Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
நான் மரிப்பதில்லை!
Page 1 of 1 • Share
நான் மரிப்பதில்லை!
செத்தபின்பு அழுவதற்கு
சொந்தமொன்று வேண்டுமென்று
வாழும்போது அழும்மனித சாதி -அதற்கு
விலக்காகும் கவிஞனவன் சேதி!
காலமெனும் ஆழியிலே
குமிழிஇந்த மானுடமே
அலையாவான் கவிஞனவன் மட்டும் -இது
ஆண்டவன் எழுதிவைத்த சட்டம்!
பிறப்புண்டு இறப்பில்லை
சிறப்போன்றே எனதெல்லை
குறிப்பின்று எழுதிவிட்டேன் கவியில் -வரும்
காலமிதை உரைக்குமடி புவியில்!
நாடிநரம் பத்தனையும்
ஓடிவிளை யாடுதமிழ்
கூடிவரச் செய்யுமடி நாட்டை -இவன்
புகழ்பாடி நிரப்புமடி ஏட்டை
தனிமரமாய் வாழ்வதேனும்
கனிமரமாய் வாழ்ந்திருப்பேன்
தமிழ்மரமாய்த் தழைத்திருப்பேன் உலகில் -வரும்
தலைமுறைகள் இளைப்பாறும்என் நிழலில்!
சூழ்நிலைதான் என்செய்யும்?
சூழ்வினைதான் என்செய்யும்?
ஊழ்வினையும் ஒதுங்குமடி கண்டு -அந்த
வலிமையிவன் தமிழுக்கே உண்டு!
விழுதுவிடத் தமிழ்விருட்ஷம்
எழுதிவிட வந்தவன்காண்
புழுதிபட மறைந்திடாத கவிஞன் -இவன்
புதிய பாரதிகளின் தலைவன்!
இவன்கொண்ட கர்வமிது
இவன்கொண்ட கர்வமன்று
தமிழ்கொண்ட ஆண்மைஎனக் கூறு -இது
தமிழன்னை எனக்களித்த சீரு!
கம்பனுடன் வள்ளுவனும்
இளங்கோவும் பாரதியும்
கண்ணனவன் தாசனென நீளும் -அந்த
வரிசையிலே வாழ்ந்திருப்பேன் நானும்!
சுற்றுமண்ட சராசரமாய்
சுழன்றுவிழ மானுடமே
பெற்றுவந்தேன் புலமைஎனும் சாட்டை -நான்
சாவதில்லை முத்தமிழின் கோட்டை!
--------------ரௌத்திரன்
சொந்தமொன்று வேண்டுமென்று
வாழும்போது அழும்மனித சாதி -அதற்கு
விலக்காகும் கவிஞனவன் சேதி!
காலமெனும் ஆழியிலே
குமிழிஇந்த மானுடமே
அலையாவான் கவிஞனவன் மட்டும் -இது
ஆண்டவன் எழுதிவைத்த சட்டம்!
பிறப்புண்டு இறப்பில்லை
சிறப்போன்றே எனதெல்லை
குறிப்பின்று எழுதிவிட்டேன் கவியில் -வரும்
காலமிதை உரைக்குமடி புவியில்!
நாடிநரம் பத்தனையும்
ஓடிவிளை யாடுதமிழ்
கூடிவரச் செய்யுமடி நாட்டை -இவன்
புகழ்பாடி நிரப்புமடி ஏட்டை
தனிமரமாய் வாழ்வதேனும்
கனிமரமாய் வாழ்ந்திருப்பேன்
தமிழ்மரமாய்த் தழைத்திருப்பேன் உலகில் -வரும்
தலைமுறைகள் இளைப்பாறும்என் நிழலில்!
சூழ்நிலைதான் என்செய்யும்?
சூழ்வினைதான் என்செய்யும்?
ஊழ்வினையும் ஒதுங்குமடி கண்டு -அந்த
வலிமையிவன் தமிழுக்கே உண்டு!
விழுதுவிடத் தமிழ்விருட்ஷம்
எழுதிவிட வந்தவன்காண்
புழுதிபட மறைந்திடாத கவிஞன் -இவன்
புதிய பாரதிகளின் தலைவன்!
இவன்கொண்ட கர்வமிது
இவன்கொண்ட கர்வமன்று
தமிழ்கொண்ட ஆண்மைஎனக் கூறு -இது
தமிழன்னை எனக்களித்த சீரு!
கம்பனுடன் வள்ளுவனும்
இளங்கோவும் பாரதியும்
கண்ணனவன் தாசனென நீளும் -அந்த
வரிசையிலே வாழ்ந்திருப்பேன் நானும்!
சுற்றுமண்ட சராசரமாய்
சுழன்றுவிழ மானுடமே
பெற்றுவந்தேன் புலமைஎனும் சாட்டை -நான்
சாவதில்லை முத்தமிழின் கோட்டை!
--------------ரௌத்திரன்
Re: நான் மரிப்பதில்லை!
இங்குத் தங்களைக் காண்பதில் மகிழ்கின்றேன்... பல மாதங்களாகத் தங்கள் கவிதையைப் படிக்க முடியாமல் ஏமாற்றமுற்றிருந்தேன்... ஏமாற்றமளிக்காமல் இனி தொடருங்கள்... பாராட்டுகள்
Re: நான் மரிப்பதில்லை!
நல்லது நண்பரே! தொடர்கிறேன். சினிமா சமாசாரங்களால் நானும் உங்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் போய்விட்டது. எனது "பௌர்ணமி அலைகள்" கவிதைத் தொகுப்பு விரைவில் அனுப்பி வைக்கிறேன். மீண்டும் பேசுவோம். நன்றி!
Re: நான் மரிப்பதில்லை!
மகிழ்ச்சி... புத்தகம் அனுப்பி வையுங்கள்... ஆய்வுக்குப் பயன்படுத்திக் கொள்கிறேன்...
Re: நான் மரிப்பதில்லை!
நாடிநரம் பத்தனையும்
ஓடிவிளை யாடுதமிழ்
கூடிவரச் செய்யுமடி நாட்டை -இவன்
புகழ்பாடி நிரப்புமடி ஏட்டை
உங்களுக்கே உங்கள் கவிதை


thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|