தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பாவேந்தர் ஐயாவின் படைப்புக்கள்

View previous topic View next topic Go down

பாவேந்தர் ஐயாவின் படைப்புக்கள்  Empty பாவேந்தர் ஐயாவின் படைப்புக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 13, 2013 5:22 pm

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
என்று முழங்கிய பாவேந்தர் பாரதிதாசன்

பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர் சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.

பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழ் நடத்தி வந்தார்.

புரட்சிகவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற் பெயர் சுப்புரத்தினம். 1920 ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.

இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார்.

தமிழ்ப் மொழிப் பற்றும் முயற்சியால் தமழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லுரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.

இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்ளை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.

நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப் பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.

தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று கூற எமது கவிஞர் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார்.

இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேச மித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனை பெயர்களில் எழுதி வந்தார்.

பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமனற்ற உறுப்பினராக 1954 ஆம் ஆண்டு தேர்நதெடுக்கப்பட்டார்.

1946 ஜூலை 29 இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25000 பொற்காசும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1970 இல் சாகித்ய அகாதமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புக்கள் தமிழ்நாடு அரசினரால் 1990 இல் பொது உடமையாக்கப்பட்டது

மறைவு

கவிஞர் 21.4.64ல் இயற்கை எய்தினார். மலர்மன்னன் என்ற மகனும் மூன்று பெண்குழந்தைகளும் உள்ளனர்.

பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

தமிழுக்கு அமுதென்று பேர் - அந்த
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்

பாரதிதாசனின் ஆக்கங்கள்

* பாரதிதாசனின் கவிதைகள் (கவிதைத்தொகுப்பு)
* பாண்டியன் பரிசு (காப்பியம்)
* எதிர்பாராத முத்தம் (காப்பியம்)
* குறிஞ்சித்திட்டு (காப்பியம்)
* குடும்ப விளக்கு (கவிதை நூல்)
* இருண்ட வீடு (கவிதை நூல்)
* அழகின் சிரிப்பு (கவிதை நூல்)
* தமிழ் இயக்கம் (கவிதை நூல்)
* இசையமுது (கவிதை நூல்)
* அகத்தியன் விட்ட புதுக்கரடி
* பாரதிதாசன் பதிப்பகம் அமைதி
* செந்தமிழ் நிலையம்,இசையமுதம் (முதல் பாகம்)
* பாரதசக்தி நிலையம் (1944)
* இசையமுதம் (இரண்டாம் பாகம்)
* பாரதசக்தி நிலையம் (1952) இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்)
* குடியரசுப் பதிப்பகம் (1939)
* இருண்ட வீடு,முத்தமிழ் நிலையம் இளைஞர் இலக்கியம்
* பாரி நிலையம் (1967) உரிமைக் கொண்டாட்டமா?
* குயில் (1948) எதிர்பாராத முத்தம்
* வானம்பாடி நூற்பதிப்புக் கழகம் (1941)
* எது பழிப்பு
* குயில் (1948) கடவுளைக் கண்டீர்!
* குயில் (1948)
* கண்ணகி புரட்சிக் காப்பியம்
* அன்பு நூலகம் (1962) கதர் ராட்டினப் பாட்டு
* காசி ஈ.லட்சுமண பிரசாத் (1930)
* கற்புக் காப்பியம்
* குயில் (1960)
* காதல் நினைவுகள்,செந்தமிழ் நிலையம் (1969)
* காதல் பாடல்கள்,பூம்புகார் பிரசுரம் (1977)
* காதலா - கடமையா?,பாரதிதாசன் பதிப்பகம் (1948)
* குடும்ப விளக்கு (ஒரு நாள் நிகழ்ச்சி)பாரதிதாசன் பதிப்பகம் (1942)
* குடும்ப விளக்கு (திருமணம்)பாரதிதாசன் பதிப்பகம் (1950)
* குடும்ப விளக்கு (மக்கட் பேறு)பாரதிதாசன் பதிப்பகம் (1950)
* குடும்ப விளக்கு (விருந்தோம்பல்)
* முல்லைப் பதிப்பகம் (1944)
* குடும்ப விளக்கு (முதியோர் காதல்)
* பாரதிதாசன் பதிப்பகம் (1950)
* குயில் பாடல்கள்பூம்புகார் பிரசுரம் (1977)
* குறிஞ்சித் திட்டு,பாரி நிலையம்
* சஞ்சீவி பர்வதத்தின் சாரல்,பாரதிதாசன் பதிப்பகம் (1949)
* சேர தாண்டவம் (நாடகம்),பாரதிதாசன் பதிப்பகம் (1954)
* தமிழச்சியின் கத்தி,பாரதிதாசன் பதிப்பகம் (1949)
* தமிழியக்கம்,செந்தமிழ் நிலையம் தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு
* திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்
* தேனருவி இசைப் பாடல்கள்
* பாரதிதாசன் பதிப்பகம் (1955)
* நல்ல தீர்ப்பு (நாடகம்),முல்லைப் பதிப்பகம் (1944)
* நீலவண்ணன் புறப்பாடு
* பாண்டியன் பரிசு
* முல்லைப் பதிப்பகம் (1943) பாரதிதாசன் ஆத்திசூடி
* பாரதிதாசன் கதைகள்முரசொலிப் பதிப்பகம் (1957)
* பாரதிதாசன் கவிதைகள்,கடலூர் டி.எஸ்.குஞ்சிதம் (1938)
* பாரதிதாசன் கவிதைககள் (முதற்பாகம்)
* குடியரசுப் பதிப்பகம் (1944) பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் பாகம்)
* பாரதிதாசன் பதிப்பகம் (1952)
* பாரதிதாசன் நாடகங்கள்
* பாரி நிலையம் (1959) பாரதிதாசன் பன்மணித் திரள்
* முத்தமிழ்ச் செல்வி அச்சகம் (1964)
* பிசிராந்தையார், பாரி நிலையம் (1967)
* புரட்சிக் கவி,துரைராசு வெளியீடு (1937)
* பெண்கள் விடுதலை
* பொங்கல் வாழ்த்துக் குவியல்,பாரதிதாசன் பதிப்பகம் (1954)
* மணிமேகலை வெண்பா
* அன்பு நூலகம் (1962) மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது
* முல்லைக் காடு,காசி ஈ.லட்சுமண பிரசாத் (1926)
* கலை மன்றம் (1955) விடுதலை வேட்கை,
* உயிரின் இயற்கை,மன்றம் வெளியீடு (1948)
* வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும்,குயில் புதுவை (1959)
* தமிழுக்கு அமுதென்று பேர்
* வேங்கையே எழுக ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது
* புகழ் மலர்கள் நாள் மலர்கள்
* தலைமலை கண்ட தேவர் (நாவலர்கள்)பூம்புகார் பிரசுரம் (1978)

நன்றி ;முக நூல்

[You must be registered and logged in to see this image.]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பாவேந்தர் ஐயாவின் படைப்புக்கள்  Empty Re: பாவேந்தர் ஐயாவின் படைப்புக்கள்

Post by ஸ்ரீராம் Thu Nov 14, 2013 8:54 am

இவற்றில் ஒரு சிலவற்றை படித்துள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பாவேந்தர் ஐயாவின் படைப்புக்கள்  Empty Re: பாவேந்தர் ஐயாவின் படைப்புக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 14, 2013 9:45 am

இவற்றில் ஒரு சிலவற்றை படித்துள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி
கைதட்டல் கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பாவேந்தர் ஐயாவின் படைப்புக்கள்  Empty Re: பாவேந்தர் ஐயாவின் படைப்புக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum