Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ஹைக்கூ எழுதலாம் வாங்க...
Page 3 of 5 • Share
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
ஹைக்கூ எழுதலாம் வாங்க...
First topic message reminder :
தகவலில் உள்ள உறவுகள் புதுக்கவிதை மட்டுமின்றி...
ஹைக்கூ
சென்ரியூ
லிமரைக்கூ
ஹைபுன்
என்ற வடிவங்களையும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவு தொடங்கப்படுகிறது.
முதலில் மேற்கண்ட வடிவங்களின் அமைப்பு வடிவம் இலக்கணம் பதியப்படுகிறது. பின்னர் எப்படி எழுதலாம் எப்படி எழுதக்கூடாது என்று தொடராக என்னுடைய கவிதைகள் இடம்பெறும். புதியதாக எழுத வருபவர்கள் இந்தப் பகுதியிலேயே பதியலாம். பதிபவர்களின் கவிதைகளில் திருத்தம் தேவைப்படின் நான் செய்கிறேன். நான் செய்யும் திருத்தம் நீங்கள் எழுதியதை இன்னும் செறிவாக்கவே - சிறப்பாக்கவே முனையும். கெடுக்காது. திருத்தம் செய்யலாம் என்று நீங்கள் கேட்டால் செய்வேன். இல்லை என்றால் என் கருத்தை மட்டும் சொல்வேன்.
எல்லாரும் எல்லா வகையான கவிதையும் எழுத வேண்டும் என்பதே இந்தப் பதிவில் என் நோக்கம். நடத்துனர்கள் மற்றும் உறுப்பினர்கள் கருத்துரைக்கவும்.

Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
நானும் அவ்வாறு தான் நினைத்தேன் நன்றி அண்ணா...கவியருவி ம. ரமேஷ் wrote:தமிழ்நிலா wrote:இருண்ட மனதுக்குள் சிறகடிக்கும்
கறுப்பு மின்மினி
சாதி
*****
இறக்கைகள் கழன்ற பின்னும்
பறக்க துடிக்கும் ஈசல்
காதல்
*****
சிறகுடன் விழுங்கியபின்னும்
பறக்க முடியாத பல்லிகள்
சமூகம்
*****
இவை மூன்றும் மிகவும் சிறப்பு... இவை மூன்றும் சென்ரியூ வகைமையில் சேரும்...
சென்ரியூக்கான விளக்கத்தை இந்தத் திரியின் தொடக்கத்தில் விரிவாகப் பதிந்திருக்கிறேன்...
தொடர்ந்து எழுதுங்கள்...
புதிய வடிவம் தெரிந்துகொள்ளும்போது நிறைய கவிதைகள் எழுத முடிகிறது...
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
கடல்நீ்ர் மழையாகி
குடிநீராய்ப் பொழிகிறது
கடவுளின் இலவச திட்டம்
இதை இப்படி எழுதலாமா அண்ணா
கடவுளின் இலவச திட்டம்
கடல்நீ்ர் குடிநீராய்
மழை
குடிநீராய்ப் பொழிகிறது
கடவுளின் இலவச திட்டம்
இதை இப்படி எழுதலாமா அண்ணா
கடவுளின் இலவச திட்டம்
கடல்நீ்ர் குடிநீராய்
மழை
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
இரவுகளிலும் அடித்துக்கொள்கிறது..
இமைகளை போல
வெள்ளைப்பிரம்பு
வெள்ளைப் பிரம்பு விளக்கத்திற்கு நன்றி.
சிறப்பாக இருக்கிறது பாராட்டுகள்...
என் விமர்சனம்:
இரவுகளில் இமைகள் துடிக்காதுதானே... இருந்தாலும் துடிக்கிறது என்றால் என்ன அர்த்தம்... அவர் கண்ணை மட்டும் மூடிய நிலையில் ஏதோ சிந்தனையில் இருக்கிறார் என்று அர்த்தம்...
வெள்ளைபிரம்புகள் எப்போது ஓய்வு எடுத்துக்கொள்வதில்லை... மடித்து வைக்கும்போதும் அவர் தூங்கும் போது ஏற்படும் நிலையை - உறங்கா நிலையை - சிந்தனை நிலையைதான் அந்த வெள்ளைப் பிரம்பும் அனுபவிக்கும்...
வெள்ளைப் பிரம்பு கொம்புதானே? அஃறிணைதானே? அதற்கு எப்படி உணர்வு இருக்கும்? என்ற கேட்கலாம்...
அது படிமம் கொண்ட ஹைக்கூ... அதுவும் இடமாற்றுப் படிமம்...
இன்னும் விளக்கலாம்... நேரமில்லை...
பாராட்டுகள்...
விமர்சனம் அடையும் போது தங்கள் கவிதை மேலும் சிறப்பு அடைவதைக் கண்டீர்களா தமிழ்நிலா அவர்களே!
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
தமிழ்நிலா wrote:கடல்நீ்ர் மழையாகி
குடிநீராய்ப் பொழிகிறது
கடவுளின் இலவச திட்டம்
இதை இப்படி எழுதலாமா அண்ணா
கடவுளின் இலவச திட்டம்
கடல்நீ்ர் குடிநீராய்
மழை
கண்டிப்பாக எழுதலாம்... முன்பை விட இப்போது இன்னும் சிறப்பாக இருக்கிறது... பாராட்டுகள்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
ஹைக்கூ
சென்ரியூ
லிமரைக்கூ எழுத முன் வந்துள்ள அமர்க்கள நண்பர்கள் இதனை முழுமையாகப் படித்து புரிந்துகொண்டு எழுத வாருங்களேன்...
சென்ரியூ
லிமரைக்கூ எழுத முன் வந்துள்ள அமர்க்கள நண்பர்கள் இதனை முழுமையாகப் படித்து புரிந்துகொண்டு எழுத வாருங்களேன்...
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
அமர்க்களத்தில் கவிதை பட்டறையை உருவாக்கும் நண்பர் கவியருவி ம. ரமேஷ் அவர்களுக்கு நன்றி

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
ஸ்ரீராம் wrote:அமர்க்களத்தில் கவிதை பட்டறையை உருவாக்கும் நண்பர் கவியருவி ம. ரமேஷ் அவர்களுக்கு நன்றி![]()
மகிழ்ச்சி...
தமிழ்நிலா, கவிஞர் கே இனியவன் முதலானோர் புதிய கவிதை வடிவங்களைப் படைக்க முனைகிறார்கள். அவர்களுக்கு அமர்க்களம் உதவி... அவர்களின் படைப்புகளை செம்மையாக்கவும் செழுமையாக்கவும் துணை புரிய வேண்டும் என்பது என் வேண்டுகோள்...
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
பல துரோகம்
காட்டிக்கொடுக்கப்பட்ட நாடு
தமிழ் ஈழம்
புதிய போர் யுத்தி
பலநாடுகளின் அணிவகுப்பு
தமிழீழம்..
சில தசாப்தம்
முடிக்கப்பட்ட வரலாறு
தனி ஈழம்..
காட்டிக்கொடுக்கப்பட்ட நாடு
தமிழ் ஈழம்
புதிய போர் யுத்தி
பலநாடுகளின் அணிவகுப்பு
தமிழீழம்..
சில தசாப்தம்
முடிக்கப்பட்ட வரலாறு
தனி ஈழம்..
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
மூன்றும் நன்றாக இருக்கிறது நண்பரே... மூன்றும் சென்ரியூவில் அடங்கும்....
பாராட்டுகள்...
பாராட்டுகள்...
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
குழந்தை Vs கடவுள்
(சென்ரியூ)
உண்டியலும் போதவில்லை
ஊத்தும் பாலும் போதவில்லை
திருவோட்டுடன் குழந்தை.
தேவலோகத்திலும் ஊழல்
கஜானாவும் காலி
திருவோட்டுடன் குழந்தை.
கொடுத்துக் களைத்த கடவுள்
கோவில் கட்ட இடம் இல்லை
தெருவோரத்தில் குழந்தை..
தமிழ்நிலா
(சென்ரியூ)
உண்டியலும் போதவில்லை
ஊத்தும் பாலும் போதவில்லை
திருவோட்டுடன் குழந்தை.
தேவலோகத்திலும் ஊழல்
கஜானாவும் காலி
திருவோட்டுடன் குழந்தை.
கொடுத்துக் களைத்த கடவுள்
கோவில் கட்ட இடம் இல்லை
தெருவோரத்தில் குழந்தை..
தமிழ்நிலா
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
மேற்கண்ட இரண்டும் சிறப்பு....
இதில் கொஞ்சம் திருத்தம் செய்தால் அதாவது 2 வரியில் கோவில் என்பற்கு பதில் சத்திரம் என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்...
இன்று நிறைய கோயில் கட்டுகிறார்கள். சத்திரங்கள் கட்டுவதில்ல... சத்திரத்தில் இருக்க வேண்டிய சிறுவர்கள் கோயில் வாசலிலும் பஸ்டான்டுகளிலும் பிச்சையெடுக்கிறார்கள்...

நன்றி அண்ணா உண்மைதான். நான் நினைத்தது கோவில் கட்டவே இடம் இல்லை, அவ்வளவத்துக்கு கோவில். ஆனால் நீங்கள் சொன்னது நன்றாக இருக்கிறது.
மேலும் ஒரு சந்தேகம்
உண்டியலும் போதவில்லை
ஊத்தும் பாலும் போதவில்லை
திருவோட்டுடன் குழந்தை.
உண்டியலும் போதவில்லை
ஊத்தும் பாலும் போதவில்லை
திருவோட்டுடன் கடவுள்.
இரண்டில் எது சிறப்பாக இருக்கும்
மேலும் ஒரு சந்தேகம்
உண்டியலும் போதவில்லை
ஊத்தும் பாலும் போதவில்லை
திருவோட்டுடன் குழந்தை.
உண்டியலும் போதவில்லை
ஊத்தும் பாலும் போதவில்லை
திருவோட்டுடன் கடவுள்.
இரண்டில் எது சிறப்பாக இருக்கும்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
உண்டியலும் போதவில்லை
ஊத்தும் பாலும் போதவில்லை
திருவோட்டுடன் கடவுள்.
இது நன்றாக இருக்கிறது...
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
நான் நினைத்தது கோவில் கட்டவே இடம் இல்லை, அவ்வளவத்துக்கு கோவில்.
நண்பரே நான் சொல்லும் கருத்து ஏற்புடையது இல்லை எனில் என் கருத்தை தவிர்த்துக் கொள்ளவும்.
சிறப்பாக்கும் விதத்தில் இருக்கும் என்றால் மட்டுமே ஏற்றுக் கொள்ளவும். நன்றி.
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
மல்லிகை
உதிர்ந்து கிடக்கும்
செடியின் கீழ்
மல்லிகை ஏன் உதிர்ந்து கிடக்கிறது?
வீட்டில் கணவன் மனைவிக்குள் சண்டையா என்ன?
தெருவில் இரண்டு பெண்களுக்குள் சண்டையா?
ஒரு பெண்ணே ஏதோ ஒரு கோபத்தினால் தலையில் கிடந்தப் பூவை இப்படி உதிர்த்திருக்கிறாளா?
இல்லை அது முதல் இரவாகக் கூட இருந்திருக்கலமே என்று நினைக்கிறீர்களா?
சரி ஏன் அப்படி உதிர்ந்து இருக்கிறது? என்று மூன்றாம் அடியைப் பார்க்கிறோம்.
செடியின் கீழ் – அட செடியின் கீழ் தான் உதிர்ந்து கிடந்திருக்கிறது.
சரி… செடியின் கீழ் ஏன் மல்லிகை உதிர்ந்து கிடந்திருக்கிறது?
நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்...
இந்த ஹைக்கூவில் முதல் அடியில்,
மல்லிகை – யை மல்லிகைப் பூக்கள் என்று எழுதலாம் என்றிருந்தேன்… ஹைக்கூவை மேலும் சுருக்க நினைத்து அவ்வாறு எழுதாமல்,
மல்லிகை
உதிர்ந்து கிடக்கும்
செடியின் கீழ்
என்று எழுதி முடித்தேன்.

என்னை நான் அறிமுகப்படுத்தம் போது கவிதை இமயங்களுக்கு நடுவில் நானோர் சிறு கல் என்றேன்.மன்னிக்க வேண்டுகிறேன்.உங்கள் பதிவினைப் பார்த்த போது எனக்கு தலைக்கனம் அதிகம் என்று உணருகிறேன்!
நான் கல் கூட இல்லை.வெறும் புளுதித்துகள் என்பதே உண்மை.
அறியாமல் நான் எழுதிய கவிதைகள் எனும் உளறல்களில் உள்ள வழுக்களைத் திருத்தித் தாருங்கள் கவிஞரே!
நான் கல் கூட இல்லை.வெறும் புளுதித்துகள் என்பதே உண்மை.
அறியாமல் நான் எழுதிய கவிதைகள் எனும் உளறல்களில் உள்ள வழுக்களைத் திருத்தித் தாருங்கள் கவிஞரே!
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
by தமிழினியன் Today at 12:48 pm
என்னை நான் அறிமுகப்படுத்தம் போது கவிதை இமயங்களுக்கு நடுவில் நானோர் சிறு கல் என்றேன்.மன்னிக்க வேண்டுகிறேன்.உங்கள் பதிவினைப் பார்த்த போது எனக்கு தலைக்கனம் அதிகம் என்று உணருகிறேன்!
இவ்வாறு இருப்பது ஒன்றும் தவறேதும் இல்லை...
நான் படித்த தங்களின் 3 கவிதைகளும் மகிவும் சிறப்பு. கவிஞருக்கான அங்கிகாரத்தை அதுவே எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது.
பாராட்டுகள்.
நான் எடுத்துரைத்தது... ஹைக்கூ மட்டுமின்றி... பல வடிவங்களும் இருக்கின்றன என்பதைக் காட்டவே. அந்த வடிவங்களில் தாங்களும் கவிதைகள் எழுத வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சொன்னேன்.
சென்ரியூ லிமரைக்கூ வடிவம் தவிர்த்து ஹைபுன் மற்றும் கஸல் என்ற புகழ்பெற்று வரும் வடிவங்களும் உள்ளன.
இது அப்துல் ரகுமானின் கஸல்களின் தொடர். http://www.amarkkalam.net/t9419-topic
இது என்னுடைய கஸல் கவிதைகளின் தொடர் http://www.amarkkalam.net/t5320-topic
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
பல துகள்கள்தான் பூமியாக உருவெடுத்துள்ளது... அமர்க்களத்தில் பல நல்ல கவிஞர்கள் உண்டு... கவியருவி ம. ரமேஷ் கவி சிகரம் என்பதில் சிறிதும் ஐயமில்லை... மிக விரைவில் முனைவர் ஆக போகிறார்.
உங்கள் கவிதைகளும் சற்றும் குறைவில்லை... நன்றாக எழுதுறிங்க... நீங்கள் இங்கே எந்த கவிதையும் எழுதலாம்... ரசிக்க நாங்கள் ரெடி...
என்னை பற்றி சொல்கிறேன் கவிதையை விரும்பி ரசிக்கத்தான் தெரியும்... எழுத தெரியாது... அதற்க்கல்லாம் சரஸ்வதியின் அருள் வேண்டும் போல...
உங்கள் கவிதைகளும் சற்றும் குறைவில்லை... நன்றாக எழுதுறிங்க... நீங்கள் இங்கே எந்த கவிதையும் எழுதலாம்... ரசிக்க நாங்கள் ரெடி...
என்னை பற்றி சொல்கிறேன் கவிதையை விரும்பி ரசிக்கத்தான் தெரியும்... எழுத தெரியாது... அதற்க்கல்லாம் சரஸ்வதியின் அருள் வேண்டும் போல...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
by ஸ்ரீராம் Today at 1:00 pm
பல துகள்கள்தான் பூமியாக உருவெடுத்துள்ளது...
இதனை நீங்கள்,
பல துகள்கள்
உரு கொடுத்தது
பூமி தோற்றம்
என்ற சுருக்கி குறுக்கி எழுதியிருந்தால் மிகச்சிறந்த ஹைக்கூவாக மலர்ந்திருக்கும்.
என்னை பற்றி சொல்கிறேன் கவிதையை விரும்பி ரசிக்கத்தான் தெரியும்... எழுத தெரியாது... அதற்கல்லாம் சரஸ்வதியின் அருள் வேண்டும் போல...
என்பது இல்லை என்பது இப்போது தெரிகிறதா நண்பரே!
என்னால்கூட இப்படி ஒரு அறிவியல் சிந்தனையில் ஹைக்கூ எழுத முடியவில்லை என்பதைக் கண்டு நீங்கள் மகிழலாம். இனி என்ன எழுதத்துவங்குங்கள்... கவிதைகள் கொட்டிக்கிடக்கிறது... கூடையிலிருந்து கொட்டும் மலர்கள்போல் கவிதைகள் கொட்டட்டும்...
வாழ்த்துகள்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
அருமை அருமை கவி ரமேஷ் அவர்களே... அவசியம் முயற்சிக்கிறேன்...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
ஸ்ரீராம் wrote:அருமை அருமை கவி ரமேஷ் அவர்களே... அவசியம் முயற்சிக்கிறேன்...
மகிழ்ச்சி நண்பரே
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
குழந்தை Vs வறுமை
(சென்ரியூ)
எப்படி அடித்தும் உடையவில்லை
எப்படி அழுதும் கரையவில்லை
வறுமை
படிகள் ஏறிக்கொண்டிருந்தாலும்
ஒவ்வொரு படியாய் இறக்கி விடுகிறது
வறுமை...
சிக்குண்டு இருப்பதும்...
சிக்கியிருப்பதும் ஒன்றில் தான்...
வறுமை..
உண்மை, பொய் இரண்டையும்
ஏனோ பங்குபோடுகிறது
வறுமை..
புன்னகையை விற்றாலும்
மனதை புண்ணாக்கி விடுகிறது
வறுமை...
தமிழ்நிலா
(சென்ரியூ)
எப்படி அடித்தும் உடையவில்லை
எப்படி அழுதும் கரையவில்லை
வறுமை
படிகள் ஏறிக்கொண்டிருந்தாலும்
ஒவ்வொரு படியாய் இறக்கி விடுகிறது
வறுமை...
சிக்குண்டு இருப்பதும்...
சிக்கியிருப்பதும் ஒன்றில் தான்...
வறுமை..
உண்மை, பொய் இரண்டையும்
ஏனோ பங்குபோடுகிறது
வறுமை..
புன்னகையை விற்றாலும்
மனதை புண்ணாக்கி விடுகிறது
வறுமை...
தமிழ்நிலா
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
அனைத்தும் அருமை...
அனைத்திலும்,
- இது மிகவும் அருமை...
அனைத்திலும்,
புன்னகையை விற்றாலும்
மனதை புண்ணாக்கி விடுகிறது
வறுமை...
- இது மிகவும் அருமை...

Page 3 of 5 • 1, 2, 3, 4, 5

» ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்
» சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்
» லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான்
» ஜிமெயில் டேட்டாவிற்கு உயில் எழுதலாம்
» உங்க மனைவிக்கு வளையல் வாங்க போறிங்களா ? இங்க வாங்க !! நல்லா பார்த்து செலக்ட் பண்ணுங்க!!!!!

Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|