Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சித்தன்னவாசல் ஓவியங்கள்
Page 1 of 1 • Share
சித்தன்னவாசல் ஓவியங்கள்
சித்தன்னவாசல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். அந்த மாவட்டத்தின் தொல்லியல் பாரம்பரியம் மிக்க இடங்களில் புகழ்பெற்றதும் இந்த இடம்தான்.
அவற்றை விடுத்து கீழே இறங்கி அடுத்த அரை கிலோமீட்டர் போனால் குகைக்கோயிலும் அதனுள் வரையப்பட்டிரு்ககும் அழகிய ஓவியமும் உள்ளன.
குகைக் கோயிலும் ஓவியமும் உள்ள அறிவர் கோயில் மலை உச்சியில் ஒரு சுனை, நவ்வாச்சுனை என்று ஒரு பாதி நாளுக்கு வரலாற்றுசு் சுற்றுலா கொண்டாட ஏதுவான வசதிகள் அனைத்தும் உண்டு.இந்த இடத்தை ஏழடிப்பட்டம் என்று கூறுகிறார்கள்.
புதுக்கோட்டை – மணப்பாறை சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீட்டர்கள். பேருந்து வசதிகள் உண்டு. உத்தேசமாக அரை மணிக்கு ஒன்று.
கவனத்தில் கொள்ளவேண்டியவை. சித்தன்னவாசல் ஓவியங்களை காலத்தின் அடிப்படையிலேயே அதன் முக்கியத்துவத்தைப் பார்க்கவேண்டும்.
இருக்கும் ஓவியங்களும் அழிந்து வருகின்றன. இருப்பவையும் பக்கத்தில் நடைபெற்றுவரும் கல்குவாரிகளால் நாளுக்கு நாள் உதிர்கின்றன. சமண சமயத்திற்கு என்று நமக்கு இருக்கும் ஒரே இடம் இதுதான்.
… by
rajamangadu
[You must be registered and logged in to see this link.]
இங்கே அழியும் தருவாயில் உள்ள பழங்கால ஓவியம், அந்த ஓவியம் அமைந்துள்ள குகைக்கோயில், அதன் பிறகு சில பல சமணர் படுக்கைகள், மிகப் பழமையான கல்வெட்டுக்கள் என்று அனைத்தும் ஓரிடத்தில் காணக்கிடைக்கின்றன. இவை அனைத்தும் நமது பாரம்பரியத்திற்கு சமணர்களின் பங்களிப்பாகும். அவை மட்டுமின்றி, ஏகப்பட்ட முதுமக்கள் தாழிகள் இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன.[You must be registered and logged in to see this link.]
பொதுவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சமணர்கள் பலகாலம் தங்கி இருந்ததற்கான சான்றுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன. சில சில ஊர்களின் கூட இடிந்து போய் அடிவாரம் வரை மிச்சமமுள்ள சமணர் கோயில்களையும், அனாதையாக கைவிடப்பட்டுள்ள சமணர் சிலைகளும் கிடைத்துள்ளன.[You must be registered and logged in to see this link.]
தமிழக தொல்லியல் துறையின் சமணர் பட்டியலில் புதுக்கோட்டை மிக முக்கியத்துவம் பெறுகிறது. அப்படிக் கைவிடப்பட்டுள்ள சில சமணர் சிலைகள் சில இடங்களில் வழிபாட்டிலும் உள்ளன. மொட்டைப் பிள்ளையார், சடையர் என்று மக்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப பெயர் சூட்டி, செவ்வந்திப்பூ மாலை, சாம்பிராணி, குழாயில் மாரியம்மன் பாடல் என்று சில புண்ணியம் பெற்ற சமணர் சிலைகள் வழிபாட்டில் உள்ளன.[You must be registered and logged in to see this link.]
இந்த இடம் ஒரு குன்று. கிட்டத்தட்ட 200 அடி உயரம் உடையது. சாலையிலிருந்து போனதும் செங்குத்தான அந்த மலையில் ஓரத்திலிருந்து படிக்கட்டுகள் தொடங்குகின்றன. ஒரு புறம் ஏறி மறுபுறம் அடைந்தால் முதலில் வருவது சமணர் படுக்கைகள்.அவற்றை விடுத்து கீழே இறங்கி அடுத்த அரை கிலோமீட்டர் போனால் குகைக்கோயிலும் அதனுள் வரையப்பட்டிரு்ககும் அழகிய ஓவியமும் உள்ளன.
[You must be registered and logged in to see this link.]
அந்த குன்றைச் சுற்றி பல்வேறு இடங்களில் முதுமக்கள் தாழிகளைப் பார்க்கலாம். கிமு 2 அல்லது 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கிபி 10 ஆம் நூற்றாண்டு வரை சித்தன்னவாசலில் சமணம் தழைத்தோங்கி உள்ளது. கிபி 7 அல்லது 9ஆம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்ற ஓவியம் வரையப்பட்டுள்ள அறிவர் கோயில் குடையப்பெற்றுள்ளது.[You must be registered and logged in to see this link.]
இங்கே சமணர் படுக்கைகள் மற்றும் எழுத்துருக்கள் உள்ள ஏழடிப்பட்டம்குகைக் கோயிலும் ஓவியமும் உள்ள அறிவர் கோயில் மலை உச்சியில் ஒரு சுனை, நவ்வாச்சுனை என்று ஒரு பாதி நாளுக்கு வரலாற்றுசு் சுற்றுலா கொண்டாட ஏதுவான வசதிகள் அனைத்தும் உண்டு.இந்த இடத்தை ஏழடிப்பட்டம் என்று கூறுகிறார்கள்.
[You must be registered and logged in to see this link.]
முன்னரே சொன்னது போல, ஒரு மலையில் செங்குத்தாக கடந்து மறுபக்கம் இறங்கவேண்டி உள்ளது. இருக்கும் ஒரு அடி இடத்தில் நமக்காக பாதை அமைந்துத் தந்துள்ளது தொல்லியல் துறை. கொஞ்சம் பலமாகக் காற்றடித்தால், இதயம் உடலை விட்டு வெளியில் வந்து துடிக்கும், அந்த அளவுக்கு செங்குத்தான சரிவு மறுபுறம். எழு காலடித்தடங்களைச் செதுக்கி அதன் மூலமாக முனிவர்கள் இந்த இடத்தை வந்த போயிருக்கிறார்கள். அதனாலேயே இந்த அழகான பெயரைச் சூட்டியிருக்கின்றனர்.[You must be registered and logged in to see this link.]
இந்த ஏழடிப்பட்டம் என்பது இயற்கையாகவே மலையில் அமைந்த ஒரு குகை. மலையில் மடிப்பு மாதிரியான ஒரு அமைப்பு. காதில் கூச்சலிடும் காற்று, தனிமை, அமைதி, பக்கத்தில் உதவிக்கு என்று அழைக்க யாருமே இல்லாத ஒரு புதர் காடு என்று இந்த இடம் துறவிகளுக்காகவே அமைக்கப்பட்டிருக்கும் போல.[You must be registered and logged in to see this link.]
கயாவின் லோமாஸ் ரிஷி, புவனேஸ்வரத்தின் உதயகிரி குகைகள், தமிழ்நாட்டின் ஆனைமலை, அழகர்மலை போன்றவையும் இத்தன்மையதே. புதுக்கோட்டையிலேயே, குடுமியாமலை, நார்த்தாமலையில் இத்தகைய குகைகள் உண்டு. மலை இருந்தால் குகை இருப்பது சகஜம்தானே![You must be registered and logged in to see this link.]
இங்கேதான் சமண துறவிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தங்கி சமய சேவைகள் செய்து, நோண்பிருந்து தம் நல்லுயிர் ஈந்திரு்கின்றனர். இந்த குகை ஒரு அறை போன்று தோற்றம் உடையது. தொலலியல் துறைக்கே உண்டான வவ்வால் நாற்றமும் உண்டு. இங்கே 17 படுக்கைகள் அமைந்துள்ளன, கல் தலையணையோடு! அதில் ஒன்று மட்டும் பெரியது, அனேகமாக அதுவே பழையது.[You must be registered and logged in to see this link.]
இதைப் பற்றி குறிப்பிட காரணம் உண்டு. அனேகமாக இந்த படுக்கையைச் சுற்றித்தான் தென்னிந்தியாவின் மிகப் பழமையான எழுத்துவடிவம் கல்வெட்டாய் நமக்குக் கிடைக்கிறது. தமிழ் மொழியை அசோக பிராமியில் பதித்துள்ளார்கள். இதன் காலம் கிமு 2 அல்லது 3ஆம் நூற்றாண்டு. கிட்டத்தட்ட 2010 வருடங்களுக்கு முந்தியது!![You must be registered and logged in to see this link.]
படத்தைச் சுற்றி எழுதியிருப்பது கல்வெட்டின் வடிவம். எருமிநாட்டில் உள்ள குமிழூரில் பிறந்த காவுடி (துறவியோட பெயர்)க்காக, தென்கு சிறுபோசில் ஊரைச் சேர்ந்த இளையர் செய்தளித்த படுக்கை என்பதே அதில் கூறப்படம் செய்தி. செய்தியில் விசேசமில்லை, அது செய்யப்பட்ட காலத்தில்தான் சிறப்பு உள்ளது.[You must be registered and logged in to see this link.]
பெரும்பாலும் அனைத்துப் படுக்கைகளும் கல்வெட்டுக்களைக் கொண்டுள்ளன. பொதுவாக யாருக்காக யார் செய்து கொடுத்த படுக்கை என்ற அதில் எழுதப்பட்டிருக்கும். சில படுக்கைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கல்வெட்டுக்களும் உண்டு. ஒரே படுக்கையை பலரும் பயன்படுத்தி இரு்ககலாம் அல்லவா.[You must be registered and logged in to see this link.]
ஓவியங்கள் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த குகைக்கோயில்தான் அறிவர் கோயில். சாலையிலிருந்து ஒரு நூறு அடி தூரத்தில் உள்ளது இந்த கோயில். இதன் உள்ளே சமண ஆச்சாரியர்களின் சிலைகளும், விதானத்தில் ஓவியங்களும் காண்பபடுகின்றன[You must be registered and logged in to see this link.]
கர்ப்ப கிரகத்தின் சிற்பங்கள்,சித்தன்னவாசல் ஓவியங்கள், கிமு 2- கிபி 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தா, 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கை சிகிரியா, 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாக் குகை ஓவியங்கள் (மத்தியபிரதேசம்) இவற்றுடன் காலத்திலும், வரையும் முறையிலும், தரத்திலும் ஒப்பிடத்தக்கது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, சித்தன்னவாசல் மட்டுமே முற்கால சமண ஓவியங்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.[You must be registered and logged in to see this link.]
சமவஸரணம் என்ற சமண சமய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டுள்ள விதான ஓவியங்கள் நிஜமாகவே அழகான மற்றும் நேர்த்தியானவை. மேலே கொடுக்கப்பட்டுள்ள ஓவியங்களில் கோட்டோவியங்களாகக் கொடுக்கப்பட்டுள்ள நடன மாதர்களின் படங்கள் அழிந்துவிட்டன.[You must be registered and logged in to see this link.]
நவ்வா மரத்தூர்களில் ஒளிந்திருக்கும் நவ்வாச்சுனை, இந்த சுனையின் உள்ளே ஒரு குகைக்கோயில் உள்ளது. சிவனுக்கானது.இதுமாதிரியான கல் வட்டங்களை நிறைய பார்க்கலாம். பழங்கால மக்களைப் புதைத்த இடங்கள் இவை. இங்கிருந்து எடுக்கப்பட்ட தாழிகளில் ஆயுதங்கள் போன்றவையும் இருந்திருக்கின்றன.[You must be registered and logged in to see this link.]
போக்குவரத்துபுதுக்கோட்டை – மணப்பாறை சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீட்டர்கள். பேருந்து வசதிகள் உண்டு. உத்தேசமாக அரை மணிக்கு ஒன்று.
கவனத்தில் கொள்ளவேண்டியவை. சித்தன்னவாசல் ஓவியங்களை காலத்தின் அடிப்படையிலேயே அதன் முக்கியத்துவத்தைப் பார்க்கவேண்டும்.
[You must be registered and logged in to see this link.]
அஜந்தா குகை ஓவியங்களைப் போன்று பல ஓவியங்களைப் பார்க்க இயலாது. இருப்பது சிறிய குகைக்கோயில்தான். அதுவும் ஒனறுதான்.இருக்கும் ஓவியங்களும் அழிந்து வருகின்றன. இருப்பவையும் பக்கத்தில் நடைபெற்றுவரும் கல்குவாரிகளால் நாளுக்கு நாள் உதிர்கின்றன. சமண சமயத்திற்கு என்று நமக்கு இருக்கும் ஒரே இடம் இதுதான்.
[You must be registered and logged in to see this link.]
அம்மதத்தைச் சேர்ந்த அல்லது சேராத அமைப்புகளோ தனி மனிதர்களோ, சற்று கவனம் எடுத்து சித்தன்னவாசலைக் காப்பாற்றினால் மட்டுமே நமது சந்ததியினருக்கு சித்தன்னவாசல் ஓவியத்தைக் காட்டலாம்.[You must be registered and logged in to see this link.]
வெற்றிடமே!அதுமட்டுமில்லாமல் ஆள் அரவமற்ற இடமாக இருப்பதால், நம் ஊருக்கென உள்ள அலங்கோலங்களும் நடைபெறும். தக்க துணையுடனும் ஏற்பாடுகளுடனும் செல்லுதல் உகந்தது.… by
rajamangadu
Re: சித்தன்னவாசல் ஓவியங்கள்
காக்கப்படவேண்டிய பொக்கிஷம் இது. சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா?
பகிர்வுக்கு நன்றி தம்பி
பகிர்வுக்கு நன்றி தம்பி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சித்தன்னவாசல் ஓவியங்கள்
ஒரு முறை அங்கு பித்தன் சென்ற போது, அந்த இடம் எதோ காதலர்கள் பூங்கா போல இருந்தது. அவர்களின் சில்மிஷ விளையாட்டினை தவிர்க்க சில காவல் துறையினர் அவர்களை மிரட்டி கொண்டு இருந்தனர். அப்போது அங்கே சுற்றி பார்க்க வந்த வெளி நாட்டினர் என்ன என பித்தனிடம் கேட்ட போது என்ன சொல்வது தெரியாமல் இருந்தது மனதுக்கு நெருடலாகவே இருந்தது.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: சித்தன்னவாசல் ஓவியங்கள்
நான் சில வருடங்களுக்கு முன்பு சென்ற போது சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்தது .
சித்தன்னவாசல் கண்டிப்பாக பாதுகாக்கப்படவேண்டும்.
சித்தன்னவாசல் கண்டிப்பாக பாதுகாக்கப்படவேண்டும்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சித்தன்னவாசல் ஓவியங்கள்
ஆம் நண்பா. முகம் சுழிக்க வைக்கிறது..பித்தன் wrote:ஒரு முறை அங்கு பித்தன் சென்ற போது, அந்த இடம் எதோ காதலர்கள் பூங்கா போல இருந்தது. அவர்களின் சில்மிஷ விளையாட்டினை தவிர்க்க சில காவல் துறையினர் அவர்களை மிரட்டி கொண்டு இருந்தனர். அப்போது அங்கே சுற்றி பார்க்க வந்த வெளி நாட்டினர் என்ன என பித்தனிடம் கேட்ட போது என்ன சொல்வது தெரியாமல் இருந்தது மனதுக்கு நெருடலாகவே இருந்தது.
Re: சித்தன்னவாசல் ஓவியங்கள்
இப்போது பராமரிப்பு பனி நடக்கிறது..செந்தில் wrote:நான் சில வருடங்களுக்கு முன்பு சென்ற போது சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்தது .
சித்தன்னவாசல் கண்டிப்பாக பாதுகாக்கப்படவேண்டும்.
Similar topics
» சித்தன்னவாசல்-ஒரு பார்வை
» ஒளிமயமான ஓவியங்கள்
» கண் கவரும் ஓவியங்கள்
» கண் கவரும் ஓவியங்கள்
» அசத்தல் ஓவியங்கள்
» ஒளிமயமான ஓவியங்கள்
» கண் கவரும் ஓவியங்கள்
» கண் கவரும் ஓவியங்கள்
» அசத்தல் ஓவியங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum