தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?

View previous topic View next topic Go down

இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா? Empty இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?

Post by mohaideen Fri Nov 08, 2013 1:07 pm

இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?

இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா? Slaugther-300x259உழ்ஹிய்யா கடமையும், மிருக வதையும்
இன்றைய உலகில் அதிகம் விமர்சிக்கப்படும் ஒரு மார்க்கமாக இஸ்லாம் காணப்படுகின்றது. அதற்கெதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன, அவற்றுள் சமகாலத்தோடு பொருந்திச் செல்லக்கூடிய விமரசனமே; ‘இஸ்லாம் மிருகங்களைக் கொடுமைப் படுத்துகின்றது.’ என்ற விமர்சனம்.
குறிப்பாக இலங்கையை எடுத்துக்கொண்டால் இக்காலத்தில் அதிகமாக இதனை பேசுவார்கள். இன்று இலங்கையில் இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் இதனையே ஆயுதமாகவும் பயன்படுத்துகின்றனர். அதனடிப்படையில் ‘இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?’ என்ற அடிப்படையில் இந்த கட்டுரையை எழுத ஆசைப்படுகின்றேன்.
இஸ்லாத்தை விமர்சிக்கும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய முதல் அம்சம் என்னவெனில் எம்மைப் படைத்து, எமக்கு இஸ்லாம் மார்க்கத்தை வாழ்க்கை நெரியாக தந்த அல்லாஹ் எதற்கும் தேவையற்றவனாகவே இருக்கின்றான். அதே நேரம் அவன் ஒன்றை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தால் அதனை மனிதனின் நலனுக்காகவே கூறியிருப்பான்.
மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன். (35:15)
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.  (112:1,2)
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ، أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ؟ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي، قَالَ: يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِي فُلَانٌ، فَلَمْ تُطْعِمْهُ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي، يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ، فَلَمْ تَسْقِنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: اسْتَسْقَاكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تَسْقِهِ، أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ وَجَدْتَ ذَلِكَ عِنْدِي “
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளையில் மனிதனைப் பார்த்து,; ‘ஆதமின் மகனே நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன், ஏன் நீ என்னை நோய் விசாரிக்க வரவில்லை?’ என்று கேற்பானாம், அதற்கு மனிதன்; ‘இறைவா! நீ உலகத்தவர்களின் நாயன், நான் எப்படி உன்னை நோய் விசாரிப்பது?’ என்று பதில் கூறும் போது, அல்லாஹ் கூறுவானாம்;’ உனக்குத் தெரியாதா என்னுடைய இன்ன அடியான் நோய்வாய்பட்டிருந்தான், நீ அவனை நோய் விசாரித்திருந்தால் அங்கு என்னை கண்டிருப்பாய்.’ என்று கூறுவானாம். மேலும் ‘ஆதமின் மகனே நான் உன்னிடம் உணவு கேட்டேன், நீ எனக்கு உணவளிக்கவில்லையே!’ என்று கேட்க, மனிதன்; ‘இறைவா! நீ உலகத்தவர்களின் நாயன், நான் எப்படி உனக்கு உணவளிப்பது?’ என்று பதில் கூறும் போது, அல்லாஹ் கூறுவானாம்;’ உனக்குத் தெரியாதா என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் உணவு கேட்டான், நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அங்கு என்னை கண்டிருப்பாய்.’ என்று கூறுவானாம். மேலும் ஆதமின் மகனே! நீ எனக்கு நீர் புகட்டவில்லையே! என்று அல்லாஹ் கூறுவானாம். அதற்கும் மனிதன் ‘இறைவா! நீ உலகத்தவர்களின் நாயன், நான் எப்படி உனக்கு நீர் புகட்டுவது?’ என்று பதில் கூறும் போது, அல்லாஹ் கூறுவானாம்;’ உனக்குத் தெரியாதா என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் நீர் கேட்டான், நீ அவனுக்கு நீர் பருக்கியிருந்த்திருந்தால் அங்கு என்னை கண்டிருப்பாய்.’ என்று கூறுவானாம்.  (முஸ்லிம்:6721)
இந்த ஹதீஸின் மூலம் அல்லாஹ் இந்த உலகில் எதனை விருபுகின்றான் என்பது சிந்திக்கும் அனைவருக்கும் தெளிவாகும். உழ்ஹிய்யா குர்பானி போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் அதனையே அல்லாஹ் விரும்புகின்றான். மனிதனின் இயல்புக்கு ஏற்றவிதத்தில் அவனை நடத்துகின்றான்.
இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இறப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் – இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.  (22:36)
உலகில் இருக்கும் அனைத்தும் உயிருள்ளதே!!
ஒருகாலம் இருந்தது மனிதன் அறிவில் பின்தங்கியவனாக இருந்தான். அந்த நேரம் உயிர் என்பது மனிதன், மிருகங்கள், பறவைகள் போன்ற கண்ணுக்கு உயிருள்ளதாகத் தெண்படுபவற்றுக்கே இருக்கின்றது, என்று என்னினான் மனிதன். ஆனால் இன்றைய நவீன உலகில் அறிவியல் வளர்ச்சியின் உச்சகட்டம் உயிரைக் கொல்லவில்லையாயின் மனிதன் வாழ முடியாது எனும் அளவுக்கு உலகில் இருக்கும் அனைத்துப் படைப்பினங்களுக்கும் உயிர் இருக்கின்றது என்ற நிலைக்கு மனிதன் வந்துவிட்டான். அந்த வகையில் பக்டீரியாக்கள், நுன்னங்கிகள், கிருமிகள், மரம், செடி, கொடிகள், கல், மண் என்று அனைத்தும் உயிருள்ளதகவே இன்றைய ஆய்வுகள் சொல்கின்றன. அந்த வகையில் மனிதனைப் பாதுகாப்பதற்காக எத்துனை கிருமிகளை அழிக்கின்றோம், மனிதன் வாழ்வதற்காக எத்துனை மரம் செடி கொடிகளை அழித்தோம் இப்படி மனிதனின் நலனுக்காக எத்துனை உயிர்களை அழித்தோம். இவற்றை யாரும் அநியாயம் என்றோ, உயிர் வதை என்றோ நோக்காமல் நலனுக்காக என்றல்லவா நோக்கினோம். அதே அடிப்படையில் மனிதனின் வாழ்வுக்காக கோழி, கொக்கு, மீன், பன்றி……போன்ற எத்தனையோ மிருகங்களையும் பரவைகளையும் கொல்கின்றோம். அப்படியிருக்க ஆடு, மாடு ஒட்டகங்களை மாத்திரம் அருப்பதை ஏன் மனித சமூகம் விமர்சிக்க வேண்டும். இப்படி விமர்சிப்பது ஞாயம் தானா!! அல்லது இந்த விமர்சனத்திற்குப் பின் காழ்ப்புணர்ச்சி, விரோதம், குரோதம்தானா இருக்கின்றது?. எனவே உலகில் நடந்தேரும் ஒவ்வொரு காரியத்தையும் விமர்சிப்பதற்கு முன் நடுநிலையாக (இறை கட்டலைக்கு இனங்கி) சிந்தித்தால் அதுவே மனித சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இப்போது அல்லாஹ் சொல்வதைக் கேளுங்கள்:
அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; (02:29)
மாமிசம் சாப்பிடுவது மனித இயல்பே!!
அடுத்து, உலகில் வாழும் மனித கோடிகளுள் பெரும்பான்மை சமூகம் (நாத்திகர்கள் தவிர) கடவுல் கொள்கையை (இந்த உலகம் தானாக வந்ததல்ல, மனிதனைப் படைத்த சிருஷ்டி இருக்கின்றான் என்ற கொள்கையை) ஏற்றவர்களாகத் தான் இருக்கின்றனர். அந்த அடிப்படையில் படைப்பாளன் அல்லாஹ் படைப்பினங்களைப் படைக்கும் போதே அவற்றின் இயல்பை வெளிப்படுத்திக் காட்டும் நிலையிலேயே படைத்துள்ளான். ஆடு, மாடு போன்ற தாவர உண்ணிகளை எடுத்துக் கொண்டால் அவற்றின் பல் வரிசையை எடுத்து நோக்கினால் அதன் இயல்பு தாவரம் உண்ணுவது என்பது விளங்கும், சிங்கம், புலி போன்ற வேட்டைப் பிராணிகளை எடுத்துக் கொண்டால் அவற்றின் பல் வரிசையில் வேட்டை பல் வெளிப்படையாகத் தெண்படும். அதன் மூலம் அவை வேட்டைப் பிராணிகள் என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஆனால் மனிதனை எடுத்துக் கொண்டால் அவனும் ஒரு மிருகமாக (ஆனால் பேச முடிந்தவன்)இருந்தாலும் அவன் இந்த இரண்டு இயல்புகளுக்கும் உற்பட்டவனாகவே இருக்கின்றான். அவன் மாமிசத்தையும், தாவர்த்தையும் உண்ணுபவனாக இருக்கின்றான். படைப்பாளன் அல்லாஹ் அதனை தெளிவுபடுத்தும் நிலையில் அதனது பல் வரிசையை வேட்டைப் பல் கொண்டதாகவும், அறைக்கும் பல் கொண்டதாகவுமே படைத்துள்ளான். எனவே மனிதன் மாமிசம் (ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி) உண்ணுவதை (காழ்ப்புணர்ச்சிக்காக) விமர்சிப்பது, தாம் ஏற்றிருக்கும் கடவுல் கொள்கைக்கு முறனானதாக இருப்பதுடன், கடவுலையே விமர்சிப்பதாக அமையும். இப்படி நடு நிலையாக (அனைவரும் ஏற்ற அடிப்படையில்) சிந்தித்தாலும் மனிதன் மாமிசம் சாப்பிடுவது ஞாயமானது என்று விளங்கும்.
ஆதிகால மனிதனும், காட்டுவாசிகளும், வேடர்களும் மாமிசமும்
காட்டுவாசிகளும், ஆதிகால மனிதர்களும் வேட்டையாடி மாமிசத்தை சாப்பிட்டதனாலே வேடர்கள் என்ற ஒரு சமூகமே உருவானது. நான் இதனை ஏன் இத்தலைப்பில் குறிப்பிடுகின்றேன் என்றால்; இன்று இஸ்லாத்தை ‘ஜீவகாரூன்யமற்ற மார்க்கம்’ என்று விமர்சிப்போர் யோசிக்க வேண்டும், காட்டு வாசிகள் வேட்டையாடியது, மாமிசத்தை சாப்பிட்டது, இஸ்லாம் காட்டிக் கொடுத்ததனாலா?! அல்லது மனிதனின் இயல்பு என்பதனாலா?! இஸ்லாத்தை விமர்சிக்கும் இவர்கள் காட்டு வாசிகளை வேடர்களை மனித சமூகமாக நோக்காதவர்களா?! நடு நிலையாக சிந்திப்போர் தெளிவு பெருவர்.
இலங்கையை ஆண்ட அரசர்கள்
இலங்கை வரலாற்றை எடுத்து நோக்கினால், இலங்கையை ஆண்ட அரசர்கள் எல்லோரும் வேட்டையாடுவதை பொழுதுபோக்காக வைத்துள்ளனர். மாமிசம் உண்ணுகின்ற பலக்கம் இல்லையென்றால் அவர்கள் ஏன் வேட்டையாட வேண்டும்! இஸ்லாம்தான் அவர்களுக்கு மாமிசம் சாப்பிடுவதை காட்டிக் கொடுத்ததா?! அவர்களை, ஏன் இஸ்லாத்தை விமர்சிக்கும் இலங்கையர்கள் விமர்சிக்கவில்லை. இப்படி பலவழிகளில் நேர்மையாக சிந்தித்தால் உண்மை விளங்கும். இல்லையென்றால் அரண்டவன் கண்ணுக்கு இருன்டதெல்லாம் பேய் என்ற கதைதான்.
இஸ்லாத்திற்கு முன் வாழ்ந்தவர்களும்  மாமிசமும்
இஸ்லாம் மார்க்கம் என்பது முஹம்மது நபியவர்களின் வருகையுடனே (1447 வருடங்களுக்கு முன்னர்) முற்றுப் பெற்றது. அவர்கள் நபியாக வருவதற்கு முன்னர் இருந்த மக்கா வாழ் மனிதர்களின் நிலையைப் பார்த்தால் அவர்களும் மாமிசம் சாப்பிடுபவர்களாகவே இருந்தனர். எனவே அந்தக் காலத்து மக்கள் அதை செய்து வந்திருக்கும் போது, ஏதோ இஸ்லாம் தான் மனித இனத்துக்கே மாமிசம் சாப்பிடுவதை அறிமுகப்படுத்தியது போன்று இஸ்லாத்தை விமர்சிப்பது அறிவுள்ள எந்த மனிதனுக்கும் பொருந்தாது.
இன்னும் அவர்கள்(மக்கா முஷ்ரிக்குகள்)  (தம் கால்நடைகளைக் குறிப்பிட்டு) “ஆடு, மாடு, ஒட்டகம்; விவசாயத்தில் காணும் இந்த விளைச்சல் ஆகியவற்றை நாம் விரும்புபவர்களைத் தவிர வேறு யாரும் புசிப்பது தடுக்கப்பட்டுள்ளது” என்று கூறுகின்றனர்;…….(06:138)
மேலும் அவர்கள், “இந்தக் கால் நடைகளின் வயிற்றில் இருக்கும் குட்டிகள் எங்கள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம். அவை எங்கள் பெண்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளன – அவை செத்துப் பிறந்தால், அவற்றில் அவர்களுக்கும் பங்கு உண்டு” என்றும் கூறுகிறார்கள்;  (06:139)
எனவே இந்த வசனங்கள் அன்றைய மக்கள் மாமிசம் சாப்பிட்டனர் என்பதை தெளிவு படுத்துகின்றது.
இஸ்லாம் செய்தது என்ன?
இப்படி மனித இயல்பில் காணப்பட்ட மாமிச உணர்வினால் அவன் எப்படியும் மாமிசத்தை சாப்பிட தயாரானான். அப்படிப்பட்ட மனிதனுக்கு மாமிசத்தை சாப்பிடக் கூடாது என்பது தீர்வாக அமையாது. (அப்படி தடை செய்து வைத்திருப்பவர்கள் திருட்டுத் தனமாக சாப்பிடுவதைப் பார்க்கலாம்) அந்த வகையில் அதற்கான ஒழுக்கங்களை காட்டிக் கொடுத்ததே, இஸ்லாம் செய்த வேலை. இதற்குத் தான் இஸ்லாத்தை விமர்சிப்பதா?!
இஸ்லாம் காட்டிய ஒழுக்கம்
ஒரு சாதாரண அறிவுள்ள மனிதனும் இஸ்லாம் காட்டிய ஒழுக்கங்களை படித்தால் இஸ்லாம் மிருக வதைக்கு எதிரான மார்க்கம் என்பதையும், உலகிற்கு பொருத்தமான மார்க்கம் என்பதையும் விளங்கிக் கொள்வான்.
அந்த சமூகம் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிட்டது. படைத்தவனை அல்லாஹ் என்று ஏற்றுவிட்டு வேறு தைவங்களுக்கு அறுத்துப் பலியிடுவது அல்லாஹ்வுக்கு செய்யும் துரோகம் என்ற அடிப்படையில், அல்லாஹ்வுக்காக மாத்திரம் அறுக்கச் சொல்லியிருப்பதோடு, அவனுக்காக அறுத்ததை மாத்திரமே சாப்பிடவும் சொன்னது இஸ்லாம். (இதனை புரியாத இலங்கை வாழ் விமர்சகர்களே இதனை ஹலாலுக்கு விலக்கமாக சொல்லி சமூகத்தை குலப்பினர்)
(முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்புவோராக இருப்பின் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அறுக்கப்பட்டவற்றின் மாமிசத்தையே) புசியுங்கள்.119. அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது? நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான் – ஆனால் பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள்; வரம்பு மீறிச்செல்பவர்களை நிச்சயமாக உம் இறைவன் நன்கு அறிகிறான்.120. (முஃமின்களே!) “வெளிப்படையான பாவத்தையும், அந்தரங்கமான பாவத்தையும் விட்டுவிடுங்கள். நிச்சயமாக எவர்கள் பாவத்தைச் சம்பாதிக்கின்றனரோ, அவர்கள் சம்பாதித்தவற்றுக்குக் கூலி கொடுக்கப்படுவார்கள்.121. எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் – நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் – நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள்.  (06:118 -121)
صحيح البخاري:    عن رافع بن خديج قال قال رسول الله : مَا أَنْهَرَ الدَّمَ، وَذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ فَكُلُوهُ
நபி(ஸல்), அவர்கள், ‘இரத்தத்தை ஓடச் செய்கிற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை உண்ணுங்கள்;என்று கூறினார்கள்……(புஹாரி:2488,முஸ்லிம்)
கல்லாலும் பொல்லாலும் அடித்து கொலை செய்யும் வழமை இருந்தது, இன்றும் இருக்கின்றது. அப்படி செய்வதை தடை செய்து, இரத்தத்தை ஓட்டும் அளவுக்கு கூர்மையான ஒரு பொருளால் அறுக்கச் சொன்னது. மேலும் துடிக்கத் துடிக்க உரிக்காமல் அறுத்ததை ஓய்வாக விடவும் சொன்னது இஸ்லாம். இப்படி வழிகாட்டியது தவரா?! அல்லது இஸ்லாத்தின் மீது கால்ப்புணர்வா?!
صحيح مسلم :  عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ، قَالَ: ثِنْتَانِ حَفِظْتُهُمَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللهَ كَتَبَ الْإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ، فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ، وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ، وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ، فَلْيُرِحْ ذَبِيحَتَهُ»،
ஷத்தாத் பின் அவ்ஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபியவர்களிடமிருந்து இரண்டு விடயங்களை மனனமிட்டேன்; நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் அதற்குறிய உரிமையை கடமையாக்கியுள்ளான், எனவே நீங்கள் கொலை செய்தால் நல்லமுறையில் கொலை செய்யுங்கள், நீங்கள் அறுத்துப் பலியிட்டால் நல்லமுறையில் அறுங்கள், உங்களில் ஒருவர் (அறுக்க முன்) தன் கத்தியை நன்றாக தீட்டிக் கொள்ளட்டும்,(அறுத்த பின்) தன் மிருகத்தை ஓய்வாக இருக்க விடட்டும். (முஸ்லிம்:5167)
*சிந்திக்கும் திறன் படைத்த ஒவ்வொருவரும் இந்த ஹதீஸை மாத்திரம் சிந்தித்தால் இஸ்லாத்தின் பெருமதி தெளிவாக விளங்கும்.
அடுத்து பால் கொடுக்கும் பிராணிகளையும், கன்றுக் குட்டிகளையும் அருத்து பலியிடும் வழமையும் இருந்தது. அதனையும் இஸ்லாம் தடுத்து நிருத்தியது.
நபி (ஸல்) அவர்களும் அபூ பக்ர், உமர் (றழி) ஆகியோரும் ஓர் அன்சாரி நபித் தோழரின் வீட்டிற்கு உணவுக்காக சென்றபோது, ‘பாலூட்டும் பிராணியை அறுப்பதை நான் எச்சரிக்கின்றேன்,’ என்று நபியவர்கள் கூறினார்கள்.  (முஸ்லிம்:5434)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் முஸின்னத்தான (ஒரு வயது பூர்த்தியான) மிருகத்தைத் தவிர அறுக்க வேண்டாம், அதனை அடைந்து கொள்வது கஸ்டமாக இருந்தால் ஜத்அத்தை (ஆறு மாதம் பூர்த்தியான) மிருகத்தை பழியிடுங்கள். (முஸ்லிம்: 5194)
இப்படிப் பட்ட ஒழுக்கங்களை அறிமுகப் படுத்தியதே மனித குளத்திற்கு இஸ்லாம் செய்த சேவை. அல்லாமல் மாமிசம் சாப்பிட்டவன்தான் முஸ்லிம் என்று இஸ்லாம் ஒரு போதும் கூறியதுமில்லை. மாமிசம் சாப்பிடாமலும் ஒருவன் முஸ்லிமாக வாழலாம். ஆனால் மாமிசம் சாப்பிடுவதை, அல்லாஹ் ஹலாலாக்கியதை தடுத்தால் இஸ்லாத்தை விட்டு வெளியேர வேண்டி வரும். அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக.
இஸ்லாமும் மிருக வதையும்
முன்னால் சொல்லப்பட்ட அடிப்படையில் நாம் விளங்கிக் கொண்டால் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப் படுத்தலாமா! முடியாதா என்று எம்மால் புரிந்து கொள்ள முடியும். அடுத்து இஸ்லாத்தின் பெருமதியை விளங்குவதற்காக இஸ்லாம் எப்படியெல்லாம் மிருகங்களுக்கு இரக்கம் காட்டச் சொன்னது, மிருகங்களை கொடுமைப் படுத்துவது எவ்வளவு விபரீதமானது, கொடுமைப் படுத்தியவர்களை எப்படி கண்டிக்கின்றது என்பதை நோக்குவோம்.
சுருங்கச் சொல்வதானால் மிருகங்களுக்கு கருனை காட்டுவதை கொள்கையாக (சுவர்க்கம், நரகம் என்று மறுமையோடு சேர்த்து சொல்வது) சொன்ன மார்க்கம் இஸ்லாம் மாத்திரமே. வாய்ப்பேச்சளவில்  வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தாமல் யாருக்கும் சொல்ல முடியும். இப்போது இஸ்லாம் சொல்லியிருப்பதை நோக்குவோம்.
பூனையை கொடுமை படுத்தி நரகம் நுளைந்தால் ஒரு பெண்
صحيح البخاري :  عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ حَبَسَتْهَا حَتَّى مَاتَتْ جُوعًا، فَدَخَلَتْ فِيهَا النَّارَ» قَالَ: فَقَالَ: وَاللَّهُ أَعْلَمُ: «لاَ أَنْتِ أَطْعَمْتِهَا وَلاَ سَقَيْتِهَا حِينَ حَبَسْتِيهَا، وَلاَ أَنْتِ أَرْسَلْتِهَا، فَأَكَلَتْ مِنْ خَشَاشِ الأَرْضِ»
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது அல்லாஹ்வே மிக அறிந்தவன் – ‘நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை” என்று அல்லாஹ் கூறினான்.  (புஹாரி:2365, முஸ்லிம்)
நாய்க்கு நீர் புகட்டிய விபாச்சாரிக்கு சுவர்க்கம்
صحيح البخاري :  عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: غُفِرَ لِامْرَأَةٍ مُومِسَةٍ، مَرَّتْ بِكَلْبٍ عَلَى رَأْسِ رَكِيٍّ يَلْهَثُ، قَالَ: كَادَ يَقْتُلُهُ العَطَشُ، فَنَزَعَتْ خُفَّهَا، فَأَوْثَقَتْهُ بِخِمَارِهَا، فَنَزَعَتْ لَهُ مِنَ المَاءِ، فَغُفِرَ لَهَا بِذَلِكَ “
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபசாரியான ஒரு பெண், ஒரு கிணற்றின் விளிம்பில் தன்னுடைய நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். அந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக் கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி (கிணற்று) நீரை இறைத்து அதற்குக் கொடுத்தாள். எனவே, அது பிழைத்தது. அவள் ஓர் உயிருக்குக் காட்டிய இந்தக் கருணையினால் அவளுக்கு (பாவ) மன்னிப்பு வழங்கப்பட்டது.  (புஹாரி:3321)
صحيح البخاري:  عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” بَيْنَا رَجُلٌ  يَمْشِي، فَاشْتَدَّ عَلَيْهِ العَطَشُ، فَنَزَلَ بِئْرًا، فَشَرِبَ مِنْهَا، ثُمَّ خَرَجَ فَإِذَا هُوَ بِكَلْبٍ يَلْهَثُ يَأْكُلُ الثَّرَى مِنَ العَطَشِ، فَقَالَ: لَقَدْ بَلَغَ هَذَا مِثْلُ الَّذِي بَلَغَ بِي، فَمَلَأَ خُفَّهُ، ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ، ثُمَّ رَقِيَ، فَسَقَى الكَلْبَ، فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ “، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَإِنَّ لَنَا فِي البَهَائِمِ أَجْرًا؟ قَالَ: «فِي كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ»
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தபோது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) ‘எனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்’ என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தன்னுடைய காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் அவரின் இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள். (புஹாரி:2363, முஸ்லிம்)
 
பாருங்கள் சகோதரர்களே! இதுதான் கொள்கை என்பது. இப்படி யார்தான் மிருகங்களுக்கு இரக்கம் காட்டுவதைப் பற்றி பேசுவார்கள்.
மனிதன் நட்டும் மரங்கள் மூலம் மிருகங்கள் பயனடைந்தால் அதுவும் சதகாவே (தர்மம்)
இன்றைய சடவாத உலகில் சண்டை சச்சரவுகளுக்கு காரணமே மற்றவனின் மிருகம், அல்லது பறவை தன் பயிரை மேய்வது தான். அதனால் உலகில் எத்துனை பிரச்சினை. ஆனால் மறுமையை நம்பி வாழும் ஓர் உண்மையான முஸ்லிம் மிருகங்கள், பறவைகள் செய்யும் செயலுக்காக மனிதனோடு சண்டை பிடிக்காமல், அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்ப்பான்.
صحيح مسلم:  عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ قَالَ لَا يَغْرِسُ مُسْلِمٌ غَرْسًا، وَلَا يَزْرَعُ زَرْعًا، فَيَأْكُلَ مِنْهُ إِنْسَانٌ، وَلَا دَابَّةٌ، وَلَا شَيْءٌ، إِلَّا كَانَتْ لَهُ صَدَقَةً»
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டினாலோ, ஏதாவது ஒன்றை பயிரிட்டாலோ அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை.  (புஹாரி:6012, முஸ்லிம்)
மிருகங்களுக்கு நெருப்பினால் அடையாளமிடுவது
இஸ்லாம் மிருகங்களை எந்த அளவுக்கு கண்ணியப்படுத்தியது என்றால் அவைகளது முகங்களை சூடு போட்டு அடையாளப்படுத்துவதை தடுத்தது மட்டுமல்லாமல், அப்படி செய்வது அல்லாஹ்வின் சாபத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தது. ஆனால் மிருக வதை பற்றி பேசும் சடவாத உலகு, மாடு போன்ற மிருகங்களை காயப்படுத்தி, ஊசி போன்ற வற்றால் குத்தி கொடுமைப் படுத்தும் விளையாட்டான ‘ஜல்லிக் கட்டு’ எனும் விளையாட்டை ஏன் அங்கீகரிக்க வேண்டும்?! ஏன் அதனை உரிமை மீரும் அம்சமாக பிரகடணப்படுத்தக் கூடாது!! மேலும் சில நாடுகளில் மிருகங்களை ஒரே வெட்டில் வெட்டும் போட்டிகளும் வைக்கப்படுகின்றன. இவையெல்லாம் தவராக விளங்காத மனிதனுக்கு ஏன் இஸ்லாம் மாத்திரம் காட்டுமிராண்டித் தனமாக விளங்கியது. இது கால்ப்புணர்ச்சியில்லையா?! சிந்திக்க மாட்டாதா அறிவுள்ள சமூகம்!!
صحيح مسلم :  عَنْ جَابِرٍ، قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ الضَّرْبِ فِي الْوَجْهِ، وَعَنِ الْوَسْمِ فِي الْوَجْهِ»
ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் முகத்தில் அடிப்பதையும், (மிருகங்களின்) முகத்தில் சுட்டு அடையாளமிடுவதையும் தடுத்தார்கள்.  (முஸ்லிம்:5672)
صحيح مسلم : عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَيْهِ حِمَارٌ قَدْ وُسِمَ فِي وَجْهِهِ فَقَالَ: «لَعَنَ اللهُ الَّذِي وَسَمَهُ»
ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் முகத்தில் சூட்டு அடையாளமிடப்பட்ட ஒரு கழுதைக்கு அருகாமையால் நடந்து சென்ற போது, ‘இதற்கு அடையாளமிட்டவரை அல்லாஹ் சபித்தான்.’ என்று கூறினார்கள்.  (முஸ்லிம்:5674)
உயிருள்ளவற்றை குறிப் பொருளாக பயன்படுத்தல்
மிருக வதையிலிருந்து மனிதனை பாதுகாக்க இஸ்லாம் காட்டிய மற்றொரு அம்சம்தான் உயிருள்ள எந்தப் பொருளையும் இலக்காக குறிப் பொருளாக பயன்படுத்தக்கூடாது என்பது, அப்படி யாராவது செய்தால் அவரும் அல்லாஹ்வின் சாபத்திற்குறியவராவார்.
صحيح مسلم :   عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ مَرَّ ابْنُ عُمَرَ بِفِتْيَانٍ مِنْ قُرَيْشٍ قَدْ نَصَبُوا طَيْرًا وَهُمْ يَرْمُونَهُ وَقَدْ جَعَلُوا لِصَاحِبِ الطَّيْرِ كُلَّ خَاطِئَةٍ مِنْ نَبْلِهِمْ فَلَمَّا رَأَوُا ابْنَ عُمَرَ تَفَرَّقُوا فَقَالَ ابْنُ عُمَرَ مَنْ فَعَلَ هَذَا لَعَنَ اللَّهُ مَنْ فَعَلَ هَذَا إِنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- لَعَنَ مَنِ اتَّخَذَ شَيْئًا فِيهِ الرُّوحُ غَرَضًا.
ஸஈதுப்னு ஜுபைர் (றழி) அவர்கள் கூறினார்கள்: இப்னு உமர் (றழி) அவர்கள், குரைஷி கூட்டத்தைச் சார்ந்த சில வாழிபர்களை கடந்து சென்றார்கள், அவர்கள் ஒரு பறவையை குறியாக வைத்து எறிந்து கொண்டிருந்தனர், தவறும் ஒவ்வொரு அம்புக்காகவும் பறவையின் சொந்தக் காரனுக்கு (சன்மானம்) வைத்தனர். இதனை இப்னு உமரவர்கள் கண்ட போது. ‘யார் இதனை செய்தது?’ ‘இப்படி செய்தவரை அல்லாஹ் சபிப்பானாக, ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், உயிருள்ள ஒன்றை இலக்காக, குறியாக ஏற்படுத்தியவரை சபித்தார்கள்.’ என்று கூறினார்கள்.  (முஸ்லிம்:5174)
صحيح مسلم :  جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنْ يُقْتَلَ شَىْءٌ مِنَ الدَّوَابِّ صَبْرًا.
ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், எந்த ஒன்றையும் சாகும் வரை கொடுமைப் படுத்தி கொல்வதை தடுத்தார்கள்.  (முஸ்லிம்:5175)

இப்படி இஸ்லாமியப் போதனைகளை எடுத்துக் கொண்டால் மிருகங்களை மதிக்கவேண்டும், அவற்றை கொடுமைப் படுத்தக்கூடாது, கொடுமைப் படுத்தியவருக்கு தண்டனை, மதித்தவருக்கு நற்கூழி என்று விபரித்திருப்பதைப் பார்க்கலாம். இவ்வளவு தெளிவாக இஸ்லாம் கூறியிருக்கும் போது இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் காமாலைக் கண்ணர்களாகத்தான் இருப்பார்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா? Empty Re: இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?

Post by செந்தில் Fri Nov 08, 2013 7:11 pm

கைதட்டல்  பகிர்வுக்கு நன்றி முகையதீன் கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum