Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
லிமரைக்கூ
Page 1 of 1 • Share
லிமரைக்கூ
வீதியொழுங்கு காவல் துறையர்.
வீதி ஓரத்தில் பிணமாக .
சமிங்க்சை விளக்கு சிரிக்கிறது ..!
**************************************************
லிமரைக்கூ (1)
வீதி ஓரத்தில் பிணமாக .
சமிங்க்சை விளக்கு சிரிக்கிறது ..!
**************************************************
லிமரைக்கூ (1)
Re: லிமரைக்கூ
வணக்கம் கவிஞரே...
தாங்கள் இன்னும் ஹைக்கூ சென்ரியூ லிமரைக்கூவின் வடிவங்களை படிக்க வில்லைபோலும்... கொஞ்சம் படியுங்கள்... கவிதை சிறக்க வாழ்த்துகள்.
லிமரைக்கூ வடிவம்
ஆங்கிலத்தில் ‘லிமரிக்’ என்பது ஒரு கவிதை வடிவம். 5 அடிகளில் அமையும் இந்தக் கவிதை வடிவம் முக்கியமாக வேடிக்கை, வினோதம், நகைச்சுவை முதலிய உணர்வோடு இயங்கக் கூடியது.
தமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன் ‘லிமரைக்கூ’வைப் படைத்துள்ளார். தமிழில் முதன்முதலாக ‘லிமரைக்கூ’வைப் படைத்த ஈரோடு தமிழன்பன் ஆங்கிலத்தின் ‘லிமரிக்’ வடிவத்தையும் / உள்ளடக்கத்தையும் [லிமரிக்கில் பயின்று வரும் இயைபுத் தொடையை 1 (முதல்) மற்றும் 3 (இறுதி) அடிகளில் இணைத்து] ஜப்பானிய ‘ஹைக்கூ’வின் வடிவத்தையும் இணைத்து 3 அடிகள் கொண்டு ‘லிமரைக்கூ’ என்ற புதிய தமிழ்க் கவிதை வடிவத்தை தமிழில் ஆரம்பித்து வைத்தார். இவ்வடிவமே தமிழின் லிமரைக்கூ வடிவமாக அமைந்து விட்டது.
ஹைக்கூ, லிமரிக் என்னும் இரண்டு வகைக் கவிதைகளின் வடிவங்களையும் உள்ளடக்கங்களையும் உள் வாங்கிக் கொண்டு தமிழில் கவிதைப் படைக்கத்தக்க திறமையும் பயிற்சியும் தேர்ச்சியும் மொழியாளுமை - கவித்துவ இயக்கம் ஆகிய இரண்டிலும் தேவை என்கிறார் ஈரோடு தமிழன்பன்.
5-7-5 என்னும் அசையமைப்பு அடிகளைக் கருத்தில் கொண்டால் ஹைக்கூவின் தன்மை அதுவென உணர்ந்து மூன்றடிகளின் இடையடி சற்றே - ஒரு சீர் அளவே மிக்கிருக்க எழுதலாம். முதல், கடை அடிகள் தவிர்த்த இடையடிகள் சீர் குறைந்து வரும் லிமரிக்கைக் கருத்தில் கொள்ளும் போது - லிமரைக்கூவிலும் நடுவடி சீர் குறைந்து வரலாம் (இது சிறுபான்மை). மூவசைச் சீர்களைப் பயன்படுத்தும் போது அவை ஈரசைகளாகப் பிரிக்கத்தக்கதாக இருந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பார் ஈரோடு தமிழன்பன்.
எடுத்துக்காட்டாக, ‘வந்ததற்காய்’ என்னும் மூவசைச் சீர், ‘வந்த + தற்காய்’ என இரண்டு சீராகப் பிரியும் வாய்ப்புள்ளதாகவும், ‘வந்ததனால்’ என்பது, ‘வந்த + தனால்’ எனப் பிரிவும் போது அவ்வாய்ப்பைப் பெறாததாகவும் அமைவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
3 அடிகளிலும் சந்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற விதி இல்லை. ஈரோடு தமிழன்பன் தமிழுக்கு முதன்முறையாக லிமரைக்கூவை அறிமுகம் செய்து வைத்தபோது சந்தம் கடைபிடிக்கப்பட்டது. (அவ்வாறு சந்தம் அமைத்துக் கொண்டது ஈரோடு தமிழன்பனின் தனி உத்தி.) மூன்று வரி, சந்தம் மட்டுமே லிமரைக்கூ ஆகிவிடாது. ஹைக்கூ, சென்ரியுவின் இணைப்புதான் லிமரைக்கூ. இயைபு (1, 3 ஆம் அடிகள் கடைசி வார்த்தையின் கடைசி எழுத்து) பொருந்தி வருதல் சிறப்பு.
தேன் நிரம்பி வழிந்தது
வண்ணத்துப் பூச்சி பறந்து சென்றது
பூ தலைக் கவிழ்ந்தது
-இது சந்தம் கொண்டு அமைந்த லிமரைக்கூ.
ஜணகனமன பாடியது
மரியாதையுடன் கூட்டத்தில் பொது மக்கள்
அரசியல்வாதி கொட்டாவி விட்டது - ம.ரமேஷ்
-இது இயைபுத் தொடை கொண்டு அமைந்த லிமரைக்கூ.
குருக்கள் தெய்வங்கள் ஆனார்கள்
கோயி லில்லா ஊர்களிலே தெய்வங்கள்
குடியி ருக்கப் போனார்கள்
பறவை கூடு திரும்பியது
சிறகு முளைத்துப் பறந்து திரிய
வானின் இதயம் விரும்பியது
- ஈரோடு தமிழன்பன் – சென்னிமலை கிளியோப்பாத்ராக்கள்
எதிரெதிர் தலைவர்கள் கைக்குலுக்கல்
விளை நிலங்கள் பங்கீடு பேச்சுக்குப்பின்
அவரவர் பங்குகள் பதுக்கல்
வாழ்வில் எத்தனை இன்னல்
முதிர் கன்னியோடு ஏங்கி ஏங்கி
இளைத்துப் போனது பின்னல்
- கன்னிக்கோவில் இராஜா - சென்னைவாசி
மார்கழி மாதப் பனிக்காலம்
மனத்தில் எண்ணங்கள் தேக்கி வாசலில்
வரைந்தாள் அழகிய கோலம்
வீசும் மெல்லியக் காற்று
வயலில் ஆனந்த நடனம்
ஆடிக் களிக்கும் நாற்று
- ந.க. துறைவன் - உப்பு பொம்மைகள்
இயற்கைக்கு வந்தது ஊறு!
ஏரி குளங்களில் கட்டினார்கள் வீடு!
இனியாவது நீ மாறு!
கொட்டி தீர்த்த மழை!
வீடுகளில் உள்ளே புகுந்தது நீரு!
தூர்வாறா குளங்களால் பிழை!
- " தளிர் அண்ணா" சா. சுரேஷ்பாபு

Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sun Apr 07, 2013 7:37 pm; edited 1 time in total
Re: லிமரைக்கூ
சுதந்திர தியாகிகள் தினம் .
மக்கள் மௌன அஞ்சலி
அமைச்சரின் கைபேசியில் ரீமிக்ஸ்..!
*****************
காடுகள் வெட்டினர்
வீட்டு முற்றத்தில் யானை
குடிமகன் தெருவில் ..!
**********
இந்த இரண்டும் சென்ரியூ....? லிமரைக்கூ....?
தயவு செய்து உடன் பதில் தரமுடியுமா ...?
இனி நான் இந்த வகையில் எழுதுபவற்றை உங்களிடம் சரிபார்க்க விரும்புகுறேன்
உதவ முடியுமா ...?

நிச்சயமாக உதவ முன்வருவேன்...
மேற்கண்ட இரண்டும் சென்ரியூ நண்பரே...
இயைபு (1, 3 ஆம் அடிகள் கடைசி வார்த்தையின் கடைசி எழுத்து) பொருந்தி வருதல்
வந்தால்தான் அது லிமரைக்கூ...
இயைபு என்றால் என்ன என்று புரிகிறதா நண்பரே... புரியவில்லை என்றால் விளக்குகிறேன்....
மேற்கண்ட பதிவை கொஞ்சம் மாற்றி - கலர் மாற்றி இருக்கிறேன். சிகப்பு எழுத்தில் இருப்பவை தான் இயைபு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|