Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அப்பா அன்பு, சுதந்திரமும், அக்கறையும்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
அப்பா அன்பு, சுதந்திரமும், அக்கறையும்
அப்பாவைப் பத்தி எழுது,
அப்பாவைப் பத்திஎழுதுன்னா என்ன எழுதுவது?
–
அப்பாவின் நக்கல் நையாண்டிகளுக்கு ஆளாகி
இருந்தால் தெரியும் என் தர்மசங்கடம்!
–
அதீத நுண்ணுணர்வு மற்றும் அழகியலுடன் எதையாவது
நான் வலிந்து எழுதி திருப்தி கொள்ள நினைத்தால்,
அப்பா கண்முன் வந்து, அசடே என்று சொல்வது போல
இருக்கிறது.
–
ஒரு தெனாவட்டான தன்னம்பிக்கையையும், அப்பாவைத்
தொடர்புபடுத்தி முன்னிறுத்திக் கொள்வதில் ஒரு
எச்சரிக்கை கலந்த தயக்கத்தையும் ஒருசேர அளித்தவர்
அப்பா, இரண்டுக்காகவும் அவருக்கு மனமார நன்றிதான்
சொல்லத் தோன்றுகிறது.
–
அப்பாவிற்கு நம்மை ரொம்பப் பிடிக்கும், நம் மீது பாசம்
பெருமையும் உண்டென்று நம்பும் அதே நேரத்தில், அவருக்கு
தகுதியான பிள்ளை இல்லையோ என்று நெஞ்சின் ஓரம்
எப்போதும் ஒரு பிறாண்டலையும் விட்டுச் சென்றிருக்கிறார்.
–
நாமாக விரும்பி எது செய்தாலும் அப்பா அன்புடன் தட்டிக்
கொடுப்பார் என்பதில் ஐயமில்லை. ஆனாலும், ஒருமுறை
இபபடிச் சொன்னார். ‘இந்தக் கூத்தாடிகள்தான் தான் ஆடும்
கூத்துகளைக் குழந்தைகள் முன் ஆடிக்காட்டி அதைத் தவிர
வேறு தொழிலுக்குப் போகாதவாறு செய்து விடுகின்றனர்’
–
குழந்தைகளைச் சுதந்திரமாக அவர்கள் இயல்புக்கு விட்டு
விட வேண்டும் என்ற ரீதியில் ஏதோ சொன்னார். இது மனதில்
ஆழமாக பதிந்து விட்டது.
–
ஆனாலும் ஆறுதல் என்னவென்றால் பெரிய அபிலாஷைகள்
ஆசைகள் எதையும் எங்கள் மீது திணிக்கவில்லை. ஒரு முறை
கல்லூரி முடித்து நான் வெட்டியாகத் திரிந்து கொண்டிருந்த
காலத்தில், திடீரென்று ஒருநாள், ‘நீ. ஐ.ஏ.எஸ். ஆகுறியாம்மா.
எனக்க ஆசையா இருக்கு’ என்றார்.
–
‘அய்யோ அப்பா, என்ன ஆச்சு உஙகளுக்கு’ என்று பதறிப்
போய் எதையோ பேசி பேச்சை மாற்றி விட்டேன். எதையுமே
கேட்காத மனுஷர் இருந்திருந்து இப்படியா கேட்பார்?
வசூல்ராஜா மாதிரி ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்று நானும்
நினைத்திருந்தால் என்ன ஆகி இருப்பேன்?

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: அப்பா அன்பு, சுதந்திரமும், அக்கறையும்
இந்த மாதிரியெல்லாம் இப்போது சற்றும் எதிர்பாரா வகையில்
அப்பாவைப் பற்றி மனதில் புதைந்து போன நினைவுகளை
மீட்டெடுப்பது.. குழந்தைகள் தாம்!
–
ஒரு சனிக்கிழமை காலை அப்பா ஏதோ கூட்டத்துக்குக் கிளம்பும்
போது முன்னறையில் உட்கார்ந்து ஜ்யோமெட்ரி வரைந்து
கொண்டிருந்தேன். அப்பா மதிய உணவுக்கு வரும் வரை அந்தப்
பாடத்தில் வேலை இருந்தது. நான் மும்முரமாக வரைந்து
கொண்டிருந்ததைப் பார்த்து அருகில் வந்த அப்பா, ‘நான்
காலையில புறப்படும் போது படிச்சிக்கிட்டிருந்தே. இன்னும்
முடியலையா’ என்று அருகில் வந்து தலையைத் தடவிக் கொடுத்து
விட்டு போனது பசுமையாக நினைவில் இருக்கிறது.
–
அதில் ஒரு கணக்கு கூடத் தப்பாகாமல் அடுத்த நாள் டீச்சரிடம்
பாராட்டு வாங்கியதுகூட நினைவில் இருப்பதற்குக் காரணம்
அப்பாதான்.
–
பத்தாவது வகுப்பு வரை, தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்ததும்,
அப்பா வீட்டில் இருந்தால் கண்டிப்பாக வினாத்தாளை வாங்கி
கேள்வி கேட்பார். பதில் சொல்ல வேண்டும்.
–
தமிழ், வரலாறு இரண்டும் அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும்.
மற்ற பாடங்களிலும் ஆர்வத்துடன் வினாக்களைப் படித்து பதில்
கேட்பார்.
சமர்த்தாகச் சொல்லி முடித்தால் குட் என்று தோளைத் தட்டி விட்டுப்
போய்விடுவார்.
–
பத்தாவதில் ஒருமுறை வரைபடத்தில் பெஷாவர் நகரத்தை
எங்கே மத்தியப் பிரதேசத்தில் குறித்து வைத்திருந்தேன். தலையில்
அடித்துக் கொண்டு அக்பர் ஆண்ட நகரங்களை எல்லாம், மனக்
கண்ணி்ல பார்த்தபடி கறித்துக் காண்பித்துச் சொல்லிக் கொடுத்தார்.
–
எனக்கு ஹிஸ்டரி பிடிக்காது என்று சொன்னபோது வியந்து
‘History is c fascinating subject. ஆர்வமாக படி; ரொம்பப்
பிடிக்கும்’ என்று சொன்னார். அதிசயித்த தருணம் அது.
(அக்கா வரலாற்றில் முதுநிலைப் பட்டம் வாங்கினாள்)
–
ஒருமுறை ஒரு பொல்லாத கணக்கு டீச்சர் புதிதாகச் சேர்ந்திருந்தார்.
மாதாந்திரத் தேர்வை மிகவும் கடினமாக வைத்து வகுப்பில்
ஒன்றிரண்டு பேரைத்தவிர எல்லோரையும் தோல்வியடையச்
செய்திருந்தார். நான் நூற்றுக்கு முப்பது வாங்கி இருந்தேன்.
–
நண்பர்கள் எல்லாம் வீட்டில் பயங்கரமாய் அடி விழும் என்று அழுதழுது
முகம் வீங்கியதைப் பார்த்து நானும் ஒப்புக்கு அழுதேனே தவிர
சுத்தமாக பயம் இல்லை. கொஞ்சம் வெட்கமாக வேண்டுமானால்
இருந்தது.
–
வீட்டில் வந்து தேர்வுத் தாளை நீட்டி பாவமாய் முகத்தை வைத்துக்
கொண்டேன். அப்பா சிரித்துக் கொண்டே, ‘என்ன ரொம்ப நல்லாப்
படிக்கிறோம்னு கொழுப்பாயிடுச்சா’ என்றபடி சிரித்துக் கொண்டே
கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.
–
பின்பு வழக்கம் போல் ‘இட்ஸ் ஆல்ரைட், அடுத்த தடவை நல்ல மார்க்
வாங்கு’ என்று போய்விட்டார்.
–
பள்ளி, கல்லூரியில் சுற்றுலா என்று கேட்டால் மறுக்காமல் அனுப்பி
வைப்பார். ‘நாமதான் எங்கும் அழைத்துப் போவதில்லை.
நண்பர்களுடன் போய் வரட்டுமே’ என்று நினைப்பாரோ என்னவோ,
வெகு கவனத்துடன் விவரம் எல்லாம் கேட்டுக் கொண்டுதான்
அனுப்புவார்.
–
திருமு்பும்போது ரயில் நிலையத்தில் தவறாமல் யாரேனும்
இருப்பார்கள் வீட்டுக்கு அழைத்துப் போக.
–
கோவையில் கல்லூரிக்குச் சேரும்போது கூடவே வந்து சேர்த்து விட்டு
திரும்பி வந்தார். முதல் மூன்று தடவை வீட்டுக்கு வர நேர்ந்த போது
கோவை வரை வந்து அழைத்துக் கொண்டு திரும்பி வந்ததன்
அருமையெல்லாம் இப்போதுதான் புரிகிறது.
–
சுதந்திரமும் அக்கறையும்தான் அன்பு கொள்வதன் அடிப்படை
என்பதை எத்தனை அப்பாக்கள் மகள்களுக்கு இயல்பாக
விதைக்கிறார்கள்.
–
————————————————-
– தீபலட்சுமி ஜெயகாந்தன்
குமுதம்

Similar topics
» அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!
» அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!
» அன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு,
» அன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு
» அக்கறையும் அளவோடு
» அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!
» அன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு,
» அன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு
» அக்கறையும் அளவோடு
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum