தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by ஜேக் Mon Jul 29, 2013 9:54 pm

First topic message reminder :

கவிதை எழுதுவது எப்படி?

கவிதைகள் எத்தனை வகை உண்டு?

கவிதை எழுத தகுதி வேண்டுமா?

ஹைக்கூ - என்பதின் விளக்கம் என்ன?
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down


கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:38 pm

ஹைக்கூ பற்றி மேலும்... நன்றி - இராஜ.தியாகராஜன்

துளிப்பாக்களைப் பற்றிய விவரங்களைக் கண்டேன். முகநூலின் நான்கு கட்டுரைகளாக நான் எழுதிப் பகிர்ந்து கொண்ட குறிப்புகளை இங்கே பகிர்கிறேன்.
முன்னர் ஒரு முறை துளிப்பாக்களின் இலக்கண அமைப்பினைப் பற்றியொரு குறிப்பினை எழுத்தி இருந்தேன். அதன் பின்னர், பாவலர் திரு கரிசலார் அவர்களுடன், ஒருமுறை துளிப்பாக்கள், இயைதுளிப்பாக்கள், நகைதுளிப்பாக்கள், அவற்றின் அமைப்புகள், படிம உத்திகள் இவற்றை சில எடுத்துக் காட்டுகளுடன் மடலாடல்கள் செய்திருந்தேன்.
இவற்றை பல புத்தகங்களில் இருந்தும், இணையத்தில் சென்னை பல்கலை கழக பாடங்களில் இருந்தும் நான் அறிந்தேன். ஆனால் நான் அதிகம் இவ்வகைப் பாக்களை ஏனோ இயற்ற முற்படவில்லை! இதில் வரும் விவரங்கள் எல்லாமே நான் படித்து அறிந்தவையே! சென்னை பல்கலைக் கழக பாடத்திட்டத்திற்கு என் உளமார்ந்த நன்றி. துளிப்பாக்கள் வகையிலான கவிதை இயற்ற வேண்டும் என்று முனையும் அன்பர்களுக்கு இந்த கட்டுரை உதவும் என்று நம்புகிறேன்.
ஜப்பானிய இலக்கியத்தில் உருவான ஹைக்கூ, 5-7-5 என்ற அசையமைப்பு கொண்டு, ஜென்(Zen) குருமார் தத்துவத்தை பரப்புதற்கும், இயற்கையைப் போற்றுவதற்கும் பயன்பட்டது. இதுவல்லாது வேறு கருக்களைக் கொள்வது துளிப்பா ஆகாது என்பனர் பலர். தமிழிலக்கியத்தில் இவ்வடிவம் படிமம், குறியீடு, தொன்மம், முரண், அங்கதம், விடுகதை, பழமொழி, வினாவிடை, உவமை, உருவகம் எனப் பல்வேறு உத்திகளில் அமைக்கப்படுவதோடு, சமூக விமர்சனத்திற்கும் சமுதாயக் கேடுகளைச் சாடுதற்கும் தமிழ்த் துளிப்பா அன்பர்கள் கைக் கொள்கின்றனர் எனலாம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:39 pm

ஹைக்கூ என்கிற துளிப்பா-1

படிமம்:

துளிப்பாவில் பெரிதும் கையாளப் பெறுவது படிம உத்தியேயாகும். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐம்புல உணர்வுகளையும் அனுபவித்தவாறே வெளியிடுகின்ற உணர்ச்சி வெளிப்பாடே படிமம் எனப்படும். வருணனைத் திறன் மிக்கது இது.
(எ-கா):
1. கட்புலப் படிமம்

சாரல் அடிக்கிறது
ஜன்னலைச் சாத்தும்போது மரக்கிளையில்
நனைந்தபடி குருவி (பரிமள முத்து)

2. விளையாட்டுப் படிமம்
பம்பரம் சுற்ற
நல்ல கயிறு
எறும்பின் பாதை (மித்ரா)

3. அச்சு வடிவக் காட்சிப் படிமம்
அதிக சுமையா?
மெ. .ல் . . .ல நகரும்
நத்தை (மு.முருகேஷ்)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:40 pm

குறியீடு:

செறிவான கவிதை வடிவத்திற்குக் குறியீடுகள் பெரிதும் உதவுகின்றன. ‘ஒப்புறவாலும் ஒட்டுறவாலும் மற்றொன்றைக் குறிப்பாக உணர்த்தும் பொருள் (object), குறியீடு எனப்படுகிறது. ஒரு குறியீடு மற்றொன்றிற்குப் பதிலாக நிற்கலாம்; சுட்டிக் காட்டுவதோடு மட்டுமேகூட அமைந்து விடலாம். இயற்கை, சமயம், வாழ்க்கை என்பனவற்றைச் சுட்டுவனவாகவே அமைவதே பெரும்பான்மை எனலாம்.
(எ-கா):

1. இயற்கைக் குறியீடு
அந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல் (அமுதபாரதி)

2. சமயக் குறியீடு
இதயத்தில் இறுக்கம்
இதழ்களில் மௌனம் இங்கே
சிலுவையில் நான் (பரிமள முத்து)

3.வாழ்க்கைக் குறியீடு
உழுதுவந்த களைப்பில்
படுக்கும் மாடுகள்
காயம் தேடும் காக்கை (அறிவுமதி)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:40 pm

தொன்மம்:
புராண, இதிகாச நிகழ்வுகளை ஒட்டியோ, திரித்தோ, மறுத்தோ இக்கால நிலைக்கேற்ப குறியீடு ஆக்குதல் தொன்மப் படிமம் ஆகும்.
(எ-கா):
கல்லாகவே இருந்துவிடுகிறேன்
மிதித்து விடாதே
சுற்றிலும் இந்திரன்கள் (ராஜ.முருகுபாண்டியன்)
என்பது கௌதமரின் சாபத்தால் கல்லான அகலிகை இராமனின் கால்பட்டுச் சாபவிமோசனம் அடைந்து பெண்ணான நிகழ்வை அடியொற்றியது. பெண்ணாக இருப்பதினும் கல்லாக இருப்பதே பாதுகாப்பானது என்றால் இச்சமூகம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது என்பது இதன்வழிப் புலப்படுகின்றது.
(எ-கா):
ஆராய்ச்சிமணி அடித்த மாடுகள்
அரண்மனைத் தட்டில்
பிரியாணி (அவைநாயகன்)
என்னும் கவிதை, மனுநீதிச் சோழனிடம் முறையிட்ட கன்றை இழந்த பசுவின் கதறலையும், அக்கதறல் கேட்டுத் தன் மகனையே கொன்று முறைசெய்த மன்னனின் நீதிமுறையையும் கொண்டு அமைக்கப் பட்டது. நீதிமன்றங்கள், தக்க தீர்ப்பு வழங்காமல் குற்றவாளிக்கு ஆதரவாக இருப்பதையும், முறையிட வந்தவர்களையே தண்டிப்பதுமாகிய நிலையில் இருக்கும் நாட்டு நடப்பினைப் புலப்படுத்துகின்றது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:41 pm

முரண்:

மாறுபடத் தொடுப்பது முரண் எனப்படும். இது சொல் முரண், பொருள் முரண், சொற்பொருள் முரண் என வகைப்படுத்தப்படும்.

1. சொல் முரண்
தாழ்வு இல்லை
உயர்வே குறிக்கோள்
விலைவாசி (ல.டில்லிபாபு)
என்பதில் தாழ்வு x உயர்வு எனச் சொல் முரண் அமைந்தது.

2. பொருள் முரண்
அன்புடைமை அதிகாரத்தை
ஆசிரியர் கற்பிக்கிறார்
கையில் பிரம்புடன் (கழனியூரன்)
என்னும் கவிதையில் அன்புடைமைக்கு முரணாகத் தண்டனை எனும் பொருண்மை இணைத்துக் கூறப்படுகிறது.

3. சொற்பொருள் முரண்
மௌன ஊர்வலம்
முடிந்தது
கலவரத்தில் (பா.உதயகண்ணன்)
என்னும் கவிதையில், மௌனமும் கலவரமும் சொல்லாலும் பொருளாலும் முரண்படுகின்றன.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:41 pm

அங்கதம்:

சமூகக் கேடுகளை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நயம்பட எடுத்துரைத்துத் திருத்த முயல்வது அங்கதம் எனப்படும்.
(எ-கா):
எங்கள் மக்கள்
எப்போதும் நலமே தெருவுக்கு
நான்கு டாக்டர்கள் (பரிமள முத்து)
என்பதில் நலத்திற்குக் காரணம் நோய் வாராமை அன்று, நோய் நிலையாமையே எனக் கூறுவதாக அமைகின்றது.
(எ-கா):
நான்கு கால்களும்
பல கைகளுமாய்
அரசாங்க மேசைகள் (தங்கம் மூர்த்தி)
என்னும் கவிதை, கையூட்டு அரசு அலுவலகங்களில் அங்கிங்கெனாதபடி பரவி நிலை பெற்றிருப்பதைப் புலப்படுத்துகின்றது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:42 pm

பழமொழி:
பழமொழிகளை நயமுறக் கையாண்டு கருத்தை விளக்குதலும் உண்டு.
(எ-கா):
கந்தலானாலும் கசக்கிக்கட்டு
கசக்கினான்
கிழிந்து போனது (மலர்வண்ணன்)
என்னும் கவிதையில் தூய்மைக்குச் சொல்லப்பட்ட பழமொழியை, வறுமையைச் சித்திரிக்க எடுத்துக் கொண்டுள்ளார் கவிஞர்.
(எ-கா):
ஐந்தில் வளைப்பதற்கோ
பிஞ்சு முதுகில்
புத்தக மூட்டைகள் (பாட்டாளி)
என்பதில், ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமோ?’ எனப் பணிவுக்குக் கூறப்பட்ட பழமொழி இன்றைய கல்வி முறையை விமரிசிக்கக் கையாளப்பட்டுள்ளது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:42 pm

வினாவிடை:

கவிதை முழுவதும் வினாவாக அமைந்து, தலைப்பு அதற்குரிய விடையாக அமைவதுண்டு. மூன்றாம் அடியே விடையாவதும் உண்டு.
(எ-கா):
வெட்ட வெட்ட
வளரும் நீ என்ன
விரல் நகமா? (பரிமள முத்து)
என்னும் கவிதைக்குரிய பதிலாகிய கவலை இதற்கான தலைப்பாக அமைகிறது.
(எ-கா):
தாகம் தணிக்குமோ
கடல்நீர்
வெட்டிப்பேச்சு (செந்தமிழினியன்)
என்பதில், மூன்றாமடி தணிக்காது எனப்பதில் தருவதோடு, வெட்டிப் பேச்சும் அத்தகையதே என்பதை இணைத்துணர்த்துகின்றது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:42 pm

உவமை:

புதுப்புது உவமைகளைக் கையாளும் உத்தியையும் துளிப்பாவில் காண்கிறோம்.
(எ-கா):
கவிதைகள் எழுத
நல்ல தாள்
பனிப்புகை (மித்ரா)
என்பதில் பனிப்புகை வெண்தாளாக நிற உவமை ஆக்கப்பட்டுள்ளது.
(எ-கா):
நெருப்புதான் பெண்
அம்மாவிற்கு அடிவயிற்றில்
மாமியாருக்கு அடுப்படியில் (அறிவுமதி)
என்னும் கவிதையில், மணமாகும்வரை கவனித்து வளர்க்க வேண்டியிருப்பதால் தாய்க்கு அடி வயிற்றில் கட்டிய நெருப்பாகவும், சமையல் அறையிலேயே இருத்தப்படுவதாலும்,வரதட்சணைக் கொடுமை காரணமாகச் சமையலறை அடுப்பு வெடித்து அழிய நேர்வதாலும் மாமியாருக்கு அடுப்படி
நெருப்பாகவும் அமைகிறாள் பெண்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:43 pm

உருவகம்:

பொருளும் உவமையும் வெவ்வேறு அல்ல என்பது உருவகம்.
(எ-கா):
இடியின் திட்டு
மின்னலின் பிரம்படி
அழுதது வானக்குழந்தை (பல்லவன்)
என்பதில் இடி திட்டாகவும், மின்னல் பிரம்படியாகவும், மழை அழுகையாகவும், மேகம் தண்டிக்கப்படும் குழந்தையாகவும் உருவகப்படுத்தப் பட்டுள்ளன.
(எ-கா):
பள்ளிக்குப் போகாத சிறுமி
செல்லமாய்க் குட்டும்
ஆலங்கட்டி மழை (அறிவுமதி)
என்னும் கவிதையில் ஆலங்கட்டி மழை ஆசிரிய நிலையில் கருதப்பட்டுக் குட்டுவதாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:44 pm

சென்ரியூ

கவிஞர் ஈரோடு தமிழன்பனின் “ஒரு வண்டி சென்றியூ” என்ற நூலிலிருந்து சென்றியூ எனப்படும் நகைதுளிப்பாக்களுக்கான எடுத்துக் காட்டுகள் கீழே:- (நன்றி: சென்னை பல்கலைக் கழக பாடங்கள்)
அரசியல்:
அரசியல்வாதி ஆவதற்கென்று தனித்தகுதி தேவையில்லை. எப்படிப்பட்டவர்களும் அதில் சென்று
முன்னேறி விடலாம் என்பதை,
அது வராவிட்டால் இது
இது வராவிட்டால் அது
எதுவும் வராவிட்டால் அரசியல் (ப.66)
என்னும் கவிதையில் நையாண்டி செய்கிறார் கவிஞர்.
கட்சிகள்தோறும் காணப்படும் கூட்டங்கள், தானே திரண்டனவல்ல ; திரட்டப்பட்டனவேயாகும். இதனை,
ஆயிரம் பேரோடு
வேட்பு மனுத்தாக்கல்
ஐம்பது வாக்குகள் (ப.30)
என்னும் கவிதையில் பட்டவர்த்தனமாக்கியுள்ளார்.
‘மன்னன் எப்படி, மக்கள் அப்படி’ என்பார்கள். பொறுப்பான பதவியில் உள்ள அமைச்சர் பெரு மக்களே, தாங்கள் கூடும் பொதுச்சபையில் சட்ட திட்டங்களைக் கடைப்பிடிப்பதில்லை என்றால், இவர்களால் ஆளப்படும் நாடு என்னாவது?
சட்டம் ஒழுங்கைக்
காப்பாற்ற முடியவில்லை
சட்டசபையில் (ப.31)
என்பது அதைச் சுட்டும் கவிதை.
பதவியிலிருக்கும்வரை அதிகார தோரணையில் தன் விருப்பப்படி நடப்பவராகவும் மக்களைப் பற்றிக்
கவலைப்படாதவராயும் இருப்பவர், வீட்டுக்கு அனுப்பப்பட்டதும் நாட்டைப் பற்றிச் சிந்திக்கிறார்.
பதவி இழந்த அமைச்சர்
அறிக்கை
இனி நாட்டுக்கு உழைப்பேன் (ப-63)
என்னும் கவிதை அது பற்றியதாகும்.
அரசியல்வாதிகளாகிய கட்சித் தலைவர்கள் சுய நலவாதிகள் ;தொண்டர்கள் அப்பாவிகள் என்பதை,
கட்சி தொண்டர்களுக்கு
காசு குடும்பத்துக்கு
தலைவர் மரணமுறி (ப.92)
என்னும் கவிதை புலப்படுத்துகின்றது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:44 pm

உறவுகள்:
இன்றைய வாழ்வில் உறவுகள், பணத்தையே குறியாகக் கொண்டுள்ளன. மனைவியின் எண்ணமும் அதுவாக இருப்பதே வியப்பு ; கசப்பான உண்மை.
வழியனுப்ப வந்த மனைவி
கண்ணீரோடு சொன்னாள்
பணம்அனுப்ப மறந்திடாதீங்க (ப.97)
என்பது அது சார்பான கவிதை.
அண்ணன் தம்பி உறவும்கூடப் பொருளாதாரத்தை மையமிட்ட நிலையில் ஐயப்பாட்டிற்கு உரியதே என்பதை,
அயர்ந்த தூக்கத்தில் அண்ணன்
தம்பிவைத்தான் தலைமாட்டில்
ஊதுவத்தி (ப.58)
என்னும் கவிதை உணர்த்தும். ‘ஐந்து வயதில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி’ என்னும் பழமொழிக் கருத்துடையது இது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:45 pm

கடவுள்:

வழிபாட்டிடம், வணிக இடமாகி விட்டது. நல்ல உள்ளம் படைத்தவர்களும் பொருளாசைக்கு அடிமைப்பட்டுப் பண்பு குன்றி விடுகின்றனர் என்பதை,
குருக்களாகி விட்ட கடவுள்
மறுபடியும் கடவுளாகவில்லை
தட்டுநிறைய காணிக்கை (ப.27)
எனக் கடவுள்மேலிட்டுக் குறிப்பிடுகின்றார்.
குழந்தையுள்ளம்:
வெளியுலகிற்குச் சென்று விளையாட விரும்பும் குழந்தையை வீட்டில் அடைத்துப் பழைய கதைகளைத் திணித்தல் கூடாது. அனுபவமே தலைசிறந்த கல்வி. கதைகள் கட்டுச் சோறு போன்றன.
கதை வேண்டாம்
கதவைத் திறந்துவிடு
குழந்தை அடம் (ப.77)
என்னும் கவிதை இக்கருத்தை உணர்த்துகின்றது. சொல்புத்தி விடுத்துச் சுயபுத்தியுடன் வாழும் குழந்தையே சாதிக்கவல்லதாகும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 30, 2013 3:45 pm

இதை விட உலகில் விளக்கம் இல்லை என்றுதான் நான் சொல்வேன்

அணைவ்ரும் பயன்படும் அற்புத பதிவு கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:47 pm

கஸல்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்


கஸீதா
கவிதைக்கு உருது அளித்திருக்கும் கொடை - கஜல் வடிவமாகும். கி.மு. பத்தாம் நூற்றாண்டில் அரேபியாவில் புகழ் பெற்ற வடிவமான கஸீதாவிலிருந்து பிறகு வார்த்தெடுக்கப்பட்டது தான் கஜல் ஆகும். ‘கஸீதா’ என்றால் ‘ஒரு குறிக்கோளை நோக்குதல்’ என்று பொருள் படும். இச்சொல் ‘கஸத’ என்னும் மூலத்திலிருந்து பிறந்ததாகும். இது ஒரு நீளமான கவிதையைக் குறிக்க அரபிகளால் பயன்படுத்தப்பட்டது. முதன் முதலாக அரபியில் கஸீதா எழுதியவர் பாஸீ சண்டையில் கலந்து கொண்ட, தக்லீப் குழுவைச் சார்ந்த முஹல் ஹில் என்று கூறப்படுகிறது. பின்னர், கஸீதா எழுதும் முறை துருக்கியிலும், ஃபார்சியிலும் ஏற்பட்டது. தொடக்கத்தில் ஒரு கவிஞரின் குலத்தைப் புகழவும், அவருடைய எதிரிகளை இகழவுமான கவிதைகளுக்கு இப்பெயர்இருந்து வந்தது. பின்னர், அன்பளிப்பை மனத்திற் கொண்டு ஒரு கவிஞர் ஒரு செல்வரையோ, அவரின் குலத்தையோ புகழும் நீண்ட பாக்களுக்கு இப்பெயர் ஏற்பட்டது”1 என்பார் எம்.ஆர்.எம்.

கஸீதாவின் தன்மைகள்
கஸீதாவின் கண்ணிகள் சில வேளை நூற்றுக்கும் மேற்பட்டு அமைவதுண்டு. கஸீதாவின் தன்மைகள் குறித்து எம்.ஆர். எம். கூறுகையில், “ஒரு சம்பூரணமான கஸீதாவில் மூன்று தன்மைகள் அமைந்திருக்க வேண்டும். முதலில் கவிஞர் தம் அன்பிற்குரியாளின் இல்லத்திற்குச் செல்வதையும், அது வெறிச்சோடிக் கிடப்பதையும் விவரிக்க வேண்டும். இரண்டாவதாக, தாம் ஒருவரிடம் பரிசு நாடிச் செல்லும் போது வழியிலுள்ள பாலையின் வருணனைகளையும், அங்குத் தாம் அனுபவிக்கும் துன்பங்களையும் விவரிப்பதோடு, காட்டு விலங்குகளோடு தம்முடைய ஒட்டகத்தை ஒப்பிட்டு வருணிக்கவும் வேண்டும். மூன்றாவதாக, தாம் எவரை மனதில் கொண்டுள்ளோமோ அவரைப் புகழ்ந்தோ அல்லது இகழ்ந்தோ பாவியற்ற வேண்டும். இதுவே கஸீதாவின் முக்கிய பகுதியாகும்”2 என்கிறார்.

அமைப்பு
கஸீதாவின் அமைப்பு குறித்து மேலும், எம். ஆர். எம். கூறுகையில், கஸீதா முழுவதும் ஒரே சந்தத்தில் அமையப் பெற்றிருப்பதாலும் பாலை பற்றிய வருணனை திரும்பத்திரும்ப ஒரே மாதிரியாக ஆனால், வெவ்வேறு சொற்களில் வருவதாலும் படிப்பவர்களை மட்டுமல்லாது இதனை எழுதும் கவிஞர்களையும் அலுப்படையச் செய்கிறது. எனவேதான் துல்ரும்மா என்ற கவிஞர் தம்முடைய பிரசித்தி பெற்ற கஸீதாவின் முதலடியை மட்டும் எழுதி, பின்னர் கருத்து வராததன் காரணமாக அத்துடன் அதனை வைத்தார் என்றும், நெடுங்காலம் சென்ற பின் அவர் இஸஃபஹான் சென்றிருந்த போது திடீரெனப் புதிய கருத்துத் தோன்றவே அக்கஸீதாவை எழுதி முடித்தார் என்றும் கூறப்படுகிறது.

சில கவிஞர்கள் கஸீதா என்னும் பெயரில் கவிதைகள் எழுதியுள்ளனர். ஆனால் அவற்றில் கஸீதாவின் இலக்கணங்கள் அமையப் பெறவில்லை. மெய்ஞ்ஞானம் பற்றிய கஸீதாக்களும் அரபியில் இருக்கின்றன. ஒரு சூஃபி உறங்கும் போது, ‘மெய்ஞ்ஞானம் பற்றிக் கூறப்பட்டவைகளில் மோசூலிய கஸீதாவை விட மேலானது ஒன்றில்லை’ என்று கனவில் அசரீரியாக முழுங்குவதைச் செவியுற்றார் என்று கூறப்படுகிறது. இதனை எழுதியவர் மோசூலின் காஜியான அல்முர்த்தஜா என்பவராவார். அதில் ஒரு காதலன் தன் காதலியின் மீது கொண்டிருக்கும் மெய்ஞ்ஞானக் காதல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது3 என்று கூறுகிறார்.
கஸீதாவின் தொடக்கத்தில் இருக்கும் பகுதிக்கு ‘தஸ்பீப்’ என்று பெயர். இந்த தஸ்பீப் பகுதியில் தான் கஜலுக்கான உணர்வுகள், தன்மைகள், நயங்கள் காணப்படும். நூற்றுக்கும் மேற்பட்ட கண்ணிகளாகக் கஸீதா பாடப்பெற்றன.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:48 pm

கஜல் - சொற்பொருள் விளக்கம்

கஜல் என்ற அரபிச் சொல்லின் நேரடிப் பொருள் ‘மான்கண்’ என்பதாகும். ‘ழுயணநடடந’ என்ற சொல்லுக்கு வட ஆப்பிரிக்காவில் காணப்படும் சிறிய, மென்மைத் தன்மை வாய்ந்த மான் வகை என்பது பொருள். இவ்வகை மான்கள் ஆசியா, ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. இவை, தம்முடைய அழகான உடலசைவுகளுக்காகவும், மென்மை வழியும் கண்களுக்காகவும் சிறப்போடு குறிப்பிடப்படுகின்றன4 என்று ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி கூறுகிறது. கஜல் என்ற சொல்லுக்கு “வனப்பும், மென்னோக்குமுடைய சிறுமான் வகை; அரபிய நாட்டு மான்”5 என்று சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலம்-தமிழ் அகராதி எடுத்துக்காட்டுகிறது.

அகராதிப் பொருள்
அமெரிக்கானா பேரகராதியிலிருந்து, “கஜல் என்பது இஸ்லாமிய இலக்கிய வடிவம், பாடப்படும் கவிதைகளில் ஒரு வகையானவை, பொதுவாக அழகுணர்வோடும், சுருக்கமாகவும், சிறப்பாகக் காதல் குறித்துப் பாடப்படும் வடிவமாகும்”6 என்று அறிய முடிகிறது. பிரிட்டானிகா பேரகராதி, கஜல் என்பது காதலின் பரிமாணங்களைச் சுருக்கமாக வெளிப்படுத்தும் பாடல் வடிவமாகும் என்கிறது.

வழக்குப் பொருள்
எம்.ஆர்.எம். விளக்கியுரைக்கின்ற போது, “அரபிச் சொல்லான இதன் பொருள் பெண்களுடன் பேசுதல், காதல் மொழி பேசுதல் என்பதாகும். பிரிவாற்றாமை பற்றியும் காதலினால் எற்படும் விரக வேதனையைப் பற்றியும் எடுத்துரைக்கும் ஒரு வகைப் பாவினத்திற்கு இப்பெயர் கூறப்படுகின்றது”7 என்பார்.
இரா. முருகன் கூறுகையில், “பெண்ணிடம் பேசுவது என்ற பொருள் கொண்ட அந்தச் சொல் பெண்ணைப் பற்றி, காதல் பற்றி, பிரிவுத்துயர் பற்றி, அதை மறக்க மதுவில் மூழ்கும் சராசரி மனிதனை, சக்கரவர்த்தியைப் பற்றிய படைப்பாக நீட்சியடைகிறது”8 என்கிறார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:48 pm

கஜல் இலக்கணம்

“உருது இலக்கியத்தில் கீத், நக்ம், ருபையாத், ஆஸாதி ஷாய்ரி, இப்படிப்பல வடிவங்கள் உள்ளன. இவற்றின் அமைப்புகள் பின்வருமாறு

கீத் - பாடல்
நக்ம் - விருத்தம் (நக்மா-விருத்தம் போன்ற அழகி)
ருபை - நான்கு அடிகள் (ருபை ஒருமை, ருபையாத் பன்மை)
அஸாதி ஷாய்ரி - புதுக்கவிதை, நவீன கவிதை
மேலும், சூஃபியிசத்திலிருந்து உருவான கவ்வாலி என்னும் குழுப்பாட்டு கஸீதா எனும் புகழ்மாலை எனப்பல யாப்பு வகைகள் உருதுவில் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்தன்மையையும் சூழலையும் கொண்டவை. அஸாதிஷாய்ரி நீங்கலாக மற்ற அனைத்துக்கும் இலக்கணம் உண்டு”என்கிறார் அபுல் கலாம் ஆசாத்.
கவிக்கோ கூறுகையில், “கஜல் இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லைஎன்கிறார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:49 pm

கஜலின் உள்ளடக்கக் குறிப்புகள் - அதாவது பாடுபொருளின் கரு
கவிக்கோ கஜலின் உள்ளடக்கக் குறிப்புகள் பற்றி கூறுகையில், சில வல்லெழுத்து ஒலிகளையும், மெய் இரட்டிப்பதையும் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் காதலின் துயரத்தால் ஏங்கித் துடிக்கும் காதலன், காதலியை விளித்துக் கூறுகின்ற முறையிலேயே அமையும். காதலியின் சௌந்தர்யம், தவிக்க வைக்கும் பண்பு, காயம்பட்ட இதயத்தின் வேதனை என்ற தொனியில் கருத்துக்கள் அமையும். காதலியை விளிப்பது என்ற தொடர்பு தவிறக் கண்ணிகளிடையே கருத்துத் தொடர்பு இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது கஜல் ஆகாது. (காதல் உலகில் ஒன்றிற்கொன்று தொடர்பற்ற உணர்ச்சி வசப்பட்ட உலவாக் கட்டுரைகளே பேசப்படும் என்ற ஆழ்ந்த உண்மையைக் குறிப்பால் உணர்த்தும் நுணுக்கமான வரையறை இது) பதினேழு மரபான சந்த விகற்பங்களும், இருபத்தாறு, அதற்கும் மேற்பட்ட புதிய சந்த விகற்பங்களும் கஜலுக்கு உண்டு. விட்டில்-விளக்கு, பூ-புல்; சபை (மஹயில்); இலட்சிய அடைவிடம் (மன்சில்), கடல்-நீர்த்துளி; மதுக்கடை-மது பரிமாறுகிறவன்; வசந்தம்-இலையுதிர் காலம்; முள்; கூடு; நீர்ச்சுழல், புயல், கரை, தோணி போன்ற ஏராளமான படிமங்களும் குறியீடுகளும் இதில் கையாளப்படும்”என்று தெளிவாக விரித்துரைக்கிறார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:50 pm

இன்றைய கஜல்கள்

“பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த கஜல் வடிவமானது காதலையும், இறைமையையும் மட்டும் பாடாமல், வாழ்வின் எதார்த்தங்களையும் தெளிவாகப் படம் பிடித்திட வேண்டும் என்று ஹலி என்பவர் குரல் கொடுத்தார். இவரைத் தொடர்ந்து அக்பர் அல்லாபதி, இக்பால் போன்றோர் இக்கொள்கையை வலியுறுத்தினர். அதோடு மட்டுமல்லாது சமூக, அரசியல், மனிதம் போன்ற வாழ்வின் எல்லாத் துறைகளைப் பற்றியும் பாடப்படுதலாக கஜல் இருந்திட வேண்டும் என்றனர்” என்று சாதிக் முகம்மது கூறுகிறார்.

கஜல் கவிதையில் ஆழம் கண்ட கவிஞர்களான மஜாஸ், ஜாஸ்பி, அக்தர் அன்சாரி, ஃபாயிஜ், மஜ்ரூத் சுல்தான்புரி, பல்வேஸ் ஷாஹிதி, குலாம் ரப்பானி தாபன், ஜான் நிஸார் அக்தர் போன்றோரெல்லாம் காதலை மட்டுமே மையமாக வைத்துப் படைக்காமல், சமூக அரசியல் புத்துணர்வுக் கொள்கைகளைக் கொண்டு, மனித மனத்தோடு எந்த ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக உறவாடக் கூடிய வகையில் கஜல்களைப் படைத்து வெற்றிவாகைச் சூடினர்.

இன்றைய இளம் கவிஞர் பட்டாளமானது, கஜலின் பரிமாணங்களைச் செழுமைப்படுத்திடும் சீரிய பணியில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளது. “ஹசன்நயிம், பானி, ஷா தம்கானாத், கிருஷ்ணா மோகன், ஷாரியார், பஷீர் பத்ர், மக்மூர் சய்தி போன்றோர் இன்றைய குறிப்பிடத்தக்க கஜல் கவிஞர்கள் ஆவர். ஹசன் நயிம் டெல்லியில் ‘கஜல் அகாதெமி’ என்ற ஒன்றை நிறுவி நவீன கஜல் வடிவத்தை இளைய தலைமுறைக் கவிஞர்கள், வாசகர்களிடையே பரப்பி வருகிறார்”29 என்று இந்திய ஒப்பிலக்கிய நூல் சுட்டிக் காட்டுகிறது.
தமிழில் கஜல் கவிதையின் வடிவ முயற்சி மிக அரிதாகவே நிகழ்ந்துள்ளது. உருது, பாரசீக மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களே கஜல் கவிதையின் வடிவத்தை உள்வாங்கி அதைப் பிற மொழிகளில் அறிமுகம் செய்ய இயலும். தமிழகத்தைப் பொறுத்தவரை உருது பாரசீக மொழிகளில் தேர்ச்சியும், புலமையும் மிக்கவர்களாக இசுலாமியர்களே திகழ்வதால், தமிழில் கஜல் கவிதையின் அறிமுக முயற்சி இவர்களின் புலமையைச் சார்ந்தே அமைகிறது.

அப்துல் ரகுமான் உருது மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு, மதுரையில் பிறந்து, தியாகராயர் கல்லூரியில் தமிழ் இலக்கிய இலக்கணத்தை முறைப்படி கற்றுத் தேர்ந்தவராதலின், தமிழில் கஜல் வடிவக் கவிதையை அறிமுகம் செய்யும் முயற்சி அவருக்கு சாத்தியமாகியுள்ளது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:51 pm

கஸல் - எளிய விளக்கம் நன்றி - கவியருவி ம. ரமேஷ்

‘கஸல்’ அரபியில் அரும்பிப் பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம். ‘கஸல்’ என்றாலே ‘காதலி’யுடன் பேசுதல் என்று பெயர். கஸல் பெரும்பாலும் காதலையே பாடும்; அதுவும் காதலின் சோகத்தை. சிறுபான்மை ஆன்மிகத்தையும் பாடும். கஸல் இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத்தொடர்பு இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. கண்ணிகளை இணைக்க வேண்டி இயைபுத் தொடை, யாப்புச் சந்தம் மேற்கண்ட மொழிகளில் பின்பற்றப்படும். இம்முறை தமிழ்க் கஸல்களில் பின்பற்றப்படுவதில்லை. பின்பற்றவும் வேண்டியதில்லை. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ போன்ற மேற்கத்திய வடிவங்களைத் தமிழ்மொழிக்கேற்ப மாற்றங்களைச் செய்துகொண்டது இக்கஸலுக்கும் பொருந்தும். பேச்சுச் சந்தத்திற்காகவும் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் அம்முறை தமிழில் தவிர்க்கப்படுகிறது. எனவே தமிழ்க் கஸல் புதுக்கவிதை வடிவில் காணப்படுவதால் புதுக்கவிதை ஆகிவிடாது. தமிழில் முதலிரண்டு (மின்மினிகளால் ஒரு கடிதம், ரகசியப் பூ ) கஸல் கவிதைத் தொகுதிகளைக் கவிக்கோ அப்துல் ரகுமான் படைத்துள்ளார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:52 pm

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் சில...

காதல் சாளரம்
திறந்தேன்
கடவுள் தெரிந்தார்

இறைவா!
நம் சங்கமத்திற்காகத்தான்
பெண்ணிடம்
ஒத்திகை பார்த்துக்
கொண்டிருக்கிறேன்

உன் கண்களுக்கு அஞ்சி
என் இதயத்தைக்
காயத்திற்கு அடியில்
மறைக்கிறேன்

உன் அழகு
உனக்கு வரம்
எனக்கோ சாபம்

மனிதனின்
ஆதிப் பாவம்
காதல்தான்

உன் மெளனத்தில்
என் காயம் உறங்க
இடம் கொடு

காதல் என்பது
கண்ணாடியும் கல்லும்
ஆடும் ஆட்டம்

விலக்கப்பட்ட கனியை
உண்பதற்காகவே
படைக்கப்பட்டவர் நாம்
வா, உண்போம்.

- இவை அனைத்தும் கவிக்கோ அப்துல் ரகுமானின் மின்மினிகளால் ஒரு கடிதம் என்ற கஸல் கவிதைத் தொகுதியிலிருந்து மேற்கோளுக்காக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:55 pm

நான் அமர்க்களத்தில் ரசித்த கவிதைகள் என்ற பகுதியிலும் கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் நிறைய இருக்கிறது.

அதன் லிங்க். இது. [You must be registered and logged in to see this link.]

நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான் - கஸல் கண்ணிகள் (மி.ஒ.க. - மின்மினிகளால் ஒரு கடிதம், ர.பூ. - ரகசியப்பூ)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:56 pm

இது என்னுடைய கஸல் கண்ணிகள்

கவியருவி ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்:

• இறைவா
நீ சுமந்த சிலுவையை
இன்று
ஒவ்வொரு காதல் தோல்வியும்
சுமக்கின்றன

• என் கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்

• நீ
என்னை
மறந்துபோய்
நினைத்திருக்கலாம்
துன்பத்தில்
நினைக்கும்
பக்தன்போல

• நீ
என் கனவுகளைப் புதைத்து
நினைவுகளை எரித்த
வெட்டியான்

• உன் அழகைப் பிடுங்கிப்
போர்த்திக்கொண்ட பூக்கள்
தன் அழகைப் பார்த்து
கர்வப்பட்டுக்கொண்டது

• கையாலாகாதவன் நான்
காதலை
விட்டுக்கொடுத்துவிட்டு
தெய்வீகக் காதலென்றேன்

• இறைவன் தயங்குகிறான்
எந்தப் பூவைப் பறிப்பது
எல்லாமே
காதல் செய்துகொண்டிருக்கிறது

• வானமெங்கும்
கொட்டிக் கிடக்கிறது
நிலவின் முத்தம்
நட்சத்திரங்களாக

• சொர்க்கம் நரகம்
இருப்பதைக் காட்டுகிறது
காதல்

• என் காதல்
கை நழுவிப்போனது
மாராப்பை விட்டு
விலகிய சேலையாய்

• என் மரணம் உனக்கும்
உன் மரணம் எனக்கும்
தெரியாமலேயே
நடந்து முடிந்துவிட வேண்டும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 3:59 pm

இது அமர்க்களத்தில் நான் எழுதி வரும் கஸல் கண்ணிகளின் தொடரின் லிங்க்

[You must be registered and logged in to see this link.]

கவிஞர் இனியவன் என்பவரும் கஸல் கண்ணிகளைத் தொடராக எழுதி வருகிறார். அதன் லிங்க் இது. [You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 30, 2013 4:04 pm

தங்களுக்கு வேண்டுமானால் மற்ற வடிவங்களையும் அறியத் தருகிறேன்...

கவிதையின் வடிவம் இப்படி எல்லாம் இருக்கிறது என்பதை மனத்தில் நிறுத்திக்கொள்ளுங்கள்...

தங்களுக்கு எந்த வடிவம் பொருத்தமாக இருக்கிறது என்று பாருங்கள்...

எழுதத் துவங்குங்கள்...

புகழ்பெற வாழ்த்துகிறேன்...

இன்னும் நிறைய வடிவங்கள் இருக்கிறது. தேவைப்பட்டால் [You must be registered and logged in to see this link.] என்ற தளம் உதவும்.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் யார் வேண்டுமானாலும் கேட்கலாம். என்னால் முடிந்த மட்டும் நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...  - Page 3 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum