தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விண்டோஸ் 10 யாருக்கு இலவசமாக கிடைக்கும்?

View previous topic View next topic Go down

விண்டோஸ் 10 யாருக்கு இலவசமாக கிடைக்கும்? Empty விண்டோஸ் 10 யாருக்கு இலவசமாக கிடைக்கும்?

Post by ஸ்ரீராம் Wed Jun 10, 2015 11:06 am

[You must be registered and logged in to see this image.]

அதோ இதோ என்று ஆரூடங்களில் தெரிவிக்கப்பட்ட விண்டோஸ் 10 இயக்க முறைமை வெளியாகும் நாள், அதிகாரபூர்வமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 29 முதல் கோடிக்கணக்கான தகுதி உள்ள கம்ப்யூட்டர்களில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதியப்படும். அதற்கு இப்போதே முன்பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான வழியையும் மைக்ரோசாப்ட் வழங்கி வருகிறது. அன்றைய நாள் முதல் வாங்கப்படும் புதிய கம்ப்யூட்டர்களில் பதியப்படும் விண்டோஸ் சிஸ்டம், விண்டோஸ் 10 ஆக மட்டுமே இருக்கும்.

விண்டோஸ் 7, விண்டோஸ் 8 மற்றும் 8.1 இயக்க முறைமை பயன்படுத்தப்படும் உங்கள் கம்ப்யூட்டரில் தானாக அப்டேட் செய்திடும் வசதியை நீங்கள் ஏற்படுத்தியிருந்தால், கம்ப்யூட்டரின் டாஸ்க் பாரில், வலது மூலையில் சிறிய விண்டோஸ் ஐகான் காட்டப்படுவதனைக் காணலாம்.

இதுதான் "Get Windows 10" ஐகான். இதில் கிளிக் செய்தால், உடன் "Get Windows 10" என்ற முன்பதிவு செய்திடும் பக்கம் கிடைக்கிறது. இதில் பதிவு செய்திடவும், பின்னர் குறிப்பிட்ட நாளில் எப்படி, தற்போதைய சிஸ்டம் விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்திடப்படும் எனவும் தகவல்கள் ஆறு திரைக் காட்சிகளில் தரப்படுகின்றன. இவற்றில் "Reserve your free upgrade now" என்ற பட்டன் மிக முக்கியம். இதில் கிளிக் செய்தாலே, உங்கள் கம்ப்யூட்டருக்கான விண்டோஸ் 10 முன்பதிவு மேற்கொள்ள முடியும்.

இதில் கிளிக் செய்தவுடன் உங்கள் மின் அஞ்சல் முகவரி கேட்டுப் பெறப்படும். பின் நாளில், விண்டோஸ் 10 உங்களுக்குத் தரத் தயாராக இருக்கும்போது, இந்த அஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பப்படும். இந்த நடைமுறையினை மைக்ரோசாப்ட் "Anticipation UX." என அழைக்கிறது. எந்த நிலையிலும் நீங்கள் உங்கள் முன்பதிவினை ரத்து செய்திட முடியும். மீண்டும் இந்த Get Windows 10 ஐகானில் கிளிக் செய்து ரத்து செய்திடும் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். இந்த விண்டோ கிடைக்கும்போது, மேலாகக் காட்டப்படும், மூன்று படுக்கை கோடுகள் அடங்கிய ஐகானில் கிளிக் செய்திட வேண்டும். இங்கு View confirmation. என்பதனைத் தேர்ந்தெடுத்தால், கிடைக்கும் பட்டியலில் Cancel reservation என்பதில் கிளிக் செய்து ரத்து செய்து கொள்ளலாம்.

[You must be registered and logged in to see this image.]

கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்களில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தால், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பதிந்திட முடியுமா? என்ற வினா அனைத்து பயனாளர்களின் மனதில் தோன்றலாம். அந்த வகையில், சாப்ட்வேர் செயலிகள் வழங்குவதில் இந்த அப்கிரேட் புதிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இலவச அப்கிரேட், விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் சர்வீஸ் பேக் 1 (SP1)பதியப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 8.1 பதியப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களிலும் தரப்படும்.நிறுவனங்களுக்கான கம்ப்யூட்டர்களில் இலவசமாக இது பதியப்பட மாட்டாது.
இந்த புதிய சிஸ்டம் அப்கிரேட் பைல் 3 ஜி.பி. அளவில் இருக்கும் என்று சொல்லப்பட்டாலும், அந்த அளவினைக் காட்டிலும் சற்று குறைவான அளவிலேயே மொத்த பைல்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
190 நாடுகளில், 111 மொழிகளில் விண்டோஸ் 10 சிஸ்டம் பதியப்பட இருக்கிறது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
ஆப்பிள் நிறுவனம் அதன் மேக் கம்ப்யூட்டர்களில், தன்னுடைய OS X ஆப்பரேட்டிங் சிஸ்டம் மேம்படுத்துதலை இப்படித்தான் மேற்கொண்டு வருகிறது. ஆனால், அது மிகச் சிறிய அளவிலானது ஆகும்.
மைக்ரோசாப்ட் எப்படி இதனை நிறைவேற்றப் போகிறது என்பது அதன் Get Windows 10 செயலியில் உள்ளது. இதில் உள்ள XML பைலில் இதற்கான வழிமுறைகள் தரப்பட்டுள்ளன. உடன் தரப்படும் பைல்கள் அனைத்திலும் GWX என்ற சுருக்கெழுத்து தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது Get Windows 10 என்பதன் சுருக்கமாகும். இந்த பைல்களில், நான்கு திட்டமிட்ட வழிமுறைகளை மேற்கொள்கிறது.
முதல் நிலையில் "appraiser" வழிமுறை மேற்கொள்ளப்படும். குறிப்பிட்ட கம்ப்யூட்டர், விண்டோஸ் 10 ஏற்றுக் கொள்வதற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ஏற்கனவே கொண்டுள்ளதா? அது முறையானதுதானா? என்று கண்டறியப்படும். பின்னர், GWX என்ற போல்டரில் உள்ள XML மற்ற அப்டேட் வழிகளை மேற்கொள்ளும்.
முதலில் தரப்பட்டது "Anticipation UX." என்ற டாஸ்க் பார் ஐகான் வழி முன்பதிவு. அடுத்தது Reservation Page. இங்கு நீங்கள் முன்பதிவினையும், தொடர்ந்து விண்டோஸ் 10 சிஸ்டத்தினையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதன் பிறகு, மேற்கொள்ளப்படுவதெல்லாம், உங்களுடைய செயல்பாடு எதுவும் இல்லாமல் மேற்கொள்ளப்படும் Upgrading, Download In Progress, Download Complete, Ready for Setup, Setup in Progress, Setup Complete நிலைகளாகும்.
நாம் அனுமதி கொடுக்காமல், விண்டோஸ் 10 நம் கம்ப்யூட்டரில் பதியப்பட மாட்டாது. தகுதி உள்ள கம்ப்யூட்டர்களில், முற்றிலும் இலவசமாகவே இது பதியப்படும்.

நன்றி: ஐயப்பன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

விண்டோஸ் 10 யாருக்கு இலவசமாக கிடைக்கும்? Empty Re: விண்டோஸ் 10 யாருக்கு இலவசமாக கிடைக்கும்?

Post by முரளிராஜா Wed Jun 10, 2015 11:39 am

நல்ல தகவல் ஸ்ரீ ராம் 
கூடிய விரைவில் விண்டோஸ் டெண்னுக்கு  மாரிடவேண்டியதுதான்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விண்டோஸ் 10 யாருக்கு இலவசமாக கிடைக்கும்? Empty Re: விண்டோஸ் 10 யாருக்கு இலவசமாக கிடைக்கும்?

Post by செந்தில் Wed Jun 10, 2015 3:27 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

விண்டோஸ் 10 யாருக்கு இலவசமாக கிடைக்கும்? Empty Re: விண்டோஸ் 10 யாருக்கு இலவசமாக கிடைக்கும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum