Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆஸ்பத்திரி வார்டு பாயாக சேர்ந்து அறுவை சிகிச்சை நிபுணராக உயர்ந்தவர்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
ஆஸ்பத்திரி வார்டு பாயாக சேர்ந்து அறுவை சிகிச்சை நிபுணராக உயர்ந்தவர்
ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்து வார்டுபாயாக பணிக்கு சேர்ந்தவர் தன் விடாமுயற்சியாலும் ஊக்கத்தாலும் மருத்துவத் தொழில் நுட்பங்களை அறிந்துகொண்டு கண் விழி மாற்று அறுவை சிகிச்சை நிபுணராக உயர்ந்துள்ளார். இறந்த வர்களின் கண்களை பாதுகாப் பாக அகற்றி சுமார் 2600 பேருக்கு பார்வை கிடைக்கச் செய்திருக் கிறார்.
வந்தவாசி மாவட்டம் வாச்சலூர் கிராமத்தில் பாளையம்மாள் சின்னதம்பியின் 5-வது மகனாகப் பிறந்த வேலு தன் 5 வயதில் தந்தையை இழந்தவர். குடும்பச் சூழ்நிலை காரணமாக அவரால் 9-ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. பிறகு வேலைதேடி சென்னைக்கு வந்தார். உறவினர் உதவியால் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 1983-ம் ஆண்டு வார்டுபாயாக சேர்ந்தார்.
அங்கு 3 ஆண்டுகள் பணிபுரிந் தார். அப்போதே சிறுநீரகத் துறையில் பரிசோதனைக்கூட உதவியாளராகவும் பணியாற் றினார். பின்னர் பி.ஆர்.எஸ். மருத்துவமனையில் 5 ஆண்டுகள் அறுவை சிகிச்சைப் பிரிவில் உதவியாளராக இருந்தார். கூடவே, தன் அனுபவம் மூலம் மருத்துவம் சார்ந்த பல நுணுக்கங்களையும் கற்றார்.
சென்னையில் ராஜன் கண் மருத்துவமனையில் 1995-ம் ஆண்டு சேர்ந்தார். மருத்துவர்கள் மோகன் ராஜன், சுஜாதா மோகன் தந்த ஊக்கத்தால் கண் மருத்துவம் சார்ந்த தொழில்நுட்ப படிப்பை படித்தார். படிப்பறிவு மற்றும் தனது அனுபவத்தின் அடிப்படையில், இறந்தவர்களின் கண்களை அகற்றும் பணியில் 2000-ம் ஆண்டில் முதன்முறையாக ஈடுபட்டார். கடந்த 14 ஆண்டுகளில், இறப்புக்குப் பிறகு சுமார் 1300 பேரின் கண்களை அகற்றி 2600 பேருக்கு பார்வை கிடைக்க வழி செய்துள்ளார். இது மட்டுமின்றி, கண் கருவிழி மாற்று அறுவை சிகிச்சையும் செய்து வருகிறார்.
சகோதரரின் கண்களையும்…
வேலுவின் சகோதரர் கடந்த ஆண்டு இறந்தபோது, தனது சகோதரரின் கண்களை வேலு தன் கைகளாலேயே அகற்றி மற்றொருவருக்குப் பார்வை கிடைக்கச் செய்துள்ளார் வேலு.
9-ம் வகுப்பு மட்டுமே படித்த வேலு இன்று பயிற்சி கண் மருத்துவர்கள் பலருக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியராக உள்ளார். இவரது சாதனையைப் பாராட்டி ரோட்டரி கிளப் ஆஃப் கிண்டி சார்பில் சமீபத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த அமைப்பின் உயரிய விருதான தொழிற்பயிற்சி விருதை வேலுவுக்கு வழங்கி கவுரவித்துள்ளனர். வேலு பெற்ற முதல் விருது இது.
‘‘குடும்ப சூழல் காரணமாக, எதிர்பாராதவிதமாகவே இந்த துறையில் சேர்ந்தேன். ஆனாலும் இதில் உள்ள விஷயங்களை ஆர்வத்துடன் கற்றேன். பின்பு ராஜன் மருத்துவமனை மருத்துவர் கள் தந்த ஊக்கத்தால் கண் சம்பந்தப்பட்ட சிகிச்சை முறை களைப் படிப்படியாகக் கற்றுக் கொண்டேன். மருத்துவம் குறித்த அடிப்படை விஷயம்கூட தெரியா மல் வந்த என்னை மருத்துவர்களின் அன்பும் ஊக்கமும்தான் இந்த இடத்துக்கு கொண்டுவந்துள்ளது’’ என்கிறார் வேலு.
வேலுவின் அர்ப்பணிப்பு உணர்வு
‘‘வேலு எங்கள் மருத்துவ மனைக்கு கிடைத்த சொத்து. நேரம் காலம் இல்லாமல் உழைப்பவர். எங்களின் ஊக்கம் தவிர்த்து வேலுவின் சொந்த அர்ப்பணிப்பு உணர்வும்தான் அவரை நல்ல நிலைமைக்கு கொண்டுவந்துள் ளது’’ என்று ராஜன் மருத்துவமனை மருத்துவர் மோகன் ராஜன் கூறினார். அர்ப்பணிப்பு உணர்வும், கடின உழைப்பும் என்றும் வீண்போகாது என்பதற்கு வேலு போன்றவர்களின் வாழ்க்கை முன்னுதாரணம்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: ஆஸ்பத்திரி வார்டு பாயாக சேர்ந்து அறுவை சிகிச்சை நிபுணராக உயர்ந்தவர்
கிராமங்களில் நிறையபேர் இதுபோல இருக்கிறார்கள்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஆஸ்பத்திரி வார்டு பாயாக சேர்ந்து அறுவை சிகிச்சை நிபுணராக உயர்ந்தவர்
தி இந்து- இது போன்ற கட்டுரைகளை பிரசுரிக்கும்
முன் முழுமையான தகவலை தந்தால் நல்லது
-
பயிற்சி மட்டும் இருந்தால் போதுமா?
கண் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்ய
அரசு அனுமதிக்கிறதா..?
-
முன் முழுமையான தகவலை தந்தால் நல்லது
-
பயிற்சி மட்டும் இருந்தால் போதுமா?
கண் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்ய
அரசு அனுமதிக்கிறதா..?
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ஆஸ்பத்திரி வார்டு பாயாக சேர்ந்து அறுவை சிகிச்சை நிபுணராக உயர்ந்தவர்
சில நல்ல திறமைசாலிகளை அரசாங்கம் கல்வி என்ற தகுதியை வைத்து புறக்கணிப்பது நல்லதல்ல... படிப்பை விட பலவேளைகளில் பட்டறிவு பல அனுபவ பாடங்களை தந்து சிறந்தது என நிருபித்திருக்கிறது.
இன்றும் நம் இந்தி கிராமங்களில் பாட்டி வைத்தியம், பாட்டிகள் பிரசவம் பார்ப்பது போன்றவை...
அகத்திய முனிவர் அக்காலத்திலேயே தலையை உடைத்து உள்ளே இருந்த தேரையை தண்ணீர் பாத்திரத்தை கொண்டு தாவி வரச் செய்து வைத்தியம் பார்த்தவர்...
இன்றைய மருத்துவர்களுக்கு இவர்கள் எவ்வளவோ பரவாயில்லை... வைத்திய செலவில்கூட...
இன்றும் நம் இந்தி கிராமங்களில் பாட்டி வைத்தியம், பாட்டிகள் பிரசவம் பார்ப்பது போன்றவை...
அகத்திய முனிவர் அக்காலத்திலேயே தலையை உடைத்து உள்ளே இருந்த தேரையை தண்ணீர் பாத்திரத்தை கொண்டு தாவி வரச் செய்து வைத்தியம் பார்த்தவர்...
இன்றைய மருத்துவர்களுக்கு இவர்கள் எவ்வளவோ பரவாயில்லை... வைத்திய செலவில்கூட...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஆஸ்பத்திரி வார்டு பாயாக சேர்ந்து அறுவை சிகிச்சை நிபுணராக உயர்ந்தவர்
முயற்சி ஆர்வம் இவருடைய வளர்ச்சிக்கு பெரும்பங்காக இருந்திருக்கிறது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» அறுவை சிகிச்சையில்லை, நயன சிகிச்சை
» இதய அறுவை சிகிச்சை இலவசமாக...
» பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த எம்.எல்.ஏ!!
» கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு!
» கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு!
» இதய அறுவை சிகிச்சை இலவசமாக...
» பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த எம்.எல்.ஏ!!
» கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு!
» கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு!
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|