Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ஹைக்கூ எழுதலாம் வாங்க...
Page 2 of 5 • Share
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
ஹைக்கூ எழுதலாம் வாங்க...
First topic message reminder :
தகவலில் உள்ள உறவுகள் புதுக்கவிதை மட்டுமின்றி...
ஹைக்கூ
சென்ரியூ
லிமரைக்கூ
ஹைபுன்
என்ற வடிவங்களையும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவு தொடங்கப்படுகிறது.
முதலில் மேற்கண்ட வடிவங்களின் அமைப்பு வடிவம் இலக்கணம் பதியப்படுகிறது. பின்னர் எப்படி எழுதலாம் எப்படி எழுதக்கூடாது என்று தொடராக என்னுடைய கவிதைகள் இடம்பெறும். புதியதாக எழுத வருபவர்கள் இந்தப் பகுதியிலேயே பதியலாம். பதிபவர்களின் கவிதைகளில் திருத்தம் தேவைப்படின் நான் செய்கிறேன். நான் செய்யும் திருத்தம் நீங்கள் எழுதியதை இன்னும் செறிவாக்கவே - சிறப்பாக்கவே முனையும். கெடுக்காது. திருத்தம் செய்யலாம் என்று நீங்கள் கேட்டால் செய்வேன். இல்லை என்றால் என் கருத்தை மட்டும் சொல்வேன்.
எல்லாரும் எல்லா வகையான கவிதையும் எழுத வேண்டும் என்பதே இந்தப் பதிவில் என் நோக்கம். நடத்துனர்கள் மற்றும் உறுப்பினர்கள் கருத்துரைக்கவும்.

Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
ஹைக்கூ எழுதலாம் வாங்க - 3
உன் நினைவு வந்தால்
உடனே போய்விடும்
என் மகிழ்ச்சி
இது நான் எழுதிய ஹைக்கூதான். ஆனால் இது ஹைக்கூ இல்லை. அப்படியென்றால் ஏன் ஹைக்கூ என்று பெயரிட்டு மூன்று வரியில் எழுதியிருக்கிறீர்கள் என்று கேட்பது புரிகிறது.
ஹைக்கூ என்று தலைப்பிட்டு மூன்று அடிகளில் எழுதிவிட்டால், அது ஹைக்கூ என்று சொல்லிக்கொண்டாலும் உண்மையாக அது ஹைக்கூ இல்லை. மேற்கண்டதும் ஹைக்கூ இல்லை. ஏன் அது ஹைக்கூ இல்லை என்று பார்ப்போம்.
முதலில் மனத்தில் பட்ட ஓர் உணர்வை, அனுபவத்தை மூன்று வரிகளில் ஹைக்கூவாக எழுதிப்பார்த்தேன்.
மேற்கண்டதுபோல் எழுதியதும் ஹைக்கூவுக்கான சாரம் இருந்தது. ஆனால் ஹைக்கூவாக இல்லை.
காரணம், இரண்டு காரணங்கள்.
ஒன்று, மேற்கண்ட ஹைக்கூவை இன்னும் அதிலுள்ள வார்த்தைகளைக் குறைத்து எழுதவேண்டும்.
இரண்டு, சில மாற்றங்ளை செய்ய வேண்டும்.
இரண்டாவது காரணத்திலிருந்து ஹைக்கூவை செதுக்குவோம்.
ஹைக்கூக்கள் எழுதும்போது நான், நீ, நாம், என், உன்,என்னை, உன்னை, நம்மை, அவன், அவள் போன்று வரும் முன்னிலைப்படுத்தும் சொற்களை/ வார்த்தைகளைத் தவிர்த்துவிட வேண்டும். மேற்கண்டவை பயின்று வருவது உண்மையான ஹைக்கூவிற்கு ஏற்புடையது அல்ல.
“உன் நினைவு வந்தால்
உடனே போய்விடும்
என் மகிழ்ச்சி”
என்பதை மேலே குறிப்பிட்ட படி தவிர்த்து எழுதுகிறேன்:
“நினைவு வந்தால்
உடனே போய்விடும்
மகிழ்ச்சி”
எழுதிப் பார்த்தும் மீண்டும் வாசிக்கிறேன். காரணம், ஒன்றின் படி, மேற்கண்ட ஹைக்கூவை இன்னும் அதிலுள்ள வார்த்தைகளைக் குறைத்து எழுதவேண்டும். இரண்டாவது அடியில் ‘உடனே’ என்ற வார்த்தை தேவையில்லை என்று கருதி அதை நீக்குகிறேன். அதை நீக்குவதால் கருத்துச் செறிவு குறைய வில்லை என்பதை கருத்தில் கொள்கிறேன்.
கடைசியில் ஹைக்கூ இப்படி இருக்கிறது:
“நினைவு வந்தால்
போய்விடும்
மகிழ்ச்சி”
இப்போது இது ஹைக்கூவாக இருக்கிறது. உண்மையான ஹைக்கூவாக / வடிவமாக இருக்கிறது.
சரி… ஹைக்கூவிற்கு வருவோம்.
ஹைக்கூ வாசிப்பு முறைப்படி முதல் இரண்டு அடிகளை எடுத்துக்கொள்வோம்.
“நினைவு வந்தால்
போய்விடும்”
எந்த நினைவு, என்ன நினைவு, யாருடைய நினைவு, எதற்காக எது போய்விடும், இன்ப நினைவு வந்தால் துன்பம் போய்விடுமா? துன்ப நினைவு வந்தால் இன்பம் போய்விடுமா? சரி... எதுதான் என்று பார்க்க ஹைக்கூ வாசிப்பு முறைப்படி முதலிரண்டு அடியை மீண்டும் படித்துவிட்டு மூன்றாம் அடியைப் படிக்கிறோம். போனது,
“மகிழ்ச்சி.”
“நினைவு வந்தால்
போய்விடும்
மகிழ்ச்சி”
சரி மகிழ்ச்சி ஏன் போனது. பார்ப்போம்.
வந்த நினைவு துன்பம் என்பதை அறிய முடிகிறது. துன்பம் வந்ததால் மகிழ்ச்சி போய்விட்டது.
துன்ப நினைவு யாருக்கு வந்தது?
தாத்தா பாட்டிக்கு துன்ப நினைவு வந்திருக்கலாம். அவர்கள் முதியோர் இல்லத்தில் இருந்திருக்கலாம்…
தாய், தந்தை துன்ப நினைவு வந்திருக்கலாம். காதலித்து யாருடனாவது உடன்போக்கு சென்றிருக்கலாம். அவர்களின் மகன், மகள் யாரவது தவறி இருக்கலாம்…
ஏமாற்றிய காதலிக்கு காதலன் நினைவோ, காதலனுக்குக் காதலி நினைவோ துன்ப நினைவாக வந்திருக்கலாம். அதனால் மகிழ்ச்சி போய் இருக்கலாம்…
விபத்தில் யாரேனும் சிக்கிய நினைவோ, இறந்தவரின் நினைவோ துன்ப நினைவாக வந்திருக்கலாம். அதனால் மகிழ்ச்சி போய் இருக்கலாம்…
ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு காரணத்திற்காக வரும் துன்ப நினைவு மகிழ்ச்சியை களவாடிச் செல்கிறது.
சரி... உங்களுக்கு வரும் அந்த துன்ப நிகழ்வு என்ன?
நினைவு வந்தால்
போய்விடும்
மகிழ்ச்சி
© ம. ரமேஷ் ஹைக்கூ

வளர்ந்த உலகம்
உடைந்துபோகும்
சலவைக்குமிழியாய் (3)
உலகம் அழியும்
உண்டாக்கியதால்
அணுகுண்டுகள், அணு உலைகள் (4)
உண்மையின் குழந்தை அழகு.
உடைந்துபோகும்
சலவைக்குமிழியாய் (3)
உலகம் அழியும்
உண்டாக்கியதால்
அணுகுண்டுகள், அணு உலைகள் (4)
உண்மையின் குழந்தை அழகு.
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
மகிழ்ச்சி நண்பரே...
தங்களின் கவிதைகள் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கிறது... அதற்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்...
தங்களின் கவிதைகள் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கிறது... அதற்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்...
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
மழை
கடல் நீர் குடிநீராக்கப்படும்
கடவுள் அறிமுகபடுத்திய
இலவச திட்டம்
இது எந்த வகையினுள் அடங்கும்.
கடல் நீர் குடிநீராக்கப்படும்
கடவுள் அறிமுகபடுத்திய
இலவச திட்டம்
இது எந்த வகையினுள் அடங்கும்.
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
ஹைக்கூவில் அடங்கும்...
கொஞ்சம் மாற்றம் தேவை.
முதலில் மழை என்ற தலைப்பை நீக்க வேண்டும்.
பிறகு... அடிகளை மாற்றி...
கடல்நீ்ர் மழையாகி
குடிநீராய்ப் பொழிகிறது
கடவுளின் இலவச திட்டம்
என்று இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
மாற்றம் ஏற்புடையாதாக இருப்பின் திருத்திக் கொள்ளலாம். இல்லை எனில் தங்கள் விருப்பம்...

மகா பிரபு wrote:ஆற்றில் நீர் இல்லை
மனம் குளிர்ந்தது
மணற்கொள்ளை.
பாராட்டுகள்...
அட.... முதல் ஹைக்கூவே சிறப்பு... இதற்கு முன்னால் எழுதி இருக்கிறீர்களா என்ன?
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
வானம் போட்டு வைத்து கொண்டது
நிலா
இது சரியா கவிஞரே
நிலா
இது சரியா கவிஞரே

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
ஹைக்கூ எழுதியதில்லை. கவிதை எழுதி இருக்கிறேன். திருமணத்திற்கு பின் கவிதை எழுதுவதில்லை.
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
ஸ்ரீராம் wrote:வானம் போட்டு வைத்து கொண்டது
நிலா
இது சரியா கவிஞரே![]()
ஹைக்கூ எப்போதும் மூன்று வரியாகத்தான் இருக்க வேண்டும்.
கொஞ்சம் மாற்றினால் ஹைக்கூவாகிவிடும். இப்படி
வானம்
பொட்டிட்டு மகிழ்ந்தது
நிலா
என்பதுதான் ஹைக்கூ நண்பரே...
நன்றி...
எழுத எழுத பழகிவிடும்... நிறைய எழுதுங்கள்...
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
மகா பிரபு wrote:ஏன்னா மனசு ஒருமுகமாகவில்லை. ஒரு இடிமழை தான்
எங்க ஊர்ல ரொம் வெயில் பா...
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
மகா பிரபு wrote:ஹைக்கூ எழுதியதில்லை. கவிதை எழுதி இருக்கிறேன். திருமணத்திற்கு பின் கவிதை எழுதுவதில்லை.
ஆமாம் .... கவிதை எழுதினா யாரை நினைச்சி கவிதை எழுதறீங்கன்னு என் மனைவி கூட கேட்கிறார்கள்...
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
மகா பிரபும் ஸ்ரீராமும் ஹைக்கூ எழுத ஆரம்பித்துள்ளார்கள்...
இருவருக்கும் பாராட்டுகள்...
தமிழ் நிலாவும் உடன் சேர்ந்துள்ளார்... ஆன மூன்று பேருக்கும் வாழ்த்துகள்...
இருவருக்கும் பாராட்டுகள்...
தமிழ் நிலாவும் உடன் சேர்ந்துள்ளார்... ஆன மூன்று பேருக்கும் வாழ்த்துகள்...
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
நிச்சயம் ஏற்று கொள்கிறேன் நன்றி அண்ணாகடல்நீ்ர் மழையாகி
குடிநீராய்ப் பொழிகிறது
கடவுளின் இலவச திட்டம்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
தமிழ்நிலா wrote:நிச்சயம் ஏற்று கொள்கிறேன் நன்றி அண்ணாகடல்நீ்ர் மழையாகி
குடிநீராய்ப் பொழிகிறது
கடவுளின் இலவச திட்டம்
மகிழ்ச்சி நண்பரே...
நானும் ஏதேனும் என்னிடம் குறை கண்டவர்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வேன். எல்லாம் தெரியும் என்று நினைப்பதில்லை...
மாற்றிக் கொண்டால் நம் படைப்புகள் பேசப்படும்... சிறப்படையும் என்பதை நான் கண்டிருக்கிறேன்...
நன்றி.
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும்
மனங்களை தவிர்த்து...
இருண்மை
இரவுகளிலும் அடித்துக்கொள்கிறது..
இமைகளை போல
வெள்ளைப்பிரம்பு
இது சரியா அண்ணா
மனங்களை தவிர்த்து...
இருண்மை
இரவுகளிலும் அடித்துக்கொள்கிறது..
இமைகளை போல
வெள்ளைப்பிரம்பு
இது சரியா அண்ணா
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
இருண்ட மனதுக்குள் சிறகடிக்கும்
கறுப்பு மின்மினி
சாதி
*****
இறக்கைகள் கழன்ற பின்னும்
பறக்க துடிக்கும் ஈசல்
காதல்
*****
சிறகுடன் விழுங்கியபின்னும்
பறக்க முடியாத பல்லிகள்
சமூகம்
*****
கறுப்பு மின்மினி
சாதி
*****
இறக்கைகள் கழன்ற பின்னும்
பறக்க துடிக்கும் ஈசல்
காதல்
*****
சிறகுடன் விழுங்கியபின்னும்
பறக்க முடியாத பல்லிகள்
சமூகம்
*****
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
கொஞ்சம் புரிய வில்லை... விளக்கம் கொடுங்களேன்... வெள்ளைப்பிரம்பு என்றால் என்ன?வெள்ளைப்பிரம்பு
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
தமிழ்நிலா wrote:இருண்ட மனதுக்குள் சிறகடிக்கும்
கறுப்பு மின்மினி
சாதி
*****
இறக்கைகள் கழன்ற பின்னும்
பறக்க துடிக்கும் ஈசல்
காதல்
*****
சிறகுடன் விழுங்கியபின்னும்
பறக்க முடியாத பல்லிகள்
சமூகம்
*****
இவை மூன்றும் மிகவும் சிறப்பு... இவை மூன்றும் சென்ரியூ வகைமையில் சேரும்...
சென்ரியூக்கான விளக்கத்தை இந்தத் திரியின் தொடக்கத்தில் விரிவாகப் பதிந்திருக்கிறேன்...
தொடர்ந்து எழுதுங்கள்...
புதிய வடிவம் தெரிந்துகொள்ளும்போது நிறைய கவிதைகள் எழுத முடிகிறது...
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5

» ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்
» சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்
» லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான்
» ஜிமெயில் டேட்டாவிற்கு உயில் எழுதலாம்
» உங்க மனைவிக்கு வளையல் வாங்க போறிங்களா ? இங்க வாங்க !! நல்லா பார்த்து செலக்ட் பண்ணுங்க!!!!!

Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|