Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
பொது அறிவு தகவல்கள் #7
Page 1 of 1 • Share
பொது அறிவு தகவல்கள் #7
[You must be registered and logged in to see this image.]
* ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்த வகை, அவருடைய ஆயுள் முழுவதும் மாறாது.
* ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம். இவை குரங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்.
* நெருப்புக்கோழி, தனது உணவைச் செரிக்க வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.
* நல்ல நிலையில் உள்ள மனிதரின் கண்கள், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை அறியக்கூடியது.
* பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவர், கஸ்டவ் ஈபிள். இவர்தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர்.
* ஒரு மனிதனின் சராசரி உயரம், அவனுடைய தலையின் உயரத்தைப்போல் சுமார் ஏழரை மடங்கு இருக்கும்.
* தந்தி அனுப்புவதற்கான சங்கேதக்குறியை, 1837-ம் ஆண்டு சாமுவேல் மோர்ஸ் என்ற அமெரிக்க அறிஞர் கண்டுபிடித்தார்.
* குழந்தை பிறந்த 15 நாட்களுக்குப் பிறகே கண்ணீர்ச் சுரப்பி வளர்கிறது.* தீப நகரம் என்று அழைக்கப்படுவது, மைசூர்.
* நெருப்புக்கோழி மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.
* பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் 294 படிக்கட்டுகள் உள்ளன.
* அன்னாசிப் பழத்தில் விதை கிடையாது.
* ஒளிச்சிதறலைக் கண்டுபிடித்தவர், சர். சி.வி.ராமன்.
* அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி, அன்னை தெரசா.* கலர் டி.வி.யை முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு, பிரான்சு.
* பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் அறிவியல் துறைக்கு ஆர்னித்தாலஜி என்று பெயர்.
* மழையின் அளவைக் கண்டறிய உதவும் கருவி, ரெயின்கேஜ்.
* விலங்குகளில் அறிவுள்ளதாக கருதப்படுவது, டால்பின்.
* ராணித்தேனீயின் ஆயுட்காலம், 3 முதல் 4 ஆண்டுகள்.
* கடற்குதிரை மீன், ஒரே நேரத்தில் தனது கண்களால் இரண்டு வெவ்வேறு பொருட்களைப் பார்க்கும் தன்மை கொண்டது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பொது அறிவு தகவல்கள் #7
1. கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது ? - அமெரிக்கா
2. சிரிக்க வைக்கும் வாயு எது ? - நைட்ரஸ்ஆக்ஸைடு
3. உலகின் முதல் எலெக்ட்ரானிக் கம்ப்யூட்டரின் பெயர் என்ன? - இனியாக்
4. ரஷ்ய நாணயத்தின் பெயர் ? - ரூபிள்
5. உலகின் மிகப் பழமையான மியூசியம் எது ? - ஆஸ்மோலியன்
6. முதலில் விமானத்தை கடத்தியவர்கள் யார் ? - சீனர்கள் (1948)
7. ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் கம்ப்யூட்டர் எது ? - எட்சாக்
8. தண்டியாத்திரை எதற்காக நடத்தப்பட்டது ? - உப்பு வரியை எதிர்த்து
9. தங்கத்தின் வேதியல் பெயர் என்ன ? - அயூரியம்
10. புகழ் பெற்ற லைலா மஜ்னு காதல் காவியத்தின் ஆசிரியர் யார்? - நிஜாமி
11. ஆகஸ்ட் 15 -ம் தேதி விடுதலை பெற்ற மற்றொரு நாடு எது ? - தென்கொரியா
12. சீனாவின் முக்கிய பத்திரிகையின் பெயர் என்ன ? - பீபிள்ஸ் டெய்லி
13. பாரதீப் துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது ? - ஓரிஸ்ஸா
14. மிகவும் வேகமாக ஓடக்கூடிய மிருகம் எது ? - சிறுத்தை : 70 மைல்
15. இங்கிலாந்து ஒலிபரப்பு நிலையமான பி.பி.சி எப்போது? - 1922
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பொது அறிவு தகவல்கள் #7
நமது தாய்த் தமிழ் நாட்டைப் பற்றி தெரிந்து கொள்வோமா ...?
1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்............
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பொது அறிவு தகவல்கள் #7
1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.
3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.
4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.
5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.
6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.
7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள்
வயிற்றில் இருக்கும்.
8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.
9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.
10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ,ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.
11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.
12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது
13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
14இந்தியாவில் தமிழில் தான்"பைபிள்"முதலில்
மொழிபெயர்க்கப்பட்டது.
15.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம்
சாப்பிடும்.
16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .
17.கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
18.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
19.முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.
20.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பொது அறிவு தகவல்கள் #7
* சூரியனுக்கு அடுத்தாற்போல் பூமிக்கு
அருகில் உள்ள விண்மீன் - ஆல்பா சென்டாரி
* சூரியனிடமிருந்து ஒளிக்கதிர் பூமியை
அடைய ஆகும் நேரம் - 8 நிமிடம் 20 வினாடி
* வானியல் தொலைவிற்கான அலகு - ஒளி
ஆண்டு
* அதிக துணைக்கோள்கள் கொண்ட கோள் - சனி
* மிக வேகமாக சுழலக் கூடிய கோள் - வியாழன்
* வழிமண்டலத்தில் அதிகமாக காணப்படும் வாயு -
நைட்ரஜன்
* மின்கலத்தை கண்டு பிடித்தவர் -
அலெக்சாண்டரோ வோல்டோ
* மகாத்மா காந்தியடிகள் இந்தியர்களுக்கென
தனியாக அரசியலமைப்பு வேண்டும் என
கோரிக்கை வைத்த ஆண்டு - 1922
* இந்திய அரசியல் நிர்ணய சபையினால்
அமைக்கப்பட்ட குழுக்களின் எண்ணிக்கை - 13
* அரசியலமைப்பு வரைவுக் குழுவின்
உறுப்பினர்களல்லாதவர் - எம்.என் ராய்
* ராஜ்யசபையின் நியமன உறுப்பினர்களை
குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படும்
முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து
எடுக்க்கப்பட்டது - அயர்லாந்து
* மத்திய மாநில உறவு முறைகள் எந்த நாட்டு
அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது -
ஆஸ்திரேலியா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பொது அறிவு தகவல்கள் #7
1.நிகற்புகம் எனப்படுவது எத்தனை ?
100 கோடி
2.அருணகிரிநாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?
திருவண்ணாமலை
3.கம்பளிக்காக வளர்க்கப்படும் அடுகளுக்கு பெயர் என்ன ? மரினோ
4.உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு
செய்யப்படுகிறது ?
நார்வே அரசு
5.’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில்
இருந்து இயங்குகிறது ?
இந்தோனேஷியா
6.வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?
வைட்டமின் ‘பி’
7.மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?
ஆண் குரங்கு
8.முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?
இங்கிலாந்து
9.’செலினியம் செல்’ என்ற போட்டோ முறையை
கண்டுபிடித்தவர் யார் ?
எர்னஸ்ட் வெர்னர்
10.உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார் ?
சர் ஜெகதீஸ் சந்திர போஸ்.
11.இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்?
சாணக்கியர்
12.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?
நைல் நதிக்கரையில்
13.அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில்
எழுதப்பட்டிருக்கின்றன ?
பிராமி,
14.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
6 கி.மீ
15.பாம்புகளே இல்லாத கடல் எது ?
அட்லாண்டிக் கடல்
16.பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?
காரியம் , களிமண், மரக்கூழ்
17.காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
70 ஆயிரம் வகைகள்
18.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
அலகாபாத்
19.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
பாலைவனத்தில்
20.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக
உள்ள மாநிலம் எது ?
கேரளா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பொது அறிவு தகவல்கள் #7
உலகில் மிகப் பெரியவை எவை? -
1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம்.
2) உலகில் உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கி.
3) உலகில் மிக உயரமான மலை எது? இமயமலை.
4) உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன்(6.750 கிலோமீட்டர்).
5) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்).
6) உலகியே மிக ஆழமான ஆழி எது? மரியானாஆழி (11.522மீற்றர்).
7) உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? லண்டன்.
8)உலகிலேயே பெரிய பாலைவனம் யாது? சஹாராப்பாலைவனம்.
9) உலகிலேயே மிகச் சிறிய அரசு எது? வத்திக்கான்.
10) உலகிலேயே பெரிய சமுத்திரம் எது? பசுபிக் சமுத்திரம்
11) உலகிலேயே பெரிய தீவு எது? கிறீன்லாந்து.
12) உலகிலேயே பெரிய கண்டம் எது? ஆசியாக்கண்டம்.
13) உலகிலேயே சிறிய கண்டம் எது? அவுஸ்ரேலியா.
14) உலகிலேயே பெரிய நாடு எது? கனடா(ரஷ்யா சிதறிய பிறகு).
15) உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? இந்தோனேஷியா.
16) உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? சீராப்புஞ்சி.
17) உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது? சுப்பீரியர் ஏரி.
18) சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது? 365 நாடகள்.6 மணி 9நிமிடம். 9.54 செக்கன்.
19) உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் யாது? எவரெஸ்ட்.
20) உலகிலேயே பெரிய எரிமலை யாது? லஸ்கார்(சிலி) 5.990 மீற்றர்.
21) உலகிலேயே மிக நீளமான மலை எது? அந்தீஸ்மலை.
22) உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது? தென்சீனக்கடல்.
23) உலகிலேயே பெரிய ஏரி எது? கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்).
24) உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? ஏஞ்சல்ஸ்(வெனிசுவெலா) 979மீற்றர்.
25) உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு எது? சீனா.
26) உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு எது? வத்திக்கான்.
27) உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது? காரக்புர்.
28) உலகிலேயே மிக ஆழமான ஏரி எது? பைக்கால் ஏரி.
29) உலகிலேயே மிக நீளமான குகை எது? மாமத் குகை.
30) உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது? நேபாளம்.
31) உலகிலேயே மிகப்பெரிய பு எது? ரவல்சியா ஆர்ணல்டி.
32) உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது? அலாஸ்கா.
33) உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்? தொலமி.
34) உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது? நேச்சர்.
35)ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது? பிலிப்பைன்ஸ்.
36) உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது? அவுஸ்ரேலியா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பொது அறிவு தகவல்கள் #7
மனித மூளையும் அதன் செயல்திறனும்.
.
1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டுசெல்லும். மது (அல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும்.
.
2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும்.
.
3. நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது. இருந்த போதிலும் நாம் இருபது வயதை அடையும் போதுதான் முழுமையாக சிந்திக்க உதவுகிறது. நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றன மீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை.
.
4. நம்மை நாமே கிச்சு மூச்சு மூட்ட முடியாது. நம் மூளையின் ஒரு பகுதியான செரிபெல்லம் மூளையின் மாற்ற பகுதிக்கு எச்சரிக்கை செய்யும் நாமே நம்மை கிச்சு மூச்சு ஊட்டுவதாக. அதனால் மூளையின் மாற்ற பகுதிகள் கிச்சு மூச்சு மூட்டுவதை கண்டுகொள்ளாது.
.
5. மூளை 80 சதவீதம் நீரால் (water) ஆனது.
.
6. மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும்.
.
7. அதிக stress மூளையின் நியாபக திறனையும் கற்றுகொள்ளும் திறனையும் குறைத்து விடும்.
.
8. நம் உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டுமே தேவையானதாகும்.
.
9. மூளைக்கு மூளையின் வலியை உணரமுடியாது. மூளையின் வலியை உணர மூளைக்கு அந்த இணைப்பே கிடையாது. எனவே தான் மூளை அறுவை சிகிட்சை செய்யும் போது நோயாளி முழித்து கொண்டே இருப்பார்கள்.
.
10. மூளை மிகவும் மெதுவானதாகும் (soft). பட்டர் வெட்டும் கத்தியை கொண்டே மூளையை வெட்டலாம்.
.
11. மூளையில் இருந்து வரும் செய்திகள் நியூரான்களுக்கு இடையே செல்லும் வேகம் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு.
.
12. ஒவ்வெரு முறையும் நாம் நியாபகபடுத்த நினைக்கும் செய்திகள் அல்லது சிந்தனை செய்யும் நிகழ்வுகளை 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட மூளை செல்கள் ஒன்றிணைந்து சேமித்து கொள்ளும்.
.
13. நாம் விழித்துகொண்டிக்கும் பொழுது நமது மூளை உருவாகும் மின்சாரத்தின் அளவு 25 வாட்ஸ், இதன் மூலம் ஒரு பல்ப்பை எரியவைக்க முடியும்.
.
14. ரோலர் கோஸ்டர்ஸில் விளையாடும் போது மூளையில் இரத்தம் கட்டிக்கொள்ள (Blood clot)வாய்ப்புகள் அதிகம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பொது அறிவு தகவல்கள் #7
படிப்புக்களும் அதன் தமிழ்ப்பெயர்களும்..! (Ology)
1. Anthropology - மானுடவியல்/ மானிடவியல்
2. Archaeology - தொல்பொருளியல்
3. Astrology - சோதிடவியல் (சோதிடம்)
4. Astrology - வான்குறியியல்
5. Bacteriology பற்றுயிரியல்
6. Biology - உயிரியல்
7. Biotechnology - உயிரித்தொழில்நுட்பவியல்
6. Climatology - காலநிலையியல்
7. Cosmology - பிரபஞ்சவியல்
8. Criminology - குற்றவியல்
9. Cytology - உயிரணுவியல்/ குழியவியல்
10. Dendrology - மரவியல்
11. Desmology - என்பிழையவியல்
12. Dermatology - தோலியல்
13. Ecology - உயிர்ச்சூழலியல்
14. Embryology - முளையவியல்
15. Entomology - பூச்சியியல்
16. Epistemology - அறிவுநெறியியல்/ அறிவாய்வியல்
17. Eschatology - இறுதியியல்
18. Ethnology - இனவியல்
19. Ethology - விலங்கு நடத்தையியல்
20. Etiology/ aetiology - நோயேதியல்
21. Etymology - சொற்பிறப்பியல்
22. Futurology - எதிர்காலவியல்
23. Geochronology - புவிக்காலவியல்
24. Glaciology - பனியாற்றியியல்/ பனியியல்
25. Geology - புவியமைப்பியல்/ நிலவியல்
26. Geomorphology - புவிப்புறவுருவியல்
27. Graphology - கையெழுத்தியல்
28. Genealogy - குடிமரபியல்
29. Gynaecology - பெண்ணோயியல்
30. Haematology - குருதியியல்
31. Herpetology - ஊர்வனவியல்
32. Hippology - பரியியல்
33. Histrology - இழையவியல்
34. Hydrology - நீரியல்
35. Ichthyology - மீனியியல்
36. Ideology - கருத்தியல்
37. Information Technology - தகவல் தொழில்நுட்பவியல்
38. Lexicology - சொல்லியல்
39. Linguistic typology - மொழியியற் குறியீட்டியல்
40. Lithology - பாறையுருவியல்
41. Mammology - பாலூட்டியல்
42. Meteorology - வளிமண்டலவியல்
43. Metrology - அளவியல்
44. Microbiology - நுண்ணுயிரியல்
45. Minerology - கனிமவியல்
46. Morphology - உருவியல்
47. Mycology - காளாம்பியியல்
48. Mineralogy - தாதியியல்
49. Myrmecology - எறும்பியல்
50. Mythology - தொன்மவியல்
51. Nephrology - முகிலியல்
52. Neurology - நரம்பியல்
53. Odontology - பல்லியல்
54. Ontology - உளமையியல்
55. Ophthalmology - விழியியல்
56. Ornithology - பறவையியல்
57. Osteology - என்பியல்
58. Otology - செவியியல்
59. Pathology - நொயியல்
60. Pedology - மண்ணியல்
61. Petrology - பாறையியல்
62. Pharmacology - மருந்தியக்கவியல்
63. Penology - தண்டனைவியல்
64. Personality Psychology - ஆளுமை உளவியல்
65. Philology - மொழிவரலாற்றியல்
66. Phonology - ஒலியியல்
67. Psychology - உளவியல்
68. Physiology - உடற்றொழியியல்
69. Radiology - கதிரியல்
70. Seismology - பூகம்பவியல்
71. Semiology - குறியீட்டியல்
72. Sociology - சமூகவியல்
73. Speleology - குகையியல்
74. Sciencology - விஞ்ஞானவியல் (அறிவியல்)
75. Technology - தொழில்நுட்பவியல்
76. Thanatology - இறப்பியல்
77. Theology - இறையியல்
78. Toxicology - நஞ்சியல்
79. Virology - நச்சுநுண்மவியல்
80. Volcanology - எரிமலையியல்
81. Zoology - விலங்கியல்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பொது அறிவு தகவல்கள் #7
* சிங்கப்பூரின் முந்தைய பெயர், டெமாஸெக்.
* பிரபல இசைமேதையான பீத்தோவன், ஜெர்மனியில் உள்ள `பான்' நகரில் பிறந்தார்.
* `சீனக்குடியரசின் தந்தை' என்று போற்றப்படுபவர், சன்யாட்சன்.
* ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல், புரோட்டோபிளாசத்தால் ஆனது.
* `வைட்டமின் ஏ'-ன் வேதியியல் பெயர் ரெட்டினால்.
* சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ்.
* `பாரத ரத்னா' விருது பெற்ற முதல் பெண்மணி, இந்திரா காந்தி.
* சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
* `உயிரியல் கோட்பாட்டின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், சார்லஸ் டார்வின்.
* இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை, பிரித்வி.
* இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்', லக்னோவில் அமைந்துள்ளது.
* முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.
* பாலில் `லாக்டிக் அமிலம்' உள்ளது.
* குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம், தாண்டியா.
* இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.
* பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா.
* முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியா.
* `பிரமிடு கோவில் நாடு' என்று அழைக்கப்படுவது, பர்மா.
* இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர், முசோலினி.
* சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ தான், உலகிலேயே மிகப்பெரிய பூவாகும்.
* ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய மூளை உள்ளது.
* கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப்பொடியைக் கட்டியாக்கி சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது.
* நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு, சுமார் 17 நாட்கள் வரை ஆகும்.
* ஆக்வா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால், தங்கம் கரைந்து விடும்.
* பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, சுமார் 3400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது.
* மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப் பனங்கொட்டை தான், உலகிலேயே மிகப்பெரிய விதையாகும்.
* நம்முடைய தலைமுடியில் இருந்து அமினோ அமிலம் தயாரிக்கப்படுகிறது. இது மருந்து மற்றும் ரசாயனப் பொருட்கள் தயாரிப்பில் உதவுகிறது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பொது அறிவு தகவல்கள் #7
கடல்நீர் உப்பாக இருப்பது ஏன்?
கடலில் வந்து கலக்கும் பல ஆறுகள் மலை, சமவெளி என அதன் பயணத்தில் தங்களுடன் நிறைய உப்பைக் கொண்டு வந்துவிடுகின்றன. இதனால்தான் கடல்நீர் உப்பாக இருக்கிறது.
வானம் நீலநிறமாய்த் தோன்றுவது ஏன்?
சூரிய ஒளியில் உள்ள ஊதா, நீல நிறக் கதிர்கள், நீண்ட செந்நிறக் கதிர்களைக் காட்டிலும் அதிகமாகச் சிதறுகின்றன. இவை வளிமண்டலத்தில் உள்ள காற்று, நீர், தூசு ஆகிய ஒவ்வொன்றுடனும் பட்டுத் தெறித்து, வான்வெளி முழுவதும் பரவுகின்றன. ஊதாவை விட நீல நிறம் நம் கண்களுக்கு மிகவும் எளிதில் தெரிவதால், வானமே நீலமாய்த் தோன்றுகிறது.
நட்சத்திரங்கள் மின்னுவது ஏன்?
பூமிக்கும் நட்சத்திரத்திற்கும் இடையில் இருக்கும் வளி மண்டலத்தில் ஏற்படும் தடங்கல்களால், நட்சத்திர ஒளி வளைக்கப்படுகிறது. இதனால் நட்சத்திரங்கள் மின்னுகின்றன.
காலை, மாலை வேளைகளில் வெப்பம் குறைவாக இருப்பது ஏன்?
சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள் காலை, மாலை வேளைகளில் சாய்வாகவும், நண்பகலில் செங்குத்தாகவும் விழுகின்றன. செங்குத்தாக விழும் கதிர்கள், வெப்பத்தை அதிகமாகத் தருகின்றன. அதனால் நண்பகலில் வெப்பம் அதிகமாகவும், காலை,மாலை வேளைகளில் வெப்பம் குறைவாகவும் உள்ளது.
நகம் வெட்டினால் வலிக்காதது ஏன்?
நம் உடலின் ஒரு பகுதியான நகங்களுடன் இரத்த நாளங்களுக்கோ, குறுத்தெலும்புகளுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை. அதனால் நரம்பின் தொடர்பு இல்லை. எனவே நகம் வெட்டும் போது வலிப்பதில்லை.
நிலவின் ஒரு பக்கம் மட்டும் தெரிவது ஏன்?
நிலவு தன் அச்சில் ஒரு முறை தானே சுற்றுவதற்கு 27 1/2 நாட்கள் ஆகின்றன. பூமியைச் சுற்றுவதற்கும் இந்த நாட்கள்தான் ஆகின்றன. அதனால்தான் நிலவின் ஒரே பக்கம் நமக்குத் தெரிகிறது. மறுபக்கம் தெரிவதில்லை.
சங்கைக் காதில் வைத்தால் சத்தம் கேட்பது ஏன்?
சங்குகள் பல வளைவுகளுடன் கூடிய மேற்பரப்புடையவை. இதனால் காற்று உள்ளே நுழையும்போது, பலவிதமான தடுப்புக்குள்ளாகிறது. இத்தடுப்பினால் ஒருவித அதிர்வலை எழுகிறது. அது, கடல் இரைச்சலைப் போலக் கேட்கிறது.
பொருள்கள் பூமியில் விழுவது ஏன்?
பூமியிடம் உள்ள புவியீர்ப்பு சக்தி இவ்வுலகின் அனைத்துப் பொருட்களையும் பூமியின் மையத்தை நோக்கி ஈர்க்கிறது. இந்த ஈர்ப்பு சக்தி வினாடிக்கு 32 அடியாக உள்ளது.
வான்வெளி வட்டமாய்த் தெரிவது ஏன்?
நம் கண் பார்வை ஒரு குறிப்பிட்ட தொலைவுதான் தெரியும். வட்டமாய் இருக்கும் நம் கண்களால் எந்தப் பக்கம் பார்த்தாலும் வட்டமாய்த்தான் தெரியும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பொது அறிவு தகவல்கள் #7
1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"
.
2. உடலின் மிக வலிமையான சதைப்பகுதி "நாக்கு"
.
3. ஆங்கில கீபோர்டில் ஒரேவரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு சொல் "TYPEWRITER"
.
4. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"
.
5. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் ஜீவராசி - ”கொசு”
.
6. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"
.
7. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல்
(111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.
.
8. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"
.
9. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்பட்டது.
.
10. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"
.
11. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி" என்று சொல்லக் கேட்டிருப்போம்., ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்.
.
12. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520

» பொது அறிவு தகவல்கள் -2
» பொது அறிவு தகவல்கள்
» பொது அறிவு தகவல்கள்.
» பொது அறிவு தகவல்கள்
» பொது அறிவு தகவல்கள்
» பொது அறிவு தகவல்கள்
» பொது அறிவு தகவல்கள்.
» பொது அறிவு தகவல்கள்
» பொது அறிவு தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|