Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தமிழினியன் கவிதைகள் !
Page 1 of 1 • Share
தமிழினியன் கவிதைகள் !
மறைந்துயிர் போன உறையின் தானம் !
நாத்திகனல்ல நானிதைச் சொல்ல
ஆத்திரமின்றி யோசித்துப் பாரீர்!
சாத்திரசடங்கு சம்பிரதாயங்கள்
போர்த்தி வளர்த்த பொய்யுடலங்கள் !
மூச்சடங்கியது வீழ்ந்திட்ட பின்னும்
ஆச்சார சீலங்கள் ஆயிரங் காணும் !
குலச்சார உபசாரம் கொடுத்ததைக்கொண்டு
அபச்சாரமாகவேன் குப்பையாய் கொழுத்துவான்?
மண்ணுக்கும் புழுவிற்கும் மக்கியது போகவா
கண்ணுக்கும் கருத்துக்கும் காத்ததை வளர்த்தது?
மன்னனிறைவனின் மாண்புறு படைப்பினில்
எண்ணயிங்கெதுவும் கழிவில்லை கண்டீர் !
மறைந்தும் மறையா வாழ்வென்னும் அறமே !
மறைந்துயிர் போன உறையின் தானம் !
குறையோ பிழையோ இதிலொன்றுமில்லை –பாவக்
கறைகள் கழுவி இறைசேருமான்மா!
மண்ணாய்க் காற்றாய் மறைந்து போன நமை
எண்ணாதிறுதியில் மறந்து போவதை
கண்ணாய் கலமாய் தானம் செய்து நாம்
எண்ணா ஆயுளும் நீண்டு வாழ்வமே!
-தமிழினியன்-
நாத்திகனல்ல நானிதைச் சொல்ல
ஆத்திரமின்றி யோசித்துப் பாரீர்!
சாத்திரசடங்கு சம்பிரதாயங்கள்
போர்த்தி வளர்த்த பொய்யுடலங்கள் !
மூச்சடங்கியது வீழ்ந்திட்ட பின்னும்
ஆச்சார சீலங்கள் ஆயிரங் காணும் !
குலச்சார உபசாரம் கொடுத்ததைக்கொண்டு
அபச்சாரமாகவேன் குப்பையாய் கொழுத்துவான்?
மண்ணுக்கும் புழுவிற்கும் மக்கியது போகவா
கண்ணுக்கும் கருத்துக்கும் காத்ததை வளர்த்தது?
மன்னனிறைவனின் மாண்புறு படைப்பினில்
எண்ணயிங்கெதுவும் கழிவில்லை கண்டீர் !
மறைந்தும் மறையா வாழ்வென்னும் அறமே !
மறைந்துயிர் போன உறையின் தானம் !
குறையோ பிழையோ இதிலொன்றுமில்லை –பாவக்
கறைகள் கழுவி இறைசேருமான்மா!
மண்ணாய்க் காற்றாய் மறைந்து போன நமை
எண்ணாதிறுதியில் மறந்து போவதை
கண்ணாய் கலமாய் தானம் செய்து நாம்
எண்ணா ஆயுளும் நீண்டு வாழ்வமே!
-தமிழினியன்-
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: தமிழினியன் கவிதைகள் !
சிறந்த விழிப்புணர்வு...
நானும் கண் தானம் செய்ய முன்வந்துள்ளேன் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
நானும் கண் தானம் செய்ய முன்வந்துள்ளேன் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
Re: தமிழினியன் கவிதைகள் !
இந்தக் கவிதையைப் பார்த்த பின் அல்லவே கவிஞரே நீங்கள் தானம் செய்தது?
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: தமிழினியன் கவிதைகள் !
ஜாதி!
முதல் மனிதன்
பிறந்த போது
இல்லாதிந்த ஜாதி !
எதிலிருந்து
எப்போதிருந்து
வந்ததிந்த ஜாதி ?
வலியது
எளியததை
இழிமை செய்து
வலிமை பெறும்
இயற்கையெனும்
நியதி
முதலடியைப்
போட்டிருக்கும்
ஆரம்பம் புரிய
நான் சொல்லுகிறேன்
கேள்!
எளியவராய்
நீயிருந்து
வலிமை பெற
முயலாத வரையில்
முடியாதுன்
ஜாதிப் பெயர்
முதுகிலுன்னாலழிக்க !
பின்வருமுன்
சந்ததியின்
சரித்திரத்தை
மாற்ற
எரித்துவுன்
இழிமைத்தனம்
முறித்தெழுந்து
முயன்று பார்
மாறுமுன் ஜாதி!
-தமிழினியன்-
முதல் மனிதன்
பிறந்த போது
இல்லாதிந்த ஜாதி !
எதிலிருந்து
எப்போதிருந்து
வந்ததிந்த ஜாதி ?
வலியது
எளியததை
இழிமை செய்து
வலிமை பெறும்
இயற்கையெனும்
நியதி
முதலடியைப்
போட்டிருக்கும்
ஆரம்பம் புரிய
நான் சொல்லுகிறேன்
கேள்!
எளியவராய்
நீயிருந்து
வலிமை பெற
முயலாத வரையில்
முடியாதுன்
ஜாதிப் பெயர்
முதுகிலுன்னாலழிக்க !
பின்வருமுன்
சந்ததியின்
சரித்திரத்தை
மாற்ற
எரித்துவுன்
இழிமைத்தனம்
முறித்தெழுந்து
முயன்று பார்
மாறுமுன் ஜாதி!
-தமிழினியன்-
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: தமிழினியன் கவிதைகள் !
இது புதுசு!நீ புதுசு!
எல்லோரும் போலவே நீயிருந்தால்
எல்லோரில் யாராய் நீயிருப்பாய்?
வித்தியாசப்படு!
ஒத்திவைத்தவுன் எத்தனத்தில்
சொத்தியாகுமுன்னிலக்கு!
இன்றே செய்!
முயலாமல் முடியாது
முன்சென்று நீ வெல்ல!
முயற்சி செய்!
தோல்விக்குத் துவண்டால் நீ
கேள்வியின்றித் தொடரும் தோல்வி!
எழுந்துநில் !
கட்டம் கட்டி முட்டி நின்றால்
ஒட்டு முறிந்து விலகுமுறவு!
விட்டுக்கொடு!
மறக்காத் துரோகம் உனையென்றும்
உள்ளிருந்துருக்கும்!
மறந்துவிடு!
மன்னித்தல் உன்னை
மனிதரில் மாண்புறுத்தும் !
மன்னித்து விடு!
செல்லும் செல்வத்தோடு
செல்லாதிருக்கவுன் புகழ் !
தானம் செய்!
-தமிழினியன்-
எல்லோரும் போலவே நீயிருந்தால்
எல்லோரில் யாராய் நீயிருப்பாய்?
வித்தியாசப்படு!
ஒத்திவைத்தவுன் எத்தனத்தில்
சொத்தியாகுமுன்னிலக்கு!
இன்றே செய்!
முயலாமல் முடியாது
முன்சென்று நீ வெல்ல!
முயற்சி செய்!
தோல்விக்குத் துவண்டால் நீ
கேள்வியின்றித் தொடரும் தோல்வி!
எழுந்துநில் !
கட்டம் கட்டி முட்டி நின்றால்
ஒட்டு முறிந்து விலகுமுறவு!
விட்டுக்கொடு!
மறக்காத் துரோகம் உனையென்றும்
உள்ளிருந்துருக்கும்!
மறந்துவிடு!
மன்னித்தல் உன்னை
மனிதரில் மாண்புறுத்தும் !
மன்னித்து விடு!
செல்லும் செல்வத்தோடு
செல்லாதிருக்கவுன் புகழ் !
தானம் செய்!
-தமிழினியன்-
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: தமிழினியன் கவிதைகள் !
படிக்கப் படாத வரிகளிங்கு
புடம் போட காத்திருக்கு!
காட்டில் எறித்த நிலவாயிங்கு
பாட்டிசைப் புலவர் தேடுதிங்கு!
பார்த்தொரு குறை கண்டு சொல்வீர்
கோர்த்திடும் முறை மாற்றிக் கொள்ள
சேர்த்தெனைக் கவிச்சபையிலோர்
வார்த்த படிக்கல்லாய் நான்
சார்ந்திட வரம் தருவீரே!
-தமிழினியன்-
புடம் போட காத்திருக்கு!
காட்டில் எறித்த நிலவாயிங்கு
பாட்டிசைப் புலவர் தேடுதிங்கு!
பார்த்தொரு குறை கண்டு சொல்வீர்
கோர்த்திடும் முறை மாற்றிக் கொள்ள
சேர்த்தெனைக் கவிச்சபையிலோர்
வார்த்த படிக்கல்லாய் நான்
சார்ந்திட வரம் தருவீரே!
-தமிழினியன்-
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Similar topics
» இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
» sms கவிதைகள்
» கவிதைகள் சில
» அணு கவிதைகள்
» பாச கவிதைகள்
» sms கவிதைகள்
» கவிதைகள் சில
» அணு கவிதைகள்
» பாச கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum