தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஹைபுன் கவிதை

View previous topic View next topic Go down

ஹைபுன் கவிதை Empty ஹைபுன் கவிதை

Post by ந.கணேசன் Tue May 17, 2016 7:02 am

ஹைபுன் : குடை…!!

இந்தப் பூமி அதிகம் வெப்பமடையாமல் பாதுகாப்பதற்காக மரம்செடி கொடிகள் எல்லாம் குடை பிடித்து நிழல் கொடுக்கின்றன. உயிரினங்கள் கடுமையான வெப்பத்திலிருந்து, தற்காத்துக் கொள்கவதற்காக நிழல் தேடி ஒதுங்கி நின்று ஆசுவாசம் பெறுகின்றன. வயதானவர்கள் கையில் குடை வைத்துக் கொண்டே நடைபழகுகிறார்கள். வெயிலுக்கு நீ குடைப் பிடித்துப் போவதை நான் பார்க்கவில்லை மழைக்கு நீ குடைப் பிடித்துப் போவதை நான் பார்க்கவில்லை எப்பொழுதும் எடுத்து விரித்துப் போகாமல் எதற்காக வைத்திருக்கிறாய் கைப்பையின் உள்ளே வண்ணக்குடை? அது உன் பாதுகாப்பிற்காகத்தானே?

எடுத்துக் குடையை விரி
இருவரையும் இணைக்கும்
மழைக்கு நன்றி சொல்வோம்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஹைபுன் கவிதை Empty Re: ஹைபுன் கவிதை

Post by ந.கணேசன் Fri May 20, 2016 6:32 am

சுமை…!!
*
பலாமரத்திற்கு பலாப்பழம் சுமை. மாமரத்திற்கு மாங்கனிகள் சுமை. தென்னைக்கு இளநீர்க் காய்கள் சுமை. காய்க்கும் மரங்கள் எல்லாம் தாய்மைக் குணம் கொண்டவை என்பதால், அவைகள் மகரந்தச் சேர்க்கையால் சூல் கொண்டு பூவாகி, பிஞ்சாகி, காயாகி, பழமாகிச் தொங்குகின்றன. பெண்ணே! நீ இயற்கையின் படைப்பில் தாய்மையின் வசீகரமான அழகைப் பெற்று திகழ்கின்றாய். இயற்கைச் சுமப்பதை விட கூடுதாய், நீ வயிற்றிலே சுமக்கிறாய் இடுப்பிலே சுமக்கிறாய் தலையிலே சுமக்கிறாய் பூரணமாய் அனுபவிப்பவளுக்குத் தானே தெரியும்? அந்த சுமையின் அந்தரங்கம்.

கருவறையின் சுமை
தாய்மையின் உச்ச சுகம்
பெண்ணிற்கு பெருமை
*

ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஹைபுன் கவிதை Empty Re: ஹைபுன் கவிதை

Post by ந.கணேசன் Thu Jun 23, 2016 6:33 am

ஹைபுன் மனோசக்தி…!!

இக்கணத்தில் நிகழும் சம்பவங்களும் உண்மைகளும் மனதில் நினைவு கொள்ளாமல், எப்பொழுதோ நடந்த சம்பவங்களை மறக்க முடியாமல் அசைப்போட்டு மனம் கலங்குகின்றது. அத்தவறுகளிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவிக்கிறது. கொஞ்ச காலம் கழித்து அதிலிருந்து விடுபடும் யுத்தியை மனமே உருவாக்கி தருகிறது அதுவே மீண்டும் வழக்கம்போல இயல்பாக செயல்படத் துவங்குகின்றது. இதைத் தான் மனோசக்தி என்று சொல்கிறார்கள்.
திசை தெரியாமல் தவித்தது
மீண்டு திரும்பியது இருப்பிடம்
கடல் கடந்து சென்ற பறவை
ந.க.துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஹைபுன் கவிதை Empty Re: ஹைபுன் கவிதை

Post by ந.கணேசன் Tue Aug 16, 2016 6:42 am

தந்திரங்கள்….!!

அசம்பாவிதமாக நடக்கின்ற செயல்கள் யாவும் அதிர்ச்சியைத் தருகி்ன்றது. அச்சம்பவங்கள் யாவும் எவருக்கும் அதிர்ச்சியாகத் தெரிவதில்லை. வேடிக்கையான சம்பவமாகவே பாவிக்கிறார்கள். அசட்டையான நடவடிக்கைகள் கண்டு கேலியாகப் பேசுகிறார்கள். இச்சமூக நிகழ்வுகள் யாவும் சர்க்கஸ் விளையாட்டு போன்று கண்டு களிக்கிறார்கள். அச்சம்பவங்கள் பற்றி கொஞ்ச நாள்கள் பேசுகிறார்கள். பிறகு, அதனை மறந்தே போகிறார்கள். மக்களின் இம்மனநிலையினை அறிந்துள்ள அரசியல்வாதிகள் சில இக்கட்டான சூழ்நிலையில், மக்களின் மனதை திசைதிருப்புவற்காக, இத்தந்திரங்களைப் பயன்படுத்தி வெற்றி காண்கிறார்கள்.

காலடி வைத்து திரும்புகின்றனர்
யார் என்றும் முகம் தெரியாது?
நிலாவிற்கு நினைவிருக்குமா?
ந.க.துறைவன்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஹைபுன் கவிதை Empty Re: ஹைபுன் கவிதை

Post by ந.கணேசன் Tue Aug 23, 2016 6:19 am

நொடியில்..!!
*
மகிழ்ச்சியான நேரம் என்று ஒன்றிருக்கிறதா? துக்கமான நேரம் என்று ஒன்றிருக்கிறதா? இரண்டுமே இல்லை. எல்லாமே மனம் தீர்மானிப்பது தானே தவிர வேறொன்றுமில்லை. ஒரு நொடியிலே இரண்டும் மாறி மாறி நிகழ்ந்தேறும். இதனை நேரடியாக அனுபவத்திலே காணலாம். இரவு – பகல் அமாவாசை, பௌர்ணமி என எல்லாம் மாறி மாறி வருவது போன்று தான் மகிழ்ச்சியும் துக்கமும் வாழ்வில் நிகழ்ந்தேறி வருகின்றன. இயற்கை தகவமைத்துள்ள செயல்பாட்டு முறைப்படியே மனித மனமும் செயல்படுகின்றன என்பதை இதன் வாயிலான அறிந்துக் கொள்ள முடிகின்றது.

பூமியின் உருண்டை வடிவில்
காலம் வெளி கணக்கிட்டு
கடிகாரம் கண்டான் மனிதன்.
ந.க.துறைவன்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஹைபுன் கவிதை Empty Re: ஹைபுன் கவிதை

Post by ந.கணேசன் Thu Sep 08, 2016 6:08 am

கலவை.

மற்றவர்கள் வாழ்கின்ற வாழ்க்கை என்னுடையதல்ல. நான் வாழ்கின்ற வாழ்க்கையே எனக்கு சொந்தம். - என்று எல்லோருமே நினைக்கின்றார்கள். அதிலென்ன தவறு இருக்கிறது? ஒவ்வொருவருக்குமான ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதைத் தான் அவர்கள் வாழ வேண்டியிருக்கிறது. இந்தியக் கலாச்சாரம், பண்பாடு, மக்களை எப்படி வாழ வேண்டுமென்று ஏராளமான ஆன்மீக நியதிகளை வகுத்தளித்துள்ளது. அதில் சரியான வழிக்காட்டுதலும் உண்டு. மரபு மீறிய தவறாக நெறிமுறைகளும் உண்டு மேலைக் கலாச்சாரம் சார்ந்துள்ள வாழ்க்கை முறைகளும் உண்டு. இந்தியக் கலாச்சார வாழ்க்கை என்பது கூட்டுக் கலவையான வாழ்க்கை முறையாகவே திகழ்கின்றது.

அடைக்கப்பட்ட இனிப்பான
மருந்து கலவையாய் இருக்கிறது
மனித சமூக வாழ் நெறிகள்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஹைபுன் கவிதை Empty Re: ஹைபுன் கவிதை

Post by முரளிராஜா Sat Sep 10, 2016 10:53 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஹைபுன் கவிதை Empty Re: ஹைபுன் கவிதை

Post by ந.கணேசன் Fri Sep 16, 2016 6:29 am

ஹைபுன்.

முரண்பாடுகள்.

எந்தவொரு பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும், அதில் இருவேறு கருத்துக்கள் உள்ளடங்கியிருக்கிறது. அதில் எது உண்மை? எது பொய்? என்று நிரூபிப்பது கடினமான காரியமாகும். வாழ்க்கை முழுக்கவுமே மனிதர்களிடையே இம்முரண்பாடுகள் மலிந்து காணப்படுகின்றன. பேச்சுக்கும் செயல்பாடுகளுக்கும் நடைமுறைக்குமான இம்முரண்பாடுகளை நேரிடையே கண்டறியலாம். முரண்பாடுகள் என்பது இயற்கையின் நியதியிலிருந்து தொடங்கி மனித வாழ்வின் எல்லை வரை தொடர்கின்றது. முரண்பாடுகள் இன்றி எதுவுமேயில்லை. முரண்பாடுகளோடு தான் சமூகமே வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

முரண்பாடுகளை வென்றெடுத்து தான்
முளைவிட்டு எழுகின்றன
மண்ணில் விதைக்கும் விதைகள்.
ந.க.துறைவன்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஹைபுன் கவிதை Empty Re: ஹைபுன் கவிதை

Post by ந.கணேசன் Fri Oct 28, 2016 3:21 pm

பரிமாற்றம்.

தமிழர்கள் கொண்டாடும் விழாக்களில் பெரும்பான்மையானது, தமிழர் கலாச்சாரத்திற்குப் புறம்பான அன்னியர்களின் கலாச்சார விழாக்களாகத் தானிருக்கிறது. அதையே தன்னுடைய விழாவாகக் கருதி பின்பற்றி கொண்டாடி மகிழ்கிறார்கள். நவீன மேலைநாகரீகம். இந்திய மொழி பேசும் மக்களின் கலாச்சாரப் பண்பாடுகள் புரிந்துக் கொள்ளாமை. மதத் தத்துவங்கள் சொல்லும் ஆசார நியதி நியமங்கள் என பலவற்றில் சிக்கிக் கொண்டமையே இதற்கு காரணம் என்றே சொல்லலாம். கொண்டாடப்படும் விழாக்கள் எல்லாம் தற்போது மதவிழாக்களாக மாறி வன்நெறி கலாச்சாரத் திருவிழாக்களாக மாறிவிட்டன.

கலாச்சாரத்தின் வெளிப்பாடு
அன்பு பரிமாற்றம் உறவின் நேசம்
நல்லிணக்கத்தின் விழிப்புணர்வு.
ந.க.துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஹைபுன் கவிதை Empty Re: ஹைபுன் கவிதை

Post by ந.கணேசன் Thu Dec 01, 2016 9:13 am

நித்தியக்கல்யாணி.

குழந்தைகள் தனக்கு தேவையான ஆடைகளைத் தானே தேர்வு செய்துக் கொள்கின்றனர். அம்மாவோ அப்பாவோ தேர்வு செய்யும் ஆடைகளை நிராகரிக்கவே செய்கின்றனர். அதற்காக அடம்பிடிக்கவும் செய்கின்றனர். குழந்தைகள் தனக்கான சுதந்திரத்தை உரிமையை விட்டுக் கொடுக்காமல் செயல்படுகின்றனர். இந்த பிடிவாத குணம் நல்லதா? கெட்டதா? என்பதை தெளிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது. குழந்தைகளின் இப்பிடிவாதப் போக்கை விட்டுப் பிடித்து கவனித்து வரவேண்டும் என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள். இப்போக்கு எதிர்காலத்தில் பின்விளைவுகளை எற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர்.

மரத்தின் நிழலில் வளர்ந்தது
கர்வமில்லாமல் பாதுகாப்பாய்
நித்திய கல்யாணி செடிகள்.
ந.க.துறைவன்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஹைபுன் கவிதை Empty Re: ஹைபுன் கவிதை

Post by ந.கணேசன் Mon Jan 09, 2017 6:04 am

நீர்த்துளிகள் முத்தாட…!!

பனிநீரில் இலையாட, குருவிகள் சிலிர்த்தாட. காற்றில் மலராட, நீர்த்துளிகள் முத்தாட, பசுக்கள் நடைபோட, கன்றுகள் பின் துள்ளாட, நடுங்கும் குளிரில் விடியற்காலை வெள்ளென வெளுக்கும் பொழுதில் விழித்தெழுந்தாயே மார்கழியே, உனை ஆண்டாள் துதிபாட, பக்தர்கள் பின்பாட, பனிசூழ்ந்த வெளியெங்கும் சூரியன் ஒளி பரப்ப, பறவைகள் படபடத்து எழுந்து பறக்க, பால்கறக்கும் பசுக்கள் நின்று புல்தின்று பால்சுரக்க, மாடுகள் வயலில் உழுது மணியசைக்க, உழவன் வயல் உழுது மனம்சலிக்க, பகல்போது துவங்கியது. கிராமம் தன்பணிகள் நிறைவேற்றிடவே விழிப்புற்று விழித்தெழுந்ததுவோ!!

குடிசைகளை நேசிக்கும்
கருணை உள்ளம் படைத்தவைகள்
மார்கழியில் மலரும் பூசணிகள்.

ந.க.துறைவன்
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஹைபுன் கவிதை Empty Re: ஹைபுன் கவிதை

Post by ந.கணேசன் Thu Mar 23, 2017 10:05 am

ஹைபுன்.

இலைகள் பசுமையாக இருக்கும் வரைதான் மரத்திற்கு மதிப்பு. அவைகள் உதிர்ந்து விட்டால் மதிப்பிழந்து விடும். இரட்டை இலை யாருக்கு என்று யார் தீர்மானித்தால் என்ன? தீர்ப்பு யார் சொன்னால் என்ன?. அவைகள் யாரிடம் இருந்தாலும், இனி அவைகள் மண்ணில் உதிர்ந்து மக்கிக் குப்பையாகப் போகப் போகிறது என்பது தானே உண்மை. இது தானே இயற்கையின் நியதி. விதி.

மண்ணில் உதிர்ந்து அழிந்தது
மீண்டும் துளிர்த்தது மரம்
இலை உதிர்காலம்.
ந.க.துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ஹைபுன் கவிதை Empty Re: ஹைபுன் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum