றவ வானினும் நனிசிறந் தனவே
என்பார் பாரதியார். நாட்டு விடுதலைக்காகத் தம் உடல், பொருள், ஆவி ஆகியவற்றைத் தியாகம் செய்த நாட்டுப்பற்றாளர்கள் பற்பலர்.
எந்தையும் தாயும் மகிழ்ந்துகு லாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம்வ ளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதில்இ ருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ
(குலாவி = சேர்ந்து; வந்தனை = வணக்கம்)
என்னும் பாரதியாரின் பாடல் நாட்டு வணக்கமாகத் திகழ்ந்து வீறுணர்வு அளிக்கின்றது.

புதுக்கவிதை

நாட்டுக்கு வணக்கம் செலுத்துவது ஒரு வகை என்றால், நாட்டுமக்களின் பிரச்சனைகளை எண்ணிப் பார்ப்பது மற்றொரு வகை எனலாம். இசைஎன்னும் தலைப்பில் மேத்தா எழுதியுள்ள புதுக்கவிதை அவ்வகையானது. அது வருமாறு :
ஜனகணமன பாடலை
நான் நேசிக்கிறேன்
எப்போது இதை
இன்னும் அதிகமாய்
நேசிப்பேன் தெரியுமா?
எப்போது
இந்தியா
தன் பிரச்சினைத்
துயரங்களுக்கெல்லாம்
‘ஜனகணமன’ பாடுகிறதோ
அப்போதுதான் இதை
அதிகமாய் நேசிப்பேன்
‘ஜனகணமன’ பாடுதலாவது பிரச்சினைகளை முடித்து வைத்தல் - முடிவில் பாடுதல் என்னும் பொருளில் இங்குக் கையாளப்படுகின்றது. நாட்டு வளத்தைப் போலவே, நாட்டுமக்களின் வாழ்வும் இன்றியமையாதது அல்லவா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum