தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாவட்டங்கள் வரிசை ‎:::::: திருவள்ளூர் மாவட்டம்

View previous topic View next topic Go down

மாவட்டங்கள் வரிசை ‎::::::  திருவள்ளூர் மாவட்டம் Empty மாவட்டங்கள் வரிசை ‎:::::: திருவள்ளூர் மாவட்டம்

Post by மகா பிரபு Wed Aug 21, 2013 12:29 pm

திருவள்ளூர் மாவட்டம்

சிவபெருமான் சயனக் கோலத்தில் காட்சி தரும் இந்தியாவின் ஒரே கோவில் சுருட்டப்பள்ளி


அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் திருவள்ளூர்
பரப்பு 3,422 .கி.மீ
மக்கள்தொகை 24,38,366
ஆண்கள் 13,90,292
பெண்கள் 13,48,574
மக்கள் நெருக்கம் 800
ஆண்-பெண் 970
எழுத்தறிவு விகிதம் 75.94%
இந்துக்கள் 24,75,438
கிருத்தவர்கள் 1,69719
இஸ்லாமியர் 99,408
புவியியல் அமைவு
அட்சரேகை 120.15-130.15N
தீர்க்கரேகை 190.15-800.20E


இணையதளம்

[You must be registered and logged in to see this link.]

ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல்: [You must be registered and logged in to see this link.].in
தொலைபேசி: 144-27661600


எல்லைகள்: இதன் கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் சென்னை மாவட்டமும், வடக்கில் ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டமும்: தெற்கில் காஞ்சீபுரம் மாவட்டமும்; மேற்கில் வேலூர் மாவட்டம் மற்றும் ஆந்திரத்தின் சித்தூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: இங்குள்ள ஸ்ரீவீரராகவர் ஆலையம் பெருமானின் சயன கோலத்தை விளக்கி நிற்பதே 'திருவள்ளூர்' எனப்படுகிறது.

வரலாற்றில் பல்லவர், கோல்கொண்டா, மொகலாயர், பிரெஞ்சு, டச்சு மற்றும் ஆங்கலேயர் ஆட்சிக்குட்பட்டிருந்தது.

1996 ஜூலை ஒன்றாம் தேதி செங்கல்பட்டு ம ஆவட்டத்தில் இருந்தது பிரிக்கப்பட்டு, புது மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
1997 ஜனவரி ஒன்று முதல் திருவள்ளூர் மாவட்டம் நடைமுறையில் வந்தது.

முக்கிய ஆறுகள்: ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறு, கூவம்.

நிர்வாகப் பிரிவுகள்

வருவாய் கோட்டங்கள்: - 3; திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, தாலுகாக்கள் - 8 : கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, அம்பத்தூர், ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, நகராட்சிகள்: 12; திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர், கத்திவாக்கம், மதுரவயல், மணலி, பூந்தமல்லி, திருத்தணி, திருவேற்காடு, வளசரவாக்கம், ஊராட்சி ஒன்றியங்கள்-14: எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூர், மீஞ்சூர், பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, பூண்டி, புழல், ஆர்.கே. பேட்டை, சோழாவரம், திருவள்ளூர், திருத்தணி, திருவாலங்காடு வில்லிவாக்கம்.

குறிப்பிடதக்க இடங்கள்:

பட்டினத்தார் சமாதி: பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்து சென்னை அருகேயுள்ள திருவொற்றியூரில் மறைந்த தமிழ் சித்தர் மரபைச் சேர்ந்த ஞானி.

கருமாரியம்மன் கோவில்: சென்னையிலிருந்து 18 கி.மீ.தொலைவில் உள்ள திருவேற்காடு கருமாரியம்மன் ஆலையம் தமிழகமெங்கும் பிரபலமானது.

சுருட்டப்பள்ளி: ஆலகால விஷத்தை உண்ட சிவன் மயக்கத்தில் பள்ளி கொண்ட நிலையில் இருக்கும் கோவில் இந்தியாவிலேயே இது ஒன்றுதான். இக்கோயில் சனிப்பிரதோஷத்திற்கு பெயர் பெற்றது.

பூண்டித சத்தியமூர்த்தி சாகர் எனப்படும் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து தான் சென்னைக்குத் தேவையான குடிநீரை அளிக்கும செங்குன்றம் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

அம்பத்தூர்: இந்தியாவின் மாபெரும் தொழில் நகரங்களில் இதுவும் ஒன்று.  இங்குள்ள தொழிற்பேட்டை தெற்காசியாவிலேயே மிகப் பெரியது.

வீரராகவப் பெருமான கோவில் ஒன்றான இது, சென்னையிலிருந்து 43 கி.மீ. தொலைவில் உள்ளது.

திருவொற்றியூர் வடிவுடையம்மன் திருக்கோவில்: தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள் 32-இல் ஒன்று.  இந்து சமயத்தின் அனைத்துப் பிரிவினரும் வழிபடும் தலம்.

பழவேற்காடு உப்பேரி பறவைகள் சரணாயலம்: கடல் நீரும் பக்கிங்ஹாம் ஏரித் தண்ணீரும் ஒன்று கலக்கும் ஏரி.  மீன்வளம் மிகுந்தது.  ஒரு டச்சுக் கல்லறை உள்ளது.  சென்னைக்கருகிலுள்ள வித்தியாசமான சுற்றுலாத் தலம்.

திருத்தணி: முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்று.  ஆடிக் கிருத்திகை, தெப்ப உலா பிரபலமான விழாக்கள்.

ஆவடி: டாங்கித் தொழிற்சாலை(Tank factory), விமானப்படை நிலையம் ( Air Force Station)அமைந்துள்ளது.




இருப்பிடமும், சிறப்பியல்களும்
சென்னையிலிருந்து 46 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
மத்திய அரசின் டாங்கித் தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை(Refineries), டயர் தொழிற்சாலைகள்(tire plants) போன்றவை உள்ளன.
பூண்டி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏரி போன்றவை இங்குள்ளன.
தமிழ்ப்புலவர் சேக்கிழார் பிறந்த தலம் குன்றத்தூர்.
காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்த திருவேலங்காடு திருத்தலம்
திருத்தணி ஆடிக்கிருத்திகை பெருவிழா. பெரியபாளையம் ஆடித் திருவிழா போன்றவை மாவட்டத்தின் முக்கிய விழாக்கள்.
விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சனேயர் ஆலயம்: 32 அடி உயரமுள்ள இந்த ஆஞ்சனேயர் பச்சை நிற பளிங்குக் கல்லால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  பதிவு பிடித்திருந்தால் நிச்சயம் பின்னூட்டம் இட மாறக்காதீர்கள்.




நன்றி: தொழில்நுட்பம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாவட்டங்கள் வரிசை ‎::::::  திருவள்ளூர் மாவட்டம் Empty Re: மாவட்டங்கள் வரிசை ‎:::::: திருவள்ளூர் மாவட்டம்

Post by மகா பிரபு Wed Aug 21, 2013 12:37 pm

சில முக்கியமான இடங்கள் - தொகுப்பு:





சென்னை மாநகரத்தோடு சேர்ந்தாற்போல் இருப்பதாலேயே பல சிறப்புகளையும், வளர்ச்சிகளையும் அடைந்து வரும் மாவட்டம். கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மத நிறுவனங்கள், சிறந்த கோயில்கள் என, பழம் பெருமைகளோடு, நவீன வளர்ச்சியிலும் தமிழகத்தின் கேந்திரமாக திகழ்கிறது.

அம்பத்தூர்

இந்தியாவின் மாபெரும் தொழில் நகரங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள தொழிற்பேட்டை தெற்காசியாவிலேயே மிகப் பெரியதாகும். இரயில் நிலையம், பேருந்து வசதிகள் அனைத்தும் கொண்டது. சென்னையிலிருந்து ஆவடி செல்லும் வழியில் 16 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஆவடி

ஆவடி டாங்கி தொழிற்சாலை என்ற ராணுவ கவச வண்டி தயாரிக்கும் தொழிற்சாலை இங்குதான் உள்ளது. விமானப்படை நிலையமும் உள்ளது. சென்னை - அரக்கோணம் இரயில் தடத்தில் இருப்பதால் இரயில் நிலையமும் போக்குவரத்து வசதியும் உள்ளது. புறநகர் பேருந்துகளும் நிறைய உண்டு. சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் வழியில் 24 கி.மீ. தொலைவில் ஆவடி உள்ளது.

பட்டினத்தார் சமாதி

தமிழ் சித்தர் மரபைச் சேர்ந்த ஞானி. 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, சென்னை அருகில் 8 கி.மீ. தொலைவில் உள்ள திருவொற்றியூரில் மறைந்தார். திருவொற்றியூரில் இவருடைய சமாதி உள்ளது. பார்வைநேரம் - காலை 6-1 மணி வரை. மாலை 3-8 மணி வரை.

பழையனூர்

தமிழ்ப்படைப்பு ஒன்றின் சிறப்பை எடுத்துக்காட்ட 70 தமிழ் அறிஞர்கள் தங்கள் இன்னுயிரை நீத்த தியாகத் திருமண் இது. திருவாலங்காட்டிலிருந்து 1.5 கி.மீ. தூரத்தில் உள்ளது.

பூவிருந்தவல்லி (பூந்தமல்லி)

திருக்கச்சி நம்பியாழ்வார் என்ற வைணவப் பெரியார் பிறந்த ஊர். சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையில் 20 கி.மீ. தொலைவில் இருப்பதால் புறநகர் மற்றும் தொலைதூரப் போக்குவரத்து வசதி நிறைந்த ஊர்.

பூண்டி

சத்தியமுர்த்தி சாகர் என்ற பூண்டி நீர்த்தேக்கம் இங்குதான் உள்ளது. இங்கிருந்துதான் சென்னையின் குடிநீர்த் தேவைகளைத் தீர்க்கும் செங்குன்றனம் நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. சென்னையிலிருந்த 60 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கிராமம், நீர்த்தேக்கத்துடன் சேர்ந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

கருமாரியம்மன் கோயில்

சென்னையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரிஅம்மன் கோயில் தமிழகமெங்கும் பிரபலமானது. இங்கு நடக்கும் தைப்பூச லட்சார்ச்சனையும் பூர்ணிமை லட்சார்ச்சனையும் முக்கியமானவை. மாசி மகம், பங்குனி உத்திரம், கருடசேவை போன்ற திருவிழாக்களும் பிரபலமானவை. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பக்தர்களுக்கு இலவச உணவு அளக்கப்படும்.

சுருட்டப்பள்ளி

சனிப்பிரதோஷத்துக்குப் பெயர்போன கோயில் இது. சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் வழியில் புதூரிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் இந்தக் கோயில் உள்ளது. சிவன் பள்ளி கொண்ட நிலையிலும், பார்வதி தேவி சோகத்துடன் அருகில் அமர்ந்த நிலையிலும் தோற்றமளிக்கும் கோயில் இது. படுத்த நிலையில் சிவனைப் பார்ப்பது அரிது. ஆலகால விஷத்தை உண்ட சிவன் மயங்கியதாகவும், அப்போது பார்வதி அவன் கழுத்தைப் பிடித்து விஷம் உள்ளிறங்கிவிடாமல் தடுத்ததாகவும் கதைகள் உண்டு. இந்தச் சம்பவத்தின் சித்தரிப்பாகத் தான் இந்த ஆலயம் விளங்குகிறது. இங்கு நடக்கும் சனி பிரதோஷத்துக்கும், மஹh சிவராத்திரிக்கும் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.

கோயில் தரிசனம்: - காலை 6-12.30 மணி வரை மாலை 4-8 மணி வரை. பிரதோஷ நாட்களில்: காலை 6 முதல் இரவு 8 மணி வரை.

பழவேற்காடு உப்பேரி பறவைகள் சரணாலயம்

கடல் நீரும், பக்கிங்காம் கால்வாய் நீரும் ஒன்றுடன் ஒன்று கலக்கும் ஏரி இது. மீன்வளமும், இறால் வளமும் உள்ள ஏரி இது என்பதால் கடல் நீரை உள்வாங்குவதும், வெளித்தள்ளுவதுமாக இருப்பதால், இதை உப்பாறு என்று அழைக்கிறார்கள். இந்த ஏரியின் நீர்மட்டம் திடீரென்று உயர்வதும், தாழ்வதுமாக இருக்கும். இதை வத்தம், வெள்ளம் என்று இப்பகுதியில் உள்ள மீனவர்கள் அழைப்பார்கள். இங்கு கிடைக்கும் கட்டுநண்டு ஏற்றுமதி செய்யுமளவுக்கு தரமானது. பழவேற்காடு ஏரி, ஒரு பறவைகள் சரணாலயமும் கூட. கி.பி. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த டச்சுக்கல்லறை ஒன்றும் இங்கு உள்ளது. சென்னை அருகே உள்ள வித்தியாசமான சுற்றுலாத்தலம்.

வடிவுடையம்மன் ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயில்

தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள் 32 இல், திருவொற்றியூரில் உள்ள இந்தக் கோயிலும் ஒன்று. இந்து சமயப் பிரிவினரான ஆதி சைவர்கள், சைவர்கள், சாக்தர்கள், உச்சவர்கள், கேரள நம்பூதிரி ஆகிய ஆறு பிரிவினரும் இங்குள்ள சிவனையும், சக்தியையும் வழிபடுகின்றனர்.

திருப்பாச்சூர்

மாமன்னன் கரிகால் சோழனால் கட்டப்பட்ட பழம் பெரும் கோயில். சென்னையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. திருவாலங்காட்டுக்குக் கிழக்கிலும், திருவள்ளூர் வீரராகவ சுவாமி கோயிலுக்கு மேற்கிலும் இத்தலம் உள்ளது.

திருத்தணி

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. ஆடிக் கிருத்திகையும், தெப்ப உலாவும் பிரபலமான திருவிழாக்கள். கந்தர் சஷ்டி, சிவராத்திரி ஆகியவையும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படும். குமரன் கோபம் தணிந்து, தன் தேவியருடன் இந்தக் குன்றில் அமர்ந்ததால், திருத்தணிகை என்று பெயர் வந்ததாகக் கூறுவதுண்டு. மலையடிவாரத்தில் உள்ள குமாரதீர்த்தம் புகழ்பெற்றது. 365 திருப்படிகளைக் கொண்டது திருத்தணி மலைக்கோயில். தொலைபேசி: - 044-27885243.

வீரராகவப் பெருமாள்

மாவட்டத்தின் தலைநகரான திருவள்ளூரில் இந்தக் கோயில் உள்ளது. திருவள்ளூரைத் 'திருவுள்' என்றே அழைத்தார்கள். சென்னையில் இருந்து 42 கி.மீ. தொலைவில் இருக்கும் இக்கோயில், விஷ்ணு ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலத்தில் வீரராகவப் பெருமாள் காட்சி அளிக்கிறார். அருகில் வசுமதி என்ற கனகவல்லியும் அவருடன் உறைந்துள்ளார்கள்.


தினகரன்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாவட்டங்கள் வரிசை ‎::::::  திருவள்ளூர் மாவட்டம் Empty Re: மாவட்டங்கள் வரிசை ‎:::::: திருவள்ளூர் மாவட்டம்

Post by செந்தில் Wed Aug 21, 2013 2:03 pm

கைதட்டல் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி பிரபு கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மாவட்டங்கள் வரிசை ‎::::::  திருவள்ளூர் மாவட்டம் Empty Re: மாவட்டங்கள் வரிசை ‎:::::: திருவள்ளூர் மாவட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum