Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி
Page 1 of 1 • Share
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி
ஆந்திர மாநிலம், குனேரு ரயில் நிலையம் அருகே ஜக்தல்பூர்-
புவனேசுவரம் செல்லும் ஹிராகண்ட் விரைவு ரயிலின் 9 பெட்டிகள்
தடம் புரண்டதில் 39 பேர் பலியாகினர். 69 பேர் காயமடைந்தனர்.
-
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரிலிருந்து, ஒடிஸா மாநிலம்
புவனேசுவரம் நோக்கி ஹிராகந்த் விரைவு ரயில் புறப்பட்டது.
இந்த ரயிலில் ஆந்திரம், ஒடிஸா, பிகார் ஆகிய மாநிலங்களைச்
சேர்ந்த பயணிகள் அதிக அளவில் பயணித்தனர்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு 11 மணிக்கு ஆந்திர மாநிலம்,
விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள குனேரு ரயில் நிலையம் அருகே
ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த ரயிலின் 9 பெட்டிகளும், ரயில் என்ஜினும் எதிர்
பாராதவிதமாக தடம் புரண்டன.
மீட்புப் பணிகள் தீவிரம்:
தகவலறிந்த ரயில்வே போலீஸாரும், மாவட்ட நிர்வாகத்தினரும்
மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை
மேலும் விரைவுப்படுத்த தேசியப் பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த
100 வீரர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒடிஸா பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவ இடம் விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் 39 பயணிகளின்
உயிரிழப்பை உறுதி செய்தனர். மேலும் 69 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் விசாகப்பட்டினம், பார்வதிபுரம் ஆகிய பல்வேறு
இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரயில் சேவைகள் பாதிப்பு: இந்த விபத்தால் ராயகடா மற்றும்
விஜயநகரம் வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும்
சில ரயில்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.
மாவோயிஸ்டுகளின் சதியா?: குனேரு ரயில் நிலைய தண்டவாளத்தில்
விரிசல் ஏற்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று ரயில்வே
துறை சந்தேகிக்கிறது.
இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
ஹிராகண்ட் விரைவு ரயில் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு
முன்னர் அவ்வழியாக சென்ற மற்ற ரயில்களுக்கு எவ்வித பாதிப்பும்
இல்லை.
எனவே விபத்து நடைபெற்ற பகுதி நக்ஸல் தீவிரவாதிகள் ஆதிக்கம்
நிறைந்த பகுதி என்பதாலும், குடியரசு தினம் நெருங்குவதாலும்
அமைதியை சீர்குலைக்க தீவிரவாதிகள் தீட்டிய சதியா? அல்லது
தண்டவாளத்தை பராமரிப்பதில் அதிகாரிகளின் கவனக் குறைவா?
என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள்
தெரிவித்தனர்.
ஒடிஸா மறுப்பு: ஹிராகண்ட் ரயில் தடம் புரண்டதன் பின்னணியில்
நக்ஸல்களின் சதி இருப்பற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்று
ஒடிஸா மாநில காவல் துறை டிஜிபி கே.பி. சிங் தெரிவித்தார்.
பிரதமர் இரங்கல்:
இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி
இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒடிஸா, ஆந்திர முதல்வர்கள் இரங்கல்: ரயில் விபத்தில் உயிரிழந்தோரின்
குடும்பத்தினருக்கு ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அனுதாபங்களை
தெரிவித்துள்ளார்.
அதேபோல் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று
மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார்.
மீட்புப் பணிகள், விபத்து நடந்த பகுதியில் உள்ள சூழல் ஆகியவை
குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம்,
சந்திரபாபு நாயுடு தொலைபேசி வாயிலாக விவரித்தார்.
மத்திய அரசு, ஆந்திர அரசு இழப்பீடு: விபத்தில் உயிரிழந்தோரின்
குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு
தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா
ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர்
சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார். அதேபோல், ஆந்திர அரசின் காப்பீட்டுத்
திட்டத்தின் கீழ் ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு
தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு
தெரிவித்தார்.
-
-------------------------------------
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» குண்டு வைத்து ரயில் பாதை தகர்ப்பு : பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் பாய்ந்தது : 76 பேர் பலி!
» தடம் மாறிய ரயில்
» ரஷ்யா மெட்ரோ ரயில் நிலையங்களில் பயங்கர குண்டு வெடிப்பு : 10 பேர் பலி
» தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்: வசிஷ்டா ஜோரி
» நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!
» தடம் மாறிய ரயில்
» ரஷ்யா மெட்ரோ ரயில் நிலையங்களில் பயங்கர குண்டு வெடிப்பு : 10 பேர் பலி
» தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்: வசிஷ்டா ஜோரி
» நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum