தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 16, 2014 1:29 pm

First topic message reminder :

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Zbpqy_203565


பெண்ணே நீ யார் ....?
-------------------------------

என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!

நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?

தோகை விரித்தாடும் மயில்
அழகியா ..?

எனக்காகவே இறைவனால்
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?

கண்ட நொடியில் வெந்து
துடிக்குதடி -மனசு
பெண்ணே நீ யார் ....?

குறள் - 1081

தகையணங்குறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 20, 2014 10:15 pm

இரக்கமற்றவன் என்கிறார்களே ...!!!

கண்ணுக்குள் கரு விழியாய்
இருப்பவன் நீயடா ...!!!
கண் இமைக்க விடாமல்
கலக்கம் செய்பவன் நீ

கண் இமைத்தால் நீ
மறைந்து விடுவாயோ ...
என்ற ஏக்கத்தால் கண்
மூடாது கண் இமைக்காமல் ...
உன்னோடு நானிருக்கிறேன் ...!
நம் காதலை புரியாத...
என் அயலவர் உன்னை
இரக்கமற்றவன் என்கிறார்களே ...!!!


திருக்குறள் : 1129
+
காதற்சிறப்புரைத்தல்
+
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இவ் வூர்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 49
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 20, 2014 10:38 pm

ஓர் உயிராய் வாழ்கிறோம் ...!!!

எனக்குள் அவரும்
அவருக்குள் நானும்
இரு உடலாக இருந்தும்
ஓர் உயிராய் வாழ்கிறோம் ...!!!

உடல் தான் வேறு
உயிர் ஒன்றுதானே உயிரே
உயிருக்கு உயிராய் இருக்கும்
எம்மை புரியாத இவர்கள்
பிரிந்து இருக்கும் உடலை
பார்த்து பிரிந்து வாழ்கிறோம்
என்கிறார்களே ....!!!

திருக்குறள் : 1130
+
காதற்சிறப்புரைத்தல்
+
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும் இவ் வூர்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 50
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 21, 2014 5:59 pm

கொடுமை தரவில்லை ...!!!

என்னவளும் நானும்
இன்புற்ற இன்பம் இனிமை
இன்பம் இல்லாமல் இருக்கும்
இந்தவேளையில் அந்த இன்பம்
கொடுமை தரவில்லை ...!!!

அவளை நான் மீண்டும்
அடையும் வரை அவள் தந்த
இன்பமும் நினைவுகளும் தான்
அவளை அடையும் வரை
என் துணைவி ...!!!

திருக்குறள் : 1131
+
நாணுத்துறவுரைத்தல்
+
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 51
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 21, 2014 6:27 pm

துன்புற்று கொண்டிருக்கிறது ...!!!

அவளின் பிரிவை இனியும்
தாங்கமுடியாது ...!!!
என் உயிரும் உடலும்
துன்புற்று கொண்டிருக்கிறது ...!!!

நாணத்தை துறந்தேன்
பாதுகாப்பான முறையில்
மட குதிரை ஏற துணிந்து
விட்டேன் .....!!!



திருக்குறள் : 1132
+
நாணுத்துறவுரைத்தல்
+
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 52
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 21, 2014 6:49 pm

எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன் ....!!!

என்னவளை இன்புறமுன்
நாணமும் ஆண்மையும்
கொண்டவனாய் இருந்தேன்
என்னவளை இன்புற்றபின்
எல்லாவற்றையும் இழந்து
நிற்கிறேன் ....!!!

அவள் தந்த இன்பம்
என்னையும் ஆண்மையையும்
தொலைத்து விட்டது
எல்லாவற்றையும் மறந்து
மடலேறப்போகிறேன்...!!!


திருக்குறள் : 1133
+
நாணுத்துறவுரைத்தல்
+
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 53
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 21, 2014 7:02 pm

கட்டழகனாக இருந்தேன்

கட்டழகனாக இருந்தேன்
ஆணழகனாகவும் இருந்தேன்
ஆண்மை மாறாத பண்புடனும்
இருந்தேன் ...!!!

அத்தனையும் போனது
காற்றில் அடிபட்டுப்போன
கப்பல் போல் ...
என்னவளின் மீது இருந்த
இன்ப மோகத்தால் ...!!!


திருக்குறள் : 1134
+
நாணுத்துறவுரைத்தல்
+
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 54
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 21, 2014 7:19 pm

இருள இருள எங்கும் என் மனசு ...!!!

இருள இருள எங்கும்
என் மனசு ...!!!
துடிக்கும் மனசுக்கும்
ஏங்கும் இளமைக்கும்
மருந்தாய் இருப்பவள்
என்னவள் தான் ...!!!

அத்தனை சுகத்தையும்
தந்தவள் என் மனது கன்னி
அவளின் வளையல் நிறைந்த
மெல்லுடல் தானே தந்தது ...!!!

திருக்குறள் : 1135
+
நாணுத்துறவுரைத்தல்
+
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 55
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 24, 2014 3:53 pm

என்னை பாடாய் படுத்துகிறது ....!!!


மெல்லிடையாளே ...
பூவிதழ் கொண்டவளே ...
உன் எண்ணங்கள் என்னை
பாடாய் படுத்துகிறது ....!!!

என் கண்கள் உறக்கத்தை
தொலைத்து விட்டன
தூங்கிய என் கண்களை
நானறியேன் ...!!!
என் வெட்கத்தைவிட்டு
நள்ளிரவு - மடலேற
நினைத்துள்ளேன் ...!!!

திருக்குறள் : 1136
+
நாணுத்துறவுரைத்தல்
+
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 56
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 24, 2014 3:58 pm

காதல் நோயை அனுபவிப்பாள் .....!!!

நான் படும் வேதனையை
என்னவளும் படுவாள்
கடல் ஆழத்தை
காணமுடியாதது போல்
எனவளும் காதல் நோயை
அனுபவிப்பாள் .....!!!

நான் ஆண் மகன்
மடலேரவும் துணிந்து விடுவேன்
மெல்லிய குணங்களை கொண்ட
என்னவளோ -மடலேற மாட்டாள்
இத்தகைய பண்பை உடைய
பெண்கள் புனித பிறப்புக்கு
நிகர் ஏதுமில்லை ...!!!

திருக்குறள் : 1137
+
நாணுத்துறவுரைத்தல்
+
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 57
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 24, 2014 4:06 pm

பரகசியமாகப்போகுதே ....!!!


என்னவள்
நாணம் நிறைந்தவள்
இரக்கம் நிறைந்தவள்
அடக்கம் உடையவள்
இதையெல்லாம் கடந்து ..
இரக்கம் இல்லாமல்
என்னவளையும் ......!!!

எம் இருவருக்கும்
இருக்கும் உன்னத காதல்
எம்மையும் கடந்து ஊருக்குள்
எல்லோரும் பேசி ...
பரகசியமாகப்போகுதே ....!!!

திருக்குறள் : 1138
+
நாணுத்துறவுரைத்தல்
+
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 58
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 24, 2014 4:09 pm

என் காதல் பரவி கிடக்குறது ...!!!



என் காதல்
யாரும் அறியாதவாறு
என் மன அடக்கத்தால் ..
யாருக்கும் தெரியவில்லை
என்றிருந்தேன் ....!!!

என் காதல்
தெருத்தெருவாய்
அம்பலும் அலருமாய்
சுற்றிச் சுற்றி வருகிறது....!
காதலை காமத்தை
நீண்டகாலம் மறைத்து
வைத்திருக்க முடியாதோ ...?


திருக்குறள் : 1139
+
நாணுத்துறவுரைத்தல்
+
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 59
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 24, 2014 4:11 pm

காதல் வலி புரியாதவர்கள் ...!!!



நான் படும் வேதனை
படாதபடும் துன்பத்தை
என்னை பார்க்கும் மூடர்கள்
சிரிக்கிறார்கள் .....!!!

நன்றாக சிரிக்கட்டும்
காதலின் வலி என்ன
என்பதை அனுபவிக்காத
மூடர்கள் தான் சிரிப்பார்கள்
காதலித்துப்பார் வலிபுரியும் ...!!!


திருக்குறள் : 1140
+
நாணுத்துறவுரைத்தல்
+
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 60
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 26, 2014 11:36 am

நம் காதலின் உயிர்ப்பு....

நம் காதலின் உயிர்ப்பு....
காதலின் மகத்துவம்....
புரியாதடி ஊர் மக்களுக்கு.....
ஊர் வாயை மூட முடியாது ..
எதுவென்றாலும் பேசிட்டு ...
போகட்டும் .....!!!

ஊரவரின் பேச்சு ....
எம் காதலுக்கு மூச்சு ...
அவர்கள் பேச பேச தான்
நம் காதல் வளர்கிறது ..
என்பதை மறந்து விட்டார்கள் ...!!!

திருக்குறள் : 1141
+
அலரறிவுறுத்தல்
+
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 61
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 26, 2014 12:19 pm

ஏதேதோ பேசுகிறார்கள் ..

பூவிலும் மென்மையான
என்னவளை காணத்துடிக்கும்
என் கண்ணும் உயிரும்
இன்னும் நான் அவளை
நெருங்கவில்லை .....!!!

என்னவளை ...
சந்திப்பேனா ..? அடைவேனா..?
என்பதை அறியாத என் அயலவர்
ஏதேதோ பேசுகிறார்கள் ..
இதுவும் நம் காதலுக்கு ....
ஒரு உரம்தான் உயிரே ....!!!

திருக்குறள் : 1142
+
அலரறிவுறுத்தல்
+
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 62
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 26, 2014 1:32 pm

நம் வாழ்நாள் வரை .....!!!

என்னவளுக்கும் ..
எனக்கும் இடையே இருக்கும்
காதலை ஊர் பேசியே
உறுதியாக்கி விடுவார்கள்
போலும் ......!!!

நான்
உன்னை அடைவேனா ...?
நம் வாழ்கை இணையுமா ..?
ஏக்கங்கள் நிறைந்த காதலை
ஊராரின் பேச்சு உரமாக்கி விடும்
நம் வாழ்நாள் வரை .....!!!


திருக்குறள் : 1143
+
அலரறிவுறுத்தல்
+
உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 63
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 26, 2014 1:33 pm

இருவரும் பேசிவந்த காதல்

மனத்தால்
நாம் இருவரும் பேசிவந்த
காதல் - இன்று ஊரார்
பேச்சில் சாதாரணமாகி
விட்டது ....!!!

உப்பில்லா ...
பண்டம் குப்பையிலே....
ஊர் பேச்சில்லா காதல்
உயிரற்ற காதலே ....
ஊர் பேச்சு காதலுக்கு
ஒரு வீச்சு .....!!!

திருக்குறள் : 1144
+
அலரறிவுறுத்தல்
+
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 64
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 26, 2014 2:13 pm

காதலில் தருகிறது இன்பம் ...!!!

மதுவின் பழக்கம்
பருக பருக மயக்கம் தரும் ...
என்னவளின் இன்பம் ...
ஊரார் பேச பேச ....
போதை தரும் ....!!!

பருகுவது போதை தான்
மகிழுகிறது மனம் ..
பேசுவது ஊராரின் பேச்சு...
காதலில் தருகிறது இன்பம் ...!!!

திருக்குறள் : 1145
+
அலரறிவுறுத்தல்
+
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 65
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 03, 2014 12:42 pm

எட்டு திக்கும் பேசப்படுகிறதே ....!!!

என்னவனை
காண்பதும் பேசுவதும் ...
மிக அரிது அவனை
நெஞ்சில் சுமந்தே இன்பம்
காணுகிறேன் .......!!!

ஊரார்
பேச்சு கடும் பேச்சு ....
வாயில் வந்தபடி என் காதல்
உலாவுகிறதே ....
நிலவை பாம்பு பிடிப்பது
போல் - என் காதல் கதை
எட்டு திக்கும் பேசப்படுகிறதே ....!!!

திருக்குறள் : 1146
+
அலரறிவுறுத்தல்
+
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 66
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 03, 2014 12:55 pm

காதல் செடி வளர உதவுகிறார்கள்

பேசுங்கள் பேசுங்கள் ...
நன்றாக பேசுங்கள் ....
ஊர் பெண்கள் சேர்ந்தால் ...
சும்மாவா விடுவீர்கள் ...?

ஊர் மக்களின் பேச்சும்...
என் தாயின் கடும் சொல்லும்...
என் காதலுக்கு உரமும்....
தண்ணீரும் போல் ...
இவர்களே என் காதல் செடி
தளர்த்து ஒங்க உதவுகிறார்கள் ....!!!


திருக்குறள் : 1147
+
அலரறிவுறுத்தல்
+
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 67
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 03, 2014 1:10 pm

அணைக்க துடிக்கிறார்கள் ...!!!

எங்கள் காதலை
யாரும் எவரும் அழித்து
விட முடியாது - ஊரார்
என்ன பேசினாலும் என்ன
நடவடிக்கை எடுத்தாலும்
எம் காதல் அழியாது ...!!!

எம் காதலை ...
ஊரார் பேசி பேசி அழித்து..
விடலாம் என்று பகல் ...
கனவு காண்கிறார்கள் ....
நெய்யை ஊற்றி நெருப்பை
அணைக்க துடிக்கிறார்கள் ...!!!

திருக்குறள் : 1148
+
அலரறிவுறுத்தல்
+
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 68
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 03, 2014 1:21 pm

உறுதியாய் கூறி விட்டான் ....!!!

என்
நெஞ்சில் நிறைந்தவன்
கலங்காதே கை பிடிப்பேன்
என்று விட்டான் -என் காதலை
ஏற்று விட்டான் .....!!!

எதற்காக நான்
அஞ்ச வேண்டும் ..?
ஊராருக்கு இனி எதற்கு
தயங்க வேண்டும் ...?
உயிரானவன் உறுதியாய்
கூறி விட்டான் ....!!!


திருக்குறள் : 1149
+
அலரறிவுறுத்தல்
+
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 69
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 03, 2014 2:04 pm

கரம் பிடிப்பான் நிச்சயம் ...!!!

என்னவனையும் ..
என்னையும் பற்றியே
ஊரார் பேசுகிறார்கள் ..
அதுவும் ஒருவகையில்
நன்மைதான் .....!!!

ஊரார் பேசிவிட்டார்கள்
ஊர் முழுதும் பரவிவிட்டது
ஊரறிய என்னவன் என்னை
கரம் பிடிப்பான் நிச்சயம் ...!!!

திருக்குறள் : 1150
+
அலரறிவுறுத்தல்
+
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்கும்இவ் வூர்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 70
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 05, 2014 8:29 am

என் மரண நொடிகள் ...!!!

என்னவனே .....!!!
உன் பிரிவை உயிர் தாங்காது
பிரிய மாட்டேன் என்பதை
என்னிடம் சொல் - நான்
அந்த செய்தியுடன் உயிர்
வாழ்வேன் .....!!!

பிரிந்தே ஆகவேண்டும் ...
என்றால் நீ திரும்பி வரும் ..
வேளையில் உயிருடன் ..
இருப்பவரிடம் சொல் உயிரே ...
உன்னை பிரிந்து வாழும்
நொடிகள் என் மரண நொடிகள் ...!!!

திருக்குறள் : 1151
+
பிரிவாற்றாமை
+
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 71
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 05, 2014 9:01 am

என் உள்ளம் அச்சப்படுகிறது ...!!!

என்னவனின் பார்வை ....!!!
உள்ளம் முழுதும் இன்பம் ...
ஊற்றெடுப்பதாய் இன்புற்றேன் ..
அவரின் பார்வையால் இன்பம்
காணாத பொழுதே இல்லை ...!!!

பிரியப்போகிறார் ....
என்கிறாரே - இப்போதான்
அவர் பார்த்த பார்வை
கொடுமையை ஏற்படுத்துகிறது ..
எப்படி தாங்குவேன் என்று
என் உள்ளம் அச்சப்படுகிறது ...!!!

திருக்குறள் : 1152
+
பிரிவாற்றாமை
+
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 72
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 05, 2014 9:37 am

புரிந்துகொள்ள முடியவில்லை

நான் படும் துயரம் ...
அறிந்தவனே என்னவனே ...
என் துயரத்தை அறியாதவன்
நீ அல்ல .....
அத்தனை அறிவும் அழகும்
உடையவன் - நீ

நீ
திரும்பிவருவாய்
என்று நினைத்தாலும் ...
உன் அறிவுக்கு ஆற்றலுக்கும்
புரிந்துகொள்ள முடியவில்லை
என்னவனே ....!!!

திருக்குறள் : 1153
+
பிரிவாற்றாமை
+
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 73
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 3 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum