தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சட்டம் உன் கையில்!: உயில்

View previous topic View next topic Go down

சட்டம் உன் கையில்!: உயில் Empty சட்டம் உன் கையில்!: உயில்

Post by நாஞ்சில் குமார் Fri Oct 31, 2014 3:29 pm

அன்று அதிகாலை என்னுடைய அலைபேசி விடாமல் அடித்துக்கொண்டிருந்தது. அவ்வளவு அதிகாலையில் என்னை அழைப்பது யாராக இருக்கும் என்ற எண்ண ஓட்டத்துடனே அழைப்பு பொத்தானை அழுத்தினேன்.  மறுமுனையில் அழுகைக்கு நடுவில் ஒரு சில வார்த்தைகள் உதிர்த்துக்கொண்டிருந்தார் எனக்கு தெரிந்த ஒரு பெண்.  

மிகவும் உண்ணிப்பாக கவனித்ததில் அவளுடைய கணவரின் உடல் நலம் மிகவும்  மோசமான நிலையில் இருக்கிறதென்றும், அவருடைய சொந்த பந்தங்கள் எப்படியாவது அவரிடம் அவர்கள் தயாரித்து கொண்டு வந்த ஆவணத்தில் ஒரு கையெழுத்து வாங்கிவிட துடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அவருடைய சொந்தங்கள் அவருடைய சொத்துக்களின் நிலை குறித்து உயில் சாசனம் தயாரிக்க அந்த நேரத்தில் போராடிக்கொண்டிருப்பது வெட்டவெளிச்சமாக புரிந்தது. உடல் நலம் குன்றியிருக்கும் அந்த நபருக்காக கண்ணீர் சிந்தவோ> பரிதவிக்கவோ அவரின் உடல் நிலையைப் பற்றி அவர் கட்டிய மனைவியைத் தவிர அங்கு யாருமில்லை.  வெற்று தாளிலாவது கையெழுத்து வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் கழுகுக் கூட்டத்தைப்போல மொய்த்துக்கொண்டிருந்தது அந்த சொந்தங்கள் என்று அவர் கூறியதில் புரிந்து கொண்டேன்.  

இந்த அழைப்புக்கு பிறகு என்னுடைய கவனம் அவளை சுற்றியே வந்த காரணத்தால் என்னுடைய உதவி வழக்கறிஞர் ஒருவரை அவருக்கு உதவியாக இருக்கும்படி உடனே அனுப்பி வைத்தேன்.  சிறிது நேரம் கழித்து நானும் அந்தப் பெண்ணை சென்று நேரடியாக பார்த்தேன்.  என்னைப் பார்த்தவுடன் அவள் மனதிலிருந்த துக்கங்கள் அனைத்தையும் அழுகையாக கரைத்துக்கொண்டாள்.  குடும்பத்தாரை எதிர்த்து காதல் மணம் புரிந்த தம்பதியர்கள் அவர்கள்.  நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தவருக்கு தீடீரென்று ஒரு மாத காலமாக உடல் நலம் சரியில்லையென்றும், சிறுநீரகங்கள் பழுதடைந்து விட்டது என்றும் மருத்துவர்கள் அவர்களால் இயன்ற மருத்துவ உதவிகளை செய்தாகிவிட்டது என்றும், மாற்று சிறுநீரகம் பொறுத்துவதே ஒரே வழி என்றும் கூறிவிட்டனர். அவளுக்கு என்று சொந்தங்கள் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.

ஒரு சில நண்பர்களின் உதவியைத் தவிர வேறொருவரும் அவளுக்கு உதவ முன்வரவில்லை. மேலும் அவள் கணவர் அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் அவளுக்கு எழுதிவைத்துவிட வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தாரே ஒழிய அதனை இதுவரை நிறைவேற்றாமலே இருந்திருக்கிறார்.  அந்த அபலைப் பெண் மரணப்படுக்கையில் கட்டிய கணவர் இருக்க, கையில் ஒரு குழந்தையுடனும்> கருவில் ஒரு குழந்தையுடனும் ஆதரவற்ற நிலையில்ஞ்ஞ் இத்தனைக்கும் அந்தப் பெண் படித்து பட்டம் பெற்ற ஒருவர். ஓரு உயிர் இந்தப் பூவுலகில் ஜனிக்கும் அக்கணமே அதன் மரணமும் நிச்சயம் என்பது எழுதப்படாத விதி.  எனினும் இந்த ஜனனத்தை வரவேற்கும் மனித மனம் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறது. அதுவாழ்வின் மீதிருக்கும் பேராவலா? அல்லது மரணத்தின் மீதிருக்கும் பயமா? புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது.  இந்த மரணத்தைப் பற்றிய பயமற்ற மனிதனை பார்ப்பது கடினம்.  

என்னுடைய இருபது ஆண்டு வழக்கறிஞர் பணியில் பல நேரம் உயில் எழுதும் எண்ணம் இருப்பினும் அதை தகுந்த நேரத்தில் எழுதத் தவறும் மனிதர்களை சந்தித்ததுதான் அதிகம். அவ்வாறு எழுதினாலும் அதனை நிறைவானதொரு சாசனமாக எழுதாமல் விட்டுச்செல்லும் நபர்கள் அதனினும் அதிகம்.  சாமானிய மனிதன் முதல் சாம்ராஜ்யத்தை ஆண்ட அரச குடும்பத்தை சார்;ந்தவர் வரை பல சர்ச்சைகளை கிளப்பக்கூடிய உயில்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களின் கதவுகளை தட்டி தீர்வு பெற முடியாமல் இன்றும் நிலுவையில் இருப்பதுதான் உண்மை.  உயில் சாசனம் ஒருவரின் உயிர் பிரிந்த பிறகு அது உயிர் பெறுகிறது. சட்டத்தின்முன் ஒரு உயில் ஏற்புடையதாக இருக்க ஒரு சில விஷயங்கள் அதனை இயற்றும் பொழுது கடைபிடிக்கப்பட்டிருக்க வேண்டும்.  

ஒரு நபர் தன் வாழ்நாளில் எவ்வளவு உயில் இயற்றியிருந்தாலும் அவர் கடைசியாக விட்டுச் செல்லும் உயில் சாசனமே சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாகும்.  ஒரு நபர் பல உயில்கள் விட்டுச்செல்லும் பட்சத்தில் அவர் கடைசியாக எழுதிய உயில் எது என்று புரியாத பொழுது நீதிமன்றத்தின் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை.  அவ்வாறு ஒருவர் பல உயில்களை எழுதும் பட்சத்தில் அவர் கடைசியாக விட்டுச்செல்லும் உயிலில் அவர்கள் ஏற்கனவே இயற்றிய உயில்கள் அனைத்தும் செல்லாது என்று ஒரு வரி எழுதியிருப்பது அவசியம்.  பொதுவாக உயிலில் ஒரு நபர் தன்னுடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள்> வங்கி கணக்குகள்> வைப்புநிதிகள்> ஷேர்ஸ்> விலையுயர்ந்த ஆபரணங்கள்> தான் சேமித்து வைத்த விலைமதிப்பற்ற புத்தகங்கள்> ஓவியங்கள் போன்றவை மற்றும் தன்னுடைய சொந்த உபயோகத்திலிருக்கும் ஏனைய பொருட்கள் போன்ற அனைத்தையும் யாராருக்கு விட்டுச் செல்லுகிறோம் என்று தெளிவாக குறிப்பிடப்படவேண்டும்.  

பொதுவாக உயில் என்றால் ஒருவரின் சொத்துக்களைப் பற்றி மட்டுமே குறிப்பிடப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  ஆனால், உயில் என்பது ஒரு தனிமனிதனின் ஆவணம். அதனால் அந்த மனிதன் தன் மறைவிற்கு பிறகு அவர் மனதிலிருக்கும் எண்ணங்களை செயல்படுத்த தன் சொந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் செய்திகளை விட்டுச் செல்லவும் முடியும்.  ஒருவர் தன்னுடைய ஈமக் காரியங்களை இவர்தான் செய்ய வேண்டும்> இவ்வாறுதான் செய்யவேண்டும் என்றும் குறிப்பிடலாம்.  தன்னுடைய சொத்துக்கள் சிலவற்றை தர்ம காரியங்களுக்கு செலவிடவும் அதனை செயல்படுத்த ஒருவரை பாதுகாவலராக நியமிக்கவும் முடியும்.

ஒரு சில பெற்றோர்கள் தங்களுடைய உயிலில் தங்களுடைய மைனர் குழந்தைகளுக்கோ அல்லது தங்களை தாங்களே பராமரித்துக் கொள்ளகூடிய நிலைமையில்லாத குழந்தைகளுக்கோ காப்பளரை நியமிக்கவும் முடியும்.  மேலும் ஒருசிலர் காலம் காலமாக தனக்கு பணியாற்றிய வேலையாட்களுக்கும் உயில் மூலம் அவர் செய்ய விரும்பும் சலுகைகளை செய்ய இயலும்.   பொதுவாக சொத்து என்று எடுத்துக்கொண்டால் மூதாதையர் சொத்து, சுயமாக சம்பாதித்த சொத்து என்று சட்டத்தின் முன்னால் பார்க்கப்படும்.  ஒருவர் உயில் மூலம் மூதாதையர் சொத்தில் தனக்கு வரக்கூடிய பங்கினைப் பற்றி மட்டுமே உயில் சாசனம் எழுத முடியும்.  மேலும் நீதிமன்ற வழக்குகளில் முடிவு தெரியாமல் இருக்கும் சொத்துக்கள் குறித்து உயில் எழுதும் பட்சத்தில் நீதிமன்றத்தின் ஆணைக்கு உட்பட்டே அந்த உயில் சாசனத்தை நடைமுறைப்படுத்த இயலும்.  

பொதுவாக உயிலைப் பற்றின சந்தேகம் கேட்பவர்கள் பலர் பெண்கள் உயில் எழுத சட்டம் அனுமதிக்குமா? என்று கேட்டிருக்கிறார்கள்.  இன்றைக்கு இந்த வினாவை என்முன் எழுப்புபவர்களைப் பார்த்தால் என்னதான் பெண்ணுரிமை பற்றி பேசிக்கொண்டிருந்தாலும், நம்முடைய அரசியல் அமைப்பு சாசனம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறினாலும், இந்த சமுதாயம் ஒரு பெண்ணை தாழ்வாக உரிமையற்ற நிலையிலேயே பார்த்துக்கொண்டிருக்கிறது என்பது மன வேதனை அளிக்கக்கூடிய ஒரு செயல்.  பொதுவாக நல்ல மனநிலையில் உள்ள 18 வயது பூர்த்தியான ஆண் பெண் இருபாலரும் சட்டப்படி செல்லத்தக்க உயில் எழுத சட்டம் வழிவகை செய்துள்ளது.

உயிலை முத்திரைத்தாளில்தான் எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரண வெள்ளைத்தாளிலும் கூட தெளிவான கையெழுத்திலோ அல்லது தட்டச்சு செய்தோ நாம் கூறவரும் செய்திகளை எழுதுபவருக்கு புரிந்த மொழியில் தெளிவு பட விளக்கி> எழுதுபவரின் கையொப்பமோ> விரல் ரேகையோ பதிய வைத்து அதற்கு சாட்சிகளாக இருநபர்களை கையொப்பமிட செய்து அவர்களின் முகவரியும் தெளிவாக குறிப்பிட்டிருக்கவேண்டும்.  உயிலை கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என்று சட்டப்படி அவசியம் இல்லை.  எனினும் பதிவு செய்வது பிற்காலத்தில் பல சட்ட சிக்கல்களை தவிர்க்க வழிவகை செய்யும்.  மேலும் ஒருவர் தன் உயிலில் குறிப்பிட்டுள்ள சொத்துகளை உயிலின்படி அனைவருக்கும் பிரித்துக்கொடுக்க ஒருவரை எக்சிகியூட்டராக (Executor) நியிமிக்க வழிவகை செய்கிறது.  

மேலும் உயிலை எழுத்துவடிவில் மட்டும் தான் அனைத்து சமயங்களில் பார்த்திருப்போமேயென்றாலும் சில நேரங்களில் வாய்மொழியாகவும் உயிலை பதிவு செய்ய இயலும்.  பொதுவாக ராணுவ வீரர்கள் போர்களத்தில் இருக்கும் சமயங்களில் தங்கள் உயிருக்கு ஆபத்து நேரும் எனில் உடன் இருப்பவரிடம் தன்னுடைய உயிலை வாய்மொழியாக குறிப்பிட சட்டம் அனுமதிக்கிறது.  இவ்வாறாக வாய்மொழி உயில்கள் சிறப்பு உயில்களாக சட்டத்தின் பார்வையில் பார்க்கப்படுகிறது. அதேபோல் உயில்களுக்கு சாட்சி கையொப்பமிடுவரை சிறந்த நபர்களாக மற்றும் உயில் எழுதுபவருக்க நன்கு பரிச்சயப்பட்ட நபர்களாக இருப்பது அவசியம்.  

ஒரு வேளை உயிலில் ஏதாவது சிக்கல் ஏற்படும்பொழுது அந்த சாட்சிகள் தெளிவுபடுத்த வழிவகை செய்யும்.  மேலும் அந்த உயிலை கையொப்பமிடுபவர் இவர்கள் முன்னாலும்> இவர்கள் அவரின் முன்னாலும் கையொப்பமிடுவது சட்டப்படி அவசியம். மேலும் ஒரு நிறைவு பெற்ற உயிலில் ஏதாவது ஒரு செய்தியை மட்டும் இணைக்க விரும்பும் பொழுது இணைப்பு உயிலாக Codicil என்று சொல்லக்கூடிய ஆவணத்தை  தயாரிப்பது நடைமுறையில் உள்ளது.  பெரும்பாலும் ஒரு நபர் விட்டுச் செல்லும் உயிலில் இருக்கும் சொத்துகள் நகர்புறத்தில் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றங்களை அணுகி Probate செய்வது சட்டப்படி அவசியம். பெரும்பாலான தருணங்களில் தெளிவாக எழுதப்பட்ட உயிலின்மீது பிரச்சனைகள் எழுவது குறைவு. எனினும் வாரிசுகளுக்குள் அல்லது உயிலில் இருக்கும் சொத்துக்கள் செல்பவர்களுக்குள் பிரச்சினைகள் ஏற்படும் பொழுது நீதிமன்றத்தை அணுகி அதன் மூலம்தான் தகுந்த தீர்வு பெற வேண்டிய நிலையே உள்ளது.

மேற்குறிப்பிட்ட அந்தப் பெண்ணின் கணவர் என்னிடமே ஒரு மாதத்திற்கு முன் அவர் உயில் எழுத வேண்டும் என்ற அவருடைய எண்ணத்தினை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், அதனை செயல் வடிவம் படுத்த அவர் முன்வரவில்லை.  துரதிஷ்டவசமாக உயில் சாசனம் தயாரிப்பதற்கு முன்னரே அவர் மரணத்தை தழுவி விடுகிறார். பெரும்பாலானோர் உயில் என்பது மரணம் நெருங்கும் பொழுது மட்டுமே எழுத வேண்டிய ஒரு ஆவணம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.  இன்றைய உலகில் துர்மரணங்கள் பல விபத்துக்களாலும்> இயற்கை சீற்றத்தினாலும் நடக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது.  அதனால் உயில் எழுத எண்ணும் பொழுதே அதை நடைமுறைப்படுத்துவது தங்களை சார்ந்திருக்கும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினருக்கும் நலன் பயக்கும்.

பெரும்பாலும் உயில் எழுதி விட்டால் உயிருக்கு ஆபத்து என்று என்னும் மூட நம்பிக்கை உள்ளவர்கள் மிகுதியாக உள்ளார்கள். ஒருவர் நல்ல நிலையில் இருக்கும் பொழுதே உயில் எழுதுவதனால் எந்தவிதமான கேடும் வராது என்ற எண்ணத்துடனே செயலாற்றுவது சிறப்பு.  அதனால் நம்மை சார்ந்தவர்கள் எதிர்காலத்தில்; எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாக வாழ்க்கை நடத்த இயலும்.   ஒருவேளை அந்தப் பெண்ணின் கணவர் நினைத்த போது உயில் எழுதியிருந்தால் இவ்வாறான பல குழப்பங்களை தவிர்த்திருக்கலாம்.  எனினும் ஒரு பெண்ணாகவும்> ஒரு வழக்கறிஞராகவும் அந்தப் பெண்ணிற்கு என்னால் முடிந்த ஆறுதலைக் கூறி அவர் கணவர் மறைந்த பிறகும் சட்டப்படி அவளுக்கு வேண்டியவற்றை செய்து அவளுக்கு கிடைக்க சொத்துக்களையும், அவருடைய அலுவலகத்திலிருந்து வந்த நிறைவு ஊதியத்தையும் பல முயற்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் பிறகு பெற்றுக் கொடுத்தேன். ஒரு வேளை உயில் சாசனம் எழுதப்பட்டிருந்தால், அவளுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பயன்களையும் நலன்களையும் எளிதாக பெற்றுத்தந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.  

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

சட்டம் உன் கையில்!: உயில் Empty Re: சட்டம் உன் கையில்!: உயில்

Post by முரளிராஜா Sat Nov 01, 2014 5:35 pm

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum