Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ரெடிமேட் வீடுகள்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
ரெடிமேட் வீடுகள்
ஒரு வீடு கட்ட எவ்வளவு காலம் பிடிக்கும்? நான்கு மாதத்தில் இருந்து ஆறு மாதம் வரை ஆகாலம். அதற்கும் மேலும்கூட காலம் பிடிக்கும். இந்தப் புதிய தொழில் நுட்பத்தை நீங்கள் பயன்படுத்தினால் ஒரு நாளில் நான்கு வீடு கட்டலாம் என்கிறார் கெவின் மூர். நியூசிலாந்தைச் சேர்ந்த கட்டிடப் பொறியாளரான இவர், இந்த ரெடிமேட் வீட்டுத் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தார்.
கட்டுமானத் துறையில் ஆகும் செலவுகளைக் கட்டுப்படுத்த ஒரு புதிய தொழில்நுட்பம் கொண்டு வர வேண்டும் என மூர் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தனது பல ஆண்டு முயற்சிக்குப் பிறகு 1985-ம் ஆண்டு அவர் Insulated Precast Concrete panelsகளை உருவாக்கினார். இந்தப் பேனல்களின் மூலம் அவர் வீட்டையே ரெடிமேடாக உருவாக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார். இந்தத் தொழில்நுட்பத்திற்காக அவர் 1989-ம் ஆண்டு உரிமமும் பெற்றுள்ளார்.
இதன் மூலம் முழு வீட்டையும் ஃபேக்டரியிலேயே உருவாக்கிவிட முடியும். வீடு கட்டப்படும் இடத்தில் கொண்டு வந்து இறக்கினால் போதும்.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவரும் இந்தத் தொழில்நுட்பம் இப்போது இந்தியாவிலும் பரவலாகி வருகிறது. ஆனால் இந்தத் தொழில்நுட்பம் தங்கும் விடுதிகள், சிறிய அறைகள் தொகுப்பு வீடுகளுக்கே பொருத்தமானதாக இருக்கும். பெங்களூரு வளர்ச்சி நிறுவனம் இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி 12 ஏக்கர் நிலத்தில் 1520 தொகுப்பு வீடுகளைக் கட்டியுள்ளது.
இந்தத் தொழில்நுட்பம் மூலம் வீடு கட்டுவது சுவாரஸ்யமானதாக இருக்கிறது. வீட்டுக்கான தரை, ஜன்னல்கள், சமையல் அறை எல்லாமும் தொழிற்கூடத்திலேயே தயாரிக்கப்பட்டு விடுகின்றன. முழு வீட்டையும் கட்டு மானத் தலத்தில் வாகனங்கள் மூலம் கொண்டு இறக்கி வைத்தால் போதும்.
அறைகள் மட்டுமல்ல. எலக்ட்ரிக்கல் வயரிங், ஸ்விட்ச், பிளம்பிங் வேலைகளையும் தொழிற்கூடத்திலேயே முடித்துவிடுகிறார்கள். மாடிப் படிகளையும் தேவையான அளவுக்கேற்ப முன்பே தருவித்தால் அதையும் தொழிற்கூடத்திலேயே தயாரித்து, கொண்டுவந்துவிடுகிறார்கள்.
இந்த முறையில் பாரம்பரிய முறையில் உபயோகப்படுத்தப்படும் சுவர்களுக்குப் பதிலாகக் கன சதுரங்களைப் (Cubes) யூனிட்டுகளாகப் பிரித்துப் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக பெங்களூரு வளர்ச்சி நிறுவனத்திற்காக மேற்கொள்ளப்பட்ட வீட்டு வசதித் திட்டத்தில் ஒரு வீட்டை 240 சதுர அடிக்கு 160 சதுரடி என இரு யூனிட்டுகளாகப் பிரித்து வீடுகளை அமைத்ததாகச் சொல்கிறார் மூர். இவ்வாறாக 1520 வீடுகளும் கட்டுமான நிலத்திற்கு அருகே ஒரு தொழிற்கூடத்தில் உருவாக்கப்பட்டு எடுத்துவரப்பட்டன.
ரெடிமேட் வீடு என்பதால் அது பாரம்பரிய கட்டிடத்தை விட உறுதி குறைந்தது என நினைக்க வேண்டாம். இம்முறையில் உருவாக்கப்படும் தூண்கள் கான்கீரிட், கம்பிச் சட்டகங்கள் கொண்டு உருவாக்கப்படுகிறது. அதனால் இது பாரம்பரிய முறையைவிடவும் உறுதியானதாகவும் நீடித்து உழைக்கக் கூடியதாகவும் இருக்கும்.
மேலும் இந்தத் தூண்கள் அதிக எடையைத் தாங்கக் கூடியது. பூகம்பம் அதிர்வுகளைத் தாங்கக்கூடிய வகையிலும் இதன் அமைப்பு இருக்கும். 95 சதவீத வேலைகள் தொழிற்கூடத்திலேயே முடிந்துவிடும் என்பதால் பொருட்செலவு பாரம்பரிய முறையைக் காட்டிலும் மிகவும் குறைவு. வெளிப்புறச் சுவர்கள் 4 அங்குல கனமும், உட்புறச் சுவர்கள் 3 அங்குல கனமும் கொண்டவை.
இந்த வகை வீடுகள் சமூகத்தின் மிகப் பின் தங்கியுள்ளவர்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் மூர், இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வசதியான வீடுகளும் கட்ட முடியும் என்கிறார். ஆஸ்திரேலியாவில் சாலையோர உணவு விடுதிகள் இந்தத் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கியுள்ளனர். நியூசிலாந்தில் வீட்டு வசதிக் குடியிருப்புகளையும் உருவாக்கியுள்ளனர்.
ரெடிமேட் தொழில்நுட்பம் மூலம் மிக விரைவாக வீடுகளைக் கட்டிவிட முடியும். மேலும் பாரம்பரியக் கட்டிடக் கலையுடன் ஒப்பிடும்போது பொருட்செலவும் மிகக் குறைவு. இப்போது இந்தத் தொழில்நுட்பத்தால் நாள் ஒன்றுக்கு நான்கு வீடுகளை உருவாக்கிவருகிறோம். எதிர்காலத்தில் இது 12 ஆக உயரலாம் என மூர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: ரெடிமேட் வீடுகள்
அட நல்லாத்தான் இருக்கு
நல்லதொரு பதிவுக்கு நன்றி நண்பரே.
நல்லதொரு பதிவுக்கு நன்றி நண்பரே.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ரெடிமேட் வீடுகள்
அப்படி போடுங்க...இனியெல்லாம் இப்படித்தான்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» கம்பியிலும் வந்துவிட்டது ரெடிமேட்
» `ரெடிமேட்’ உணவுகள் சரியா… தவறா? பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம்…
» நகரத்தின் வீடுகள்...
» வேடிக்கையான வீடுகள்
» பாரம்பரியம் பேசும் வீடுகள்
» `ரெடிமேட்’ உணவுகள் சரியா… தவறா? பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம்…
» நகரத்தின் வீடுகள்...
» வேடிக்கையான வீடுகள்
» பாரம்பரியம் பேசும் வீடுகள்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|