Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கடவுளைத் தேடி
Page 1 of 1 • Share
கடவுளைத் தேடி
அனந்த கோடி வருடங்களுக்கு முன்னால் இரைதேடி அலைந்த மனிதக் கூட்டத்திலிருந்து ஒரு மனிதன் விலகி நடக்கத் தொடங்கி இருப்பான். அவன் மனத்தில் விடை தெரியாத கேள்விகள் சில மெல்ல நிழல் உருவங்களாய் உலவி மிரட்டியிருக்கும்.
இடி இடிக்கும் போது மழை பொழியும் போது, இயற்கையின் ஊழித்தாண்டவத்தைக் குகைக்குள் இருந்தபடி உற்று நோக்கியபோது, மலையின் சிகரங்களிலிருந்து வானகத்தையும் கானகத்தையும் வெறித்தபோது, இருட்டின் ஆழங்களில் அலைய நேர்ந்த போது, சந்திரனையும், கதிரவனையும், வானத்து மீன்களையும் அண்ணாந்து பார்த்து லயித்தபோது, தன் கூட்டத்தாரில் தன்னோடு உண்டு உறங்கி உயிர்த்தவர்கள் உயிர் நீங்கி மரித்ததைக் கண்டு திகைத்து ஓவென்று அலறி ஓய்ந்தபோது கேள்விகள் துரத்திய உணர்வின் தடத்திலே நடந்து மறைந்திருப்பான் அந்த முதல் மானுடன்.
மானுடப் பிறப்பிலே ஆன்மீக மழைத்துளி வீழ்ந்த முதல் கணமாய் அது இருந்திருக்கும். மௌனித்துப்போய் வைராக்கியம் பாய்ந்த அவன் காலடித் தடங்களில் ஆன்மீகத் தேடலின் பாதை ஆரம்பித்திருக்கும். ஆம் கடவுளைத் தேடி மனிதன் காலடி எடுத்து வைத்துவிட்டான். அது முடிவற்ற பயணம் என்பதை அவன் அறிந்திருக்கப்போவதில்லை. அறிவு, மொழி, தொடர்பு, ஆட்சி, இனம், பண்பாடு, கருவி, கலை, இலக்கியம், காதல், வீரம், போர், துரோகம், துயரம், வெற்றி, வீழ்ச்சி, தேசம், என்றெல்லாம் மனித இனம் வளரும்போதே என்றோ எங்கோ சென்ற முதல் மனிதனின் தடத்திலே ஒரு மனித வரிசை பயணித்திருக்கும். இரைதேடலை விடுத்து இறைதேடி அலைந்திருக்கும்.
வாழையடி வாழையென ஒரு திருக்கூட்டம் வந்திருக்கும். அத்திருக்கூட்டத்தாரைக் கண்டு வியந்து, பயந்து, தெண்டனிட்டுத் தொழுதிருப்பார்கள். துறவு என்று அறியாமலே துறவிகள் தோன்றியிருப்பார்கள். மானுடத்தின் மாபெரும் மரண பயத்தை வெல்லும் வழி சொல்லும் வார்த்தைகளைத் துறவிகள் உச்சரித்திருப்பார்கள். வாழ்வை அதன் படுகுழிகளிலிருந்து மெல்லத் தூக்கிவிட்டு துடைத்து வாழும்வழிக்கு அத்தகு துறவிகள் திசைகாட்டி இருப்பார்கள்.
கடவுள் என்ற முதல் சொல் பிறந்த கணம் மனித இனம் கைகூப்பித் தொழுத கணமாக இருந்திருக்கும். உணவுதேடி உலகப் பரப்பெங்கும் பிரிந்து அலைந்த மானுடக் கூட்டத்தோடு கடவுளும் பயணித்திருப்பார். அவர்களோடு வேட்டையாடி, அவர்களோடு வீடுகாத்து, அவர்களோடு உருவம் பெற்று, அவர்களோடு அடைக்கலம் அடைந்து அவர்களுக்கே அடைக்கலம் தரும் அதிமானுட வடிவில் பீடமேறி மாலை ஏற்று மணிமுடி தரித்து வேலும் சூலமும் ஏந்தி விலங்குகளை விரட்டி, பயிர்களை விளைவித்து, மழை பொழியச் செய்து, ஆநிரைகளைப் பல்கிப் பெருக வைத்து, நிலவும் கதிரும் தத்தம் நிலைகளில் ஒழுங்குற நிற்றலுக்கு உதவி இருப்பார்.
ஆன்மிகத்தின் அடுத்த கட்டமாக மனிதன் கடவுளைப் படைத்தது நிகழ்ந்திருக்கும். படைத்தபின் படைத்தவன் எவன் எனும் அறிவு பிறந்திருக்கும். கண்டேன் கடவுளை என்றொரு கூட்டமும், ’காணேன் அவனைக் காணும் வழிகண்டேன்’ என்றொரு கூட்டமும் மானிடச் சாதியை மருளச் செய்தன. வாழ்விக்க வந்ததாய்ச் சொல்லிப் பாழிலே தள்ளியது மற்றொரு கூட்டம். தாழ்வுனக்கு இல்லை என்று மனிதனைத் தேற்றித் தடுத்தாட் கொண்டது மற்றொரு கூட்டம். மானுட இனத்தின் மாபெரும் தேடலாய், தேடலின் இலக்காய் இதழ் விரித்தது ஆன்மீகம்.
ஒவ்வொரு இதழாய் உற்று நோக்கி மெய்ப்பொருள் காணும் அறிவுநிலைத் தேடி அடி எடுத்து வைப்போம். சமயங்களும், சாத்திரங்களும் கடவுளைத்தேடும் வழியிலே கண்டவை என்ன, சொல்பவை என்ன என்பதைக் காண்போம். தனக்குவமை இல்லாதவன் எங்கிருக்கிருக்கிறான்? அவன் தாள்சேர்தல் எவ்வாறு? மனக்கவலை மாற்றும் தத்துவத் தேடலில் ஆன்மீகச் சாரலில் நனைந்து மகிழ்வோம், நலம் பெறுவோம். வாருங்கள்
dinamalar

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?
» தேடி தேடி பார்த்தேன்
» கடவுளைத் தேடிப் போகிறோம்.
» கடவுளைத் தேடிப் போகிறோம்
» கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?
» தேடி தேடி பார்த்தேன்
» கடவுளைத் தேடிப் போகிறோம்.
» கடவுளைத் தேடிப் போகிறோம்
» கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum