தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by முழுமுதலோன் Sun Mar 30, 2014 11:48 am

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இருக்கணுமா? இத படிங்க...

நமக்கு எத்தனை வயதானாலும், அழகாகவும் கவர்ச்சியாகவும் தோற்றமளிக்க வேண்டுமென்று நாம் அனைவரும் விரும்புவோம். மேலும் வயது ஆக ஆக நமக்கு அந்த ஆசை மேலும் பெருகும். அதேப்போல் வயது அதிகமாக, நமது அறிவும் கூடும். அதன் காரணமாக, நமக்கு நமது தொழில், உறவுகள், வாழ்க்கை முறை போன்றவற்றில் உள்ள ஞானமும், ஈடுபாடும் அதிகமாகி, நமக்கு நல்லதொரு உறுதியான நம்பிக்கையை அளிக்கிறது. இதன் காரணமாக ஒரு பாதுகாப்பு உணர்வும் வளர்கிறது.

இப்போது வயதாவதன் காரணமாக உடல் கவர்ச்சி குறைந்து விடாமல் பாதுகாக்கவும், உடல் அழகை நவீன ஃபேஷன்களுக்கு ஈடாகப் பேணுவதற்கும் சில குறிப்புகள் கீழே அளிக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி வந்தால், வயதானாலும் கவர்ச்சியும் அழகும் குறையாமல் இருக்கும்.




எளிமையாக இருக்கவும்

பொதுவாக ஷாப்பிங் செய்யப் போகும் போது நிறைய பொருட்களை வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வோம். ஆனால் அவ்வாறு செல்லாமல் மிகவும் எளிமையான பொருட்களை வாங்க வேண்டுமென்ற எண்ணத்துடன் செல்வதே சிறந்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் பகட்டான உடையணிந்து செல்வது, அதிகமான அலங்காரங்களோடு செல்வது, விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களை அணிந்து கொள்வது என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. தற்போது இளைய தலைமுறையினர் எல்லாம் மிகவும் எளிமையான ஆடைகளில் வலம் வரத் தொடங்கிவிட்டார்கள். தற்போதைய ஃபேஷன் எது தெரியுமா? சுருக்கமில்லாத, மடிப்புக்கலையாத, தூய்மையான, எளிமையான அடைகளை அணிவது தான். எனவே உங்களைக் கௌரவப்படுத்திக் காட்டும் வண்ணம், சுருக்கமில்லாத, மடிப்புக் கலையாத, தூய்மையான, எளிமையான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty Re: 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by முழுமுதலோன் Sun Mar 30, 2014 11:50 am

சிறந்த தையல்காரரைத் தேர்ந்தெடுக்கவும்

உங்களுக்கு 40 வயது கடந்துவிட்டதா? இனிமேல் உங்களுக்குப் பொருத்தமான ரெடிமேட் ஆடைகளைத் தேடித் தேர்ந்தெடுப்பது கடினம். அதற்காக நேரத்தினை செலவு செய்யவும் நேரம் இருக்காது. ஆகவே உங்களுக்குப் பொருத்தமாக, நீங்கள் விரும்பிய வண்ணம் உங்கள் ஆடைகளை உங்களுக்காகத் தைத்துத் தரத்தக்க ஒரு சிறந்த தையல்காரரைத் தேடித் தேர்ந்தெடுங்கள். உடைகளில் அல்லது அளவில் ஏதேனும் சிறு சிறு மாற்றங்கள் வேண்டுமென்றாலும், அவர் செய்து தருவார். உங்களுடைய உடல் அளவிற்குக் கச்சிதமாக அமையும் வண்ணம் அளவெடுத்துத் தைக்குமாறும், உடைகளின் மேலுள்ள தையல்களை அழகாகத் தெரியுமாறு தைக்குமாறும், நவீன ஃபேஷன்களுக்கு ஏற்றாற் போலவும், கம்பீரத்தினைக் கூட்டிக் காட்டும் வண்ணம் ஆடைகளின் வடிவமைப்பு இருக்குமாறும் பார்த்துக் கொள்ளுமாறு தையல்காரருக்கு அறிவுரை கூறுங்கள். மொத்தத்தில் உங்களது கம்பீரமும், கௌரவமும் அவரது தையலில் தான் உள்ளது எனக் கூறுங்கள்.



வயதை எண்ணிப் பெருமை கொள்ளவும்

இதுவரை வாழ்ந்த வருடங்களை எண்ணிப் பெருமை கொள்ள வேண்டும். உங்களை விட இளமையானவர்களுடன் போட்டி போடுவதாக எண்ணிக் கொண்டும், உங்கள் வயதைக் குறைத்துக் காட்ட வேண்டும் என்ற நினைப்புடனும், உங்களுக்கு சற்றும் பொருந்தாத உடைகளை அணியாதீர்கள். கவர்ச்சியான மற்றும் அருவெறுக்கத்தக்க வாசகங்களை அச்சிட்ட சட்டைகள் மற்றும் டி-ஷர்ட்டுகளை அணியாதீர்கள். அவை உங்களை இளமையாகக் காட்டது. மாறாக உங்களைப் பற்றிய எண்ணத்தைத் தாழ்த்திவிடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty Re: 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by முழுமுதலோன் Sun Mar 30, 2014 11:51 am

தற்போதுள்ள ஃபேஷன்களைப் பின்பற்றுவதைத் தவிர்க்கவும்

அழகுக் குறிப்புகளைப் பின்பற்றக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் அனைத்து ஃபேஷன் குறிப்புகளையும், வேதம் போல கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றாதீர்கள் என்று தான் சொல்கிறோம். ஸ்டைல் என்பது மாதந்தோறும், ஆண்டு தோறும் மாறிக்கொண்டு தான் இருக்கும். ஏன்? நாளுக்கு நாள் கூட ஸ்டைல் என்பது மாறலாம். ஆனால் வயது 40 ஆகிவிட்டால், உங்கள் ஸ்டைலானது காலத்தால் அளிவிட முடியாததாக எளிமையானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு ஸ்டைலும், ஒவ்வொரு குறிப்பிட்ட வயதினருக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும். அனைத்து ஸ்டைகளும் உங்கள் வயதுக்கு ஒத்ததாக இருக்காது. தற்போதை ஸ்டைல் என்பது கையில்லாத டி-ஷர்ட்டுடன், இறுக்கமான ஜீன்ஸை அணிந்துகொள்வது தான் என்று எல்லா பத்திரிகைகளும் எழுதினாலும், அது உங்களுக்குப் பொருத்தமாக இருக்குமா என்று எண்ணிப் பாருங்கள். உங்களைக் கௌரவமாகக் காட்டுமா என்று சற்றே யோசித்துப் பாருங்கள். எனவே வயதுக்குப் பொருத்தமான ஆடைகளை அணிய முடிவெடுங்கள்.



கடந்த காலம் கடந்துவிட்டது என்பதை உணருங்கள்

சில வருடங்களுக்கு முன்பு இருந்த சில ஃபேஷன்கள் மிகப் பிரபலமாக இருந்த போது, அதற்கு ஏற்றாற் போல ஆடைகளை வாங்கியிருப்போம். கால ஓட்டத்தில் அவை வழக்கிலிருந்து ஒழிந்து போய் இருக்கும். சிறிது ஆண்டுகள் கழித்து, அதே ஃபேஷன் திரும்பவும் உலா வரத் தொடங்கும். அதற்காக, அப்போது வாங்கியிருந்த ஆடைகளைத் தேடிக் கண்டுபிடித்து எடுத்து அணிந்து கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல. அவை அப்போது நீங்கள் இருந்த வயதில், தற்போது இருப்பவர்களுக்கான தற்போதைய ஃபேஷன்களாகும். அவற்றை இப்போது நீங்கள் அணிந்து கொள்ள ஆசைப்படுவது முட்டாள்தனமாகும். மாறாக நீங்கள் உங்களது இதர ஸ்டைல் விஷயங்களில் கவனத்தை செலுத்துங்கள். உதாரணமாக, நீங்கள் அணிந்து கொண்டிருக்கும் சன் கிளாஸ்கள் மற்றும் ஃப்ரேம்கள், எத்தனை எத்தனை ஸ்டைகளில் வருகின்றன என்பதை தெரிந்து, அவற்றை உங்களது வயதுக்கு ஏற்றாற் போலத் தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளுங்கள். அவை உங்களைக் கவர்ச்சியாகக் காட்டுவதோடு உங்கள் கௌரவத்தையும் நிலை நிறுத்திக் காட்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty Re: 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by முழுமுதலோன் Sun Mar 30, 2014 11:53 am

கால்சட்டைகளை நம்புங்கள்

மிகவும் நவீனமல்லாத கிளாசிக் மாடலான கால்சட்டைகளை வீட்டில் வைத்திருங்கள். உடற்பயிற்சிகள் செய்து உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்திருந்தீர்கள் என்றால், தட்டையான முன்பக்கம் உள்ள கால்சட்டைகள் உடற்கட்டை அழகாக எடுத்துக்காட்டும். அப்படியில்லாமல் சற்று குண்டானவர் என்றால், ஃப்ளீட் உள்ள கால்சட்டைகளை அணிந்தால், தொப்பை மற்றும் கூடுதல் சதைகளை அது மறைத்துக்காட்டும். குறிப்பாக பருத்தியினால் ஆன ஆடைகளையே அணியுங்கள். செயற்கை இழைகளினால் ஆன ஆடைகளை அணிய வேண்டாம். டெனிம் ஆடைகள் பரவாயில்லை. கிழிந்து தொங்கும் ஸ்டைல் மற்றும் தொளதொளப்பான பைகள் நிறைந்த ஆடைகளை இளைஞர்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டு, டீசண்ட்டான ஆடைகளை தேர்ந்தெடுங்கள். சொல்லப்போனால் உடலுக்கு கச்சிதமான, காட்டன் அல்லது லினன் துணியினால் ஆன ஆடைகளே உங்கள் வயதுக்குப் பொருத்தமானவை என்பதை நம்புங்கள்.



இதர இணைப்புகள்

ஆடைகளோடு, நாம் அணிந்து கொள்ளும் இதர பொருட்கள், நமது கம்பீரத்தைக் கூட்டிக் காட்டும். டை-பின்கள், கடிகாரங்கள், சன் கிளாஸ்கள் ஆகியவை 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு மிகவும் முக்கியமானவை. காலணிகளும் கூட மிகவும் முக்கியமானவை. அதிலும் உடைகளுக்கு ஏற்றற்போல ஷூக்கள் இருக்கின்றனவா என்று பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கருப்பு பெல்ட் அணிந்து கொண்டு, பழுப்பு நிறத்தில் ஷூக்களை அணிந்து கொண்டால் அது ஏற்றதாக இராது. இதைப் போய் யார் பார்ப்பார்கள் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். ஆனாலும் அனைவரும் முதலில் இதைத் தான் கவனிப்பார்கள்.



கமலஹாசன் ஸ்டைல்

கமலஹாசனின் ஸ்டைலைக் கவனியுங்கள். சுத்தமான, கவர்ச்சியான மற்றும் வயதுக்கு ஏற்ற உடை அலங்காரம் அவருடையது. சில சமயங்களில் அவர் அணியும் கேஷுவல் ஆடைகளையும் பாருங்கள். அதுவும் அவரது உடலுக்கு கச்சிதமாகப் பொருந்துவன. ஏனெனில் இவர் தனக்கு எது பொருந்தமானதாக இருக்கும் என்று நன்கு அறிந்தவர். டை-பின்கள், கைக் கடிகாரங்கள், பெல்ட்டுகள் மற்றும் ஷூக்களை மிகப் பொருத்தமாகத் தேர்ந்தெடுத்து அணிகிறார். 'பர்ஃபெக்ட்' என்றால் இது தான்.
காலத்திற்கு ஏற்றாற்போல ஃபேஷன்கள் வந்து போகும். நேற்று இருந்தது இன்று இருக்காது. இன்றிருப்பது நாளை இருக்காது. ஆனால் உங்களுக்கென்று நீங்கள் ஒரு தனிப்பட்ட, பொருத்தமான ஸ்டைலைத் தேர்ந்தெடுத்து பின்பற்றுங்கள். அதன் மூலம் மற்றவர்களிடம் இருந்து நீங்கள் தனியாகத் தெரிவீர்கள். ஆகவே, வயதுக்கு ஏற்ற, கால வரம்பிற்கு அப்பாற்பட்ட உடை அமைப்பு தான் மிகவும் ஏற்றது.


tamilboldsky
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty Re: 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by முரளிராஜா Sun Mar 30, 2014 12:04 pm

எனக்கு பயன்படும் அண்ணா 
மேலும் எங்க அண்ணன் அஞ்சா நெஞ்சன் தன வயதை சொல்ல கூச்சப்படும் கடந்த மாதம் தன் 97 ம் வயதை தன கொள்ளு பேரன்களுடன் கொண்டாடிய எங்கள் பாசத்துக்குரிய அண்ணன் ஜேக் அவர்களுக்கு பயன்தரும் வகையில் ஒரு பதிவை பதியுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty Re: 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by முழுமுதலோன் Sun Mar 30, 2014 12:24 pm

தல wrote:எனக்கு பயன்படும் அண்ணா 
மேலும் எங்க அண்ணன் அஞ்சா நெஞ்சன் தன வயதை சொல்ல கூச்சப்படும் கடந்த மாதம் தன் 97 ம் வயதை தன கொள்ளு பேரன்களுடன் கொண்டாடிய எங்கள் பாசத்துக்குரிய அண்ணன் ஜேக் அவர்களுக்கு பயன்தரும் வகையில் ஒரு பதிவை பதியுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

நீங்க தான் ஏற்கனவே ரொம்பவே அழகாச்சே  உங்களுக்கு இந்த பதிவு தேவைபடாது 



நண்பர் ஜேக்குக்கு நல்லதொரு பதிவை தேடிகிட்டு இருக்கேன் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty Re: 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by ஜேக் Sun Mar 30, 2014 12:26 pm

இந்த தலைப்பை பார்த்தவுடன் நெனச்சேன்... நிச்சயம் நம்ம தல நம்மளப்பத்தி கமெண்ட் போட்டிருப்பாருன்னு... கிணிப்பு தவறல...ம்ம்ம்'

கமெண்டலயும் ஒரு நல்ல விஷயத்தை மென்சன் பண்ணினதுக்கு ரொம்ப நன்றி தல...அதான்... "அஞ்சா நெஞ்சன்" நக்கல் ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty Re: 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by ஜேக் Sun Mar 30, 2014 12:27 pm

முழுமுதலோன் wrote:
தல wrote:எனக்கு பயன்படும் அண்ணா 
மேலும் எங்க அண்ணன் அஞ்சா நெஞ்சன் தன வயதை சொல்ல கூச்சப்படும் கடந்த மாதம் தன் 97 ம் வயதை தன கொள்ளு பேரன்களுடன் கொண்டாடிய எங்கள் பாசத்துக்குரிய அண்ணன் ஜேக் அவர்களுக்கு பயன்தரும் வகையில் ஒரு பதிவை பதியுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

நீங்க தான் ஏற்கனவே ரொம்பவே அழகாச்சே  உங்களுக்கு இந்த பதிவு தேவைபடாது 



நண்பர் ஜேக்குக்கு நல்லதொரு பதிவை தேடிகிட்டு இருக்கேன் 

நீங்க ரெண்டுபேரும் என்னதான் பதிவை போட்டாலும் ஜேக்கின் இமேஜ் ஒருபோதும் டேமேஜ் ஆகாது... ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty Re: 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by செந்தில் Sun Mar 30, 2014 12:30 pm

நக்கல் நக்கல் நக்கல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty Re: 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by முழுமுதலோன் Sun Mar 30, 2014 12:34 pm

ஜேக் நண்பரை எங்கே காணோம் என்று தலவிடம் கேட்டதற்க்கு மேக்கப் போட்டு தன்னை அழகு படுத்திக்கொண்டு 12 மணிக்குத்தான் வருவார் என்று சொன்னார் 


அது உண்மை என்று ஆகி விட்டது 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty Re: 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by முரளிராஜா Sun Mar 30, 2014 12:38 pm

ஜேக் wrote:

நீங்க ரெண்டுபேரும் என்னதான் பதிவை போட்டாலும் ஜேக்கின் இமேஜ் ஒருபோதும் டேமேஜ் ஆகாது... ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 

உண்மைதான் ஜேக் 
உங்கள் இமேஜ் டேமேஜ் ஆக வாய்ப்பே இனி இல்லை யாராலும் இனி உங்களே டேமேஜ் செய்யவும் முடியாது 
ஏனென்ன்றால் 

அது ஏற்கனவே மிக மிக மிக மிக டேமேஜ் ஆகி விட்டது  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty Re: 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by செந்தில் Sun Mar 30, 2014 12:39 pm

முழுமுதலோன் wrote:ஜேக் நண்பரை எங்கே காணோம் என்று தலவிடம் கேட்டதற்க்கு மேக்கப் போட்டு தன்னை அழகு படுத்திக்கொண்டு 12 மணிக்குத்தான் வருவார் என்று சொன்னார் 


அது உண்மை என்று ஆகி விட்டது 

 நக்கல் நக்கல் நக்கல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty Re: 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by முழுமுதலோன் Sun Mar 30, 2014 12:51 pm

ஜேக் wrote:

நீங்க ரெண்டுபேரும் என்னதான் பதிவை போட்டாலும் ஜேக்கின் இமேஜ் ஒருபோதும் டேமேஜ் ஆகாது... 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு 615537757 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு 615537757 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு 615537757 

உண்மைதான் ஜேக் 
உங்கள் இமேஜ் டேமேஜ் ஆக வாய்ப்பே இனி இல்லை யாராலும் இனி உங்களே டேமேஜ் செய்யவும் முடியாது 
ஏனென்ன்றால் 

அது ஏற்கனவே மிக மிக மிக மிக டேமேஜ் ஆகி விட்டது  40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு 615537757  40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு 615537757  40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு 615537757  40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு 615537757


ஜேக் இனியும் தாமதம் செய்யாதிர்கள் உங்களின் உண்மையான சொருபத்தை காட்டி அவரின் கூற்றை பொய்யாக்கி காட்டுங்கள் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty Re: 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by முரளிராஜா Sun Mar 30, 2014 12:52 pm

ஜேக் அவர்கள் இட்லி கடை ஆயாவை தேடி அலைந்துகொண்டிருப்பதாக கேள்வி  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty Re: 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by sreemuky Sun Mar 30, 2014 1:51 pm

பிரபலங்கள் அணியும் உடை அவர்கள் இமேஜ் ஐ உயர்த்தி காண்பிக்கும். கமல் அவர்களை உதாரணம் சொன்னது போல, எனக்கு தோன்றுவது ராஜீவ் காந்தி, நரேந்திர மோடி போன்றோர்.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty Re: 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by முழுமுதலோன் Sun Mar 30, 2014 4:53 pm

தல wrote:ஜேக் அவர்கள் இட்லி கடை ஆயாவை தேடி அலைந்துகொண்டிருப்பதாக கேள்வி  40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Icon_smile  40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Icon_smile  40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Icon_smile



40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு 10154058_418508804960856_1109049595_a
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty Re: 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by ஜேக் Sun Mar 30, 2014 7:12 pm

முழுமுதலோன் wrote:
ஜேக் wrote:

நீங்க ரெண்டுபேரும் என்னதான் பதிவை போட்டாலும் ஜேக்கின் இமேஜ் ஒருபோதும் டேமேஜ் ஆகாது... 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு 615537757 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு 615537757 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு 615537757 

உண்மைதான் ஜேக் 
உங்கள் இமேஜ் டேமேஜ் ஆக வாய்ப்பே இனி இல்லை யாராலும் இனி உங்களே டேமேஜ் செய்யவும் முடியாது 
ஏனென்ன்றால் 

அது ஏற்கனவே மிக மிக மிக மிக டேமேஜ் ஆகி விட்டது  40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு 615537757  40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு 615537757  40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு 615537757  40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு 615537757


ஜேக் இனியும் தாமதம் செய்யாதிர்கள் உங்களின் உண்மையான சொருபத்தை காட்டி அவரின் கூற்றை பொய்யாக்கி காட்டுங்கள் 

இதுக்கு பதில் இந்த லிங்கில் உள்ளது http://www.amarkkalam.net/t22529-topic#151199
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty Re: 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by sreemuky Sun Mar 30, 2014 9:43 pm

ஜேக்குதான் அமர்களத்தின் செல்ல பிள்ளை.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty Re: 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by மகா பிரபு Mon Mar 31, 2014 7:01 am

நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty Re: 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by ரானுஜா Mon Mar 31, 2014 1:06 pm

சூப்பர் சூப்பர் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty Re: 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 31, 2014 8:59 pm

முரளி அண்ணன் இன்னும் இந்தப் பதிவைப் படிக்கவில்லை!!!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty Re: 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by முரளிராஜா Mon Mar 31, 2014 9:05 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:முரளி அண்ணன் இன்னும் இந்தப் பதிவைப் படிக்கவில்லை!!!
தாங்கள் கண்ணாடி அணிந்துகொண்டு முதல் பக்கத்தை பார்க்குமாறு கேட்டு கொள்கிறேன்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty Re: 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 31, 2014 9:08 pm

முரளிராஜா wrote:எனக்கு பயன்படும் அண்ணா 
மேலும் எங்க அண்ணன் அஞ்சா நெஞ்சன் தன வயதை சொல்ல கூச்சப்படும் கடந்த மாதம் தன் 97 ம் வயதை தன கொள்ளு பேரன்களுடன் கொண்டாடிய எங்கள் பாசத்துக்குரிய அண்ணன் ஜேக் அவர்களுக்கு பயன்தரும் வகையில் ஒரு பதிவை பதியுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்  புன்முறுவல்

,ஈஈஈஈஈ.... பாக்கல... முதன் முதலாக உண்மையை நேரடியாக ஒத்துக்கொண்டமைக்காக இச் சிறுவனின் வாழ்த்துகள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty Re: 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by முரளிராஜா Mon Mar 31, 2014 10:18 pm

கோபம்  கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty Re: 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by ஜேக் Tue Apr 01, 2014 6:41 am

அமர்க்களத்தில் என்னைத்தவிர அனைவரும் மூத்தகுடிமகன்கள், சிறுவர்கள் போல தெரிகிறதே... நான் ஒருவன் மட்டுமே பாலகன் என நினைக்கும்போது... எவ்வளவு ஆனந்தமாக, சந்தோசமாக இருக்கிறது ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி லொள்ளு லொள்ளு லொள்ளு நக்கல் நக்கல் நக்கல் நகைப்பு நகைப்பு நகைப்பு ஹி ஹி ஹி ஹி ஹி ஹி 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு Empty Re: 40 வயதானாலும் அழகும்... ஸ்டைலும்... குறையாம இரு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum