தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிறார்களுக்கான நீதி

View previous topic View next topic Go down

சிறார்களுக்கான நீதி Empty சிறார்களுக்கான நீதி

Post by நாஞ்சில் குமார் Sun Jul 13, 2014 12:44 pm

சிறார்களுக்கான நீதி Xdf4f8

சட்டம் உன் கையில்: பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம்

பொதுவாக சட்டத்தின் முன் குற்றவாளி களாக நிற்கும் சிறார்களையும், பெற்றோர், காப்பாளர்களால் கைவிடப்பட்டோ, வேறு சூழ்நிலையால் ஆதரவற்று தங்களைத் தாங்களே பராமரிக்கவோ, பாதுகாக்கவோ இயலாத குழந்தைகளையும் எவ்வாறு கையாளுவது, பாதுகாப்பு கொடுப்பது, அவர்களின் வாழ்வை வளப்படுத்துவது என்பதை விளம்புகிறது இந்தச் சட்டம்!

இந்திய அரசியல் அமைப்பு சாசனம், அதன் பல்வேறு ஷரத்துகளில் குழந்தைகளின் தேவை மற்றும் அதன் அடிப்படை உரிமைகளை போற்றவும் பாதுகாக்கவும் பல அம்சங்களை வரையறுத்துள்ளது. ஐ.நா. சபையின் பொதுக்குழு 1989ம் ஆண்டு குழந்தைகள் நலன் காக்க மாநாடு கூடியது. அம்மாநாட்டுத் தீர்மானங்களை, இந்தியா 1992 டிசம்பர் 11 அன்று கையொப்பமிட்டு ஏற்றுள்ளது. நடைமுறையில் இருக்கும் பல்வேறு சட்டங்களும் விதிமுறைகளும் வயது வந்தோரின் பார்வையிலும் அவரின் நலனுக்காகவும் இயற்றப்பட்டுள்ளதாலும், அவை குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் பொருந்தாத ஒன்றாக இருப்பதாலும், இவர்களுக்கான தனிச் சட்டத்துக்கான தேவை எழுந்ததால், அதை இயற்றப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதன் அடிப்படையில் 2000ம் ஆண்டு மேற்கூறிய சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இச்சட்டம், 2006ல் போதிய திருத்தம் செய்யப்பட்டு, இன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது.

*இந்தச் சட்டம் வயது நிரம்பாத ஆணையும் பெண்ணையும் சிறார்களாக வகைப்படுத்திஉள்ளது.

*இந்தியா கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டுள்ள ஐ.நா. பொதுக்குழுவின் பரிந்துரைகளுக்கு உள்பட்டு இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

*சிறார் குற்றவாளிகளை கையாள பயிற்சி கொடுக்கப்பட்ட, மனிதாபிமானமிக்க காவல் அதிகாரிகளை நியமிக்க வழிவகை செய்கிறது. 4காவல்துறையினரால் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் குற்றம் சாட்டப்பட்ட சிறார் குற்றவாளிகள் 24 மணி நேரத்துக்குள் குழந்தைகள் நல வாரியத்தின் முன் அல்லது சிறார் நீதிமன்றத்தின் முன் ஒப்படைக்கப்பட வேண்டும்.

*குற்றம் இழைத்த சிறார் குற்றவாளிகள் காவல்துறையின் கண்காணிப்புக்கு வந்தவுடன் அவர்களின் பெற்றோர் அல்லது காப்பாளருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.

*இந்தச் சட்டத்தின் கீழ் சிறார் குற்றவாளிகளை விசாரிக்க தனி அமைப்பு, குழந்தைகள் நல வாரியம், குழந்தை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

*பராமரிக்க பெற்றவர்களோ, மற்றவர்களோ இல்லாத குழந்தைகளை நிரந்தரமாக தத்துக் கொடுக்கவும், தற்காலிகமான பாதுகாப்பில் விடவும், அவர்களுக்கு ஏற்படும் செலவினங்களை உபயதாரர் மூலம் பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

*சிறார் குற்றவாளிகளின் நலன் கருதி அவர்களுடைய பெயர், விலாசம், பள்ளி முகவரி மற்றும் ஏனைய விவரங்களை வெளியிடாமல் பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

*குற்றம் சாட்டப்பட்ட சிறார் குற்றவாளிகள் வழக்குவிசாரணை முடிவடையும் முன்னர் 18 வயது பூர்த்தியாகும் பட்சத்திலும் அவர்கள் சிறார் குற்றவாளிகளாகவே விசாரிக்கப்படுவார்கள்.

*ஒரு சிறார் குற்றவாளியையும் வயது வந்த குற்றவாளியையும் ஒன்றாக விசாரிக்க இந்தச் சட்டம் தடை விதித்துள்ளது.

*பாதுகாப்பு இல்லத்திலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் அல்லது தப்பித்து செல்லும் சிறார் குற்றவாளிகள் மீண்டும் காவல் துறையினரிடமோ, வேறு யாரிடமோ பிடிபடும்போது அவர்கள் தப்பி சென்றதற்கான தண்டனை எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.


நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

சிறார்களுக்கான நீதி Empty Re: சிறார்களுக்கான நீதி

Post by நாஞ்சில் குமார் Sun Jul 13, 2014 12:45 pm

Juvenile Justice Board (சிறார் நீதிமன்றம்)

*ஒவ்வொரு மாநில அரசும் குற்றம் செய்யும் சிறார்களை விசாரிக்க மாவட்டந்தோறும் சிறார் நீதிமன்றங்களை அமைக்க இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது.

*சிறார் நீதிமன்றத்தில் முதன்மை குற்றவியல் நீதிபதி அல்லது மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்திரேட் அவர்களின் தலைமையில் அவருடன் இரண்டு உறுப்பினர்கள் கொண்ட அமர்வு இருக்கும். அவர்கள் இருவரும் சமூக சேவை செய்பவர்களாக அல்லது சமூக ஆர்வலர்களாக இருக்க வேண்டும்.  அவர்களில் ஒருவர் கட்டாயமாக பெண்ணாக இருப்பது அவசியம்.

*சிறார் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்படுகிறவருக்கு குழந்தை மனநலம் மற்றும் குழந்தைகளின் நலன் குறித்த பயிற்சி கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும். மேலும், அவருடன் அமர்த்தப்படும் சமூக ஆர்வலர்கள் குழந்தையின் உடல் நலம், கல்வி போன்ற பணிகளில் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் பணி செய்திருத்தல் அவசியம்.

*சிறார் நீதிமன்றத்தில் அமர்த்தப்படும் உறுப்பினர்கள் அவர்கள் பதவியை துஷ்பிரயோகம் செய்யும் பட்சத்திலோ, ஒழுக்கக்கேடான செயலுக்கு தண்டனை பெற்றவராகவோ,3 மாதங்கள் தொடர்ந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அமர்வில் பங்கேற்காமலோ இருக்கும் பட்சத்தில் அவரை பதவி நீக்கம் செய்ய அரசுக்கு உரிமை உண்டு.

*இந்த நீதிமன்ற அமர்வு அவர்கள் குறிக்கும் நேரத்தில், தேவைப்படும் போது அமர்ந்து செயலாற்றலாம்.

*நீதிமன்றம், அமர்வில் இல்லாத போது சிறார் குற்றவாளி களை ஏதாவது ஒரு உறுப்பினர் முன்னிலையில் ஆஜர்படுத்தலாம்.

*முதன்மை குற்றவியல் நீதிபதியின் தலைமையில் ஒரு உறுப்பினர் இருக்கும் அமர்வு கொடுக்கும் தீர்ப்பு இறுதியானதாக இருப்பினும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

*இந்த அமர்வின் முன் சிறார் குற்றவாளியாக நிறுத்தப்படும் நபரின் வயதில் சந்தேகம் இருப்பின் இந்த சட்ட விதிமுறையின் கீழ் அதனை தெளிவு
படுத்தி விசாரணை மேற்கொள்ள இந்த அமர்வுக்கு அதிகாரமுண்டு. இந்த அமர்வுக்கு முன் நிறுத்தப்படும் சிறார்களுக்குக் கொடுக்கப்படும் உத்தரவுகள்...

*பெரிய தவறு இழைக்காத போது போதிய அறிவுரைகளுடன் அவர் தம் பெற்றோர் அல்லது காப்பாளரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

*தேவைப்படும் வழக்குகளில் சிறார் குற்றவாளிகளை ஆலோசகர்களிடம் அனுப்பி வைக்கலாம்.

*சிறார்களை சமூகப்பணி செய்ய பணிக்கலாம்.

*14 வயதுக்குட்பட்ட சம்பாதிக்கும் சிறார், குற்றவாளியாக இருப்பின் அவரையே அபராதம் செலுத்த வைக்கலாம். இல்லையென்றால், அவர் பெற்றோரோ, காப்பாளரோ அவருக்காக அபராதம் செலுத்தலாம்.

*கடுமையான குற்றங்கள் செய்யும் சிறார் குற்றவாளிக்கு தண்டனையாக அதிகபட்சம் 3 ஆண்டுகள் பாதுகாப்பு இல்லங்களில் வைக்கவே இந்தச்
சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட சிறார் குற்றவாளிகளை அரசாங்கம் நடத்தும் அல்லது அரசாங்க அனுமதியுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் கண்காணிப்பு இல்லங்களிலோ, சிறப்பு சிறார் இல்லங்களிலோ வைத்து பாதுகாக்கவும் பராமரிக்கவும் வேண்டும். இந்த இல்லங்களில் அனுமதிக்கப்படும் சிறார்கள் 7 முதல் 12 வயது, 12 முதல் 16 வயது, 16 முதல் 18 வயது என்று அவர்கள் உடல் மற்றும் மனநிலையை பொறுத்து பிரிக்கப்பட்டு பராமரிக்கப்படுவார்கள். ஒரு குழந்தையின் காப்பாளரோ, உரிமையானவரோ அக்குழந்தையை அடிப்பதோ, நிர்க்கதியாக விடுவதோ, அறிந்தே பராமரிக்காமல் இருப்பதோ அதனால் அந்தக் குழந்தையின் உடல்நலமும் மனநலமும் பாதிக்கப்படுமாயின், அவருக்கு அபராதத்துடன் கூடிய 6 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

ஒரு குழந்தையை பிச்சையெடுப்பதற்காகவோ, வேறு கடினமான பணி செய்வதற்கோ அமர்த்துபவருக்கு 3 ஆண்டுகள் அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்படும். அவ்வாறான செய்கையை ஊக்கப்படுத்துபவருக்கு ஓர் ஆண்டு அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்படும். யாரொருவர் ஒரு குழந்தைக்கு பொது இடத்தில் போதை வஸ்துவையோ, கள், சாராயம் போன்ற போதை பொருளையோ அருந்தக் கொடுப்பது. இந்தச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். அக்குற்றத்துக்கு 3 ஆண்டுகள் அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனை விதிக்கப்படும். யாரொருவர் கடினமான பணிக்கு கொத்தடிமைகளாக குழந்தைகளை அமர்த்தியிருக்கிறாரோ, அவருக்கு 3 ஆண்டுகள் அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

சிறார்களுக்கான நீதி Empty Re: சிறார்களுக்கான நீதி

Post by நாஞ்சில் குமார் Sun Jul 13, 2014 12:46 pm

Child Welfare Committee (குழந்தை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குழு)

*இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு ஒவ்வொரு மாநில அரசாங்கமும் குழந்தை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குழுவை இந்தச் சட்டத்தின் கீழ் கட்டாயமாக அமைக்க வேண்டும். இதற்கு ஒரு தலைவரும் 4 உறுப்பினர்களும் அமர்த்தப்படுவார்கள். அதில் ஒருவர் பெண்ணாக இருப்பது அவசியம். மேலும், ஒருவர் குழந்தை நலன் குறித்த சிறப்பு ஆலோசகராக இருப்பது அவசியம்.

*அவ்வாறு அமர்த்தப்படும் உறுப்பினர்கள் அவர்கள் பதவியை துஷ்பிரயோகம் செய்யும் பட்சத்திலோ, ஒழுக்கக்கேடான செயலுக்கு தண்டனை பெற்றவராகவோ, 3 மாதங்கள் தொடர்ந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அமர்வில் பங்கேற்காமலோ இருக்கும் பட்சத்தில் அவரை பதவி நீக்கம் செய்ய அரசுக்கு உரிமை உண்டு.

*இந்தக் குழு அவர்கள் குறிக்கும் நேரத்தில், தேவைப்படும் போது அமர்ந்து செயலாற்றும்.

*ஏதாவது ஒரு வழக்கை விசாரிக்கும் போது இந்தக் குழுவின் அமர்வில் மாற்றுக் கருத்து வரும்போது பெரும்பாலானோரின் ஒத்த கருத்தே முடிவாக ஏற்றுக்கொள்ளப்படும்.

*இந்தக் குழுவின் முன்னர் பாதிக்கப்பட்ட, ஆதரவு தேவைப்படும் ஒரு குழந்தையை காவல் துறை சார்ந்தவரோ, பொது ஊழியரோ, தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை சார்ந்தவரோ, சமூக சேவை செய்பவரோ அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்த 24 மணி நேரத்துக்குள் ஆஜர்படுத்த வேண்டும். அல்லது பாதிக்கப்பட்ட குழந்தையே தன்னிச்சையாக இந்தக் குழுவின் முன் ஆஜராகி தனக்கு வேண்டிய பாதுகாப்பை கோரலாம்.

*இந்தக் குழு தனக்கு முன் வரும் வழக்குகளை விசாரித்து தகுந்த தீர்வு தரும் முழு உரிமையை இந்தச் சட்டம் கொடுத்துள்ளது.

*இந்தக் குழுவுக்கு குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையங்களை அவ்வப்போது சோதனையிட அதிகாரமுண்டு.

*இந்தச் சட்டத்தின் கீழ் பராமரிக்க பெற்றவர்களோ மற்றவர்களோ இல்லாத குழந்தைகளை நிரந்தரமாக தத்துக் கொடுக்கவும், தற்காலிகமான பாதுகாப்பில் விடவும், அவர்களுக்கு ஏற்படும் செலவினங்களை உபயதாரர் மூலம் பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

*குழந்தையின் நலன் கருதி மட்டும் தத்துக் கொடுக்கப்படும்.

*அவ்வாறு கொடுக்கப்படும் தத்து அரசாங்கத்தின் மற்றும் மத்திய தத்துக் கொடுக்கும் நிறுவனத்தின் பரிந்துரையின் அடிப்படையில் நடைபெறும்.

*அரசாங்கம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தத்துக் கொடுக்கும் மையங்களாக அங்கீகரிக்கும்.

*குழந்தை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குழுவின் 2 உறுப்பினர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு குழந்தையை தத்துக் கொடுக்க
அனுமதித்தால் மட்டுமே சட்டப்படி தத்துக் கொடுக்க முடியும்.

*நடைமுறை விஷயங்களை புரிந்து கொள்ளக்கூடிய குழந்தைகளின் அனுமதியுடனே இவ்வாறான தத்துக் கொடுக்க முடியும்.

*நீதிமன்றத்தின் ஆணை பெற்றே ஒரு சட்டப்படியான தத்து நிறைவடையும்.

*நீதிமன்றம் தத்து எடுப்பவரின் திருமண நிலை அல்லது அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் ஆண், பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தை யில்லா தம்பதிகள் ஆகியவற்றை பொறுத்து தத்துக் கொடுக்க ஆணை பிறப்பிக்கும். இந்தச் சமுதாயம் ஒரு குழந்தையினை பராமரிப்பது மற்றும் பாதுகாப்பது தன்னுடைய முழுமுதற் கடமை என்று எண்ண வேண்டும். இந்தியாவில் அதன் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு சதவிகிதத்தினர் 18 வயதுக்கு உள்பட்டவர்களாக இருக்கிறார்கள். என்னதான் குழந்தைகளின் கல்வி,சட்டத்தால் அடிப்படை உரிமையாக்கப்பட்டிருந்தாலும், 60-70 சதவிகித குழந்தைகள் கல்வி துறந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

நம் நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்பதும் உண்மையே. அதிலும் குறிப்பாக, பச்சிளம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. சில குற்றங்களில் குற்றவாளிகளாக 18 வயது பூர்த்தியாகாத சிறார்களே இருப்பது வேதனை தரும் விஷயம். சில குழந்தைகள் தங்கள் குழந்தைத் தன்மையை இழந்து, கொடும் குற்றங்களை செய்யக்கூடிய குற்றவாளிகளாக மாறக்கூடிய நிலையும் இருக்கிறது. வகுப்பு ஆசிரியரை கொலை செய்த மாணவன்,

‘நிர்பயா’ வழக்குகள் போல பெண்ணின் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது, கொள்ளை, கொலை, கற்பழிப்பு போன்ற பெருங்குற்றங்களை செய்யும் சிறார் குற்றவாளிகளை தண்டிக்க இந்தச் சட்டம் போதுமானதாக இல்லை என்ற கூக்குரலும் எழும்பியுள்ளது. எது எப்படியிருந்தாலும் குழந்தைகளை பராமரித்து மற்றும் பாதுகாத்து அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பது நம் அனைவரின் கடமையே.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

சிறார்களுக்கான நீதி Empty Re: சிறார்களுக்கான நீதி

Post by செந்தில் Sun Jul 13, 2014 6:07 pm

அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிறார்களுக்கான நீதி Empty Re: சிறார்களுக்கான நீதி

Post by mohaideen Mon Jul 14, 2014 1:00 pm

அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிறார்களுக்கான நீதி Empty Re: சிறார்களுக்கான நீதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum