Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சுற்றுலா தளங்கள் -தஞ்சாவூர்
Page 1 of 1 • Share
சுற்றுலா தளங்கள் -தஞ்சாவூர்
தஞ்சாவூர்
தமிழகத்தின் நெற்களஞ்சியம். பிற்காலச் சோழர்களின் காலமான கி.பி. 11 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளின் புகழ்பெற்ற மாநகரமாகத் திகழ்ந்தது. கலைக்கும், இலக்கியத்துக்கும், கைவினைப் பொருட்கள் செய்வதற்கும் புகழ்பெற்ற தமிழ்த் தரணி. முற்கால, பிற்கால தமிழ் இலக்கியத்தின் மாபெரும் படைப்பாளிகளை ஈன்றெடுத்த மண். கர்நாடக இசைத் தந்தையான தியாகையர் வாழ்ந்த திருவையாறு இந்த மாவட்டத்தில்தான் இருக்கிறது. காவிரி தவழும் கவின்மிகு பூமி.
தஞ்சை பெரிய கோயில்
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அழகின் கம்பீர சாட்சியாக நிற்கும் மிகப்பெரிய கோயில். மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட திருக்கோயில். [You must be registered and logged in to see this image.]இந்தியாவின் சிற்பக் கலைக்கு தஞ்சைப் பெரிய கோயில்தான் முகவரி. இருபக்கமும் அகழிகள் சூழ, இன்னொரு பக்கம் ஆறும் அணைக்கட்டும் அரணாக நிற்கின்றன. பிரகதீஸ்வரர் கோயில் கொண்டுள்ள இந்த ஆலயத்தின் கருவறையில் இருந்தே இதன் விமானம் எழுந்து நிற்பது இதன் தனிச் சிறப்பு. விமானத்தின் உயரம் 216 அடிகள். இதன் மேலுள்ள கலசம் வெண்கலத்தால் செய்யப்பட்டது. இதன் நிழல் தரையில் விழாதது இன்னொரு சிறப்பு. கருவறைக்கு எதிரில் 12 அடி உயரம், 19 அடி நீளம், 8 அடி அகலத்தில் மிகப்பெரிய நந்தி இருக்கிறது. உட்புறச் சுவர்களில சோழர் மற்றும் நாயக்கர் கால ஒவியங்கள் இடம் பெற்றுள்ளன. அஜந்தா ஓவியங்களைப் போல இவையும் புகழ்பெற்றவை.
தாராசுரம்
தஞ்சையில் இருந்து 34 கி.மீ. தொலைவில் உள்ள கோயில் இது. சிவபெருமான் எழுந்தருளியுள்ள இந்தக் கோயிலை இராஜேந்திர சோழன் கட்டியுள்ளார். பட்டு நெசவுக்குப் பெயர் பெற்ற ஊர் தாராசுரம்.
மகாமகம் திருநாள்
கும்பகோணம் மகாமகக் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மாபெரும் திருநாள் ஆகும். வழக்கமாக மாசிமாதம் பௌர்ணமி அன்று மகாமகம் வரும். இதுவே 12 ஆண்டுகளுக்கு ஒரு மகம். இந்த மகாமகத் திருநாளின் போது இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் இந்தக் குளத்தில் புனித நீராட கூடுவார்கள். தொலைபேசி: - 0435-2420276.
நாயக்கர் தர்பாரஹால் அருங்காட்சியகம் மற்றும் இராஜராஜ சோழன் அருங்காட்சியகம்
இரண்டு அருங்காட்சியகத்திலும் சோழர்கால சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அற்புதமான செப்பு சிற்பங்களை இங்கு காணலாம்.
சரபேஸ்வரர் ஆலயம்
கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் திருப்புவனத்தில் இந்தக் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை மூன்றாம் குலோத்துங்க சோழன் கட்டியுள்ளான். இந்த தெய்வத்தை வந்து வழிபட்டால் பில்லி சூனியம் போன்ற கேடுகள் அகலும் என்பது நம்பிக்கை.
சிவகங்கைப் பூங்கா
தஞ்சை பெரிய கோயிலின் வடபுறமாக உள்ளது. அழகிய செடிகள், மலர்கள், பறவைகள் விலங்குகள் இன்றும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
பூண்டி மாதா கோயில்
மிகவும் புகழ் பெற்ற கத்தோலிக்கத் தேவாலயம். தொலைபேசி: - 04364 - 265426.
இராஜராஜன் மணி மண்டபம்
தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது கட்டப்பட்டது. அழகிய பூங்காவுக்குள் இது அமைந்துள்ளது.
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு மண்டபம்
விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தன் கவிதைகளை ஏழை எளிய பாட்டாளி மக்களுக்காகவே அர்ப்பணித்த மக்கள் கவிஞர் 13.4.1930 இல் பிறந்து 29 வயதிலேயே அமரர் ஆகிவிட்ட இந்த மகாகவியின் நினைவு மண்டபம் பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை சாலையில் நாடியம்மாள்புரத்தில் அமைந்துள்ளது.
புலியூர் வியாகரபூரீஸ்வரர் கோயில்
நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் தஞ்சையிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோயில் இராமர் மடம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி முக்கால் கி.மீ. வடக்கு நோக்கிச் சென்றால் இந்தக் கோயிலைக் காணலாம். காமதேனு பசு இங்குள்ள சிவனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. தென் சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. வியாகரபுரி என்று இந்த ஊருக்கு மற்றொரு பெயரும் உண்டு.
சரஸ்வதி மஹால் நூலகம்
இந்தியாவில் கீழை நாட்டு ஆவணங்களின் மூலப்படிகள் பாதுகாக்கப்படும் முக்கியமான நூலகம் இது. கி.பி. 1700 களிலேயே தொடங்கப்பட்ட மிகப் பழமையான நூலகம். 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவடிகள் இங்கு உள்ளன. இவற்றில் 80 சதவிகிதம் வடமொழியில் எழுதப்பட்டவை. தொன்மையான இசைக் கருவிகளும், சிற்பங்களும் இந்த அருட்காட்சியத்தில் உள்ளன. தமிழ் ஆர்வலர்களுக்கம், ஆய்வாளர்களுக்கும் பயனுள்ள நூலகம். தொலைபேசி: - 04362-233568.
ஸ்வார்ட்ஸ் தேவாலயம்
டச்சு கிறிஸ்தவ மதபோதகர் ரெவ.சி.ஷி. ஸ்வார்ட்ஸ் மீது கொண்ட பற்றை வெளிப்படுத்தும் விதமாக மன்னர் சரபோஜியால் கட்டப்பட்ட தேவாலயம். அரண்மனைத் தோட்ட வளாகத்தில் இது அமைந்துள்ளது.
தமிழ்ப் பல்கலைக் கழகம்
1981 இல் தமிழுக்கென்று நிறுவப்பட்ட பல்கலைக்கழகம். தமிழில் உயர்கல்வி, மற்றும் ஆய்வுகள் இங்கு நடந்து வருகின்றன. பழைய நாணயங்கள், இசைக்கருவிகள் இங்குள்ள அருங்காட்சியகத்தில் உள்ளன. தொலைபேசி - 04362-226518.
சுவாமிமலை
முருகனின் அறுபடை வீடுகளில் இதுவும் ஒன்று. தஞ்சையிலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது. தந்தைக்கே 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தைச் சொல்லித் தந்த தனயன் முருகன் குடி கொண்டிருக்கும் கோயில். அருணகிரிநாதரால் பாடப்பெற்ற திருத்தலம்.
தஞ்சை ஓவியங்கள்
புன்னகை ததும்ப நின்று கொண்டிருக்கும் கிருஷ்ணன் படத்தைப் பார்த்திருப்பீர்கள். தலைசிறந்த தஞ்சை ஓவியத்துக்கு இதுதான் எடுத்துக்காட்டு. கண்ணாடிகளிலும், அட்டைகளிலும், சுவர்களிலும் தஞ்சை ஓவியத்தின் வேலைப்பாடுகளைக் காணலாம். இந்த ஓவியங்களில் தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த உலோகங்களும் பதிக்கப்பட்டிருக்கும். ஜிப்சம் மற்றும் வஜ்ரத்தால் பூசப்பட்டு மெருகூட்டப்பட்டு இருக்கும்.
தஞ்சாவூர் அரண்மனை
நாயக்கர்களால் பாதியும் மீதி மராட்டியர்களாலும் கட்டப்பட்டது. கிழக்குப் பிரதான வீதியில் உள்ள இந்த அரண்மனை வரிசைத் தொடராகக் கட்டங்களாக இருக்கும். இதன் நுழைவாயில் நான்கு கட்டு அரசவைக்கு இட்டுச் செல்லும். அங்கிருந்து வடக்கு, கிழக்கு புறவாயில்களுக்குச் செல்லும் வகையில் சுற்றுச்சுவர்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது கட்டின் தெற்குப்புறத்தில் 190 அடி உயரத்தில் எட்டு அடுக்கு கொண்ட கோபுரம் உள்ளது. இதுவே இந்த அரண்மனையின் கண்காணிப்புக் கோபுரமாகவும், ஆயுதக் கிடங்காகவும் கி.பி. 1855 வரை இருந்து வந்துள்ளது.
புன்னைநல்லலூர் மாரியம்மன் கோயில்
தஞ்சை நகரத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. தொலைபேசி: - 04632-267740.
திருவையாறு
சங்கீத மும்மூர்த்திகளில் மூத்தவரான தியாகராஜர் இங்கு தான் வாழ்ந்தார். இங்குதான் சமாதியும் அடைந்தார்.ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 8 நாட்கள் இவர் நினைவாக இசைத் திருவிழாவே இங்கு நடந்தேறும்.
திருபுவனம் கோவில்
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை வழியொற்றி குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. இங்குள்ள ஒரு கல்வெட்டு, இங்குப் பல்கலைக் கழகம் இருந்ததை உறுதி செய்கிறது. தஞ்சையிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது. தொலைபேசி: - 0435-2460760.
மனோரா கோபுரம்
1814 ஆம் ஆண்டு மாவீரன் நெப்போலியன் தலைமையிலான பிரெஞ்சுப் படைக்கும், ஆங்கிலேயருக்கும் ஒரு கடல் போர் நடந்தது. இந்தப் போரில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக சரபோஜி மன்னரின் படைகளும் போரிட்டன. அப்போது நெப்போலியனின் படை தோற்கடிக்கப்பட்டது. அந்த வெற்றியின் நினைவாக சரபேந்திரராஜ பட்டினம் கடற்கரையில் 120 அடி உயரமுள்ள கோபுரம் அமைக்கப்பட்டது. அறுகோண வடிவமுள்ள இந்தக் கோபுரத்தின் உச்சியை அடைய 120 படிகள் உள்ளன. 150 ஆண்டுகளாக உறுதியுடன் நிற்கிறது. பட்டுக்கோட்டையிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது.
கும்பகோணம்
இதன் செல்லப்பெயர் குடந்தை. தமிழகத்தின் கோயில் நகரம் என்றும் இதைக் கூறுவதுண்டு. அத்தனை கோயில்கள்... அத்தனை தெய்வங்கள்... சென்னையிலிருந்து 313 கி.மீ. தொலைவிலும், திருச்சியிலிருந்து 90 கி.மீ. தொலைவிலும் தஞ்சையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் உள்ளது. தஞ்சை மாவட்டத்தின் இரண்டாவது சூரியனார் கோயில் இதன் அருகில்தான் உள்ளது. சைவ சமயத்தினர் வழிபடும கோயில்களில் முக்கியமான ஆதிகும்பேஸ்வரர் கோயில் இந்நகரின் மையத்தில் உள்ளது. 30181 சதுர அடிபரப்பில் 750 அடி நீளம் 252 அடி அகல அளவில் அமைந்துள்ள இக்கோயில் மூன்று பிரகாரங்களையும், கிழக்கு, வடக்கு, மேற்கு ஆகிய மூன்று திசைகளில் கோபுரங்களையும் கொண்டது. இதன் கிழக்கு கோபுரம் 128 அடி உயரத்தில் 9 அடுக்குகள் கொண்டது. தஞ்சையைச் சேர்ந்த அச்சுத நாயக்கன் 16 ஆம் நூற்றாண்டில் இதைப் புதுப்பித்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயிலின் மூலவர் கும்பேஸ்வரர். மங்களாம்பிகை மற்றும் முருகன் விநாயகரும் உடன் உறைகின்றனர். மங்கள தீர்த்தம் என்ற தீர்த்தக் கட்டமும் திருமண மண்டபமும் உள்ளன.
சூரியனார் கோயில்
கும்பகோணத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்தில் நடுநாயகமாக அமைந்துள்ளது. சூரியக் கடவுளுக்கென்று தனியாக அமைந்துள்ள கோயில் இது. திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமி கோயிலும் பிரசித்தி பெற்றது. தொலைபேசி: - 0435-2473349.
உப்பிலியப்பன் கோயில்
கும்பகோணம் இரயில் நிலையத்திலிருந்து 4 கல் தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில். உப்பிலியப்பரை பூமாதேவி முழந்தாளிட்டு வழிபடுவதை இங்கு காணலாம். அகோரத்ரா புஷ்கரணி, ஆர்தி புஷ்கரணி ஆகிய இரண்டு புண்ணியத் திருக்குளங்கள் இங்குள்ளன. விஷ்ணு விமானம் மற்றும் சுதானந்த விமானம் என்ற இரண்டு ரதங்களில் சுவாமி பவனி வருவார்.
சாரங்கபாணி கோயில்
சாரங்கபாணி கிழக்குத் தெருவில் உச்சிப்பிள்ளையார் சந்நிதிக்கு அருகே அமைந்துள்ளது. மகாவிஷ்ணுவுக்கு மூன்று முக்கியக் கோயில்களில் ஒன்றான இது நாயக்கர் ஆட்சிக்காலத்தில் 16 ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இக்கோயில் கோபுரம் 150 அடி உயரம் கொண்டது. ஐந்து பிரகாரங்களும் பொற்றாமரைக் குளமும் இங்கு உள்ளன.
சோமேசர் கோயில்
சாரங்கபாணி கோயிலின் தெற்கு பாகத்தில் உள்ளது. கிழக்கு நுழைவாயில் அருகில் வடக்குப் பார்த்தவாறு அமைந்துள்ள இந்த ஆலயம் சோழர்கால கட்டடக்கலையுடன் அமைந்துள்ளது. ஆறுமுகம் மற்றும் தேனார் மொழி அம்மை ஆகிய தெய்வங்களும் இங்கு உள்ளனர்.
நாகேஸ்வரர் கோயில்
13 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னன் ஆதித்யனால் கட்டப்பட்டது. கூத்தாண்டவர் கோயில் என்ற பெயம் உண்டு. சித்திரை மாதம் மட்டும் சூரியக் கதிர்களை உள்ளே அனுமதிக்கும் சிறப்பான கட்டுமானத்தைக் கொண்டது இக்கோயில். இதனால் சூரியக் கோட்டம், கீழ்க்கோட்டம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.
இராமசாமி கோயில்
தஞ்சை அச்சுத நாயக்கரால் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஒரு கோபுரம் ஒரு மகாமண்டபம் ஆகியவற்றுடன் அமைந்துள்ள இந்தக் கோயில், பொற்றாமரைக் குளத்துக்குக் தென் கிழக்கிலும், உச்சிப் பிள்ளையார் கோயில் சந்திப்புக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது. மகாமண்டபத்ததூண்களில் இராமாயணக் காட்சிகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. வெளிப்பிரகாரத்தில் 219 சுவரோவியங்களும் இராமாயண காட்சிகளை சித்தரிப்பதாக உள்ளன.
சக்கரபாணி கோயில்
பெரியகடைவீதியில் காவிரிக் கரையில் அமைந்துள்ள இக்கோயில் கும்பகோணம் நகரில் உள்ள இரண்டாவது பெரிய வைணவக் கோயிலாகும். இக்கோயிலின் பிரகாரம் மச்சு, முகப்பாக அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுற்றுலா தளங்கள் -தஞ்சாவூர்
அருமை அருமை அண்ணா
மன்னார்குடி கோவில் பற்றி எழுதுங்கள்.
மன்னார்குடி கோவில் பற்றி எழுதுங்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சுற்றுலா தளங்கள் -தஞ்சாவூர்
நவக்கிரக் கோயிலும் தஞ்சை மாவட்டத்தில் தானே இருக்கிறது? அதைப் பற்றியும் சொல்லலாம். நல்ல சுற்றுலா பகிர்வு.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: சுற்றுலா தளங்கள் -தஞ்சாவூர்
எங்கள் தஞ்சை மண்ணின் பெருமைகளை அறிய தந்தமைக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» சுற்றுலா தளங்கள் - திருச்சிராப்பள்ளி
» சுற்றுலா தளங்கள் -புதுக்கோட்டை
» சுற்றுலா தளங்கள் -பெரம்பலூர்
» சுற்றுலா தளங்கள் -நீலகிரி
» சுற்றுலா தளங்கள் -நாமக்கல்
» சுற்றுலா தளங்கள் -புதுக்கோட்டை
» சுற்றுலா தளங்கள் -பெரம்பலூர்
» சுற்றுலா தளங்கள் -நீலகிரி
» சுற்றுலா தளங்கள் -நாமக்கல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum