Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
Page 5 of 17 • Share
Page 5 of 17 • 1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 17
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
First topic message reminder :
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 6:50 pm; edited 1 time in total
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நான் கல்லாதவன்
எனக்கு
வாழ்க்கைப் பாடம்
கற்றுக் கொடுத்தாய்
நாம் விளையாடுவது
கண்ணாம்பொத்தி
நான்
எங்கே போய் ஒளிய
நீ பிரகாசித்துக் கொண்டுள்ளாய்
எனக்குக்
காதல் சலித்து விட்டது
நான் எங்கு வர
கோயில்...
தேவாலயம்...
மசூதி...
கல்லறை...
எனக்கு
வாழ்க்கைப் பாடம்
கற்றுக் கொடுத்தாய்
நாம் விளையாடுவது
கண்ணாம்பொத்தி
நான்
எங்கே போய் ஒளிய
நீ பிரகாசித்துக் கொண்டுள்ளாய்
எனக்குக்
காதல் சலித்து விட்டது
நான் எங்கு வர
கோயில்...
தேவாலயம்...
மசூதி...
கல்லறை...
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
ஒளியானவனே
கொஞ்சம்
உன் ஒளியைக் குறைத்துக்கொள்
வெப்பமயமாகிறது உலகம்
உனக்கு
நான் அர்ச்சகன்
காதலிக்கு
நான் கடவுள்
பட்டம்
தானாகவே பறக்கட்டும்
நூலை விட்டுவிட்டேன்
கொஞ்சம்
உன் ஒளியைக் குறைத்துக்கொள்
வெப்பமயமாகிறது உலகம்
உனக்கு
நான் அர்ச்சகன்
காதலிக்கு
நான் கடவுள்
பட்டம்
தானாகவே பறக்கட்டும்
நூலை விட்டுவிட்டேன்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
என் காதலை மெச்சி
இறைவன்
தனங்களில்
பால் தந்தான்
நீயோ
எட்டி மரக் கட்டிலைப்
பரிசளித்தாய்
என் காதலுக்கு
தெய்வமே
நீதான்
தடைக் கல்
ஒவ்வொரு வினைக்கும்
சமமான எதிர்வினை உண்டாம்
என் காதலுக்கு
அது இல்லாமல் போனது
இறைவன்
தனங்களில்
பால் தந்தான்
நீயோ
எட்டி மரக் கட்டிலைப்
பரிசளித்தாய்
என் காதலுக்கு
தெய்வமே
நீதான்
தடைக் கல்
ஒவ்வொரு வினைக்கும்
சமமான எதிர்வினை உண்டாம்
என் காதலுக்கு
அது இல்லாமல் போனது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
என் இதயத்தை
வாங்கிக் கொண்டு
ஏமாற்றி விட்டாய்
கடன்காரன் போல
எனக்கான கைத்தட்டலில்
புகழ் உனக்கு
நீ
ஞாபகங்களைத் தொலைத்த
ஊமையாய்
உன் கொலுசும் மெளனமாக
என்னைக் கடக்கிறது
வாங்கிக் கொண்டு
ஏமாற்றி விட்டாய்
கடன்காரன் போல
எனக்கான கைத்தட்டலில்
புகழ் உனக்கு
நீ
ஞாபகங்களைத் தொலைத்த
ஊமையாய்
உன் கொலுசும் மெளனமாக
என்னைக் கடக்கிறது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
என் கவிதைகள்
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு கருவறை
ஒரு கருவறை
இறைவனைச்
சுமந்துகொண்டிருக்கிறது
உன் காதலை
பாவமன்னிப்புச் சீட்டில்
எழுதிப் போக்கிக் கொண்டாய்
எனக்கு மது
அவள் எச்சில்
நஞ்சாகி விட்டது
கொஞ்சம்
தீர்த்தம் கொடு
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு கருவறை
ஒரு கருவறை
இறைவனைச்
சுமந்துகொண்டிருக்கிறது
உன் காதலை
பாவமன்னிப்புச் சீட்டில்
எழுதிப் போக்கிக் கொண்டாய்
எனக்கு மது
அவள் எச்சில்
நஞ்சாகி விட்டது
கொஞ்சம்
தீர்த்தம் கொடு
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
இறைவனின் தோட்டத்தில்
நமக்கு
விருப்பமான பூவை
நாமே
பறித்துக் கொள்ளலாம்
உன்னை
மறக்க தான்
நினைக்கிறேன்
காதலியைத் துறந்துவிட்டேன்
என் கவிதைகளை
எல்லோரும் ரசிக்கிறார்கள்
நமக்கு
விருப்பமான பூவை
நாமே
பறித்துக் கொள்ளலாம்
உன்னை
மறக்க தான்
நினைக்கிறேன்
காதலியைத் துறந்துவிட்டேன்
என் கவிதைகளை
எல்லோரும் ரசிக்கிறார்கள்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நேரம்போத வில்லை
உன்னை
நினைப்பதற்கு
காதல் குற்றவாளி
பூக்களுக்கு ஏன்
மரணத் தண்டனை?
குளிர்காயச் சொன்னால்
நெருப்பில் ஏன்
கை விடுகிறாய்?
உன்னை
நினைப்பதற்கு
காதல் குற்றவாளி
பூக்களுக்கு ஏன்
மரணத் தண்டனை?
குளிர்காயச் சொன்னால்
நெருப்பில் ஏன்
கை விடுகிறாய்?
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நீ
முறைத்துப் பார்ப்பதால்
கவிதைகள் கூட
திக்கித் தடுமாறுகிறது
நான்
புல்லாங்குழல்
நீ
எப்போது வேண்டுமானாலும்
எடுத்து வாசிக்கலாம்
இதழ்களில் சுவையில்லை
கண்களில்
கண்ணீர்
முறைத்துப் பார்ப்பதால்
கவிதைகள் கூட
திக்கித் தடுமாறுகிறது
நான்
புல்லாங்குழல்
நீ
எப்போது வேண்டுமானாலும்
எடுத்து வாசிக்கலாம்
இதழ்களில் சுவையில்லை
கண்களில்
கண்ணீர்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
பயண அவசரங்களில்
இடைமறிக்கும்
டிக்கெட் பரிசோதகரைப் போல்
நீ
என் வாழ்வில்
குறுக்கிட்டாய்
இனி, நாம்
எரியூட்டப்படாத
பிரேதங்களாய்
உலவ வேண்டும்
கண்ணீர் வெள்ளம்
என்னைக் கைப்பிடித்து
அழைத்துச் செல்கிறது
உன் நினைவிடத்திற்கு
இடைமறிக்கும்
டிக்கெட் பரிசோதகரைப் போல்
நீ
என் வாழ்வில்
குறுக்கிட்டாய்
இனி, நாம்
எரியூட்டப்படாத
பிரேதங்களாய்
உலவ வேண்டும்
கண்ணீர் வெள்ளம்
என்னைக் கைப்பிடித்து
அழைத்துச் செல்கிறது
உன் நினைவிடத்திற்கு
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கடித்த கொசு
என்னிடம்
அடிபடுவதுபோல
என் காதலும்
என்னிடமே
அடிபடுகிறது
பூக்கள்
நம் காதலைப் பார்த்து
சிரிக்கிறது
வண்டுகள்
ஒப்பாரி வைக்கிறது
காதலர்கள் நாம்
ஏன் சாகவேண்டும்?
பூவும் வண்டும்
செத்தாப் போகிறது?
என்னிடம்
அடிபடுவதுபோல
என் காதலும்
என்னிடமே
அடிபடுகிறது
பூக்கள்
நம் காதலைப் பார்த்து
சிரிக்கிறது
வண்டுகள்
ஒப்பாரி வைக்கிறது
காதலர்கள் நாம்
ஏன் சாகவேண்டும்?
பூவும் வண்டும்
செத்தாப் போகிறது?
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நீ
விலகியபோதுதான்
உன் போதையால்
உடல் உறுப்புகள்
செயலிழந்தது
நீ
முடி வளர்க்கின்றாய்
நான்
மொட்டைமாடியில்
பூச்செடி வளர்க்கின்றேன்
விழியோரம்
உப்புப் பூக்கிறது
வா, வந்து
பறித்துச் சூட்டிக்கொள்
விலகியபோதுதான்
உன் போதையால்
உடல் உறுப்புகள்
செயலிழந்தது
நீ
முடி வளர்க்கின்றாய்
நான்
மொட்டைமாடியில்
பூச்செடி வளர்க்கின்றேன்
விழியோரம்
உப்புப் பூக்கிறது
வா, வந்து
பறித்துச் சூட்டிக்கொள்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நான்
உன் நினைவோடு
தொலைந்துபோனத்
திருவிழாக் குழந்தை
கூட்டைத்
திறந்து விட்டேன்
நீ
கூடு திரும்பவில்லை
நீ அமராமலேயே
இதய ஊஞ்சலை
ஆட்டிவிட்டாய்
உன் நினைவோடு
தொலைந்துபோனத்
திருவிழாக் குழந்தை
கூட்டைத்
திறந்து விட்டேன்
நீ
கூடு திரும்பவில்லை
நீ அமராமலேயே
இதய ஊஞ்சலை
ஆட்டிவிட்டாய்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
உனக்குத் தான்
கண்ணீர் வராதே
ஏன்?
வீணாக முயற்சிக்கிறாய்
கடவுளே!
நம் காதல்
நமக்கானதுதான்
நாம்
ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்?
காற்று
ஓரிடத்திலிருந்து சென்றதும்
மற்றொரு காற்று
அவ்விடம் வந்து சேர்கிறது
கண்ணீர் வராதே
ஏன்?
வீணாக முயற்சிக்கிறாய்
கடவுளே!
நம் காதல்
நமக்கானதுதான்
நாம்
ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்?
காற்று
ஓரிடத்திலிருந்து சென்றதும்
மற்றொரு காற்று
அவ்விடம் வந்து சேர்கிறது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
காதல்
ஒரு பல்லாங்குழி விளையாட்டு
அதில் நீ என்னைக்
குழிப்பறித்தாய்
என் காதலை மீட்க
எந்த வங்கியும்
கவிதைக் கடன்
கொடுக்கவில்லை
நானே வங்கியாகிவிட்டேன்
உன் பத்திரிகையைக்
கிழித்தெரிந்துவிட்டேன்
உன் உண்டியல் நினைவுகளை
உடைக்க முடியவில்லை
ஒரு பல்லாங்குழி விளையாட்டு
அதில் நீ என்னைக்
குழிப்பறித்தாய்
என் காதலை மீட்க
எந்த வங்கியும்
கவிதைக் கடன்
கொடுக்கவில்லை
நானே வங்கியாகிவிட்டேன்
உன் பத்திரிகையைக்
கிழித்தெரிந்துவிட்டேன்
உன் உண்டியல் நினைவுகளை
உடைக்க முடியவில்லை
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
பூவின்மேல் இருந்த
வண்டினைக் கண்டு
பூவினைப் பறிக்காமல்
திரும்பியவளா
நீ?
குயில்கள்
தனித்தே பாடுமாம்
என் தனிமையின்
சோகப் பாடல்கள்தான்
இந்தக் கவிதைகள்
முதல் கண்ணீர்த்
துளியில்தான்
காதல் என்ற புத்தகத்தின்
முதற்பக்கத்தைப் படிக்கத்
துவங்குகிறோம்
வண்டினைக் கண்டு
பூவினைப் பறிக்காமல்
திரும்பியவளா
நீ?
குயில்கள்
தனித்தே பாடுமாம்
என் தனிமையின்
சோகப் பாடல்கள்தான்
இந்தக் கவிதைகள்
முதல் கண்ணீர்த்
துளியில்தான்
காதல் என்ற புத்தகத்தின்
முதற்பக்கத்தைப் படிக்கத்
துவங்குகிறோம்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
சத்தியம்
எல்லாம் சும்மா என்பது
காதல் தோல்விக்குப் பிறகுதான்
தெரியும்
நம் காதலை
உருத் தெரியாமல்
அழித்துவிட்டது
திருமணம்
என் நினைவுகள்
ஏன் என்கிறாய்?
என்னிடம் வரும்
உன் நினைவுகள்
உன்னிடம் சொல்லிவிட்டா
என்னிடம் வரும்
எல்லாம் சும்மா என்பது
காதல் தோல்விக்குப் பிறகுதான்
தெரியும்
நம் காதலை
உருத் தெரியாமல்
அழித்துவிட்டது
திருமணம்
என் நினைவுகள்
ஏன் என்கிறாய்?
என்னிடம் வரும்
உன் நினைவுகள்
உன்னிடம் சொல்லிவிட்டா
என்னிடம் வரும்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
காதலியே!
இறைவன் என்னிடமிருந்து
தெரியாமல் எடுத்துக்கொடுத்த
என் விலா எலும்பைத்
திரும்பத் தந்துவிடு
இன்றோடு உலகில்
காதல் ஒழிந்துபோகட்டும்
நமக்கான காதல்
என்று தீருமென்று
இறைவனைக் கேட்டால்
சீக்கிரமே என்கிறான்
நான் காதலில் காமத்தைக்
கேட்டதாக விழுந்திருக்கும்
அவர் காதில் என்று
நினைத்துக்கொண்டேன்
நீயும் நானும்
இன்னும்
இணையவே இல்லையே
பின்னர் எப்படிப் பிரிவு வரும்
இறைவன் என்னிடமிருந்து
தெரியாமல் எடுத்துக்கொடுத்த
என் விலா எலும்பைத்
திரும்பத் தந்துவிடு
இன்றோடு உலகில்
காதல் ஒழிந்துபோகட்டும்
நமக்கான காதல்
என்று தீருமென்று
இறைவனைக் கேட்டால்
சீக்கிரமே என்கிறான்
நான் காதலில் காமத்தைக்
கேட்டதாக விழுந்திருக்கும்
அவர் காதில் என்று
நினைத்துக்கொண்டேன்
நீயும் நானும்
இன்னும்
இணையவே இல்லையே
பின்னர் எப்படிப் பிரிவு வரும்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
உலகில்
அனைத்துமே
சரிசமம்
காதலில் மட்டும்
சற்று அதிகம்
ஒருவர்மீது
மற்றொருவர் கொண்ட
அன்பு!
எனக்கான உலகம்
நீ
அதில்
நான் ஆதாம்
நீ
ஏவாள்
நீ
என்னை
நண்பர்களிடமிருந்து மட்டுமல்ல
இறைவனிடத்திலிருந்தும்
தனிமைப்படுத்திவிட்டாய்
அனைத்துமே
சரிசமம்
காதலில் மட்டும்
சற்று அதிகம்
ஒருவர்மீது
மற்றொருவர் கொண்ட
அன்பு!
எனக்கான உலகம்
நீ
அதில்
நான் ஆதாம்
நீ
ஏவாள்
நீ
என்னை
நண்பர்களிடமிருந்து மட்டுமல்ல
இறைவனிடத்திலிருந்தும்
தனிமைப்படுத்திவிட்டாய்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நான்
கதறி அழத் தொடங்கும் முன்னே
கடவுள்
உறங்க ஆரம்பித்துவிடுகிறான்
எங்கே நான் விடும் சாபம்
காதில்
கேட்டுவிடுமோ என்று பயந்து
மழைக் காலப் பொழுதுகளில்
நனைகிறேன்
உன் நினைவுகளில்
களைப்பைப் போக்க வரும்
உன் நினைவுகள்
கண்ணீரைத்
தந்துவிட்டுப் போய்விடுகிறது
கதறி அழத் தொடங்கும் முன்னே
கடவுள்
உறங்க ஆரம்பித்துவிடுகிறான்
எங்கே நான் விடும் சாபம்
காதில்
கேட்டுவிடுமோ என்று பயந்து
மழைக் காலப் பொழுதுகளில்
நனைகிறேன்
உன் நினைவுகளில்
களைப்பைப் போக்க வரும்
உன் நினைவுகள்
கண்ணீரைத்
தந்துவிட்டுப் போய்விடுகிறது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
பிரிவு நேரும்
என்பதைச் சிந்திக்காமல்
சத்தியம் செய்துகொண்டோம்
மதம் மாறியது காதல்
சுடுகாடு மட்டும்
பழையது
காதலர்கள்
எல்லோருமே
பொய்
பேசுபவர்கள்தான்
என்பதைச் சிந்திக்காமல்
சத்தியம் செய்துகொண்டோம்
மதம் மாறியது காதல்
சுடுகாடு மட்டும்
பழையது
காதலர்கள்
எல்லோருமே
பொய்
பேசுபவர்கள்தான்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
பெயரை எழுதினேன்
அப்போதே
பாலூற்றி விட்டது
கள்ளிச் செடி
என் நினைவுகள்
உன்னை
நெருங்கி வரும்போது
களைப்படைந்து விடுகின்றன
ஆசைகள் எல்லாம்
தூரப் போய் விடுகிறது
பக்கத்தில்
நீ
அப்போதே
பாலூற்றி விட்டது
கள்ளிச் செடி
என் நினைவுகள்
உன்னை
நெருங்கி வரும்போது
களைப்படைந்து விடுகின்றன
ஆசைகள் எல்லாம்
தூரப் போய் விடுகிறது
பக்கத்தில்
நீ
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கவிதைகளை எரித்தேன்
சாம்பலிலிருந்து பிறந்தது
காதல்!
நரகத்திலிருந்து
சொர்க்கத்திற்குத் தாவினேன்
காதல் தோல்வி
தேடினேன்
ஒளிந்து கொண்டான்
இறைவன்
சாம்பலிலிருந்து பிறந்தது
காதல்!
நரகத்திலிருந்து
சொர்க்கத்திற்குத் தாவினேன்
காதல் தோல்வி
தேடினேன்
ஒளிந்து கொண்டான்
இறைவன்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
பத்திரிகையில்
வேறுபெயர் பார்க்கும்
தூரத்து நண்பர்கள்
என்னை
எப்படி எடுத்துக் கொள்வார்கள்?
உன் முன்னே
என் ஆசை
பிச்சைப் பாத்திரங்கள்
மலர்கள்
மாலையாகவில்லை என்று
மரித்துப் போவதில்லை
செடிகளுக்கு
உரமாவதையும் பார்
வேறுபெயர் பார்க்கும்
தூரத்து நண்பர்கள்
என்னை
எப்படி எடுத்துக் கொள்வார்கள்?
உன் முன்னே
என் ஆசை
பிச்சைப் பாத்திரங்கள்
மலர்கள்
மாலையாகவில்லை என்று
மரித்துப் போவதில்லை
செடிகளுக்கு
உரமாவதையும் பார்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
மழைநாளில்
நீ
எனக்குக் குடை பிடித்தாய்
நான்
பூக்களுக்குக் குடை பிடித்தேன்
நீ
இரண்டு இடத்தில்
வலிக்கிறாய்
இதயத்திலும்
பச்சைக்குத்திக் கொண்ட
கையிலும்
காதலுக்குக் கண் இல்லை
அதனால் தானோ என்னவோ
இறைவா!
நீ இருப்பது அப்போது
தெரியவில்லை
நீ
எனக்குக் குடை பிடித்தாய்
நான்
பூக்களுக்குக் குடை பிடித்தேன்
நீ
இரண்டு இடத்தில்
வலிக்கிறாய்
இதயத்திலும்
பச்சைக்குத்திக் கொண்ட
கையிலும்
காதலுக்குக் கண் இல்லை
அதனால் தானோ என்னவோ
இறைவா!
நீ இருப்பது அப்போது
தெரியவில்லை
Page 5 of 17 • 1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 17

» ம. ரமேஷ் கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
Page 5 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|