தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஸ்டாலின் வாழ்க்கை குறிப்பு

View previous topic View next topic Go down

ஸ்டாலின் வாழ்க்கை குறிப்பு Empty ஸ்டாலின் வாழ்க்கை குறிப்பு

Post by மகா பிரபு Sat Jan 05, 2013 8:59 am

[You must be registered and logged in to see this link.]

மனித
குல வரலாற்றில் வாழுங் காலத்தில் தெய்வமாகப் போற்றப்பட்டு, அவர்களின்
மரணத்துக்கு பின் சீடர்களாலும் எதிரிகளாலும் தூற்றப்பட்டவர்கள் வெகு சிலரே.

..
இத்தகையவர்களில்
ஒருவர் கவுதம் புத்தர். இவர் வாழ்ந்த காலத்தில் மன்னர்களும் மக்களும் இவரை
வணங்கிப் போற்றினர். ஆனால் அவரது மரணத்துக்குப் பின் அவரது சீடர்கள்
அவரின் போதனைகளைத் திரித்தனர். அவரை இழிவுபடுத்தினர்.புத்தரின்
போதனைகளுக்கு அசைக்க முடியாத எதிரிகளான இந்துக்களோ, அவர்களின் புனித
மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரமாக புத்தரைக் குறிப்பிட்டனர்.
இதெபோன்ற மற்றொரு மனிதர் ஸ்டாலின். அவர் வாழ்ந்து பணியாற்றியபோது வானளாவப்
புகழப்பட்டார். ஆனால் அவர் மறைந்த உடனேயே , அவர் ஒரு வில்லனாக
தூற்றப்பட்டார். இதற்கு குருஷேவ் தலைமை தாங்கினார். ஸ்டாலின் வாழ்ந்தபோது
குருஷேவ் அவரின் வளர்ப்பு நாய்போல குழைந்து, அவரை வானளாவப் புகழ்ந்தார்.


[You must be registered and logged in to see this link.]

இந்த
விஷயத்தை இந்த வாழ்க்கை வரலாற்று நூல் விரிவாக அலசுகிறது. உண்மை நிலை
அறியாத இந்திய மக்கள்., குருஷேவாலும் அவரது ஆதரவாளர்களாலும் ஸ்டாலின்
எவ்வாறு அவதூறு செய்யப்பட்டார் என்பதை இப்போது அறிந்து கொள்ளலாம்.


ஸ்டாலினை
குருஷேவ் ஏன் பழி கூறினார் என்பதைப் புரிந்து கொள்வது இப்போது எளிது.
வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னுக்கு இழுத்து முதலாளித்துவத்தை மீண்டும்
கொண்டுவருவதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார்; குருஷேவ் ஒரு
திருத்தல்வாதி; அவர் ஒருபோதும் மார்க்சியவாதியாக இருந்ததில்லை.
மார்க்சியத்தின் அடிப்படைகளைச் சீர்குலைக்கும் கொள்கையற்ற அரசியல்வாதியாகவே
அவர் இருந்தார்.


உலக
வரலாற்றில் ஸ்டாலினை ஈடுணையற்றத் தலைவராக ஆக்கியது எது? அவர் சோவியத்
யூனியனின் ஐந்து ஆண்டுத் திட்டங்களை அறிமுகம் செய்தது முதற்காரணம்.
உண்மையில், ஐந்து ஆண்டுத் திட்டங்கள் உலகத்துக்கு ஸ்டாலின் அளித்த
கொடையாகும். 1929 இல் உலகம் மிக மோசமான நெருக்கடியில் சிக்கித் தவித்தது.
முதலாளித்துவ நாடுகளில் தொழில் மற்றும் வேளாண் உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது.
இந்த நாடுகளின் மிகப் பெரிய நிறுவனங்கள் திவாலாயின. இந்தக்
காலகட்டங்களில்தான் முதலாவது ஐந்தாண்டு திட்டம் தொடங்கியது. ஒட்டுமொத்த
சர்வதேச சமூகமும் இந்தத் திட்டம் உதவாக்கரை என்று கணித்தது.


[You must be registered and logged in to see this link.]

ஆனால்
நான்கரை ஆண்டுகளிலேயே ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு எட்டப்பட்டுவிட்டதால்,
உலகமே வியந்து நின்றது.யாரெல்லாம் இந்தத் திட்டம் பற்றி அவதூறு
பேசினார்களோ அவர்களெல்லாம் புகழ்த்து பேசவும், எழுதவும் வேண்டியதாயிற்று.


பல
வெளிநாடுகளின் பிரதிநிதிகள் ரஷ்யாவில் பயணம் செய்தனர். இவர்களில்
பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் சில நாடுகளைச் சேர்ந்தவரக்ள்
இருந்தனர். " எங்கள் பயணத்தின் போது பிரம்மாண்டமான கட்டுமானங்களைக் கண்டு
நாங்கள் வியப்படைந்தோம்" என்று அவர்கள் கூறினர்.


ரவீந்தரநாத்
தாகூரும் ரஷ்யாவில் பயணம் செய்தார். ரஷ்யர்கள் கற்பிக்கும் புதிய
கலாச்சாரத்தை சோதித்துப் பார்க்க அவர் விரும்பினார். ஒரு ஆரம்பப்
பள்ளிக்குச் சென்றார். அவரது பேனாவை அங்கிருந்த குழந்தைகளிடம் காட்டி,
இதனை5 ரூபாய்க்கு வாங்கி 10 ரூபாய்க்கு விற்றால் எனக்கு என்ன கிடைக்கும்
என்று வினவினார். உடனடியாக அந்தக் குழந்தைகள் ஆறுமாதம் ஜெயில் கிடைக்கும்
என்றனர். ஒரு பொருளை வாங்கி அதிக விலைக்கு விற்பது குற்றமாக கருதப்பட்டது.
இதனால் அவர் மிகவும் கவரப்பட்டார்.


மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்ட காலத்தில் சோவியத் யூனியனின் பொதுவான பொருளாதார வளர்ச்சி இருமடங்கு உயர்ந்தது.

நாடுகள் -------------1929 ---- 1930 ----- 1931 ------ 1932 ------1933

அமெரிக்கா ----------100 ----- 80.7 ------ 63.1 ------- 59.3 -------64.9

பிரிட்டன் -------------100 ---- 92.4 ------- 83.8 ------ 83.8 -------- 86.3

ஜெர்மனி -------------100 ------- 88.3 ------- 73.7 ------- 59.8 -------- 66.8

பிரான்ஸ் --------------100 ------ 100.7 ---- 89.2 ------- 99.3 - ------- 77.4

சோவியத் யூனியன் -----100 ---- 129.2 ------ 161.9 ---- 184.7 ---- 201.6

[You must be registered and logged in to see this link.]
ஸ்டாலின்
இரண்டாவது சாதனை கட்சிக்கு எதிரானவர்களைக் களையெடுத்தது. இதனை குருஷேவ்
அவதூறாக குற்றஞ்சாட்டுகிறார்.பல சந்தப்பவாதிகளாலும்,
ஊசலாட்டக்காரர்களாலும், சோஷலிச எதிரிகளாலும் கட்சி ஆட்டிப்
படைக்கப்பட்டது.இதனால் நாடு அதன் தோளில் சுமத்திய வரலாற்றுக் கடமையை
நிறைவேற்ற முடியவில்லை. லெனினின் கருத்தை நினைவூட்டி ஸ்டாலின்
சொன்னார்."உள்நாட்டுப் போர் நடக்கும் திருப்புமுனையான இந்தக்
காலகட்டங்களில் கையப்படுத்தப்பட்ட முறையில் கட்சி அமைப்பு இருந்தால்தான்,
ராணுவக் கட்டுப்பாட்டை ஒத்த உருக்கு போன்ற ஒழுக்கம் இருந்தால்தான், பரந்த
அதிகாரங்களுடன் கட்டளையிடுவதாகவும் கட்சி உறுப்பினர்களின் ஒட்டுமொத்த
நம்பிக்கையைப் பெற்றதாகவும் கட்சி மையம் வலுவானதாக இருந்தால்தான்
கம்யூனிஸ்ட் கட்சி தனது கடமையைக் செய்ய முடியும்"

(லெனின் - தொகுதி பத்து -பக் 201)

[You must be registered and logged in to see this link.]

ட்ராட்ஸ்கி
தவிர, சோவியத் யூனியனிலிருந்து நாடு கடத்தப்பட்ட மற்ற அனைவரும் கைது
செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த விசாரனை
வெளிப்படையாக நடந்தது. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் தூதர்களும்,
அன்னாலூயி ஸ்றாங், டி.என்.ப்ரீத் போன்ற மேற்கத்திய முன்னணி நாளேடுகள்
மற்றும் இதழ்களின் பிரதிநிதிகளும் இந்த விசாரனையை கவனித்தனர்.


இந்த
விசாரனை திட்டமிட்ட நாடகம் எனப்படும் பொய்ப்பிரச்சாரத்தை
அம்பலப்படுத்தினர். ஆனால் சோவியத் யூனியனில் சோசலிசத்தை உடைத்தெறிய
வேண்டும் என்ற நோக்கத்துடனிருந்த முதலாளிகள் மட்டும் இந்தப் பொய்ப்
பிரச்சாரத்தை வேதவாக்கு போல நடத்தி வந்தனர்.


இந்த
மறைமுக சதி நீடித்திருந்தால், ஹிட்லரின் படைகள் சோவியத் யூனியனைத்
தாக்கியிருந்தால் என்ன நேரிட்டிருக்கும் என்பதை நாம், இப்போது கொஞ்சம்
நினைவு கூர்ந்து சிந்திக்க வேண்டும்.


அவரது
மூன்றாவது பெருமை போர்களில் பெற்ற வெற்றியாகும். முதலாவது உள்நாட்டு
யுத்தம் இரண்டாவது இரண்டாம் உலக யுத்தம். உள்நாட்டு யுத்தத்தின் போது
ராணுவத்துக்கான உணவுப் பொருளைக் கொள்முதல் செய்ய முழு அதிகாரத்துடன் தெற்கு
எல்லைப் பகுதிக்கு ஸ்டாலின் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஜாரிஸ்தான்
எல்லைப் பகுதிக்கு அவர் சென்றபோது அனைத்தும் குறைபாடுகளாக இருந்தன., இதனால்
அவர் ராணுவத்தை வெற்றிக்கு வழி நடத்தினார். இதன் மூலம் ஜாரிஸ்தானில்
போராடும் ராணுவத்தை வெற்றிக்கு வழி நடத்தினார். இதன் மூலம் ஜாரிஸ்தான்
எல்லைப் பகுதியில் செஞ்சேனையின் தலைவரானார்.


இரண்டாவது
உலக யுத்தத்தின் போது சோவியத் நாட்டின் உயர் அதிகார அமைப்பு ஸ்டாலினைப்
பாதுகாப்பு தலைமைப் பொறுப்பாளராக நியமித்தது. பின்னர் 1941 ஆகஸ்ட் 8இல்
அவர் தலைமைத் தளபதியாக்கப்பட்டார். வரலாற்றில் இதற்கு இணையான நிகழ்வு
இருப்பதாக் எனக்குத் தோன்றவில்லை. இந்தத் தேர்வு சரியானதுதான் என்பதையும்
வரலாறு நிரூபித்துவிட்டது.


ஆனால்,
ஒரு மனிதர் எவ்வாறு இவ்வளவையும் செய்து முடித்தார் என்ற வினாவுக்கு
விடையளிக்க வேண்டியுள்ளது. அடிப்படையில் ஸ்டாலின் ஒரு அடிப்படையான
மார்க்சியவாதி, அவரது பங்களிப்பு அவரின் தனிப்பட்ட விஷயமல்ல; மார்க்ஸ்,
ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் தத்துவங்களை அவர் விளக்கினார்; விவரித்தார்.
இதில் அவர் ஈடு இணையற்ற விளக்கவாதி. இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்
முதல்வாதம் பற்றிய அவரது கட்டுரை மார்க்சியத்தின் சாரமாகும். இதனையும்
ஏங்கெல்சின் டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலையும் படிப்பது மார்க்சியத்தை
முழுமையாகப் புரிந்து கொள்ளப் போதுமானதாகும்.


[You must be registered and logged in to see this link.]
ஸ்டாலின்
தவறுகள் செய்தார். எவர்தான் தவறுகளே செய்யாதவர்? "தவறுதல் மனித இயல்பு"
ஸ்டாலினும் மனிதர்தான். அவர் கடவுளோ தேவதூதரோ அல்ல. ஆனால் ஒரு மனிதரை
மதிப்பிடும் போது அவரது தவறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் , அவரது
மேன்மைகளையும் வரலாற்றுப் பங்களிப்பையும் இருட்டடிப்பு செய்வதும் சரியல்ல.
இந்தக் கோணத்திலிருந்து ஸ்டாலின் பற்றிய நிர்ணயிப்பைச் செய்தால், அவரது
காலத்தில் இருந்த எவரையும் விட அவர் பிரகாசிப்பார்.


அவரது
காலத்தில் வாழ்ந்த ரவீந்திரநாத் தாகூர், ஹென்றி பார்பஸ், ரோமன் ரோலண்ட் ,
ஜார்ஜ் பெர்னார்ட்ஷா, சிட்னேவெப், எச்.ஹி.வெல்ஸ் ஆகியோரும் மற்றவர்களும்
(இவர்களில் சிலர் ஸ்டாலினுக்கு கசப்பான எதிரிகளும் கூட) இந்த நூற்றாண்டின்
மாமனிதர்களில் ஸ்டாலினும் ஒருவர் எனப் புகழ்ந்து பாராட்டி யுள்ளனர்.


அவரது
பரம் வைரியான சர்ச்சில் சொன்னார்: " நமது முயற்சிகலுக்கும் உறுதிகளுக்கும்
ஸ்டாலினின் வாழ்க்கை மதிப்பிடற்கரிய உதாரணமாகும். இது வெறும் புகழ்ச்சியோ
உயர்வு நவிற்சியோ அல்ல. வரலாற்றில் பல வெற்றிச் சாதனையாளர்கள் உள்ளனர்.
ஆனால் அவர்களில் சிலர் மட்டுமே அரசியல்வாதிகள். அந்த வெற்றியாளர்களும்
போருக்கு பின் பல சோதனைகளை எதிர்கொண்டனர். அவர்களின் சாதனைகள் இந்தச்
சோதனைகளில் அடித்துச் செல்லப்பட்டன. .,..... ஸ்டாலின் புகழ் ரஷ்யாவுக்கு
மட்டும் சொந்தமானதல்ல; உலகின் மூலை முடுக்குகலிலெல்லாம் அது பரவும். நாம்
இந்த மாமனிதனுக்கு நெருக்கமாகவும் நண்பனாகவும் இருப்போமானால் இந்த உலக
நிகழ்வுகளை தைரியத்தோடும் நம்பிக்கையோடும் மேலும் முன்னெடுத்துச் செல்ல
முடியும் என்றெ எண்ணுகிறேன்.


[You must be registered and logged in to see this link.]

இனி என்ன சாதனை ஸ்டாலினுக்கு எஞ்சியிருக்கிறது?

எனது
சொந்த அனுபவத்தையே சொல்கிறேன். தெலுங்கானாவில் சண்டை நடந்து கொண்டிருந்த
பகுதிகளில் நான் கட்சிக் கல்விப் பிரிவில் பணியாற்றினேன். ஒரு சமயம், யுத்த
மைத்தில் தகவல் தொடர்பாளர் ஒருவர் தவறு செய்துவிட்டார். இதற்காக அவரின்
செயலாளர் அவரை விசாரனைக்கு அழைத்து கண்டிப்புடன் அறிவுரை கூறினார்:


எவ்வளவு
பெரிய தப்பு செஞ்சிருக்கேன்னு உனக்குத் தெரியுமா? இந்தத் தவறு மையத்துக்கு
சரி செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தலாம்; மையத்துக்கு இழப்பு ஏற்பட்டால்
தெலுங்கானா போராட்டம் தோல்வி அடையக் கூடும்; தெலுங்கானா போராட்டம்
தோல்வியடைந்தால், இந்தியப் புரட்சி தோற்றுப் போகலாம்; இந்தியப் புரட்சி
தோற்றுப் போனால் உலகப் புரட்சி தோற்றுப் போகலாம்; உலகப் புரட்சி தோற்று
போனால் ஸ்டாலின் தோற்றுப் போவார். தவறு செய்த அந்தத் தோழர் இந்த நீண்ட
உரையை பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் எந்தவித அசையும்
இல்லை. ஆனால் இந்தத் தவறு ஸ்டாலினை பாதித்துவிடும் என்று சொன்னவுடன் தனது
தவறை உணர்ந்து வருந்தினார். தொலை தூரத் தெலுங்கானாவில் இருந்த தோழர்களிடம்
கூட ஸ்டாலினின் பெயர் இவ்வாறு பெருமதிப்புப் பெற்றிருந்தது.


ஸ்டானினைப்
பற்றி எம்.ஆர்.அப்பன்.எழுதிள்ள வரலாற்று நூல் மிகுந்த ஆதாரபூர்வமாகவும்
வெளிப்டையாகவும் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியர்களுக்குத் தெரியாத
பல உண்மைகள் இதில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த நூல் படித்துப்
பயணடையத்தக்கது.


மக்களின் ஈர்ப்பு சக்தியாக சோஷலிசம் நீடிக்கும் வரை மாபெரும் புரட்சியாளரான ஸ்டாலின் பெயரும் நிலைத்து வாழும்.

[You must be registered and logged in to see this link.]


நந்தூரி பிரசாத ராவ்
tamilnadutalk.com @ சுரன்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஸ்டாலின் வாழ்க்கை குறிப்பு Empty Re: ஸ்டாலின் வாழ்க்கை குறிப்பு

Post by முரளிராஜா Mon Jan 07, 2013 8:17 am

ஸ்டாலின் வாழ்க்கை வரலாறை பகிர்ந்தமைக்கு நன்றி மகா பிரபு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum