Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
இது இன்னொரு கேன்சர்
Page 1 of 1 • Share
இது இன்னொரு கேன்சர்
தைராய்டு
[You must be registered and logged in to see this image.]
‘எனக்கு தைராய்டு பிரச்னை இருக்கு. அதனால்தான் திடீர்னு குண்டாகிட்டேன்...’ ‘பீரியட்ஸ் சரியாக வரலை’ என்று சில பெண்கள் பேசும்போது கேட்டிருப்போம். தைராய்டு ஹார்மோன் ஒரு பக்கம் பயமுறுத்திக் கொண்டிருக்க, இப்போது லேட்டஸ்ட்டாக தைராய்டு கேன்சர் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தைராய்டு கேன்சர் பற்றிப் பேசுகிறார் கட்டிகள் அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்ரீபிரகாஷ் துரைசாமி. ‘‘தைராய்டு சுரப்பி கழுத்தில் பட்டாம்பூச்சி வடிவில் அமைந்திருக்கும். இதில் இருந்து சுரக்கும் தைராய்டு ஹார்மோன் மன வலிமைக்கும் உடல் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது. பெண்களின் உடல் வளர்ச்சியில் தைராய்டு ஹார்மோன் பெரிய பங்கு வகிக்கிறது. பெண்களின் மாதவிடாய் சுழற்சியிலோ, கருத்தரித்தலிலோ ஏதாவது பிரச்னை இருந்தால் தைராய்டு ஹார்மோனின் அளவைத்தான் பரிசோதிக்க சொல்வார்கள்.
தைராய்டு ஹார்மோன் கூடுதலாக சுரந்தால் ‘ஹைப்பர் தைராய்டிசம்’ என்னும் பிரச்னையும், குறைவாக சுரந்தால் ‘ஹைப்போ தைராய்டிசம்’ என்னும் பிரச்னையும் வரும். இக்குறைபாடுகளை மாத்திரை, மருந்துகள் கொடுத்தே சரி செய்துவிடலாம். உடலில் தைராய்டு சரியான அளவில் உள்ளதா என்பதை ரத்தத்தில் ஜி3,ஜி4,ஜிஷிபி ஹார்மோன்களின் அளவை பரிசோதித்து கண்டறியலாம். EU THYROID என்று பரிசோதனையில் முடிவு வந்தால் தைராய்டு ஹார்மோன் சரியாக இயங்குகிறது என்று அர்த்தம்.உலகளவில் அதிகம் வரும் கேன்சர் தாக்குதல்களில் 9வது இடத்தை தைராய்டு புற்றுநோய் பிடிக்கிறது. தைராய்டு புற்றுநோய்க்கான காரணத்தை மட்டும் இன்னும் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை.
கதிரியக்கத்தில் வேலை செய்பவர்களுக்கு தைராய்டு கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற உபகரணங்களில் அதிக வருடங்கள் பணிபுரிபவர்களுக்கும் தைராய்டு கேன்சர் வர அதிக வாய்ப்புகள் உள்ளன. மார்பக எக்ஸ்ரே அதிகமாக எடுத்துக்கொண்டவர்களுக்கும் இவ்வகை கேன்சர் வரலாம். பரம்பரை வழியாகவும் வர வாய்ப்புகள் உள்ளன. மரபியல் ரீதியாக ஜீன்களில் ஏதாவது பிரச்னை என்றாலும் தைராய்டு கேன்சர் வருகிறது. RET ,BRAF போன்ற ஜீன்களில் வரும் பிரச்னைதான் தைராய்டு கேன்சரை வரவழைக்கிறது என்றும் சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
அயோடின் சத்து குறைவாக இருந்தாலும் உணவில் உப்பு குறைவாக சேர்த்துக் கொண்டாலும் இந்த கேன்சர் வரலாம் என்கின்றன சில ஆய்வுகள். இந்திய மருத்துவ ஆய்விதழின் அறிக்கைப்படி பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் (Cervix), மார்பகம், சினைப்பை போன்ற பாகங்களை தாக்கும் புற்றுநோய்களுக்கு அடுத்து தைராய்டு புற்றுநோய் அதிகம் வருகிறது. பெண்களை இது தாக்குவதற்கான காரணமும் இன்னும் தெரியவில்லை. தைராய்டு கேன்சரின் அறிகுறிகளை எளிதாக கண்டுபிடிக்கலாம். குரல் கடினமாக மாறும். உணவுகளை விழுங்குவதில் சிரமம் இருக்கும். வறட்டு இருமல் அதிகம் வரும். சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் கூட ஏற்படும். கழுத்தில் சிறிய கழலை அல்லது கட்டி உருவாகி இருக்கும். தண்ணீர் குடிக்கும் போது இது மேல்நோக்கி செல்லும்.
இப்படி கழுத்தில் கட்டி தென்பட்டால் காது, மூக்கு, தொண்டை நிபுணரையோ அல்லது கட்டிகள் அறுவை சிகிச்சை நிபுணரையோ பார்த்து பரிசோதித்துக் கொள்ளல் அவசியமாகும். அதை அவர்கள் பயாப்சி சோதனைக்கு உட்படுத்தி அது கேன்சர் கட்டியா? சாதாரணக் கட்டியா என்பதை உறுதிப்படுத்துவார்கள். அல்ட்ரா சவுண்ட் உபகரணத்தின் மூலமும் சோதனை செய்து தைராய்டு கேன்சரை கண்டுபிடிக்க முடியும். பாப்பிலரி தைராய்டு கேன்சர், பாலிகுலார் தைராய்டு கேன்சர், மெடுல்லரி தைராய்டு கேன்சர், அனாபிளாஸ்டிக் தைராய்டு கேன்சர் என தைராய்டு கேன்சரில் நான்கு வகை உள்ளன. இதில் அனாபிளாஸ்டிக் தைராய்டு கேன்சர் தவிர மற்ற வகை தைராய்டு கேன்சர்களை சிகிச்சை மூலம் எளிதாக குணப்படுத்தலாம். அனாபிளாஸ்டிக் வகை வரும் போதே வளர்ந்த நான்காவது நிலையில் இருக்கும்.
ஆனால், இவ்வகை மிக அரிதாகவே வரும். தைராய்டு கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள் 10 முதல் 20 வருடங்கள் வாழலாம். முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் முழுமையாக குணப்படுத்திவிடலாம். காது, மூக்கு, தொண்டை நிபுணர், கட்டிகள் அறுவை சிகிச்சை நிபுணர், கதிரியக்க சிகிச்சை நிபுணர் என ஒரு குழுவாக இணைந்து சிகிச்சை அளிப்பது மிகுந்த பயனை அளிக்கும். 90 சதவிகிதம் தைராய்டு கேன்சரை குணப்படுத்தி விடலாம். அறுவை சிகிச்சை செய்து கேன்சர் கட்டியை அகற்றிவிட்டு, அயோடின் கதிரியக்க சிகிச்சை முறையை பயன்படுத்தி தைராய்டு கேன்சரின் பாதிப்பை சரி செய்து விடலாம்...’’
[You must be registered and logged in to see this link.]

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532

» இன்னொரு நாள்!
» இன்னொரு கருச்சிதைவுதான்
» இன்னொரு முறை..
» எடை குறைக்க இதோ இன்னொரு காரணம்!
» கேரளாவிலிருந்து இன்னொரு கதாநாயகன்
» இன்னொரு கருச்சிதைவுதான்
» இன்னொரு முறை..
» எடை குறைக்க இதோ இன்னொரு காரணம்!
» கேரளாவிலிருந்து இன்னொரு கதாநாயகன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|