தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"நாள்தோறும் நாலடியார்"

Page 25 of 25 Previous  1 ... 14 ... 23, 24, 25

View previous topic View next topic Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 25 Empty "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Apr 19, 2013 5:07 pm

First topic message reminder :

நாலடியார்
"நாள்தோறும் நாலடியார்" - Page 25 Naaladiyar
கடவுள் வாழ்த்து

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.


வானிலே தோன்றும் வானவில்லின் தோற்றமும் மறைவும் அறிதற்கா¢து; அதுபோலவே, பிறப்பு இறப்பு கியவற்றின் இயல்புகளை அறிதலும் அரிதாம். இ·து உண்மையாதலால், பாதம் பூமியில் படியாத (பூ மேல் நடந்த) அருகக் கடவுளை, 'எமது மனத்திலே நினைத்தவை நிறைவேற வேண்டும்' என்று பக்தியுடன் தரையில் தலை பொருந்துமாறு தாழ்ந்து பணிந்து தொழுவோமாக! (வானவில் இன்னவாறு தோன்றும் என்பதனை யாரும் அறியார். அதுபோலவே வாழ்க்கையில் துன்பங்கள் இன்னவாறு தோன்றும் என்பதனையும் யாராலும் அறிய இயலாது. இந்த உடம்பு எப்போது அழியும் என்பதும் அறிதற்கு அரிது. யின் அழிவு உறுதி. அப்படி அது அழிவதற்குள் நல்ல செயல்கள் கைகூடும்படி கடவுளைத் தொழுவோம் என்பது கருத்து)


Last edited by முழுமுதலோன் on Mon Oct 28, 2013 9:23 am; edited 1 time in total
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


"நாள்தோறும் நாலடியார்" - Page 25 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by மகா பிரபு Wed Aug 06, 2014 12:45 pm

அருமை அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 25 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu Aug 07, 2014 10:50 am

395 கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல்; -பின்சென்றும்
ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவங்
கோட்டிய வில்வாக் கறிந்து.

(பொ-ள்.) கண்கயல் என்னும் கருத்தினால் காதலி பின்சென்றது அம்ம சிறுசிரல் - கண்களைக் கயல்மீன் என்று கருதிய கருத்தினால் அதனைக் குத்தித் தின்னும் பொருட்டு ஆ! நம் காதலியின் பின்னே சென்றது சிச்சிலி என்னுஞ் சிறிய மீன்குத்திப் பறவை; பின்சென்று ஊக்கியெழுந்தும் எறிகல்லா ஒண் புருவம் கோட்டிய வில்வாக்கு அறிந்து - ஆனால், அவ்வாறு பின்சென்றும் குத்துதற்கு முனைந்தும் குத்தாதாயிற்று அவளது ஒள்ளிய புருவம் வளைந்த வில்லின் வளை வென்றறிந் தென்க.

(க-து.) நலம் பாராட்டும் அன்பினால் காமம் மாட்சிமைப்படும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 25 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ஸ்ரீராம் Fri Aug 08, 2014 10:36 am

நல்ல பதிவு தொடருங்கள் அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 25 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Aug 08, 2014 11:02 am

396 அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற் கன்னோ
பரற்கானம் ஆற்றின கொல்லோ, -அரக்கார்ந்த
பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென்று
அஞ்சிப்பின் வாங்கும் அடி.

(பொ-ள்.) அரக்கு ஆம்பல் நாறும் வாய் அம்மருங்கிற்கு - செந்நிறம் பொருந்திய ஆம்பல் மலரைப்போல நறுமணத்தோடு விளங்கும் வாயையும் அழகிய இடையையுமுடைய நம் புதல்விக்கு, அன்னோ - ஆ, அரக்கு ஆர்ந்த பஞ்சிகொண்டு ஊட்டினும் பையென பையென என்று அஞ்சிப் பின்வாங்கும் அடி பரல் கானம் ஆற்றின கொல்லோ - அழகுக்காகச் செந்நிற மிக்க செம்பஞ்சிக் குழம்பைத் தடவினாலும் ‘மெதுவாக, மெதுவாக' வென்று அஞ்சிக் கூறிப் பின் இழுத்துக்கொள்ளும் அத்துணை மெல்லிய பாதங்கள் தலைவனோடு உடன்போக்கிற் பிரிந்த இப்போது பரற்கற்களையுடைய கானத்திற் செல்லப் பொறுத்தனவோ?

(க-து.) எத்துணை இன்னலையுந் தலைவனுடன் தாங்குதலாற் காதல் பின்னும் மாட்சிமைப்படும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 25 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat Aug 09, 2014 10:53 am

397 ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி
மாலை பரிந்திட் டழுதாள் வனமுலைமேற்
கோலஞ்செய் சாந்தந் திமிர்ந்து.

(பொ-ள்.) ஓலைக் கணக்கர் ஒலி அடங்குபுன் செக்கர் மாலைப்பொழுதில் மணந்தார் பிரிவு உள்ளி - ஏடுகளிற் கணக்கெழுதுங் கணக்கரது அலுவல் தொடர்பான ஆரவாரம் அடங்குகின்ற புல்லிய சிவந்த அந்திப்பொழுதில், தலைவி தன்னை மணந்த கணவரது பிரிவை நினைந்து, மாலைபரிந்திட்டு அழுதாள் வன முலைமேல் கோலம்செய் சாந்தம் திமிர்ந்து - தான் சூடியிருந்த மலர் மாலையை அறுத்தெறிந்து தன் அழகிய கொங்கையின்மேல் தொய்யிலெழுதி அழகு செய்திருந்த சந்தனத்தையும் கலைத்துதிர்த்து அழுவாளாயினள்.

(க-து.) பிரிவுள்ளி இரங்கும் அன்பினால் உடலும் உயிருங் குழைந்து பயனுறுதலையுடைய செவ்வியைப்பெறும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 25 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun Aug 10, 2014 10:34 am


398 கடக்கருங் கானத்துக் காளைபின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி ; - சுடர்த்தொடீஇ!
பெற்றானொருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃதூரும் ஆறு.

(பொ-ள்.) கடக்க அரு கானத்துக் காளை பின் நாளை நடக்கவும் வல்லையோ என்றி - வன்மையுடையாருங் கடந்து செல்லுதற் கருமையான காட்டின்கண் காளையாகிய தலைவன் பின்னே நாளை நீ உடன்போக்கில் நடந்து போகவும் வல்லமையுடையையோ என்று கூறுகின்றனை; சுடர்த் தொடீஇ - ஒளி மிக்க வளைய லணிந்த தோழி!, பெற்றான் ஒருவன் பெருங்குதிரை அந்நிலையே கற்றான் அஃது ஊரும் ஆறு - பெருமையிற் சிறந்த குதிரையொன்றினைப் பெற்றா னொருவன் அப்பொழுதே அதனை ஏறி ஊரு நெறியைக் கற்றவனாவன்.

(க-து.) ஒருமைப்பட்ட காதலன்பினால் உள்ளம் ஆழ்ந்து ஆற்றலுடைய தாகின்றது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 25 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon Aug 11, 2014 10:23 am

399 முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் - கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என்
தீம்பாவை செய்த குறி.

(பொ-ள்.) முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும் இலக்கணம் யாதும் அறியேன் - நேற்று என்மகள் தன்னுடைய முலைக்காம்பும் முத்துவடமும் அழுந்தும்படி என் உடம்பு முழுமையும் அணைத்துக்கொண்ட உண்மையை யான் சிறிதும் அறியாமற் போனேன்; கலைக்கணம் வேங்கை வெரூஉம் நெறி செலிய போலும் என் தீம்பாவை செய்த குறி - மான்கூட்டங்கள் வேங்கைக்கு அஞசிச்சிதறுங்காட்டு நெறியில் இன்று பிரிந்து செல்லுதற்குப் போலும் அழகிய பாவை போல்வாளான என்மகள் அவ்வாறு செய்த அடையாளம்!

(க-து.) தாயினன்பினையும் மறக்கும் ஆழ்ந்த காதலன்பினால் காமம் இன்பப்பேறுடைய தாகின்றது
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 25 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by செந்தில் Mon Aug 11, 2014 11:24 am

அறிய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 25 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by செந்தில் Mon Aug 11, 2014 11:25 am

அறிய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 25 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Aug 12, 2014 10:34 am

400 கண்மூன் றுடையானும் காக்கையும் பையரவும்
என்னீன்ற யாயும் பிழைத்ததென் - பொன்னீன்ற
கோங்கரும் பன்ன முலையாய் பொருள்வயிற்
பாங்கனார் சென்ற நெறி.

(பொ-ள்.) கண் மூன்று உடையானும் காக்கையும் பைஅரவும் என் ஈன்ற யாயும் பிழைத்தது என் - கண்கள் மூன்றுடைய சிவபிரானும் காக்கையும் படத்தையுடைய இராகுவென்னும் பாம்பும் என்னை ஈன்று வளர்த்த தாயும் என்மாட்டுப் பிழைசெய்தது யாதிருக்கின்றது; பொன் ஈன்றகோங்கு அரும்பு அன்ன முலையாய் - பொன் போலும் சுணங்கினை மேலெழச் செய்த கோங்கின் அரும்பு போன்ற கொங்கைகளையுடைய தோழீ!, பொருள் வயின் பாங்கனார் சென்ற நெறி - என் கவற்சிக்கு ஏது, பொருள் காரணமாக நந் தலைவர் பிரிந்து சென்ற கொடிய காட்டு நெறியினது கடுமையேயாகும்.

(க-து.) ஆழ்ந்த காதலுணர்வு பிறர்நலம் உள்ளுதற்கிடஞ்செய்யும்.


நாலடியார் இளவழகனாருரை
முற்றும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 25 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Aug 12, 2014 10:50 am

அனைவருக்கும் முழுமுதலோனின் முதன்மை வணக்கங்களும் வாழ்த்துக்களும் 


உங்கள் அனைவரின் நல்லாதரவுடன்  19-04-2013 வெள்ளியன்று தொடங்கிய நாலடியார் இலக்கிய பதிவு  நன்முறையில் உரையுடன் சிறப்பாக பதிவு செய்து இன்றுடன்{12-08-2014} இனிதே நிறைவடைகிறது 


ஒவ்வொருநாளும் இந்த பதிவினை பார்த்து படித்து அதன்படியே வாழ்கையை அமைத்து கொண்ட அல்லது இனி அமைத்து கொள்ள உள்ள அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் என்  அன்பான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அகமகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன் 


விரைவில் இன்னுமொரு சிறப்பான இலக்கிய பதிவில் சந்திப்போம்....  காத்திருங்கள் ...


நன்றி 


என்றும் அன்புடன் 


முழுமுதலோன்  


"நாள்தோறும் நாலடியார்" - Page 25 Images?q=tbn:ANd9GcS2Kq71kSaxVTLIsS3oujO7CcashlQjxNgYAZ4CzifVPrh90QrVAg 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 25 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ஸ்ரீராம் Tue Aug 12, 2014 11:19 am

இது மிக பெரிய சாதனைதான். வாழ்த்துக்கள் அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 25 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 13, 2015 9:20 pm

நல்ல தொடர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 25 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 25 of 25 Previous  1 ... 14 ... 23, 24, 25

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum