Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மார்ச் 16-இல் தமிழக பட்ஜெட்
Page 1 of 1 • Share
மார்ச் 16-இல் தமிழக பட்ஜெட்
தமிழக சட்டப் பேரவை வரும் 16-ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் வரும் நிதியாண்டுக்கான (2017-2018) நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் டி.ஜெயகுமார் தாக்கல் செய்கிறார்.
மேலும், வரும் 23-ஆம் தேதியன்று முன்பண மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும் என்றும் சட்டப் பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் புதன்கிழமை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக சட்டப் பேரவையின் அடுத்த கூட்டத்தை, வரும் 16-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள சட்டப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார்.
வரும் நிதியாண்டுக்கான (2017-2018) நிதிநிலை அறிக்கையை அன்றைய தினம் பேரவைக்கு அளிக்க வேண்டுமென்றும் நிதி ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் வரும் 23-ஆம் தேதியன்று பேரவைக்கு அளிக்கப்பட வேண்டுமெனவும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், நிகழ் நிதியாண்டுக்கான (2016-2017) இறுதி துணை நிதிநிலை அறிக்கையும் வரும் 23-ஆம் தேதியன்று பேரவைக்கு அளிக்கப்படும் என தனது அறிவிப்பில் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானமும்-அரசியல் சூழலும்.... பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப் பேரவை கூடவுள்ளது. இந்த நிலையில், சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபால் மீது திமுக சார்பில் ஏற்கெனவே நம்பிக்கையில்லாத் தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை எடுத்துக் கொள்வதா? அல்லது வேண்டாமா? என்பது குறித்த வாக்கெடுப்பு பேரவைக் கூட்டம் தொடங்கியதும் எடுத்துக் கொள்ளப்படும்.
ஒரு தீர்மானத்தை பேரவையில் எடுத்துக் கொள்வதற்கு 35 சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த எண்ணிக்கையைவிட, திமுக உறுப்பினர்கள் அதிகளவு இருப்பதால் அவர்கள் அளித்துள்ள தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
விவாதத்துக்கு எடுப்பதாக முடிவு செய்யப்பட்ட தினத்தில் இருந்து ஏழு நாள்களுக்குள் அது பேரவையில் எடுக்கப்படும். அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது, பேரவையில் அவைத் தலைவர் இருக்க மாட்டார்.
அவருக்குப் பதிலாக, பேரவை துணைத் தலைவர் அவையை நடத்துவார்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: மார்ச் 16-இல் தமிழக பட்ஜெட்
ஓ.பி.எஸ். அணி: திமுக அளித்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒருபுறமிருக்க, தண்ணீர் தட்டுப்பாடு, வறட்சி, தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் விவகாரம் உள்ளிட்ட பல முக்கியப் பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் மிக முக்கியமாக, அதிமுகவுக்குள் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணி உருவாகியுள்ளது. அவரது அணிக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது.
அவர்கள் சட்டப் பேரவையில் எதுபோன்ற பிரச்னைகளை முன்வைத்து அரசின் கவனத்தை ஈர்க்கப் போகிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது. ஓ.பி.எஸ்., தலைமையில் தனியாக அணி உருவான பிறகு முதல் முறையாக பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதனால், இந்த அணியினரும், திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களும் பேரவையில் ஆளும் கட்சிக்கு பெரும் நெருக்கடிகளைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்ற கோரிக்கையை ஓ.பி.எஸ். அணியினர் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். இதே கோரிக்கையை பேரவையில் அவர்கள் எதிரொலிப்பார்கள்.
முதல் நிதிநிலை அறிக்கை: எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை தனது முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளது.
மீனவளத்துறை அமைச்சராக இருந்த டி.ஜெயகுமாருக்கு கடந்த 23-ஆம் தேதி நிதித் துறையும் அளிக்கப்பட்டுள்ளது. நிதித் துறை பொறுப்பை ஏற்றுள்ள அவரும் முதல் முறையாக தனது நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எத்தனை நாள்கள்?: நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் வரும் 20-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் நடைபெறும். ஒருவார காலம் வரை நடைபெறும் இந்த விவாதங்களுக்கு நிதியமைச்சர் டி.ஜெயகுமார் பதிலளித்து உரையாற்றுவார்.
இதன் பின், சட்டப் பேரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு துறை வாரியான மானியக் கோரிக்கைகளுக்காக மீண்டும் கூடும்.
நிதிநிலை அறிக்கை, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் ஆகியவற்றின் மீதான விவாதங்களை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து வரும் 16-ஆம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
-
தினமணி

Similar topics
» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
» மார்ச் 10-ல் வெளியாகிறது 'மாநகரம்'
» மார்ச் 1 முதல் ரயில்களில் முன்பதிவுப் பட்டியல் ஒட்டப்படாது: பயணிகள் எதிர்ப்பு
» பழைய காசோலைகள் (Cheque) காலக்கெடுவை மார்ச் 31-ம் தேதிக்கு மாற்றம்
» மார்ச் மாதம் வரை ரெயில் டிக்கெட்டுக்கு சேவை கட்டணம் கிடையாது

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum