Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
இணையவெளி யுத்தம் 2020
Page 1 of 1 • Share
இணையவெளி யுத்தம் 2020
இணையவெளி (cyber space) இதை கேட்கும் பொழுது நமக்கு நினைவுக்கு வருவது இணைய தளம் மற்றும் அதை சார்ந்த சமூக வலை தளங்களும் தான். அதற்கெல்லாம் அப்பால், ஒவ்வொரு தேசத்தின் இன்றியமையாத தொழில் நுட்பம் குறித்த தகவல்கள் மற்றும் இன்றியமையா செய்திகள் இணையத்தின் மூலம் பகிரப் படுகிறது. ஒவ்வொரு வளர்ந்த நாடும் மற்ற நாடுகளின் தகவல் பரிமாற்றத்தை ரகசியமாக கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. WikiLeaks மற்றும் ஸ்னோடன் மூலமாக NSA மற்றும் பல்வேறு நாடுகளின் ரகசியங்கள் மற்றும் உளவு வேலைகள் இந்த உலகக்கு பகிரங்க படுத்தப் பட்ட நிகழ்வுகள் சமீப காலங்களின் நடந்தேறின. பின்புலத்தில் ஒவ்வொரு நாடும் அதற்கு சமமான அல்லது அதற்கு போட்டியாக கருதப்படும் நாட்டின் ரகசியங்களை கையகப்படுத்துவதில் மிகுந்த ஆர்வமும் ஓரளவுக்கு வெற்றியும் கண்டுள்ளன என்பது இதன் மூலம் தெள்ளந்தெளிவாக தெரிகிறது. கூகிள் மற்றும் பல தேடல் பொறிகள் (search engines) இணைய தளம் உபயோகிப்பவரின் விவரங்களை சேகரிப்பது அனைவரும் அறிந்ததே.
ஒவ்வொரு நாடும் தற்சமயம் ராணுவ தளவாடங்களை தேவையான அளவிற்கு வைத்திருந்தாலும் வழக்கமான போர் தந்திரங்கள் மற்றும் யுத்திகளால் மட்டுமே அவர்கள் விரும்பும் global super power or regional super power அந்தஸ்தை அடைய முடியாது என்பதை மிக நன்றாகவே உணர்ந்திருக்கின்றன. அமெரிக்காவின் NSA நிறுவனத்தின் ரகசிய வேலைகள் snowden மூலம் அம்பலப்படுத்த பட்டது நாம் அனைவரும் அறிந்ததே. மேலும் யுத்தத்தினால் ஏற்படும் அழிவுகளும் பின்விளைவுகளும் என்ன என்பதை எல்லா நாடுகளும் நன்றாகவே உணர்ந்திருக்கின்றன. இருந்தாலும் ராணுவ தளவாடங்களின் குவிப்புக்கு காரணம் உலக அரங்கில் தாங்களும் மிக வலிவானவர்கள் என்று நிரூபிப்பதற்கு மட்டுமே. அணு ஆயுத ஒழிப்பு பற்றி உலக அரங்கில் எல்லா நாடுகளும் வாய் கிழிய பேசினாலும் அணு ஆயுத தளவாடங்களை தயாரிப்பதிலும், கையக படுத்துவதிலும் ரகசியமாக ஈடுபட்டுள்ளன.
இன்றைய சூழலில் எல்லா நாடுகளும் ராணுவ தளவாடங்களை தேவையான அளவு வைத்திருந்தாலும் போர் மூளும் அபாயமோ சூழலோ இல்லை என்றே கூறலாம். ஏனெனில் ஒவ்வொரு வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் மற்றுமொரு போர் மூண்டால் அதனால் ஏற்படும் சாதக பாதகங்களை நன்றாகவே உணர்ந்து இருக்கின்றனர். இரண்டாம் உலகப் போருக்கு பின் ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகள் போர் அறைகூவல் விடுப்பது என்பது வேலைக்கு ஆகாது என்பதை நன்கு உணர்ந்து இருக்கின்றன.
இதற்கு தற்போதய உலக மயமாக்கல் மற்றும் தாராள மயமாக்கல் கொள்கைகளே காரணம். ஒவ்வொரு வளர்ந்த நாடும் பிற நாடுகளை சார்ந்து இருக்கின்றன. தகவல் தொழில் நுட்ப புரட்சி இதற்கு வித்திட்டது என்றே கூறலாம். ஆனாலும் யார் super power என்பதை நிலை நிறுத்த வளர்ந்த நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது என்பது மறக்க முடியாத உண்மை. இதில் ஒரு எதிர்பாரா திருப்பம் என்னவென்றால் சீனா கம்யூனிச கொள்கைகளை பின் தள்ளி உலக மயமாக்கலையும் தாரள மயமாக்கலையும் அனுமதித்தது. சந்தடியில்லாமல் தகவல் தொழில் நுட்ப புரட்சியில் கால் பதித்து மலிவு விலையில் modem, datacard போன்ற பிணைய சாதனங்கள் (network devices) தயாரித்து உலக சந்தையில் விற்றுக் கொண்டிருக்கிறது.
சைனாவின் இந்த வளர்ச்சி அமெரிக்காவிற்கு வயிற்றில் புளியை கரைக்கிறது என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. காரணம் தெற்கு ஆசிய நாடுகளில் தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் அமெரிக்கா இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தங்கள் (bilateral security agreements) போட்டு அவர்களை தனது கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் சீனாவிடம் அமெரிக்காவின் big brother attitude பலிக்கவில்லை. சீனா தனது பலவீனத்தையே பலமாக மாற்றக்கூடிய உத்தியை கையாண்டு அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும். இங்கு நான் பலவீனம் என சொல்வது சீனாவின் மக்கட்தொகையை தான். தன்னிடம் இருக்கும் மனித வளத்தை கொண்டு மலிவு விலை உற்பத்தி உத்தியை கையாண்டு தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது. சாமானியர்கள் கையில் இன்று கைபேசி (mobile phones) இருப்பதற்கு சீனாவின் இந்த உத்தியே காரணம்.
இதை ஏற்றுக்கொள்ள இயலாமல் அமெரிக்கா சீனாவில் தயாராகும் பொருட்கள் தரமற்றவை என்று கூறுவது ஒரு பக்கம் இருந்தாலும், சீனா தான் தயாரிக்கும் பிணைய சாதனங்கள் (network devices) மூலம் வேவு பார்க்கும் உத்தியை கையாள்கிறது என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளது. சீனாவின் Huwai நிறுவனம் தயாரிக்கும் பொருட்கள் பாதுகாப்பானவை அல்ல என்று அமெரிக்கா அலறினாலும், சீனா எங்கே நிரூபித்து காட்டு என்று அறைகூவல் விடுத்துக் கொண்டு இருக்கிறது.
ஆனாலும் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை புறம்தள்ள முடியாது. சீனா ஆரம்பம் முதலே ஒரு முடிவுடன் இருப்பதாகவே தோன்றுகிறது. ஏனெனில் சீனா தனது முக்கிய நிறுவல்களில் (critical installations) apple, Microsoft போன்ற அமெரிக்க நிறுவங்களின் இயக்க முறைமைகள் (operating systems) இல்லாமல் சீன தொழில்நுட்பத்தால் உருவான சீன மொழி operating systems களையே உபயோகிக்கிறது. மிகவும் பிரபலமல்லாத மற்றும் சீனமொழில் உருவாக்கப்பட்ட மென்பொருட்கள் குறைந்த தாக்குதலுக்கு உட்படும் என்ற நம்பிக்கையும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அமெரிக்கா இணையவெளியை (cyber space) தரை, கடல், வான் மற்றும் வெளி (land, sea, sky and space) இவைகளுடன் சேர்த்து ஐந்தாவது பாதுகாப்பு முறை (fifth domain) என கணக்கில் கொண்டுள்ளது. இதெற்கெல்லாம் காரணம் 1990 களில் இணையதளம் பிரசித்தி அடையாத கால கட்டங்களில் சீன மற்றும் தைவானின் cyber activists ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்திக் கொண்டனர். இது மட்டும் அன்றி வட கொரியா அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணையதளங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை செயல் இழக்க செய்தது (Denial of Service-DoS attacks).
இன்றைய நிலையில் பெரும்பாலும் இணையதள தாக்குதல்கள் அந்தந்த நாட்டு அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படும் (state sponsored)செயலாகவே தோன்றுகிறது. 1991இல் வளைகுடா போரில் அமெரிக்கா கையாண்ட உத்தி தற்போது மற்ற நாடுகளுக்கு ஒரு வழிகாட்டுதலாக அமைந்தது. 1991இல் அமெரிக்கா தனது இணைய ஆதிக்கத்தால் முக்கியமான தகவல்களை திரட்டி அவற்றின் மூலம் தனது போர் தந்திரத்தை அமைத்துக் கொண்டது அதன் மூலம் வெற்றியும் கண்டது. அமெரிக்காவின் இந்த செயல் மற்ற நாடுகளை தங்கள் தகவல் தொழில் நுட்பத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள யோசிக்க வைத்தது. அதன் விளைவு தான் ஒவ்வொரு நாடும் தங்களது தகவல் கசிவு (data leakage)ஐ தடுக்க National Firewall System உருவாக்க காரணமாக அமைந்தது. இதனால் அரசாங்கங்களின் தகவல் தொழில் நுட்பம் பாதுகாப்பாக உள்ளதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இணைய போராளிகள் (state sponsored cyber warriors) பலவேறு உத்திகளை கையாண்டு எந்த விதமான பாதுகாப்பு வளையத்தையும் உடைக்கக் கூடிய திறன் கொண்டுள்ளனர். அவர்களுக்கு வேண்டிய தொழில்நுட்பம், பணம், பொருள் உதவி போன்றவை அந்தந்த அரசாங்கத்தால் தரப் படுகிறது.
இன்றைய கால கட்டத்தில் தகவல் தொழில் நுட்பம் மூலம் எல்லாமே சாத்தியம் என்ற நிலையில் வல்லரசு யார் என்ற போட்டியில் அமெரிக்காவும் சீனாவும் நிழல் யுத்தம் செய்கின்றன. அமெரிக்கா அக்டோபர் 2012இல் சோதனை செய்த CHAMP (Counter-electronics High-powered Microwave Advanced Missile Project) இதற்கு ஆதாரம். இந்த தொழில் நுட்பம் மூலம் எந்த ஒரு அரசாங்கத்தின் தகவல் தொழில் நுட்ப மையத்தை செயலிழக்க செல்லலாம். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த நாட்டின் பொருளாதரத்தையும், அரசு எந்திரத்தையும் மட்டும் அன்றி மிக முக்கிய நிறுவனங்கள் (Railways, Telecommunication, Shipping, space, air, nuclear, banking, stock market etc.) அனைத்தயும் செயலிழக்க செய்யும். இது ஒரு முயற்சி தான் என்றாலும் இத்தகைய தளவாடங்களை வளர்ந்த நாடுகள் தங்களது ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை.
வரலாறு நமக்கு தெரிவிக்கும் ஒரு செய்தி என்னவென்றால் இன்று உனது நாளை எனது என்ற தத்துவம்தான். ஒருங்கிணைத்த ரஷ்யா தயாரித்த அணு ஆயுதங்கள் குறுகிய காலத்தில் மற்ற நாடுகளால் தயாரிக்கப் பட்டதை போல, champ technologyயும் மற்ற நாடுகளால் கையக படுத்தப் படுமானால், போர்க் காலத்தில் எதிரி நாட்டின் வீரர்களை சுமந்த முதல் விமானம் தரையிறங்கும் முன்பே தாக்கப்படும் நாட்டின் தகவல் தொழில் நுட்ப மையங்கள் செயலிழந்து விடும். மனித உயிருக்கோ அல்லது கட்டிடங்களுக்கோ எந்தவித பாதிப்பும் இராது என்பதுதான் இதன் சிறப்பு. தகவல் தொழில் நுட்பம் பாதிக்கப்படும் வேலையில், அந்த நாடு மீண்டு வருவது என்பது மிக்க கடினமான செயல் ஆகிவிடும். அதன் பிறகு எதிரி நாட்டுக்கு வெற்றி என்பது மிகவும் சுலபமான ஒன்று ஆகிவிடும். Champ Missile செலுத்த கன ரக போர் விமானங்கள் தேவையில்லை, சாதாரண சிறு ரக பயணிகள் விமானமே போதும். அமெரிக்கா தனது சோதனைக்காக boeing பயணிகள் விமானத்தையே உபயோக படுத்தியது என்பது கொசுறு செய்தி.
"[b]கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது"[/b] - நமது நாட்டு சுதந்திரத்திற்காக மகாகவி பாரதி சொல்லியது இன்றைய கால கட்டத்திற்கும் பொருந்துகிறது.
Last edited by sreemuky on Fri Feb 21, 2014 9:12 pm; edited 1 time in total (Reason for editing : formatting)
Re: இணையவெளி யுத்தம் 2020
நல்லதொரு பகிர்வு. யோசிக்க வைக்கும் நல்ல பகிர்வை அளித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|