தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !!

View previous topic View next topic Go down

நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !! Empty நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !!

Post by முழுமுதலோன் Mon Feb 16, 2015 3:44 pm

பாவைக்காய் காரக் குழம்பு

பாவைக்காயின் நலன்கள் பல, ஆனால் அவற்றுள் ஒரு குணம் நமக்கு மிகவும் நன்மை பயப்பதாகும். பாவைக்காய் நம் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவுகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதால், அதற்கு 'இயற்கை இன்சுலின் நிலையம்' என்ற பட்ட பெயரும் உண்டு. நீரிழிவு நோய் உள்ளவர்கள் மட்டுமல்லாது நாம் அனைவரும் பாவைக்காயை வாரம் ஒரு முறை நம் உணவில் சேர்த்து கொள்வது ஆரோக்கியமானதாகும். இதோ தங்களுக்காக ஒரு ருசியான பாவைக்காய் காரக் குழம்பு :

தேவையான பொருள்கள் :

பாவைக்காய் - 3
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - 1 கப் ; துருவியது
சமையல் எண்ணெய் - 5 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 7 பல் ; உரித்தது
சின்ன வெங்காயம் - 10 ; உரித்தது
தக்காளி - 1 ; சன்னமாக வெட்டியது
புளி - 1/2 எலுமிச்சை அளவு ; நன்கு கரைத்தது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி தழை - அலங்கரிக்க

செய்முறை :

1) பாவைக்காயை இரண்டாக பிளந்து, விதைகளை நீக்கி விட்டு, 1/2 இன்ச் தடிமனுக்கு பிறை வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்

2) புளியை சுடு நீரில் 15 நிமிடம் ஊறவைத்து நன்கு கரைத்துக் கொள்ளவும்

3) வெந்தய விதைகளை சூடான கடாயில் வாசனை வரும்வரை வறுத்துக் கொண்டு, ஆறிய பின் துருவிய தேங்காய் சேர்த்து விழுதாக அரைக்கவும்

4) ஒரு பாத்திரத்தில், எண்ணெயை சூடாக்கி கடுகை வெடிக்க வைக்கவும்

5) கறிவேப்பிலை, பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

6) அவை சிவந்ததும், பாவைக்காய் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

7) தக்காளி நன்கு கலந்து திரண்டு வரும்வரை சமைக்கவும்.

8) அதற்குள் ஒரு கிண்ணத்தில் புளி சாறு, தேங்காய் விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.

9) இந்த கலவையை தாளித்தவைகளுடன் சேர்த்து, மூடி வைத்து சிறு தீயில் 15 நிமிடம் சமைக்கவும்.

10) குழம்பு நன்கு கொதித்ததும், கறிவேப்பிலை கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !! Empty Re: நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !!

Post by முழுமுதலோன் Mon Feb 16, 2015 3:44 pm

கத்திரிக்காய் முருங்கைகாய் காரக் குழம்பு (Brinjal-Drumstick Spicy Gravy)

தேவையான பொருட்கள் :

1. தக்காளி (tomato) - 1
2. சின்ன வெங்காயம் (sambar onion) - 6
3. வெள்ளைபூண்டு (garlic) - 4பல்
4. நல் எண்ணெய் (oil) - 4 tbsp
5. கருவேப்பில்லை சிறிதளவு (curry leaves)
6. புளி (Tamarind) - சிறிதளவு
7. தேவையான அளவு உப்பு (required salt)
8. சோம்பு/பெருஞ்சீரகம் (fennel seeds) - சிறிதளவு
9. சின்னசீரகம் (cumin seeds) - சிறிதளவு
10. கடுகு (mustard) - சிறிதளவு
11. உளுத்தம் பருப்பு (urad dhal) - சிறிதளவு
12. மிளகு (Black pepper) - சிறிதளவு
13. கத்திரிக்காய் (brinjal) - 2
14. முருங்கைகாய் (drumstick) - 1
15. சாம்பார் தூள் (sambar powder) -2 tbsp

செய்முறை :

முதலில் உப்பு மற்றும் புளியை நீரில் ஊறவைத்து கொள்ளவும்.

கடாயை (pan ) அடுப்பில் காயவைத்து, 4 ஸ்பூன் நல்எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, சின்னசீரகம், உளுத்தம் பருப்பு, மிளகு, சோம்பு/பெருஞ்சீரகம், கருவேப்பில்லை, வெங்காயம், தக்காளி, வெள்ளைபூண்டு, கத்திரிக்காய் மற்றும் முருங்கைகாய் அனைத்தையும் 5 நிமிடம் வதக்கி, பின் ஊறவைத்த உப்பு - புளியை கரைத்து ஊற்றவும்.

பின்னர் சாம்பார்தூள் போட்டு 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். அருமையான செட்டிநாட்டுக் காரக் குழம்பு ரெடி!!

காரக் குழம்பை - சாதம், தோசை, இட்லி இவைகளுடன் சாப்பிடலாம்...
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !! Empty Re: நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !!

Post by முழுமுதலோன் Mon Feb 16, 2015 3:45 pm

செட்டிநாடு கார குழம்பு

தேவையான பொருகள்
மசாலா

துவரம் பருப்பு 1 தே.க
கடலை பருப்பு 1 தே.க
உள்ளுத பருப்பு 1 தே.க
மல்லி 1 தே.க
கசகசா 1 தே.க
வெந்தியம் 1 தே.க
காய்த்த சிவப்பு மிளகாய் 5-6
பெருகாயம் 1/2 தே.க
பட்டை சிறிது

தாளிக்க

நல்ல எண்ணெய் 1 கப்
கடுகு சிறிது

குழம்புக்கு

கத்திரிக்காய் 1/4 கிலோ
புளி 1 எல்லுமிச்சை அளவு
தேங்காய் பால் 1 கப்
சின்னவெங்காயம் 1 கப்
வெல்லம் சிறிது
மஞ்சள் தூள் சிறிது
உப்பு தேவைகேற்ப

1.மேற்கூரிய மசாலா அனைத்தையும் எண்ணெய் இல்லாமல் வாணலில்போட்டு வதக்கி, ஆறியவுடன் மிச்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். புளியை கரைத்து வைத்து கொள்ளவும்.

2.வாணலில் எண்ணெய் உட்றி கடுகை தாளித்து, சின்னவெங்காயம் மற்றும் கத்திரிக்காய் ஆகியவற்றை வதக்கி கொள்ளவும்.

3. இதில் புளி தண்ணியை சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன் அரைத்த மசாலா கலவை மற்றும் உப்பை போடவும்.

4. பின்பு தேங்காய் பாலை சேர்த்து 10-15 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

5. இரக்கும் முன்பு சிறிது வெள்ளம் சேர்க்கவும். சுவையான காரக்குழம்பு ரெடி.

செட்டிநாடு கார குழம்பு

இதில் கத்திரிக்காய்கு பதில் மாங்காய்/வெண்டைக்காய் சேர்க்கலாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !! Empty Re: நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !!

Post by முழுமுதலோன் Mon Feb 16, 2015 3:46 pm

உருளை கிழங்கு கார குழம்பு

பொடியாக அறிந்த - வெங்காயம் - 1
பொடியாக அறிந்த தக்காளி - 1
நீளவாக்கில் நறுக்கிய உருளைகிழங்கு - 2
பூண்டு - 5,6 பல்
தாளிக்க;
கடுகு - 1/2ஸ்பூன்
வெந்தயாம் - 1/2ஸ்பூன்
கறிவேப்பிலை
வறுத்து அரைக்க
மல்லி - 3ஸ்பூன்
சீரகம் - 3ஸ்பூன்
மிளகு - 4ஸ்பூன்
வெந்தயம் - 1ஸ்பூன்
துவரம் பருப்பு - 3ஸ்பூன்
அரிசி - 4ஸ்பூன்
உளுந்து - 2ஸ்பூன்
தேங்காய் பூ - 5 ஸ்பூன்
வத்தல் - 6
சாம்பார் தூள் - 2 ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு.(கட்டியாக 1கப் பிழிந்து எடுக்கவும்)
தேங்காய் பால் - 1/2 கப்
உப்பு ,எண்ணெய் - தேவைக்கு

முதலில் வருக்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் கடாயில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்
சிறிது வறுத்த பின் தேங்காய் பூ போட்டு வருக்கவும்.வாணலியில் எண்னெய் ஊற்றி காய்ந்த பின்பு கடுகு, வெந்தயம், க.பிலை போட்டு தாளீக்கவும் பிறகு வெங்காயாம்,தக்காளி, பூண்டு போட்டு வதக்கவும்

வதங்கிய பின்பு உருளைகிழங்கை போடவும்.இது வதங்கும் நேரத்தில் அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் அரைக்கவும் நைசாக அரைக்கவும்.இதில் 5-7ச்பூன் தூளை உருளைகல்வையில் சேர்க்கவும்
பிறகுஉப்பு, தேங்காய் பால் மற்றும் புளி கரைசல் ஊற்றவ்வும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றவும்)

திக்காக வரும் வரை கொதிக்க வைக்கவும்.சூடான சாதத்துடன் பரிமாறவும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !! Empty Re: நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !!

Post by முழுமுதலோன் Mon Feb 16, 2015 3:46 pm

கத்தரிக்காய் காரகுழம்பு

தேவையானவை

கத்தரிக்காய் - 3 சின்னது
தக்காளி - 2
வெங்காயம் - 1
புளி - நெல்லிகாய் அளவு
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - கொஞ்சம்
மஞ்சள் தூள் - 1/4 தே.க
மிளகாய் தூள் - 1 தே.க
தனியா தூள் - 1 தே.க

தாளிக்க

எண்ணெய் - 1 தே.க
கடுகு - 1/2 தே.க
வெந்தயம் - 1/4 தே.க

மசாலா அரைக்க

தேங்கய் துறுவல் - 2 தே.க
சோம்பு - 1/4 தே.க
மிளகு - 1/4 தே.க
கசகசா - 1/2 தே.க
முந்திரி பருப்பு - 4
பட்டை - சிறு துண்டு
சீரகம் - 1/4 தே.க

செய்முறை

வெங்காயம் தக்காளியை நறுக்கவும்.
புளியை ஊறவைக்கவும்.
கத்தரிக்காயை நல்ல பெரிய துண்டங்களாக நறுக்கவும்.
பூண்டை தோல் உரித்து தட்டி வைக்கவும்.
மசாலா சாமன்களை அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை போட்டு தாளிக்கவும்.வெங்காயம், தக்காளி சேர்த்து
ஐந்து நிமிடம் வதக்கவும்.
கத்தரிக்கயை சேர்த்து, மஞ்சள் தூள்,தனியா தூள்,
மிளகாய் தூள் போட்டு வதக்கவும்.
நல்ல வதங்கிய பின் புளி தண்னிர், உப்பு சேர்த்து
மேலும் பத்து நிமிடம் வதக்கவும்.
கத்தரிக்கயை நல்ல வெந்ததும் அரத்துள்ள மசாலாவை சேர்த்து
பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
நல்ல கொதித்து கொஞ்சம் கெட்டியாகி எண்ணெய் மிதந்து வரும் போது கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.
இது சாதம்,தோசை,இட்லி எல்லாவற்றிற்கும் நல்லா இருக்கும்.
இந்த காரகுழம்பு செட்டிநாடு தோழியிடம் நான் கற்றது. நல்ல டேஸ்டியாகவும்
மேலும் மேலும் செய்து சாப்பிட தூண்டும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !! Empty Re: நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !!

Post by முழுமுதலோன் Mon Feb 16, 2015 3:47 pm

சுண்டைக்காய் காரக்குழம்பு

தேவையான பொருட்கள்:

சுண்டைக்காய் - 200 கிராம்
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
பூண்டு - 10 பற்கள்
சாம்பார் மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
புளி - ஒரு சிறு எலுமிச்சை அளவு
வெல்லம் - ஒரு சிறு நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 100 கிராம்
கடுகு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
கறிவேப்பில்லை - 2 கொத்து
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - ஒரு லிட்டர்

செய்முறை:

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்தபின் கடுகு, வெந்தயம், கறிவேப்பில்லை போட்டு பொறிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி கையால் மசித்து வெங்காயம் வதங்கியவுடன் போடவும்.
தக்காளி வதங்கிய பின் பூண்டை போடவும்.
இரண்டாக நறுக்கிய சுண்டைக்காயை போட்டு சிறிது நிறம் மாறும் வரை வதக்கவும்.
இப்பொழுது சாம்பார் மிளகாய் தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு தண்ணிர் ஊற்றி கொத்தமல்லி, வெல்லம், தேவையான உப்பு ஆகியவற்றை போட்டு கலக்கவும்.
மேலே எண்ணெய் தானாக மிதந்து வரும் அளவுக்கு கொதிக்க விடவும்.
சுண்டைக்காய் குழம்பு தயார் !!!

பின்குறிப்பு:

சுண்டைக்காயை சமைப்பதற்கு முன் நிறம் மாறாமல் இருப்பதற்கு அதை இரண்டாக நறுக்கி தண்ணிரில் போட்டுவைக்கவும்.

சாம்பார் மிளகாய் தூள்
கொத்தமல்லி (தனியா) - 1 கிலோ
நீட்டு மிளகாய் - 1/2 கிலோ
குண்டு மிளகாய் - 1/2 கிலோ
மஞ்சள் - 50 கிராம்
கடுகு - 100 கிராம்
மிளகு - 100 கிராம்
சீரகம் -100 கிராம்
வெந்தயம் - 25 கிராம்
கடலை பருப்பு - 100 கிராம்
சோயா பீன்ஸ் - 100 கிராம்
புழுங்கல் அரிசி - 100 கிராம்

கடலை பருப்பு, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், சோயா பீன்ஸ், புழுங்கல் அரிசி ஆகியவற்றை தனி தனியாக எண்ணெய் இல்லாமல் லேசாக வறுத்து பின் கொத்தமல்லி (தனியா), நீட்டு மிளகாய், குண்டு மிளகாய், மஞ்சள் இவற்ற்றோடு சேர்த்து மிசினில் அரைத்து கொள்ளவும்.
மிளகாய் தூள் அரைத்ததும் சூடு ஆறும் வரை பாத்திரத்தை மூடாமல் திறந்து வைக்கவும். ஆறியபின் முடிவைத்துத் தேவையான பொழுது பயன்படுத்தவும்.
நீட்டு மிளகாய், குண்டு மிளகாய் இரண்டும் கிடைக்காத பட்சத்தில் ஏதேனும் ஒரு வகை மிளகாயை ஒரு கிலோ பயன்படுத்தலாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !! Empty Re: நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !!

Post by முழுமுதலோன் Mon Feb 16, 2015 3:48 pm

வேர்கடலை கார குழம்பு

முருங்கைக்காய் - நான்கு
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பூண்டு - நான்கு பற்கள்
வேர்கடலை - ஒரு கையளவு
தேங்காய்துருவல் - இரண்டு தேக்கரண்டி
மிளகாய்தூள் - இரண்டு தேக்கரண்டி
தனியாத்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - கால் கோப்பை
கடுகு, சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெந்தையம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து

தக்காளி, வெங்காயம், பூண்டை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
முருங்கைக்காயை வேண்டிய அளவிற்கு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
வேர்கடலையை வறுத்து தோலை நீக்கி விட்டு தேங்காய்ப்பூவைச் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாக கரைத்து வைக்கவும்.
பிறகு குழம்பு கூட்டும் சட்டியில் எண்ணெயை ஊற்றி காயவைத்து கடுகு சீரகத்தைப் போட்டு பொரியவிடவும். பிறகு வெந்தயம், வெங்காயம், பூண்டைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
பிறகு தக்காளி, கறிவேப்பிலையைப் போட்டு மையாக வதக்கவும்.
தொடர்ந்து காய்யை போட்டு உப்பை சேர்த்து வதக்கி எல்லாத்தூளையும் போட்டு நன்கு வதக்கவும்.
முருங்கைக்காயின் வாசனை வரும் வரை வதக்கி புளியை ஊற்றி இரண்டு கோப்பை நீரைச் சேர்த்து கலக்கி விட்டு கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்து காய்கள் வெந்தவுடன் அரைத்த வேர்கடலை விழுதை போட்டு கலக்கி விடவும். குழம்பு மிகவும் கெட்டியாக இருந்தால் மேலும் அரைக்கோப்பை நீரை ஊற்றி அடுப்பின் அனலை குறைத்து வைத்து வேகவிடவும்.
ஐந்து நிமிடம் கழித்து குழம்பை கிளறிவிட்டு அடுப்பை நிறுத்தி விடவும். சுவையான கார குழம்பு தயார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !! Empty Re: நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !!

Post by முழுமுதலோன் Mon Feb 16, 2015 3:49 pm

பூண்டு, வெங்காய காரக் குழம்பு

உரித்த சி. வெங்காயம் - நூறு கிராம்
உரித்த பூண்டு பல் - ஐம்பது கிராம்
தக்காளி - நான்கு
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
புளி - சிறிய நெல்லிக்காயளவு
எண்ணை - ஐந்து டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - அரை டீ ஸ்பூன்
கடுகு - ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
உப்பு - ஒன்றரை டேபிள் ஸ்பூன்

அரைக்க:

வர மிளகாய் - பத்து
மல்லி - இரண்டு டீ ஸ்பூன்
தேங்காய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
கடலைபருப்பு - அரை டீ ஸ்பூன்
மிளகு - பத்து

முதலில் அரைக்க வைத்துள்ள சாமான்களை வாசனை வர வறுத்து விழுதாக அரைக்கவும்.
புளியை ஊற வைத்துக் கரைத்து வடிகட்டி உப்பு, மஞ்சள் பொடி, அரைத்த விழுது சேர்த்து அரை லிட்டர் நீரில் கலக்கி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து மூன்று ஸ்பூன் எண்ணையை மட்டும் ஊற்றி வெந்தயம் தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
லேசாக சிவந்ததும் தக்காளி போட்டு வதக்கவும்.
எண்ணை பிரிய தொடங்கியதும் புளிக் கரைசலை ஊற்றி பதினைந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
நன்றாக கொதித்து கெட்டியாகி எண்ணை மேலே மிதக்கத் தொடங்கியதும் இறக்கி விடவும்.
சிறிய வாணலியில் மீதமுள்ள இரண்டு ஸ்பூன் எண்ணை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி மூடவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !! Empty Re: நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !!

Post by முழுமுதலோன் Mon Feb 16, 2015 3:50 pm

பருப்பு உருண்டை காரக்குழம்பு

துவரம் பருப்பு -- ஒரு கப்
மிளகாய் வத்தல் -- 5
கடுகு -- அரைஸ்பூன்
வெந்தயம் -- அரைஸ்பூன்
பெருங்காயம் -- ஒருஸ்பூன்
சாம்பார்பொடி -- 2ஸ்பூன்
புளி -- எலுமிச்சை அளவு
எண்ணை -- ஒரு கரண்டி
அரிசி மாவு -- ஒருஸ்பூன்

துவரம்பருப்பை நன்கு கழுவி ஒருமணி நேரம் ஊறவைத்து, மிளகாய், கொஞ்சம் உப்பு சேர்த்து மிக்சியில் வடை மாவு பக்குவத்தில் கெட்டியாக அரைத்து சிறு நெல்லிக்காய் அள்வு உருண்டைகளாக உருட்டி வக்கவும்.
கடாயில் எண்ணை ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து புளியை கரைத்து விடவும்.தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
புளி வாசனை போக கொதித்ததும் செது வைத்திருக்கும் பருப்பு உருண்டைகளைச்சேர்க்கவும்.
உருண்டைகள் வெந்ததும் இறக்கவும்.
சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட நல்லா இருக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !! Empty Re: நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !!

Post by முழுமுதலோன் Mon Feb 16, 2015 3:50 pm

மொச்சை காரக்குழம்பு


மொச்சை - அரை கப்
சின்ன வெங்காயம் - அரை கப்
பூண்டு - அரை கப்
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
தனியாதூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவைக்கு
அரைக்க:
மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
தக்காளி - 4

மொச்சையை 6 முதல் 8 மணி நேரம் ஊற வைத்து, சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். பூண்டு, வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும்.
புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும். தக்காளி, மல்லித்தழை, கறிவேப்பிலை, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, தாளிக்கும் பொருட்களை சேர்த்து, வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம், பூண்டு நன்கு வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து, மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
இதனுடன் மிளகாய்தூள், தனியாதூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும்.
பின்னர் புளி தண்ணீர், சிறிது உப்பு, வேக வைத்த மொச்சை சேர்த்து நன்கு பச்சைவாசனை போக கொதிக்க விட்டு இறக்குங்கள்.
சுவையான மொச்சைக் குழம்பு ரெடி. தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை அரைத்து சேர்ப்பதால் வழக்கமான கார குழம்பைவிட வித்தியாசமான சுவையில் இருக்கும். சாதத்துடன் சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !! Empty Re: நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !!

Post by முழுமுதலோன் Mon Feb 16, 2015 3:51 pm

பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு

பேபிகார்னில் கால்சியம், புரோட்டீன், வைட்டமின், நார்சத்து என எல்லாமே உள்ளது. குடல் சம்பந்தமான நோய்களுக்கு நல்ல மருந்து என மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் கீரையைப்போல, இதையும் இரவு நேரத்தில் தவிர்ப்பது நல்லது. இதில் பொதுவாக மஞ்சூரியன் மாதிரி ஃப்ரை வகைகள்தான் செய்வார்கள். இதில் காரக்குழம்பு வேர்க்கடலை (புரோட்டீன் சத்து) சேர்த்து செய்திருக்கிறார் திருமதி. இளவரசி அவர்கள்.

பேபிகார்ன் – 10
வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் – ஒன்று
தக்காளி - ஒன்று
பூண்டு - 4 பல்
புளி – எலுமிச்சை அளவு
பச்சைமிளகாய் – 2
சாம்பார்பொடி - 2 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)
நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
அரிசி ஊறிய நீர் - 1 கப் (குழம்புக்கு தேவையான அளவு)
தேங்காய்ப்பால் பவுடர் - 2 மேசைக்கரண்டி

வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காய் பால் பவுடரை அரை கப் வெந்நீரில் கரைத்துக் கொள்ளவும் அல்லது தேங்காய் துருவல் இருந்தால் அதிலிருந்து கெட்டியான பால் அரை கப் எடுத்துக் கொள்ளவும்.

தக்காளியுடன் சாம்பார் தூளை சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும். புளியை அரிசி ஊற வைத்த நீரில் போட்டு கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும். பேபி கார்னை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

பிறகு வேர்க்கடலை மற்றும் நறுக்கின பேபி கார்ன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

அதன் பின்னர் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதினை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

எல்லாவற்றையும் சேர்த்து வதக்கிய பின்னர் புளிக்கரைசலை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.

குழம்பு கெட்டியாகி எண்ணெய் மேலே மிதக்கும் போது தேங்காய்ப்பாலை ஊற்றி கிளறி விடவும்.

ஒரு கொதி கொதித்ததும் நறுக்கின கொத்தமல்லித்தழை தூவி இறக்கி விடவும்.

சுவையான பேபிகார்ன் வேர்க்கடலை காரக்குழம்பு ரெடி.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !! Empty Re: நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !!

Post by முழுமுதலோன் Mon Feb 16, 2015 3:52 pm

சேப்பங்கிழங்கு காரக்குழம்பு

சேப்பங்கிழங்கு - அரை கிலோ
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
கருவடாம் - 2 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை - 10 இலை
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி

சேப்பங்கிழங்கை வேகவைத்து, பின்னர் அதன் தோலை நீக்கி, நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கருவடாமை போடவும்.
வெடித்ததும் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். 5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். புளியை கெட்டியாக கரைத்து அதில் ஊற்றவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள சேப்பங்கிழங்கை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
குழம்பு வெந்தவுடன் இறக்கி வைத்து பரிமாறவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !! Empty Re: நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !!

Post by முழுமுதலோன் Mon Feb 16, 2015 3:53 pm

முருங்கக்காய் கார குழம்பு (செட்டிநாடு)

தேவையான பொருட்கள்:

புளி - எலுமிச்சை அளவு
முருங்கக்காய் துண்டுகள் - பத்து
சின்ன வெங்காயம் - பத்து
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
தக்காளி - ஒன்று அல்லது இரண்டு
பச்சை மிளகாய் - நான்கு
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஐந்து (optional)
நல்லெண்ணெய் - இரண்டு குழிகரண்டி +அரை குழிகரண்டி
கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன்

அரைக்க:

சோம்பு பொடி - கால் டீஸ்பூன்
தேங்காய் துறுவல் - கால் கப்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
சாம்பார் பொடி - ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன்
தனியா பொடி - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஐந்து இலை

செய்முறை:

* வெங்காயத்தை தோலுரித்து கொள்ளவும்,
* பச்சை மிளகாயை கீறி கொள்ளவும்.
* புளியை மூன்று கப் நீரில் கரைத்து கொள்ளவும்.
* அரைக்க வேண்டியதை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
* பாத்திரத்தில் இரண்டு குழிகரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மிளகாய் வற்றல்,பச்சை மிளகாய் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து பொறிய விடவும்.
* சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி முருங்கக்காய் சேர்க்கவும்.
* உப்பு சேர்த்து தக்காளி ,மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
* பச்சை வாசனை போனதும் அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொத்தி வந்ததும் மீதும் உள்ள எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து எண்ணெய் கக்கும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
* சுவையான கார குழம்பு தயார்.

குறிப்பு:

உங்கள் நாவிற்கு தகுந்தாற்போல் காரத்தை கூட குறைத்து போட்டு கொள்ளுங்கள்.
சின்ன வெங்காயம் உரிக்கும் பொழுது கண் எறியாமல் இருக்க ஒரு பத்து நிமிடம் முன்பு தண்ணீரில் ஊற போட்டு விடுங்கள்.எளிதாக தோல் நீக்கிவிட முடியும் அதே சமயம் கண் எறியாது.

அறுசுவை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !! Empty Re: நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !!

Post by mohaideen Tue Feb 17, 2015 12:07 pm

காரக்குழம்பு வகைகளை பதிந்ததற்கு நன்றி அண்ணா
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !! Empty Re: நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !!

Post by செந்தில் Tue Feb 17, 2015 12:26 pm

ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !! Empty Re: நீங்க கார குழம்பு பிரியரா ? அப்பா இங்க வாங்க !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum