தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 04, 2015 4:10 pm

First topic message reminder :

என்னுடைய பசி இந்தியாவின் பசி
------------------
காந்திஜி வங்காளத்திலுள்ள சோதேபூரில் தங்கியிருந்தார். பலதரப்பட்ட மக்கள் இடைவிடாது அங்கு வந்து சந்தித்து அடிகளின் இயக்கத்திற்கு நன்கொடை வழங்கிக் கொண்டிருந்தார்கள். சில சமயம் விடுதலை இயக்கத்தைப் பற்றியும், சிற்சில சமயம் தீண்டாமை ஒழிப்பு சம்பந்தமாகவும் மற்றும் சில நேரங்களில் கதர்ப்பிரச்சாரம் சம்பந்தமாகவும் பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அன்று கல்கத்தாவிலுள்ள பாகீரத்கனோடியா குடும்பத்திலுள்ள சில பெண்மணிகள் அவரைத் தரிசிக்க வந்திருந்தார்கள். முதலில் அவர்கள் காந்திஜிக்கு வணக்கம் செலுத்தினார்கள். பின், கொஞ்சம் பணத்தை கையில் எடுத்து அவருடைய காலடியில் சமர்ப்பித்தார்கள். காந்திஜி அப்பணத்தின் மேல் தன் பார்வையைச் செலுத்தி விட்டு ”இவ்வளவுதானா” என்றார்.

அனைவருக்கும் நன்கு அறிமுகமான சமூகத்தொண்டர் திரு. சீதாராம் ஸக்கஸேரியா, அந்தச் சமயம் அங்கேயே பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். காந்திஜி கூறிய வார்த்தைகளைக் கேட்டு ”பாபு, நன்றாகப் பாருங்களேன். இவ்வளவு ரூபாய் குறைவாகவா தோன்றுகிறது? உங்களுடைய பசி அடங்குவதில்லையே!” எனக்கூறினார்.

உண்மையிலேயே அதில் போதுமான பணம் இருந்தது. ஆனால் காந்திஜி உடனே ‘நீ சரியாகவே சொன்னாய். என்னுடைய பசி எப்படி அடங்கும்? எனது பசி இந்தியாவின் பசி ஆயிற்றே” என்று பெருமிதத்துடன் கூறினார்.
---
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்
நன்றி ; முகநூல் ( காந்தியம் )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 12:22 pm

19. நான் பூமாதேவியின் புதல்வன்.


1927ம் வருடம் சேட் ஜம்னாலால் பஜாஜ் சபர்மதி ஆசிரமத்திற்கு வந்தார். காந்திஜிக்குத் தேவையான அமைதியும் ஓய்வும் கிடைக்கவில்லை என்பதை அறிந்தார். எனவே அடிகள் அலுவல்களை அமைதியுடன் கவனிக்கவும், நேரந்தவறி வரும் பார்வையாளர்களுடைய தொல்லையிலிருந்து தப்பியிருக்கவும் வேண்டி, ஆசிரமத் திறந்தவெளியில் சிறிய ஒற்றைமாடி வீடொன்றைக்கட்டும் தனது விருப்பத்தை காந்திஜியிடம் தெரிவித்தார் ஜம்னாலால் அவர்கள். காந்திஜியும் இதற்கு தன் சம்மதத்தை அளித்தார். மக்களும் இந்த யோசனையை மிகவும் வரவேற்றனர். ஆனால் மறுநாளே மாலை பிரார்த்தனைக்குப்பின் காந்திஜி, ‘நான் இதைப்பற்றி எண்ணிபாராது என்னுடைய சம்மத்த்தைக்கொடுத்து விட்டேன். அப்போதிருந்து மன அமைதி இழந்திருக்கிறேன்’ என்று சொன்னார். ‘இந்தப் பூமியிலே நானும் ஒரு ஜீவன் தானே பூமாதேவியின் புதல்வன் நான். அது மட்டுமலாமல் ஒரு குடியானவனோ நெசவாளியோ அல்லது மக்களுக்குச் சேவை செய்யும் தொண்டனோ மாடி வீட்டில் போய் வசிப்பதும் இவ்வாறு பூமாதேவியிடம் தனக்குள்ள உறவை முறித்துக் கொள்வதும் அழகல்ல. ஆகவே என்னுடைய முந்திய எண்ணத்தை மாற்றிக்கொள்கிறேன். ஆசிரமத்தில் நான் இதுவரை வசித்து வரும் சிறு அறையிலேயே தங்கி சந்தோஷமாக இருந்து வருவேன் என்றார் காந்திஜி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 12:22 pm

20. யாரிடம் நான் கலந்தாலோசிப்பேன்?


1920 ஆம் வருடம் ஜூலை 31ந்தேதி, அந்த பயங்கர இரவு இன்னும் கழியவில்லை, அதற்குள் சுயராஜ்ய மந்திரத்தைக் கண்டுபிடித்தவரான லோகமான்ய பால கங்காதர திலகர் இறையடி சேர்ந்தார். டெலிபோனில் இந்தச் சோகச் செய்தியைக் கேட்டதும் மிக்க வருத்தமடைந்தார் இரவு முழுவதும் படுக்கையிலேயே உட்கார்ந்திருந்தார். விளக்கும் அப்படியே எரிந்து கொண்டிருந்தது. அந்த விளக்கைப் பார்த்தப்படியே யோசனையில் மூழ்கியிருந்தார் காந்தியடிகள். இரவு வெகு நேரம் கழித்து மகாதேவ தேசாய் கண் திறந்து பார்த்த பொழுது காந்திஜி படுக்கையில் வழித்துக்கொண்டிருப்பதைக் கண்டார். மகாதேவதேசாய் மெதுவாக காந்திஜியிடம் சென்றார். அவரைப்பார்த்ததும், ‘இனி நான் சிக்கலில் மாட்டிக்கொண்டால் யாரிடம் கலந்தாலோசிப்பேன்? மஹாராஷ்ட்ரம் முழுவதின் உதவி தேவைப்பட்டால் யாரை நாடுவேன்? என்று காந்திஜி நாத்தழுதழுக்கக் கூறினார்.

ஒரு வினாடி கழித்து மறுபடியும் காந்திஜி, ”இன்றைவரை சுயராஜ்யம் என்ற பெயரை முடிந்தவரை மறுத்துவந்தேன். இன்றுமுதல் லோகமான்யருடைய சுயராஜ்ய மந்திரத்தைத் தொடர்ந்து ஓத வேண்டும். இம்மாவீரரின் கரங்களிளலிருந்த சுதந்திரக்கொடி ஒருகண நேரமும் கீழே சாயக்கூடாது” என்று முழங்கினார்.

மறுநாள் அவர் லோகமான்ய திலகரின் இறுதி யாத்திரையில் கலந்துகொண்டார். தம் தோள்களில் சுமந்தார். இப்பேர்பட்ட சந்தர்ப்பங்களில் எவ்வளவு அமைதியும் கம்பீரமும் உள்ள சூழல் உருவாகவேண்டுமோ, அது உருவாகாததைக் கண்டு அடிகளுடைய மனம் புண்பட்டது; அவர் மிகவும் வருத்தமடைந்தார்.

பின்னால் இதே விஷயத்தை அவர் ஓர் புதிய கோணத்தில் எண்ணிப்பார்த்தார். ஆமதாபாத் திரும்பியபின் பிரார்த்தனைக் கூட்டத்தில் இதைப்பற்றி குறிப்பிடுகையில், ”அன்று இரங்கற் கூட்டத்தில் கூடியிருந்தவர்கள் துக்கம் கொண்டாட வரவில்லை. தம் தேசத்தலைவருக்கு மரியாதை செலுத்தத்தானே அவர்கள் வந்திருந்தார்கள். அவர்களிடமிருந்து நாம் ஏன் துக்கத்தை எதிர்பார்க்கவேண்டும்?” என்று அவரே விளக்கினார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 6:32 pm

21. பேதி எடுக்கத் தேவையில்லை


பண்டிட் தோதாராம் சனாட்ய, காந்தி அடிகளுடன் சபர்மதி ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார். அவருடைய மனைவி திருமதி கங்கா பஹனும் அவரோடு தங்கியிருந்தார். ஒருநாள் அவருக்கு உடம்பு சௌகரியமில்லாமல் போய்விட்டது. வழக்கம்போல் காந்தியடிகள் அவரை கவனித்து சிகிச்சை செய்து வந்தார்.

அன்று திங்கட்கிழமை. காந்திஜி மௌன விரதம் மேற்கொண்டிருந்தார். கங்கா பஹனைப் பார்க்கச் சென்றார். ஏதோ அவசர வேலை ஏற்பட்டு விட்டதால் உடனே திரும்ப வேண்டியதாயிற்று. மருந்துகள் பற்றியோ, என்ன சாப்பிட வேண்டும் என்றோ அறிவிக்கவும் நேரமில்லை…

இரவு சுமார் இரண்டு மணிக்கு அவர் தூக்கம் கலைந்தது. காங்கா பஹனுக்குத்தாம் இன்று மருந்து அறிக்கைகொடுக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. உடனே அவர் சிறு துண்டுக் காகித்தத்தில் பென்சிலால் எழுதினார்- பேதி எடுக்கத்தேவையில்லை. இன்றும் பால் கொடுக்க விரும்புகிறேன். ஆரஞ்சு, திராஷை ரசத்தைக் குடிக்கவும். எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியுமோ, அவ்வளவு குடிக்கலாம். தொட்டி ஸ்நானம் செய்து பனிக்கட்டியால் உடம்பை நன்றாகத் தேய்த்துகொள்வாய் சோடாவும் உப்புத் தண்ணீரும் சாப்பிடலாம். இன்றும் வயிற்றைச் சுற்றி மண்பற்றை இறுக்கி கட்டிக்கொள். இப்போடே கொய்னா மாத்திரைகள் நான்கு, எலுமிச்சைச் சாறுடன் சோடாவுடனும் சேர்த்துச் சாப்பிடவும். நேரம் இரவு இரண்டு அடித்து ஐந்து நிமிடம்.’

அந்தக் காகித்த்தை ஆசிரமத்திலுள்ள ஒரு சகோதரியிடம் கொடுத்து உடனே தோதாராம் சனாட்ய அவர்களுக்கு கொடுத்தனுப்பினார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 6:33 pm

22. இராமனுடைய பெயரைச் சொல்லி கொண்டே இறப்பேன்


டில்லியில் நடந்த பயங்கரச் சம்பவத்தை கேட்கும் போது காந்திஜி மிகுந்த கலவரமடைந்தார். யாரை அவர் மிகுந்த அன்பாகவும் நெருங்கிய நணபாராகவும் கொண்டு மதித்தாரோ அவர்களிடமும் அவருக்கு அன்று அதிருப்தி ஏற்பட்டுவிட்டது. பாகிஸ்தானிலிருந்து கூட்டம் கூட்டமாக வந்திருக்கும் அகதிகளின் பிரச்னைகள், அவரை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தன. 1948ம் வருடம் ஜனவரி மாதம் 29ம் தேதி இரவு அவர் மிகவும் களைப்புமேலிட்டுச் சோர்வடைந்தார். காந்திஜியின் தலையில் சிறிது எண்ணெய் தேய்த்துத் தடவி விட்டுக்கொண்டிருந்தாள் மனு. தேய்த்துக் கொண்டிருக்கும்போத் காந்திஜி ‘என் தலை சுற்றுகிறது. நான் எங்கு நிற்கிறேன், என்ன செய்கிறேன் என்பதே எனக்குத் தெரியவில்லை. இன்றைய குழப்பச் சூழ்நிலையில் நான் எப்படி அமைதியை நிலை நாட்டப்போகிறேன்.?’ என்று வருத்தத்துடன் சொன்னார்.

அதன் பின் துக்கம் தோய்ந்தத குரலில் உருதுக் கவிடையின் ஒரு அடியைப் பாடினார். ‘மிக்க பூரிப்புடன் கிளம்பும் நீர்குமிபோன்றது இவ்வுலக வாழ்வு’ என்பது அதன் கருத்து.

இப்பாட்டின் கருத்து இவ்வளவு சீக்கிரத்தில் அவருடைய வாழ்க்கையிலேயே பலிக்கும் என அப்பொழுது யார் அறிவார். சிறிது நேரத்திற்கெல்லாம் அவருடைய இளைய மகன் தேவதாஸ் காந்தி அங்கு வந்தார். பேசிகொண்டிருக்கும்போதே காந்திஜிக்கு பலமான இருமல் வந்தது. மனு பென்சிலின் மருந்தை சாப்பிடுமாறு வற்புறுத்தினாள். ஆனால் அவரா இதற்கெல்லாம் கட்டுப்படுவார்? ராம நாமத்தை உச்சரிப்பதில் அவருக்கு அபார நம்பிக்கை. கருணை தோய்ந்த குரலில் காந்தியடிகள் மனுவிடம் கீழ்கண்டவாறு கூறினார். என்னுடைய இந்த வேள்வியில் இவளு ஜனங்களுக்கிடையில் நீ மட்டுமே தனியாக நின்று என் கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்கிறாயே, என்ன்னுடைய தாயாக பாவித்து நான் உனக்க்கு கற்பித்திருக்கும் கல்வி வேறு யாருக்குமே கற்பித்ததில்லை. ஒரு வேளை நான் வியாதியால் பீடிக்கப்பட்ட்உஓ அல்லது சிறு கொப்பளத்தால் அவதிப்பட்டோ இறந்தால் ‘இந்த மகாத்மா ஓர் அகம்பாவி, இத மாகத்மா ஓர் ஏமாற்றுக்காரன், ன்று நீ உலகத்தாருக்குத் திரம்பத் திரும்பச் சொல்லவேண்டும். நீ இம்மாதிரி சொல்வதால் மக்கள் உன்னைத் தூற்றுவார்கள், கொல்லவும் முயற்சிக்கலாம். அதனால் பரவாயில்லை. அப்போது நான் எங்கிருந்தாலும் என்னுடைய ஆத்மாவிற்கு அமைதி உண்டாகும்.

ஒரு வாரத்திற்கு முன் எப்படி வெடிகுண்டு வீசி என்னைக் கொல்ல முயற்சிக்கப்பட்டதோ, அதே மாதிரி யாராவது என்னை துப்பாக்கியால் சுட, நான் வீரத்துடன் அந்தக் குண்டை மார்பில் தாங்கியும், வெறுப்பு அல்லது அச்சத்தால் சற்றும் பெருமூச்சுகூட விடாமலும், ஆனால் அதே சமயத்தில் ராம நாமத்தையே உச்சரித்துக் கொண்டே இறப்பேனேயானால் அப்பொழுது தான் நீ உலகத்தாருக்கு நான் உண்மையான மகாத்மாவாக இருந்தேன் என்று எடுத்துரைக்க வேண்டும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 6:34 pm

23.எப்படி என் கற்பனை?


ஒரு சமயம் ஹிந்துஸ்தானி பிரசார சபைக்கூட்டம் காந்திஜியின் குடிசையிலேயே நடைபெற்றது. அங்கு மேசை நாற்காலிகள் இல்லை. சுத்தமான மண் தரையில் மீது பாயை விரித்து அதன் மேல் எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள்.

கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே காந்திஜி தன் இடத்தை விட்டு எழுந்தார்; ஒரு நாற்காலியை கொண்டு வரச் சொன்னார். அவர் தாமே எழுந்து சென்று ஒரு சிறிய முக்காலியையும் கொண்டு வந்தார். அதன்மேல் மண்ணால் ஒரு சிறு மேடை அமைத்தார். இந்து வேடிக்கையை எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். இதன் பொருள் யார்க்கும் விளங்கவில்லை. ”பாபுஜி, தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என ஒருவர் கேட்டார்.

காந்திஜி சிரித்தார், ”மௌலானா சாஹிப் வரபோகிறாரல்லவா! அவருக்கு தரையின் மீது உட்காரும் பழக்கம் கிடையாது. அவருக்குத்தான் இந்த ஏற்பாடு செய்துகொண்டு இருக்கிறேன்” என்றார் காந்திஜி.

மறுபடியும் அதே நபர் காந்திஜியிடம், ”ஆமாம், இந்த மண் குதிர் எதற்காக?” என்றார்.

வாய்விட்டுச் சிரித்துக்கொண்டே காந்திஜி, ஓ! இதைப் பற்றியா கேட்கிறாய்? இது தான் அவர் எச்சில் உமிழ்வதற்கான பாத்திரம். ஏன், எப்படி இருக்கிறது என் கற்பனை? என்றார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 6:37 pm

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்
-------------
4. உன்னுடைய கண்கள் ஒன்றும் கெட்டுப் போகவில்லையே?
-------------
ஒரு சமயம் ஆசிரமத்திலுள்ள மாணவர்கள் காந்திஜிக்கு தேகப்பயிற்சி, விளையாட்டு, நாடகம் முதலியவைகளைச் செய்து காண்பிக்க விரும்பினார். ‘போல் ஜம்ப்’(Pole Jump) விளையாடி காண்பித்தனர். மார்தண்ட் உபாத்தியாயா அவனையோத்த வயதுள்ள மாணவர்ளுள் ‘போல் ஜம்ப்’ தாவுவதில் இரண்டு அல்லது மூன்றாவது இடத்தை வகித்தான். ஆனால், அன்று அவனுடைய துரதிருஷ்டம் போலும்! மூன்று முறை முயன்றும் காந்திஜியின் முன் தாவும் போது அவன் வழக்கமாக எவ்வளவு உயரம் தாவுவானோ, அந்த அளவு முடியவில்லை. ஒன்று அவன் கயிற்றுக் முன்னாலேயே விழுந்தான். அல்லது கயிற்றில் கால் சிக்கியது. விளையாட்டு முடிந்த பிறகு காந்திஜி மார்தண்டனைக் கூப்பிட்டு ” ஏன், உன் கண்கள் ஒன்றும் கெட்டுப்போகவில்லையே?” எனக்கேட்டார்.

”அம்மாதிரி ஒன்றும் தோன்றவில்லை. ஆனா விளையாடும்போது கயிறு தெளிவாகத் தெரியவில்லை, ஆகையால் வெற்றி பெறமுடியவில்லை. ஒரு வேளை வெயில் காரணமாக இருந்தாலும் இருக்கலாம்” என்று பதிலுரைத்தார் மார்த்தாண்டன்.

அதற்குக் காந்திஜி ”இல்லை, நாளை உன் கண்களை பரிசோதித்துக்கொள். அவர் உடனே ஏற்பாடு செய்துவிடுவார்!’ என்றார்.

மறுநாள் ஜம்னாலால்ஜி மார்த்தாண்டனை ஆமதாபாத்திலுள்ள ஒரு டாக்டரிடம் அனுப்பிவைத்தார். கண்ணில் கோளாறு இருக்கிறதென்று முதல் பரிசோதனையிலேயே டாக்டர் தெரிந்து கொண்டார். பரிசோதித்ததில் இரு கண்களிலும் ‘-2′ அளவுக்குக் குறை இருப்பது தெரியவந்தது. அதற்கேற்றபடி மூக்குக்கண்ணாடி தயாரித்து அதை எப்போதும் அணிந்துகொள்ளும்படி டாக்டர் ஆலோசனை கூறினார். இவ்விஷயத்தை சிறுவன் காந்திஜியிடம் கூறினபோது ”நீ குதிக்கும்போது அடிக்கடி முழித்துக்கொண்டிருந்தாய். ஒவ்வொரு தடவையும் கயிற்றின் மீதோ அல்லது அதற்கு முன்னாலோ குதித்தாய். இதிலிருந்து உன் பார்வை கெட்டுப்போயிருக்க வேண்டுமெனக் கருதினேன்” என்றார் காந்திஜி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 6:39 pm

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்
------------
25. இரண்டாயிரம் ஆண்டுகள் தங்களுக்கு அதிகமாகத் தோன்றுகிறதா?
------------
லண்டனில் வட்ட மேஜை மகாநாடு முடிந்தவுடன் காந்திஜி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ரொமைன் ரோலண்ட் அவர்களைச் சந்திப்பதற்காகப் பாரீஸ் வழியாக ஸ்விட்ட்ஜர்லாந்து சென்றார். ஒருவாரம் அவருடைய மாளிகையின் அருகிலிருந்த இல்லத்தில் தங்கியிருந்தார் இந்தச் சந்தர்ப்பத்தில் லோஜானிலும் ஜெனோவாவிலும் காந்திஜி உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏதோ ஒரு சொற்பொழிவுக்குப் பின்னர் காந்தியடிகளிடம் ஒருவர், ‘இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏசி கிறிஸ்து இவ்வுலகத்திற்கு கொடுத்து சென்ற உபதேசமும் அதில் அவர் தோல்வி கண்டார் என சரித்திரம் கூறுவதையும், இவற்றைத் திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்லும்போது தங்களுக்கு அவநம்பிக்கை ஏற்படவில்லையா’ எனக்கேட்டார்.

தமக்கே உரிய புன் சிரிப்புடன், ‘எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு என்று தாங்கள் கூறினீர்கள்? என காந்திஜி எதிர்க்கேள்வி எழுப்பினார்.

கேள்விக்க கேட்டவர் பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்தவர். ‘ சென்ற இருபது நாற்றாண்டுகளாவே வீணாக இவ்விஷயங்களைப் பற்றிப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது என்று சொன்னேன்” என அவர் பதிலளித்தார்.

‘அப்படியானால் தீமையை நன்மையால் வெல்வதைப்போன்ற அருமருந்தான விஷயங்களைக் கற்க இரண்டாயிரம் ஆண்டுகள் உங்களுக்கு அதிகமாகத் தோன்றுகிறது போலும் என் காந்திஜி கூறினார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 6:40 pm

26. எனக்கு ஆபரேஷன் செய்யும்போது…


காந்திஜி ஆகாகான் மாளிகையில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது இதர சில கைதிகள் வேலை செய்வதற்காக அவரோடு தங்கியிருந்தார்கள். அவர்களில் ஒருவருக்குக் கண் பக்கத்தில் கொப்புளம் ஆகியிருந்தது. இதனால் அங்கு வீக்கம் ஏறபட்டு கண்ணையே மறைத்திருந்தது. கத்தியால் கீறிக் கொப்புளத்தை உடைத்துவிடலாம் என்று டாக்டர்களால் தீர்மானிக்கப்பட்டது. ‘கீறல்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே அவன் பயந்துவிடுவான் என்ற ப்யாரேலால் சொன்னார். ஒரு வேளை மயக்கம் போட்டும் விழலாம். ஆகையால் அவனுக்குத் தெரியாமல் கத்தியால் கீற வேண்டும்’ என்றும் கூறினார்.

‘இல்லை, இவர்களெல்லாம் தைரியசாலிகள். இருந்தாலும் உனக்கு எப்படி சௌகரியமோ அப்படி செய்’ என்றார் காந்திஜி.

டாக்டர் சுசிலா நாயர் அவனை உட்காரவைத்தே கட்டியை கீறினார். காந்திஜி மிகுந்த ஆர்வத்துடன் சிகிச்சை முடியும் வரை பக்கத்திலேயே இருந்து அவ்வப்போது தன்னாலான உதவிகளை செய்து கொண்டு இருந்தார். கட்டுப்போடும் போது, துணி ஒன்றை அதோடு சேர்க்கவும் வேண்டியதாயிற்று. இதையெல்லாம் பார்த்து விட்டு காந்திஜி, ‘ஆபரேஷன் செய்யும்போது இம்மாதிரி சிறு துணி எடுத்துக்கொண்டு வேலை செய்ய ஆரம்பிப்பாயா? முதலிலேயே நீளமான துணியை எடுத்துக் கொண்டிருக்கவேண்டும்’ என்றார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 6:41 pm

27. அவர்கள் அம்மணமாக இருப்பது அப்பட்டமான உண்மையை வெளிப்படுத்தவில்லையா?


1921ம் வருடம் காந்திஜியும் மௌலானா முகம்மது அலியும் தென்னிந்தியாவில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். வாலதேரை அடைந்த போது மௌலானா முஹம்மது அலியை இந்திய அரசாங்கம் கைது செய்த்து. திருமதி முஹம் அலியும் தம் கணவரோடு பிரயாணம் செய்து கொண்டிருந்தார். மிகுந்த தைரியத்துடன் அவர் இந்த துக்கத்தைத் தாங்கிக் கொண்டார். மேலும் சென்னையில் நடைபெற்ற கூட்டங்களுக்கு காந்திஜியுடன் சென்றார். இதைக் கண்டு காந்திஜி மிகுந்த சந்தோஷமடைந்தார்.

இதன் பின், திருமதி முகமதலியை சென்னையிலேயே விட்டுவிட்டு மதுரைக்கு புறப்பட்டார் அடிகள். அவர் இருந்த ரயில் பெட்டியில் வேறு பிரயாணிகளும் இருந்தனர். ஆனால் ஏறக்குறைய அனைவருக்குமே அப்பொழுது நடந்து கொண்டிருந்த சம்பவங்களைப் பற்றி அவ்வளவு தெரியாது.உண்மையில் அவர்களுக்கு இவைகளைப் பற்றிய கவலை சிறிதும் கிடையாது. அவர்கள் அனைவரும் அந்நிய நாட்டுத் துணியை உடுத்தியிருந்தனர். அவர்களில் சிலருடன் பேச முயன்றார் காந்திஜி. கதர் அணியும்படி அவர்களை வற்புறுத்தினார். தலையசைத்துக்கொண்டே அவர்கள் ‘கதர் வாங்க முடியாத அளவுக்கு நாங்கள் ஏழைகள். அது விலையுயர்ந்துது கூட’ என பதிலளித்தனர்.

காந்திஜிக்கு அவர்கள்பேசியதன் பொருள் விளங்கிவிட்டது. அவர் ஆழ்ந்து சிந்தனை செய்யத் தொடங்கினார். ‘நான் சட்டை, தொப்பி, முழுநீள வேஷ்டி அணிந்திருக்கிறேன். அதேசமயத்தில் கோடிக்கணக்கான மக்கள் 4 அங்குலமும் 4 அடி நீளமுள்ள கௌபீனத்தைத் தவிர வேறுதுவும் உடுத்திக் கொள்ள முடியாதிருக்கிறது. வேறு வழியின்றி அவர்கள் ஆடையில்லாமல் அம்மணமாக இருக்கவேண்டியதாயிருக்கிறது. அவன் இப்படி இருப்பத் அப்பட்டமான உண்மையை வெளிப்படுத்தவில்லையா? நாகரீகமான நிலையில் இருந்து கொண்டு, நான் உடுக்கும் ஆடையல் எவ்வளவு சிக்கனப்படுத்த முடியுமோ அவ்வளவு செய்யவில்லையென்றால் மக்கள் முன் தைரியத்துடன் மனம் கூசாமல் இதற்குச் சரியான பதிலளிப்பது எவ்வாறு?

இவ்வாறான சிந்தனைகளின் விளைவாக மதுரையில் கூட்டம் நடந்த பிறகு முழங்கால் அளவு சிறு துண்டைத்தான் இனித் தாம் உடுத்துவதென முடிவு செய்து விட்டார் காந்தியடிகள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 6:42 pm

8. இன்று உங்களுடைய திருமண நாளாயிற்றே!


சேட் ஜம்னாலால் பஜாஜின் குமாரத்தி மதால்ஸாவக்கும் ஸ்ரீமன் நாராயணனுக்கும் வார்தாவில் ‘பச்சராஜ் பவன்’ மாளிகையில் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. அவர்களுக்குக் காந்திஜியின் ஆசீர்வாதம் கிடைத்திருக்கிறது. அன்று ‘நல்ல மழை பெய்து கொண்டிருந்து. எனினும் குறித்த நேரத்தில் காந்திஜி கஸ்தூரிபாவுடன் கல்யாணமண்டபத்தை அடைந்தார். ஆசிரம வழக்கப்படி விவாகச் சடங்குகள் ஒரு மணி நேரத்தில் முடிந்துவிட்டன. சடங்குகள் நடைபெறும் போது காந்திஜி சர்க்காவில் நூல் நூற்றுக்கொண்டிருந்தார். சடங்குகள் முடிந்தவுடன் திருமணத் தம்பதிகள் அவரை வணங்கும் போது அவர்களுக்குத் தம் கையாலேயே நூற்ற கதர்மாலையை அணிவித்தார் பாபுஜி. அன்று மாலையே உணவருந்த சேவா கிராமத்திற்கு வரும்படி அழைப்பும் விடுத்தார்.

மாலைப்பொழுது தம்பதிகள் ஜம்னாலால்ஜியின் ‘ஆக்ஸ்போர்டு’ வண்டியில் சேவாகிராமத்திற்குப் புறப்பட்டனர். இது காளை மாட்டு வண்டிதான். ஆனால் பழைய ‘போர்டு’ காரின் எஞ்சிய பகுதியால் இந்த வண்டி செய்யப்பட்டிருந்தது. அதனால் இதற்கு ‘ஆக்ஸ்போர்டு’ எனப்பெயரிடப்பட்டது. ‘ஆக்ஸ்’ என்றால் ஆங்கிலத்தில் காளை என்று பொருள். ‘போர்டு’ வண்டி.

மழை தொடர்ந்து பெய்துகொண்டு தான் இருந்தது. வழி நெடுக ஈரம், நாலாபக்கமும் ஒரே சகதி எப்படியோ அவர்கள் குறித்த நேர்த்தில் ஆசிரம்ம் போய் சேர்ந்தனர். காந்திஜி அவர்களின் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். குறித்த நேரத்தில் மற்ற ஆசிரமவாசிகளுடன் அவர்கள் சாப்பிட உட்கார்ந்தார்கள். காந்திஜி தம்கையாலேயே பரிமாறும் தட்டை ஒவ்வொருவருக்கும் வைத்துக்கொண்டிருந்தார். தம்பதிகளின் தட்டும் அதே மாதிரி மிகுந்த அன்புடன் பரிமாறப்பட்டது. சாப்பிட்டு முடிந்தது; அவரவர்கள் தங்கள் தங்கள் தட்டை நன்றாக்க் கழுவி தட்டுகளுக்கான இடங்களில் வைக்க வேண்டுமென்பது நியதி. ஆனால் தம்பதிகள் தங்கள் தட்டைக் கையிலெடுக்க முயற்சித்தபோது காந்திஜ புன்முறுவலுடன், ‘அடே இன்று உங்களுடைய திருமண நாளாயிற்றே! இன்று நாங்கள் தட்டு தூக்கக் கூடாது. நீங்கள் எழுந்திருந்து கை கழுவிக்கொள்ளுங்கள்”என்றார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 6:43 pm

29. எனக்கில்லை சங்கர்லாலுக்கு மருத்துவம் செய்யுங்கள்


காந்திஜி சோதனைகளுக்கு ஒரு முடிவே கிடையாது. பாதாம் கொட்டை பாலையும் தேங்காய்ப் பாலையும் உபயோகிக்கும் சோதனையில் இறங்கியிருந்தார். தொடக்க்தில் உட்கொள்ளும் அளவு மிக்க்குறைவாக இருந்தது. இதனால் உடல் நலிந்து காணப்பட்டது. ஆனால் சிறிதும் காந்திஜி தளவில்லை; வேலையின் அளவும் குறையவில்லை. குஜராத் வித்யா பீடத்தைச் சீரமைக்கும் எண்ணம் வலுப்பெற்றுக்கொண்டிருந்த நேரம். இச்சமயம் ஆசிரமத்திலுள்ள மாணவர்கள் கலவிக் கூடத்தின் ஆண்டுவிழாவை நடத்தினர். அவர்கள் ஒரு நாடகத்தையும் நடத்திக் காட்டினர். சர்க்காவில் நூற்றுக்கொண்டே நாடகத்தைப்பார்த்துக் கொண்டிருந்தார் காந்திஜி. பக்கத்திலிருந்த நண்பர்கள் அவர் மிகுந்த முகவாட்ட மடைந்திருந்ததைப் பார்த்தனர். அவரை எப்படியாவது சிரிக்க வைக்க முயற்சித்தும் பலன் இல்லை

சிறிது நேரம் கழித்து அவர் சர்க்காவில் நூல் நூற்பதை நிறுத்திவிட்டார். ஒரு மாணவன் நூலை வீச ஆரம்பித்தான். அப்போது காந்திஜி மெதுவாக அருகிலிருந்த மீரா பஹன் கையைத் தாங்கி எழுந்திருக்க முயற்சிப்பதை ஹரிபாபு உபாத்தியாயர் பார்த்தார். பலவீனத்தினால்தான் இப்படி ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகமும் எழுந்தது. அதே சமயத்தில் அவருடைய கால்கள் தொங்க ஆரம்பித்தன. அடிகளுடைய உடம்பின் முழு பாரமும் மீரீபஹினின் மீது விழுந்தது. ”காந்திஜிக்கு வலிப்பு வந்து விட்டது. ஹரிபாபு அவருடைய கால்களைப் பிடித்துக்கொள்” என்று ஜம்னாலால்ஜி கூறினார்.

கண்மூடித் திறப்பதற்குள் ஏதேதோ நடந்துவிட்டது. மஹாத்மாவின் உடல் வெளுத்துவிட்டது. கண்விழிகள் நின்றுவிட்டன; கழுத்தும் திரும்பியிருந்தது.

அண்டசராசரமே புயல் வேகத்தில் சுழல்வதாகத்தோன்றியது. இப்போது தான் இரண்டு தினங்களுக்கு முன் பிரார்த்தனைக் கூட்டத்தில், ‘இறப்பதானால், ‘சர்க்காவில் நூல் நூற்றுக்கொண்டிருந்தார், நூற்றுக்கொண்டே இறந்தார்’ என்றும், அல்லது பேசிக்கொண்டிருந்தார்’ பேசிக்கொண்டிருக்கையிலேயே மூச்சு நின்றது’ என்றும் ஆகவேண்டும்” என காந்திஜி சொல்லியிருந்தார்.

அது ஒரு விசித்திரமான காட்சியாக இருந்தது. கூடியிருந்த மக்கள் சோக்க்கடலில் மூழ்கியவராய் தம்மாலான சிகிச்சைகள் அனைத்தையும் அடிகளுக்குச் செய்து கொண்டிருந்தனர். எவ்வளவுதான் அழுகையை நிறுத்த முயன்றும் அவர்களால் முடியவில்லை. ஆனால் இவ்வளவும் நடைபெறுவது மூன்று நிமிடம் கூட இருக்காது; அதற்குள மஹாத்மாஜி கண்களைத் திறந்து நாடகமேடையைப் பார்த்தார். மிக மெதுவான குரலில் ”நாடகத்தை ஏன் நிறுத்திவிட்டீர்கள். அது தொடரட்டும்’ என்றார்.

நாடகம் மீண்டும் தொடங்கியது. ஜனங்களுக்கும் உயிர் திரும்பி வந்தாற்போலிருந்தது. ஐந்து நிமிடங்கள் கழிந்தன. ‘என்னுடைய நூல் சுற்று ஆகியிருக்கிறது? எண்ணினீர்களா? எவ்வளவு குறைந்திருக்கிறது? ” என காந்திஜி கேட்டார்.

‘பதினாறு சுற்று குறைவாக இருக்கிறது” என்றார் ஒரு சகோதரர்.

காந்திஜி ”என்னுடைய சர்க்காவைக் கொண்டுவா. குறைந்ததை நூற்கவேண்டும்.” இதைக் கேட்டு ஜனங்களுக்கு ஆத்திரம் வந்தது; அடராமா! இவர் எவ்வளவு கொடூர உள்ளம் படைத்தவர் போன உயிர் இன்னும் சரிவரத் திரும்பி வரவில்லை. அதற்குள் நூல் நூறகவேண்டும் என்று சொல்கிறாரே!”

பாபுஜி! இன்று நீங்கள் நூற்காமலிருந்தால் உடம்பு சரியாய்விடும்” என ஜம்னாலால்ஜீ கூறினார்.

”அது எப்படி முடியும்?” என்றார் காந்திஜி. ”நீங்கள் இவ்வாறு சொல்லமாட்டீர்களே” என்று ஜம்னாலாலைப் பார்த்து குறைப்படுக் கொள்வதைப் போன்ற முகபாவம் அடிகளுக்கு ஏற்பட்டது.

சங்கர்லால்ஜிக்கும் மிகுந்த தர்ம சங்கடமாகப் போய்விட்டது. இந்நேரத்தில் நூற்பேன் என்று பிடிவாதம் பிடிப்பது எமனை வலிய அழைப்பதற்கு ஒப்பாகும், என அவர் நினைத்தார். ஆனால், காந்திஜி அல்லவா; காந்திஜியாகவே இருந்தார்; சர்க்கா வந்தவுடன் நூற்பதற்கு உட்கார்ந்தார். அப்போது வந்து சேர்ந்தார் டாக்டர். காந்திஜியைப் பார்த்து ”இவர் நன்றாகத்தானே இருக்கிறார்? பின் இவரைப் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? என்று கேட்டார்.

காந்திஜி சிரித்துக்கொண்டே, ”எனக்கில்லை, சங்கர் லாலுக்கு மருத்துவம் செய்யுங்கள்’ என்றார்.

அதே சமயம் நாடக மேடையில் ஒரு பாத்திரம் , ”பார், இன்னும் இரண்டு நிமிடத்திற்குப் பிறகு எனக்கு மரணம் ஏற்படப்போகிறது. தர்மத்தைப் பற்றி ஏதாவது கேட்கவேண்டியிருந்தால் இப்போதே கேட்டுக்கொள்” என்று சொல்லிக்கொண்டிருந்தது.

30. தன்மானம் இழந்த பின் நான் பாரத நாட்டிற்குப் பயன்படமாட்டேன்


காந்திஜி ஆகாகான் மாளிகையில் கைதியாக இருந்து ஒரு வருடம் நிறைவுபெற்றது. தேசத்தின் நிலைமையைப் பற்றி அரசாங்க்துடன் கடிதப் போக்குவரத்து தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்தியாவின் மீதான தன்னுடைய இழிவான சூழ்ச்சிகளைக்காந்தியடிகள் இல்லாத போது அமல் நடத்த வேண்டுமென்ற கெட்ட நோக்கத்தில் அரசு அடிகளைச் சிறைக்குள் தள்ளவேண்டுமென்று தீர்மானமாக இடுப்பை வரிந்து கட்டிக்கொண்டிருந்தது. ஆனால் பாரத்த்தலைவர்கள் காந்தியடிகளை வெளியே வைத்திருக்க விரும்பினர். சீனிவாச சாஸ்திரி காந்திஜியுடன் கருத்து வேறுபட்டவராக இருந்தார். ஆனால் அவர்களுடைய உறவு நல்லபடியாகத்தான் இருந்தது. காந்திஜி சிறை பிடிக்கப்படுவதை சீனிவாச சாஸ்திரி அவர்கள் விரும்பவில்லை. அவருடைய விடுதலைக்காக சாஸ்திரி ஒரு பகிரங்க்க் கடிதம் எழுதினார். காலையில் உலாவச் செல்லும்போது ப்யாரேலால், ‘இக்கடித்த்தைப் பற்றித் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ என காந்திஜியிடம் கேட்டார்.

‘மொழி நன்றாக இருக்கிறது. மற்றபடி ஒன்றும் இல்லை, என பதிலளித்தார் காந்திஜி.

‘எப்படியாவது தாங்கள் வெளியே வரவேண்டம்’ - இதுதான் சாஸ்திரியின் ஆசை என்றார் ப்யாரேலால்.

அதற்குக் காந்திஜி ‘அவருக்குத் தெரியாது போலும். நான் எப்படியாவது வெளியே வந்து ஒரு வேலையும் செய்ய முடியாதென்று’

சாஸ்திரியின் கடித்த்திற்கு பதில் எழுதட்டுமா?’ எனக் கேட்டார் ப்யாரேலால்.

‘பதில் தான் ஒரு நிமிடத்தில் எழுதி விடலாமே பதில் இவ்வளவுதான். தன் மானம் இழந்த பின் நான் பாரதநாட்டிற்கு பயன்படமாட்டேன்.’ என்றார் காந்திஜி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 6:44 pm

31. அவள் என்னைக் குறை கூறுகிறாளா?


உப்புச் சத்தியாக்கிரகத்தைத் தொடங்கு முன், வழக்கம் போல் காந்திஜீ தேசம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். இந்த யாத்திரையின் போது காசிக்குச் சென்று ஸ்ரீ பிரகாசாவின் வீட்டில் தங்கினார். அங்கிருந்து கிளம்பும்போது அக்குடும்பத்திலுள்ள எல்லோரும் காந்திஜியை வழியனுப்ப ஒன்று கூடினர். அவர்களில் ஸ்ரீ பிரகாசாவின் தாயாரும் ஒருவர். திடீரென்று அவள் காந்திஜியிடம் ‘மஹாத்மாஜீ, தாங்கள் ‘பா’விடம் மனம் நோகும்படி நடந்து கொள்ளுகிறீர்கள்’ என்றாள்.

சில நாட்களுக்கு முன் கஸ்தூரிபா செய்த சிறு தவறுக்காக ‘என் வருத்தம்; என் வெட்கம்’ என்ற உணர்ச்சி மிக்க கட்டுரையைக் காந்திஜி எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையில் கடுமையான வார்த்தைகளால் கஸ்தூரிபாவைக் கண்டனம் செய்திருந்தார். யாரோ ஒருவர் கஸ்தூரிபாவிடம் ரூபாய் நான்கு நன்கொடையாக்க் கொடுத்திருக்கிறார். அதை உரிய நேரத்தில் ஆசிரமத்தின் கஜானாவில் ‘பா’ சேர்க்க முடியாமற் போயிருந்தது. இந்தக் கட்டுரையைப் படித்த பலருக்கு மிகுந்த வேதனை ஏற்பட்டது. இதனை மனதில் எண்ணிக்கொண்டுதான் ஸ்ரீ பிரகாசாவின் தாயார் காந்திஜியிடம் மேற்சொன்ன சொற்களைக் கூறினாள். ஆனால் காந்திஜியோ முற்றும் துறந்த முனிவராயிற்றே; சிரித்துக்கொண்டே, ‘பா’வுக்கு நான் சாப்பாடு போடுகிறேன், உடுக்க துணிமணி கொடுக்கிறேன். அவளை நான் கவனித்துக் கொள்கிறேன். மீண்டும் அவள் குறை கூறுகிறாளா? என்று கேட்டார்.

‘நான் ‘பா’வுக்குக் கொஞ்சம் ரூபாய் கொடுக்க விரும்புகிறேன். ஆனால் அவள் வாங்கிக்கொள்வதில்லை. வாங்க அனுமதியுங்கள்’ என்றார் அம்மையார்.

மகாத்மாஜி இதை ஒப்புக் கொள்ளவில்லை. ‘இல்லை, இல்லை, ரூபாய் ‘பா’வுக்குக் கொடுக்கவேண்டாம், ஸ்ரீபிரகாசாவிடம் கொடுங்கள். ஏனென்றால் அவர் எனக்காக்க் கஷ்டப்பட்டு நிதிசேர்த்துக் கொண்டிருக்கிறார். தாங்கள் கொடுக்கவிரும்பும் பணத்தை அந்த நிதிக்கே கொடுத்துவிடுங்கள்’

கடைசியில் அம்மையார் ‘பா’வுக்கு கொண்டுவந்திருந்த காசை அந்த நிதிக்கே கொடுத்துவிட்டார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 6:46 pm

32. இப்போது செல்ஃப் சரியாகியிருக்குமே?


எத்தன்முறை காந்திஜி இந்தியா முழுவதும் சுற்றினார் என்று தெரியாது. ஒரு சமயம் ஹரிஜன நிதிக்குப் பொருள் சேர்ப்பதற்காக தேராடூன் வந்து கொண்டிருந்தார். அங்கு பிரம்மச்சாரி என்ற பெயருள்ள டிரைவர் ஒருவர் இருந்தார். மிகப் பழைய ‘டாக்ஸி’ ஒன்றை அவர் வைத்து ஓட்டிக்கொண்டிருந்தார். ”மகாத்மா காந்தியை என் டாக்ஸியில் அமர வையுங்கள்” என்று மகாவீர் தியாகியிடம் அவர் கூறினார்.

ஆனால் மகாவீர் தியாகி ஒத்துக்கொள்ளவில்லை. பிரம்மச்சாரி நேராகவே காந்திஜிக்கு கடிதம் எழுதிவிட்டார். அவர் முன்பு ஒரு தடவை காந்திஜி ஆசிரமத்தில் தங்கியிருந்தார்; அந்தப் பழக்கம் தான். அவருடைய வண்டியில் தான் உட்காருவதாக அடிகளிடமிருந்து பதிலும் வந்துவிட்டது.

காந்திஜியை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக ஜனங்கள் கூட்டம் கூட்டமாக ஸ்டேஷன் போய்ச் சேர்ந்தனர். ‘சிக்னலும’ கீழே இறங்கியது. வண்டி பிளாட்பாரத்திற்கு வந்து நின்றதும், பீ…..பீ…… என்ற சத்தத்துடன் ஃபோர்டு கார் ஒன்றை பிம்மச்சாரி ஓட்டிக்கொண்டு காந்தியடிகளின் பெட்டிக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார். வண்டி ஒரே கதர் மயமாக இருந்தது; வெண்ணிற கதர் துணியைப் போர்த்தியிருந்தார் வண்டியின்மீது.

ஊர்வலம் நகர் பக்கமாகச் சென்றது. தியாகிஜி யார் யாருக்கு என்னென்ன வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தாரோ தெரியாது. முதலில் ரயிலடியிலேயே சுமை கூலிகள் 51 ரூபாய் பணமுடிப்பைக் காந்திஜியிடம் அளித்தனர். பின் குதிரை வண்டிக்கார்ர்கள் 100 ரூபாய் பண முடிப்பு அளித்தனர். காந்திஜி மிக்க மகிழ்ச்சியடைந்தார். ‘நீ கொடுப்பதாக வாக்களித்த அந்த ஆயிரத்து ஐநூறு ரூபாயில் சேர்க்கப்பட மாட்டது. ஏனென்றால் டேராடூன் இன்னும் வரவில்லை. இப்போது நாம் இருப்பதோ கிழக்கிந்திய ரயில்வேயில் என்று மகாவீர் தியாகியிடம் காந்திஜி சொன்னார்.

இவ்வாறு சிரித்தும் சிரிக்க வைத்த்உக் கொண்டும் பண முடிப்புகளைப் பெற்றுகொண்டும் பண முடிப்பகளைப் பெற்றுக்கொண்டே, நகரத்தை நோக்கிச் சென்றார் திறந்த கார், இருமருங்களிலும் ஜனத்திரள். கடைத் தெருவிலுள்ள லாலாமித்ரசேன் என்பவர் காந்திஜியின் வண்டி இரண்டு நிமிடங்கள் தன் கடைக்கு முன் நிற்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஐநூறு ரூபாய் பணமுடிப்புக் கொடுக்க வாக்களித்திருந்தார்.

உத்திரப் பிரதேச யத்திரைக்காக ஆச்சாரிய கிருபாளனி ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். அவர் நிபந்தனையை ஒத்துக் கொள்ளவில்லை.

மகாத்மாஜி இதைப்பற்றிக் கேள்விப்பட்ட போது சிரித்தார், ஆனால் அந்தக் கடைக்கு முன்னால் வந்ததோ இல்லையோ, வண்டி நின்றுவிட்டது. ‘என்ன ஆனது’ என வினவினார் காந்திஜி.

‘ஒன்றுமில்லை சிறிது பெட்ரோல் அடைத்துவிட்டது’ என்று விடையளித்தார் டிரைவர் பிரம்மச்சாரி. இதைச்சொல்லி விட்ட டிரைவர் கீழே இறங்கி சர்…பர்…. என்ற சப்த்த்தை உண்டாக்கினார். அவ்வமயம் லாலாமித்ரசேன் மா விளக்கு பொருத்திக்கொண்டிருந்தார். காந்திஜி ‘அடே, செலஃப் போட்டு ஓட்டுவது தானே’ என்றார்.

‘ஐயா! ‘செல்ஃப் கூடச் சரியாக இல்லாதிருக்கிறது’ என்றார் பிரம்மச்சாரி.

இதைப்பார்த்துக் கிருபளானிக்குக்கோபம் தாங்கவில்லை. மாவிளக்குப் பொருத்தம் வேலை முடிந்ததும் லாலா தட்டுடன் வெளியே வந்து 500 ரூபாய் பணமுடிப்பு ஒன்றைக் காந்திஜியிடம் சமர்ப்பித்தரா. சிரித்துக்கொண்டே காந்திஜி பிரம்மச்சாரியிடம், ‘இப்பொழுது ‘செல்ஃப் சரியாகியிருக்குமே’ என்றார்.

பிரம்மச்சாரி இதைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்; உடனே வண்டியை ஸ்டார்ட் செய்து ஓட்டினார். ‘பா’ வும் பாபூவும் இதைப் பார்த்து விழுந்து-விழுந்து சிரித்தனர். கிருபாளனிக்கும் கடுகடுப்பு மாறி மகிழ்ச்சியேற்பட்டது. சிரிப்பை அடக்கிக்கொண்டு, என் செய்வது, உ.பி.குண்டர்களின் நடுவில் சிக்கிக் கொண்டுவிட்டோம்!’ என்றார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 6:47 pm

33. கங்கோத்திரி அசுத்தமானால்…….


அக்வால் பஞ்சாயத்து ஜம்னாலால் பஜாஜை ஜாதியிலிருந்து விலக்கி வைத்திருந்தது. தீண்டத்தகாதவர்கள் சமைத்ததை அவர் சாப்பிட்டார் என்பதுதான் அவர் செய்த பெரிய குற்றம். இருந்தாலும் அவருக்கென்று தனிக்கூட்டம் இருந்தது. அவர்கள் அவரை விட்டுவிட விரும்பவில்லை. அக்கூட்டத்தினர் சிலர் ஒரு நாள் ஜம்னாலால்ஜியிடம் வந்து ‘நீங்கள் எங்களுக்காகவாவது’ கட்டாயம் ஒன்று செய்ய வேண்டும். வேறு எதைச் செய்தபோதிலும் இனிமேல் தீண்டத்தகாதவரிகளிடம் சாப்பிடுவதில்லை என்று உறுதி சொல்லுங்கள். இது எங்களுடைய திருப்திக்காகவாவது இருக்கட்டும். தீண்டாதவர்களிடம் சாப்பிடமாட்டீர்கள் என்ற நம்பிக்கையை எங்களுக்கு அளிப்பீர்களா? என்று கேட்டனர்.

ஜம்னாலால்ஜி, ”ஆசிரமத்தில் எல்லா ஜாதியினரும் இருக்கின்றனர். நான் ஆசிரமத்தில் சாப்பிட மறுக்கலாமா?’

”ஆசிரமத்தைப் பற்றி யார் கூறுகிறார்கள்? அதுதான் புனித பூமி ஆயிற்றே. தீர்த்த ஸ்தலத்திற்கு யாராவது தடை சொல்வார்களா? மற்ற இடங்களில் மட்டும் இதைச் செய்யாதீர்கள். இதுதான் எங்கள் வேண்டுகோள் ” என்றனர் வந்த கூட்டத்தினர்.

ஆனால் இந்த வேண்டுகோளை மட்டும் ஜம்னாலால் எப்படி ஒத்துக்கொள்வார்? கடைசியில் அப்பெருமக்கள் காந்திஜியிடம் சென்று முறையிட்டனர். அடிகள் கேட்ட கேள்வி இதுதான் - ஜம்னாலால்ஜி தீண்டத்தகாதவர்களிடம் சாப்பிடுகிறார். இதனால் நீங்கள் பயப்படுவது பயப்படுவது சமூகத்திற்காகவா அல்லது மதத்திற்காகவா?

”மத்த்தைப்பற்றி எங்களுக்கு என்ன தெரியும்? சமூகத்தின் பழக்கவழக்கம் இப்படி செய்யக்கூடாது என்று இருக்கிறது. நாங்கள் ஜம்னாலால்ஜி சொல்வதெல்லாம் கேட்கிறோம் எங்களுடைய அச்சிறு வேண்டுகோளை மட்டும் அவர் ஏன் நிராகரிக்க வேண்டும்” கூட்டத்தினரில் வயோதிகர் இப்படி பதிலளித்தார்.

பழக்க வழக்கம் சரியில்லையென்றால் அதை ஒழித்தே ஆகவேண்டும். யார் குடிகாரன் இல்லையோ, விபசாரம் செய்வதில்லையோ அவன் தன் கையில் சுத்தமாகச் செய்த சாப்பிடத்தக்க பொருட்களை நாம் சாப்பிடத்தான் வேண்டும். எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான். எவன் தூய்மையற்றவனோ, புலாலுண்பவனோ அல்லது குடிகாரனோ, அவன் கையால் செய்த்தைச் சாப்பிட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உங்களுக்குத்துணிவு இல்லையென்றால் நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டாம்; ஆனால் அவ்வாறு செய்பவரை பின்வாங்கச் சொல்வானேன்? தூய்மையில்லாதவர்கள் பிராமணனாக இருந்தாலும் சரி, அவர் கையால் சாப்பிடுவதில்லை என்ற உறதியை அவருடன் சேர்ந்து நீங்களும் ஏன் எடுக்கக்கூடாது?

நீங்களோ பஞ்சாயத்தாரின் ஆணைக்குப் பயப்படுகிறார்கள் ஆனால் கங்கை ஆறு தோன்றுமிடத்தில் கங்கோத்திரி அசுத்தமாகிவிட்டால் கங்கை நீர் தூய்மையாக இருக்குமா? இன்றைக்குப் பஞ்சாயத்து, பஞ்சாயத்தாக இல்லை. இன்றைய பஞ்சாயத்து அரக்க வழிகளைப் பூசிப்பதாக இருக்கிறது. இவர்கள் ஏமாற்று வித்தைக்கார்களாகவும் தன்னலமுடையவர்களாகவும், கோபம், பொறாமை நிறைந்தவர்களாகவும், இருக்கிறார்கள். பஞ்சாயத்தார்களிடம் இருக்க வேண்டிய நடுநலைமை எங்கு போய்விட்டது? என்னுடைய எச்சரிக்கை என்னவென்றால் பஞ்சாயத்தார்களிடம் உள்ள தீமைகளை நாம் இப்போதே களைந்தெரிவில்லையென்றால் சமூகம் கெட்டே போகும். தர்மத்தைப் பற்றி பேச்சளவில் பெரிதாக மட்டும் பேசிவிட்டால் நியாயம் வந்துவிடுமா? பஞ்சாயத்தின் அடித்தளமே களங்கமடைந்துவிட்டது. அதைத் தூய்மைப்படுத்துவதற்கு நாம் எல்லோரும் தாயராக இருக்கவேண்டும். ஜம்னாலால்ஜீ இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார். அவரை நீங்கள் வாழ்த்துங்கள். அவரிடம் அன்பு காட்டினால் மட்டும் போதும். அதே மாதிரி பஞ்சாயத்துக்கு எதிராக உள்ளவர்களையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் பால் கோபம் கொள்ளாதீர்கள்; இரக்கம் காட்டுங்கள். நாம் கொபத்தை அன்பினாலும் குழப்பத்தை அமைதியாலும் வெல்லுவோம். ஆகையால் அவர்களையும் நேசியுங்கள். தர்மத்த்ஐ காத்து அநியாயத்தை ஒழிப்பதில் தம் கடமையைச் சீராகச் செய்ய வேண்டுமென்று ஜம்னாலால்ஜியை வாழ்த்தி விட்டுச் செல்லுங்கள்’ - இவ்வாறு காந்திஜி அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

காந்திஜி பேசி முடித்த பின் கூட்டத்தினரிடையேயும் அமைதி தாண்டவமாடியது. யாருக்கும் பதில் சொல்ல நா எழவில்லை, ஒன்றும் பேசாமல் பெரியவர் தம் தலைப்பாகையைக் கழற்றிக் காந்திஜியின் திருவடிகளின் முன் வைத்து வணங்கி ‘அண்ணலே தங்கள் அறிவுரை கேட்டு நாங்கள் அரியபேறு பெற்றுவிட்டோம்’ என்று கூறினார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 6:48 pm

34. யார் சத்தியத்தைத் தேடி அலைகிறாரோ அவருக்கு அது கட்டாயம் கிடைக்கும்


காந்திஜி வங்காளத்தில் சுற்றுப்பிரயாணம் செய்து கொண்டிருந்தார். வழிநெடுக ஜனங்கள் கூட்டம் கூட்டமாக நின்று மனப்பூர்வமாகத் தம்மாலானதை ஹரிஜன நிதிக்காகக் காந்திஜியிடம் கொடுத்தனர். ஒரு ஊர் ரயிலடியில் ஒரு மாது கூட்டத்தைப்பிளந்து கொண்டு காந்திஜி உள்ள ரயில் பெட்டியின் பக்கத்தில் வந்தாள், தங்க ஆபரணங்கள் அவள் உடம்பில் ஜொலித்துக் கொண்டிருந்தன. பக்கத்தில் வந்துதான் அணிந்துகொண்டிருந்த எல்லா நகைகளையும் கழற்றி காந்திஜியின் திருவடிகளில் சமர்பித்து, ”எனக்குச் சத்தியத்தைக் கொடுத்தருளுங்கள்” என்றாள்.

‘இது ஆண்டவன் ஒருவனால்தான் செய்ய முடியும். யார் சத்தியத்தை தேடி அலைகிறாரோ அவருக்கு அது கட்டாயம் கிடைக்கும்’ என்று பதிலளித்தார். காந்திஜி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 6:50 pm

35. என்னுடைய டிக்கெட்டை நீ எடுத்துக்கொள்.


ஜிரால்டா பார்பீஸ் காந்திஜியை இதற்கு முன் ஒருபோதும் சந்தித்ததல்லை. முதன்முதலாக அவள் இங்கிலாந்திலிருந்து பம்பாய் வந்து இறங்கியதும், அடுத்த வண்டியிலேயே தான் லாகூருக்குச் செல்லவேண்டுமென அவளுக்குத் தெரியாது. வழியில் சிறிது நேரம் கழிந்ததால் ரயிலடிக்குப் போய்ச்சேர சிறிது தாமதமாகிவிட்டது. வண்டி புறப்படத் தயாராக இருந்தது. பெண்களுக்காக இரண்டாம் வகுப்புப் பெட்டி ஒன்று மட்டும் அதில் இருந்தத. அதிலும் ஏராளமானவர்கள் ஏறியிருந்தார்கள். இடத்தைப் பிடிப்பதற்காக அவள் இங்கு மங்கும் ஓடித்திரிந்தாள். ஆனா பயன் இல்லை. திடீரென்று அவளுடைய பார்வை காலிப்பெட்டி ஒன்றின் மீது விழுந்தது. அது முதல்வகுப்புப் பெட்டி. அதிகப்பணம் கொடுத்தாவது முதல் வகுப்பில் போய் ஏறிவிடலாம் என நினைத்துக் ‘கார்டி’டம் செல்வதற்காக அவரைத் தேடினாள். அது ‘ரிசர்வ்’ செய்யப்பெட்டி என்பதை அவசரத்தில் அவள் பார்க்கவில்லை.

ரயில் பெட்டியில் நுழையும் வாயிலில் சிலர் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். அதில் ஒருவர் அம்மாதுவை நிறுத்தி, ”நான் தங்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டுமா?” என்றார்.

அந்தமனிதர் அதிக உயரமில்லாமலும், எளிய கபடமற்ற முகத்தோற்றத்துடனும், பொக்கை வாயுடனும் இருந்தார். அதற்குள் வண்டி புறப்பட ‘கார்டு’ ‘விசிலு’ம் ஊதியாயிற்று. உடனே அம்மனிதர் ‘கார்டு’ பக்கம் திரும்பிச் சமிக்ஞை காட்டினார். பச்சைக்கொடியைக் காண்பிக்கத் தயாராயிருந்த கார்டு உடனே வண்டியை நிறுத்துவதற்கு மறு ‘விசில்’ கொடுத்தார். அதற்குள் அந்தக் கலக்கமுற்ற மாது தன் கதையைச் சொல்லி முடித்திருந்தாள். மற்றொரு மனிதர் இதைப்பார்த்துச் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார். உடனே அம்மனிதர் வேஷ்டியில் மடித்து வைத்திருந்த முதல் வகுப்பு டிக்கட்டை அம்மாதினிடம் கொடுத்துவிட்டு அவள் வைத்திருந்த டிக்கெட்டைக் கேட்டார்.

இம்மாதிரி கேட்டதை மற்றொரு மனிதர் ஆட்சேபித்தார். ஆனால் டிக்கெட்டை எடுத்துக் கொடுத்த அம்மனிதரோ எல்லோரையும் அடக்கிவிட்டார். இதற்குள் அங்கு கூட்டம் சேர்ந்துவிட்டது. வண்டி நின்றுபோய்விட்டதன் காரணத்தையறிய ஸ்டேஷன் மாஸ்டர் ஓடோடியும் வந்தார். ஆனால் அந்த விசித்திர மனிதரோ வழக்கம்போல் அமைதியாக ஒரு கூலியிடம் அம்மாதின் சாமான்களை உள்ளே வைத்துவிட்டுத் தனது சாமான்களை வெளியே எடுத்து வைக்குமாறு கூறினார்.

”விஷயம் இதுதான். நான் முதல் வகுப்பில் பிராயாணம் செய்ய விரும்புவதில்லை. என் நண்பர்கள் எனக்குத் தெரியாமலேயே முதல் வகுப்புச் சீட்டை வாங்கி ரிசர்வ் செய்துவிட்டார்கள். நானும் லூகூர் தான் செல்கிறேன். ஆகையால் இடம் மாற்றிக்கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே” என்று அம்மனிதர் சொன்னார்.

வியப்புக் குறிகளும் வினாக்குறிகளும் தோன்றக்கூடிய முகபாவத்துடன் கூடிய நயிலையில் அம்மாது அம்மனிதர் கூறியதை நிராகரிக்க முடியவில்லை; சீட்டை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டியதாயிற்று. அம்மனிதர் தன்னுடைய நண்பர்களின் வெறுப்புக்களைப் பற்றிச் சிறிதும் கவலைகொள்ளாமல் பின்னாலுள்ள மூன்றாவது வகுப்புப் பெட்டியில் ஓர் ஓரத்தில் இடமு பிடித்து உட்கார்ந்தார்.

அம்மனிதர் வேறு யாருமில்லை. சாக்ஷாத் மகாத்மாஜீயே.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 6:51 pm

36. கடைசியில் எனக்கு ஒருவழி தோன்றிற்று


காந்தியடிகள் எந்தப்பொருளையும் வீணாக்குவதில்லை. பழைய தபால் உறைகளைக்கூட அவர்பயன்படுத்துவார். கடிதங்களில் உள்ள காலிப்பகுதிகளைக் கத்தரித்துச் சேர்த்துவைத்துக்கொள்வார். பார்சல்களின் மேலுள்ள உறைகளையும் பத்திரிக்கள் வைத்துவரும் உறைகளையும் சேர்த்து வைத்து உபயோகப்படுத்திக்கொள்வார். இப்படி சேர்த்து வைத்த துண்டுக் காகிதங்களின் மேல் தம் கருத்துக்களை எழுதுவார். அல்லது அன்றாடம கணக்குகளை எழுதிக்கொள்வார். துரதிஷ்டவசமாக அநேகக்காகிதங்கள் காணாமற் போய்விட்டன. ஆனால் கிடைத்த காகிதங்களை வைத்துக்கொண்டு பார்க்கையில், பத்திரிகை ஆசிரியர் தொழில், அச்சு சம்மந்தமான எப்பேர்பட்ட நுணுக்கங்களையெல்லாம் காந்தியடிகள் இந்தத் துண்டு காகிதங்களில் எழுதி வந்தார் என்பது புலனாகிறது. அவர் பேசா நோன்பு மேற்கொள்ளும் நாட்களில் இப்படிப்பட்ட கழிவுக் காகிதங்கள் மிகமிக உபயோகப்பட்டன.

ஒரு நாள் கிருஷ்ணதாஸ், காந்தியடிகளைப் பார்க்க அவருடைய அறையில் நுழைந்தபோது அடிகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். ‘கிருஸ்ணதாஸ், எனக்குத் தினந்தோறும் அநேக தந்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன. அவைகளை யெல்லாம் கிழித்து எறியச்செய்தேன். இதனால் எனக்கு மிகுந்த வருத்தம்தான். இவைகளை எந்த வித்திலாவது உபயோகப்படுத்த முடியாதா என யோசித்துக் கொண்டிருந்தேன். கடைசியில் எனக்கு ஒரு வழி தோன்றிற்று” என்றார் காந்தியடிகள்.

இவ்வாறு சொல்லிவிட்டு அவர் தந்திப்பார்ம் ஒன்றைக் கையில் எடுத்து அதை மடித்து எப்படி உறை செய்வது என்பதை விளக்கிச் சொன்னார். இனிமேல் உறைகள் எல்லாம் இம்மாதிரியே செய்யப்படவேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

கிருஷ்ணதாஸ் இப்படியே செய்து வந்தார். பழைய காகிதங்களை உறையாக மாற்றி உபயோகிப்பதில் காந்தியடிகளுக்கு மிகுந்த ஆவல். புது உறைகளைக்கையால் தொடக்கூட மாட்டார். பழைய உறைகளைப் பயன்படுத்துவதில் அடிகளுக்குத் தனி ஆர்வம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 6:52 pm

37. பேசும் உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கிறது


அப்போதிருந்த பீகார் கவர்னர், சம்பாரன் சம்மந்தமாகப்பேச காந்தியடிகளை அழைத்தபோது, அடிகளை எங்கு கைது செய்து விடுவார்களோ என்ற பயம் எல்லோருக்கும் இருந்தது.

அந்நாளில் கவர்னர் ராஞ்சியில் தங்கியிருந்தார். ராஞ்சிக்கு புறப்படும் போது காந்தியடிகள் நண்பர்களிடம், ”ஒரு வேளை தாம் கைது செய்யப்பட்டு விட்டாலும் இன்ன இன்ன வழிகளை மேற்கொண்டு வேலைகளை ஒழுங்காகச் செய்து கொண்டேயிருக்கவேண்டும்.” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

காந்தியடிகள் கவர்னரைச் சந்திக்க பத்துமணிக்குத் தனியாகவே சென்றார். ஒன்று அல்லது ஒன்றரை மணிவரை பேச்சுவார்த்தை நடைபெறும் என காந்திஜி நினைத்தார். ஆனால் அது மாலை ஐந்து ஆறுவரை நீண்டுக்கொண்டிருந்தது. அவருடைய நண்பர்கள் தந்தியின் வரவை எதிர் பாரத்த வண்ணமிருந்தனர். நாள் முழுவதும் கழிந்துவிட்டது. ஆனால் செய்தி ஒன்றுமில்ல்ஐ. காந்தியடிகளைக்கைது செய்துவிட்டார்கள் என்றே நண்பர்கள் எல்லோரும் நினைக்கத் தொடங்கினர். மறுநாள் தந்தி வந்தது; நேற்று கவர்னருடன் நிறைய பேச்சு நடந்தது; இன்றும் நடைபெறும் ” என்று தந்தி வாசகம் இருந்தது.

கடைசியில் காந்தியடிகள் தன்னுடைய பேச்சுத் திறமையால் சம்பாரனில் நடந்த நிகழ்ச்சிகள் விசாரணைக்குரியவையே என்பதனைக் கவர்னருக்குப் புரியவைத்தார். கவர்னர் உடனே ஓர் விசாரணைக்குழுவை நியமித்து, தாங்களும் இதில் இருக்கவேண்டும்” என காந்தியடிகளை வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார்.

அடிகள் உடனே இதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால் கவர்னர் ”தாங்கள் குழுவில் இருந்தால் தான் இந்த நூறு ஆண்டுகளில் அரசாங்க அலுவலர்கள் இந்திய மக்களிடம் எப்படி நடந்துகொண்டார்கள் என்ற உண்மையைத் தெரிவிக்க முடியும்; இல்லையென்றால் குழுவின் அறிக்கை தங்கள் பார்வைக்கு வராமற் போய்விடலாம்” என காந்தியிடம் கூறினார்.

கவர்னர் இவ்வாறு கூறியதைக் கேட்டு அடிகள் சம்மதித்தார். ஆனால் தம் நணபர்களிடம், ”இந்தக் குழுவில் நடைபெறும் பேச்சு வார்த்தைகளைப்பற்றி மக்களிடம் சொல்லவும் அல்லது பத்திரிக்கைகளில் எழுதவும் உங்களில் யாரும் முற்படக்கூடாது. இது சம்பந்தமாகப் பேசும் உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கிறுது” எனக் கூறினார்.

இந்த விசாரணைக் குழு அரசாங்கத்திற்குத் தன் அறிக்கை கொடுத்ததின் விளைவாக அவுரித் தோட்ட முதலாளிகளான வெள்ளையர்களின் ஆடம்பர வாழ்க்கை அழிந்தது. இருந்தாலும் அவர்கள் காந்தியடிகளின் நண்பர்களாகவே தொடர்ந்து இருந்து வந்தனர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 6:53 pm

38. என் செய்தியில் உண்மை இருந்தால்….


காந்தியடிகள் சாதாரணமாக எல்லோரையும் நம்புபவர். ஆனால் கொள்கைகள் பற்றிய விஷயங்களில் மிக விழிப்புடன் இருந்து நன்றாக அவைகளை அலசிப்பார்ப்பார். அவர் சிறு சிறு விஷயத்திலும் கண்டிப்புடன் இருப்பார். யாராவது தன் கருத்தை ஒத்துக்கொள்ள வைப்பதற்காகப் பிடிவாதம் செய்தால் வர் தன் முடிவில் மிகவும் திடமாக நின்றுவிடுவார்.

உப்புச்சத்தயாகிரகத்தின் போது பிரசித்தி பெற்ற தண்டியாத்திரையை அடிகள் மேற்கொண்டார். அவருடைய கடைசி செய்தியை ‘டேப்ரிக்கார்டி’ல் செய்து நாட்டிலுள்ள ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் பரவச் செய்ய வேண்டுமென நண்பர்கள் நினைத்தனர்.

இதை காந்தியடிகளிடம் எடுத்துச் சொல்வதற்காக குழு ஒன்று சென்றது. இக்குழுவின் உறுப்பினர்களில் டாக்டர் ராஜேந்திர பிரசாதும் ஒருவர். வர் காந்தியடிகள் முன் மேற்சொன்ன யோசனையைச் சமர்ப்பித்தார். ஆனால் அடிகள் உறுதியான குரலில் அந்த யோசனையை நிராகரித்து விட்டார். வந்தவர்கள் மீண்டும் வற்புறுத்தினார்கள். வற்புறுத்திக்கொண்டே இருந்தார்கள். அப்போது காந்தியடிகள் என்னுடைய பேச்சுக்களை என் குரலிலேயே பதிவு செய்து அதை மக்களுக்கு பரப்பவேண்டுமென்ற அவசியமில்லை. என்னுடைய செய்தியில் உண்மை இருந்தால் பதிவு செய்யாமலேயே ஒவ்வொரு வீட்டிலும் என் செய்தி பரவட்டும். என் செய்தியில் சத்தியம் இல்லையென்றால் அதை செய்வது வீணாகும்’ என்றார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 6:54 pm

39. நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே இருக்கிறேன்


ஏதோபல காரணங்களால் காந்தியடிகளுக்கு மகாராஷட்டிரத்தில் பல எதிர்ப்பாளர்கள் உருவாகியிருந்தார்கள். சின்னஞ்சிறு விஷயங்களின் பொருட்டும் காந்தியடிகளின் மாகராஷ்ட்டிர துவேஷத்தைக் கண்டார்கள்; அத்துடன் நீட்டி விரித்து அவரைப்பற்றிய போலிப்பிரச்சாரம் செய்தார்கள், மத்தியப் பிரதேசத்தில் அப்போதிருந்த காங்கிரஸ் மந்திரி சபையிலிருந்து டாக்டர் கரே அவர்களை விலக்கவேண்டிவந்தது. இதற்குப் பின்னாலும் மாகராஷட்டிர துவேஷத்தை அவர்கள் கற்பித்தார்கள். தம்முடைய பழைய மாணவி குமாரி ப்ரேமா பஹனுக்குக் காந்தியடிகள் எழுதின கடித்த்தில் தம் மனதைத் திறந்து வைத்திருந்தார். ஆண்-பெண்ணின் திருமண வாழ்வும், குடும்ப உறவையும் பற்றிய சில விஷயங்களை சங்கோசமின்றி அக்கடித்த்தில் அடிகள் எழுதியிருந்தார். தம்முடைய சில அனுபவங்களையும் கூறியிருந்தார். இக்கடிதங்களை வைத்துக்கொண்டே அவர்கள் அடிகளுக்குக் கெட்ட பெயர் உண்டாக்க முயற்சித்தார்கள்.

இந்த நிகழ்ச்சிகளினால் பலரும் வருத்தமுற்றனர்; குறிப்பாக உயர்ந்த குணம் படைத்த பெரும்பான்மை மகாராஷ்டிர்ர்களும் இது மிகுந்த வேதனை அளித்தது. இந்த விஷப் பிரச்சாரத்தை எப்படி தடுப்பது என்றே அவர்களுக்குப் புரியவில்லை.

அச்சான்றோருள் பம்பாயிலுள்ள திருமதி அவந்திகாபாய் கோகலேயும் ஒருவர். காந்தியடிகள் மீது அவருக்கு மிகுந்த பக்தி. அவர் ஒவ்வொரு வருடமும் அடிகளின் பிறந்த நாளன்று தன் கையாலேயே நூற்று, செய்த வேஷ்டியை பரிசாக அனுப்பி வந்தார். அவ்வருடமும் இதேமாதிரி செய்து அனுப்பி வைத்ததோடு தன் ஆழ்ந்த துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு கடிதமும் எழுதி அனுப்பினார். அக்கடிதம் பின் வருமாறு ”தங்களை எதிர்த்து இப்பகுதியில் மாரட்டிப் பத்திரிக்கைகளிலும் சஞ்சிகைகளிலும் பொய் புரட்டான போலிப் பிரச்சாரம் செய்யப்படுவதை இனியும் பொறுத்துக் கொள்ளும் சக்தி எனுக்குக் கிடையாது. மனம் மிகவும் சஞ்சலப்படுகிறது. தாங்களோ முற்றிலும் மௌனமாக இருக்கிறீர்கள். இதைப்பற்றி ஒன்றும் பேசுவதுமில்லை, எழுதுவதுமில்லை. நமக்கு எந்தவிதமான உபாயமும் தெரியவில்லை. இந்து விஷப்பிரச்சாரம் மேலும் பரவாமல் தடுக்க ஏதேனும் வழிசெய்ய வேண்டும்.”

அதற்குக் காந்திஜி கீழ்க் கண்டவாறு பதில் எழுதினார். சில நண்பர்கள் மூலமாக என்னைப் பற்றிய போலிப் பிரச்சாரம் நடைபெறுவதை நான் அறியாமல் இல்லை. ஆனால் நான் என்ன செய்யட்டும்? எப்படி சிலர் என்னைப் பழித்துப் பேசி இன்பம் காண்கிறார்களோ அதுபோல் என்னை சிலர் ஏற்றிப் பேசி புகழவும் செய்கிறார்கள். பழிச் சொல்லால் நான் வாடிப் போகவேண்டும்? அதே போல் புகழுரைகளாலும் நான் ஏன் முக மலர்ச்சியடைய வேண்டும்? நிந்திப்பவர்களினால் நான் குறைந்து போய் விடுவதுமில்லை. நான் எப்படி இருக்கிறேனோ, அப்படியே இருக்கிறேன். இம்மியும் குறைந்தோ, கூடுவதோ கிடையாது. ஆண்டவன் சந்நிதானத்தில் மனிதன் உண்மையுள்ளவனாய் நடந்து கொண்டால் அவனுக்கு எங்கும் எப்போதும் அச்சமே கிடையாது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 6:55 pm

40. இவரை ரக்ஷிப்பது உங்கள் கடமை


ஒத்துழையாமை இயக்கத்தின் ஆரம்பக் கட்டத்தில் காந்தியடிகள் சென்னை வந்தார். 1919 ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம். சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி வீட்டில் தங்கியிருந்தார்.

ஒருநாள் தமிழ் நாட்டின் புகழ்பெற்ற தேசியக்கவிஞர் பாரதி அவரைச் சந்திக்க வந்தார். எந்தவிதமான ஆசாரமும் இல்லாமல் அவர் அடிகளைப் பார்த்து ”மிஸ்டர்’ காந்தி! இன்று மாலை கடற்கரையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறோம். நான் அதில் பேசுகிறேன். தாங்கள் இதற்குத் தலைமை தாங்க ஒப்புக்கொள்ளவேண்டும்” என்றார்.

காந்தியடிகள் ‘நாளை இந்தக் கூட்டம் நடைபெற்றால் நான் வரமுடியும்’ என பதிலளித்தார்.

‘கூட்டம் இன்றுதான் ஏற்பாடாகியிருக்கிறது. தங்களின் ஒத்துழையாம் இயக்கம் வெற்றி பெறுக’ என வாழ்த்திவிட்டு பாரதியார் சென்று விட்டார். அறிமுகம் முதலியன இல்லாமலேயே வந்த இவர் யார் எனக் காந்தியடிகள் கேட்டார்.

”இவர் தான் தமிழ் நாட்டின் தேசிய கவிஞர் சுப்பிரமணிய பாரதியார்” என ராஜாஜி அவர்கள் பதிலளித்தார்.

”அப்படியென்றால் இவரை ரக்ஷிப்பது உங்கள் போன்றவர்களுக்கு கடமை” என்றார் காந்தியடிகள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 12, 2015 6:56 pm

41. கடவுள் படைப்பில் எப்பொருளும் வீணுக்கல்ல


நவகாளி யாத்திரையின்போது காந்தியடிகள் ஸ்ரீராம்பூரில் தங்கியிருந்தார். அன்று இரவு இரண்டு மணிக்கு அவர் விழித்துக்கொண்டார். மனுவையும் எழுப்பினார். அன்றுதான் மனுவுக்காக சீட்டித்துணியில் பைஜாமாவும் சட்டையும் தைத்து வந்திருந்தன. காந்தியடிகள் அவளிடம் ‘நீ சீட்டி அல்லது வேறு வகையான கதர் வாங்குவது சம்மந்தமாக யாரிடமாவது சொல்லி இருந்தாயா?’ எனக்கேட்டார்.

மனு இந்தத் துணியை அவர் கொண்டுவரவில்லை. தாங்கள் பிர்லா ஆட்களிடம் சொல்லியிருந்தீர்கள். அவர்கள் தான் கொண்டுவந்தார்கள்’ எனக் கூறினாள்.

அப்படியென்றால் குறைந்த விலையா இருக்கும்? ஆனால் மனதில் இப்படிப்பட்ட துணிகள் உடுத்தினால்தான் அழகாகத்தோன்றும் என்ற எண்ணம் எழுந்திருந்தால் அதை களைந்தெரியவேண்டும். மனிதன் சுவைக்காக புளிப்பு, இனிப்பு காரம் முதலியவைகளை உணவில் சேர்த்துகொள்கிறான். ஆனால் இந்த உடம்பு தொண்டு செய்வதற்கென்றே பயன்படுத்தவேண்டும். தொண்டு செய்வதற்கு நாம் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கையும் நன்றாக இருக்கும் என்ன எண்ணத்தை உண்டாக்கினால் நல்லது. இதே விதி உடையணிவதற்கும் பொருந்தும். ஆடைகள் மானத்தைக் காப்பாற்றுவதற்கும் உஷ்ணம், குளிர் முதலியவைகளிலிருந்து காப்பாற்றக் கொள்வதற்கும் தான் இருக்கின்றன. போலி நாகரிகத்தை வெளிக்காட்ட அல்ல. இன்று எல்லாத்துறைகளிலும் போலி நாகரீகம் தான் பரவியிருக்கிறது. நமதுபிற்கால சந்ததிகள் இதனால் கெட்டு அழிந்து போவார்களே என்ற துக்கம்தான் எனக்கு ஏற்படுகிறுது.” என்றார் காந்தியடிகள்.

இதன் பின் இப்படிப்பட்ட துணிகள் உடுத்துவதினால் என்ன தீமைகள் விளைகின்றன என்பதை விள்க்கிகொண்டே குழந்தைகள் விடுதிக்கு வந்தார். ‘குழந்தைகள் எப்படித் தூய்மையாக இருக்கவேண்டுமென அன்று கூறியிருந்தேன். இன்று மேலும் அதன் மீது ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். கழந்தைகள் எவ்வளவுக்கெவ்வளவு தூய்மையாகவும் சாதாரணமாகவும் தென்படுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் அழகாக இருக்கிறார்கள். தலைமயிர் தலையைக் காப்பாற்றவே இருக்கிறது. கடவுள் கொடுத்திருப்பவையாவும் நன் முறையில் பயன்படுத்துவதற்கே. அவனால் படைக்கப்பட்ட எந்தப் பொருளும் வீணாவதில்லை’ என்றார் காந்தியடிகள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 13, 2015 6:15 am

42. கடமை தவறேல்


அந்த நாட்களில் காந்தியடிகள் தினந்தோறும் தன் மூன்றாவது மகன் ராமதாஸூக்கு ஒரு மணி நேரம் குஜராத்தி சமஸ்கிருதம், ஆங்கிலம முதலியவைகளை சொல்லிக்கொடுப்பது வழக்கம். சொல்லிக் கொடுக்கும் பாடங்களில் இந்து சமயத்தின் முதல் புத்தகம், ‘எங் இந்தியாவின்’ கட்டுரைகள், இன்னும் வேறு பொருள்களும் இடம் பெற்றிருந்தன. இம்மாதிரி வகுப்பு நடைபெறும் நாட்களில் ஒரு நாள் தேசிய காங்கிரஸ் மகாசபை கூட்டம் ஆமதாபாத்தில் நகரவையின் புதிய கட்டிடத்தில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. காந்தியடிகள் காலை நான்கு மணிமுதல் இரவு பத்து மணிவரை தலைவர்களுடம் ஆலோசனை நடத்திக் கொண்டிருப்பார். ஒரு நாள இரவு ஒன்பது மணிக்கு வந்து ‘பா’விடம் ‘ராமன் எங்கே?’ எனக்கேட்டார்.

‘அவன் களைத்துத் தூங்கி விட்டான. அவனை இப்பொழுது எழுப்ப வேண்டாம்’ என்று ‘பா’ கூறினாள்.

‘ஆனால் தினமும் ஒரு மணி நேரம் அவனுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது வழக்கமாயிற்றே. அவன் இன்று படிக்க மறுத்தால் பிறகு நான் தூங்கிவிடுகிறேன்.’ என்றார் அடிகள்.

அன்றும் முறை தவறவில்லை. ராமதாஸை எழுப்பி சிறிது நேரம் அவனைப்படிக்க வைத்த பிறகே அடிகள் தூங்கினார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 13, 2015 6:15 am

43. இப்பொழுதுதான் இது ஹரிஜனங்களுக்கு சொந்தமாயிற்றே


காந்தியடிகளின் நெருங்கிய நண்பர் ஒருவருக்குக் கல்யாணம் நடைபெற்றது. பணகார நண்பர் ஒருவர் மணமகனுக்கு விலையுயர்ந்த நகை ஒன்றைப் பரிசளிக்க விரும்பினார். மணமகன் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பணக்கார நண்பர் காந்தியடிகளிடம் வந்து ‘இவன் இப்படியே பிடிவாதம் பிடிக்கிறான். பரிசாக்கொடுப்பதை வாங்குவதில்லை’ எனக் குறைபட்டுக்கொண்டார்.

காந்தியடிகள் அந்த நகையைப் பார்த்தார். அதன் சிறப்பைப் கூறிப்பாராட்டினார். ஆனால் மணமகன் விரும்பாதபோது அப்பரிசை அளிக்கக்கூடாது என்ற அவருடைய கருத்தையும் கூறினார்.

பாவம், செல்வந்தர் மிகவும் வருத்தப்பட்டார். என்ன செய்ய முடியும்? கடைசியில், ‘சரி நல்லது, என் நகையைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்’ என்றார்.

‘இப்பொழுதுதான் இது ஹரிஜனங்களுக்குச் சொந்தமாயிற்றே, திருப்பித் தரமுடியாது’ என்றார் காந்தியடிகள்.

பாவம்! பணக்கார்ர் ஏமாற்றமடைந்தவராய் அடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். என்ன செய்வது, வெளியிலும் சொல்லிக்கொள்ளமுடியாது. அரைமனதுடன் திரும்பினார்.

ஆனால், அடிகள் அவருடைய மனதை நன்றாக அறிந்திருந்தார். சிறிது நேரம் கழித்து ‘நகையைக் கொண்டுபோகலாம். அதன் பெறுமானத்ஐப் பணமாக ஹரிஜன் நிதிக்கு அளித்து விட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

மறுநாள் நகைக்குப் பதிலாக அதன் பெறுமானத்தைக் காட்டிலும் கூடுதலான தொகைக்கு ஒரு ‘செக்’ கிடைத்துவிட்டது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 13, 2015 6:16 am

4. சொல், நான் எவ்வளவு கீழ்படிந்துள்ளவனாய் இருக்கிறேன்


1947 - ம் வருடம் பீகாரிலுப் வகுப்புவாத்த் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அங்கு அமைதியை நிலைநாட்ட காந்தியடிகள் சென்றார். ஒருபக்கம் இவ்வேலை நடந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் தம் அன்றாட வேலைகளையும் கவனித்து வந்தார். மனுகாந்தியும் அவருடன் தான் இருந்தாள். அவ்வப்போது அவளைப் பரீட்சிப்பதிலும் அடிகள் தவறுவதில்லை. அன்று கீதையின் மூன்றாவது, ஐந்தாவது அத்தியாயங்கள் வாய்மொழியிலும், எழுதுவதிலும் தேர்வு நடத்தினார். இரண்டிலும் அவள் வெற்றிப் பெற்றாள். காந்தியடிகள் மனுவிடம், உன்னைக்காட்டிலும் என்க்குத்தான் அதிக மகிழ்ச்சி; ஏனென்றால் தேர்வில் நான் வெற்றிப்பெற்றேன் என்றார்.

மனு, ‘உழைப்பு என்னுடையது, ஆனால் பெருமையை நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்களே!’ என்றாள்.

காந்தியடிகள் சிரித்துக் கொண்டே, ‘ஆனால் நான் இழிவையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தேன் அல்லவா? உனக்கோ அப்படி இல்லை’ என்றார்.

இம்மாதிரி நகைச்சுவையுடன் பேசிக்கொண்டே காந்தியடிகள் உடனே வங்காளப் பாடத்தை எழுத உட்கார்ந்துவிட்டார். அதை சகோதர் நிர்மல் பாபுவிடம் காண்பித்தார். சற்று நேரத்திற்கு முன் தேர்வாளராக இருந்தவர் சிறிது நேரத்திற்குள் மாணவராக மாறிவிட்டார்.

முதல் நாள் இரவு 2.30 மணிக்கு எழுந்த அவர் அதன் பின் தூங்க முடியவில்லை. மக்களுக்குத்தாம் நினைப்பதை எப்படிப் புரியவைப்பது என்பதையே யோசித்துக்கொண்டிருந்தார் அவர். இருந்தபோதிலும் அவர் களைத்துப் போகவில்லை. எல்லா வேலைகளும் முறைப்படி நடந்தன. திருவாளர்கள் ஷா நவாஸ் கான், கான் அப்துல் காபார்கான் முதலியோருடன் பேசிக்கொண்டிருந்தார். அன்று விசேஷமாக மனுவைப்பற்றிப் பேச்சு வார்த்தை நடைப்பெற்றது. குடும்பத்தைப்பற்றிய முழுவரலாறும் கூறிமுடித்தார்.

பின்னர் உடம்பு தேய்த்து விடும்போது, ‘கான் சாஹிபுக்கும், ஷா நவாஸூக்கும் எல்லா விஷயமும் தெரியப்படுத்துவது என்னுடைய கடமை. ஆனால், அவர்களோ மிகுந்த பக்தியுடையவர்கள். என்னிடத்தில் உள்ள கெட்ட குணங்களைக் காண விரும்புவதே இல்லை. நேரம் கிடைத்த போதேல்லாம் நீ அவர்களிடம் பேசினால் உனக்கும் உலக விஷயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும். என் மீது நிறைந்த பக்தியுடையவர்கள் காட்டிலும், என் குறைகளைக் காண்பவர்களை நான் பெரிதும் விரும்புகிறேன். இதில் தான் என்னுடைய நன்மை இருக்கிறது. இதனால், நான் வழி தவறிப்போகிறேனோ என்று எண்ணிப்பார்க்க வாய்ப்பு ஏற்படுகிறது’ என்று மனுவிடம் சொன்னார்.

காந்தியடிகள் இரவு 2.30மணியிலிருந்து விழித்துக் கொண்டிருந்தார் என மனுவிற்குத் தெரியும். ‘தாங்கள் இப்பொழுது ஓய்வெடுப்பது நல்லது. 2.30 மணியிலிருந்து விழித்துக்கொண்டிருக்கிறீர்கள். எனக்கு உலக அறிவைச் சொல்லிக்கொடுக்கும் பொறுப்பை வேறு மேற்கொண்டிருக்கிறீர்கள். இந்த பாவம் எல்லாம் எனக்கே சாரும்’ என மனு கூறினாள்.

காந்தியடிகள் இதற்கு இசைந்தார். இருபது நிமிடங்கள் வரை தூங்கினார். பிறகு விழித்தவுடன், ”பார், உன் ஆலோசனைப்படி நடந்ததால் இப்பொழுது நான் புத்துணர்வு பெற்று சுறுசுறுப்பாக இருக்கிறேன். சொல், ‘நான் எவ்வளவு கீழ்படிதலுள்ளவனாய் இருக்கிறேன்’ என்று பகர்ந்தார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்  - Page 2 Empty Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum