தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள் - சிந்திப்பதற்கு மட்டுமே~*~

View previous topic View next topic Go down

~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள் - சிந்திப்பதற்கு மட்டுமே~*~ Empty ~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள் - சிந்திப்பதற்கு மட்டுமே~*~

Post by முழுமுதலோன் Thu Mar 07, 2013 8:52 pm

~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள் - சிந்திப்பதற்கு மட்டுமே~*~

குறள் :
1:நோக்கக் குழையா நுண்ணலைக் கைபேசி
தாக்காதே தகவல் தரும்.
பொருளுரை: நோக்கினாலும் குழையாத நுண்ணலைக் கைபேசி, நுண்ணலைகள் தாக்காதே தகவலைத் தரும்.

2:காணாது தொலையும் கைபேசி; கண்டபின்னும்
நாணாதே மெல்ல நகும்.
பொருளுரை: எங்கோ தொலத்து விட்டுவிட்டக் கைபேசி கிட்டினாலும் அதற்கென நாணாதே ஒலிக்கும்.

3:இனிதே மொழி இயம்பினும் நெடண்மை
மெலிதே கொல்லும் செவி.
இனிதே மொழி இயம்பினும் நெடு அண்மை
மெலிதே கொல்லும் செவி.
பொருளுரை: எத்தனை தான் இனிய மொழியினைக் கொடுப்பினும் கைபேசியை காதிற்கு அண்மையில் நெடு நேரம் கொண்டு கேட்டால், நாளடைவில் செவி கெடாமல் என்ன செய்யும்?

4:அன்புசால் மொழியே ஆயினு மோட்டலில்
இன்மை யதுகைபேசி உரை.
அன்புசால் மொழியே ஆயினும்; ஓட்டலில்
இன்மை அது கைபேசி உரை.
பொருளுரை: அன்பொடு பேசும் மொழிதானே என்று ஆகினும் வண்டி ஓட்டுகையில் கைபேசி உரையாடுதலால் நன்மை என்று ஏதுமில்லை; அனைவருக்கும் இன்மையைத் தான், கேட்டைத் தான் விளைவிக்கும்.

5:தெவிட்டு மொலி தீதே; கைபேசியுரை
செவிட்டுக் குவழி செயின்.
தெவிட்டும் ஒலி தீதே கைபேசி உரை
செவிட்டுக்கு வழி செயின்.
பொருளுரை: கைபேசியால் வரும் அதீத ஒலி காதைச் செவிடாக்கும் வகையில்; தெவிட்டும் அளவில் கொள்ளுதல் காதுக்குச் செவிட்டை மாத்திரம் அல்ல உடல் நலத்தையும், உள நலத்தையும் பாதித்து விடும். அளவிற்கு மீறிய அமிர்தமும் நஞ்சுதானே.

6:வாட்டும் வருத்தம் வகையறியான்; நலந்தருமோ
காட்டும் கைபேசிச் சினம்?
வாட்டும் வருத்தம் வகை அறியான்; நலம் தருமோ
காட்டும் கைபேசிச் சினம்?
பொருளுரை: வாட்டுகின்ற உரையின் வருத்தத்தின் வகையை, காரணத்தை அறியாதவன், கைபேசியின் மேல் காட்டும் சினம்தான் நலம் தருமோ? கைபேசியும், அவன் பாலுள்ள நலமும் தான் கெடும்.

7:இறையில்லத் துவிசை நிறுத்தாக் கைபேசி
நிறையல்ல; வசைமிகுக்குங் குறை.
இறை இல்லத்து விசை நிறுத்தாக் கைபேசி
நிறை அல்ல; வசை மிகுக்கும் குறை.
பொருளுரை: இறை இல்லமாகிய தேவாலயத்தில்; கோயிலில் நிறுத்தி வைக்கப் படாத கைபேசியால் ஒருவருக்கு எந்த நிறையும் வரப்போவதில்லை; உண்மையில் அஃது பிறரின் வசையைத்தான் மிகுந்து கொடுக்கும் மிகக் குறைபாடான செயல் ஆகும்.

8:சபையிடைச் சலனம் சதுராடும் கைபேசி
மிகையல்ல மேன்மைக் கிழுக்கு.
சபையிடைச் சலனம் சதுராடும் கைபேசி
மிகை அல்ல; மேன்மைக்கு இழுக்கு.
பொருளுரை: பலர் கூடியிருக்கும் முக்கியச் சபையினில் சலனப்படுத்திச் சதுராடும் கைபேசி குழுமியவரின் முன்னே மேன்மையல்ல; உண்மையில் அஃது ஒருவரின் மேன்மைக்கு இழுக்கு என்றால் அஃது மிகையல்ல. அஃது குழுமிய நேரத்தில் பிறருக்குத் தொந்திரவாக இருப்பதுடன் குழுமிய காரணத்திற்கும் இடைஞ்சலாக அமைந்துவிடும்.

9:சங்கத்தே சமனித்துச் சாற்றாதே கைபேசியுள்
பங்கமிட்டே இரைவதா பண்பு?
சங்கத்தே சமனித்துச் சாற்றாதே; கைபேசியுள்
பங்கமிட்டே இரைவதா பண்பு?
பொருளுரை: கைபேசியில் அமைதியாகப் பேசுதலே சமூகத்தில் உயரிய சிறந்த பண்பு. இரைந்து கத்துதல் அல்ல என்பதை உணர்வீர்களாக. அவ்வாறு காட்டுக் கத்தாய் கத்திப் பேசுவதா நாகரீகம்?

10:சந்தையின் கூவலைக் கைபேசிப் பரப்பல்
நிந்தையை நல்குமல்ல பிற.
சந்தையின் கூவலைக் கைபேசிப் பரப்பல்
நிந்தையை நல்கும் அல்ல பிற.
பொருளுரை: சந்தைப் படுத்தும் கூப்பாட்டை; விளம்பரத்தை, அறைகூவலை கைபேசியால் அனைவருக்கும் கூப்பிட்டுப் பரப்புதல் அவர்களின் நிந்தையையே நல்கும்; வேறல்ல. பயனாளிகளுக்குக் கைபேசி வழி சந்தைப் படுத்துதல் உண்மையில் எரிச்சலூட்டும் அணுகுமுறை

நன்றி tamilmanam
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள் - சிந்திப்பதற்கு மட்டுமே~*~ Empty Re: ~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள் - சிந்திப்பதற்கு மட்டுமே~*~

Post by sreemuky Sat Feb 22, 2014 12:56 pm

நண்பரே உண்மைகள் இவை திருக்குறள் தானா அல்லது புதுக் குறள்களா. திருக்குறள் தான் என்றால் அதன் அதிகாரம் மற்றும் எண் ஆக்கியவற்றை தெரிவிக்கவும்.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள் - சிந்திப்பதற்கு மட்டுமே~*~ Empty Re: ~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள் - சிந்திப்பதற்கு மட்டுமே~*~

Post by முரளிராஜா Sat Feb 22, 2014 3:58 pm

sreemuky wrote:நண்பரே உண்மைகள் இவை திருக்குறள் தானா அல்லது புதுக் குறள்களா. திருக்குறள் தான்  என்றால் அதன் அதிகாரம் மற்றும் எண் ஆக்கியவற்றை தெரிவிக்கவும்.
இவை நவீன புதுக்குறள்  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள் - சிந்திப்பதற்கு மட்டுமே~*~ Empty Re: ~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள் - சிந்திப்பதற்கு மட்டுமே~*~

Post by ஜேக் Sat Feb 22, 2014 7:35 pm

புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  நகைப்பு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள் - சிந்திப்பதற்கு மட்டுமே~*~ Empty Re: ~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள் - சிந்திப்பதற்கு மட்டுமே~*~

Post by Muthumohamed Sun Feb 23, 2014 12:02 am

laugh  laugh  laugh  laugh  laugh
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள் - சிந்திப்பதற்கு மட்டுமே~*~ Empty Re: ~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள் - சிந்திப்பதற்கு மட்டுமே~*~

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum