Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மது உள்ளே.. மதி வெளியே..
Page 1 of 1 • Share
மது உள்ளே.. மதி வெளியே..
அளவுக்கு அதிகமாக மது அருந்தினால், அடுத்த நாள் காலை தாங்க முடியாத தலைசுற்றல் ஏற்படும் என்பது ‘குடிமகன்கள்’ அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனால், தொடர்ந்து மது குடிப்பதால், உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் எந்த அளவுக்குப் பாதிப்பு அடைகின்றன என்பது குறித்து நீரிழிவு சிறப்பு மருத்துவர் டாக்டர் கருணாநிதி அளிக்கும் அதிர்ச்சிப் பட்டியல் இது…
பல்
அசிடிட்டி என்பது பற்களின் எனாமலை பாதிக்கக் கூடியவை. ஆல்கஹால் பானங்களில் அதிக அளவில் சர்க்கரை உள்ளது. மேலும் இதனுடன் சேர்க்கப்படும் குளிர்பானங்களிலும் அளவுக்கு அதிகமாகவே சர்க்கரை உள்ளது. இதனால் அசிடிட்டி அளவும் அதிகமாகி பற்களுக்கு பெரும் கெடுதலை ஏற்படுத்துவதோடு பல் ஈறையும் பாதிப்படையச் செய்யும். இது தவிர வாய் புற்றுநோய் தோன்றுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.
வயிறு
ஆல்கஹால் குடலுக்கு உள்ளே சென்றதும் அதை ஜீரணிப்பதற்காக, அதிக அளவில் அமிலங்கள் சுரக்கின்றன. இது ஜீரண மண்டலத்துக்கு அதிகப்படியான வேலை. விளைவு… வயிற்று வலி, வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதுவே தொடர்கதை ஆகும்போது, மிகமோசமான வயிற்றுப்புண், குடல் புற்றுநோய் போன்ற உயிருக்கே உலைவைக்கும் பேராபத்துக்களில் கொண்டுபோய்விடும். மேலும் இது கணையத்தையும் பாதிக்கச் செய்கிறது.
கல்லீரல்
மனித உடலின் தொழிற்சாலை கல்லீரல். அதிக அளவிலான ஆல்கஹால் கல்லீரலுக்குள் செல்லும்போது, அது கல்லீரல் திசுவைத் தாக்குகிறது. மேலும், நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றுகிற கல்லீரலின் செயல்திறனையும் ஆல்கஹால் முடக்கிவிடுகிறது. இதனால், உடலின் வளர்சிதை மாற்றப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. தொடர்ந்து மது அருந்துபவர்களுக்கு கல்லீரலின் உன்னதப் பணிகள் நிரந்தரமாகவே பாதிக்கப்படும் அபாயம் உண்டு.
இதயம்
ஆல்கஹால் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும். இதனால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதயத் தசைகள் பலவீனம் அடைவதோடு, அதன் செயல்திறனும் கடுமையாகப் பாதிக்கப்படும். தொடர்ந்து மது அருந்துபவர்களுக்கு இது நிரந்தரப் பிரச்னையாகவே மாறிவிடும். மது அருந்தாதவர்களைக் காட்டிலும், மது அருந்துபவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் 6 மடங்கு அதிகரிக்கிறது.
இடுப்பு
ஆல்கஹாலில் மிக அதிக அளவாக ஒரு மில்லி கிராமுக்கு 7 கலோரி உள்ளன. ஒரு சிறிய கிளாஸ் அளவிலான மது அருந்தும்போது, தோராயமாக 130-க்கும் மேலான கலோரிகள் உடம்பில் சேரும்; அதுவே வெள்ளை ஒயினாக இருந்தால், 240 கலோரிகளுக்கும் மேல். தினமும் மது அருந்துபவர்கள்அதனுடன் நொறுக்குத் தீனிகளையும் உண்கிறார்கள். அளவுக்கு அதிகமான இந்தக் கலோரிகள் உடலில், கொழுப்பாக சேமித்துவைக்கப்படும். எனவே, உடல் எடை கூடி, இடுப்பு பெருத்து அவஸ்தைக்கு உள்ளாகிறார்கள். தேவையற்ற இந்தக் கொழுப்புச் சதைகள்தான் பல்வேறு நோய்களுக்கான பிறப்பிடமாக இருக்கிறது.
மூளை
அளவுக்கு அதிகமாக மது குடிக்கும்போது அது சோம்பலைத் தூண்டுவதோடு, மன நிலை தடுமாற்றத்தையும் உண்டுபண்ணும். அதனால் விபத்து போன்றவை ஏற்படலாம். மது சோகமான மனநிலையை ஏற்படுத்தும். நினைவுத் திறன் வெகுவாகப் பாதிக்கப்படும். நாளடைவில், மீண்டும் நினைவு திரும்பாத வகையில், நரம்பு மண்டலத்தில் நிரந்தரப் பாதிப்பும் ஏற்படலாம்.
குழந்தைப்பேறு
மது அருந்தும் ஆண்களுக்கு விந்தணுக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மலட்டுத்தன்மை ஏற்படும். பெண்களுக்கு மாதவிலக்குப் பிரச்னை, கருத்தரிப்பதில் சிக்கல் போன்ற பிரச்னைகள் வரும். பெண்களுக்கு குழந்தைப்பேறு வாய்ப்பு பெருமளவில், குறைந்துவிடும்.
தோல்
சருமத்தைப் பல வகைகளிலும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது ஆல்கஹால். கண்களைச் சுற்றி கருப்பு வளையம் ஏற்படும். உங்கள் தோலுக்கு மிகவும் அவசியமான பி வைட்டமின் மற்றும் ஊட்டச் சத்துக்களை, ஆல்கஹால், செயல் இழக்கச் செய்துவிடுவதால் மிக விரைவிலேயே முதுமைத் தோற்றம் கிடைத்துவிடும். முக்கியமாக ‘சோரியாசிஸ்’ போன்ற தோல் நோய்களையும் ஏற்படுத்தும்.
நன்றி:- டாக்டர் கருணாநிதி
நன்றி:- டாக்டர் விகடன்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» உள்ளே வெளியே ...?
» உள்ளே போனவர் பண்ணிய கூத்து
» வெற்றியை வெளியே தேடாதீர்கள்'
» சிலிண்டரின் உள்ளே இருக்கும் கேஸ் ஏன் பற்றிக் கொள்வதில்லை..?
» நம் உள்ளே உள்ள உள்ளம் மாறினால் உலகம் மாறும்....
» உள்ளே போனவர் பண்ணிய கூத்து
» வெற்றியை வெளியே தேடாதீர்கள்'
» சிலிண்டரின் உள்ளே இருக்கும் கேஸ் ஏன் பற்றிக் கொள்வதில்லை..?
» நம் உள்ளே உள்ள உள்ளம் மாறினால் உலகம் மாறும்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|